ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 SK

2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 ayyasamy ram

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 ayyasamy ram

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 anikuttan

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 anikuttan

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 ayyasamy ram

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 ayyasamy ram

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ayyasamy ram

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 ayyasamy ram

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 ayyasamy ram

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 T.N.Balasubramanian

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 krishnaamma

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 krishnaamma

குருப் 2 தேர்வுக்கு IMPACT IAS ACADAMY 2018(general english & general Tamil)
 thiru907

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 ayyasamy ram

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 ayyasamy ram

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

மதித்திடுவோம் மாதர் தம்மை
 SK

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - அடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா? மோடி மீது சந்திரபாபு புகார்
 M.Jagadeesan

ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை!
 T.N.Balasubramanian

மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ., வுக்கு எதிராக 19ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
 M.Jagadeesan

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது.
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
 SK

காலம் உருக்குலைத்தாலும் எங்கள் காதல் மாறாது என்கிறதா இந்த மனித எலும்புக் கூடுகள்?
 SK

படமெடுத்த பாம்பை ஆத்திரத்தில் கடித்துத் துப்பிய விவசாயி!
 பழ.முத்துராமலிங்கம்

விமானத்தில் இருந்து மழையாக பொழிந்த தங்கம் - வைர குவியல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான முறையில் சிக்ஸர்... இது நியூசிலாந்தில் நடந்துள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

Video: ரசிகர்களை அதிர வைக்கும் Afridi-யின் Catch!
 SK

வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
 SK

வட தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
 SK

விஜய்யும் ரஜினியும் படைத்த சாதனைகள்; வேறெவரும் இடம்பெறவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் முதன்முறையாக தமிழ்
 பழ.முத்துராமலிங்கம்

தினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அதிமுக தரப்பு மனு
 SK

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்
 ரா.ரமேஷ்குமார்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
 ரா.ரமேஷ்குமார்

அரிசியில இருக்கற கல்லை நல்லா பொறுக்கினா என்ன?
 krishnaamma

ஒரு பக்கக் கதை - தலைவர்
 krishnaamma

நான் மலரோடு தனியாக...
 krishnaamma

தாத்தா கதாபாத்திரத்தில் பேரன்
 krishnaamma

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு
 SK

அமெரிக்காவில் நடைமேடை பாலம் இடிந்து விபத்து: பலர் சிக்கியுள்ளதாக தகவல்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே)

View previous topic View next topic Go down

அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே)

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 12:01 am

ஸ்ரீராமருக்குப் பிறகு தோன்றியவன் பரதன். ஆனால், அன்னையின் ஆசையில் விளைந்த ஆணைக்குத் தலைவணங்காமல், நேர்மையின் உறைவிடமான ஸ்ரீராமரின் விருப்பத்தைத் தனது விருப்பமாக ஏற்றவன். ராமாயணத்தின் தரத்தை உயர்த்தி யவன்; அண்ணனை ஆண்டவனாகவே பார்த்தவன்; அண்ணன் தந்தைக்குச் சமம் என்பதால், ஸ்ரீராமரின் பாதுகையை ஏற்று, அரசுக்குப் பாதுகாவலனாக மாறி, பக்தனாகத் தோற்றமளித்தவன்.

கைகேயியின் விருப்பப்படி அரசை ஏற்கவில்லை, பரதன். ஸ்ரீராமனின் சேவகனாக இருந்து அவரது அரசைப் பாதுகாக்கும் பணியில் தன்னை இணைத்துக்கொண்டான். உள்ளத்தளவில் ராமருடன் நெருக்கமாகவே இருந்தான்.

ஜட பரதன், துஷ்யந்தனின் மகன் பரதன் என பரதர்கள் பலர் தோன்றியுள்ளனர். ஆனாலும், ஸ்ரீராமனின் தம்பியாகப் பிறந்து, பண்புடனும் நேர்மையுடனும் வாழ்ந்த பரதனின் வாழ்க்கை, பாரதத்துக்கே பெருமை சேர்த்தது.

கைகேயிக்குத் தசரதர் அளித்த வரம், பொய்யாகி விடக்கூடாது என்பதால், ஸ்ரீராமர் வனவாசம் சென்றார். பட்டாபிஷேகத்துக்கு தேதி பார்த்து, அரசுரிமையைத் தர விரும்பிய தசரதரின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில், ஸ்ரீராமரின் பாதுகையை ஏற்று, அரசுக்குப் பாதுகாவலனாக மட்டுமே இருந்தான் பரதன். பித்ரு வாக்கியப் பரிபாலனம் என்பது அவனது சிறப்பம்சம். ஸ்ரீராமரைப் போலவே அவனும் சிந்தித்தான். பாதுகை மூலம் அவனுக்கு அரசுரிமையைத் தந்தார், ஸ்ரீராமர். அதேபோல், வாலியை விலக்கி சுக்ரீவனுக்கு அரசுரிமை அளித்தார்; ராவணனை விலக்கி விபீஷணனுக்கு அரசுரிமையைத் தந்தார். ஆக, காட்டில் இருந்தாலும், அரசனாகவே இருந்தார் ஸ்ரீராமர்.

வரத்தால் வந்த அரசு முறையற்றது; நீதி நெறியுடன் வந்த அரசு நிலையானது. ராமரின் அவதார நோக்கத்தை அறிந்த பரதன், அண்ணனுக்கு உதவ அரசைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றான். வனவாசம் முடிந்ததும், அவரிடம் அரசை ஒப்படைக்கத் தயாரான அவனது செயல் வியக்க வைக்கிறது. அந்தக் காலங்களில், தீர்த்தாடனம் மேற்கொள் பவர்கள், செல்வத்தை ஒப்படைத்துவிட்டு, 'காசிக்குச் சென்று வருகிறேன்; அதுவரை இதனைப் பாதுகாக்கவும்; திரும்பி வந்ததும் பெற்றுக் கொள்கிறேன்’ என்று கூறிச் செல்வார்கள். அந்தப் பொருள் 'ந்யாசம்’ எனப்படும். அதேபோல், ஸ்ரீராமர் தனது உரிமையை, ந்யாசமாக பரதனிடம் ஒப்படைத்தார். பிறகு திரும்பி வந்து பெற்றுக் கொண்டார்; பட்டாபிஷேகமும் நடந்தேறியது.

வனவாசம் மேற்கொண்ட பாண்டு, அரசுரிமையை ந்யாசமாக திருதராஷ்டிரரிடம் ஒப்படைத்துச் சென்றான். ஆனால் அவர், ந்யாசத்தை உரிமையாக்கிக் கொண்டதால், உருவானதுதான் மகாபாரதம். அறத்தை மீறிய செயலானது, அனர்த்தத்தில்தான் முற்றுப்பெறும். ஸ்ரீராமர், அறத்தின் வடிவம் என்கிறான் மாரீசன். ராமரை வழிபடும் பரதன், அறத்தின் மறு உருவம். ''தவறு செய்த கைகேயியை அழித்திருப்பேன். 'தாயைக் கொன்றவன்’ என அண்ணன் என்னைப் பழிப்பார் என்பதால் செய்யவில்லை'' எனும் பரதனின் உரை, அறத்தில் அவருக்கு இருக்கிற பிடிப்பை உணர்த்துகிறது (ஹன்யாமஹமிமாம்...).

அரசைத் துறந்து, வாக்குறுதியை நிறைவேற்ற வனவாசம் சென்றார் ஸ்ரீராமர். அரசைத் துறந்து, நாட்டில் இருந்தபடி, தாமரை இலைத் தண்ணீரென உலக சுகத்தில் பற்றின்றி, ராமரின் பாதுகைக்குப் பணிவிடை செய்தான் பரதன். இன்பத்தைச் சுவைக்கும் சூழல் இருந்தும், அதிலிருந்து விலகி இருப்பவனே தீரன் என்பான் காளிதாசன். பற்றற்ற நிலையில் பணியை ஏற்ற பரதனின் பக்குவம், முனிவர்களுக்கான இலக்கணத் தையும் கடந்து நிற்கிறது. ஆக, அறமானது நேரடியாக அரசாட்சி செய்தது; பரதன் சாட்சி யாக உடனிருந்தான்; மக்களின் பார்வையில், அரசின் பிரதிநிதியாக இருந்தான்.

பொய்யும் புனைச்சுருட்டும் ஒன்றுசேர்ந்து உண்மையைக் காட்டுக்கு விரட்டியது. கசாப்புக் கடைக்காரனிடம் சிக்கிக் கொண்ட மானைப் போல், பரதனிடம் சிக்கிக்கொண் டோம் என மக்கள் கணிப்பதை அறிந்த பரதன் கோபப்படவில்லை. மாறாக, மகிழ்ச்சியுற்றான் (மித்யாப்ரவ்ரஜி தோராமபுன்னகை. 'ராமர் வனவாசம் ஏற்றாலும், மக்களின் மனதில் அவர்தானே வாசம் செய்கிறார்! அவர்கள், ஸ்ரீராமரையே மன்னராக நினைக்கின்றனர்’ என அறிந்து பூரித்தான்.

மக்களை மகிழ்விப்பதே அரசனின் பணி என்கிறான் காளிதாசன். வனத்தில் உள்ள ஸ்ரீராமர்தான், தேசத்தை ஆள்கிறார் என்கிற பரதனின் ராம பக்திக்குக் கிடைத்த வெகுமதி, மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர் என்பதுதான். வசிஷ்டரின் அழைப்புக்கு இணங்க, மாமன் வீட்டிலிருந்து அயோத்திக்கு வந்தான் பரதன். கைகேயியின் களியாட்டமறிந்து வெகுண்டான்; விக்கித்துப் போனவன், செய்வதறியாது தவித்தான். ''நீ கேட்ட இரண்டு வரமும் உனக்குப் பலனளிக்கவில்லை.

ஸ்ரீராமரைக் காட்டுக்கு அனுப்பினாய்; அது, உனது வாழ்வை அவலமாக்கியது. தசரதனை இழந்து நீ மட்டுமா விதவையானாய்?! உனது சக்களத்தி களையும் அல்லவா விதவை ஆக்கி விட்டாய்! தசரதனின் இழப்பு, தேசத் துக்கு ஏற்பட்ட இழப்பு. அது, வீட்டுக்கும் இழப்பை ஏற்படுத்தியது. நாட்டையும் வீட்டையும் ஆள வேண்டியவன், காட்டுக்கு விரட்டப்பட்டால், நாடும் வீடும் காடாகிவிடுமே! ஜடாயு, ஸம்பாதி, சுக்ரீவன், அனுமன், விபீஷ ணன், வானரப் படையினர், முனிவர்கள் அனைவரும் ராமருடன் இணைந்து காட்டை நாடாக மாற்றினர் என்றால் மிகையாகாது. ஆக, வனவாசம் சென்ற வனுக்கா துயரம்?! அதனை அளித்த உனக்குத்தானே துயரம்?! உனது இரண்டாவது வரமும் பலனளிக்க வில்லை. அரியாசனத்தில் நான் அமரவும் இல்லை; அரசை ஏற்கவும் இல்லை'' என்றான் பரதன்.

அதுமட்டுமா? ''தசரதனுக்கு உன்னிடம் நெருக்கம் அதிகம். அதுவே அவரின் அழிவுக்குக் காரணமாயிற்று. அளவு கடந்த நெருக்கம், வெறுப்புக்குக் காரணமாவதும் உண்டு (அதிஸ்னேஹ:பாபசங்கீ). பாதகச் செயலில் ஈடுபட்டவனுடன் இணைந்தவனும் தண்டனையை ஏற்க நேரிடும் என்கிறது சாஸ்திரம். கைகேயியுடன் இணைந்த மற்ற இரண்டுபேரும் துயரத் தையே சந்தித்தனர். அவ்வளவு ஏன்... உன்னால், அயோத்தி நகரமே துயரத்தில் ஆழ்ந்தது'' எனும் பரதனின் கணிப்பை பிரதிமா நாடகம் பிரதிபலிக்கிறது.

அயோத்திக்கு வந்த பரதனுக்கு இருப்புக்கொள்ள வில்லை. ஸ்ரீராமர் இல்லாமல் அயோத்தியா எனச் சிந்தித்தவன், அவரைக் காண காட்டுக்கு ஓடினான். கூடவே, படைகளும் பின்தொடர்ந்தன. புடைசூழ வந்த பரதனைக் கண்ட லட்சுமணர் ராமரிடம், ''அண்ணா, அன்னை கைகேயி, தங்களைக் காட்டுக்கு விரட்டினாள். அவளின் மைந்தன், அதுபோதாது என்று படைகளுடன் போர் தொடுக்க வருகிறான்'' என்றான். வனத்தில், ஸ்ரீராம ருக்குப் பாதுகாவலனாக விளங்குபவன் லட்சுமணன். என்றைக்கும் இணைபிரியாதவன், அவன். காவலன், எதைக் கண்டாலும், எவரைச் சந்தித்தாலும் அவனது மனம், இதில் ஏதும் பிழை இருக்குமோ என்றே நினைக்கும். லட்சுமணனின் கணிப்பும் அவ்விதமே! அவனிடம் ஸ்ரீராமர், ''பரதனுக்கு என்னிடம் உள்ள பற்று, சொல்லில் அடங்காதது. அவனின் மனதை நான் அறிவேன். என்னை அணைத்து மகிழவே அவன் வருகிறான்'' என விளக்கினார். ஸ்ரீராமர் சொன்னபடியே நடந்ததும், உண்மை உணர்ந்து தெளிந்தான் லட்சுமணன்.

ராமருடன் வனத்துக்குச் செல்ல, லட்சுமணனுக்குச் சுமித்ரையின் அறிவுரை தேவைப்பட்டது. ஆனால், பரதனின் மனமானது, காந்தம் போல் ஈர்க்கப்பட்டு, ஸ்ரீராமரை வந்தடைந்தது. பரதனின் மனமானது, எதிர்பார்ப்பற்ற அன்புடன் ஸ்ரீராமரைப் பற்றிக்கொண்டு இருப்பதையே இது உணர்த்துகிறது. ''14 வருடங்கள் மரவுரி தரித்து, காய்-கனிகளைச் சாப்பிட்டுக் காலம் தள்ளு வேன். நீயில்லாத அயோத்தியில் நுழைய மாட்டேன். பட்டணத்துக்கு வெளியே வந்து, உனது வருகையை எதிர்நோக்கிக் காத்திருப்பேன். அரசுரிமையை, உனது பாதுகைக்கு அளிப்பேன்; அரசைக் கண்காணிப்பேன். வனவாசம் முடிந்ததும், நீ வராவிட்டால் நெருப்பில் இறங்கிவிடுவேன்'' என்றான் பரதன். அவனது உறுதியை உணர்ந்த ஸ்ரீராமர், நெகிழ்ந்து போனார்; அவனை வாரி அணைத்துக் கொண்டார்!

ஸ்ரீராமர் பாதுகையுடன் வந்த பரதன், அயோத்தி மக்களிடம் உரையாற்றினான். ''ராமபிரான், இந்த அரசின் பாதுகாவல னாக என்னைப் பணித்திருக்கிறார். எனவே, அவரின் பாதுகை, அரசனா கிறது. அரச மரியாதைகள் யாவும் பாதுகைக்கே நடைபெறும். வனவாசம் முடிந்ததும், அயோத்தியை அவரிடம் ஒப்படைத்துவிட்டுத் தூய்மையாவதே என் விருப்பம்'' என்றான் பரதன்.

பக்தன், பணியாள், குறிப்பறிந்து செயல்படுபவன், அறநெறி பிறழாதவன் மற்றும் தம்பிக்கு இலக்கணம் எனத் திகழ்ந்தவன், பரதன். அரசியல் தூய்மை மட்டுமின்றி உடன் பிறப்புகளுடனான உறவுப் பெருமையையும் உணர்த்துகிறது, அவனது சரிதம்.

நன்றி விகடன்..
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum