ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 M.Jagadeesan

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !

View previous topic View next topic Go down

கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 1:05 am

கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !

என் கணவர் சஞ்சய் காந்தி மறைந்து முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர் மறைந்தபோது என் மகன் வருண் நூறு நாள் குழந்தை. இத்தனை ஆண்டுகளாக அம்மாவும் பிள்ளையுமாகவே வாழ்க்கையைக் கடந்து வந்துவிட்ட நிலையில், இப்போது புதுவரவு எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறது. ஆம்... வருணுக்குத் திருமணம் ஆகிவிட்டது!

'அத்தை’யாகிவிட்ட நான், 'வருண் அம்மா’வாக உணர்ந்த நெகிழ்வுகளை அசைபோடும்போது, 'நாம் மட்டுமா, பசுவும்... புலியும்கூட அப்படித்தான்’ என்று விலங்குகளின் 'அம்மா’ ஸ்தானமும் என்னை வியக்க வைக்கிறது!

'அம்மா...’ என்று யார் அழைத்தாலும் அம்மாக்கள் திரும்பிப் பார்ப்பார்கள். காரணம், 'அது நம்ம புள்ளையா இருக்குமோ...’ என்ற ஒரு உணர்வு. ஆர்க்டிக் பிரதேசங்களில் காணப் படும் 'ஃபர் சீல்’ கடல் நாய்களுக்கு இந்தப்பிரச்னை கிடையாது. ஆயிரக்கணக்கான சீல் குட்டிகள் குவிந்து குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் கடற்கரையில், குரலை வைத்தே தன் குழந்தையை சரியாகக் கண்டுபிடித்து விடும் அதன் தாய். எப்படி நடக்கிறது இந்த அதிசயம் என்பது, தாய்மைக்கே உரிய உன்னதமான ஒரு விஷயம்.

பாசத்தின் வெளிப்பாடு ஒவ்வொரு தாய்க்கும் வேறுபடும். யானைகளைப் பொறுத்தவரை ஆபத்தான தருணங்களில் தமது நான்கு கால்களுக்கு இடைப்பட்ட இடைவெளியைத் தாண்டி தனது குட்டியை அவை வெளியே விடுவதில்லை. குட்டிகளை நீர்நிலைகளில் குளிப்பாட்டி மகிழ்வதில் யானைகளுக்கு தனி மகிழ்ச்சி. வளர்ந்த பிறகும்கூட மகள், மகன்களைத் தொட்டும், உரசியும், உச்சி முகர்ந்தும் கொஞ்சி குலாவிக் கொண்டேதான் இருக்கும் யானைகள்.

ஈன்ற சில நிமிடங்களுக்குள்... கன்றோடு மிக இறுக்கமான ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டுவிடும் பசு. எப்போதும் தன் தாயையே கன்று சுற்றி வந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இப்படி வளர்க்கப்படும் கன்று, தாயை விட்டுப் பிரிய நேர்ந்தால்... இரண்டுமே படும் மன வேதனை கல் மனதையும் கலங்க வைத்துவிடும்.டால்பின்கள் தாங்கள் தாயாவதற்கு முன்பே, மற்ற குட்டி டால்பின்களுக்கு தாதியாக இருந்து தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளும். பிறகு, அவை தாயாகி தன் குட்டிகளோடு நீந்தும்போது குட்டியும் தாயும் ஒரே தாளக்கட்டில், ஒரே மாதிரி மூச்சை இழுத்துவிட்டு தங்களுக்குள் ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். இந்தப் பயிற்சி, பெரிய டால்பின் கூட்டத்துக்குள் புகுந்துவிட்டால் கூட தாயும் சேயும் பிரிந்துவிடாமல் ஒன்றாகவே இருப்பதற்கு உதவியாக இருக்கும். டால்பின்கள் சுமாராக பத்து வருடங்களுக்கு தங்கள் குட்டிகளை விட்டு பிரியாமல் பேணிப் பாதுகாக்கும்.

'ஒரேங்குட்டேங்' (ஒராங்குட்டான்) குரங்குகள், இடம் மாறிக்கொண்டே இருக்கும் வழக்கம் கொண்டவை என்பதால், ஒவ்வொரு நாளும் தனது குட்டிகளுக்கு ஒரு புதிய 'வீட்டை’ கட்டிக் கொடுப்பதிலும் அவற்றுக்கு உணவைத் தேடி வந்து கொடுக்கவுமே முழுநாளும் சரியாக இருக்கும்.

கோழிகளுக்குத் தாய்மை உணர்வு... தங்களது முட்டைகளை அடை காக்கும் காலத்தில் இருந்தே துவங்கிவிடும். நாய்கள், உயிரைப் பணயம் வைத்து, குட்டிகளைப் பாதுகாக்கும். முதலைகள் கரையோரம் முட்டையிட்டு, குஞ்சுகள் வெளியே வரும் தருணத்தில் முட்டைகளை நீருக்கு இடம் மாற்றிவிடும்! சிறுத்தைகள், ஆறு மாத காலம் வரை உணவை வேட்டையாடி வந்து குட்டிகளுக்கு ஊட்டும். ஆக்டோபஸ், உணவை தேடிச் செல்வதற்குகூட நேரத்தை ஒதுக்காமல் முட்டைகளைப் பாதுகாக்கும். அந்த சமயங்களில் தனது கால்களையே சாப்பிட்டு பசியாறிக் கொள்ளும்!

'உயிரியல் பூங்கா' என்ற பெயரில் செயல்படும் 'மிருக காட்சி சாலை’கள் பலவற்றில் கேவலமான முறையில் கூண்டுக்குள் அடைத்து காட்சிப் பொருளாக வைக்கப்படும் புலிகள் செய்யும் தியாகம்தான் உலகத்தில் இருக்கும் எல்லாத் தாய்களின் தியாகத்தை விடவும் பெரியது. ஆம்... குட்டிகளை ஈன்றவுடன் பெரும்பாலும் அவை கொன்று விடுகின்றன. வாழ்நாள் முழுதும் தான் கூண்டுக்குள் அடிமைப்பட்டு வாழும் வாழ்கையை, தங்கள் வாரிசுகள் அனுபவிக்கக் கூடாது என்ற காரணத்தினால் நெஞ்சை கல்லாக்கிக்கொண்டு தாய்ப் புலி செய்யும் காரியம் அது!

பறவையாக இருந்தாலும், மிருகமாக இருந்தாலும், மனிதராக இருந்தாலும் தாய் என்பவள் தைரியம் மிகுந்தவளாகவே இருக் கிறாள். பயம் ஏற்படுவதற்கு காரணமே... மூளையின் ஒரு பகுதியில் சுரக்கும் 'பெப்டைட்’ (றிமீஜீtவீபீமீ) என்ற ஒரு வகை புரதச்சத்துதான். இது, தாய்க்கு சுரப்பதில்லை. அல்லது வழக்கத்தைவிட குறைவாக சுரக்கிறது என்று ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

நான் தாயாகி முப்பது வருடங்கள் ஆகிவிட்டது. குழந்தையை ஈன்றெடுத்ததிலிருந்து இந்த முப்பது ஆண்டு காலமும் இந்த அமிலம் என்னில் சுரக்கவில்லை. ஆனால்... இப்போது சுரக்கத் துவங்கி விட்டது!

நன்றி விகடன்....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum