ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆச்சி...ஜெயிச்சாச்சி !'

View previous topic View next topic Go down

ஆச்சி...ஜெயிச்சாச்சி !'

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 12:55 am

'ஆச்சி...ஜெயிச்சாச்சி !'

ஒரு ரூபாயில் தொடங்கிய ஒரு வெற்றிப் பயணம் !

" எல்லா பெரிய பயணங்களுமே... சின்னதா எடுத்து வைக்கற முதல் அடியில இருந்துதான் தொடங்கும்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி, இன்னிக்கு பன்னிரண்டு நாடுகள்ல மார்க்கெட்டிங் பார்த்துக்கிட்டிருக்கற 'ஆச்சி மசாலா’ நிறுவனம், ஆரம்பத்துல... குறைவான முதலீட்டுல 'ஒரு ரூபாய் மிளகாய்ப்பொடி பாக்கெட்’டோட களம் இறங்கினதுதான்! சாம்பார்லயோ, குழம்புலயோ ஒரு ஸ்பூன், ரெண்டு ஸ்பூன்னு போடற மசாலாப்பொடியை... ஒரு பிஸினஸா செய்தா என்னனு நாங்க எண்ணித் துணிஞ்சதும், இன்னிக்கு அதுல நிலைச்சு நிக்கறதும்... எங்க உழைப்புக்குக் கிடைச்ச பரிசு!''

- சிநேகமான புன்னகையுடன் ஆரம்பித்தார் ஆச்சி மசாலா, நாசரத் ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெல்மா. இன்றைக்கு வளர்ந்து வரும் சின்னஞ்சிறு தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்காக, தெல்மா பகிர்ந்த வார்த்தைகள், செமத்தையான பிஸினஸ் பூஸ்ட்!

''ஹவுஸ் வொய்ஃப்பா வீட்டுல இருந்த எனக்கு, ஒரு கட்டத்துல... 'நாமளும் ஏதாச்சும் தொழில் செய்யலாம்'னு ஒரு எண்ணம் வந்துது. பெண்களுக்கு உதவற மாதிரியான ஒரு விஷயத்தைக் கையில எடுக்க நினைச்சேன். 'ஆபீஸ், வீடுனு ரெட்டை வேலைச் சுமையில தள்ளாடற 'வொர்க்கிங் விமன்’ தோழிகளுக்கும், சமையலறைக்குள்ளயே பாதி ஆயுளைக் கரைக்கற இல்லத்தரசிகளுக்கும் அடுப்படி வேலையைச் சுலபமாக்கற மாதிரி ரெடிமேட் பொடியைக் கையில கொடுத்தா... எத்தனை சந்தோஷப்படுவாங்க’னு நானும், கணவரும் யோசிச்சோம். சாமான்யப்பட்ட ஜனங்க வாங்கற விலையில பொருள் கிடைச்சா, அந்தத் தொழில் நிலைக்கும்னும் கணக்குப் போட்டு, அதுக்கான வேலைகள்ல இறங்கினோம்.


30 ஆயிரம் ரூபாய் முதலீடோட... 20 வேலையாட்களோட... ஒரு ரூபாய்க்கு குழம்பு மிளகாய்த்தூள் பாக்கெட் தயாரிச்சோம். 'ஆச்சி'னா... மதிப்புக்குரியவங்கனு அர்த்தம். அதனால அதையே எங்க பிராண்ட்டோட பேரா வெச்சுக்கிட்டு களத்துல குதிச்சோம்'' என்றவர், விதைத்த தினை விளையக் காத்திருந்திருக்கிறார்.

''நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு அபார வரவேற்பு. காரணம், எங்க பொருளோட தரம், வாங்கக் கூடிய அளவிலான விலை, ஒரு பொடியை வாங்கி எட்டு வகை குழம்புக்குப் பயன்படுத்திக்கலாம்ங்கிற 'மல்டிபிள் யூஸ் டெக்னிக்’ இதெல்லாம் மக்களுக்கு ரொம்ப புடிஞ்சிருந்ததுதான். இந்த வெற்றியைக் கடைசி வரைக்கும் தக்க வெச்சுக்கணும்னா... எந்த நிலையிலயும் தரத்துல காம்ப்ரமைஸ் செஞ்சுக்கக் கூடாதுனு முடிவெடுத்தோம். தரம், டேஸ்ட் ரெண்டும், கடையில வாங்கின உணர்வை மக்களுக்குத் தரக்கூடாது. 'பிறந்த வீட்டுல இருந்து, அம்மாவோட கைப்பக்குவத்துல அரைச்சு கொடுத்துவிட்ட மாதிரி இருக்கு’ங்கற உணர்வைத் தரணும்னு நெனச்சோம். இதுதான் எங்க பிஸினஸோட 'விஷன்’. இது எங்க மனசுல மட்டுமில்ல, வேலை பார்க்கற ஐயாயிரம் பேரோட மனசுலயும் அழியாத பாடமா பதிஞ்சு இருக்கு'' என்ற தெல்மா, தொடர்ந்து இதே தெளிவில் பயணப்பட்டதால்... சாம்பார்த்தூள், ரசப்பொடி, மிளகுப்பொடி என்று படிப்படியாக விரிவடையச் செய்திருக்கிறார். அதற்குப் பிறகும் அவரின் தேடல் தொடங்க, அதற்குப் பரிசாக கிடைத்திருக்கிறது அந்த அசத்தல் பிஸினஸ் ஐடியா!

''இது மட்டும் போதாதுனு மனசுக்குள்ள தோணிட்டே இருந்துது. அதை கணவர்கிட்ட சொன்னப்போ, 'இந்த அவசர உலகத்துல, சமையல் செய்றதுதான் ஒரு இல்லத்தரசிக்கு பெரிய தலைவலி. ஈஸியா சமையல் செய்றதுக்கு இன்னும் என்ன மாதிரியான பொருட்கள் எல்லாம் சுலபமா கிடைச்சா அவங்க சந்தோஷபடுவாங்கனு யோசினு சொன்னார். அப்ப உருவானதுதான் 'ரெடி டு குக்’ தயாரிப்புகள்.

வீட்டுல சாதம் மட்டும் இருந்தா போதும், கடையில இருந்து வாங்கிட்டுப் போய் உடனே மிக்ஸ் பண்ற மாதிரி புளியோதரை மிக்ஸ், லெமன் மிக்ஸ்னு தயாரிச்சோம். அப்புறம் தக்காளித் தொக்கு, பூண்டுத் தொக்கு, குலோப் ஜாமூன், பாதம்கீர், பாயசம் மிக்ஸ்னு பல தயாரிப்புகள இறக்கி விட்டு, மக்களின் அமோக ஆதரவோட வெற்றி நடை போட்டுக்கிட்டிருக்கோம்'' என்றவர், சற்று நிதானித்து,''பிரச்னைகள் வராத பிஸினஸே இல்ல. அதுக்காக 'ஐயோ’னு கலங்கி நின்னு கண்ணீர் விடாம, அதை தீர்க்கறதுக்கான வழி என்னனு பாத்துப் பாத்து இறங்கினதால... இன்னிக்கு, பிரச்னைகளை முன்கூட்டியே அனுமானிக்கற அளவுக்கு வளர்ந்துட்டோம்! எங்க தரம்... தென்னிந்தியாவிலேயே 'நம்பர் 1’ங்கற இடத்தை எங்களுக்கு மகுடமா கொடுத்திருக்கு'' என்று கண்கள் மின்ன சொன்ன தெல்மா,

''12 வருஷத்துக்கு முன்னால ஆரம்பிச்சு, ஆலமரமா நிக்கற ஆச்சி குடும்பத்துக்கு இன்னமும் கனவு நீண்டுட்டே இருக்கு. அது... நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கணும்; நிறைய தொழில் அதிபர்களைத் தரணும்கிறதுதான். ஆமா... 'ஆச்சியோட குவாலிட்டியில பொருட்கள தயாரிச்சுத் தர்றோம், உங்க பிராண்டுல மார்க்கெட்டிங் செஞ்சு தர்றீங்களா’னு ஆர்வமா வர்ற அத்தனை பேரோடயும் கை குலுக்க ரெடியா இருக்கோம். அடுத்ததா, 'நம்ம நாட்டுல வேஸ்ட்டா போயிட்டு இருக்குற ஒரு லட்சம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள விவசாய விளைபொருட்களைப் பதப்படுத்தி, பயன்படுத்தும் பொருளா எப்படி மாத்த முடியும்?'னு வழி தேடிகிட்டு இருக்கோம். தேடிக்கிட்டே இருந்தா வழி கிடைக்கும். இது எளிய சூத்திரம்... ரொம்ப வலிமையான சூத்திரம்!'' என்று முடித்தபோது, 'ஆச்சி’ மசாலாவின் வெற்றிக்கான வேர் நன்றாகவே புரிந்தது.

நன்றி விகடன்....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum