புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னை கண் தேடுதே...! Poll_c10உன்னை கண் தேடுதே...! Poll_m10உன்னை கண் தேடுதே...! Poll_c10 
68 Posts - 53%
heezulia
உன்னை கண் தேடுதே...! Poll_c10உன்னை கண் தேடுதே...! Poll_m10உன்னை கண் தேடுதே...! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
உன்னை கண் தேடுதே...! Poll_c10உன்னை கண் தேடுதே...! Poll_m10உன்னை கண் தேடுதே...! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உன்னை கண் தேடுதே...! Poll_c10உன்னை கண் தேடுதே...! Poll_m10உன்னை கண் தேடுதே...! Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
உன்னை கண் தேடுதே...! Poll_c10உன்னை கண் தேடுதே...! Poll_m10உன்னை கண் தேடுதே...! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உன்னை கண் தேடுதே...! Poll_c10உன்னை கண் தேடுதே...! Poll_m10உன்னை கண் தேடுதே...! Poll_c10 
1 Post - 1%
Shivanya
உன்னை கண் தேடுதே...! Poll_c10உன்னை கண் தேடுதே...! Poll_m10உன்னை கண் தேடுதே...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உன்னை கண் தேடுதே...! Poll_c10உன்னை கண் தேடுதே...! Poll_m10உன்னை கண் தேடுதே...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன்னை கண் தேடுதே...! Poll_c10உன்னை கண் தேடுதே...! Poll_m10உன்னை கண் தேடுதே...! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
உன்னை கண் தேடுதே...! Poll_c10உன்னை கண் தேடுதே...! Poll_m10உன்னை கண் தேடுதே...! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
உன்னை கண் தேடுதே...! Poll_c10உன்னை கண் தேடுதே...! Poll_m10உன்னை கண் தேடுதே...! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உன்னை கண் தேடுதே...! Poll_c10உன்னை கண் தேடுதே...! Poll_m10உன்னை கண் தேடுதே...! Poll_c10 
15 Posts - 3%
prajai
உன்னை கண் தேடுதே...! Poll_c10உன்னை கண் தேடுதே...! Poll_m10உன்னை கண் தேடுதே...! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உன்னை கண் தேடுதே...! Poll_c10உன்னை கண் தேடுதே...! Poll_m10உன்னை கண் தேடுதே...! Poll_c10 
9 Posts - 2%
jairam
உன்னை கண் தேடுதே...! Poll_c10உன்னை கண் தேடுதே...! Poll_m10உன்னை கண் தேடுதே...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உன்னை கண் தேடுதே...! Poll_c10உன்னை கண் தேடுதே...! Poll_m10உன்னை கண் தேடுதே...! Poll_c10 
4 Posts - 1%
Jenila
உன்னை கண் தேடுதே...! Poll_c10உன்னை கண் தேடுதே...! Poll_m10உன்னை கண் தேடுதே...! Poll_c10 
4 Posts - 1%
Rutu
உன்னை கண் தேடுதே...! Poll_c10உன்னை கண் தேடுதே...! Poll_m10உன்னை கண் தேடுதே...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை கண் தேடுதே...!


   
   
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Wed Sep 02, 2009 8:46 am

உன்னை கண் தேடுதே...! Humaneyethumb2109618


உலக மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு ஏழாவது மனிதனும் இந்தியன். ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு மூன்றாவது அல்லது நான்காவது பார்வையிழந்தவனும் இந்தியன். நம் நாட்டில் இரண்டு கோடியே 70 லட்சம் பேர், பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களில், மூன்று லட்சத்து 20 ஆயிரம் பேர், குழந்தை பருவத்திலேயே இந்த
பாதிப்புக்குள்ளாகிவிடுகின்றனர். பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களில், 46 லட்சம் பேர் கார்னியல் பார்வை கோளாறு என்னும், குறிப்பிட்ட கண் நோயால் பார்வையை இழந்திருக்கின்றனர். இவர்களில், 90 சதவீதம் பேர் 45 வயதிற்கும் குறைவானவர்கள். 60 சதவீதம் பேர் 12 வயதுக்கும் குறைவான குழந்தைகள். இவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைப்பது, கண் தானம் மூலமாக செய்யப்படும் கார்னியல் மாற்று அறுவைச் சிகிச்சையால் மட்டுமே சாத்தியம்.


கண் வங்கி: கண் தானத்தின் மூலமாக கார்னியல் மாற்று ஆபரேஷன் செய்வதன் மூலம், பார்வையை வழங்க முடியும் என்பதை வலியுறுத்த, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை தேசிய கண் தான இரு வார விழா அனுசரிக்கப்படுகிறது. நிறைவு நாளான � சப்டம்பர் 8ம் தேதி தேசிய கண் தான
நாளாக அனுசரிக்கப்படுகிறது. இறந்தவர்களுடைய கண்களை தானமாகப்
பெற்றுக்கொள்ள, அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள், கண் வங்கி
அலுவலர்களுக்கு, உரிய நேரத்தில் அனுமதி அளிப்பது தான் கண் தானம்.


இறந்தவர்களுடைய கண்களை தானமாக பெற்று, மதிப்பீடு செய்து, முறைப்படி பாதுகாத்து, கார்னியல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக வினியோகிக்கும் அமைப்பு, கண் வங்கி எனப்படுகிறது. கார்னியா பாதிப்பு: நம் கண்ணுக்கு முன்புறம், கருவிழிக்கும் முன்னால், நிறமேயில்லாத, ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய, ரத்தக் குழாய்கள் எதுவுமேயில்லாத, ஒரு மெல்லிய திசு, கண்ணுக்கு ஒரு கண்ணாடி ஜன்னலைப் போல அமைந்துள்ளது. அதுவே கார்னியா எனப்படும். தமிழில், "விழி வெண்படலம்' என்பர்.


கார்னியா பாதிக்கப்பட்டால், ஒளிக்கதிர்கள் உள்ளே செல்வது தடுக்கப்படுகிறது.
விழித்திரையில் பிம்பம் படிவதில்லை. எனவே, பார்வை தெரிவதில்லை. அந்த
வகையில் கார்னியா, கண்ணின் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. தொற்றுநோய்
கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்து குறைவு மற்றும் கண் சிகிச்சை குறைபாடு
காரணமாக, சிலருக்கு பிறவியிலேயே அல்லது பரம்பரையாகவோ கார்னியா
பாதிக்கப்படுகிறது. கார்னியாவை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு,
அங்கே தானமாக கிடைத்த கண்ணின் கார்னியா பகுதியை வைத்து மாற்று அறுவைச்
சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.


பாதிப்புக்குள்ளானவர்கள் மீண்டும் பார்வை பெற கண் தானம் தேவைப்படுகிறது. யார் கண் தானம் செய்யலாம்?: ஒரு வயது நிரம்பிய குழந்தைகளின் கண்களிலிருந்து, வயது வரம்பின்றி அனைவரது கண்களும் தானமாக ஏற்றுக்கொள்ளப்படும். கண் தானம் செய்வதற்கு ஜாதி, மதம், இனம், மொழி, கலாசாரம், ஆண், பெண் பாகுபாடு இன்றி அனைவரது கண் தானமும் ஏற்றுக் கொள்ளப்படும். தொற்றுநோய் கிருமியின் காரணமாக இறப்பு, வெறிநாய்க்கடி, கல்லீரல் அழற்சி, மஞ்சல் காமாலை, எய்ட்ஸ்,
கார்னியாவில் வடுக்கள் போன்றவை இருப்பின் அவர்களது கண்கள் தானமாக
ஏற்றுக்கொள்ளப்படாது.


கண் தானம் செய்ய விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்து சங்கர நேத்ராலாயாவின் மருத்துவ சமூகவியல் மற்றும் கண் வங்கி தலைவர் இருங்கோவேள் கூறியதாவது: நமக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என யாரேனும் இறந்துவிட்டால், அவருடைய நெருங்கிய உறவினரை சந்தித்து ஊக்குவித்து, அவரது கண்களை தானம் செய்ய சம்மதிக்கச் செய்யலாம். அதன் பின், அருகில் உள்ள கண் வங்கியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டால், கண் வங்கி அலுவலர்கள், உடல் இருக்கும் இடத்திற்கு வந்து கண்களை தானமாக பெற்றுக்கொள்வர்.


கண் தானம், மதச்சம்பிரதாயத்திற்கு எதிரானது அல்ல. கண்தானம் உட்பட அனைத்து உடல் உறுப்பு தானங்களையும், அனைத்து மதங்களும் ஓர் உயர்வான காரியமாகவே
போற்றுகின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளவர்கள்
தமக்கு தெரிந்து யாரேனும் மரணமடைந்து விட்டால், அவரது கண்களை தானம்
செய்யும்படி, அவரது நெருங்கிய உறவினர்களை ஊக்குவித்து அவரது சம்மதத்துடன்
044-2828 1919 மற்றும் 044-2827 1616 என்ற தொலைபேசி எண்ணைத்
தொடர்புகொண்டால், மருத்துவர்கள் உடனடியாக உடலிருக்கும் இடத்திற்கு வந்து
கண்களை தானமாக பெற்றுக்கொள்வர்.


மற்ற ஊர்களில் உள்ளவர்கள் அந்த ஊருக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு கண் வங்கியைத் தொடர்புகொண்டால், மருத்துவர்கள் உடனடியாக, மரணமடைந்தவரின் உடலிருக்கும் இடத்திற்கு வந்து கண்களை தானமாகப் பெற்றுக்கொள்வர். கண்தானம் குறித்து கருத்தரங்குகள் ஏற்பாடு செய்தால், சங்கரா நேத்ராலயாவின் மருத்துவ
சமூகவியல் துறை அலுவலர்கள், கண் நலம் மற்றும் கண் தானம் பற்றி
படவிளக்கங்களுடன் உரையாற்றுவர். இவ்வாறு இருங்கோவேள் தெரிவித்தார்.


சென்னையில் கிடைப்பது 4 ஜோடி கண்கள் தான்!: கண் தானம் செய்வதில், குஜராத்
முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 33 ஆயிரம் கண்கள் தானமாக
கிடைத்தன. இதில் 9,000 கண்கள் அறுவைச் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு
மீண்டும் ஒளி வீசின. மீதமுள்ள கண்கள் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டன.
நாட்டில் தற்போது 30 லட்சம் கண்களுக்கு தேவை உள்ளது. ஆண்டுதோறும் 90
ஆயிரம் பேர் கண்கள் வேண்டி பதிவு மேற்கொள்கின்றனர்.


சென்னை மாநகராட்சியில், சராசரியாக 119 இறப்பு பதிவுகள் நாள்தோறும்
மேற்கொள்ளப்படுகிறது. இவற்றில் நான்கு ஜோடி கண்கள் மட்டுமே தானமாக
கிடைத்து வருகின்றன. கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமை: இறந்தவரின் கண்களை தானம் தருவது தொடர்பாக, கண் வங்கியை தொடர்பு கொண்ட பின், உறவினர்கள் சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அவை: கண்களை மூடி, இரண்டு கண்களின் மீதும் ஈரமான பஞ்சு அல்லது ஐஸ் கட்டிகளை இமைகளின் மீது வைத்து, கார்னியா ஈரப்பதமுடன் இருக்க உதவ வேண்டும்.


தலைக்கு நேராகச் சுழலும் மின்விசிறிகளை நிறுத்திவிட வேண்டும். தலையை ஆறு அங்குல உயரத்திற்கு, இரண்டு தலையணைகளை வைத்து உயர்த்தி வைக்க வேண்டும். டாக்டர்கள் வரும் வரை, இரண்டு கண்களிலும், ஏதேனும் ஆண்டிபயாட்டிக் சொட்டு மருந்துகளை குறிப்பிட்ட இடைவெளிவிட்டு போடலாம். இது கண்களில் தொற்றுநோய் கிருமிகள் பரவாமல் தடுக்கும்.கண்களை அகற்றிய பின், முகம் விகாரமடைந்துவிடும் என பலரும் நினைக்கின்றனர். ஆனால், தானம் தந்த மனிதரின் கண்களை எடுத்த அடையாளம் கூட தெரியாது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக