ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
Ideas on changing Government rules and regulations for easing lives of citizens
 T.N.Balasubramanian

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ஊர காணோம்
 ayyasamy ram

என் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை – கீர்த்தி சுரேஷ்
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 T.N.Balasubramanian

ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
 ayyasamy ram

பென்குவின் பறவைகள்
 ayyasamy ram

இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
 ayyasamy ram

காதல் என்பது…..
 ayyasamy ram

மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
 ayyasamy ram

உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
 ayyasamy ram

மாற்றம் என்பது...
 ayyasamy ram

ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
 ayyasamy ram

ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
 ayyasamy ram

பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
 ayyasamy ram

'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
 ayyasamy ram

எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
 ayyasamy ram

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 03
 shruthi

Youtube. வீடியோ டவுண்லோட் செய்ய சிறந்த ஆப்
 Meeran

இந்த வார இதழ்கள் சில
 Meeran

மே 25 நடப்பு நிகழ்வுகள்
 Meeran

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 02 - தவறவிடாதீர்கள்
 தமிழ்நேசன்1981

கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்
 vighneshbalaji

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 vighneshbalaji

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 sudhagaran

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 T.N.Balasubramanian

2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
 ayyasamy ram

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
 ayyasamy ram

தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
 ayyasamy ram

மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
 ayyasamy ram

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குதிரை பேர வரலாறு
 ayyasamy ram

புறாக்களின் பாலின சமத்துவம்
 ayyasamy ram

போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
 ayyasamy ram

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 பழ.முத்துராமலிங்கம்

மாறுவேடப் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
 ayyasamy ram

தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ….(பொது அறிவு தகவல்)
 ayyasamy ram

ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
 ayyasamy ram

விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
 ayyasamy ram

சினிமா -முதல் பார்வை: செம
 ayyasamy ram

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 கோபால்ஜி

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தேவிப் பட்டினம் - கண்ணகி ஆண்ட மதுரை’யின் எச்சம்

View previous topic View next topic Go down

தேவிப் பட்டினம் - கண்ணகி ஆண்ட மதுரை’யின் எச்சம்

Post by சிவா on Sat Sep 05, 2009 1:30 am

என்னய்யா புரியாத புதிராக இருக்கிறது இது, கண்ணகி எங்கே மதுரையை ஆண்டாள் ? கண்ணகி எரித்த மதுரை என்று வேண்டுமானால் சொல்லுங்கள் என்று கேட்கலாம் நீங்கள். ஆனால் மேலே சொன்ன வார்த்தைகளில் கருததுப் பிழை ஏதும் இல்லை, நம்புங்கள். கண்ணகி என்பது கண் அழகி என்பதன் மரூஉ.

கண்ணகி என்றால் அழகிய கண்களை உடையவள். கண்ணகி என்பது எம் அங்கயற்கண்ணி மீனாட்டியின் இன்னெரு பேர்.

கண்ணகி அரசாண்ட மதுரை இப்போது உள்ள மதுரை அல்ல. அந்தப் பழைய மதுரை கடலுக்குள போய்விட்டது. அவள் கோவிலையும் கடல் விழுங்கி விட்டது.அவள் தெற்கே குமரிக்கண்ட இராச்சியத்தில் இருந்து கயிலை வரை திக்குவிசயம் செய்த தேவி ஆயிற்றே! தேவி அரசாண்ட இடம் எல்லாம் கடல் கொள்ள மிச்சம் இந்தப் பகுதி. எனவே தேவி அரசாண்டதால் இது தேவிப் பட்டினம்.

அல்லாமல் மற்றைய வரலாற்று ஆசிரியர்கள் சொல்வது போல, இது சோழன் தேவி உலக முழுதுடையாள் ( புவனமா தேவி) ஆண்டது, ஆகவேதான் தேவிப் பட்டினம் என்பதல்ல.

ஸ்ரீராம்பிரான் ஆடிய அருள் வல்லபங்கள்


கண்ணபிரானாக அவதரித்த போது பிறந்த போதே தன் அருள் வல்லபத்தைத் துவக்கி விடுகிறது ஆனால் அப்படி அல்ல அதற்குமுன் தோன்றிய இராமாவதாரம். இராமாவதாரம் என்பது மனிதனாக அவதரித்தது, மனிதனைப் போலவே அழுத்து, மனிதனைப் போலவே கதறியது நொந்தது என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள்.

நான் அப்படி நினைக்கவே இல்லை.ஒருமனிதன் எவ்வளவு பளுவைத் தூக்க முடியும். ஒரு அளவுக்கு மேற் போனால் நரம்பு பிடித்துக் கொள்ளும். நம் வரலாற்றுப் பாத்திரங்களில் இராவணன் சரியான பலசாலி ஏன் என்றால்அவன் இமய மலையையே பேர்த்துத் தூக்கும் அளவு வலிமை பெற்றவன். ஆனானப் பட்ட அவனே தூக்கமுடியாமல் வேர்க்க விறுவிறுத்த சம்பவம் ஒன்று உண்டு என்றால் அதுதான் சீதாப் பிராட்டியின் சுயம் வரம் நடந்த இடம். அப்படி அவன் நகர்த்தவே திணறிய வில்லை இராம பிரான் சர்வ சாதாரணமாக எடுத்து வளைக்கிறானே அது அருள் வல்லபம் அல்லாது வேறு என்ன ?

கல்லைப் பெண்ணாக மாற்றியது வெறும் மனிதன் செய்யக் கூடியதா ? அதுவும் அருள் வல்லபம் தானே?

சுற்றி உள்ள எல்லாப் பக்கமும் கடல் உப்பு நார் கிடக்க நடுவில் வுல் ஊன்றி நல்ல நீர் ஊற்று வரவழைத்தது என்னவாம் ?

கடைசியில் ஒரு அற்புதம் இங்கே தேவிப் பட்டினத்தில் . நிகழ்ந்தது. வெறும் அற்புதம் அல்ல, அது அற்புதமான அருள் வல்லபம். அதிசயமான அருட் கொடை.

ஸ்ரீராம்பிரான் உலகுக்கு அளித்த அருட் கொடைகள் மூன்று. ஒன்று இராமேச்சுவரக் கடல் பகுதியில் அமிழ்த்தப் பட்ட சஞ்சீவி மலை. இது உலகத்தாரின் உடல் உறு வினையும் பிணியும் தீர்க்க.

இரண்டாவது இராமலிங்கப் பிரதிஷ்டை. இது உலகரிள் உளம் உறு துயர் போக்க.

மூன்றாவது அருட் கொடையும் இங்கே நிகழ்ந்தது. உலக மக்கள் கோள்களால் வரும் தோஷங்களில் இருந்து விடுபட மனம் உன்னித்து இங்கே நின்று உருகிய போது நவ கோள் களின் அதி தேவர்களும் இராம்பிரான் முன் கைகட்டி நின்ற இடம் இது.

அப்படி நின்றவர்கள் இராம பிரானின் வேண்டு கோளின் படி மக்களுக்கு அருள் பாலிக்கவும், தோஷத் துயர்களில் இருந்து விடு படவும் இங்கேயே ஆள் உயரத்துக்குக் கல்லாய் சமைந்து நின்று தங்கள் சீவ ஒளியை இங்கே இறக்கினார்கள். இராம பிரான் மனத்தால் செய்த சிருஷ்டி இது.

காவெள்ளத்துக் கடற்காற்று அரிப்பில் இச்சிலைகள் உருவம் இழந்து வெறும் கற்களாய் நிற்கின்றன. இழந்தது உருவாரம் மட்டுமே அன்றிச் சக்தி அல்ல.

நடந்தது இதுதானே தவிர, அதை விடுத்து, இராவணனைக் கொன்ற தோஷம் அவரைத் தொடர்ந்ததாகவும், அதில் இருந்து விடுபட மருந்து குணம் உடைய இந்த நவபாஷாணக் கற்களை தாபித்து வழிபட்டுத் தோஷம் நீங்கப் பெற்றதாகவும் கதைப்பது பெரிய பிழை. இராம பிரானையே அவமதிப்பது ஆகும். தலத்துக்கு மகிமை சேர்க்க வேண்டும் என்பதற்காக தெய்வத்தை அவமதிக்கலாமா?

என்னதான் ஆகட்டும். தெய்வத்துக்கு எங்கேனும் தோஷம் வருமா, அடே இராமன் அனந்த கோடி அக்னிப் பிரகாசமடா, வெளிச்சத்திலே போய் எங்காவது அழுக்கு ஒட்டுமா ?

என்ன, அங்கே இராமேச்சுவரத்தில் சிவலிங்கப் பிரதிட்டை சுற்றி பெரிய கோவில் எழும்பியது பிற்காலத்தில். இங்கே இல்லை. அவ்வளவுதான்.

அப்படி எமும்பத் தடையாய் நிற்பது கடல்.

சுற்றி இருந்த கடல்தினம் தினம் ஒவ்வொரு நேரத்துக்கும் ஒவ்வொரு கடல் மட்டம் இருக்கும். நான் இராம நாதபுரம் முதன் முதலாய் வந்த அக்காலத்தில் எல்லாம் நிறையத் தடவை இடுப்ளவு ஆழத்தில் செ.ன்று தரிசித்திருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் அந்தக் கவலை தேவைஇல்லை. நவக் கிரகம் சுற்றி நடை சுவர் அமைத்து விட்டார்கள். நனையாமல் சுற்றி வரலாம்.

. இந்த நிலம் தோண்டப் பட வேண்டும், ஆராயப் பட வேண்டும், ஏன் என்றால் . . .

தோண்டத் தோண்டச் சிலைகள். . .

தேவிப் பட்டினம் சென்னஞ் சிறிய சிற்றூர்தான். ஆனாலும் எந்த ஊர்க்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு இதற்கு உண்டு. அது என்ன என்றால் இது மட்டும் தான் நமது குமரிக்க ண்ட தமிழ் நாட்டின் எச்சமாக, எஞ்சிய பகுதியாக நிற்கிறது.

வெளியே பார்க்கும் போது தெரியவில்லை. ஆனால் எத்தனை கடற்கோள்கள ?

நமக்குத் தெரிய சிலப்பதி காரத்தில்,

‘ பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள . . .’


என்று ஒரு கடற்கோளைப் பற்றிப் பேசுகிறார். அதற்கும் முன்பே ஒரு கடற்கோள் நிகழ்ந்திருக்கிறது. அதில் தான் நம் தொல் காப்பியத்துற்கும் மூத்த நூல்ஆன அகத்தியம், முது நாரை. முது குருகு முதலிய நூல்களும் அழிந்து பட்டன. அழிந்து பட்டவை தமிழ் நூல்கள் மட்டும் இல்லை, அதோடு சேர்ந்து நம் அருமையான கோவில் களும், சிற்பங்களும், சிலைகளும் தான்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தேவிப் பட்டினம் - கண்ணகி ஆண்ட மதுரை’யின் எச்சம்

Post by சிவா on Sat Sep 05, 2009 1:31 am

வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்ளுவது போல் ஏதாவது சொல்லி மழுப்பி விடுகிறார்கள். பழங்காலத்தில் வழிபாடு செய்ப் பட்டு வந்த சிலைகள் சுதையால் ஆக்கப் பட்டவை. கற்சிலைகள் பின்னால்தான் ஏழாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிண என்று வாதிடுவது தவறு. சுதை ச் சிலை வழிபாடு வேண்டுமானால் தொன்மையாய் இருக்கலாம். அதற்காக பழந் தமிழ் நாட்டில் கற்சிலகளே இல்லை, உலோகச் சிலைகளே இல்லை என்று வாதிடக் கூடாது.

14-ம் நூற்றாண்டு வாக்கில் ஒரு பெரும் புயல் இப் பகுதியில் அடித்திருக்கிறது. அப்புறம் 1964-ம் ஆண்டுப் புயல்.( அப்புறம் DEC2005-ல் வந்த கடற்கோள், அதாவது சுனாமி) இந்தச் சீற்றங்களினால் கடலில் புதை உண்டு காடந்த குமரிக் கண்ட காலத்து உலாகச் சிலைகளும், கற் சிற்பங்களும் இடம் பெயர்ந்து இப்போது பூமிக்கு அடியில் , சில உயிரோடும், பல உயிரற்றும் அதிகமாக மறைந்து கிடக்கும் இடம் தேவிப் பட்டினம் தான்.

நான் கடற் கரையை மட்டும் சொல்ல வில்லை. அந்த மொத்த ஊரையுமே வீடுகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். நான் 1981 முதல் இதைச் சொல்லி வருகிறேன். அப்போது 1978-79 வாக்கிலும், அதற்கு முன்பும் கிடைத்த சிலைகளிற் சில பெரு வயல் இரணபலி முருகன் கோவிலுக்கும், சில இராமநாதபுரம் ஹுசுர் அலுவலகத்துக்கும் அனுப்பப் பட்டதாகத் தெரிகிறது.

இந்தச் சிலை பற்றிய செதிகளைச் சொன்னால் சிலர் சுரத்தின்றிக் கேட்கிறார்கள், பலர் ஒதுக்குகிறார்கள். காலம் கடக்கக் கடக்கப் பொய் என்றும் சொல்லி விடுகிறார்கள். ஆகஸ்ட் – செப்டம்பர் 2000 வாக்கில் தேவி பட்டினத் தில் பெருமாள் கோவிலுக்கு அருகே வீடு அஸ்திவாரம் தோண்டுகையில் எத்தனை சிலைகள் கிடைத்தன. அப்புறம் ஒருதிங்கள் சென்று நம் வருவாய்த்துறை அலுவலர்கள் JCB வைத்துத் தோண்டிப் பார்க்கும் போது கூட சிலைகள் வந்து கொண்டே இருந்தன.

தினமலரில் கூட படத்தோடு செய்திகள் போட்டிருந்தார்கள்.. இன்னும் இரண்டு தலைமுறை கடக்கும். இதெல்லாம் பொய் என்னும். புனை என்று ஒதுக்கித் தள்ளும். பழம் பஞ்சாங்கம் எனப் பகடி பண்ணும்.

இது ஒதுக்கப் பட வேண்டிய விஷயம் இல்லை. தோண்டப் பட வேண்டிய விஷயம், இது அலட்சியப் படுத்த வேண்டிய விஷயம் இல்லை, அகழப் பட வேண்டிய, அகழ்ந்து ஆராயப் பட வேண்டிய விஷயம்,

என்ன செய்ய, நம்மிடம் தொல்லியல் துறை சீர் இல்லை. நமது பழம் பெருமை பண்பாடு கலாச்சாரம் பற்றிக் கவலையும். இளைய தலைமுறைக்கோ IT கனவுகள்., DOLLARதான் இலட்சியங்கள். யாருக்கும் மட்டும் இல்லை, அரசுக்கும் இதிலே அக்கறை இல்லை. எல்லோரும் என்ன பார்க்கிறார்கள் ? தோண்டினால் எவ்வளவு இயற்கை வாயு வரும் எவ்வளவு பெட்ரோலியம் வரு்ம் எவ்வளவு லாபம் வரும்.இதுதானே நடைமுறையாக உள்ளது. ?

மாலிக் காபூர் மதுரை வரை வந்து தண்டு கொண்டிருத்த போது கோவிற் சிலைகள் சீர் கெடுமோ என அஞ்சிய கோவில் அர்ச்சகர்கள் சிலைகளைப் பூமிக்கு அடியில் புதைத்து வைத்த தாகச் சொல்லப் படுவதெல்லாம் வெறும் புனைக் கதைகள், கட்டுக் கதைகள் இன்றி வேறில்லை. மாலிக் காபூர்தான் திரும்பி விட்டானே, தமிழ் நாட்டிலேயே ஒன்றும் தங்கி இருக்க வில்லையே, ஏன் அவை மீட்டு எடுக்கப் பட வில்லை.

சீரங்கம் கோவிலில் கூட அவை சுவற்றுக்குப் பின்னாலும் வெளியேயும் அனுப்பி மறைத்துத்தான் வைக்கப் பட்டன, திரும்ப எடுக்க வில்லையா. மற்றைய கோவில் களில் வேண்டுமானால் இந்த மாலிக் காபூர் கதை உண்மையாய் இருக்கலாம். இங்ஙே இந்தப் பகுதியில் அதற்குச் சம்பந்தம் இல்லை.

சொல்லப் போனால் இப்பகுதி முஸ்லீம் மரக் காயர்கள், மாலிக் காபூர் படை எடுப்புக் காலத்தில் இராமேச்சுவரக் கோவில் திருமேனிகளை பத்திரமாகத் தீவுகளில் ஒளிந்து வைத்திருந்து பின் திரும்பக் கொடுத்து உதவியதாகத்தான் தெரிகிறது.

தேவிப் பட்டினத்தில் அப்படி ஒன்றும் மிகத் தொன்மையான கோவில்கள் இல்லை. இமாயண காலத்தில் திலகேஸ்வர்ர் கோவில் இருந்தது பொருமாள் கோவில் இருந்தது என்பது எல்லாம் ஏற்க்க கூடியதும் அல்ல. அவை எல்லாம் மிக மிக பிற்காலத்தவை. ஆனால் மண்ணில் அகழ்தெடுக்கும் சிலைகளோ மிகத் தொன்மையானவை.

எல்லா வற்றையும் ஆராய எவனாவது X-RAY or LASER கண் கொண்டு பிறந்து வந்தால்தான் சரி, அதுவும் இல்லை எனில் சிலைகள் தானே மேலே கிளம்பி வந்தால்தான் உண்டு.

அது வரை மூடிய மண்ணிலும், பகுத்தறிவிலும் அமர்ந்த படி குமரிக் கண்டம்
பொய் என்று சொல்லிக் கொண்டிருப் போமே !

ஒரு பொய்க் கதை . . .


எங்கெங்கு கோவில்கள் உள்ளனவோ அங்கெல்லாம் ஒரு பொய்க் கதை இருக்கும், ஏதாவது ஒரு இந்திரனோ சந்திரனோ வழிபட்டிருப்பான். யாருக்காவது சாப விமோச்சனம் கிடைத்திருக்கும் இல்லை இராத்திரி இராத்திரை ஒரு வெள்ளைக் கிதிரை வரும் வானில் இருந்து பௌளர்ணமி அன்று வேல் வந்து நின்றதை தாத்தா தலிமுறை பார்த்ததாக்க் கதை வரும். அப்புறம் என்ன தல புராணம் தயார் .இதே போல்தான் இங்கே உள்ள உலக நாயகி அம்மன் கோவிலும்..

யார்விட்ட கதை என்று தெரியவில்லை. அம்பிகை மகிடனை வதம் செய்த இடம் இது என்கிறார்கள்.. எந்த அளவுக்கு இதில் உண்மை என்று தெரியாவிட்டாலும் இதில் நூறு சதம் போய் இருக்கிறது என்று மட்டும் தெரியும்.

[You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தேவிப் பட்டினம் - கண்ணகி ஆண்ட மதுரை’யின் எச்சம்

Post by சபீர் on Sat Jul 24, 2010 1:42 pm

நான் ரசித்து ருசித்து படித்த(படித்துக்கொண்டிருக்கும்) ஒன்று இது மிகவும் அழகிய படைப்பு நன்றி அண்ணா
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: தேவிப் பட்டினம் - கண்ணகி ஆண்ட மதுரை’யின் எச்சம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum