ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 ayyasamy ram

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 ayyasamy ram

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 ayyasamy ram

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

வரிசையாய் எறும்புகள்
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

மலைகளின் நகரம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 Dr.S.Soundarapandian

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 பழ.முத்துராமலிங்கம்

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் ஒப்பந்தம்
 பழ.முத்துராமலிங்கம்

நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 Dr.S.Soundarapandian

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நாத்திக மன்னருக்கு விவேகானந்தரின் பதிலடி!

View previous topic View next topic Go down

நாத்திக மன்னருக்கு விவேகானந்தரின் பதிலடி!

Post by சிவா on Sat Sep 05, 2009 2:16 am

தன்னுடைய சொற்பொழிவுகளாலும் கருத்துக்களாலும் உலகெங்கும் புகழ் பெறும் முன் சுவாமி விவேகானந்தர் ஒரு திருவோடு ஏந்திய துறவியாக இந்தியா முழுவதும் சுற்றினார். இன்றைய ராஜஸ்தான் பகுதியில் அவர் சுற்றிக் கொண்டிருந்த பொழுது நடந்த ஒரு சம்பவம்.

ஆல்வார் நாட்டு திவானான மேஜர் ராம்சந்திரர் சுவாமிஜியைப் பற்றி கேள்விப்பட்டு, தமது வீட்டிற்கு அழைத்தார். அந்நாட்டு மன்னரான மங்கள் சிங் ஆங்கில மோகம் கொண்டவராக இருந்தார். சிந்தனை, செயல் அனைத்திலும் ஆங்கிலேய பாணியைப் பின்பற்றுவதில் நாட்டம் கொண்டிருந்தார். திவானுக்கு அது பிடிக்கவில்லை. மன்னர் சுவாமிஜியைச் சந்தித்தால் நல்லது என்று எண்ணினார் திவான். எனவே அவருக்கு, ‘ஆங்கிலத்தில் அபார அறிவு கொண்ட ஒரு பெரிய சாது இங்கே உள்ளார்’ என்று எழுதினார். மன்னர் மறுநாளே திவானின் வீட்டிற்கு வந்து சுவாமிஜியைச் சந்தித்தார்.

மன்னர் வந்து சுவாமிஜியை வணங்கி அமர்ந்து பேச்சைத் தொடங்கினார்.

மன்னர்: ‘சுவாமிஜி, நீங்கள் மிகவும் படித்தவர் என்று கேள்விப்பட்டேன். உங்கள் படிப்பிற்கு நீங்கள் கை நிறைய சம்பாதிக்கலாமே! ஏன் இப்படி பிச்சையெடுத்துத் திரிகிறீர்கள்?’

சுவாமிஜி: ‘
மகாராஜா, நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமைகள் உங்களுக்கு எவ்வளவோ இருக்கின்றன, அவற்றை விட்டுவிட்டு நீங்கள் ஏன் வேட்டை அது இதென்று ஆங்கிலேயர்களுடன் நேரத்தைச் செலவிடுகிறீர்கள்?’

சிறிதும் தயக்கமின்றி வந்த சுவாமிஜியின் கேள்வி அங்கிருந்தோர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மன்னர் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டார்.

மன்னர்:
‘ஏன் என்பதற்கு குறிப்பாக எந்த காரணத்தையும் சொல்ல முடியாது. எனக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது.’

சுவாமிஜி:
‘அதுபோல்தான்; எனக்கு இது பிடித்திருக்கிறது. நான் பிச்சையெடுத்துச் சாப்பிடுகிறேன்.’

சிறிது நேரத்திற்குப் பிறகு மன்னர், ‘சுவாமிஜி எனக்கு உருவ வழிபாட்டில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என் கதி என்னவாகும்?’ என்று கேட்டார். இதைக் கேட்கும்போது அவர் சற்று சிரித்த முகத்துடன் கேலி செய்வது போன்ற தொனியில் கேட்டார். அவர் கேட்டவிதம் சுவாமிஜிக்கு எரிச்சலை மூட்டியது.

சுவாமிஜி: ‘நீங்கள் கேலி செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.’

மன்னர்: ‘இல்லை சுவாமிஜி, எல்லோரையும் போல், ஏனோ என்னால் இந்த மண்ணையும் மரத்தையும் கல்லையும் கட்டையையும் வழிபட முடியவில்லை. மறு உலகத்தில் துன்பப்படுவதுதான் என் தலை விதியா?’

சுவாமிஜி: ‘நல்லது, ஒவ்வொருவரும் அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப வாழ வேண்டும். அதுதான் நல்லது’

இந்தப் பதிலை அங்கிருந்தயாரும் எதிர்பார்க்கவில்லை. சுவாமிஜி உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்பவர். அவர் மன்னருக்கு தகுந்த விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள். ஆனால் சுவாமிஜி தமது பதிலைக் கூறிவிட்டு அந்த அறையைச் சுற்றிப் பார்த்தார். அங்கே தொங்கிக் கொண்டிருந்த ஒரு படம் அவரது கருத்தைக் கவர்ந்தது. உடனே அதனைக் கொண்டுவருமாறு கூறினார்.

சுவாமிஜி:
‘இந்தப் படத்தில் இருப்பது யார்?’

திவான்:
‘அது மன்னரின் படம்.’

சுவாமிஜி திவானிடம் அடுத்ததாகக் கூறியது அனைவரையும் அதிர்ச்சியால் உறைய வைத்தது.

சுவாமிஜி:
‘திவான்ஜி, இந்தப் படத்தின்மீது துப்புங்கள்.’

அனைவரும் அதிர்ச்சியில் அசைவற்று நின்றனர். சுவாமிஜி அதைக் கண்டுகொள்ளாமல் ‘துப்புங்கள் திவான்!’ என்று மீண்டும் திவானிடம் கூறினார். திவான் அசையவில்லை. உடனே சுவாமிஜி அங்கிருந்த மற்றவர்களைப் பார்த்து, ‘திவான் இல்லாவிட்டால் இங்கே இருக்கின்ற வேறு யாராவது ஒருவர் முன்வாருங்கள். இந்தப் படத்தில் அப்படி என்ன தான் உள்ளது? வெறும் காகிதம் தானே! இதன் மீது துப்புவதற்கு ஏன் தயங்குகிறீர்கள்?’ என்று கேட்டார்.

அங்கிருந்த மற்றவர்களும் சுவாமிஜி கூறியதைச் செய்ய முன்வரவில்லை. அனைவரும் சுவாமிஜியையும் மன்னரையும் மாறி மாறி பார்த்தபடி திகைத்து நின்றனர். அப்போது சுவாமிஜி மீண்டும் திவானிடம், ‘என்ன, அப்படியே நிற்கிறீர்களே! இந்தப் படத்தின் மீது துப்புங்கள்’ என்று அழுத்தமாகக் கூறினார். அதன் பிறகும் திவானால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை; பதைபதைத்தவாறே நடுங்கிய குரலில், ‘சுவாமிஜி, என்ன சொல்கிறீர்கள்? சொல்வதைப் புரிந்து கொண்டு தானா சொல்கிறீர்கள்? இது மன்னரின் படம். இதன் மீது என்னால் எப்படி துப்ப முடியும்?’ என்று கேட்டார்.

சுவாமிஜி:
‘இருக்கட்டுமே! மன்னரின் படம் தானே, மன்னர் அல்லவே! இந்தப் படத்தில் மன்னர் உயிருணர்வுடன் இல்லையே! இது வெறும் காகிதத் துண்டு. மன்னரின் எலும்போ சதையோ ரத்தமோ இதில் இல்லை, இது பேசுவதில்லை, நடப்பதில்லை, மன்னர் செய்வது போல் எதையும் செய்வதில்லை. இருந்தாலும் இதன் மீது துப்ப நீங்கள் யாரும் முன்வர மறுக்கிறீர்கள். ஏன்? ஏனெனில் இந்தப் படத்தில் மன்னரின் பிரதிபிம்பத்தை நீங்கள் காண்கிறீர்கள். இதன் மீது துப்பினால் மன்னரையே அவமதிப்பதாக உணர்கிறீர்கள்.’

இதனைக் கூறிவிட்டு சுவாமிஜி மன்னரைப் பார்த்து தமது பேச்சைத் தொடர்ந்தார்: ‘பாருங்கள் மகாராஜா! இந்தப் படம் நீங்கள் அல்ல. ஆனால் ஒரு விதத்தில் இது நீங்களே. அதனால் தான் இதன் மீது துப்புமாறு சொன்னபோது உங்களிடம் பக்தி கொண்ட உங்கள் சேவகர்கள் மறுத்துவிட்டார்கள். இது உங்கள் பிரதிபிம்பம். இந்தப் படத்தைப் பார்க்கும்போது நீங்களே அவர்களின் நினைவிற்கு வருகிறீர்கள். அதனால் தான் உங்களுக்கு கொடுக்கின்ற மரியாதையை அவர்கள் இந்தப் படத்திற்குக் கொடுக்கிறார்கள். கல்லிலும் மண்ணிலும் மரத்திலும் செய்யப்பட்ட தெய்வ வடிவங்களை வழிபடுகின்ற பக்தர்களின் விஷயமும் இது தான். அவர்கள் வழிபடுகின்ற உருவம் அவர்களுக்கு அந்தப் பரம்பொருளை நினைவுபடுத்துகிறது. எத்தனையோ இடங்களில் நான் யாத்திரை செய்துள்ளேன். எந்த இந்துவும், “ஏ கல்லே, உன்னை வணங்குகிறேன். ஓ மண்ணே , எனக்கு அருள் செய்” என்று வழிபடுவதை நான் காணவில்லை. மகாராஜா! எங்கும் நிறைந்த, பேரானந்த வடிவான முழுமுதற் கடவுளையே ஒவ்வொருவரும் வழிபடுகின்றனர். கடவுளும் அவர்களின் பக்குவத்திற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் அருள் புரிகிறார்.’
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாத்திக மன்னருக்கு விவேகானந்தரின் பதிலடி!

Post by ரூபன் on Sat Sep 05, 2009 2:25 am

ஆகா அருமையான விளக்க உரை
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: நாத்திக மன்னருக்கு விவேகானந்தரின் பதிலடி!

Post by Ramya25 on Mon Sep 07, 2009 8:06 pm

அருமையான தகவல் நன்றி

Ramya25
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 110
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: நாத்திக மன்னருக்கு விவேகானந்தரின் பதிலடி!

Post by சிவா on Mon Sep 07, 2009 8:08 pm

@Ramya25 wrote:அருமையான தகவல் நன்றி

வணக்கம் ரம்யா! நீண்ட நாட்களாக வரவில்லை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாத்திக மன்னருக்கு விவேகானந்தரின் பதிலடி!

Post by paarthaa077 on Thu Sep 10, 2009 4:30 pm

அருமையான தகவல் சிவா சார்.. நன்றி..
avatar
paarthaa077
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 179
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: நாத்திக மன்னருக்கு விவேகானந்தரின் பதிலடி!

Post by VIJAY on Thu Sep 10, 2009 4:45 pm

மகிழ்ச்சி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: நாத்திக மன்னருக்கு விவேகானந்தரின் பதிலடி!

Post by பிளேடு பக்கிரி on Tue Nov 01, 2011 1:48 pm


நல்ல பதிலடி நன்றி தல நன்றிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நாத்திக மன்னருக்கு விவேகானந்தரின் பதிலடி!

Post by சிவா on Tue Nov 01, 2011 2:53 pm

@பிளேடு பக்கிரி wrote:
நல்ல பதிலடி நன்றி தல

இரண்டு வருடங்களுக்குப் பிறகு படித்துப் பதில் எழுதியதற்கு நன்றி ஜீ!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாத்திக மன்னருக்கு விவேகானந்தரின் பதிலடி!

Post by தமிழ்ப்ரியன் விஜி on Tue Nov 01, 2011 2:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1500
மதிப்பீடுகள் : 84

View user profile http://www.eegarai.com

Back to top Go down

Re: நாத்திக மன்னருக்கு விவேகானந்தரின் பதிலடி!

Post by பிளேடு பக்கிரி on Tue Nov 01, 2011 3:01 pm

@சிவா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
நல்ல பதிலடி நன்றி தல

இரண்டு வருடங்களுக்குப் பிறகு படித்துப் பதில் எழுதியதற்கு நன்றி ஜீ!

சிரி சிரிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum