புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10 
31 Posts - 53%
heezulia
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10 
2 Posts - 3%
Manimegala
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10 
1 Post - 2%
jairam
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10 
1 Post - 2%
சிவா
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10 
13 Posts - 4%
prajai
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10 
9 Posts - 3%
Jenila
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10 
4 Posts - 1%
Rutu
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10 
3 Posts - 1%
jairam
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Barushree
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 2:32 am

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு Vivekananda



விவேகானந்தர் யார் ?

அப்போதைய வங்காளத்திலே பழமை மிகுந்த க்ஷத்ரிய குடும்பத்திலே விசுவநாதருக்கும், புவனேசுவரிக்கும் மகனாகப் பிறந்த நரேந்திரர் ஒரு ஞானக் குழந்தை எனப் பிறர் கருதும் விதத்தில் வித்தியாசமாக வளர்ந்தார்.

அனைத்து உயிர்களிடத்தும் இறைவன் குடி கொண்டிருக்கிறார் என்று ஆன்மீகத் தத்துவார்த்தம் கூறுவார்களல்லவா, அந்தத் தத்துவத்தை வாழ்வின் அடிப்படையாக கொண்டிருந்தாரோ என்னவோ நரேந்திரரின் இளம் பருவத் தோழர்களாகத் திகழ்ந்தவை ஒரு பசு, ஆடு, குரங்கு, மயில், புறா, இரண்டு மூன்று சீமைப் பெருச்சாளிகள் ஆகிய உயிரினங்களே!

நரேந்திரர் என்றைக்குமே அதிகாரம் செய்யும் தலைவனாகவே இருக்க விரும்பினார். தம்மை ஒரு குதிரை வண்டிக்காரனாக் கற்பனை செய்துகொண்டு கற்பனைச் சாட்டையைச் சொடுக்கி வீசி கற்பனைக் குதிரைகளை விரட்டுவார். அவருக்குப் பிடித்தமான விளையாட்டு ராஜா - மந்திரி விளையாட்டுதான். விளையாடும்போது இவர் எப்போதுமே ராஜாவாகத் தான் இருப்பார். சக தோழர்கள் அனைவருமே எப்போதும் மந்திரிகள்தான்.

நரேந்திரருக்கு பிரமிப்பூட்டும் வகையில் நினைவாற்றல் அமைந்திருந்தது. விளையாட்டப் பிள்ளையாக இருந்த காலத்தில் சமஸ்கிருத மொழியில் புலமை பெற்றிருந்த உறவினரான முதியவர் ஒருவர் இருந்தார் அவர் மடியில் அமர்ந்தவாறே மற்றவர்களிடம் அவர் உரையாடிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கேள்வி ஞானமாகவே சமஸ்கிருத மொழி இலக்கணத்தை மனப்பாடம் செய்துவிட்டார்.

பள்ளியில் வகுப்பறையில் மட்டுமே ஆசிரியர் போதிப்பதைக் கவனிப்பார். வீட்டில் பாட புத்தகங்களைப் புரட்டிக்கூட பார்க்கமாட்டர். தேர்வுக் காலத்தில் தேர்வுக்கென தனியாகப் படிக்கும் வழக்கம் அவரிடம் இல்லை. ஆனால் தேர்வு முடிவு வெளிவந்த பிறகு அவர் முதல் மாணவனாகத் தேறியிருப்பது தெரியும்.

நரேந்திரர் எஃப்.ஏ. (F.A.) வகுப்பு படிக்கும் போது இந்திய வரலாறு அவருக்குப் பாடமாக இருந்தது. வகுப்புப் பாட நூல் என்ற எல்லையைக் கடந்து பாரத தேசத்தைப் பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் அதை மிகவும் அக்கறையுடன் படித்தார். அத்துடன் ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருந்த தர்க்க சாஸ்திர நூல்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகப் படித்தார். பி..ஏ. (B.A.) வகுப்பு படிக்கும் போது இங்கிலாந்து நாட்டு வரலாற்றையும், மற்ற மேலைநாட்ட வரலாறுகளையும் படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. வெறும் பள்ளிப் பாட நூல்கள் என்றில்லாமல் உலக நாடுகள், உலக மக்களின் வாழ்க்கை ஆகியவை பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன் ஆர்வத்தடன் அந்த நூல்களைப் பயின்றார்.

இவ்வாறு பள்ளிப் படிப்பு காலத்திலேயே உலக நாடுகள் - மக்கள் பற்றி சரியாகத் தெரிந்து வைத்திருந்த காரணத்தால்தான் பிற்காலத்தில் அவர் ஆன்மீக வழியில் இறங்கிச் செயல்பட்டபோது தேச பக்தியும், தெய்வ பக்தியும் அவரது லட்சிய நோக்குடன் இணைந்து நின்றன. தாய்நாடு அடிமைப்பட்டு கிடந்தாலும் அன்னியர்களால் பல வகையிலும் சுரண்டப்பட்டு வறுமையுற்றுக் கிடந்தாலும் ஆன்மீக வல்லமையில் பாரதத்துக்கு இணையாக உலக நாடுகள் எதுவுமே இல்லை என்பதை அவர் உணர்ந்தார். பின்னாளில் பாரத தேசத்தின் ஆன்மீக வளத்தை உலகறியச் செய்து பாரதத்தை தலைநிமிரச் செய்த அரும் சாதனை பள்ளிக் கல்வி காலத்தில் அவர் பெற்ற உலகியல் அறிவுதான் அடிப்படையாக இருந்து உதவியது என்று கூறவேண்டும்.

மனவலிமைக்கு உடல் திண்மையும், உடல் உறுதியும் அவசியம் என்பதை நரேந்திரர் உணர்ந்திருந்தார். அதனால் தீவிரமாக உடற்பயிற்சியை இளமைப் பருவத்தில் முக்கியமான கடமையெனக் கைக்கொண்டிருந்தார். சிலம்பம், வாள் பயிற்சி, மல்யுத்தம் ஆகிய போர்க் கலைகளில் அவர் நல்ல பயற்சியும். தேர்ச்சியும் பெற்றிருந்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 2:33 am

கடவுளுடன் பேசுவது முடியுமா ?

நரேந்திரன் என்ற அந்த இளைஞன் நாத்திகன் அல்ல. தெய்வ பக்தியுள்ளவன். ஆழ்ந்த ஆன்மீக உணர்வு கொண்டவன். ஆன்மீக சாத்திரங்களைக் கற்றரிந்தவன். யோகப் பயிற்சி, தியானம் என நாள் முழுவதும் அதே சிந்தனையில் - செயலில் ஈடுபட்டு வருபவன்.

ஓரு நாள் மின்னல் வெட்டியது போல அவன் மனத்தில் திடீரென ஐய வினாவென்று எழுந்தது. சூறாவளி போல சுழன்றடித்தது. கடவுள் இருக்கிறார் என்பது உணமையானால் கடவுளைச் சந்தித்து உரையாடியவர்கள் யாராவது இருக்கிறார்களா ?

இந்த வினாவுக்கு விடை காணும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டதன் விளைவாகவே எதிர் காலத்தில் இந்து தர்மத்தின் சிறப்பை உலக சமுதாயத்தின் முன்னிலையில் உயர்த்திப் பிடித்து பாரதத்தின் சிறப்பை உலகமெங்கும் பேரொளியாகப் பரவச் செய்தார்.

அந்த இளைஞர்தான் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் என்று பாரத சமுதாயத்தக்கு அறிமுகமானவர். சுவாமி விவேகந்தரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கும் அளவுக்கு நம்மில் பலர் அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கவில்லை.

விவேகானந்தர் என்பவர் யார் ? என்ன சாதனைக்காக அவர் போற்றப்படுகிறார் ? இந்த வினாக்களுக்கு இதோ பொருத்தமான விடை.

சுவாமி விவேகானந்தர் இந்து தர்மத்தையும், இந்தியாவையும் காப்பாற்றியவர். ஆவர் இல்லாவிடில் நம் மதம் மறைந்து போயிருக்கலாம். இந்திய நாட்டின் விடுதலையும் கிடைக்காமல் போயிருக்கலாம். அதனால் பூரணமாக அவருக்கு நாம் கடமைப் பட்டுள்ளோம். அவருடைய திட நம்பிக்கை, வீரம், ஞானம் ஆகியவை நம்மை என்றும் ஊக்குவிக்கட்டம். அதன் வாயிலாக அவரிடமிருந்து பெற்ற பொக்கிஷங்களைப் போற்றிப் பாதுகாக்கலாம்.

தகுதியுள்ள இந்த விளக்கத்தை நமக்கு அளித்தவர் மூதறிஞர் ராஜாஜி அவர்கள். அருள் இராமகிருஷ்ண பரமஹம்சரைத் தமது ஆன்மீகக் குருதேவராக சுவாமி விவேகானந்தர் வரித்துக் கொண்டார் என்பது பெரிய விஷயமல்ல. பகவான் இராமகிருஷ்ணரின் அருள் உபதேசங்களைக் கேட்டோ, அல்லது அவருடைய சித்து விளையாடல்களை அறிந்தோ பக்திப் பரவசமாகி விவேகானந்தர் இராமகிருஷ்ணரைச் சரணடைந்திருந்தால் அது அவ்வளவு சிறப்பானது என்று கருத முடியாது.

பகவான் இராமகிருஷ்ணரின் அருள்மொழிகளையும், அற்புத சாதனைகளையும் அறிந்து அவரால் ஈர்க்கப்பட்டவர்கள் பல்லாயிரம் பேர் இருப்பர். அந்த பக்த கோடிகளில் சுவாமி விவேகானந்தரும் ஓருவர் என்று சொன்னால் அது எந்த வகையிலும் அவரைப் பெருமைப்படுத்துவதாக ஆகாது. சுவாமி விவேகானந்தர் பகவான் இராமகிருணஷ்ரைச் சரணடைய வைத்த அந்த நிகழ்ச்சி பெரு வியப்பை அளிக்க கூடியதாகும்.

தொடகத்தில் நாம் கூறியது போன்று இறை நமம்பிக்கையும், ஆழ்ந்த ஆன்மீக உணர்வும் கொண்ட வராகத்தான் நரேந்திரர் திகழந்தார். ஆனால் அவர் சிந்தையில் இறைவன் தொடர்பாக ஒர் ஐய வினா பெரும் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருந்தது. இது குறித்து முன்னரே சொல்லிருக்கிறோம்.

கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பது உண்மையானால் கடவுளை நேரடியாகத் தரிசனம் செய்த மகான்கள் யாராவது இருக்கிறார்களா ? அவருடன் நேருக்கு நேர் உரையாடியவர் உண்டா ? அல்லது கடவுளைச் சந்தித்து உரையாடவது சாத்தியமாகக் கூடியதா ?

இந்த வினாக்களுக்கு விடை காண சுவாமி விவேகானந்தர் பட்ட பாடு கொஞ்சமில்லை. இந்த நாட்களில் மகான்கள், மகரிஷிகள் போன்று மக்களின் மத்திலே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த ஆன்மீகப் பெரியோர் பலர் இருந்தனர். விவேகானந்தர் அவர்களையெல்லாம் அணுகித் தமது சிந்தைக்குள் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த ஐய வினாக்களை அவர்களிடம் எழுப்பி ஐயந்தீர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

அவருடைய வினாக்களைச் செவிமடுத்த மகான்கள் எனப்பட்டவர்களில் சிலர் குழப்பமடைந்தனர். சிலர் மிரட்சியடைந்து அவரிடமிருந்து விலக முயன்றனர். சிலர் அசட்டுப் புன்னகை செய்து மழுப்பினார். ஆனால் விவேகானந்தரின் ஐய வினாவுக்கு யாராலும் விடையளிக்க முடியவில்லை..

அந்தச் சமயத்தில் பகவான் இராமகிருஷ்ணரின் ஆன்மீகச் கருத்துக்களும், சாதனைகளும் வங்காள மெங்கும் பரவிக்கொண்டிருந்தன. திரளான மக்கள் அவருடைய தரிசனத்துக்காக அன்றாடம் சென்று வந்தனர்.

பகவான் இராமகிருஷ்ணரைச் சந்தித்தால் தமது ஐயத்திற்கு ஒரு வேளை விடை கிடைக்கக் கூடும் என்று நரேந்திரருக்குத் தோன்றியது. ஒரு நாள் பகவான் இராமகிருஷ்ணரைச் சென்று சந்தித்தார்.

அந்தச் சந்திப்புதான் அப்போது நரேந்திரனாக இருந்த விவேகானந்தரிடம் புரட்சிகரமான மாற்றத்தைத் தோற்றுவித்தது. அதுபற்றி பின்னால் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 2:38 am

ஆன்மீகத்தில் ஆர்வமும் எழுச்சியும்



இதுவரை நரேந்திரரின் இளம் பருவ வாழ்க்கைப் பற்றிச் சொல்லப்பட்ட தகவல்கள் பொதுவாக நுண்ணறிவும், உணர்ச்சி வேகமும் கொண்ட எல்லா இளைஞர்களின் பொதுவான நிலைதான். இதன் பிறகு நரேந்திரரின் இளம் பருவ வாழ்க்கையில் நிகழந்த நிகழச்சிதான் நரேந்திரரின் எதிர்கால வாழ்க்கையின் முன்னோட்டம் எனலாம்.

கருவிலேயே திருவுறுதல் என்பார்களே அந்த மாதிரி ஆன்மீக உணர்வு நரேந்திரருடைய இரத்தத்திலேயே கலந்திருந்தது போலும். நினைத்த நேரத்தில் மனத்தை ஒருமுகப்படத்தும் பேராற்றல் இளமையிலேயே அவரிடம் அமைந்திருந்தது. எவ்வளவு திரளான கூட்டமாக இருந்தாலும் திடீரென அவர் தன்னை மறந்த லயம் தன்னில் ஆழ்ந்து விடுவார். பெயர் சொல்லி அழைத்தாலும் அவர் செவியில் விழுவதில்லை. அவரைப் பிடித்து உலுக்கினால்கூட அசைவற்று அமர்ந்திருப்பார். தியானம் செய்வது அவருடைய உணர்வோடு ஒட்டிய ஒன்றாக இருந்தது. யார் உந்துதலும் இல்லாமல் அதிகாலையிலேயே விழித்தேழந்து நீராடி, உதயசூரியனை நோக்கி அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கிவிடுவார். சில சமயம் தியானம் மணிக்கணக்கில கூட நீடிப்பதுண்டு.

முதலில் இது ஒரு குழந்தை விளையாட்டு என எண்ணிய பெற்றோர் நரேந்திரன் நினைத்த நேரமெல்லாம் தியானத்தில் அமர்ந்துவிடுவது கண்டு குழப்பமும், திகைப்பும் அடைந்தனர். நாளடைவில் நிலைமை சரியாகிவிடும் என்று மனதைத் தேற்றிக் கொண்டனர்.

வீட்டிற்கு அருகாமையில் பழங்காலக் கோயில் ஒன்று இருந்தது. கவனிப்பின்றி கிடந்த அந்த கோயில் சிறுவர்கள் விளையாடும் இடமாக ஆகியிருந்தது. நரேந்திரரும் அவரது நண்பர்களும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அங்கே சென்று விளையாடுவது வழக்கம்.

சிறுவர் நரேந்திரர் ஒரு நாள் விளையாடும் நோக்கத்தில் கோயில் பக்கம் வந்தார். நண்பர்கள் கூட்டம் இன்னும் வந்த சேரவில்லை. நரேந்திரர் கோயிலுக்குள் நுழைந்து கதவை மூடித் தாளிட்டுக் கொண்டார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு நண்பர்கள் கூட்டம் வந்து சேர்ந்தது. நண்பர்கள் நரேந்திரரைத் தேடினர். அவரைக் காண முடியவில்லை. நரேந்திரரின் வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் விசாரித்தனர். நரேந்திரர் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பார் என்று எண்ணியிருந்த பெற்றோர் நண்பர்களே வந்து மகனை விசாரித்தது கவலையை அளித்தது. நண்பர்களுடன் சேர்ந்து நரேந்திரரைக் தேடினார்கள். நரேந்திரர் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறுவர்களில் ஒருவன் ஒடிவந்து கோயிலின் கதவு உட்புறம் தாளிடப்பட்டிருக்கும் செய்தியைச் சொன்னான். எல்லோரும் கோயிலை முற்றுகையிட்டுக் கதவைத் தட்டினர் கதவு திறக்கப்படவில்லை. கோயிலுக்குள்ளிருந்து பதிலும் கிடைக்கவில்லை.

கோயிலின் கதவை உடைத்து எல்லோரும் உள்ளே சென்றனர். அங்கே நரேந்திரர் ஆழ்ந்த தியானத்தில் மெய்மறந்த நிலையில் அமர்ந்திருந்தார். தியானத்தைக் கலைத்து அவரை எழுப்புவதற்கு பெரும்பாடு படவேண்டியிருந்தது.



இனம்புரியாத பரவசநிலைக்கு நரேந்திரர் அடிக்கடி ஆளாகிவிடுவது வழக்கமாக இருந்தது. இத்தகைய தெய்வீக பரவச நிலைக்கு உள்ளாவதை பல தடவை அவரே உணர்ந்திருந்தார்.

இரவில் நரேந்திரர் உறங்கத் தொடங்கிய சற்று நேரத்தக்கெல்லாம் கனவா, நனவா என நிர்ணயிக்க இயலாத நிலையில் சில அனுபவங்களுக்கு இலக்கானார்.

உறக்கத்தின்போது அவருடைய புருவங்களுக்கிடையே ஒர் ஒளிப்பந்து வந்து அதில் தாம் கரைந்து போனதுபோல உணர்ந்ததாக அவரே கூறியிருக்கிறார். அவர் இவ்வாறு பரவச நிலையடைந்த நிகழ்ச்சிகள் எத்தனையோ உண்டு.

நரேந்திரர் இளைஞராக - சுதந்திரமாக சிந்திப்பவராக தம்முடைய அறிவை வளர்த்துக் கொள்ளும் நிலையில் இருந்தபோது ஏராளமான நூற்களை கற்று உணரம் முயற்சியில் ஈடுபட்டார்.

மேலைநாட்டுச் சிந்தனையாளர்களின் தத்துவ நூற்களை விரும்பிப் படித்தார். நவீன அறிவியலின் முறைகளையும் ஆழ்ந்து கற்றார். பொதுவாக மேலைநாட்டு அறிவியலும், தத்தவங்குளும் அவர் மனதை வெகுவாக கவர்ந்தாலும் அவை அழமற்ற வெறும் உலகியல் கண்ணோட்டத்துடன் அமைந்திருப்பதாக அவருக்குத் தோன்றியது. அத்துடன் அதுநாள்வரை தான் கொண்டிருந்த ஆன்மீகக் கருத்தகள் தொடர்பாகவும் பலவிதமான சிந்தனைப் போராட்டங்கள் அவர் மனத்திலே எழுந்தன. பொதுவாக ஆன்மீக-கடவுள் போன்ற விஷயங்களில் தெளிவில்லாமல் இருப்பதாக அவருக்குத் தோன்றியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 2:38 am

அந்தக் காலகட்டத்தில் கல்கத்தாவில் பிரம்ம சமாஜம் என்று புரட்சிகரமான ஆன்மீக இயக்கம் தோன்றி மக்களிடம் சிறப்பாக படித்த இளைஞர்களை மத்தியில் பெரும் செல்வாக்குடன் வளரத் தெர்டங்கியிருந்தது. இந்து சமயத்தின் மூட நம்பிக்கைகளையும் அறிவுக்கு ஒத்துவராத கடவுள் கொள்கைகளையும் ஒதுக்கிவிட்டு கிறிஸ்தவர்களின் இறைபக்தி அடிப்படியில் கடவுள் வழிபாடும், மேலைநாட்டினர் கையாளும் முற்போக்கு சமுதாய அடிப்படையையும் சமுதாய நோக்கையும் பிரம்ம சமாஜம் குறிக்கோளாகக் கொண்டு இயங்கியது.

பகுத்தறிவுக்கு ஒத்து வருகிற பிரம்ம சமாஜிகளின் கருத்துக்களால் நரேந்திரர் ஈர்க்கப்பட்டார். இந்து சமயம் கூறுகின்ற கடவுள் கொள்கையை - குறிப்பாக பல உருவ கடவுள் வழிபாட்டை வெளிப்படையாகவே எதிர்த்தும் பேசத் தலைப்பட்டார். என்றாலும் மேலைநாட்டு ஆன்மீக தத்துவங்களும், சமுதாய அமைப்பும் முறையும் முழுமை பெற்றவை என்று அவரால் கருத முடியவில்லை. இந்து சமயம் - கடவுள் கொள்கை தொடர்பாக படிந்து கிடக்கும் தூசுக்களையும் அழுக்கையும் துடைத்தெறிந்து பரிசுத்தப் படுத்தி விட்டால் இந்து சமயமே சிறப்பாகச் காட்சி தரும் என்ற எண்ணமும் அவர் உள்ளத்தின் ஆழத்தில் நிழலாடியது.

ஓரு புரட்சிகரமான சோதனையைக் கையாண்டு பார்த்துவிட்டு அந்தச் சோதனையின் முடிவை வைத்து தமது ஆன்மீகக் கருத்துக்களுக்கு உருவம் கொடுப்பது என்று தீர்மானித்தார்.

இறைவனை நேருக்கு நேராகச் சந்திக்க முடியுமா ? மனிதர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் போது கலந்துரையாடுவது போன்று இறைவனிடம் உரையாட முடியுமா ? இந்த வினாவுக்கு தெளிவான திட்டவட்டாக விடைபெற முற்சிக்க வேண்டும் என்பதை ஒரு சோதனை என நரேந்திரர் கொண்டார். இந்த வினாவுக்குக் கிடைக்கிற விடையை வைத்துக் தான் தமது ஆன்மீக நோக்கத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வது என எண்ணினார்.

பிரம்ம சமாஜத்தினரும் கடவுளைப் பற்றிப் பேசவே செய்தனர். கடவுளை அவர் மறுக்கவில்லை, கடவுள் பெயரால் கூறப்படும் கற்பனைக் கதைகள் - விக்ரக வழிபாடு போன்றவற்றையே அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பிரம்ம சமாஜத்தினரால் போற்றி மதிக்கப்பட்டவர் தேவேந்திரநாத தாகூர் என்ற மகான்.

தேவேந்திரநாத தாகூரை ஒரு நாள் நரேந்திரர் சந்தித்தார். எடுத்த எடுப்பிலேயே அவரை நோக்கி தாங்கள் கடவுளைச் சந்தித்தது உண்டா ? என்ற வினாவை எழுப்பினார்.

மகரிஷி தேவேந்திரநாத தாகூர் ஒரளவுக்கு அதிர்ச்சியே அடைந்துவிட்டார். பிறகு சமாளித்துக் கொண்டு புன்னகை பூத்த முகத்தினராக நரேந்திரரை அழைத்துத் தமக்கு அருகில் அமர வைத்துக் கொண்டு, குழந்தாய் ஒரு யோகிக்கான ஆத்ம ஞானம் உனக்கு இருக்கிறது. தியானம் செய்வதை வாழ்க்கையின் நியதியாக் கொள், சரியான பலன் சரியான காலத்தில் உனக்கு நிச்சயமாகக் கிடைக்கும் என்றார்.

இறைவனை நேருக்கு நேர் தரிசிக்க வேண்டும் அல்லது இறைவனைக் கண்டவர்களையாவது சந்திக்க வேண்டும் என்ற ஆவேச உணர்வுதான் நரேந்திரரை பகவான் இராமகிருஷ்ணரிடம் கொண்டு சென்று சேர்த்தது.

நரேந்திரர் கல்வி பயின்ற கல்லு}ரியின் முதல்வராக இருந்தவர் வில்லியமஹேஸ்டி என்பவர். ஒரு நாள் அவர் வகுப்பில் ஒர் ஆங்கில கவிஞரின் கவிதையைப் பற்றிப் பேச வேண்டி வந்தது. கவிதையில் பரவச நிலை என்ற சொல் லந்தது. நரேந்திரர் எழுந்து பரவச நிலை என்பதற்கு விளக்கம் தருமாறு கேட்டுக் கொண்டார்.

முதல்வர் என்ன முயன்றும் பரவச நிலை என்பதற்குத் தெளிவான விளக்கத்தை அளிக்க இயலவில்லை, சற்று யோசித்த முதல்வர் முகம் மலர்ந்தது. பகவான் இராமகிருஷ்ணரைச் சந்திக்கும்போது நமக்கெல்லாம் ஏற்படுகிற உணர்வு இருக்கிறதே அதுதான் பரவச நிலை என்று விடையளித்தார்.

அந்த விளக்கத்தைச் செவிமெடுக்கும்போதே நரேந்திரரின் உள்ளத்தில் இனம்புரியாத ஒரு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. அப்போதே பகவான் இராமகிருஷ்ணரைப் பற்றி நரேந்திரரின் மனத்திலே அழுத்தமான ஒரு பதிவு ஏற்பட்டது.

இராமச்சந்திர தத்தர் என்ற உறவினர் நரேந்திரரின் உளப்பாங்கை நன்கு அறிந்தவர். தெளிவான ஆன்மீக ஞானமுடையவர். ஆன்மீக தொடர்பான ஐயப்பாடுகளை நரேந்திரர் அவரிடம் கேட்டுத்தான் விளங்கிக் கொள்வது வழக்கம். அவரிடம் பகவான் இராகிருஷ்ணரைப் பற்றி அடிக்கடி விசாரித்தார்.

இப்போது நரேந்திரருக்கு திருமணம் செய்வதற்காதன முயற்சியில் நரேந்திரரின் பெற்றோர் ஈடுபட்டிருந்தனர்.

திருமணத்தில் கொஞ்சங்கூட விருப்பமில்லாத நரேந்திரர் இராமச்சந்திர தத்தரைச் சந்தித்து தம்முடைய ஆன்மீக தாகத்தைப் பற்றி எடுத்துக் கூறி தமது வழியிலேயே செல்ல உதவுமாறு வேண்டிக் கொண்டார்.

ஏற்கனவே நரேந்திரரின் ஆன்மீக ஏக்கத்தை நன்கு உணர்ந்திருந்த இராசந்திர தத்தர், நரேந்திரரின் பெற்றேர்யிடம் கலந்து பேசி, திருமண விஷயத்தை வற்புறத்த வேண்டாம். அவனாக மனமாற்றம் அடைந்து வந்தால் அப்போது திருமணத்தைப் பற்றி யோசிக்கலம் என்று அறிவுறுத்தினார். பிறகு நரேந்திரரை அழைத்துத் தமக்கருகே அமர்த்தி கொண்டு குழந்தாய் உன் நோக்கந்தான் என்ன ? என வினவினார்.

நரேந்திரர் தயக்கமோ, தடுமாற்றமோ இல்லாமல் எந்த வகையிலேனும் இறையனுபூதி பெற வேண்டும் என்பதே என் நோக்கம். இந்த வகையில் நல்ல தெளிவு பெற்று தொடர்ந்து செல்ல வேண்டும் என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 2:39 am

என்னுடைய வழிகாட்டுதலை நீ எற்க விரும்பினால் உனக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீ பெருங் கடலில் முக்குளித்து அயர்வின்றி நீந்தி கரையைத் தொட எண்ணுகிறாய். பிரம்ம சமாஜமோ சிறிய குட்டை போன்றதுதான். பிரம்ம சமாஜத்தை விட்டு வெளியேறு. தட்சிணேசுவரத்தில் இருக்கும் பகவான் இராமகிருஷ்ணரைச் சரணடை ஒளிமயமான எதிர்காலத்துக்கு உன்னை அவர் அழைத்துச் செல்வார் என்று ராமச்சந்திர தத்தர் யோசனை சொன்னார்.

பகவான் இராமகிருஷ்ணருடன் தொடர்புகொள்ள வேண்டிய ஒரு வாய்ப்பு நரேந்திரருக்கு வலிய வந்து அமைந்தது.

சில நாட்களுக்குப் பிறகு சுரேந்திர நாத மித்ரா என்ற ஒரு பக்தரின் இல்லத்தில் ஆன்மீக விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் பகவான் இராமகிருஷ்ணர் பங்கு ஆற்றுகிறார் என்பது சிறப்பான அம்சமாக இருந்தது. விழாவில் கலந்துகொள்ள வருமாறு நரேந்திரருக்கும் அழைப்பு வந்திருந்தது.

நரேந்திரர் இனிமையாகப் பாடக் கூடியவர். அதிலும் ஆன்மீகம் தொடர்புடைய பாடல்களை அற்புதமாகப் பாடுவார். அதனால் விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இறைவணக்கம் பாடும் பொறுப்பு நரேந்திரரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மெய்யுருக இறைவணக்கப் பாடல்களை இனிமையாக பாடிய நரேந்திரரை பகவான் இராமகிருஷ்ணர் கூர்ந்து கவனித்தார். அவரைப் பற்றிய விபரங்களை அங்கிருந்தவர்களிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டார்.

பாடி முடித்ததும் ஸ்ரீ இராமகிருஷ்ணர் நரேந்திரரைத் தம்மருகே அழைத்து அமரச் செய்து அவருடைய விழிகளைக் கூர்ந்து நோக்கினார். அவருடைய சிரசை வருடிக் கொடுத்தவாறு, குழந்தாய் நீ இறைவனுக்கு மிகவும் அருகாமையிலிருக்கிறாய் ஒரு தடவை தட்சிணேசுவரம் வந்து செல்லேன் என அன்பழைப்பு விடுத்தார்.

நரேந்திரர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக 1881-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அது நிகழந்தது. சுரேந்திரநாத மித்ரா, நரேந்திரரை தம்முடன் அழைத்துக் கொண்டு தட்சிணேசுவரம் சென்றிருந்தார். பகவான் இராமகிருஷ்ணர் தரையில் ஒரு பாயில் அமர்ந்து கண்களை மூடியவாறு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

சுரேந்திரநாத மித்ரா, நரேந்திரரை ஸ்ரீஇராமகிருஷ்ணரின் முன்னிலையில் விட்டு விட்டு ஏதோ வேலையாக வெளியே சென்றுவிட்டார்.

கண்விழித்துப் பார்த்த ஸ்ரீ இராமகிருஷ்ணர் வியப்பு தோன்ற பார்த்தார். தம்மருகே அமருமாறு கண்ஜாடையால் பணித்தார். நரேந்திரர் அமர்ந்ததும் மெல்லிய குரலில் ஏதாவது பாடு என்றார். நரேந்திரர் சில பக்திப் பாடல்களைப் பாடினார். அவர் பாடுவதை மெய்மறந்து கண்களை மூடியவாறு ரசித்துக் கொண்டிருந்த பரமஹம்சர் திடீரென எழுந்து, என் பின்னால் வா என்று கூறிவட்டு நடந்தார் பரமஹம்சர். வராந்தாவில் உள்ள ஒர் அறைக்குள் பரமஹம்சர் பிரேவசித்தார். நரேந்திரர் அவரைப் பின் தொடர்ந்து உள்ளே சென்றார்.

பகவான் இராமகிருஷ்ணர் அறைக்கதவை மூடிக் தாளிட்டார்.

அறைக்குள் என்ன நடந்தது ?

நரேந்திரர் கூறுவதை அவருடைய வாய்மொழியாகவே கேட்போமா ்-

குருதேவர் என் கையைப் பிடித்து அறைக்குள் அழைத்து வந்தார். பிறகு கதவை மூடிவிட்டார். அவர் எனக்கு ஏதோ உபதேசம் செய்யப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால் சொன்னதும், செய்ததும் கற்பனைக்கு எட்டாதது. நான் சற்றும் எதிர்பாரவகையில் அவர் என் கைகளை பிடித்துக் கொண்டு அளவற்ற மகிழ்ச்சியால் ஆனந்த கண்ணீர் வடித்தார். பின்னர் அளவற்ற பரிவுடன் முன்பே என்னை நன்றாக அறிந்தவர் போல பேசினார். இவ்வளவு காலம் கழித்து வந்திருக்கிறாயே, இது நியாயமா ? நான் உனக்காக் காத்திருக்கிறேன் என்பதை ஒரு முறையாவது நினைத்துப் பார்த்தாயா ? உலக ஆசை பிடித்த மக்களின் பேச்சைக் கேட்டுக் கேட்டு என் காதுகள் எரிந்து போய்விட்டன. என் மனத்தில் பொங்கும் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய ஒருவரிடம் சொல்ல நான் எவ்வளவு துடித்துக் கொண்டிருக்கிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 2:39 am

இப்படியே தேம்பித் தேம்பி அழுதபடி அவர் பேசிக் கொண்டிருந்தார். அடுத்த நிமிடம் இரண்டு கைகளையும் கூப்பி தெய்வத்தை வணங்குவது போல வணங்கியபடி என்னைப் பாரத்து, பிரபோ, நாராயணனின் அவதாரமாகிய நர முனிவரே தாங்கள் என்பதை நான் அறிவேன். மனித குலத்தின் துயர் நீக்கவே இப்பொழுது அவதாரமெடுத்து உள்ளீர் என்பதையும் நான் அறிவேன் என்றார்.

அவருடைய பேச்சுக்களையும், நடத்தையையும் கண்டு ஆச்சரியம் அடைந்த நான் அவரைப் பைத்தியம் என்றுதான் எண்ணினேன். அப்படியில்லாவிடில் விசுவநாத தத்தரின் மகனாகிய என்னைப் பார்த்து இப்படியெல்லாம் பேசுவாரா என்றும் எண்ணினேன். இருப்பினும் நான் பேசாமல் மௌனமாக இருந்தேன். அந்த அதிசயமான பைத்தியக்கார மனிதர் விருப்பம் போல பேசிக் கொண்டேயிருந்தார். அடுத்த நிமிடம் என்னை காத்திருக்க சொல்லிவிட்டு வேறு அறைக்குள் நுழைந்தார். அங்கிருந்து வெண்ணெய், கற்கண்டு, இனிப்பு முதலியன கொண்டு வந்த தன் கையால் என் வாயில் ஊட்டத் தொடங்கினார். பிறகு என் கைகளை பிடித்துக் கொண்டு, கூடிய விரைவில் நீ மட்டும் தனியாக என்னிடம் வருவதாக சத்தியம் செய் என்று கூறினார். அவருடைய உண்மை வேண்டுகோளை மறுக்க முடியாமல் சரி வருகிறேன் என்று கூறினேன். பின்பு இருவரும் அறைக்கு திரும்பினோம். நான் அவரை விட்டுச் சற்று விலகி என் நண்பர்களுடன் அமர்ந்து கொண்டேன்.

அவர் மற்றவர்களிடம் பேசும் பேச்சையும், நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்கலானேன். பைத்தியத்தின் சிறிய சாயல் கூட அவரிடம் தென்படவில்லை. அவருடைய ஆன்மீக பேச்சிலிருந்தும் ஆனந்தப் பரவச நிலையிலிருந்தும் அவர் உண்மையான துறவி என்பதையும், இறைவனுக்கா உலக இன்பங்கள் அனைத்தையும் துறந்தவர் என்பதையும் அவருடைய பேச்சுக்கும், நடத்தைக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதையும் புரிந்து கொண்டான். கடவுளைக் காண முடியும், கடவுளுடன் பேசவும் முடியும் நான் உன்னைப் பார்த்து உன்னோடு பேசுவதுபோல அவரைப் பார்க்கவும், அவரோடு பேசவும் முடியும், ஆனால் யார் கடவுளைப் பாரக்கவும், பேசவும் விரும்பிகிறார்கள் ? மனிதர்கள் தங்கள் மனைவி அல்லது குழந்தைகள் இறந்து விட்டால் குடம் குடமாகக் கண்ணீர் விட்டு அழுகிறார்கள். பணத்திற்காகவும், மனைவி, மக்களுக்காகவும் அழுது புலம்புகின்றனர். ஆனால் யாராவது இறையனுபூதி பெற முடியவில்லையே என்று கண்ணீர் சிந்துகிறார்களா ? ஒருவன் இறைவனைக் காண வேண்டும் என்று உண்மையாக ஏங்கி இறைவனை அழைத்தால் அவர் தன்னை அவருக்குக் காட்டிக் கொள்கிறார் என ஸ்ரீ இராமகிருஷ்ணர் கூறினார்.

அவருடைய இந்தப் பேச்சுகளை கேட்டதும் என்னால் அவரை நம்பாமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் அது சாதாரணமான சமயச் சொற்பொழிவாளரின் கற்பனையாகவோ அன்றிக் கவிதையாகவோ அல்லது சொல் அலங்காரமாகவோ இருக்கவில்லை. அவருடைய சொற்கள் அவருடைய ஆழத்தில் இருந்து பாய்ந்து வந்தன. இறைவனை அடைவதற்காக அனைத்தையும் துறந்து இறைவனை முழு மனத்துடன் அழைத்தால் அந்த இறையனுபவம் அவருக்குக் கிடைத்திருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

அவருடைய இந்தப் பேச்சுடன் என்னிடம் சிறது நேரத்துக்கு முன் நடந்து கொண்ட நடத்தையை இணைத்துப் பார்க்கும் பொழுது அபக் ரோம்பி (Aநெசஉ சுடிஅbநைடி) போன்ற ஆங்கில தத்துவவாதிகள் கூறியுள்ள ஒன்றையே நினைத்துக் கொண்டிருக்கம் பித்தர்களின் ஞாபகந்தான் வந்தது. ஸ்ரீ இராமகிருஷ்ணர் இவ்வகையைச் சார்ந்தவர் என்ற திடமான முடிவுக்கு வந்தேன். அந்த முடிவுக்கு நான் வந்தாலும் அவருடைய அதிசயிக்கத் தக்க துறவு மனப்பான்மையை என்னால் மறக்க முடியவில்லை, அவர் பைத்தியமாக இருக்கலாம். ஆனால் அபூர்வமானவர்களே அவரைப் போல இறைவனுக்காக உலகத்தை துறக்க முடியும், அவர் பைத்தியந்தான். ஆனால் எவ்வளவு தூய்மை வாய்ந்தவர் எப்படிப்பட்ட துறவு. அதற்காக மட்டுமே மனித சமுதாயம் முழுவதும் அவரை மதித்துப் போற்றி வணங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன் இவ்வாறு நினைத்துக் கொண்டே அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கி அவரிடம் விடை பெற்றுக் கொண்டு கல்கத்தா திரும்பினேன்.

சுவாமி சாரணந்தர் எழுதிய ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வரலாற்று நூலில் மேலே எடுத்தாண்டிருக்கும் தகவல்கள் உள்ளன.

தொடர்ந்திருந்த கூட்டுறவு காரணமாக பகுத்தறிவு வாதியெனத் தம்மைப் பற்றிக் கூறிக் கொண்ட நரேந்திரர் சில ஆண்டுகளில் படிப்படியாக பகவான் இராமகிருஷ்ணரிடம் சரணாகதியடைந்தார். ஒரு பைத்தியம் போன்றவர் என குருநாதரை வர்ணித்த நரேந்திரர், அ,வரை தெய்வத் திரு அவராரங்களிலேயே தலைசிறந்தவர் எனப் போற்றிப் புகழத் தொடங்கினார். தம்மைக் குருதாதரின் தலைசிறந்த சீடராக மாற்றியமைத்துக் கொண்டார்.

எந்த அளவுக்கு பகவான் இராமகிருஷ்ணரின் மீது நரேந்திரருக்கு பக்தியும், பாதிப்பும் இருந்தது என்பதற்கு ஒரு நிகழ்ச்சியைச் சான்றாகக் குறிப்பிடலாம்.

நரேந்திரர் பிற்காலத்தில் அமெரிக்காவில் நியூயார்க்கில் ஆன்மீகத் தத்துவ மேடையில் பேசி அங்கே குழுமியிருந்த உலக ஆன்மீகப் பெரியோர்களைப் பிரமிப்பில் ஆழத்திய சமயம் விவேகானந்தர் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை நோக்குவோம்.

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஸ்ரீ இராமகிருஷ்ணரைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது அவருடைய ஆன்மீகப் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறார்கள். என்னை நீங்கள் பாராட்டுகிறீர்கள், புகழ்கிறீர்கள் என்றால் அந்தப் பெருமை இதோ இங்கே நிற்கும் என்னை எந்த வகையிலும் சார்ந்ததாதகக் கருதக் கூடாது. நான் பேசியவற்றில் ஏதாவது உண்மையிருக்குமாயின், ஏதாவது போற்றத்தக்க ஆன்மீக கருத்து இருக்குமாயின் அது என்டைய குருதேவரைச் சார்ந்ததாகும். பேச்சில் ஏதாவது பிழையிருக்கமாயின் அது முற்றிலும் என்னைச் சார்ந்தது ஆகும்.

நரேந்திரர் பகவான் இராமகிருஷ்ணரை மிகப் பெரிய மனப் போராட்டத்துக்குப் பினனர்தான் குருவாக வரித்துக் கொண்டார் என்பதுதான் குறிப்பிடத்தக்க அம்சமாகும். நரேந்திரர் குருதேவர் மீது குருட்டு பக்தி கொண்டவரல்ல. குருநாதரின் செயல், சிந்தனை, பேச்சு ஆகியவற்றுள் நரேந்திரருக்கு ஏதாவது ஐயம் ஏற்பட்டால் தமது திருப்திக்கேற்ற விளக்கம் கிடைக்கும் வரை குருதேவருடன் ஒரு போராட்டமே நடத்துவது நரேந்திரரின் வழக்கம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 2:43 am

துறவியான பெருந்தகை

நரேந்திரர் அதுநாள் வரை பகவான் இராமகிருஷ்ணரின் சீடர் என்ற அளவுக்குத்தான் தம்மைத் தயார் செய்து வைத்திருந்தார். இராமகிருஷ்ணரை முழுமையாக அவர் ஏற்றுக் கொண்டிருந்தாரா என்பது கூட ஐயப்பாடே. இராமகிருஷ்ணரின் சில நோக்கங்களில் நரேந்திரருக்கு பிடிப்பு ஏற்படவில்லை. பகவான் இராமகிருஷ்ணர் தமது வழிபாட்டு முறைகளில் விக்கிரக ஆராதனைக்கும் இடமளித்திருந்தார். விக்கிரகங்களைக் கடவுள் என நம்ப நரேந்திரரின் பகுத்தறிவு மனப்பான்மை இடந்தரவில்லை. விக்கிரகங்கள் எல்லாம் கடவுள்களே என்பது இராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்தும் அல்ல. இறைவனைப் பற்றிய எண்ணத்தை ஒருமுகப்படுத்துவதற்கான ஒரு சாதனமாகவே விக்கிரகம் திகழ்கிறது என்று பரமஹம்சர் கூறவதை நரேந்திரரால் சற்றும் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. கடவுளை யாரும் கண்டுணராதபோது - கடவுளின் தோற்றம் எப்படியிருக்கும் என்று தெரியாத நிலையில் ஏதோ ஒரு உருவத்தை கட்டிக் காண்பித்து, இதைக் கடவுளாக நினைத்து வழிபடு என்று எதற்காக் கூறவேண்டும் என்பது நரேந்திரரின் வாதம்.

வெகு விரைவிலேயே புரட்சிகரமான மனமாற்றம் பெற்று பகவான் இராமகிருஷ்ணரின் எண்ணங்களோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலை நரேந்திரருக்கு ஏற்பட்டது.

நரேந்திரரின் வாழக்கையில் 1884-ஆம் ஆண்டில் பலவிதமான சோதனைகள் ஏற்பட்டன. அவருடைய தந்தையார் விசுவநாத தத்தர் திடீரென மரணமடைந்தார். அப்போது தான் நரேந்திரர் பி.ஏ.தேர்வு எழுதியிருந்தார்.

விசுவநாத தத்தர் நன்றாகச் சம்பாதித்தார். ஆனால் அவருக்கே உரித்தான கருணை உள்ளம் - தாராள மனப்பான்மை காரணமாக ஏழை எளிய மக்களுக்கு பணத்தை வாரி வழங்கினார். அதனால் அவர் மறைவெய்திய போது பொருளாதரார நிலையில் குடும்பம் மிகத் தாழ்ந்த நிலைக்கு வந்துவிட்டது. கடன் சுமை அதிகமாக இருந்தது. வீட்டுக்குத் தலைமகனான நரேந்திரருக்கு தாங்க இயலாத குடும்பச் சுமையைத் தாங்கியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

குடும்பத்தில் சம்பாதிக்கும் நிலையில் இருந்தவர் அவர் ஒருவர் மட்டுமே. ஐந்து அல்லது ஆறு பேர் அடங்கிய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேலை தேடி அலைந்தார். ஆனால் வேலை கிடைப்பதாக இல்லை.

நரேந்திரரின் குடும்பம் வளமாக இருந்த காலத்தில் அவருடன் கூட்டுறவு வைத்திருந்த நண்பர்கள் பலர் ஒதுங்கி சென்றுவிட்டனர். தீய பழக்க வழக்கமுடைய சில நண்பர்கள் மட்டும் எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை ஆதாயம் என அவரோடு சேர்ந்து திரிந்தனர். குடிப்பழக்கம், பெண் பித்து போன்ற மோசமான பழக்க வழக்கங்களின் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்த தீய நண்பர்கள் நரேந்திரரைத் தங்கள் வழிக்கு வலிந்திழுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட துயரநிகழச்சிகள் காரணமாக மனங் குழம்பிக் கிடந்த நரேந்திரர் குருதேவரைச் சந்திப்பதையே தவிர்த்திருந்தார்.

ஸ்ரீ இராமகிருஷ்ணரைத் தரிசிக்க செல்லும் சிலர் நரேந்திரர் தொடர்பான செய்திகளை மிகைப்படுத்தி குருதேவரிடம் கூறினார். அந்த வதந்திகளுக்கு குருதேவர் எந்த முக்கியத்துவமும் தரவில்லை.

நரேந்திரன் எப்படிப்பட்டவன் என்று எனக்குத் தெரியும். அவன் சேற்றில் இறங்கமாட்டன். சூழ்நிலை காரணமாக சேறு அவன் மீது தெறித்திருந்தால் அது அவன் குற்றமாக இருக்காது. அந்தக் குறையை எளிதாகக் கழுவித் துடைத்தெறிந்துவிட முடியும் என்று பதிலளித்து புகார் கூறுவோர் வாயை அடைத்து விடுவார்.

ஒரு தடவை நரேந்திரர் நாள் முழுவதும் வேலை தேடி அலைந்தார். காலையிலிருந்து ஒரு குவளை தண்ணீர் கூட அருந்தவில்லை. இரவில் வீடு திரும்பியபோது கடுமையாக மழை பொழிந்தது. மழையில் நனைந்தவாறே வீடு நோக்கி நடை போட்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 2:43 am

அப்போதைய நிலையை நரேந்திரரின் வாய் மொழியாகவே கேட்போம்

சோர்வு எல்லை மீறிப் போனதால் என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க இயலவில்லை. அருகே இருந்த ஒரு வீட்டு வாசலில் அப்படியே ஒரு மரக்கட்டை போலச் சாய்ந்து விட்டேன். சிறிது நேரம் உணர்வு இருந்ததா இல்லையா என்று கூட நிச்சயமாகச் சொல்ல இயலாது ஆனால் எண்ணங்களும் பல வண்ணமுடைய சித்திரங்களும் ஒன்றன் பின் ஒன்றாக என் மனத்தில் தோன்றி மறைந்தது மட்டும் நினைவிலிருக்கிறது. அவற்றை விரட்டியடிக்கவோ அன்றி ஏதேனும் ஒரு எண்ணத்தில் மனத்தை ஆழந்து செலுத்தவோ இயலாத பலவீன நிலையில் நான் இருந்தேன் திடீரென ஒர் உணர்ச்சி எதோ ஒரு தெய்வீக சக்தி என் மனத்திலிருந்து ஒன்றன் பின் ஒன்றாகப் பல உறைகளைக் கழற்றி எறிவது போலத் தோன்றியது. கருணாமூரித்தியான இறைவனின் படைப்பில் ஏன் துன்பங்கள் இருக்கின்றன ? இறைவனின் கண்டிப்பான நீதியும், அளப்பறிய கருணையும் எப்படி இணைந்து செல்ல முடியும் ? இப்படி என் அறிவைக் குழுப்பி மனத்தை அலைபாய என் இதயத்தின் அடித்தளத்தில் கண்டேன் நான் மகிழச்சிக் கடலில் மூழ்கினேன் வீட்டிற்கு மறுபடியும் புறப்பட்டுச் சென்றபோது உடலில் சோர்வு சிறிதும் இருக்கவில்லை என் மனம் அளப்பரிய ஆற்றலும் அமைதியும் பெற்றிருந்தது. அப்பொழுது அதிகாலை நேரம்.

இவ்வாறு தாம் துறவு கொள்வதற்கு அடிப்படை அமைத்துத் தந்த அந்த நிகழ்ச்சியைப் பற்றி பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் விளம்பியிருக்கிறார்.

இந்த அனுபவத்திற்குப் பிறகு நரேந்திரர் உலகப்பற்றை அறுத்துவிட்டு துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுவது என்ற தீர்மானத்துக்கு வந்தார்.

குருதேவரைச் சந்தித்து தம்முடைய துறவு நோக்கத்தைச் சொன்னபோது குருதேவர் கொஞ்சங்கூட ஆச்சரியப்பட்டதாகத் தெரியவில்லை.

அம்பிகையின் பணியை நிறைவேற்றுவதற்காகவே இவ்வுலகத்திற்கு வந்திருக்கிறாய் என்பதைத் தெரிந்து கொள் உன்னால் சாமானியர்களைப் போல லௌகீக வாழ்க்கை வாழ முடியாது என்று குருதேவர் நரேந்திரின் கைகளை அன்போடு பற்றியவாறு சொன்னார் பிறகு நான் சொல்வதை மனத்தில் வைத்துக் கொள் நான் உயிருடன் இருக்கம் வரை உன் குடும்பத்துடனேயே இரு என்றார்.

நரேந்திரரின் குடும்பப் பிச்சினையில் தொடர்ந்து சிக்கல் நிடித்துக் கொண்டோயிருந்தது. நிரந்தரமான வருமானத்துக்கு எந்த வழி வகைகளும் ஏற்படவில்லை. குடும்பக் கஷ்டத்தைச் சமாளிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதும் குருதேவரின் உதவியை நாடுவது என்று தீர்மானித்தார்.

கஷ்டங்கள் அகலவேண்டும் என்று தம்மை நாடி வருபவர்களுக்காக குருதேவர் தாம் வழிபடும் தெய்வம்மான அகிலாண்டநாயகியான காளிமாதவிடம் பிரார்த்தனை செய்வது வழக்கம். குருதேவரின் பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து அகிலாண்டேஸ்வரி அருள்புரிந்து மக்களின் குறைகளை களைவதாகவும் மக்களிடம் ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதை நரேந்திரர் அறிவார். தமது கஷ்டங்கள் தீர தமக்காக அகிலாண்ட நாயகியிடம் பிரார்த்தனை செய்யுமாறு நரேந்திரர் குருதேவரை வேண்டினார்.

அவருடைய கோரிக்கையை குருதேவர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். சாமானியா மக்களுக்காக அகிலாண்டநாயகியிடம் நான் பிரார்த்தனை செய்து தேவியின் அருளைப் பெற்றுத் தருவது வேறு விஷயம் நீ தெய்வ அருளைப் பெற்ற ஒரு துறவி நீ நேரடியாக அகிலாண்டநாயகியிடம் பிரார்த்தனை செய்தால் தான் தேவியின் அருள் தடையின்றி உனக்கு கிடைக்கும் என்று குருதேவர் ஒதுங்கி கொண்டார்.

வழக்கமான வைராக்கியம் நரேந்திரரின் மனதைக் குழப்பியது விக்கிர ஆராதனை செய்தாக வேண்டிய கட்டாயநிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

நரேந்திரரின் தயக்கத்துக்கான காரணம் குருதேவருக்கு தெளிவாகவே விளங்கியது சற்று கண்டிபான குரலில் அவர் நரேந்திரரை நோக்கி இன்று செவ்வாய்கிழமை அன்னைக்கு விருப்பமான நாள் இன்று இரவு காளி மாதாவின் கோயிலுக்குச் சென்று அன்னையின் முன் வீழ்ந்து பணிந்து உனக்கு விருப்பமானவற்றைக் கேள் நீ கேட்கும் வரத்தை அவள் நிச்சயம் தருவாள் என்னுடைய அன்பு தாய் பிரம்ம சக்தி மேருணர்வே வடிவெடுத்தவள். அவளால் முடியாத காரியம் ஒன்று உண்டா ? என்று கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 2:44 am

இரவு ஒன்பது மணிக்கு குருதேவரின் கட்டளையைத் தட்டமுடியாமல் காளிகோயிலை நோக்கி நடந்தார் மனம் தடுமாறியது கால்கள் தயக்கம் காட்டின.

இனி நரேந்திரர் கூறுவதைக் காது கொடுத்து கேட்போமா .. .. ..

கோயிலுக்குள் நுழைந்தேன் அங்கே அன்னை காளி உண்மையின் சின்னமாக அழகும், அன்பும் வற்றாது பெருக்கெடுத்தோடும் தெய்வீகத்துடன் இருப்பதைக் கண்டேன் பொங்கிப் பாய்ந்த பக்தியில் சிக்கி பேரானந்தத்தை அனுபவித்தேன் அன்னையின் திருவடிவில் மறுபடியும் மறுபடியும் வணங்கி அவளிடம் தாயே எனக்கு விவேகத்தைக் கொடு, ஞானத்தையும், வைராக்கியத்தையும் கொடு, உன்னை எப்பொழுதும் இடைவிடாது பார்த்துக் கொண்டே இருக்கும் வரத்தைக் கொடு என்று பிரார்த்தனை செய்தேன். விவரிக்க இயலாத அமைதி என் மனத்தில் நிலைத்தது .. .. ..

என் நோக்கத்துக்காக காளி தேவியைப் பிரார்த்தனை செய்ய நரேந்திர் சென்றாரோ, அதை அடியோடு மறந்துவிட்டார், தமது சொந்தக் கஷ்டங்கள் அகன்று வாழ்வில் சுபிட்சம் நிலவ வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்யவில்லை.

திரும்பி வந்த நரேந்திரரை நோக்கிக் குருதேவர், உன் கஷ்டங்கள் நீங்க தேவியிடம் வரம் கேட்டாயா ? என வினவினார்.

நரேந்திரர் நடந்ததைச் சொன்னார்.

மறுபடியும் காளிமாதவைச் சந்தித்து, உன் சொந்த கஷ்டங்களும், நஷ்டங்களும் அகல வேண்டும் எனப் பிரார்த்தனை செய் எனக் கூறி குருதேவர் மீண்டும் காளி கோயிலுக்கே அனுப்பினார். நரேந்திரரோ இந்தத் தடவையும் தன் உலகாயத வாழ்க்கை வளம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்யாமலே திரும்பிவிட்டார். மூன்றாவது முறையும் குருதேவர் நரேந்திரரை காளி கோயிலுக்கு அனுப்பினார். பழைய கதைதான்.

நரேந்திரர் உலகில் சுகபோக வாழ்கையில் ஆழ்ந்து வீண் காலம் கழிப்பதற்காகப் பிறக்கவில்லை என்ற உண்மையை அவர் மனத்தில் படிய வைப்பதுதான் குருதேவரின் நோக்கம். குருதேவர் வெற்றி பெற்று விட்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 2:48 am

நரேந்திரர் விவேகானந்தர் ஆனார்

பகவான் இராமகிருஷ்ணரின் இறுதிக் காலத்தில் அவர் அமரத்துவம் அடையும் வரை நரேந்திரர் அவர் அருகிலேயே இருந்தார். குருதேவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தார். அடிக்கடி அவருக்கு நினைவு தவறிவிடும். குருதேவர் மண்ணுலகைப் துறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு சிறிது நேரம் நினைவு திரும்பியது அப்போது அவர் நரேந்திரரைத் தம்மருகே அழைத்தார். சூழ்ந்திருந்த சீடர்களையும் நெருங்கி வரச் செய்தார்.

நரேந்திரரை நோக்கி, நரேன் .. .. நான் வைத்திருந்ததையெல்லாம் இன்று உனக்கு அளித்து நான் எதுவுமில்லாத பக்கிரியாகி விட்டேன். இன்று உனக்கு அளிக்கப்பட்ட சக்தியைக் கொண்டு மகத்தான காரியங்களை நீ இந்த உலகத்தில் சாதிக்கப் போகிறாய். அதன் பின்தான் எங்கிருந்து நீ வந்தாயோ அங்கு திரும்புவாய் என்று உயர்ச்சியுடன் கூறினார். பிறகு தம்மைச் சூழ்ந்திருந்த சீடர்களை நோக்கி, இனி நரேன்தான் உங்களுக்கு வழி காண்பிப்பான். அவனைப் பின்பற்றிச் செல்லுங்கள் என்று உபதேசித்தார்.

1889-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ஆம் நாள் இராமகிருஷ்ணர் மண்ணுலகை நீத்து அமரத்துவம் எய்தினார்.

குருதேவர் மறைவுக்குப் பிறகு அவரைச் சூழ்ந்திருந்த சீடர்களில் பெரும் பகுதியினர் சிதறிச் சென்றுவிட்டனர். குருதேவரின் புனித அஸ்தியை வைத்து வழிபாடு நடத்த ஒரு ஆலயம் போன்ற அமைப்பினை உருவாக்க நரேந்திரர் விரும்பினார். இதற்கென கங்கை நதிக்கரையில் ஒரு சிறிய இடத்தை வாங்கவும் திட்டமிட்டார். ஆனால் அவருடைய முயற்சிகளுக்குத் துணை நிற்க சீடர்களைத் தேட வேண்டியிருந்தது. நரேந்திரர் பெரிதும் ஏமாற்ற அடைந்தார். தற்காலிகமாக தம்முடைய முயற்சியை நிறுத்திவிட்டு பகவான் குருதேவரின் ஆன்மீகச் சிந்தனைகளை உலகமெல்லாம் பரவச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் மேலை நாடுகளுக்குப் பயணமானார்.

தம்முடைய அந்த இலட்சிய நோக்கத்தில் வெற்றி கொடி நாட்டிவிட்டுத் திரும்பிய நரேந்திரர் குருநாதருக்காக ஒரு வழிபாட்டுத் தலம் அமைக்கும் முயற்சியினைத் தொடங்கினார்.

பாரா நகரில் இருந்த ஒரு பாழடைந்த வீடு அவரின் முயற்சியின் தொடக்க இடமாக அமைந்தது. குருநாதரின் சீடர்களில் பழைய ஆர்வமும், உற்சாகமும் கொண்டிருந்த சில இளைஞர்களைத் தேடிப் பிடித்து ஒன்று சேர்த்தார்.

அப்போது நரேந்திரர் மேற்கொண்ட அந்த முயற்சியின் தொடக்கந்தான் இன்று பிரம்மாண்டமான ஆலமரமாக பாரத்திலும் உலக நாடுகளிலும் செழித்துப் பரவியிருக்கும் ஸ்ரீ இராமகிருஷ்ண மடமாகும்.

ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தை உருவாக்குவதற்கும் கட்டிக் காப்பதற்கும் நரேந்திரர் பெரும்பாடு பட வேண்டியிருந்தது. சீடர்களாக அவரைப் பின்பற்றிய இளைஞர்களின் குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பைக் காட்டினர். எல்லாப் பிரச்சினைகளையும் சமாளித்து ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தை நரேந்திரர் நிறுவினார். தற்காலத்தில் இராகிருஷ்ண படம் ஆன்மீகச் சேவைகளைச் செய்வதுடன், சமூகப் பணிகளிலும், மக்களுக்கான கஷ்ட நிவாரணப் பணிகளிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நரேந்திரர் மடத்தைத் தொடங்கிய காலத்தில் முற்றிலும் ஆன்மீகப் பணிகளையே மேற்கொண்டு சேவையாற்றியது. நரேந்திரரைப் பின்பற்றிய இளைஞர்கள் முழு மூச்சாக தங்களை ஆன்மீகச் சேவைக்கே அர்ப்பணித்துக் கொண்டு மக்களுக்குத் தொண்டாற்றினர்.

பகவான் இராமகிருஷ்ணர் தமது வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் தம்மைப் பின்பற்றிய சீடர்களுக்கு காவி உடைகளை வழங்கி துறவிகளுக்கான தீட்சையை அளித்திருந்தார். நரேந்திரர் தம்மைப் பின்பற்றிய சீடர்களுக்கு சாஸ்டதிரப்படி விரஜா ஹோமம் புரிந்து முறைப்படி சந்நியாச தீட்சை பெறச் செய்து துறவு வாழ்க்கையில் புதிய தகுதியை அளித்தார்.

நரேந்திரர் முழுமையான சந்தியாச வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு தமக்கு பெற்றோர் வைத்த பெயரைக் களைந்துவிட்டு சந்நியாச தர்மப்படி ஒரு பெயரைச் சூட்டிக் கொள்ள வேண்டியது அவசியம் என உணர்ந்தார்.

நரேந்திரர் விவிதி சானந்தரஞ் என்ற பெயரை ஏற்றுக் கொள்வது என்று முதலில் எண்ணினார். தம்மை எந்த வகையிலும் வெளிக் காண்பித்துக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் தம்மைப் பல்வேற பெயர்களால் அழைத்துக் கொண்டார். எனினும் அமெரிக்காவுக்குப் புறப்படுவது என்று தீர்மானித்த பிறகு விவேகானந்தர் என்ற பெயரைத் தமக்காக நிரந்தரமாகச் சூட்டிக் கொண்டார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக