ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

ஸ்ரீதேவி மறக்க முடியாத பாடலும் காட்சியும்
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

தமிழ் புக்
 Meeran

வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF
 Meeran

விவாக ரத்து ! (கிரேக்கப் பாடல்)
 krishnanramadurai

ஏர்செல் நிறுவனம் திவால்
 krishnanramadurai

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 Dr.S.Soundarapandian

இளமையான குடும்பம்..!
 Dr.S.Soundarapandian

செய்க அன்பினை
 மூர்த்தி

திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த உழைப்பு
 மூர்த்தி

ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
heezulia
 
மூர்த்தி
 

Admins Online

புதிய உதயம் -- அ உ கு மு க

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

புதிய உதயம் -- அ உ கு மு க

Post by dsudhanandan on Sat Mar 19, 2011 4:37 pm

பீர் குடிப்போர் முன்னேற்ற கழகம் (பீகுமுக) தொடங்கலாம் என்ற அறிவிப்பு வந்தவுடன் இது ஒரு ஒருதலை பட்சமான முடிவு எனவும், ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டும் திருப்தி படுத்துவதாகவும் உள்ளதால் அதை மாற்றி அனைவரையும் உட்படுத்த வேண்டும் என பிராண்டி, வைன், ரம், விஸ்கி குடிப்போரிடமிருந்து எதிர்ப்புகளும், கோரிக்கைகளும் மிஸ்டு கால்கள், மிஸ்டு எஸ்.ம்.எஸ் வந்ததால், அனைவரின் கருத்தையும் ஏற்று வரும் ஏப்ரல் 1 முதல் அகில உலக குடிமக்கள் முன்னேற்றக் கழகம் (அ உ கு மு க) எனும் புதிய கட்சி உதயமாவதாக அதன் தலைவர் "ஜானி வாக்கர்" சிவா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் பின்வருமாறு என அக்கட்சியின் செய்தி குறிப்பி‌ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. தலைவர்: "ஜானி வாக்கர்" சிவா
2. பொது செயலளர் : "கிங்பிஷர்" கலை
3. கொ.ப.செ. : "பகார்டி" பாலாஜி

மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள்

1. "ஹெய்வார்ட்ஸ்" பக்கிரி
2. "ராயல் சேலஞ்ச்" பிச்ச
3. "கோல்கொண்டா" அசோகன்
4. "கல்யாணி" மதன் கார்த்திக்

உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறுகிறது
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by dsudhanandan on Sat Mar 19, 2011 4:37 pm

இது குறித்து "ஜானி வாக்கர்" சிவா மாலை மயக்கம் பத்திரிகை நிருபர் பீர்பாலுக்கு அளித்த பேட்டி

கேள்வி: உங்கள் கோரிக்கை தான் என்ன? ஏன் இந்த புது இயக்கம்?

"ஜா.வா." சிவா : கடந்த ஆறு வருடங்களாக ஒரு குவார்ட்டர் வாங்கினால், ஒரு வாட்டர் பாக்கெட் இலவசமாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதை இன்றுவரை அரசு நிறைவேற்றவில்லை. நாங்கள் என்ன பீருக்கா தண்ணீர் பாக்கெட் கேட்கிறோம்? இதைக் கூடவா நிறைவேற்றக் கூடாது?

மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட குவார்ட்டர் வாங்கினால் தலா ஒரு மிக்சர் பாக்கெட்டோ, வறுத்த கடலையோ வழங்குவதோடு கண்டிப்பாக ஒரு ஊறுகாய்ப் பாக்கெட்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாளாக நிலுவையில் இருக்கிறது. இதை வலியுறுத்தி நாடெங்கும் குடிமக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் நாளை காலை எட்டு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை டாஸ்மாக் கடைகளில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவார்கள்.

கேள்வி: இந்த இரண்டு கோரிக்கைகளுக்காகவா கட்சி தொடங்கியிருக்கிறீர்கள்?

"ஜா.வா." சிவா : அது மட்டுமல்ல! அண்மையில் எங்களது சங்கத்தின் முன்னாள் செயலாளர் மெக்டொவல் மேகநாதனை அவரது மனைவி பழஞ்செருப்பால் அடித்தையறிந்து சங்கத்தின் உறுப்பினர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். தமிழக அரசு உடனடியாக பழஞ்செருப்பு, துடைப்பக்கட்டை, உலக்கை போன்ற ஆயுதங்களை மனிதாபிமானத்தின் அடிப்படையில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறோம்.

கேள்வி: இது தவிர கு.மு.க.தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து மனு அளித்திருக்கிறீர்களாமே?

"ஜா.வா." சிவா : ஆம்! எங்கள் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலே தினமும் கடமை தவறாமல் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் பல நகரங்களில் தினமும் தெருநாய்கள் துரத்துவதும் கடிப்பதும் வழக்கமாகி விட்டது. சென்ற மாதம் மட்டும் எங்களது உறுப்பினர்களில் 12345 பேரை நாய்கள் கடித்திருப்பதும், கடித்த நாய்களில் பெரும்பாலானவை அடுத்த அரைமணியில் பரிதாபமாக இறந்து போயிருப்பதையும் மக்கள் அறிவார்கள். எனவே, நாய்களிலிருந்து எங்களது கட்சி உறுப்பினர்களைக் காப்பாற்ற தினமும் ஒவ்வொரு டாஸ்மாக் கடை முன்பும் ஒரு நாய்வண்டியை நகராட்சிகள் நிறுத்தி வைக்க வேண்டும். ஒரு வேளை போதுமான அளவு நாய்கள் கிடைக்காவிட்டால் அதே வண்டியில் எங்கள் உறுப்பினர்களைக் கொண்டு போய் அவரவர் வீடுகளில் விட்டு விட வேண்டும்!

கேள்வி: இதற்காக தனிப்படை அமைக்கச் சொல்லியிருக்கிறீர்களே?

"ஜா.வா." சிவா : தனிப்படை கோரிக்கைக்கான காரணமே வேறு! பள்ளி, கோவில் அருகே டாஸ்மாக் கடைகள் வைக்கக் கூடாது என்று சட்டம் வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு டாஸ்மாக் அருகிலும் பாதாளச் சாக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். குடிபோதையில் எங்கள் உறுப்பினர்கள் அவசரத்தில் உள்ளே இறங்கிவிடுவதால் பலர் ஆந்திராவுக்கே சென்று விடுகிறார்கள். எனவே கடற்படையின் உதவியுடன் காணாமல் போகும் எங்கள் கட்சித்தொண்டர்களைக் கண்டுபிடிக்க சிறப்புப் பாதாளச் சாக்கடைப் பாதுகாப்புக்காவலர் படையை நிறுவ வேண்டும்.

கேள்வி: குடிப்பழக்கம் அதிகமாகிவிட்டதால் மனைவியை அடித்து உதைக்கிற கணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனரே.

"ஜா.வா." சிவா : இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு! 2009-10-ல் எங்கள் உறுப்பினர்கள் மனைவிக்குக் கொடுத்த அடிகளின் எண்ணிக்கை 12,34,567. ஆனால் இந்த ஆண்டில் இது கணிசமாகக் குறைந்து 12,34,565 ஆகியுள்ளது.

கேள்வி: இதற்குக் காரணம் என்ன?

"ஜா.வா." சிவா : பலவருட அனுபவம் காரணமாக, எங்கள் உறுப்பினர்கள் வீட்டுக்குப் போய் மனைவியை அடிப்பதைக் காட்டிலும் கடையிலேயே யாரையாவது அடிக்கிற பழக்கத்தைக் கடைபிடிக்கத் தொடங்கி விட்டனர். ஒரு உறுப்பினர் அடித்தால் அடுத்த உறுப்பினர் திருப்பி அடிக்கக் கூடாது என்ற சுயக்கட்டுப்பாடு இருப்பதால் மனைவியை அடிப்பதை விடவும் இது உகந்த பழக்கமாகக் கருதப்படுகிறது.

கேள்வி: இப்போது அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் குறித்து ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

"ஜா.வா." சிவா : இது மிகப்பெரிய மோசடி! 2010-11ம் ஆண்டில் மட்டும் சுமார் 123 கோடி ரூபாய்க்கு வெள்ளரிக்காய், கொய்யாக்காய், மாங்காய் ஆகியவை விற்பனையாகியுள்ளன. எங்கள் கழகத்தொண்டர்களின் பேராதரவு காரணமாகத் தான் வெளிச்சந்தையில் இவற்றின் விலை ஏறியது என்பதை நாட்டுமக்கள் நன்கறிவார்கள். மேலும் சென்ற ஆண்டில் மட்டும் 20,19,187 ஆம்லெட்டுகளும், 7,65,432 ஆப்பாயில்களும் அதிகப்படியாக விற்பனையாகியுள்ளன. இது தவிர நாடெங்கும் எண்ணூறு டன் எலுமிச்சங்காய் ஊறுகாயும், ஐநூற்றி எழுபது டன் மாங்காய் ஊறுகாயும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவை குறித்து அரசின் அறிக்கை குறிப்பிடாதது எங்களது சாதனையை இருட்டடிப்பு செய்வது போலிருக்கிறது.

கேள்வி: அண்மையில் தங்கள் கட்சியின் பொருளாளர் நிதியமைச்சரைச் சென்று சந்தித்ததன் நோக்கம் என்ன?

"ஜா.வா." சிவா : எங்கள் கட்சித் தொண்டர்கள் குடிப்பதற்காக எதையெதையோ விற்றும் அடமானம் வைத்தும் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேலும் பெரும்பாலானோருக்கு ஒரே மனைவி என்பதால் ஆத்திர அவசரத்துக்கு அடகு வைக்க ஒரு தாலி மட்டுமே கிடைக்கிறது. எனவே, இனி அரசே "வட்டியில்லா புட்டிக்கடன்", வழங்க வேண்டுமென்று கோரிக்கை மனு அளித்திருக்கிறோம்.

கேள்வி: உங்கள் கட்சியை ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று துவக்குவதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?

"ஜா.வா." சிவா : இருக்கிறது! எங்கள் இயக்கத்தின் தூணாக இருந்த மொடாக்குடியன் மொக்கசாமி அன்றுதான் டாஸ்மாக் கடையிலேயே தனது இறுதி மூச்சை விடுத்தார். இனிவரும் ஆண்டுகளில் அவரது நினைவு நாளன்று எங்கள் தொண்டர்கள் "பீர்ப்பந்தல்" அமைத்து பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பார்கள். அது மட்டுமல்ல, அன்றைய தினத்தை அரசு விடுமுறையாக அறிவிப்பதோடு அவர் பெயரில் ஒரு தபால்தலையும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

கேள்வி: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடக்கூடாது என்று கூட கோரிக்கை வைத்திருக்கிறீர்களே?

"ஜா.வா." சிவா : ஆமாம், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருப்பது போலவே காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா போன்ற நாட்களிலும் கடைகளை மூடாமல் திறந்தே வைத்திருக்க வேண்டும். எங்கள் கட்சித்தொண்டர்கள் அந்த மாபெரும் மனிதர்களுக்கு அஞ்சலி செய்ய வேண்டாமா?

கேள்வி: உங்கள் கழகத்துக்கென்று புதிய சமூக பொருளாதாரக்கொள்கை வேறு வைத்திருக்கிறீர்களே? அது பற்றி ஓரிரு வார்த்தைகள் கூற முடியுமா?

"ஜா.வா." சிவா : அவசியம் கூறுகிறேன்! எங்களது இயக்கத்தின் வளர்ச்சி காரணமாக, போக்குவரத்துக் காவலர்களின் வருவாய் இரவு நேரங்களில் அதிகரித்திருப்பதை மக்கள் நன்கு அறிவார்கள். மேலும் தமிழகத்தில் நடைபெறும் விபத்துக்களில் 25 சதவிகித விபத்துக்கள் எங்களது வளர்ச்சியால் நடைபெறுகின்றன என்பதால் ஜனத்தொகையை கட்டுப்பாட்டில் வைப்பதில் நாங்கள் ஆற்றிவரும் பெரும் தொண்டை யாரும் மறுக்க முடியாது. மேலும் எங்களது இயக்கத்தின் இமாலய வளர்ச்சி காரணமாக குடல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மனோதத்துவ நிபுணர்கள், ஜோசியர்கள் ஆகியோரின் தொழிலில் வியக்கத்தக்க அபிவிருத்தி ஏற்பட்டிருக்கிறது. எங்கள் கட்சித்தொண்டர்களின் வீட்டுப் பெண்மணிகள் தங்களது பெரும்பாலான நேரத்தைக் கோவில்களிலும் குளங்களிலுமே செலவழிக்கிறார்கள் என்பதால் எங்களால் ஆன்மீகத்துக்கும் பெரும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் மக்களிடம் துண்டுப்பிரசுரங்கள் மூலமாக விளக்க ஆவன செய்து கொண்டிருக்கிறோம்.

கேள்வி: குடிப்பழக்கம் காரணமாக சேமிப்பு கரைந்து விடுவதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கிறார்களே? அது குறித்து உங்கள் கருத்தென்ன?

"ஜா.வா." சிவா : இது குறித்து எங்கள் தொண்டர்களுக்கு விழிப்புணர்ச்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குடித்து முடித்ததும் பாட்டில்களைக் கடையிலேயே போட்டு விடாமல் வீட்டுக்குக் கொண்டு வந்து, போதுமான அளவு சேர்ந்ததும் விலைக்கு விற்றால், ஒரு கணிசமான தொகையை சேமிக்க முடியும். மேலும், அலுவலகத்துக்குக் கொண்டு செல்வது போல டாஸ்மாக் கடைகளுக்கும் வீட்டிலிருந்தே தண்ணீரைக் கொண்டு போகத்தொடங்கினால் வாட்டர் பாக்கெட் செலவும் மிச்சமாகும். இது போன்ற ஒரு பத்து அம்சத்திட்டதை நாங்கள் நாடெங்கும் பிரசாரம் செய்ய்த்தொடங்கியிருக்கிறோம்.

கேள்வி: இறுதியாக ஒரு கேள்வி! உங்கள் கட்சி நிர்வாகிகள் தமிழை வளர்ப்பதாக கூறியிருக்கிறீர்களே, இதற்கு என்ன காரணம்?

"ஜா.வா." சிவா : தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எங்களது கழகம் அயராது பாடுபட்டு வருகிறது. தமிலு, தமிளு என்றல்லாமல் நாங்கள்தான் சரியாக "ழ" உச்சரிக்கறோம்.

டாஸ்மாக் கடைகளில் புதிதாக 0123 புதிய வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வார்த்தைகளைத் தமிழ் அகராதியில் சேர்ப்பதோடு இது குறித்து ஆராய்வதற்காக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ’குடியாலஜி,’ என்று புதிய பாடத்திட்டத்தையும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே எங்களது அவா.

வரும் தேர்தலில் எந்தக் கட்சியோடு கூட்டணி அமைப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்க "ஜானி வாக்கர்" சிவா மறுத்து விட்டார். இருந்தாலும், அ உ கு மு க கட்சிக் கொள்கைகளை ஏற்று, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என்று பெயர் சொல்ல விரும்பாத சில கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பேட்டியின் போது கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் "பகார்டி" பாலாஜியும், பொது செயலாளார் "கிங்பிஷர்" கலையும் உடனிருந்தனர்.


Last edited by dsudhanandan on Sat Mar 19, 2011 5:19 pm; edited 4 times in total
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by dsudhanandan on Sat Mar 19, 2011 4:37 pm

ந மு க தலைவியின் அறிவிப்பு

ந மு க -- வின் தானை தலைவி நமீதா "ஜானி வாக்கர்" சிவாவின் இந்த அறிவிப்பை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்ததாக தொலைபேசிமூலம் பேட்டி அளித்தார்.

குடிமக்களின் நலத்தினைக் கருதி 2016-ன் தமிழக முதல்வர் "ஜானி வாக்கர்" சிவா அவர்களுக்கு ’குடிகாத்த கோமகன்’ என்ற விருதை வரும் காந்தி ஜெயந்தி அன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் மாபெரும் விழாவில் ந மு க சார்பில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் அனைத்து மச்சான்ஸ்க்கும் தெரிவித்துக் கொண்டார். இவ்விழாவில் ரம்பா, அமலா பால், டாப்ஸீ ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார்Last edited by dsudhanandan on Sat Mar 19, 2011 5:37 pm; edited 2 times in total
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by dsudhanandan on Sat Mar 19, 2011 4:38 pm

சென்னை "குயோலோ" கல்லூரி "டாஸ்மாக்" மற்றும் வெளி நாட்டு நிறுவனங்களான "ஸிமிர்னாப்", "கார்லிங்" உடன் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு

http://www.eegarai.net/t54867-topic


Last edited by dsudhanandan on Tue Mar 22, 2011 1:03 pm; edited 3 times in total
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 4:41 pm

@dsudhanandan wrote:பீர் குடிப்போர் முன்னேற்ற கழகம் (பீகுமுக) தொடங்கலாம் என்ற அறிவிப்பு வந்தவுடன் இது ஒரு ஒருதலை பட்சமான முடிவு எனவும், ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டும் திருப்தி படுத்துவதாகவும் உள்ளதால் அதை மாற்றி அனைவரையும் உட்படுத்த வேண்டும் என பிராண்டி, வைன், ரம், விஸ்கி குடிப்போரிடமிருந்து எதிர்ப்புகளும், கோரிக்கைகளும் மிஸ்டு கால்கள், மிஸ்டு எஸ்.ம்.எஸ் வந்ததால், அனைவரின் கருத்தையும் ஏற்று வரும் ஏப்ரல் 1 முதல் அகில உலக குடிமக்கள் முன்னேற்றக் கழகம் (அ உ கு மு க) எனும் புதிய கட்சி உதயமாவதாக அதன் தலைவர் "ஜானி வாக்கர்" சிவா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் பின்வருமாறு என அக்கட்சியின் செய்தி குறிப்பி‌ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. தலைவர்: "ஜானி வாக்கர்" சிவா
2. பொது செயலளர் : "கிங்பிஷர்" கலை
3. கொ.ப.செ. : "பகார்டி" பாலாஜி

மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள்

1. "ஹெய்வார்ட்ஸ்" பக்கிரி
2. "ராயல் சேலஞ்ச்" பிச்ச
3. "கோல்கொண்டா" அசோகன்
4. "கல்யாணி" மதன் கார்த்திக்

உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறுகிறது

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by dsudhanandan on Sat Mar 19, 2011 6:09 pm

நன்றி
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by அருண் on Sat Mar 19, 2011 6:22 pm

ஒத்துக்கிறோம் நீங்க ஒரு நல்ல (குடி) மகன். ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by positivekarthick on Sat Mar 19, 2011 6:49 pm

மேலும் சீட் கிடைக்குமா என்ன?
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by dsudhanandan on Sat Mar 19, 2011 6:51 pm

@positivekarthick wrote:மேலும் சீட் கிடைக்குமா என்ன?

தலைவரையோ, பொது செயலாளரையோ கேட்கவும்.....
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by Manik on Sat Mar 19, 2011 7:16 pm

ஹாஹாஹா பயங்கர காமெடி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by கலைவேந்தன் on Sat Mar 19, 2011 7:19 pm

நமது கழகத்தின் தானைத் தலைவர் சிவாவின் வரலாற்றுச்சிறப்பு மிக்க நேர்முகத்தை வெளியிட்டதற்கு நான் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன் சுதானந்தன்.. வாழ்க உமது குடி... வளர்க நமீதா...
- பொ செ கலை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by கலைவேந்தன் on Sat Mar 19, 2011 7:21 pm

@dsudhanandan wrote:
@positivekarthick wrote:மேலும் சீட் கிடைக்குமா என்ன?

தலைவரையோ, பொது செயலாளரையோ கேட்கவும்.....

அது எத்தனை பேரல் பீர் எத்தனை கார்ட்டன் விஸ்கிகள் கொண்டு வருகிறீர்கள் என்பதைப் பொறுத்து சூழலின் அடிப்படையில் பேசி முடிக்கப்படும்.. ரிலாக்ஸ்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by Manik on Sat Mar 19, 2011 8:03 pm

நல்ல அமைப்பு நல்ல தலைவர்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by கலைவேந்தன் on Sat Mar 19, 2011 8:43 pm

பொதுச்செயலாளரைப்பற்றி ஒன்றும் கூறாமையை வன்மையாகக் கண்டிக்கிறேன் மணி..! ரிலாக்ஸ்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by மஞ்சுபாஷிணி on Sun Mar 20, 2011 12:09 am

கூடாது உடுட்டுக்கட்டை அடி வ கன்னத்தில் அறை மண்டையில் அடி
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by அசுரன் on Sun Mar 20, 2011 12:24 am

தேர்தல் நேரமாதலாம் நிறைய கட்சிகள் துவங்க வாய்ப்புள்ளது. இந்த கட்சியும் அமோக வெற்றிபெறும். புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by dsudhanandan on Sun Mar 20, 2011 7:08 amஏங்க்கா????
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by சிவா on Sun Mar 20, 2011 7:35 am

///பழஞ்செருப்பு, துடைப்பக்கட்டை, உலக்கை போன்ற ஆயுதங்களை மனிதாபிமானத்தின் அடிப்படையில் தடை செய்ய வேண்டும்///

///போதுமான அளவு நாய்கள் கிடைக்காவிட்டால் அதே வண்டியில் எங்கள் உறுப்பினர்களைக் கொண்டு போய் அவரவர் வீடுகளில் விட்டு விட வேண்டும்///

///கடற்படையின் உதவியுடன் காணாமல் போகும் எங்கள் கட்சித்தொண்டர்களைக் கண்டுபிடிக்க சிறப்புப் பாதாளச் சாக்கடைப் பாதுகாப்புக்காவலர் படையை நிறுவ வேண்டும்///

///ஒரு உறுப்பினர் அடித்தால் அடுத்த உறுப்பினர் திருப்பி அடிக்கக் கூடாது என்ற சுயக்கட்டுப்பாடு ///

///பெரும்பாலானோருக்கு ஒரே மனைவி என்பதால் ஆத்திர அவசரத்துக்கு அடகு வைக்க ஒரு தாலி மட்டுமே கிடைக்கிறது. எனவே, இனி அரசே "வட்டியில்லா புட்டிக்கடன்", வழங்க வேண்டுமென்று கோரிக்கை மனு அளித்திருக்கிறோம்///

///குடித்து முடித்ததும் பாட்டில்களைக் கடையிலேயே போட்டு விடாமல் வீட்டுக்குக் கொண்டு வந்து, போதுமான அளவு சேர்ந்ததும் விலைக்கு விற்றால், ஒரு கணிசமான தொகையை சேமிக்க முடியும்///

///தமிலு, தமிளு என்றல்லாமல் நாங்கள்தான் சரியாக "ழ" உச்சரிக்கறோம்///

///’குடியாலஜி,’ என்று புதிய பாடத்திட்டத்தையும் அறிமுகம் செய்ய வேண்டும்///

காலையில் வந்ததிலிருந்து ஒரே சிரிப்புதான் எனக்கு! அனைவரும் இவனுக்கு என்ன ஆச்சு எனப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

நாடி நரம்பெல்லாம் டாஸ்மாக்கிலேயே ஊறிப்போன ஒருவரால்தான் இதுபோன்ற அருமையான படைப்பை வெளியிட முடியும். மிகவும் சிந்தனைத் திறன் உங்களுக்கு!

மிகவும் ரசித்தேன் சுதானந்தன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by dsudhanandan on Sun Mar 20, 2011 7:42 am

@சிவா wrote:///பழஞ்செருப்பு, துடைப்பக்கட்டை, உலக்கை போன்ற ஆயுதங்களை மனிதாபிமானத்தின் அடிப்படையில் தடை செய்ய வேண்டும்///

///போதுமான அளவு நாய்கள் கிடைக்காவிட்டால் அதே வண்டியில் எங்கள் உறுப்பினர்களைக் கொண்டு போய் அவரவர் வீடுகளில் விட்டு விட வேண்டும்///

///கடற்படையின் உதவியுடன் காணாமல் போகும் எங்கள் கட்சித்தொண்டர்களைக் கண்டுபிடிக்க சிறப்புப் பாதாளச் சாக்கடைப் பாதுகாப்புக்காவலர் படையை நிறுவ வேண்டும்///

///ஒரு உறுப்பினர் அடித்தால் அடுத்த உறுப்பினர் திருப்பி அடிக்கக் கூடாது என்ற சுயக்கட்டுப்பாடு ///

///பெரும்பாலானோருக்கு ஒரே மனைவி என்பதால் ஆத்திர அவசரத்துக்கு அடகு வைக்க ஒரு தாலி மட்டுமே கிடைக்கிறது. எனவே, இனி அரசே "வட்டியில்லா புட்டிக்கடன்", வழங்க வேண்டுமென்று கோரிக்கை மனு அளித்திருக்கிறோம்///

///குடித்து முடித்ததும் பாட்டில்களைக் கடையிலேயே போட்டு விடாமல் வீட்டுக்குக் கொண்டு வந்து, போதுமான அளவு சேர்ந்ததும் விலைக்கு விற்றால், ஒரு கணிசமான தொகையை சேமிக்க முடியும்///

///தமிலு, தமிளு என்றல்லாமல் நாங்கள்தான் சரியாக "ழ" உச்சரிக்கறோம்///

///’குடியாலஜி,’ என்று புதிய பாடத்திட்டத்தையும் அறிமுகம் செய்ய வேண்டும்///

காலையில் வந்ததிலிருந்து ஒரே சிரிப்புதான் எனக்கு! அனைவரும் இவனுக்கு என்ன ஆச்சு எனப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

நாடி நரம்பெல்லாம் டாஸ்மாக்கிலேயே ஊறிப்போன ஒருவரால்தான் இதுபோன்ற அருமையான படைப்பை வெளியிட முடியும். மிகவும் சிந்தனைத் திறன் உங்களுக்கு!

மிகவும் ரசித்தேன் சுதானந்தன்!

நான் ஒரு டீடோட்லர் ப்ரதர்... நாளை கருத்து கணிப்பை வெளியிடுகிறேன்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by சிவா on Sun Mar 20, 2011 7:48 am

கருத்துக் கணிப்பா?????

இன்னும் உங்கள் அட்டகாசம் தொடருமா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by கலைவேந்தன் on Sun Mar 20, 2011 7:51 am

கருத்துக்கணிப்பு வேறயா... அய்யோ, நான் இல்லை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by dsudhanandan on Sun Mar 20, 2011 9:46 pm

@சிவா wrote:கருத்துக் கணிப்பா?????

இன்னும் உங்கள் அட்டகாசம் தொடருமா?


கண்டீப்பா தொடரும்............
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by கலைவேந்தன் on Mon Mar 21, 2011 12:06 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by மாணிக்கம் நடேசன் on Mon Mar 21, 2011 5:53 am

போதை தரும் பாட்டில்களுக்கு இத்தனை பெயர்களா?
இதெல்லாம் உருப்படாவா?
எப்படியோ போங்க.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4227
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by உதயசுதா on Mon Mar 21, 2011 10:03 am

என்ன ஒரு சிந்தனை.இதெல்லாம் வீட்டுல இருக்கற உங்க மனைவிக்கு தெரியுமா சுதானந்தன்.ஏற்கனவே அவனவன் குடிச்சுட்டு
ரகளை பண்ணிட்டு இருக்கான்.நீங்க அவங்களுக்கு சப்போர்ட்டா வேற சொல்லி தர்ரிங்களா,உங்களை என்ன செய்வது?
*
*
*
*
*
*
ஒண்ணும் செய்ய முடியாது நீங்க போட்டு இருக்கற பதிவுக்கு சிரிக்கத்தான் முடியும். ரசித்தேன் சுதானந்தன்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: புதிய உதயம் -- அ உ கு மு க

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum