ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by கே. பாலா Today at 9:28 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by இரா.பகவதி Today at 9:21 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

புரோக்கோளி சாப்பிட வாங்க!!!!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

புரோக்கோளி சாப்பிட வாங்க!!!!

Post by Aathira on Mon Apr 04, 2011 9:35 pm

First topic message reminder :

புரோக்கோளி சாப்பிடலாம் வாங்க!!!!








நாட்டுக்கோழி, முட்டைக்கோழி, கரிக்கோழி, வெடக்கோழி, உஜாவால் கோழி, ஸ்வேதா கோழி, பியர்ல் கோழி, கினி கோழி(திரைப்படப் பாடலாசிரியர் . விஜயின் ஃபேவரேட்) கிரி=நிர்பீக், ஹிட்கரி, வனராஜா, கிரிஷிப்ரோ, அங்களேஷ்வர், அசீல், பர்சா, டங்கி, சிட்டாகாங், தவோதிகிர், காகஸ், ஹர்ரிங்காடா, கருப்பு கதக்நாத், காலஸ்தி, காஷ்மீர் பவிரோலா, மிரி நிக்கோபாரி, பஞ்சாப் பிரெளன், தெள்ளிச்சேரி, வான்கோழி, புரோக்கோளி.....

என்னங்க இது ஒரே கோழியா இருக்குன்னு கேக்கிறீர்களா? இதில் ஒன்று மட்டும் வித்தியாசமானது. சுத்தமான சைவ உணவு. கண்டுபிடிங்க பார்க்கலாம். ம்ம்ம்ம்ம்ம்ம் மிகச்சரியான பதில். சரியா கண்டு பிடிச்சிட்டீங்களே. அதுமட்டும் தான் கோழி இனம் அல்ல. காய்கறி இனம். ஆமாம் புரோக்கோளி (Broccoli) என்பது முட்டைக்கோஸ் குடும்பத்தில் அவதரித்த அடுத்த வாரிசு. அந்தக் குடும்பத்து காலிஃபிளவரும் இதுவும் கலர் மட்டும் கொஞ்சம் மாறுபட்ட டிவின்ஸ்ன்னு சொல்லலாம். இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கொஞ்சம்தான் வேறுபாடு இருக்கும். ப்ரோக்கோளி பூ காலிஃப்ளவர் பூ போலவே இருக்கும். ப்ரோக்கோளியி அடர்பச்சை, பிரெளன் இரண்டு நிறத்திலும்
இருக்கும்.

இதன் பிறப்பிடம் இத்தாலி என்பதால் இதனை இட்டாலிகா இனம் என்றும் கூறுவர். ப்ரோக்கோளி என்ற பெயரும் Broccolo என்ற இத்தாலிச் சொல்லில் இருந்து பிறந்ததே. இலத்தின் மொழியில் கிளை அல்லது கை என்ற பொருள் தரும் ப்ரோச்சியம்
(brachium) என்ற சொல் மருவி ப்ரோக்கோளியாக உருமாறியது என்று இதற்குப் பெயர் வைத்த கதையைச் சொல்லுவார்கள் அந்தக் குழந்தைக்குச் சொந்த நாட்டுக்காரர்கள்..

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இத்தாலியில் பயிரான ஒரு தாவரம் இது.
1920 வரை அதிகம் மக்களால் பயன்படுத்தப் படாத இத்தாவரம் வழக்கம் போல இங்கிலாந்துக்குப் போய் அங்கிருந்து மீள் அறிமுகம் செய்யப்பட்டது. ஜெ.டி.ஸ்மித் என்பவரே இதனை எடுத்துச் சென்று உலகத்திற்குக் காட்டினார். இது குளிர்காலப்பயிர். குளிர்ச்சியான தட்பவெப்பநிலையில் பயிரடப்படும் இந்த புரோக்கோளியில் எண்ணற்ற சத்துப்பொருகள் நிறைந்துள்ளன. 100 கிராம் புரோக்கோளியில் உள்ள சத்துப் பொருட்களைப் பாருங்க,

கார்போஹைடிரேட்ஸ் 6.64 கிராம்,
சர்க்கரை 1.7 கிராம்,
நார்ச்சத்து 2.6 கிராம்,
நீர்ச்சத்து
89.30 கிராம்,
கொழுப்புச்சத்து
0.37 கிராம்,
புரதம் 2.82 கிராம,
சுண்ணாம்புச்சத்து 5%,
வைட்டமின் ஏ 3%,
வைட்டமின் சி 149%,
வைட்டமின் ஈ 5%,
இரும்புச்சத்து 6%,
மக்னீசியம் 6%,
பாஸ்பரஸ் 6%,
பொட்டாசியம் 7%,
சிங்க் 4%.
பீடா கரட்டின் 3%,
தயாமின் 5%,
ரிபோஃப்ளோவின் 8%
நியாசின் 4%
பேண்டொதேனிக் 11%
அடங்கியுள்ளன. இத்தனைச் சத்துக்களை விட்டு வைக்கலாமா சாப்பிடாமல்? அது என்னென்ன வேலைகளை நம்ம உடலில் செய்கிறது என்று பாருங்கள்.

புற்றுநோய் என்ற கொடுங்கோல் எமதர்மன் இன்ஃப்லமேஷன், ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ், டெடாக்ஸ் என்ற மனித உடலில் நல்லாட்சி புரியும் மூவேந்தர்களை அடிமையாக்குவதன் மூலமாகத் தன் கடுகிய ஆட்சியைப் புரியத் தொடங்குவான். இவர்களைத் தன் படைபலத்தால் காத்தும், புற்று நோய்க் கிராதகனை இவர்களிடம் அண்ட விடாமலும் உடல்நாட்டைக் காக்கும் அருமையான பணியைச் செய்கிறது இந்த புரோக்கோளி. ஒவ்வொரு முறையும் இரண்டு முதல் மூன்று கப் ப்ரோக்கோளி வீதம் வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்து வந்தால் உடலின் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதன் மூலம் புற்றுநோயைக் கிருமிகளை வ(ள)ரவிடாமல் தடுக்கலாம் என்கிறது தற்போதைய ஆய்வு முடிவுகள்.

ஆம், இதுவரை பல கோணங்களில் நடைபெற்ற ஏறத்தாள முந்நூறு ஆய்வுக்ளின் முடிவாக, ப்ரோக்கோளி புற்றுநோயை வராமல் தடுக்கும் மாபெரும் பணியை செய்கிறது என்கின்றனர் ஜெட் பாகே உள்ளிட்ட ஜான் காப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளகள் பலர்.

புற்று நோய்க்குச் சமமாக இன்றையச் சூழலில் மக்களை அதிகமாக அச்சுறுத்தி வரும் நோய் மாரடைப்பு. ப்ரோக்கோளியில் உள்ள பிகாம்ப்ளக்ஸும் வைட்டமின் எ,சி,ஈ, ஆகிய உயிர்ச்சத்துக்களும் இதய நோயிலிருந்தும் இதயத்தைக் காக்கிறதாம். உடனடி மாரடைப்பு வராமலும் தடுக்கிறதாம்.

தைராய்டு எனப்படும் முன்கழுத்துக் கழலைக்கு ப்ரோக்கோளி மிகச்சிறந்த மருந்தாகும் இதனைப் பச்சையாக தின்று வந்தால் தைராய்டு சுரப்பியின் செயற்பாடு கட்டுக்குள் இருக்குமாம்.

விழி பாதுகாப்புக்குத் தேவையாக வைட்டமின்கள் அனைத்தும் இதில் உள்ளதால் விழியைப் பாதுகாப்பதிலும் சிறந்த சேவையை ஆற்றுகிறதாம். முக்கியமாக காட்ராக்ட் வராமல் தடுக்கிறதாம்.

சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் அலஜியையும் தடுக்கிறதாம். உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும் சரும நோய்க்கிருமிகளைக் குறைப்பதால் தோல்வியாதி உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்துப் பொருளாகிறது என்கிறது தற்போதைய ஆராய்ச்சி.

இரும்புச் சத்து அதிகம் உள்ள இந்த புரோகோலிக்கு அல்சர் நோய் வராமல் தடுக்கும் வல்லமையும் உண்டு.

பத்து கலோரி ப்ரோக்கோளியில் சுமார் 1கிராம் நார்ச்சத்து இருப்பதால் இது ஜீரணசக்தியை அதிகரிக்கும் நற்பணியைச் செய்யும் நல்ல தாவரமாகும். அதுமட்டுமல்ல ப்ரோக்கோளியைப் பச்சையாகப்ப் பயன்படுத்துவதால் வயிற்றில் தேவையற்று வளரும்
சில தசைகளின் வளர்ச்சியைக் குறைக்கிறதாம்.

சிங்கும் வைட்டமின் ஈயும் நோய் எதிர்ப்பாற்றலைத் தருவதால் பல நோய்களில் இருந்து காப்பாற்ற இந்த இரு சத்தும் நிறைந்த ப்ரோக்கோளி பயன் படுகிறது.

ப்ரோக்கோளியைச் சமைக்கும் முறை. ஒன்றும் பெரிதாக இல்லை. காளிஃபிளவரை சமைக்கும் முறை அனைத்தும் ப்ரோக்கோளிக்கும் பொருந்தும். காளிஃப்ளவரைப் போலவே பூவிலிருந்து ஒவ்வொரு இதழாகப் பிரித்து கொள்ளவேண்டும். பெரிய இதழ்களாக (கொண்டைகளாக) இருந்தால் அவற்றைச் சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளலாம். அதனை உப்பு போட்டுக் காய்ச்சிய வெந்நீரில் போட்டு கழுவிச் சுத்தம் செய்த பின்பு சமைக்க வேண்டும். காளிஃப்ளவரில் காணப்படுவது போல சிறு புழுக்கள் இதிலும் இருக்க வாய்ப்புள்ளதால். நீரில் வேகவைப்பதை விட ஆவியில்
வேகவைப்பது சரியான சமையல் முறை.

சரி.. இத்தனை பயன்பாடுகள் உள்ள இந்தக் கோளி இங்கு கிடைக்குமா என்றால்..... கண்டிப்பாக கிடைக்கிறது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட இந்தக்கோளி விமானத்தில் பயணித்து சென்னை நீல்கிரிஸ், ரிலையன்ஸ் போன்ற கடை வரைக்கும் வந்து விட்டது. பிற இடங்களில் தெரியவில்லை. சென்னை வாசிகளெல்லாம் எப்பொழுதோ சாப்பிடவும்
ஆரம்பித்து விட்டார்கள்.



ஒரு முக்கியமான செய்திங்க.. இதை மறந்திடாதீங்க.. இதனை குளிர்ச்சாதனப் பெட்டியில் வைத்து பத்து நாட்கள் வரை பயன்படுத்தலாம். ஆனால் வைக்கும் போது நீரில் கழுவிவிட்டு வைக்கக் கூடாது. ஏனெனில் நீர் இதனைக் கெட்டுப்போக வைக்கும். அதே போல பிரித்து வைத்த ப்ரோக்கோளியை இரண்டு நாட்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பதும் நல்லது.

கறிக்கோழி, முட்டைக்கோழி, வெடக்கோழி கினிக்கோழியெல்லாம் சாப்பிடும் போது இந்தப் ப்ரோக்கோளி மட்டும் என்ன பாவம் பண்ணிச்சு.. எத்தனையோ சாப்பிட்டுட்டோம்....இதையும் சாப்பிட்டு வைக்கலாமே.... நாங்க தொடங்கிட்டோம்...... நீங்க??....






ஆதிரா..

நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்


Last edited by Aathira on Mon Apr 04, 2011 10:16 pm; edited 2 times in total

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down


Re: புரோக்கோளி சாப்பிட வாங்க!!!!

Post by Aathira on Fri May 06, 2011 11:00 pm

மலிக்கா wrote:காளி ஃப்ளவர் மற்றும் புரோக்கோளி எனக்கு மிகவும் பிடித்தது. புரோக்கோளியை அரைவேக்காடாக மிளகு உப்புசேர்த்து சாப்பிட ரொம்ப பிடிக்கும்.

வாழ்த்துக்கள் ஆதிராக்கா. குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் வந்தமைக்கு..

மிக்க நன்றி மலிக்கா நன்றி அன்பு மலர்

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: புரோக்கோளி சாப்பிட வாங்க!!!!

Post by Aathira on Fri May 06, 2011 11:00 pm

புதிய நிலா wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி புதிய நிலா நன்றி அன்பு மலர்

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: புரோக்கோளி சாப்பிட வாங்க!!!!

Post by Aathira on Fri May 06, 2011 11:00 pm

புதிய நிலா wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி புதிய நிலா நன்றி அன்பு மலர்

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: புரோக்கோளி சாப்பிட வாங்க!!!!

Post by கலைவேந்தன் on Fri May 06, 2011 11:06 pm

வந்தாச்சா ஒரு வழியா எல்லா வேலையும் முடிஞ்சு..? பணிகள் எல்லாம் சிறப்பாக முடிந்ததா..?

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum