ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by இரா.பகவதி Today at 9:21 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

செய்க தவம்!! செய்க தவம் !!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

செய்க தவம்!! செய்க தவம் !!

Post by Aathira on Mon Apr 04, 2011 8:52 pm

First topic message reminder :


செய்க தவம் செய்க தவம் நெஞ்சே
தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம்


என்று கூறும் பாரதியார் இயற்கையான சூழலைத் தேடிச் சென்று தனிமையில் மோன நிலையில் அமர்ந்து, அவை கொடுத்த ரம்மியத்தில் சுந்தரக் கவிதைகள் வடித்தார். அதனால் கவியுலகின் மகாகவியாக மக்கள் மனங்களில் மங்காது நிலைபெற்றார்.
கவியரசர் கண்ணதாசன் தன் கவிதைகளுக்கு அடியெடுத்து கொடுத்தவைகள் கோப்பையின் மதுவும் கோல மயில்களும் என்று வாக்குறுதியே தருகிறார். இயற்கைக் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்துவோ மொட்டைமாடி தனிமையும் தட்டை நிலவும் பட்டை தீட்டாத வைரக்கற்களாய் மின்னும் நட்சத்திர கூட்டங்களும் என்று இவையே தன் கவிதைகளுக்குக் கருத்து மழை பொழிந்த கொடை வள்ளல்கள் என்கிறார். இவர்கள் கலைப்பக்கத்தின் கருணாமூர்த்திகள்.

பிரஞ்சுக் கவிஞர் ஷெல்லியும்,
தீர்க்கமாம் தியானம் சோர்விலாக் கலைத்தேர்ச்சி
வரையறு நாள்மேலும் வாழ்கின்ற நற்பேறு “

என்றுரைத்து தியானம் கலைகளை வளரச்செய்வதுடன் வாழ்நாளைக் கூட்டும் என்கிறார்.

விழித்துக் கொண்டே கனவு காணச்சொன்ன அறிவியல்
கொடையாளி கலாம் அவர்களோ தன் அக்கினிச்சிறகு பயண காலத்தில் தான் எந்த கூட்டத்தில் இயங்க வேண்டிய சூழல் அமைந்தாலும் அக்கினியை எப்படி இயக்குவது? எப்படி பழுதைச் செப்பனிடுவது?
என்று தன் மனம் தனித்தே சிந்தித்துக் கொண்டு இருக்கும் என்கிறார்.

இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சூழல் மன நிறைவைத் தந்துள்ளது. அந்த நிறைவு மன அமைதியைத் தந்துள்ளது. அந்த அமைதி அவர்களை ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வைத்துள்ளது. சிந்தனையின் தீவிரம் உள்ள உறுதியாக உருமாற்றம் பெற்றுள்ளது. அந்த உறுதியே வெற்றியை அள்ளித் தந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் வழி கூறும் நம் பாட்டன் மறையும்,

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்

என்றுரைத்து உறுதியான நெஞ்சம் எதையும் வென்றே தீரும் என்கிறது.

கலாம் கூறுவது போல தனித்து இயங்குவது என்பது என்ன? இந்த வினாவுக்கு விடை மன ஒருமைப்பாடு என்பர். எங்கு இருந்தாலும் எந்த கூட்டத்தில்ஒலியில் அல்லது ஓசையில் இருந்தாலும் தன் மனத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தலே
மன் ஒருமைப்பாடு என்பதாம். மனத்தை தன் வசம் வைத்திருக்க ஒருவன் தன் மனத்தைப் பற்றி முழுமையாக முதலில் தான் அறிந்து இருக்க வேண்டும். அப்படி அறிந்து கொள்ளாதவன் தன் மனத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது கடினம்.

நான் சீக்கிரத்துல முடிவெடுக்க மாட்டென். முடிவெடுத்துட்டேன் அப்பறம் நான் சொல்றதை நானே கேட்கமாட்டென் என்று சினிமாவில் உலவி வரும் வசனத்தில்
இருக்கும் உண்மையை எண்ணி வியக்கத்தான் வேண்டும். அப்படி மனத்தைத் தன் வசப்படுத்தத் தெரியாதவர்களுக்கு கை கொடுப்பது தியானம், தவம், யோகம் என்றெல்லாம் பல பெயர்களைத் தாங்கி இருக்கும் சும்மா இருத்தல்.

சும்மா இரு! சும்மா இரு! என்று பெரியவர்கள் அடிக்கடி சொல்வார்கள். நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறுவது போல சும்மா இருப்பது அப்படி ஒன்றும் சுலபமான செயல்
அல்ல. ஒரு நாள் சும்மா இருந்தால் தெரியும். அது எத்துனை கடினமான செயல் என்று. ஆனால் அதனைப் பயின்று விட்டால் சாதனைத் தேரேறி ஊர்வலம் வரலாம். இதனை உணர்த்தும் பழம்பாடல் இது.

கந்துக மதக்கரியை அடக்கலாம்
கரடி வெம்புலியையும் கட்டலாம்
ஒரு சிங்க முதுகின் மேற் கொள்ளலாம்
கட்செவி எடுத்தாட்டலாம்
வெந்தழ்லின் ரதம் வைத்து ஐந்து உலகத்தையும்
வேதித்து அவிற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகத்துலவலாம்
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்
சந்ததமும் இளமையோ டிருக்கலாம்
மற்றொரு சரீரத்திலும் புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல் மேலிருக்கலாம்
தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது

சும்மா இரு என்று ஆன்றோர் கூறக்காரணம் நம் மனதில் சிங்கம், புலி, கரடி, யானை,
நரி போன்ற மிருகங்கள் உலவிக்கொண்டிருக்கின்றன. ஆம். நம் மனமாகிய காட்டில் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று சிங்கங்கள் உள்ளன, மனம், புத்தி, சித்தி, அகங்கார்ரம் நான்கு நரிகள் உள்ளன. பல்வேறு ஆசைகளில் நம்மைக் கொண்டு சேர்த்து அலைபாய வைக்கும் ஐம்பொறிகளாகிய பெரும் யானைகள் உள்ளன. இவை ஆணவம் மலம் என்ற குற்றங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும். எனவே அந்த விலங்குகளை அடக்க முதலில் மன அடக்கம் தேவை என்பதனை, திருமூலர் அழகாகக் காட்டிச்சென்றுள்ளார். பாடல் இதோ,

திகைக்கின்ற சிந்துயுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுக்குள் நரிக்குட்டி நாலு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைகள் ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குள் பால் இரண்டு ஆமே

ஆழ்மனப்பதிவுகளே எண்ண ஓட்டங்கள் தொடரச் செய்கிகின்றன. இந்த எண்ண ஓட்டங்களின் பின்னே மனிதன் ஓடிக்கொண்டிருக்கிறான். மனம் கை கால்களைப் போல ஒரு உறுப்புதான். அதை எப்போது வேண்டுமோ அப்போதுதான் பயன்படுத்த வேண்டும். எப்போதும் நாம் கை கால்களை ஆட்டிக்கொண்டே இருக்க முடியாது. அது போல மனத்தையும் தேவையானபோது பயன்படுத்தி பிற நேரங்களில் சும்மா இருக்கச் செய்ய வேண்டும் என்பார் ஓஷோ.

ஓஷோவின் தியான முறை முற்றிலும் புதுமையானது என்பர். இதை active meditation
எனக் கூறுவார். முதல் நிலையாக எந்த மன உணர்வுகளையும் அடக்கி வைக்காமல் செயற்கையாக வெளிப்படுத்தி விடுவது. இரண்டாம் நிலை உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய பின் ஆசைகளை அனுபவித்து அடங்கிய ஆள்மனதை அமைதியாகக் கவனிப்பது. இதில் அடக்கப்பட்ட மன உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிட்டுகிறது. குறுகிய காலத்தில் உடல், மன அமைதி தானாவே உருவாது மட்டுமல்லாமல் தியான நிலையைக் குறுகிய காலத்தில் அனுபவிப்பதற்கும் வழிகாட்டுகின்றது என்று மேலை நாட்டு ஆய்வுலகம் கூறுகிறது. செயற்கை என்பதை மட்டும் எடுத்து விட்டுப் பார்த்தால் இதைத்தானே அன்றே கூறியுள்ளார் நம் திருமூலர்.

அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கில் அமரரும் அங்கு இல்லை
அஞ்சும் அடக்கில் அசேதனமால் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே

மீறி அடக்கம் அடக்கம் என்று ஐம்புலன் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அடக்க முற்பட்டால் கட்டுப்பாடுகளை மீறி அணையை உடைத்துக் கொண்டு சீறிப்பாயும் வெள்ளமாய் மனம் தறிகெட்டு ஓடும் நிலை வந்துவிடும். இதனை திருமூலர்,

முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே

என்று கூறுகிறார். அதாவது தன் ஐந்து புலன்களும் ஆரவாரத்துடன் அனுபவிக்கத் துடித்தன. அந்தப் பெருமத யானைகளை அறிவு என்னும் அங்குசத்தால் அடக்கினேன். அவை நன்கு விளைந்துஇருந்த கரும்புத் தோட்டத்தை அழித்துச் சென்ற மத யானைகளைப் போல நன்கு ஏற்கனவே என்னிடம் செழித்திருந்த என் தெளிவான அறிவையும் சிதைத்துச் சென்று விட்டன என்று பொருள்.

அதே நேரம் ஜென் த்ததுவத்தையும் நாம் காண வேண்டியுள்ளது. ஜென் குருவிடம் ஒருவன் வந்து, ‘எப்படி தியானத்தில் ஈடுபடுவது?’ என்று கேட்டான்.என்னைப் பார்த்துக் கொண்டிரு. தியானம் உனக்குக் கைவரும் என்றார் ஜென். அவனும் குருவின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். காலையில் குரு எழுந்தார். குளித்தார். பகல் முழுவதும் தோட்ட வேலையில் ஈடுபட்டார். உணவு வேளையில் உண்டார். ஆனால் வழிபாடு, பிரார்த்தனை, தனியாக அமர்தல், தியானித்தல் என்று எதையும் அவர் செய்யவில்லை.

இதில் மனம் சலித்த சீடன், ‘எப்போது நான் தியானம் கற்றுக்கொள்வது?’ என்றான். நான் குழி வெட்டியதும் தியானம்தான். தோட்டம் போட்டதும் தியானம்தான். உணவு உண்டதும் தியானம்தான். எனது வாழ்வே தியானம்தான். எனது வாழ்வில், தியானம் என்ற ஒன்று தனியாக இல்லைஎன்று சிரித்தபடி சொன்னார் ஜென் குரு.

இந்த திருமூலர் உள்ளிட்ட இரு குருமார்களின் வாக்கிலிருந்து ஒன்று புரிய வருகிறது. நம் மனதின் முதலாளி நாமாக இருக்க வேண்டும். மனம் ஒரு பணியாள்தான். வேலைக்காரனைக் கண்காணிக்கும்போது வேலைக்காரன் தன் வேலைகளைச் செவ்வனே
செய்து முடிப்பான். அதுதான் தியானம் இதனையே செய்யும் தொழிலே தெய்வம் என்று கூறியுள்ளனர் நம் முன்னோர்.

நம் சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனதைக்கட்டி மகா புரட்சியெல்லாம் செய்தனர். அதனால்தான்,

“நிலத்தில் குளித்து நீள்விசும்பேறிச்
சலத்தில் திரியும் ஓர் சாரணன்

என்று சித்தர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். ஆனால் அவையெல்லாம் துறவிகளுக்கு மட்டும் தொடர்புடையது, ஆன்மிகத்தேடலுக்கு மட்டுமே உரியது, சமாதி நிலையை அடைய உதவுவது முதலிய சாயங்கள் பூசப்பட்டு ஆன்மிகவாதிகள் கையில் சிக்கிக்கொண்டு பொது மக்கள் வரை எட்டாமல் போனது நம் போதாத காலமே.
மேலை நாடுகளோ மனித மன ஆற்றலை மேம்படுத்தும் சும்மா இருக்கும் செயலான தியானம் என்பதை முழுக்க முழுக்க பொருளீட்டும் வணிகமாக்கி பொது மக்களிடம் கொண்டு சென்றுள்ளது.

ஆனால் இதில் என்ன விந்தை என்றால் கீழை நாட்டு மக்களான நம்மவர்களின் எந்த கண்டுபிடிப்பும் எந்த தத்துவமும் எந்த அறிவுரையும் வணிக நோக்குள்ள மேலை நாட்டவர்கள் கூறினால் மட்டுமே அதனை நம்பும் துர்ப்பாக்கிய நிலை நம்மவர்களிடம்
அதிகரித்துக்கொண்டே போகிறது என்பது வருந்த வைக்கிறது. அதே சமயம் நாம் கண்களை மூடிக்கொண்டு சொன்ன விஷயங்களை எல்லாம் மேலை நாட்டினர் ஆய்வுக்கு உட்படுத்திச் சொல்லும் போது இரு தரப்பினரையும் பார்த்து நாம் மூக்கின்மேல் விரல் வைக்கத்தான் வேண்டியுள்ளது.

எண்ணங்களின் தொடர் ஓட்டத்தைத் தடைபடுத்தி சும்மா இருக்கும்போது மனம் உறக்கத்தின் போது உண்டாகும் ஆல்பாநிலையை அடைகிறது. அதனால் மனிதர்கள் மிகுந்த மன அமைதி அடைந்தவர்களாகக் காணப்படுகிறார்கள் என்று ஹார்டுவேர்டு மருத்துவப் பல்கலைக் கழகப் பேராசிரியர் பென்ஷன் கூறுகிறார். இதனையே,

செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்
செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே

என்று நம் திருமூலர் அன்றே கூறினார்.

மனதின் நிலையை நித்திரை நிலை, கனவு நிலை, விழித்திருக்கும் நிலை என்று மூன்று நிலைகளாகப் பிரிக்கின்றது மேலைநாட்டு ஆய்வுலகம். ஆனால் நம் சித்தர்களின் தத்துவம் அல்லது ஆன்மிக அருளாளர்களின் மெய்ஞானம் விழிப்பு நிலை, துயில்
நிலை, கனவு நிலை, பொதி எருது நிலை என்ற நான்காகப் பிரிக்கிறது. இந்த நான்காவது பொதி எருது நிலையை துரியம் என்றும் துரியமாகிய நான்காம் நிலைக்கும் மேம்பட்ட துரியாதீதம் என்ற ஐந்தாம் நிலையும் உள்ளதாகக் கூறுவார். இதனைச் சுட்டும் வள்ளலார் பாடல் பின்வருவது.

துரியத்திற் கப்பாலுந் தோன்றும் பொது

தியான முறை:
ஒரு பொருளை அல்லது ஒளியை தொடர்ந்து கவனித்துக்கொண்டிருப்பது ஒரு முறை.
ஒரு சொல்லை தொடர்ந்து மீண்டும் மீண்டும் கூறும் தியான முறை (Transcendental
Meditations (TM). இந்த சொல்லை மந்தரம் எனவும் இந்த தியான முறையை மந்திர உச்சாடன தியானம் என்றும் கூறுவர்.

உரம்தரு மந்திரம்ஓம் என்று எழுத்தே

என்று திருமூலர் கூறுவது சான்று.

மற்றொன்று தமது மூச்சைக் மூக்கின் நுனியில் வைத்து தமது வயிற்றுப்பகுதி எழுந்து இறங்குவதைக் கவனிப்பர். இதனை விப்பாசனா (vipassana) என்பர்.

முன்னர் கூறப்பட்ட செய்யும் தொழிலே தெய்வம் என்ற சென் (Zen) தத்துவமும் நல்ல தியான முறையாக ஜப்பான் போன்ற பல முன்னேறிய மேலை நாட்டினரால் கைகொள்ளப்பட்டு வருகிறது. ஜிட்டு கிர்ஸ்ணமூர்த்தியின் தியானம் தொடர்பான கருத்துக்களும் ஆழமனத் தியானப் பயிற்சி செய்பவர்களிடையில் பிரபலமானவை.

மேற்குறிப்பிட்ட பல்வேறு வகையான கிழக்குலகின் தியான முறைகளை (உதராணமாக யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி) ஒன்றினைத்து நிறைவான மனம் (Mindfuless Based Stress Reduction-MBSR) என்ற தியான முறை பேராசிரியர் காபாட் சின் (Kabat- Zinn) என்பவரால் உருவாக்கப்பட்டு மேற்கில் அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு வகையான உள்ள, உடல் நோய்களைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

தியானம் செய்பவர்கள் எண்ணற்றோரை ஆய்வுக்கு உட்படுத்திய மேல்நாட்டு ஆய்வாளர்கள் ஆய்வுகளின் அடிப்படையில் தியானம் செய்பவர்களது மூளையில் குறைவான எண்ணங்களே இருக்கின்றன. மற்றவர்களைப் போல எண்ணங்களின் அலைமோதல் அதிக அளவில் இல்லை. அதுவும் தியானம் செய்யும் நிலையில் நினைவுகள் எண்ணங்கள் சிந்தனைகள் ஆகியவற்றைப் பற்றி அறியக்கூடிய மூளையின் முன்பகுதியில் மிகக் குறைந்த அளவிளான செய்ற்பாடுகளே இவர்களிடம் காணலாகின்றன என்கின்றனர். அதனால் இவர்கள் மகிழ்ச்சியானவர்களாக இருக்கின்றனர் என்றும் கூறுகின்றனர். எது எப்படியோ நமக்குத் தேவை ஆரோக்கியமான மனநிலை உள்ள மக்கள் சக்தியே.
[/siz





ஆதிரா..

நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்.


Last edited by Aathira on Mon Apr 04, 2011 9:05 pm; edited 1 time in total

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down


Re: செய்க தவம்!! செய்க தவம் !!

Post by ANTHAPPAARVAI on Mon Apr 04, 2011 10:41 pm


ஒ! அப்படிஎன்றால் சுருக்க வேண்டாம்.
நான் இப்போதுதான் பதிவுகளை படிக்க தொடங்கி இருக்கிறேன். அதனால் எனக்கு இது தெரியவில்லை.
மன்னிக்கவும் அக்கா....



ANTHAPPAARVAI
தளபதி
தளபதி

பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: செய்க தவம்!! செய்க தவம் !!

Post by மஞ்சுபாஷிணி on Mon Apr 04, 2011 10:47 pm

கலை wrote:
மிக நல்ல பதிவு எத்தனை பக்கங்கள் என்றாலும் பொறுமையுடன் வாசிக்கும் வாசகர்கள் உண்டு குயிலன்..ஆதிராவின் கட்டுரைகளுக்கு என்று ஒரு கூட்டமே என் தலைமையில் உண்டு.. எத்தனை பக்கஙக்ள் அவர் எழுதினாலும் சலிக்காமல் வாசிக்கும் பாசமுள்ள கூட்ட்ம் இது...

எனவே சுருக்கச்சொலாதீர்கள்.. பலமுறை நிர்வாகப்பணிகளின் காரண்மாக நான் தற்காலிகம் விட்டுவிட்டு பிறகு நேரம் கிடைக்கும் போது பொறுமையாய் வாசிப்பதுண்டு.. அவசர யுகத்திற்கென்று நீஙக்ள் சொல்லுவது சரியான கருத்தென்றாலும் இதனால் தரம் குறைந்துவிடுமோ அல்லது உலகியலுக்கு ஏற்ப ஆதிராவும் வளைந்துவிடுவாரோ என்னும் அச்சத்தில் இதனைப் பகிர்கிறேன்...

நீங்கள் உங்கள் இயல்புப்படியே தொடருஙக்ள் ஆதிரா... ப்ளீஸ்..!

பி கு : இக்கட்டுரை நான் பிறகு வாசித்து கருத்தளிப்பேன். இப்போது சில நிர்வாகப்பணிகள் இருப்பில் இருக்கின்றன..


சூப்பருங்க அருமையிருக்கு

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: செய்க தவம்!! செய்க தவம் !!

Post by மஞ்சுபாஷிணி on Mon Apr 04, 2011 11:00 pm

SN.KUYILAN wrote:
ஒ! அப்படிஎன்றால் சுருக்க வேண்டாம்.
நான் இப்போதுதான் பதிவுகளை படிக்க தொடங்கி இருக்கிறேன். அதனால் எனக்கு இது தெரியவில்லை.
மன்னிக்கவும் அக்கா....




ஆறுதல்

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: செய்க தவம்!! செய்க தவம் !!

Post by Aathira on Sat Apr 16, 2011 3:51 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:15 வருடத்திற்க்கு முன்னால் மனோசக்தி என்ற புத்தகம் படித்ததுண்டு.அதன் பயன் இன்னும் தொடர்கிறது.வாழ்வில்..அதன் கருத்துகளை தொடர்புடைய கட்டுரை தந்தமைக்கு நன்றிகள்..AKKA.


நீ்ண்ட பதிவைப் படித்து பின்னூட்டமும் இட்டமைக்கு மிக்க நன்றி சூர்யா.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: செய்க தவம்!! செய்க தவம் !!

Post by Aathira on Sat Apr 16, 2011 4:17 pm

கலை wrote:
SN.KUYILAN wrote:
மஞ்சுபாஷிணி wrote:மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரியது குயிலன்.... பானுவின் வரிகளின் ரசிகை நான்..... சின்னதானாலும் பெரியதானாலும் முழுக்க படித்துவிடுவேன்.....


நானும் படிக்கிறேன் அக்கா,
ஆனா படிச்சிட்டு பார்த்தா அதுக்குள்ளே நிறையா பின்னூட்டம் வந்திருக்கு....!

ஆதிரா அக்கா,
உங்க எல்லா பதிவுகளையும் நான் படிச்சிகிட்டு தான் இருக்கேன்.
அருமை, ஆனால் சிலர் இதை பார்த்தவுடன் மூடிவிட நிறைய வாய்ப்பிருக்கிறது. எனவே . இதையே பகுதியாக பிரித்து அடுத்தடுத்து பதிந்தால் அந்த நிலை இருக்காது.
நல்ல விசயங்களை எல்லோரும் படிக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.

தொடருங்கள்...


மிக நல்ல பதிவு எத்தனை பக்கங்கள் என்றாலும் பொறுமையுடன் வாசிக்கும் வாசகர்கள் உண்டு குயிலன்..ஆதிராவின் கட்டுரைகளுக்கு என்று ஒரு கூட்டமே என் தலைமையில் உண்டு.. எத்தனை பக்கஙக்ள் அவர் எழுதினாலும் சலிக்காமல் வாசிக்கும் பாசமுள்ள கூட்ட்ம் இது...

எனவே சுருக்கச்சொலாதீர்கள்.. பலமுறை நிர்வாகப்பணிகளின் காரண்மாக நான் தற்காலிகம் விட்டுவிட்டு பிறகு நேரம் கிடைக்கும் போது பொறுமையாய் வாசிப்பதுண்டு.. அவசர யுகத்திற்கென்று நீஙக்ள் சொல்லுவது சரியான கருத்தென்றாலும் இதனால் தரம் குறைந்துவிடுமோ அல்லது உலகியலுக்கு ஏற்ப ஆதிராவும் வளைந்துவிடுவாரோ என்னும் அச்சத்தில் இதனைப் பகிர்கிறேன்...

நீங்கள் உங்கள் இயல்புப்படியே தொடருஙக்ள் ஆதிரா... ப்ளீஸ்..!

பி கு : இக்கட்டுரை நான் பிறகு வாசித்து கருத்தளிப்பேன். இப்போது சில நிர்வாகப்பணிகள் இருப்பில் இருக்கின்றன..


தங்களின் நம்பிக்கைக்கு பாசமிகு இந்தப் பதிவுக்கு எப்படி நன்றி சொல்ல கலை?

கண்டிப்பாக நான் உலகியலுக்கு ஏற்ப மாறமாட்டேன். குயிலன் கூறுவது இரண்டு பாகங்களாகப் பிரித்து ப்திவுவிடுமாறுதான். அதைத்தான் நானும் ஏற்றுக்கொண்டேன்.

தங்களின் இந்தப் பதிவை என் கட்டுரைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்துவதாக நான் எடுத்துக்கொள்கிறேன் கலை.
தொடரும் அன்புக்கு நன்றி கலை.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum