ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 ayyasamy ram

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

About Me
 Ganeshji

Book Required
 Ganeshji

சினிக்கூத்து
 Meeran

கண்மணி
 Meeran

சேரர் கோட்டை
 Meeran

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 T.N.Balasubramanian

FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
 thiru907

சபலம் தந்த சங்கடம்...!
 T.N.Balasubramanian

பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
 T.N.Balasubramanian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 பழ.முத்துராமலிங்கம்

தை நீராடிய ராஜேந்திர சோழன்
 sugumaran

ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*
 ayyasamy ram

ஸ்கெட்ச்: இந்து டாக்கீஸ் விமர்சனம்
 ayyasamy ram

நாதுராம் கைது செய்யப்பட்டது எப்படி? 13 கிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சூடு, சினிமாவை விஞ்சிய காட்சிகள்
 ayyasamy ram

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
 ayyasamy ram

அரண்மனை ரயிலில் பயணிகளும் குறைவு, வருவாயும் குறைவு
 ayyasamy ram

பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
 M.Jagadeesan

ரஜினி, பா.ஜ., கைகோர்க்க வேண்டும்: குருமூர்த்தி
 M.Jagadeesan

தலைமை நீதிபதியின் இல்லத்துக்கு பிரதமரின் முதன்மை செயலர் சென்றது ஏன்? காங்கிரஸ் கேள்வி
 M.Jagadeesan

என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர்
 ayyasamy ram

பிரதமர் மோடியின் ‛கட்டிப்பிடி': காங்., கிண்டல்
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கார்ட்டூன்
 ayyasamy ram

மக்கள் மனங்களில் வாழும் பென்னி குயிக்கின் கல்லறை அகற்றப்படக்கூடாது: இங்கிலாந்து தேவாலய அமைப்பிடம் வைகோ வலியுறுத்தல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சினிமாச் செய்திகள் - தாமு

View previous topic View next topic Go down

விமானம் வாங்க விரும்பும் அஜித்!

Post by தாமு on Sun Apr 24, 2011 7:51 am

விளையாட்டுகள் மீது தீவிர ஆர்வம் கொண்ட அஜித், ஃபார்முலா கார் ரேஸ் மீது கொண்ட காதல் காரணமாக தனது சினிமா கேரியரையே

சிரியஸாக எடுத்துக்கொள்ளாதவர். அப்படிப்பட்டவருக்கு பொம்மை விமானங்களை ஓட்டுவதில் ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக ஜெர்மனியில் இருந்து தருவிக்கப்பட்ட ரிமோட் பொம்மை விமானங்களை ஓட்டி அழகுபார்த்தார்.


அதேபோல சத்தமில்லாமல் கமர்ஷியல் பைலட்டுக்கான பயிற்சி எடுத்த அஜித், கமர்சியல் பைலட்டுகான உரிமத்தையும் வாங்கியிருகிறார். இந்நிலையில் ஹெலிகாப்டர் விமாணம் ஒன்றை சொந்தமாக வாங்கிப் பயன்படுத்த அஜித் முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக இந்தியாவில் உள்ள குளோபல் வெக்ட்ரா என்ற ஹெலிகாப்பட்டர் விமானம் தயாரிக்கும் நிறுவனத்திடம் ஐந்து பேர் பயணிக்கும் ஹெலிகாப்பட்டருக்கான விலை விபரம் கேட்டிருப்பதாகவும் நமக்கு நம்பகமான தகவல் கிடைக்கிறது.

இதற்கிடையில் பில்லா இரண்டில் இந்த விமானத்தை பயன்படுத்தவும் அஜித் உத்தேசித்திருப்பதாக தகவல் கிடைக்கிறது. அடுத்து பில்லா இரண்டா அல்லது வேறு கதையிலும் அஜித் நடிப்பாரா என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது அஜித் அலுவலகத்தில். இயக்குனர் எம்.ராஜா சொன்ன கதை அஜித்துக்குப் பிடித்துப் போனதால், தற்போது வேலாயும் படத்தை இயக்கி வரும் ராஜா அடுத்து அஜித்தை இயக்கும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் அஜித்தின் மன்ற வட்டாரத்தில்.

அஜித்தின் பிறந்தநாளான, மே 1 -ஆ ம் தேதி மங்காத்தா இசை வெளியிட்டில் அஜித் இதை அறிவித்தால் ஆச்சர்யப்பட ஏதுமில்லை என்கிரார்கள்.newyarl
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: சினிமாச் செய்திகள் - தாமு

Post by முரளிராஜா on Sun Apr 24, 2011 12:32 pm

வாங்கட்டும் வாங்கட்டும்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: சினிமாச் செய்திகள் - தாமு

Post by balakarthik on Sun Apr 24, 2011 12:38 pm

தல தும்மினா கூட நியுசுதானா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சினிமாச் செய்திகள் - தாமு

Post by தாமு on Sun Apr 24, 2011 12:56 pm

சிரி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: சினிமாச் செய்திகள் - தாமு

Post by அருண் on Sun Apr 24, 2011 1:05 pm

தமிழ் நடிகர்கள் வரலாற்றில் முதன் முறையாக! புன்னகை
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: சினிமாச் செய்திகள் - தாமு

Post by Manik on Sun Apr 24, 2011 1:09 pm

விமானம் வாங்குறதெல்லாம் செரிதான் ஓட்டத் தெரியுமா அதிர்ச்சி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சினிமாச் செய்திகள் - தாமு

Post by balakarthik on Sun Apr 24, 2011 1:14 pm

@Manik wrote:விமானம் வாங்குறதெல்லாம் செரிதான் ஓட்டத் தெரியுமா அதிர்ச்சி

அவசரதுல போஸ்டர படிச்சா இப்படிதான் கேக்கதோணும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சினிமாச் செய்திகள் - தாமு

Post by தாமு on Sun Apr 24, 2011 1:19 pm

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சேரனின் படம் U தொலைக்காட்சியில்

Post by தாமு on Mon Apr 25, 2011 7:48 am

இயக்குனர் சேரனின் தமிழ் திரை உலகிற்கு ராமன் தேடிய சீதை போன்ற பல வெற்றிப் படங்கலை தந்துள்ளார்.

இவர் படங்களை இயக்குவது மட்டுமல்லாது தானே இந்த படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

தற்போது யு டிவி நிறுவனம் சேரனின் முரண் படத்தின் ஒட்டுமொத்த விநியோக உ‌ரிமையை வாங்கியுள்ளது.

அதேபோல் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்தின் உ‌ரிமையையும் வாங்கியிருக்கிறது.

இரண்டாம் உலகத்தில் தனுஷ், ஆ‌ண்ட்‌ரியா நடித்துள்ளனர். திருமண உறவின் சிக்கல்களை அலசும் படமிது என்பதை படத்தின் ஒருவ‌ரி உணர்த்துகின்றன.

இப்படத்தின் இன்னொரு முக்கிய விடயம் தனுஷ் பாடியிருப்பது.

தனுஷ் பாடுவது ஒன்றும் புதிதில்லை என்றாலும், இந்தப் படத்தில் முதல் முறையாக இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார்.

தற்போது அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

சினி விடுப்பு
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மன அழுத்தத்தில் புத்தகத்தை தேடும் பூனம் பாஜ்வா

Post by தாமு on Mon Apr 25, 2011 7:49 am

கச்சேரி ஆரம்பம், துரோகி போன்ற படங்களில் நடித்த பூனம் பாஜ்வா, ஒரு புத்தக புழுவாம்.

கொஞ்ச நேர இடைவெளி கிடைத்தாலும் புத்தகத்தில் ஆழ்ந்துவிடுவாராம் பூனம்.

சின்ன வயதில் படிக்கிற காலத்திலிருந்தே கதை புத்தகங்களை விரும்பி படிப்பேன். பிளஸ் டூ முடித்த பிறகு நாவல்கள் பக்கம் என் பார்வை திரும்பியது.

என் வயதின் காரணமாகவோ என்னவோ காதல் புத்தகங்கள் என்னை கட்டி இழுத்தது. சினிமாவில் நடிக்க வந்த பிறகும் நாவல் படிக்கிற பழக்கம் என்னை விட்டு போகவில்லை.

அதுவும் சிட்னி ஷெல்டன், ஜெப்ரி ஆர்ச்சர் மாதிரி எழுத்தாளர்களின் நாவல்களை ஒன்று விடாமல் படித்து விடுவேன்.

புத்தகம் படிக்கிற ஆர்வத்தில் புனே சாலை ஓர கடைகளில் தேடி பிடித்து, ‘கிரியேடிவ் விஷுவலை ஷேசன்’ என்ற புத்தகத்தை வாங்கினேன்.

என்னை மிகவும் பாதித்த புத்தகம். சிந்தனையில் தங்கி விட்ட புத்தகம் என்றும் சொல்லலாம். பயணத்தின் போது, புத்தக கடையை பார்த்து விட்டால் போதும், அப்படியே நின்று விடுவேன்.

கடையை அலசி எடுப்பேன். இதனால் வீட்டில் நிறைய புத்தகங்கள் சேர்ந்துவிட்டன. படப்பிடிப்பு நாட்களில் மன அழுத்தம் என்னை இறுக்கி பிடிக்கும்.

அந்த மாதிரி நேரத்தில் சோர்வில் இருந்தும், அழுத்தத்தில் இருந்தும் தப்பிக்க புத்தகங்களை என் கண்களும் நெஞ்சும் காதலிக்கும். இதனால் தேவையில்லாத மனஉழைச்சல் பறந்து போகும் என்று பூனம் பாஜ்வா கூறியுள்ளார்.

சினிவிடுப்பு
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: சினிமாச் செய்திகள் - தாமு

Post by முரளிராஜா on Mon Apr 25, 2011 8:07 am

எங்களுக்கெல்லாம் புத்தகத்த பார்த்தாலே
மன அழுத்தம் வந்துடும். நான் பாட புத்தகத்தை
சொன்னேன் ஜாலி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

உணவக புரட்சியில் அனுஷ்கா

Post by தாமு on Mon Apr 25, 2011 8:34 am

நவநாகரிக பெண்களிடம் சமைக்க தெரியுமா என்று கேட்டால் அந்த கேள்வியையே தரக்குறைவாக நினைக்கிற வழக்கம் பெருகி வருகிறது.
ஆனால் நடிகை அனுஷ்கா பிரமாதமாக சமைப்பாராம். பெங்களுரில் இவரது அம்மா ஒரு உணவகம் வைத்திருக்கிறார்.
தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் இங்கு செல்லும் அனுஷ்கா திடீர் சமையல்காரர் ஆகிவிடுகிறாராம்.
தன் கையால் நான் சைவ சமையல் சமைத்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறாராம்.
இந்த ஒரு காரணத்திற்காகவே அவரது உணவகத்திற்கு கூட்டம் அலை மோதுகிறதாம்.
இந்த உணவகம் புரட்சியை பெங்களுரை தொடர்ந்து சென்னையிலும் அரங்கேற்ற திட்டமிட்டிருக்கிறாராம் அனுஷ்கா.


சினி விடுப்பு
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சினிமாச் செய்திகள் - தாமு

Post by தாமு on Mon Apr 25, 2011 8:39 am

கொலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக திகழும் ஷகீலா புதிய படமொன்றில் போலிச் சாமியார் வேட‌த்தில் நடிக்கிறார்.

சாமி உண்மை, சாமியார் பொய் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து, ஆசாமி என்ற படம் தயாராகி வருகிறது.

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகிய அனைத்தையும் எழுதி பண்ருட்டியை சேர்ந்த ஆண்டாள் ரமேஷ் இயக்குகிறார்.

நடிகை ஷகீலா போலிச் சாமியாராக நடிக்கிறார். ஆசாமி படம் பற்றி அதன் இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் கூறுகையில், கதாநாயகன், கதாநாயகி இல்லாத படம் இது.

மக்கள் கோவில்களில் உள்ள கருவறையில் இருக்கும் சாமியை நம்பாமல், சாமியை வைத்து ஏமாற்றி பிழைக்கும் ஆசாமியை நம்பி ஏமாறுகிறார்கள்.

பலவிதமான துன்பங்களை அடைந்து, இறுதியில் சாமியின் கால்களில் விழுவதுதான் இந்த படத்தின் கதை. போலி சாமியார்களின் முகத்திரையை கிழிக்கும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

படத்தில் ஷகிலாவுடன், சந்தானபாரதி, பாண்டு, அனுமோகன், நெல்லை சிவா ஆகியோரும் போலி சாமியார்களாக நடிக்கிறார்கள், என்றார்.

சொர்ணமுகி படத்தின் இசையமைப்பாளர் ஜெயக்குமார் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். டி.வாசுதேவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஸ்ரீ பாலாஜி தயாரிப்பு சார்பில் புதுவை கே.செந்தாமரை கண்ணன், ஆண்டாள் ரமேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஆசாமி படபிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து புதுச்சேரி, திருக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது.

சினிவிடுப்பு
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மங்காத்தா பட வெளியீடு இல்லையாம், பாடல் வெளியீடாம்.

Post by தாமு on Thu Apr 28, 2011 7:48 am

மே-1ம் திகதி திரையிடப்படும் என ஆரம்பிக்கப்பட்ட அஜீத் நடிக்கும் மங்காத்தா திரைப்படம் இறுதியில் மே-1ல் பாடல் வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது.

அஜீத் பிறந்த நாளான மே 1ம் திகதி மங்காத்தா திரையிடப்படும் என ஆரம்பிக்கப்பட்டது.

அஜீத் ஜோடியாக த்ரிஷா, அர்ஜூன், பிரேம்ஜி அமரன், லட்சுமிராய், அஞ்சலி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தினை க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் மே 1ம் திகதி படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

ஆகையால் படத்தை அத்தேதியில் வெளியிட முடியாவிட்டாலும் பாடல்களை வெளியிடலாம் என்கின்ற முடிவிற்கு வந்துருக்கிறது படக்குழு.

பாடல்கள் காட்சிகளுக்காக வெளிநாடு சென்று வந்த பின் படத்திற்கான மீதி வேலைகளை முடித்துவிட்டு, ஜூன் மாதம் வெளியிடலாம் என்ற முனைப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.

மே 1ம் திகதி மங்காத்தா இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறார்கள் படக்குழுவினர்.newyarl
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வடிவேலுக்கு தி.மு.க., கொடுத்த “சன்மானம்’ எவ்வளவு?

Post by தாமு on Mon May 02, 2011 5:40 am

தி.மு.க., கூட்டணியின், “ஸ்டார்’ பேச்சாளராக தமிழகத்தை வலம்வந்த நடிகர் வடிவேலுவின் பிரசாரம் குறித்த சுவையான தொகுப்பு:
* வடிவேலுவுடன் வேனில் பயணம் செய்த இணை இயக்குனர்கள் இருவரும், எந்தத் தொகுதியில், யாரை பற்றி என்ன பேச வேண்டும் என்று, அந்த ஏரியா கட்சிக்காரர்களிடம் முன்னதாகவே எழுதி வாங்கி விடுவர். இத்துடன், அங்கு அரசு செயல்படுத்திய திட்டங்கள், மேலும் செய்யவேண்டியவைகளையும் குறித்து, வடிவேலுவிடம் படித்து காட்டுவர். அதை, வடிவேலு காதில் வாங்கி, மனசிற்குள் ஒரு முறை பேசிப்பார்ப்பார். தேவையென்றால் வேனுக்குள் மற்றவர்களிடம் பேசி, ஒத்திகையும் பார்த்துக்கொள்வார். எம்.ஜி.ஆர்.,படப் பாடல்களை பேச்சுக்கு இடையே பொருத்தமாக சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து பாடி, பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்தார். ஓரிடத்தில் பேசிவிட்டு, அடுத்த கூட்டத்திற்கு செல்லும் இடைவெளியில், வேனுக்குள் இந்த ஒத்திகை நடந்துள்ளது. இப்படிதான் பத்து நாட்களும் பிரசாரம் நடந்துள்ளது.
* வடிவேலு படங்களில் நடித்த கேரக்டர்களின் பெயர்களான, “வண்டு முருகன், ஸ்நேக் பாபு, அசால்ட் ஆறுமுகம், தீப்பொறி திருமுகம், நாய் சேகர், டெலக்ஸ் பாண்டியன், கைப்புள்ள’ போன்ற பெயர்களை குழந்தைகளும்,பெரியவர்களும் பிரசாரத்தின் போது சொல்லி, வடிவேலுவை அழைத்துள்ளனர். இதனால், உற்சாகமான வடிவேலு, “கண்ணுங்களா… நீங்க இல்லாம நானில்லை. என்னை எப்பவும் நீங்க மறந்துடக்கூடாது’ என்று உருக்கத்தோடு பேசினார்.
* தேர்தல் பிரசார பயணத்தில், சில இடங்களில் ஓட்டல்களிலும், சில இடங்களில், தி.மு.க., பிரமுகர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளார். கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தங்கும் போது, அங்குள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வடிவேலுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொள்ள அதிக ஆர்வம் காட்டினர்.
* கடைசி ஒரு நாள் முழுவதும் ரிஷிவந்தியத்தில் பிரசாரம் செய்ய வேண்டும் என்று விரும்பிய வடிவேலு, முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து அனுமதி கேட்டார். முதல் நாள் திருக்கோவிலூரில் நடந்த பிரசாரத்தில், கல் வீச்சு நடந்து, வேட்பாளர் மண்டை உடைந்ததால், சென்னையிலிருந்து பிரபல தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த, 30 பேர் மறுநாள் அவசர, அவசரமாக ரிஷிவந்தியத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆனாலும், முன் கூட்டியே ரிஷிவந்தியத்தில் நேரம் குறிப்பிட்டு விஜயகாந்த் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கியிருந்ததால், வடிவேலுவுக்கு அங்கு பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் போலீஸ் அதிகாரிகளிடம் கெஞ்சியும்,போராடியும் யாரும் மசியாததால் ரிஷிவந்தியத்தை தவிர, தொகுதியில் உள்ள மற்ற கிராமங்களில் வடிவேலு பிரசாரம் செய்துவிட்டு திரும்பினார்.
* ரிஷிவந்தியத்தில் கடைசி நாள் பிரசாரம் என்பதால், ஜெயலலிதாவையும், விஜயகாந்தையும் காரசாரமாக வடிவேலு பேசுவார் என்று ஆளுங்கட்சியினர் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால், மற்ற நாட்களைவிட அன்று வடிவேலு வேகம் காட்டாமல், அடக்கியே வாசித்தார். அவரது பிரசாரத்தில் ஜெயலலிதா பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தன் பேச்சு, “ஸ்கிரிப்ட்’ இப்படித்தான் இருக்க வேண்டுமென, வடிவேலு சொன்னதால் அதற்கேற்ப உதவியாளர் கள் ஜெ.,வை தவிர்த்து தயாரித்துள்ளனர்.
* ரிஷிவந்தியத்தில் கடைசி நாள் பிரசாரம் முடித்து வடிவேலு சென்னை திரும்பும் நேரத்தில், “பிரசாரம் மூலம் இரண்டுகோடிக்கு மேல மக்களை நேரில் சந்திருப்பேன். எல்லாரையும் சிரிக்க வச்சிருக்கேன்; சிந்திக்க வச்சுருக்கேன். அதோட, “டிவி’ மூலம் தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் என் பேச்சு சென்றடைந்திருக்கும். எப்படியோ, தி.மு.க.,வுக்கு நல்லது நடக்கணும்’என்று சொல்லி பெருமிதப்பட்டுள்ளார் வடிவேலு.
* வடிவேலுவுக்கும், 18 பேர் கொண்ட குழுவினருக்கும், 10 நாட்களுக்கு சாப்பாட்டு செலவு, 1லட்சத்து, 12 ஆயிரம் ரூபாய் ஆகியுள்ளது. இத்துடன் வடிவேலுவுக்கு, அந்தந்த மாவட்ட செயலர்கள் மூலம், “போதும், போதும்’ என்று வடிவேலு மகிழும் வகையில், பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளுடன் தி.மு.க., தலைமை கழகத்தின் மூலம், பெரும் தொகை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. கூட்டிக்கழித்து பார்த்தால், “சன்மானம்’ சில கோடிகளைத் தொடும் என்கிறது தகவலறிந்த வட்டாரம்.


ulavan
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: சினிமாச் செய்திகள் - தாமு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum