ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 T.N.Balasubramanian

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 T.N.Balasubramanian

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 krishnanramadurai

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது

View previous topic View next topic Go down

கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது

Post by முரளிராஜா on Fri Apr 29, 2011 6:01 pm


இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். தங்கத் தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்டது இந்த விருது.

கடந்த 45 ஆண்டுகளாக திரைத் துறையில் உள்ள பாலசந்தர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் 101 படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார்.

அசாதாரண கதைகளைப் படமாக்குவதில் பாலச்சந்தரின் துணிச்சலுக்கு நிகர் அவரே.

மிகச் சிறந்த கலைஞர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாஸன், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மிகச் சிறந்த நடிகரான நாகேஷ், ராதாரவி, நடிகைகள் ஜெயந்தி, ஸ்ரீபிரியா, ஜெயசுதா, ஜெயப்ரதா, சுஜாதா என 30க்கும் மேற்பட்டோரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் பாலச்சந்தர்.

கமல்ஹாஸன் உள்ளிட்ட 12 இயக்குநர்களை உருவாக்கியவர்.

இவர் இயக்கிய இருகோடுகள், அபூர்வராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ஒரு வீடு இரு வாசல் ஆகிய நான்கு தமிழ்ப் படங்களும், ருத்ரவீணா தெலுங்குப் படமும் தேசிய விருதுகளை வென்றுள்ளன.

பல முறை தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதினையும் அளித்து கெளரவித்துள்ளது.

தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் 1930ம் ஆண்டு பிறந்தவர் பாலச்சந்தர். மேஜர் சந்திரகாந்தா, சர்வர் சுந்தரம் என நாடகங்கள் மூலம் புகழ்பெற்ற அவரை திரையுலகுக்கு அழைத்து வந்தவர் அமரர் எம்ஜிஆர். அவரது தெய்வத்தாய்தான் பாலச்சந்தரின் முதல் திரைப் பிரவேசம். இயக்கிய முதல் படம் நீர்க்குமிழி.

தமிழகம் தவிர, ஆந்திரம், கர்நாடகத்திலும் பல விருதுகளை வென்றுள்ளார் பாலச்சந்தர்.

நன்றி தட்ஸ் தமிழ்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது

Post by அசுரன் on Fri Apr 29, 2011 6:12 pm

தகுதியானவர் தான் கே.பி. இன்னும் தராமல் இருப்பதே தவறு. தகவலுக்கு நன்றி முரளி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது

Post by பாலாஜி on Fri Apr 29, 2011 6:12 pm

🐰 🐰 🐰

இயக்குனர் இயமம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....


🐰 🐰 🐰


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது

Post by கலைவேந்தன் on Fri Apr 29, 2011 10:25 pm

என் அபிமான இயக்குனர் கே பி க்கு என் வந்தனங்களும் பாராட்டுகளும்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

இயக்குநர் கே. பாலச்சந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது

Post by Thiraviamurugan on Sat Apr 30, 2011 1:18 pm

திரைப்பட இயக்குநர் "இயக்குநர் சிகரம்' கே.பாலச்சந்தருக்கு 2010-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத் தாமரை பதக்கம், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவை அடங்கியது இந்த விருது.
விருதுக்கு கே. பாலச்சந்தர் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையில் உள்ள இயக்குநர் பாலச்சந்தர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இதுவரை 101 படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான படங்களைத் தயாரித்தும் உள்ளார்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாஸன், சிரஞ்சீவி, நாகேஷ், ராதாரவி, நடிகைகள் ஜெயந்தி, ஸ்ரீபிரியா, ஜெயசுதா, ஜெயப்ரதா, சுஜாதா, சரிதா என 30க்கும் மேற்பட்டோரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் பாலச்சந்தர்.
1975-ல் இவர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அறிமுகமானார். இதே படம் தெலுங்கில் அந்துலேனி கதா என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. இதிலும் நடிகர் ரஜினிகாந்தை நடிக்க வைத்தார் பாலச்சந்தர்.
கமல்ஹாஸன் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்களையும் அவர் உருவாக்கியுள்ளார்.
81 வயதாகும் பாலச்சந்தர் இயக்கிய இருகோடுகள் (1969), அபூர்வராகங்கள் (1975), தண்ணீர் தண்ணீர் (1981), அச்சமில்லை அச்சமில்லை (1984) ஆகிய நான்கு தமிழ்ப் படங்கள் தேசிய விருதுகளை வென்றுள்ளன. 1988-ல் வெளியான ருத்ரவீணா தெலுங்குப் படம் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியதற்கான நர்கீஸ் தத் தேசிய விருதை வென்றது. ஒரு வீடு இரு வாசல் படம் 1991-ம் ஆண்டுக்கான தேசிய விருதை (சிறந்த சமூகப் பிரச்னைக்கான படம்) வென்றது.
பல முறை தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார். கலைமாமணி விருதையும் அவர் பெற்றுள்ளார். திரைத்துறையில் இவர் ஆற்றிய சாதனைக்காக மத்திய அரசு, இவருக்கு பத்மஸ்ரீ விருதை 1987-ல் அளித்து கௌரவித்துள்ளது.
பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், 47 நாட்கள், சிந்து பைரவி ஆகிய படங்கள் இவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.
சீரியஸôன படங்கள் மட்டுமே அவரால் தரமுடியும் என்ற விமர்சனத்தை ரஜினிகாந்தை வைத்து "தில்லுமுல்லு' வெற்றிப் படத்தைத் தந்து தகர்த்தெறிந்தார் பாலச்சந்தர்.
தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் 1930-ம் ஆண்டு பிறந்தவர் பாலச்சந்தர். மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் போன்ற நாடகங்கள் மூலம் புகழ்பெற்ற அவரை திரையுலகுக்கு அழைத்து வந்தவர் எம்ஜிஆர் என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் நடித்த தெய்வத்தாய் படம்தான் பாலச்சந்தரின் முதல் திரைப் பிரவேசம். ஆனால் அதன் பின்னர் எம்ஜிஆருடன் இணைந்து பாலசந்தர் பணியாற்றவில்லை.
மேஜர் சந்திரகாந்த் நாடகம்தான் பின்னாளில் மேஜர் சந்திரகாந்த் என்ற பெயரில் படமாக தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்தில் மேஜர் பாத்திரத்தை ஏற்று நடித்த சுந்தர்ராஜன், பின்னாளில் மேஜர் சுந்தர்ராஜன் என்றே அழைக்கப்பட்டார்.
பாலச்சந்தர் இயக்கிய முதல் படம் நீர்க்குமிழி. 1965ம் ஆண்டில் வெளிவந்த இந்த இந்தப் படத்தில் நாகேஷ் நடித்தார்.
தமிழகம் தவிர, ஆந்திரம், கர்நாடகத்திலும் பல விருதுகளை வென்றுள்ளார் பாலச்சந்தர்.
சின்னத் திரையில் தரம் வாய்ந்த நாடகங்கள், தொடர்களை அறிமுகப்படுத்தியதும் பாலச்சந்தர் தான். தூர்தர்ஷனுக்காக இவர் இயக்கிய ரயில் ஸ்நேகம் தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

"சிவாஜிக்குப் பிறகு பெறுவது பெருமை...'
திரைப்பட உலகில் மிகவும் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படும் "தாதா சாகேப் பால்கே' விருது தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.பாலச்சந்தருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விருது குறித்த அறிவிப்பு வெளியானதும், "தினமணி' நிருபரிடம் அவர் கூறியது:
தாதா சாகேப் பால்கே விருது, சினிமாவின் இயக்குநர் துறையைச் சேர்ந்தவர் என்பதற்காகக் கொடுக்கப்படவில்லை. திரைப்படத் துறையில் நிறைய பேரை அறிமுகம் செய்து வைத்து இருக்கிறேன். சூப்பர் ஸ்டார்கள், கமலைப் போன்று உலக அளவில் பெயரைப் பெற்றவர்களை திரைப்படத் துறைத் துறையில் அறிமுகப்படுத்தியுள்ளேன். அதற்காக கிடைத்த விருதாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
புதுமையான கதை அம்சம் இயக்கியதும் இந்த விருதைப் பெற கூடுதல் பலமாக இருக்கும். தமிழகத்தில் முதல் இயக்குநர் என்ற முறையில் "தாதா சாகேப் பால்கே' விருதை நான் பெறுவதாகக் கூறுகிறார்கள். நடிகர் திலகம் சிவாஜிக்குப் பிறகு விருதினைப் பெறுவது பெருமையானது.
இந்த விருதினைப் பெற நான் தகுதியானவனா? என யோசித்தேன். தகுதி இருந்ததால் கொடுத்துள்ளார்கள். இந்த விருதினை தமிழ்த் திரைப்படத் துறைக்கும், உலகத் தமிழர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் என்றார் பாலச்சந்தர்.
-நன்றி தினமணி
avatar
Thiraviamurugan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது

Post by balakarthik on Sat Apr 30, 2011 1:25 pm

இது இவருக்கு எப்பவோ கிடைக்கவேண்டியது இப்பவாவது வந்ததே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது

Post by அருண் on Sat Apr 30, 2011 1:50 pm

சிறந்த இயக்குனர்!! விருது கிடைத்ததில் மகிழ்ச்சியே!! மகிழ்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது

Post by உதயசுதா on Sat Apr 30, 2011 2:19 pm

இவருக்கு எப்பவோ தர வேண்டியது,சிவாஜியா போல காலம் கடந்து கொடுக்கிறார்கள்.தமிழ் சினிமாவை ஒரு தனி பாதையில் கொண்டு சென்று அதில் வெற்றியும் பெற்றவர் இவர்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது

Post by தாமு on Sat Apr 30, 2011 3:52 pm

சிறந்த இயக்குனர்!!
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது

Post by மஞ்சுபாஷிணி on Sat Apr 30, 2011 7:30 pm

பாலச்சந்தருக்கு தரவேண்டிய விருது தான் இது..

அன்பு வாழ்த்துக்கள் பாலச்சந்தர் அவர்களுக்கு...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது

Post by முரளிராஜா on Sat Apr 30, 2011 10:47 pm

முன்னரே அந்த பதிவு உள்ளதால் அதோடு இணைக்கபட்டது
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum