ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 SK

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 SK

உணவே உணர்வு !
 SK

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 krishnaamma

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

In need of Antivirus Software
 rtr_18

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by முரளிராஜா on Fri Apr 29, 2011 5:04 pm


தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, ஒற்றுமையின்மை மற்றும் கோஷ்டிப் பூசல் என எனது எண்ணத்துக்கு மாறுபட்டு ரசிகர் மன்றத்தினர் நடந்து கொள்வதால், எனது பிறந்த நாளான மே 1-ம் தேதி முதல் ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன், இது எனது முடிவான அறிவிப்பு, என நடிகர் அஜீத் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அவரது இந்த அறிவிப்பால் அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த வரிசையில் உள்ளவர்களில் முக்கியமானவர் அஜீத். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக மேல்தட்டு ரசிகர்கள் அதிகம்.

ரஜினிக்குப் பிறகு இவர் படங்களுக்குத்தான் பெரிய ஓபனிங் உள்ளது. அடுத்ததாக அவர் தனது 50வது படமான மங்காத்தாவை வெளியிடத் தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் நாளை மறுநாள், மே 1-ம் தேதி அவருக்குப் பிறந்த நாள் வருகிறது. இதனை விமரிசையாகக் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வந்தனர்.

இந்த நிலையில் இன்று அவர் ஒரு அறிக்கையை தனது பிஆர்ஓ விகே சுந்தர் மூலம் அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில், "எனது நீண்ட திரைப் பயணத்துக்கு உதவிய ரசிகர்கள், பொதுமக்கள், ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் நெடுநாட்களாக என்னைச் சிந்திக்க வைத்த ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.

நான் என்றுமே என் ரசிகர்களை என் சுயநலத்துக்காக பயன்படுத்தியதில்லை. எனது விருப்பு வெறுப்புக்கேற்ப அவர்களைப் பயன்டுத்தியதில்லை. என் படங்கள் தரமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றைப் பற்றி விமர்சிக்க ரசிகர்களுக்கும் உரிமை உள்ளது.

என் படத்தை ரசிக்கும் எல்லாருமே என் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இல்லை என்பதையும் நான் அறிவேன்.

இந்தக் காரணத்தாலேயே என் ரசிகர்களிடையே நான் வித்தியாசம் பார்ப்பதில்லை- பார்க்கவும் மாட்டேன்.

கோஷ்டிப் பூசல், ஒற்றுமையின்மை, தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, தன்னிச்சையாக இயங்குவது, சொந்த அரசியல் லாபங்களுக்காக நற்பணி இயக்கத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடப்பது போன்றவை என் எண்ண ஓட்டத்துக்கு உகந்தவை அல்ல.

சமூக நலனில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக அவரவர் குடும்பத்துக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன்.

நலத்திட்டங்கள் செய்ய இயக்கம் எதுவும் தேவையில்லை. நல்ல உள்ளமும் எண்ணமும் இருந்தாலே போதும்.

எனவே வரும் மே 1-ம் தேதி எனது 40வது பிறந்த நாளில் இந்தக் கருத்தையே முடிவாக அறிவிக்கிறேன்.

இன்றுமுதல் எனது தலைமையில் இயங்கிவந்த நற்பணி மன்றங்களைக் கலைக்கிறேன்.

மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகனுக்கு அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்றி ஒன் இந்தியா
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by Guest on Fri Apr 29, 2011 5:21 pm

அப்பாடி தப்பி விட்டது தமிழகம்... புன்னகை

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by அசுரன் on Fri Apr 29, 2011 5:35 pm

மிகச்சிறந்த மனிதரான அஜித் நல்ல முடிவை தான் எடுத்துள்ளார். பாராட்டுக்கள்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by அப்துல் on Fri Apr 29, 2011 9:47 pm

பாராட்டுக்கள் அஜித்
avatar
அப்துல்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 132

View user profile

Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by md.thamim on Sat Apr 30, 2011 2:01 am

கோஷ்டிப் பூசல், ஒற்றுமையின்மை, தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது,
தன்னிச்சையாக இயங்குவது, சொந்த அரசியல் லாபங்களுக்காக நற்பணி இயக்கத்தின்
பெயரைக் கெடுக்கும் வகையில் நடப்பது போன்றவை என் எண்ண ஓட்டத்துக்கு உகந்தவை
அல்ல.

சமூக நலனில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல்,
குறிப்பாக அவரவர் குடும்பத்துக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்க
வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன்.

நலத்திட்டங்கள் செய்ய இயக்கம் எதுவும் தேவையில்லை. நல்ல உள்ளமும் எண்ணமும் இருந்தாலே போதும்.


நல்ல முடிவு
avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by Aathira on Sat Apr 30, 2011 7:31 am

//நலத்திட்டங்கள் செய்ய இயக்கம் எதுவும் தேவையில்லை. நல்ல உள்ளமும் எண்ணமும் இருந்தாலே போதும்.

எனவே வரும் மே 1-ம் தேதி எனது 40வது பிறந்த நாளில் இந்தக் கருத்தையே முடிவாக அறிவிக்கிறேன்.//
எங்க பட்ட சூடோ.... இருந்தாலும் நல்ல முடிவு அஜித். வாழ்த்துக்கள். இது போல இன்னும் பாலையும் தேனையும் வீணாக்கும் ரசிகர்களின் தலைகளும் மனம் திருந்தட்டும். மாற்றட்டும்..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by ந.கார்த்தி on Sat Apr 30, 2011 7:56 am

நடிகர் அஜித் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி பரிசு கொடுத்துள்ளார். தனது ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிவித்துள்ள அஜித், நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும்*** போதும் என்று கூறியுள்ளார். 40வது பிறந்த நாளை முன்னிட்டு அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமராவதி திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயணத்தில் மங்காத்தா 50வது திரைப்படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரைப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த என் சக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்த என் குடும்பத்தார்க்கும் இந்த அறிக்கை மூலம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாட்களாகவே என்னை சிந்திக்க வைத்த ஒரு கருத்தை சொல்ல இன்றே உகந்த நேரம் என கருதி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஆதரவு தரவும் - சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன். என் ரசிகர்களிடையே இக்காரணத்தை கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை - பார்க்கவும் மாட்***டேன். கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டுக்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு உகந்ததாக இல்லை. சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும்*** போதும் என்பதே என் கருத்து.

வருகிற மே 1ம் தேதி என்னுடைய நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை எனது முடிவாக அறிவிக்கிறேன். இன்று முதல் எனது த***லைமையின் ***கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்.

மாறிவரும் காலகட்டத்தில் ***பொதுமக்கள், எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு ***பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கவுரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரவமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும். எனது உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும்.

இவ்வாறு அஜித் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by மகா பிரபு on Sat Apr 30, 2011 10:17 am

avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by ரபீக் on Sat Apr 30, 2011 10:18 am

தல தலதான் சூப்பருங்க சூப்பருங்க
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by Rajhumar on Sat Apr 30, 2011 10:58 am

நல்ல முடிவு தல
avatar
Rajhumar
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by உதயசுதா on Sat Apr 30, 2011 11:17 am

நல்ல முடிவுதான்.இனியாவது இவரது ரசிகர்கள் குடும்பத்தை பார்க்கட்டும்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by Guest on Sat Apr 30, 2011 11:20 am

[quote="உதயசுதா"]நல்ல முடிவுதான்.இனியாவது இவரது ரசிகர்கள் குடும்பத்தை பார்க்கட்டும்


[அட ஜூஸ் தானுங்க ]

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

அஜித் ரசிகர் மன்ற கலைப்பு பின்னணி

Post by Guest on Sat Apr 30, 2011 11:31 am

நடிகர் அஜித் தனது ரசிகர்கள் தன் கட்டளையை
மீறி செயல்பட்டால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன் எச்சரிக்கையுடன்
கூடிய மிரட்டல் விடுத்துள்ளார். அதற்கு பின்னணி என்ன என்ற தகவல்
வெளியாகியுள்ளது.


நடிகர் விஜய் அரசியலுக்கு நிச்சயம் வருவார்
என்ற செய்தி சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் தேர்தலில்
அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்கிற வரை ‌நம்பத்தகுந்த
‌செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய்க்கு நிகராக அஜித்துக்கும் அதிகமான
ரசிகர்கள் உள்ளனர். இவரது படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ஓப்பனிங் வேறு
எந்த நடிகருக்கும் கொடுக்க முடியாது. அந்த அளவுக்கு அஜித் மீது
ரசிகர்கள் வெறியாக இருப்பார்கள்.

தற்போது டைரக்டர் வெங்கட்பிரபு
இயக்கத்தில், அஜீத் மங்காத்தா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மே
1ம்தேதி, அஜீத் பிறந்தநாள் அன்று திரைக்கு வருகிறது. இதனால் அவரது
ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர்.


அதேநேரம் விஜய்யைப் போலவே அஜித்தும் அரசியலுக்கு வர வேண்டும் என்று
அவரது ரசிகர்கள் சமீப காலமாக கூறி வருகிறார்கள். இதனை வலியுறுத்தும்
வகையில் சென்னை பல்லாவரத்தில் கூட்டம் நடத்தப்போவதாக அஜித் ரசிகர்கள்
அறிவித்திருந்தனர். இதுபற்றி நடிகர் அஜித்துக்கு தகவல் கிடைத்ததும்
‌ரொம்பவே கடுப்பாகிப் போனார். தனக்கு அரசியல் பிடிக்காது ;


நடிப்புதான் என் தொழில், கார் ரேஸ் என் பொழுதுபோக்கு... இந்த
இரண்டையும் தவிர எனக்கென்று குடும்பம் இருக்கிறது. அவர்களுடன் செலவிடவே
நேரம் போதவில்லை என்று அடிக்கடி கூறும் அஜித், தனது ரசிகர்கள்
தேவையில்லாமல் அரசியல் ஆசையை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என நினைத்தார்.
அதன் விளைவாகவே பரபரபான எச்சரிக்கை மிரட்டல் அறிக்கை வெளியாகியிருப்பதாக
விவரமறிந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


அப்படி அந்த அறிக்கையில் அஜித் என்னதான் சொல்லியிருக்கிறார். ரசிகர்களை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-


நான் எனது 50வது படமான மங்காத்தா படப்பிடிப்பில் இரவு - பகலாக மும்முரமாக
ஈடுபட்டு வரும் நேரத்தில் ஒரு சில கசப்பான செய்திகள் என் கவனத்துக்கு
கொண்டு வரப்பட்டது. எனது ரசிகர்கள் கண்ணியமானவர்கள், என்றுமே என்
சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற என் கணிப்பிற்கு மாறாக, எனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் எனது தலைமை ரசிகர் நற்பணி இயக்கத்தின் அறிவுரையையும் மீறி சுய விளம்பரத்துக்காக,
ஒரு சிலர் கூட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கு ஆதரவு வேண்டி எனது
இயக்கத்தின் சக உறுப்பினர்களிடையே விஷமப் பிரசாரம் செய்வதாகவும் செய்திகள்
வந்த வண்ணம் உள்ளன.மாறி வரும் காலகட்டத்தில், பொதுமக்கள் எல்லோரையும் உன்னிப்பாக
கவனிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நான் என்றுமே அன்புக்கு
மட்டுமே கட்டுப்பட்டவன். எந்தவிதமான நிர்ப்பந்தத்துக்கும் அடிபணிய
மாட்டேன் என்பதை எனது உண்மையான ரசிகர்கள் அறிவார்கள். இனிமேல் மேற்கண்ட
இத்தகைய செயல்களில் ஈடுபட்டு, சட்டம் - ஒழுங்கு சீர்கெடுத்தல்,
பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் என்று என் கட்டளையை மீறி செயல்பட்டால்,
என் பொறுப்பில் இயங்கும் நற்பணி இயக்கத்தை கலைக்கவும் தயங்கமாட்டேன்.


இவ்வாறு அஜித்
கூறியுள்ளார். அஜித்தின் இந்த ஸ்டேட்மென்ட்டால், அவரது ரசிகர்கள் அப்செட்
ஆகியுள்ளனர். அதேநேரம் ஒருவேளை அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்து விடுவாரோ
என்ற அச்சமும் ரசிகர்களை தொற்றிக் கொண்டுள்ளது.
Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by அருண் on Sat Apr 30, 2011 11:36 am

நல்ல முடிவு!! மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by உமா on Sat Apr 30, 2011 11:40 am


நல்ல முடிவு.........
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by சரவணன் on Sat Apr 30, 2011 11:46 am

அஜீத் ஒரு நல்ல மனிதர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்! வாழ்துக்கள் தல!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by மகா பிரபு on Sat Apr 30, 2011 12:08 pm

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.............
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by ந.கார்த்தி on Sun May 01, 2011 8:26 am

நடிகர் அஜித் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி பரிசு கொடுத்துள்ளார். தனது ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிவித்துள்ள அஜித், நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும் என்று கூறியுள்ளார். 40வது பிறந்த நாளை முன்னிட்டு அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமராவதி திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயணத்தில் மங்காத்தா 50வது திரைப்படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரைப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த என் சக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்த என் குடும்பத்தார்க்கும் இந்த அறிக்கை மூலம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாட்களாகவே என்னை சிந்திக்க வைத்த ஒரு கருத்தை சொல்ல இன்றே உகந்த நேரம் என கருதி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஆதரவு தரவும் – சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன். என் ரசிகர்களிடையே இக்காரணத்தை கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை – பார்க்கவும் மாட்‌டேன். கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டுக்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு உகந்ததாக இல்லை. சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும் என்பதே என் கருத்து.

வருகிற மே 1ம் தேதி என்னுடைய நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை எனது முடிவாக அறிவிக்கிறேன். இன்று முதல் எனது த‌லைமையின் ‌கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்.

மாறிவரும் காலகட்டத்தில் ‌பொதுமக்கள், எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு ‌பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கவுரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரவமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும். எனது உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும்.

இவ்வாறு அஜித் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

அஜித்குமாரின் இந்த அதிரடியான முடிவு அவரது ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனினும் அஜித் சொல்லியிருக்கும் கருத்துக்கள் ஏற்கக்கூடியவை என்பதால் பெரும்பாலானவர்கள் இந்த முடிவை வரவேற்றிருக்கிறார்கள். முன்பொருமுறை தலைமைக்கு கட்டுப்படாமல் ஒரு ரசிகர் மன்றம் இயங்கியதால், ரசிகர் மன்றத்தையே கலைப்‌பேன் என்று அஜித் எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கலாம். அவரது எச்சரிக்கையையும் மீறி சில மன்றங்கள் தேர்தல் நேரத்தில் செயல்பட்டதால்தான் இப்படியொரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறார்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அஜீத் நற்பணி மன்றம் கலைப்பு: போராட்டத்தில் இறங்க ரசிகர்கள் முடிவு

Post by ந.கார்த்தி on Mon May 02, 2011 2:16 pm

மே 1ம் தேதி உழைப்பாளர்கள் தினம் மட்டுமல்ல, நடிகர் அஜீத்தின் பிறந்தநாளும் கூட. அஜீத்தின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக அவரது ரசிகர்கள் கொண்டாடுவர். அதேபோல் இந்த ஆண்டும் அஜீத்தின் 40வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாட தீவிரமாக இருந்தனர். ஆனால் பிறந்தநாளுக்கு ஒருநாள் முன்னர், தமது ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிவித்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் அஜீத். அஜீத்தின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அஜீத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் களையிழந்தது. இதனிடையே அஜீத் தமது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டு மன்றத்தை தொடர்ந்து நடத்த வலியுறுத்தோம் என்று அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட அஜீத் ரசிகர்மன்ற தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், தமிழ் திரைப்படத்தின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அஜீத், ரசிகர் மன்றத்தின் மூலம் ஏராளமான நற்பணிகளையும், உதவிகளையும் செய்துவருகிறோம். தனிமனித ஒழுக்கத்தை அறிவுறுத்தி வந்த அஜீத்குமார், சமூகத்தில் நிலவும் எல்லா பிரச்சனைகளையும் மையமாக வைத்து அஜீத்தின் ரசிகர்மன்றமும் அதேபோல் ஆகிவிடுமோ என்ற சந்தேகப்பட வேண்டாம். ஏனென்றால், மன்றத்தில் உள்ளவர்கள் ஜாதி, மத, இன வேறுபாடுகளை மறந்து பலநலத்திட்டங்களை செய்து வருகிறோம். இந்தநிலையில் அஜீத் இவ்வாறு ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிவித்து இருப்பது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, அவருடைய எல்லா ரசிகர்களுக்கும் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அஜீத், தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுதொடர்பாக அவரிடம் சென்று வலியுறுத்த இருக்கிறோம்.

15நாட்களுக்குள் அஜீத், நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம். ஒருவேளை அவர் எதுவும் சொல்லாதபட்சத்தில், சிவகங்கை மாவட்ட ரசிகர்கள் அனைவரும் ஒன்றாக சென்னை சென்று அவரது வீட்டை முற்றுகையிட்டு எங்களது கோரிக்கையை ஏற்கும்படி வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
tmt
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by உதயசுதா on Mon May 02, 2011 2:31 pm

ஏன் இவங்களுக்கெல்லாம் வேற வேலையே இருக்காதா.நற்பணிகளை செய்ய மன்றம் வைத்துதான் செய்ய வேண்டும் என்பதில்லயே
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by பூஜிதா on Mon May 02, 2011 2:37 pm

அஜீத் ரசிகர் மன்றம் அப்படி பெருசாக நலத்திட்டங்கள் செய்தது போல தெரியவில்லயே பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by Guest on Mon May 02, 2011 5:17 pm

அந்த நல்ல மனுஷன் வேற 2020 ல வல்லரசு ஆகும் சொல்லி கிட்டு திரியுறார் ...அது இளயோர் நாலதான் சாத்தியம் நு வேற சொல்றார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

என்ன செய்யப் போகிறார் அஜீத்?

Post by ரபீக் on Mon May 02, 2011 6:56 pm

முன் கோபி, தனிமை விரும்பி, படக்கென்று எதையும் பேசிவிடும் தைரியம். இவையெல்லாம் சேர்ந்த கலவைதான் அஜீத். திரைப்பட நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் எவ்வளவு பக்க பலம் என்பதை உணர்ந்திராத நடிகர்களே இல்லை. ஆனால் அதை நன்றாக உணர்ந்தும் கைவிடுகிற ஏகாந்தமும், எரிச்சலும் ஒரு சேர பெற்றவர் அஜீத் மட்டுமே!

'ஓப்பனிங்' என்ற ஒரு வார்த்தைதான் ஹீரோக்களின் தரத்தை முடிவு செய்கிறது. அப்படி பார்த்தால் முதல் தர வரிசையில் முக்கியமானவர் அஜீத். ஏனென்றால் தொடர்ந்து தோல்விகள் கொடுத்தாலும், அடுத்து அவரது படத்திற்கு கூடுகிற ரசிகர்கள் கூட்டம் முதல் பட பிளாப்பை ராட்சத ரப்பர் கொண்டு அழித்துவிடும். அடுத்ததும் பிளாப் என்றாலும் ஒரு வாரத்திற்கு அதே கூட்டத்தோடு நடைபோடும். இந்த ப்ளஸ் பாயிண்ட் ரஜினியை தவிர வேறெந்த நடிகர்களுக்கும் இல்லை என்கிறார்கள் தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும்.

இப்படியெல்லாம் தன்னை போற்றுகிற ரசிகர்களை அஜீத் எந்தளவுக்கு நேசிக்கிறார் என்ற கேள்வி மட்டும் பதிலே இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக அஜீத்துடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற ரசிகர்கள் எம்பிளாய்மென்ட்டில் பதிவு செய்திருந்தால் இந்நேரம் அரசு வேலையே கூட கிடைத்திருக்கும். இதையெல்லாம் அவரிடம் சொல்லி அஜீத்தை மாற்றிவிட வேண்டும் என்று நினைக்கிற ரசிகர்கள் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு, இடையில் இருக்கிற மன்ற தலைவர்களை தாண்டி அவரை சந்திக்க முடியவில்லையே என்பதுதான். (மன்ற தலைவர்களை கேட்டால் நாங்களே சந்திச்சு பல மாதங்களாச்சு என்பார்களோ?)

கடந்த வருடம் ஊட்டியில் அஜீத் கலந்து கொண்ட படப்பிடிப்பு நடந்தது. அப்போது சுற்றுவட்டார ரசிகர்களை ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கே வரவழைத்த அஜீத், நாள் முழுக்க நின்று அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த மாற்றம் ரசிகர்களை புத்துணர்ச்சி அடைய வைத்தது. ஆனால் அது ஊட்டியை சுற்றியுள்ள ரசிகர்களுக்கு மட்டுமே வாய்த்த அதிர்ஷ்டம். பிற மாவட்ட ரசிகர்கள் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஏக்கத்தோடு முணுமுணுத்தார்கள். அவ்வளவே.

உங்கள் குடும்ப வேலையை பாருங்க. பிறகு பார்க்கலாம் மன்ற வேலையை என்று நிஜமாகவே ரசிகர்கள் மீது கோபப்படும் அஜீத், அதே ரசிகர்கள் தனிக்கட்சி துவங்க வேண்டும் என்று ஆங்காங்கே போராட்டங்களில் குதித்த போது எவ்வளவு கோபப்பட்டிருப்பார் என்பதை சொல்ல வேண்டுமா என்ன?

அஜீத்தை அதிகம் கவலைப்பட வைத்தது சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றுதானாம். 'மிரட்றாங்கய்யா' என்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ஒரு திரைப்பட விழாவில் அஜீத் பேசிவிட, அல்லோலகல்லோலப்பட்டது தமிழ்நாடு. அவர் யாரை சொன்னார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் மனதிலும் ஆர்வம் இருந்தது. ஆனால் இந்த விஷயம் சைலண்ட்டாக முடித்து வைக்கப்பட்டது.

சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஜீத் ரசிகர் மன்ற நிர்வாகிகள், வெளிப்படையாக திமுக வுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். பல இடங்களில் அஜீத்தின் போட்டோவுடன் இவர்கள் ஓட்டு சேகரிக்கவும் போனார்களாம். என்னுடைய மன ஓட்டத்தை புரிந்து கொள்ளாத இவர்களை வைத்துக் கொண்டு இந்த மன்றத்தை ஏன் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு அப்போதுதான் வந்தாராம் அஜீத். இத்தனைக்கும் ரசிகர்கள் அவரவர் மனதிற்கேற்ப முடிவெடுக்கலாம் என்று கூறியிருந்தார் அவர். ஆனால் தன் போட்டோவுடன் வாக்கு கேட்க போனதுதான் அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.

இதுபோல மாவட்டம் முழுவதும் மன்ற தலைவர் சுரேஷ் சந்திராவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டுவதும், ரத்த கையெழுத்து போட்டு கடிதம் எழுதுவதும் அஜீத்தை ரொம்பவே காயப்படுத்தி விட்டதாகவும் சொல்கிறார்கள்.

வேறு வழியில்லாமல்தான் மன்றத்தையே கலைத்துவிடுவது என்ற முடிவெடுத்தாராம் அஜீத். இதையடுத்துதான் அதிரடி அறிக்கையை வெளியிட்டார் அவர்.

இந்த அறிக்கைக்கு பிறகு அவசரம் அவசரமாக ஆங்காங்கே கூடும் ரசிகர்கள் ஆதரவு நிலையும் எதிர்ப்பு நிலையும் எடுத்து வருகிறார்களாம். ரசிகர்களின் ஆதரவை வைத்துதான் ஒரு ஹீரோவுக்கு சம்பளமே நிர்ணயிக்கப்படுகிறது. சுமார் பத்து கோடி வரைக்கும் சம்பளம் வாங்கும் அஜீத் இதை உணராமல் போனதுதான் ஆச்சர்யம் என்கிறார்கள் இந்த விஷயத்தை உற்று நோக்கும் தயாரிப்பாளர்கள்!

அடுத்து என்ன செய்யப் போகிறார் அஜீத்?

-ஆர்.எஸ்.அந்தணன்

avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by பிஜிராமன் on Mon May 02, 2011 9:30 pm

பொலப்பு கெட்ட பயலுக......உண்மையா சொல்லணும் நா....இவங்க சிவகங்கை ல இருந்து சென்னை போயி முற்றுகை இடறனு போரனு முடிவெடுதா.....அது சுத்தி பாக்க அந்த ரசிகர் மன்ற தலைவர் போட்ட திட்டம் ஆக தா இருக்கும்.....

மதன் நீங்கள் சொல்வது சரி.....ஆனால் அவர் இதை போன்ற இளைஞர்களை கருத்தில் எடுதிருக்க வாய்பில்லை...நிச்சயம் அவர் கனவு நிறைவேறும் என்று நம்புவோம்
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by அப்துல் on Mon May 02, 2011 10:57 pm

[quote="உதயசுதா"]ஏன் இவங்களுக்கெல்லாம் வேற வேலையே இருக்காதா.நற்பணிகளை செய்ய மன்றம் வைத்துதான் செய்ய வேண்டும் என்பதில்லயேகுஓட்டே
avatar
அப்துல்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 132

View user profile

Back to top Go down

Re: மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum