ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 மூர்த்தி

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

இளமையான குடும்பம்..!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !

View previous topic View next topic Go down

பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 1:03 am

பொருள் வரும் வழிகளை உருவாக்குதல், அந்த வழிகளில் பொருளை சம்பாதித்தல், சம்பாதித்த பொருளை பாதுகாத்தல், பாதுகாத்த பொருளை முறைப்படி பிரித்து செலவு செய்தல் ஆகியவற்றை செய்தலே நிர்வாக திறமையுள்ள அரசாங்கமாகும்.படித்தவர்களைத்தான் பார்வையுடையவர்கள் என்று சொல்லலாம். கல்லாதவர்களுக்கு இருக்கும் கண்கள் புண்ணுக்கே சமமானது. மணலில் தோண்டிய கிணற்றில் தோண்டுகிற அளவுக்கு தண்ணீர் சுரப்பது போல, மக்களுக்கு படிக்கின்ற அளவுக்கு அறிவு பெருகும். இளமைப் பருவத்தில் ஒருவன் கற்கின்ற கல்வி, அவனது எல்லாப் பருவங்களுக்கும் பாதுகாப்பாக அமையும். ஏழு பிறப்புக்கும் அது காவல் அரணாக இருக்கும். எந்த வகையிலும் அழிவு பெறாத ஒரே செல்வம் கல்வி மட்டுமே. குறையக்கூடிய அல்லது களவு போகக்கூடிய தங்கம் முதலான பிறசெல்வங்கள் எல்லாம் மதிக்கத்தக்கவையே அல்ல. கொடுக்க, கொடுக்க வளர்வதும், இன்பத்தை தருவதும் கல்வி ஒன்றே. பிறரிடம் கேட்டுப் பெறுகின்ற அறிவே, செல்வத்தில் எல்லாம் தலைசிறந்த செல்வமாகும். படிப்பின் மூலமும், இயந்திரங்கள் மூலமும் பெறும் அறிவு ஒரு அளவுக்கே பயன்படும். கேட்டுப்பெறும் அறிவு எல்லா வகையிலும் வாழ்க்கைக்கு உதவும். பெரிய அளவில் கேட்பதற்கு இயலாவிட்டாலும், ஒரளவாவிற்காவது நல்ல அறிவுரைகளை கேளுங்கள். கேட்ட அந்த ஒவ்வொரு அறிவுரையும் உனக்கு சிறந்த நன்மையைத் தரும். மனதை அது செல்லும் வழியில் எல்லாம் அலையவிடாமல், தீயஎண்ணங்களை அகற்றி நல்லவழியில் செலுத்த வேண்டும். இதுவே அறிவுள்ள செயலாகும். ஒரு செயலைச் செய்யும் போது நமக்கு தெரிந்த வழிமுறைகளைக் கையாண்டு கடைசி வரை செய்து முடித்து வெற்றி பெறுவது ஒரு வகை. அவ்வாறு முடியாத பட்சத்தில் பிறருடைய துணையை தாராளமாக வேண்டலாம். அவ்வாறு செய்து வெற்றியடைந்தாலும் அது ஏற்றுக் கொள்ளத்தக்கதே. நீ மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால், உனக்கு முன் வாழ்ந்தவர்களை எண்ணிப்பார், அவர்கள் மதிமயங்கி கடமைகளை ஆற்ற மறந்து கெட்டழிந்து போயிருந்தால், அவற்றைச் சிந்தித்துப் பார். உன் வாழ்க்கை சரியாகிவிடும்.ஒருவனுக்கு நல்ல குணம் இருந்தாலும், பணம் இல்லாவிட்டால் தாய் உட்பட யாரும் மதிக்க மாட்டார்கள். கெட்ட குணம் இருந்தாலும், அவனிடம் பொருள் இருந்தால் அவனை பொய்யாகவேனும் புகழ்வார்கள்.ஒருவனுக்கு எதுவேண்டுமானாலும் வரலாம், வறுமை மட்டும் வரக்கூடாது. வறுமையை விட கொடியது வறுமையே. ஒருவனை வறுமை பற்றிவிட்டால் அவ்வளவு எளிதில் விடாது. அவனது பரம்பரை பெருமையையும், புகழையும் ஒரு சேர அழித்துவிடும்.உழைத்து வாழ முடியாமல், சோம்பேறியாக பிச்சை எடுத்து வாழவேண்டும் என்று ஒருவனது தலையில் கடவுளே எழுதி வைத்தான் என்றால் கூட, அந்த கடவுளும் குற்றவாளி தான். தன் தகுதிக்கு ஏற்ப வாழாமல், தன் பொருளாதார நிலை, முதலீடு ஆகியவற்றின் அளவு அறியாமல் பெருமைக்கு ஆசைப்பட்டு அகலக்கால் வைப்பவன் விரைவில் அழிவான்.

நன்றி தினமலர்..
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !

Post by Manik on Sat Mar 19, 2011 3:38 am

பணம் இல்லாவிட்டாம் அவனை பெற்ற தாய் கூட மதிக்கமாட்டாள் இது ஒரு விதத்தில் உண்மை. ஆனால் உண்மையான அன்பு கொண்ட உள்ளத்தில் பணம் என்ற பேச்சே வராது.
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !

Post by கலைவேந்தன் on Sat Mar 19, 2011 3:51 am

@Manik wrote:பணம் இல்லாவிட்டாம் அவனை பெற்ற தாய் கூட மதிக்கமாட்டாள் இது ஒரு விதத்தில் உண்மை. ஆனால் உண்மையான அன்பு கொண்ட உள்ளத்தில் பணம் என்ற பேச்சே வராது.

மாணிக்... உண்மை நிலைமை அப்படி இல்லை தம்பி.. பணமுள்ளோருக்கு கிடைக்கும் பாராட்டும் மேன்மையும் இருக்கே... அது ஏழை எத்தனை யோக்கியனா இருந்தாலும் கிடைப்பதில்லை..

இந்த கலியுகத்தில் இன்னுமா அன்பு பாசம் பந்தம் அது இதுன்னு நம்பறீங்க..?

காசு சேர்த்துக்கோங்க முதல்ல... பின்னாடி இதெல்லாம் நாய்க்குட்டி போல் ஓடிவரும்..

- அனுபவ அவஸ்தன்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 3:51 am

கரெக்ட்.... சரியான வார்த்தை மாணிக்.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !

Post by Manik on Sat Mar 19, 2011 6:42 am

கலை wrote:
@Manik wrote:பணம் இல்லாவிட்டாம் அவனை பெற்ற தாய் கூட மதிக்கமாட்டாள் இது ஒரு விதத்தில் உண்மை. ஆனால் உண்மையான அன்பு கொண்ட உள்ளத்தில் பணம் என்ற பேச்சே வராது.

மாணிக்... உண்மை நிலைமை அப்படி இல்லை தம்பி.. பணமுள்ளோருக்கு கிடைக்கும் பாராட்டும் மேன்மையும் இருக்கே... அது ஏழை எத்தனை யோக்கியனா இருந்தாலும் கிடைப்பதில்லை..

இந்த கலியுகத்தில் இன்னுமா அன்பு பாசம் பந்தம் அது இதுன்னு நம்பறீங்க..?

காசு சேர்த்துக்கோங்க முதல்ல... பின்னாடி இதெல்லாம் நாய்க்குட்டி போல் ஓடிவரும்..

- அனுபவ அவஸ்தன்

அண்ணா எங்க கிட்ட காசு நிறைய இருந்துச்சு அப்ப எங்களுக்கு தொல்லைகள்தான் அதிகமா இருந்துச்சு. பணத்திற்காக மதிப்பும் மரியாதையும் இருந்துச்சு. உண்மையான அன்பு பணம் இருந்தாலும் வரும் இல்லாட்டாலும் வரும். அண்ணா நான் 1 சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே அம்மாவோட அன்பிற்கு நிகர் வேற என்ன வேணும் அண்ணா. இந்த பணமெல்லாம் வெறும் காகிதம் தான்.
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !

Post by Manik on Sat Mar 19, 2011 6:42 am

@மஞ்சுபாஷிணி wrote:கரெக்ட்.... சரியான வார்த்தை மாணிக்.

நன்றி அக்கா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !

Post by அன்பு தளபதி on Sat Mar 19, 2011 8:29 am

இரந்து உயிர் வாழ்தல் வேண்டின் பிறந்து
கேடுக உலகியிற்றியான்

திருக்குறள் இது சரியாக தட்டச்சு செய்தேனா யென தெரியவில்லை இதன் பொருள் யாசகம் வாங்கி பிழைக்க வேண்டும் யென இருந்தால் அதனை எழுதிய படைப்பின் கடவுள் மனிதனை பிறந்து யாசகம் பெற்று அதன் கொடுமையை உணரட்டும் என்பதென நினைக்கிறேன்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !

Post by Aathira on Sat Mar 19, 2011 10:04 am

பிச்சை எடுத்து வாழச் செய்த கடவுளைத் திருவள்ளுவர் திட்டுவதைப் பாருங்கள்

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டில் பரந்து
கெடுக உலகியற்றி யான்”
பொருள்: உலகில் சிலர் கையேந்தி பிச்சையெடுத்துப் பிழைக்கும் பிழைப்பை ஒரு பிழைப்பு என்று இறைவன் படைத்திருந்தால் அவன் அவர்களைப் போல எங்கும் கையேந்தி அலைந்து கெட்டு அழியட்டும்.

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !

Post by Aathira on Sat Mar 19, 2011 10:06 am

ஆஹா வடை போச்சா.. மணி அதற்குள் பதிவிட்டு விட்டீர்களா? நான் பார்க்கவில்லை. அதையே நானும் பதிவிட்டு விட்டேன்.

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !

Post by கலைவேந்தன் on Sat Mar 19, 2011 10:11 am

@Manik wrote:

அண்ணா எங்க கிட்ட காசு நிறைய இருந்துச்சு அப்ப எங்களுக்கு தொல்லைகள்தான் அதிகமா இருந்துச்சு. பணத்திற்காக மதிப்பும் மரியாதையும் இருந்துச்சு. உண்மையான அன்பு பணம் இருந்தாலும் வரும் இல்லாட்டாலும் வரும். அண்ணா நான் 1 சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே அம்மாவோட அன்பிற்கு நிகர் வேற என்ன வேணும் அண்ணா. இந்த பணமெல்லாம் வெறும் காகிதம் தான்.

உண்மை மணி.. அம்மாவுக்கு நிகர் அம்மா தான் ... ஐயமில்லை .. சோகம்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 12:32 pm

கலை wrote:
மாணிக்... உண்மை நிலைமை அப்படி இல்லை தம்பி.. பணமுள்ளோருக்கு கிடைக்கும் பாராட்டும் மேன்மையும் இருக்கே... அது ஏழை எத்தனை யோக்கியனா இருந்தாலும் கிடைப்பதில்லை..

இந்த கலியுகத்தில் இன்னுமா அன்பு பாசம் பந்தம் அது இதுன்னு நம்பறீங்க..?

காசு சேர்த்துக்கோங்க முதல்ல... பின்னாடி இதெல்லாம் நாய்க்குட்டி போல் ஓடிவரும்..

- அனுபவ அவஸ்தன்

கலை உன் அனுபவம் வேண்டுமானால் உன்னை துரோகித்தவர் இருந்திருக்கலாம்.... ஆனால் பணம் இருப்போரிடம் மட்டும் தான் நாயை போல் மக்கள் போவாங்கன்னு நினைக்கிறீங்க பாருங்க அது தப்பு..... ஏன்னா எவ்ளவு பணம் இருந்தாலும் அன்பை விலை கொடுத்து வாங்கவே முடியாது..... தானாக கனிவது தான் அன்பு.... அதுக்கு காசு செலவழிக்க அவசியமே இல்லை கலை..... ஒரே ஒரு நாள் அன்பை மட்டுமே எல்லோரிடம் பகிர்ந்து பார்த்தால் திரும்ப கிடைக்கும் அன்பு அளவற்றதாக இருக்கும் பாருங்க.....

காசு மட்டுமே பிரதானம்னு பேசுவது எனக்கு புதியதாக இருக்கிறது, என் அனுபவத்தில் காசு என்னிக்குமே ஒரு பொருட்டே இல்லை... அன்பு உண்மையான அன்பு...... இது தான் என்னிக்கும் நிலைப்பது......

நீங்க எழுதியது கண்டு கஷ்டமாக இருக்கிறது கலை..... சோகம்

உங்க கைல நிறைய பணம் இருந்து உங்களால அன்பை விலை கொடுத்து வாங்கிட முடியும்னா நினைக்கிறீங்க?.

யாரையும் காசால விலை கொடுத்து வாங்க முடியாது கலை..... காசை இத்தனை பெரியவிஷயமா சொல்லிட்டீங்களே....சோகம்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !

Post by அசுரன் on Sat Mar 19, 2011 12:43 pm

கடவுள் யாரையும் பிச்சைகாரர்களாக படைப்பதில்லை விரும்புவதும் இல்லை. ஆக்கப்படுகிறோம் ஆகிறோம். பணமே பிரதானம் கிடையாது என்பது என் தரப்பு வாதம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 12:48 pm

உண்மை.......
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !

Post by கலைவேந்தன் on Sat Mar 19, 2011 2:31 pm

@மஞ்சுபாஷிணி wrote:
கலை wrote:
மாணிக்... உண்மை நிலைமை அப்படி இல்லை தம்பி.. பணமுள்ளோருக்கு கிடைக்கும் பாராட்டும் மேன்மையும் இருக்கே... அது ஏழை எத்தனை யோக்கியனா இருந்தாலும் கிடைப்பதில்லை..

இந்த கலியுகத்தில் இன்னுமா அன்பு பாசம் பந்தம் அது இதுன்னு நம்பறீங்க..?

காசு சேர்த்துக்கோங்க முதல்ல... பின்னாடி இதெல்லாம் நாய்க்குட்டி போல் ஓடிவரும்..

- அனுபவ அவஸ்தன்

கலை உன் அனுபவம் வேண்டுமானால் உன்னை துரோகித்தவர் இருந்திருக்கலாம்.... ஆனால் பணம் இருப்போரிடம் மட்டும் தான் நாயை போல் மக்கள் போவாங்கன்னு நினைக்கிறீங்க பாருங்க அது தப்பு..... ஏன்னா எவ்ளவு பணம் இருந்தாலும் அன்பை விலை கொடுத்து வாங்கவே முடியாது..... தானாக கனிவது தான் அன்பு.... அதுக்கு காசு செலவழிக்க அவசியமே இல்லை கலை..... ஒரே ஒரு நாள் அன்பை மட்டுமே எல்லோரிடம் பகிர்ந்து பார்த்தால் திரும்ப கிடைக்கும் அன்பு அளவற்றதாக இருக்கும் பாருங்க.....

காசு மட்டுமே பிரதானம்னு பேசுவது எனக்கு புதியதாக இருக்கிறது, என் அனுபவத்தில் காசு என்னிக்குமே ஒரு பொருட்டே இல்லை... அன்பு உண்மையான அன்பு...... இது தான் என்னிக்கும் நிலைப்பது......

நீங்க எழுதியது கண்டு கஷ்டமாக இருக்கிறது கலை..... சோகம்

உங்க கைல நிறைய பணம் இருந்து உங்களால அன்பை விலை கொடுத்து வாங்கிட முடியும்னா நினைக்கிறீங்க?.

யாரையும் காசால விலை கொடுத்து வாங்க முடியாது கலை..... காசை இத்தனை பெரியவிஷயமா சொல்லிட்டீங்களே....சோகம்

மானிக்குக்கு நான் சொன்னதன் முழு அர்த்தம் இது வல்ல மஞ்சு..

ஓரிருவரை வைத்து முடிவெடுப்பது உலகத்துக்கே பொருந்தாது..

என் அனுபவத்தில் நான் கண்டதைப் பகிர்ந்தேன்.. அன்பு எப்போது எந்த திசையில் மாறும் என்பது நான் அறியாததல்ல... காந்தமானி வடக்கினை நோக்கியே எப்போதும் இருப்பதைப்போல இவ்வுலகமே பணத்தை பிரதானமாக வைத்தே திரும்புகிறது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்..

அன்றே பட்டாக்கத்தி பைரவன் என்னும் படத்தில் கண்ணதாசன் பாடிச்சென்றுவிட்டார்...காசிருந்தால் வாங்கலாம் ... ஐயோ பாவம்.. என்று..

கற்பனையும் கனவும் கதைகளும் சோறு போடாது.

உண்மை நிலை உணர காலம் தாழ்த்தலாம்... ஆனால் இறுதிவரை உண்மை வெளிவராது என்று எண்ணுவது எத்தனை தவறோ அப்படித்தான் இதுவும்..

கருத்துக்கும் அறிவுரைக்கும் நன்றி..

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !

Post by Manik on Sat Mar 19, 2011 10:27 pm

உண்மைதான் அண்ணா உங்கள் அனுபவத்தில் சிலர் காசு இருந்தால்தான் அன்பைக் காட்டுவார்கள். நான் ஒப்புக் கொள்கிறேன் சில உயிர் உறவுகள் கூட இன்றைய காலக்கட்டத்தில் காசு இருந்தால் தான் ஒழுங்காக பேசுகிறார்கள்.

ஆனால் அதையெல்லாம் பார்க்கும் பொழுது கடும் கோவம் எழுகிறது. பணத்தை அவர்கள் முன் எரித்துக் காட்ட வேண்டும் என்று தோணுகிறது. பாருங்கள் இந்த பணம் எரிஞ்சிட்டா நாளை சம்பாதித்துக் கொள்ளலாம் ஆனால் நான் எரிஞ்சிட்டா நாளை பெற்றுக் கொள்வீர்களா என்று கேட்கத் தோணுகிறது. என்ன பன்னுவது மூத்தோர்களிடத்தே மரியாதை பேணிக் காக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum