ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

மருத்துவ முத்தம் தரவா...!
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
 ayyasamy ram

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
 ayyasamy ram

'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
 ayyasamy ram

ஒரு பேனாவின் பயணம்
 Dr.S.Soundarapandian

காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!
 Dr.S.Soundarapandian

இருளில் ஒளிரும் மருதாணி
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கையில் கலை.... பையில் பணம் !

View previous topic View next topic Go down

கையில் கலை.... பையில் பணம் !

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 1:11 am

கையில் கலை... பையில் பணம் !

வீட்டில் இருந்தபடியே விறுவிறு லாபம்

வாசல் நிறைய வண்ணக் கோலம் போட்டு வெச்சு, போற வர்றவங்களோட பாராட்டை அள்ளற அக்கா, பத்திரிகைகள்ல வர்ற படங்களைப் பார்த்து வெள்ளை பேப்பர்ல வரைஞ்சு மகிழற அம்மா, வீட்டுக் குழந்தைகளோட டிரெஸ்ல சின்னச் சின்னதா டிசைன்ஸ் செஞ்சு ரசிக்கற சித்தி, உடைஞ்சுபோன பொருட்களை வெச்சு ஏதாச்சும் உபயோகமான பொருட்கள் பண்ற பெரியம்மா... இதுல எந்த வகையிலயாவது எல்லார் வீட்டுலயும் ஒரு பெண் இருப்பாங்க. ஆனா, அவங்க எல்லாருமே குடத்திலிட்ட விளக்கா இருக்கறதுதான் வேதனை. அவங்களுக்கு எல்லாம் 'கிராஃப்ட் ஏரியா’வுல சிவப்புக் கம்பள வரவேற்பு இருக்கு. தேவை... முயற்சிதான்!''

இயல்பாக ஆரம்பித்தார் சென்னை, புரசை வாக்கம், கீதா. கைவினைப் பொருட்கள் தயாரித்து... கண்காட்சி, விற்பனை என்று பணம் ஈட்டுவதுடன், 'கிராஃப்ட் கிளாஸ்’களும் எடுக்கும் இந்த கீதா, மேலே உள்ள பட்டியல் பெண்களுள் ஒருவராக இருந்து, இப்போது மேலெழுந்து வந்திருப்பவர்!

''பிறந்து, வளர்ந்தது எல்லாம் பெங்களூருல. சின்ன வயசுல இருந்தே கிராஃப்ட்ல நிறைய ஆர்வம். அதை வெட்டி, இதை ஒட்டினு ஏதாச்சும் பண்ணிட்டேதான் இருக்கும் என் கை. அதுக்கு தீனி போட, ஃபர் பொம்மை, பெயின்ட்டிங், ஆர்ட் ஃப்ரம் வேஸ்ட், பாட் மேக்கிங்னு சில கிளாஸ்களுக்கும் போனேன். பி.ஏ. படிச்சதோட கல்யாணம் முடிஞ்சு சென்னைக்கு வந்துட்டேன். ஏதாச்சும் வேலைக்குப் போகலாமேனு முயற்சி செஞ்சேன். ஆனா, அப்போ எனக்கு சரளமா தமிழ் தெரியாததால வேலை கிடைக்கறது சுலபமா இல்ல. எப்பவும் போல எதையாச்சும் வெட்டி, ஒட்டி, அலங்கரிச்சு, கலர் பண்ணினு வீட்டு 'ஷோ கேஸ்’ஐ கிராஃப்ட் அயிட்டங்களால நிறைக்க ஆரம்பிச்சேன்.

வீட்டுக்கு வர்றவங்க எல்லாம், 'நீங்க பண்ணினதா..? அழகா இருக்கே..!’னு பாராட்ட, என் கணவர், 'நீ பண்றதையெல்லாம் கடைகள்ல கொடுக்கலாமே?’னு கேட்டப்போதான், அதை ஒரு தொழிலா பண்ணலாம்ங்கறது எனக்கு உறைச்சுச்சு. ஆனா, அதுக்கு முன்னால அதற்குத் தேவையான தகுதிகளை வளர்த்துக்கணும்னு நினைச்சேன்'' என்பவர், அதற்காக சின்ஸியராக உழைத்திருக்கிறார்.

''ஏதாவது ஒரு கிராஃப்ட் கிளாஸுக்கு போய் முழுமையா கத்துக்கலாம்னு அலைஞ்சேன். குறிப்பிட்ட சில அயிட்டங்களை மட்டுமே அப்போ எல்லா இடத்துலயும் சொல்லித் தந்துட்டு இருந்தாங்க. அதனால அதுல சேர நான் விரும்பல. அதேசமயம், ஒரு யோசனையோட ஃபேன்ஸி கடைகள்ல இருந்து பெரிய பெரிய கிஃப்ட் ஷாப்கள் வரை போய் அங்க இருக்கற பொருட்களை எல்லாம் ஒவ்வொண்ணா எடுத்துப் பார்த்து, 'இதை எப்படி, எதுல செஞ்சிருக்காங்க..?’னு மனசுல குறிச்சுக்கிட்டு, மெட்டீரியல்ஸ் வாங்கி வீட்டுலயே பண்ணிப் பார்க்க ஆரம்பிச்சேன்.

பத்திரிகைகள்ல வர்ற கிராஃப்ட் பகுதிகள், கைவினைப் பொருட்களுக்கான புத்தகங்கள்னு வாங்கிப் படிச்சேன். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் தேடித் தெளிவுற கத்துக்கிட்டதால, ஒரு கட்டத்துல நான் எக்ஸ்பர்ட் ஆயிட்டேன். என்னோட கற்பனைத் திறனை யும், உழைப்பையும் சேர்த்து நான் பண்ணின பொருட்கள் எல்லாம் புதுமையா, தரமா இருந்தது. அதனால தெரிஞ்சவங்க, ஃபேன்ஸி ஸ்டோர்ஸ், கிஃப்ட் ஷாப்ஸ்னு என் பொருட்களை சுலபமா மார்க்கெட்டிங் பண்ண முடிஞ்சது.

கண்ணாடி ஓவியங்கள், கண்ணாடித் துண்டு சிற்பங்கள், களிமண் சுவர் ஓவியங்கள், கடற்சிப்பி பூக்கள், வாசல் தோரணங்கள், ஹேண்ட் பேக், பாசிமணிகளால் கோத்த செல்போன் கவர்னு எல்லாம் செம ஹிட். பெங்களூரு கைவினைப் பொருட்களுக்கான கண்காட்சியில என்னோட பொருட்களுக்காக ஒரு ஸ்டால் போட்டேன். 200 ரூபாயில இருந்து, 20 ஆயிரம் ரூபாய் வரை என் பொருட்கள் விலை போக, இன்னும் உற்சாகமானேன். வெளிநாட்டுக்காரங்க ஆர்டர்கள் கொடுத்து எங்கிட்ட பொருட்கள் வாங்கிப் போனாங்க. ரெண்டே வருஷத்துல கடனை எல்லாம் அடைச்சு, சேமிப்பு கணக்கு துவங்கற அளவுக்கு கை தூக்கிவிட்டுடுச்சு கிராப்ஃட்'' என்றவர், அதற்குப் பின்தான் கிராஃப்ட் டீச்சராக புரமோஷன் பெற்றுள்ளார்.

''நல்ல பெயரும், நிறைய கான்டாக்ட்ஸும் கிடைக்க, 'இது சரியான தருணம்...’னு அடுத்ததா 'இங்கு கிராஃப்ட் வகுப்புகள் எடுக்கப்படும்’னு வீட்டுல போர்டு மாட்டினேன். குழந்தைகள், கல்லூரிப் பெண்கள், இல்லத்தரசிகள்னு கூட்டம் நிறையவே வந்துது. அவங்கவங்களுக்கு ஏற்ற டைமிங்ல வார நாட்கள், வார இறுதி நாட்கள், ஷார்ட் டெர்ம் கிளாஸஸ், லாங் டெர்ம் கிளாஸஸ், சம்மர் கிளாஸஸ்னு வகுப்புகளை திட்டமிட்டுப் பிரிச்சுக்கிட்டேன்.

என்கிட்ட பயிற்சியை முடிச்சவங்கள்ல ஆர்வமும், தேவையும் இருக்கறவங்களை எனக்கு வர்ற ஆர்டர்களை பண்ணிக் கொடுக்கறதுக்கு பயன்படுத்திக்கிட்டேன். 'பார்ட் டைம்’மா பண்ணினவங்க, ஒரு கட்டத்துல தனியா ஆர்டர் எடுத்துப் பண்ற அளவுக்கு முன்னேறின வொடனே... நானே மார்க்கெட்டிங் ஆலோசனைகளும் வழங்கி அனுப்பி வெச்சுக்கிட்டிருக்கேன். என்னிக்குமே கைவினைப் பொருட்களுக்கு வாய்ப்புகள் இருந்துட்டேதான் இருக்கும். 20 ரூபாய் பொம்மையில ஆரம்பிச்சு, 20 ஆயிரம் ரூபாய் சிற்பங்கள், ஓவியங்கள் வரை இதுல லாபம் அள்ளலாம். வீட்டுல இருந்துட்டே ஆர்டர்கள், வகுப்புகள்னு வருஷம் முழுக்க லாபம் கொழிக்கக்கூடிய இந்தத் தொழில், பெண்கள் சதமடிக்க வாய்ப்புள்ள ஏரியா!'' என்று நம்பிக்கை தந்தவர், தன்னிடம் பயிற்சி பெற்று, இன்று மாதம் ஏழாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்துக் கொண்டிருக்கும் வில்லிவாக்கம் பானுமதியைக் கை காட்டினார்.

''பத்தாவதுதான் படிச்சிருக்கேன். அழகா கோலம் போடுவேன். புத்தகங்களைப் பார்த்து நிறைய ஓவியங்கள் வரைவேன். 'எந்தப் பயிற்சியும் இல்லாமலேயே இவ்ளோ அழகா வரையறீங்களே... ஏதாச்சும் கிளாஸ் போய் உங்க ஓவியங்களை இன்னும் மெருகேத்துக்கிட்டீங்கனா, விற்பனையும் செய்யலாம்ல?’னு ஒரு பொண்ணு எங்கிட்ட சொன்னப்போ, 'ஐம்பது வயசுக்கு மேல எந்த கிளாஸுக்குப் போறது...’னு மனசு சலிச்சுக்கிச்சு.இந்த சந்தர்ப்பத்துல... கீதாவைப் பத்தி ஒருத்தவங்க என்கிட்ட சொல்ல, தயக்கத்தோட கீதாகிட்ட என்னோட ஓவியங்களை எடுத்துட்டுப் போய் காட்டினேன். அசந்து போனவங்க, 'உங்க கையில சரஸ்வதி குடியிருக்கா. அவளை லட்சுமியையும் கூட்டிட்டு வர வைப்போம்...’னு சொல்லி ஓவியங்கள்ல இன்னும் சில திருத்தங்கள், நுணுக்கங்கள் சொல்லிக் கொடுத்ததோட, மத்த கிராஃப்ட் அயிட்டங்களுக்கான பயிற்சியும் கொடுத்தாங்க.

ஒரு கட்டத்துக்கு அப்புறம் நானே கைவினைப் பொருட்கள் தயாரிப்புல இறங்க, நல்ல லாபம் கிடைச்சது. குறிப்பா, நவராத்திரி கொலு சீஸன் அமோகமா இருக்கும். இப்போ பயிற்சி வகுப்புகளும் எடுக்கறேன். 'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்’ங்கறது பெண்களைப் பொறுத்தவரைக்கும் நூறு சதவிகிதம் உண்மை!'' என்றார் பானுமதி அனுபவ மொழியாக!

நன்றி விகடன்....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum