ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 ayyasamy ram

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ayyasamy ram

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 ayyasamy ram

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 ayyasamy ram

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 ayyasamy ram

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 ayyasamy ram

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 heezulia

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்

View previous topic View next topic Go down

பொன்னர் சங்கர் பட அழைப்பிதழுக்கு விருது-கருணாநிதியிடம் காட்டிய பிரஷாந்த்

Post by ரபீக் on Sat Jul 03, 2010 5:19 pm

பொன்னர் சங்கர் பட தொடக்க அழைப்பிதழுக்கு விருது கிடைத்துள்ளது. இதை முதல்வர் கருணாநிதியிடம் நடிகர் பிரஷாந்த்தும், அவரது தந்தையும் படத் தயாரிப்பாளருமான தியாகராஜனும் காட்டி மகிழ்ந்தனர்.

பொன்னர் சங்கர் திரைப்படத்தின் தொடக்க விழா அழைப்பிதழை செம்மையான முறையில் அச்சிட்டமைக்காக SAPPI என்ற நிறுவனம், 8வது ஆசிய பிரின்ட் விருதினை அதற்கு வழங்கியுள்ளது.

இந்த சான்றிதழை பிரஷாந்த்தும், தியாகராஜனும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து காட்டி மகிழ்ந்தனர்.

கருணாநிதி எழுதியநூல்தான் பொன்னர் சங்கர். இந்த கதையைத்தான் தியாகராஜன் இயக்கி படமாக்கி வருகிறார். பிரஷாந்த் இதில் இரட்டை வேடம் பூண்டு நடித்து வருகிறார்.
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்

Post by நவீன் on Tue Jul 06, 2010 6:48 pm

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்

Post by ரபீக் on Mon Aug 16, 2010 11:17 am

பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கும் பொன்னர் சங்கர் திரைப்படத்தை வாங்கினார் பிரபல லாட்டரி வர்த்தகரான மார்ட்டின்.

அவரது மார்ட்டின் புரொடக்ஷன் ஏற்கெனவே முதல்வர் கருணாநிதி கதை வசனத்தில் உருவாகும் இளைஞன் படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரசாந்த் நடிக்க கருணாநிதி கதை வசனத்தில் உருவாகும் மற்றொரு பிரமாண்ட வரலாற்றுப் படமான பொன்னர் சங்கரையும் வாங்கியுள்ளார். ஆரம்பத்தில் இந்தப் படத்தை தியாகராஜனே தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பொன்னர் சங்கர் படத்தில் ராஜ்கிரண், சினேகா, குஷ்பு, சத்யராஜ், பிரகாஷ் ராஜ், நெப்போலியன், மற்றும் ஜெயராம் உள்பட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது

நன்றி :தட்ஸ்தமிழ்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

பொன்னர் சங்கர்-விமர்சனம்

Post by ரபீக் on Sun Apr 10, 2011 11:36 am

மம்பட்டியான் படம்தானே என்ற அலட்சிய பார்வையோடு தியேட்டருக்குள் போனால், அந்த பார்வையை 'சம்மட்டி' அடி கொடுத்து தகர்க்கிறார் தியாகராஜன். விளையாட்டாக இழுக்க இது பொம்மை தேர் அல்ல. திருவாரூர் தேர் என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார் இந்த பிரமாண்ட டைரக்டர். படம் நகரும் ஒவ்வொரு நிமிஷமும் கோடிகள் ஸ்வாகா ஆகியிருக்கிறது சர்வ சாதாரணமாக! கலைஞரின் கைவண்ணத்தில் உருவான இந்த அண்ணன்மார்கள், மார்தட்ட வைக்கிறார்கள் ஒட்டுமொத்த தமிழ்சினிமாவையே!

பொதுவாக சரித்திரக் கதையில் இடம் பெறும் வர்ணனைகளை காட்சி படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. அதை மிக சரியாக செய்திருக்கிறார் தியாகராஜன். மலையளவு தோள் வலிமை கொண்டவன் என்ற வர்ணனையை வரி மாறாமல் சுமந்திருக்கிறார் பிரஷாந்த்தும்.

நெல்லையன் கொண்டான் (ஜெயராம்) மீது காதல் கொள்ளும் தாமரை (குஷ்பு) அப்பாவால் நாட்டை விட்டே துரத்தப்படுகிறாள். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள்தான் பொன்னர் சங்கர். (பிரஷாந்த்+பிரஷாந்த்) ஆனால் தன் மகன்கள் உயிரோடு இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள் இருவரும். ஆனால் ராக்கி அண்ணனால் (ராஜ்கிரண்) ரகசியமாக வளர்க்கப்படும் இவர்கள், தங்களை அழிக்க நினைத்த மந்தியப்பன் (பிரகாஷ்ராஜ்) காளி மன்னன் (நெப்போலியன்) ஆகிய இருவரையும் கொன்றொழிப்பதும், மாமன் மகள்களை கை பிடிப்பதும்தான் கதை.

துக்கடா கதையில் கூட ஹீரோவின் அறிமுக பில்டப்புக்காக ஒரு ஊரையே அடித்து நாசமாக்குதெல்லாம் நடக்கும். இங்கே ஒரு அணைக்கட்டையே உடைத்து துவம்சமாக்குகிறார்கள் பிரஷாந்த் பிரதர்ஸ்! நான் ஊர் போய் சேர்வதற்குள் மதகிலிருந்து வெளியேறும் தண்ணீர் என் கால்களை நனைக்க வேண்டும் என்கிறார் ஆசான். அம்பெய்கிறார்கள் பொன்னரும் ஷங்கரும். ஆசான் நினைத்ததுதான் நடக்கிறது. இந்த காட்சியில் கதையாசிரியரின் கற்பனையுடன், வெள்ளமென கலக்கிறது விஷ§வல் கிராபிக்ஸ்சும்!

காதலிக்காக முதலையை பிளப்பதும், மலைப்பாம்பை வளைப்பதும் கூட பிரஷாந்தின் புஜ வலிமையை பிரமிப்புடன் நோக்க வைக்கிறது. இதுதான் இப்படி என்றால் போர்க்கள காட்சிகளில் இவரது ஆக்ரோஷம் அவ்வளவு தத்ரூபம்!

பூஜா சோப்ரா, திவ்யா பரமேஸ்வரன் என்ற இரண்டு கதாநாயகிகள். அல்ட்ரா மாடர்ன் பெண்களான இவர்கள் அரசிளங் குமரிகளாகியிருக்கிறார்கள். ஹைட் லுக்கும் கண்ணசர வைக்கும் லோ ஹிப்புமாக இவர்களை பார்க்கும் போதெல்லாம் தியேட்டரே டபுள் ஏசி யாகி குளிர வைக்கிறது.

பிரஷாந்தின் தங்கையாக சினேகா. பெயர் அருக்காணி. வாளெடுத்து சுற்றுகிறார். அசகாய சூரன்களையெல்லாம் அடித்து து£க்கி எறிகிறார். அந்த புன்னகை மட்டும் போவேனா என்கிறது.

நரைத்த தாடி, நரைக்காத கம்பீரம் என்று நாசருக்கு பொருத்தமான கேரக்டர். பொன்னரும் ஷங்கரும் யார் என்று போட்டு உடைக்கிற வேலை இவருக்கு. அது மட்டுமல்ல, போர்களத்தில் வாள் சுழற்றும் வீரனும் கூட! ஜமாய்த்திருக்கிறார் மனுஷன். மற்றொரு கம்பீரன் நெப்போலியன். கேட்பார் பேச்சை கேட்கிற அரசன். சுய சிந்தனையற்றவன் எப்படி அரசரானான் என்ற கேள்வியை இத்தனை வருடங்கள் கழித்தும் எழுப்ப வைக்கிறது இந்த கேரக்டர். பிரபு, விஜயகுமார், பொன்வண்ணன், ரியாஸ்கான் என்று மற்றவர்கள் கூட்டம் சேர்க்க பயன்பட்டிருக்கிறார்கள்.

திரையில் தோன்றிய கலைஞர்களுக்கு இணையாக முகம் காட்டாத தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பும் இருக்கிறது. குறிப்பாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில் நுட்பம். இதையும் பிரஷாந்த்தே கவனித்திருப்பதுதான் வியப்பு. நவீன இயக்குனரான ஷங்கருக்கே சவால் விட்டிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். ஒளிப்பதிவாளர் ஷாஜி குமாருக்கு விருதுகள் காத்திருக்கிறது. இவர் மட்டுமா? நடனம் அமைத்த ஷோபி, சாந்தி கபூருக்கு கூட பாராட்டுகள் குவியும்!

இசைஞானி இளையராஜாவின் எல்லையற்ற சுதந்திரம், நம் காதுகளை மயங்க வைத்த மந்திரம்! பின்னணி இசையோ காட்சிக்கு காட்சி பேசுகிறது. 'கண்ணை படித்தேன்...' பாடலில் பழனி பாரதியின் வரிகளும், ஸ்ரீராம் பார்த்த சாரதி ஷ்ரேயா கோஷலின் குரல்களும், ராஜாவின் பிரசன்ட்டேஷனும் கலந்து சொர்க்கத்தின் கதவுகளை விரிய திறக்கிறது.

கொங்கு மண்டல கதையில் கோவை பாஷை இல்லையே என்ற குறையும், சட்டென்று படம் முடிந்துவிட்டதே என்ற உணர்வும் லேசான வருத்தத்தை கொடுத்தாலும், பொன்னர் ஷங்கர் இத்தனை வருட தமிழ்சினிமாவின் மிக முக்கியமான படம் என்ற முத்திரையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

'மம்பட்டி' கைபட்டால் மண் கூட பொன்னாகும் என்பார்கள். இங்கே பிலிம் கூட அப்படியாகியிருக்கிறது!

-ஆர்.எஸ்.அந்தணன்

avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்

Post by Manik on Sun Apr 10, 2011 11:45 am

அப்ப படம் நல்லா இருக்கா ரபீக் நீங்க பாத்துட்டீங்களா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்

Post by ரபீக் on Sun Apr 10, 2011 11:47 am

@Manik wrote:அப்ப படம் நல்லா இருக்கா ரபீக் நீங்க பாத்துட்டீங்களா

ஆர்.எஸ்.அந்தணன்-இவருடைய விமர்சனம் ஒரலவு சரியாக இருக்கும் நன்பா!

avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்

Post by அப்துல் on Sun Apr 10, 2011 1:47 pm

:நல்வரவு:
avatar
அப்துல்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 132

View user profile

Back to top Go down

Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்

Post by அருண் on Sun Apr 10, 2011 2:13 pm

அப்ப பர்க்கலாம்!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்

Post by gnanammm on Sun Apr 10, 2011 4:42 pm

எங்களுக்கு பிரசாந்த், வடிவேலு மாதிரி. பட் விமர்சனத்தை படித்தவுடன் படம் பார்க்க வேண்டும் போல் உள்ளது. தகவலுக்கு நன்றி நண்பா
avatar
gnanammm
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 170
மதிப்பீடுகள் : 0

View user profile http://mailtognanam@yahoo.com

Back to top Go down

Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்

Post by ARR on Sun Apr 10, 2011 5:22 pm

விமர்சனப் பகிர்வுக்கு நன்றி ரஃபீக்..

கலை.. இந்த விமர்சனம் என்பதற்கு நேரடித் தமிழ்ச்சொல் ஏதேனுமுண்டா..?
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்

Post by கலைவேந்தன் on Sun Apr 10, 2011 5:31 pm

@ARR wrote:விமர்சனப் பகிர்வுக்கு நன்றி ரஃபீக்..

கலை.. இந்த விமர்சனம் என்பதற்கு நேரடித் தமிழ்ச்சொல் ஏதேனுமுண்டா..?

கருத்துரைத்தல் என்பது தான் தமிழ்ச்சொல் அண்ணா.அவை நல்ல கருத்தாகவும் இருக்கலாம்.. குறைகளையும் பகிரலாம். ஆனால் நாளடைவில் விமரிசனம் என்ற சொல்லைப் புகுத்தியதன் மூலம் எதிர்மறைக் கருத்துக்களுக்கு மட்டுமே விமரிசன்ம் என்ற சொல்லைக் கையாண்டு விட்டனர். நமக்கும் இப்போதெலலம் விமரிசனம் என்றதும் எதிர்மறைக் கருத்து மட்டுமே நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை இல்லையா...?

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்

Post by ARR on Sun Apr 10, 2011 5:32 pm

நன்றி கலை..!
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்

Post by கலைவேந்தன் on Sun Apr 10, 2011 5:44 pm

விமரிசனம் அருமையாக இருக்கு... படத்தையும் விரைவில் பார்த்துடனும்..நன்றி ரஃபீக்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

பொன்னர் சங்கர்: கமலுடன் பார்த்தார் கருணாநிதி!

Post by கார்த்திநடராஜன் on Thu Apr 14, 2011 7:33 pm

சென்னை: தமிழக முதல்வர் கருணாநிதி - தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய பொன்னர் சங்கர் படத்தை செவ்வாய்க்கிழமை வடபழனி பிரசாத் லேப்பில் பார்த்தார்.

நடிகர் தியாகராஜன் இயக்கி, தயாரித்துள்ள இந்தப் படத்தில் அவரது மகன் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

இப் படம் சில தினங்களுக்கு தமிழகம் முழுவதும் வெளியானது. தேர்தல் பிரசாரத்தை முடித்த முதல்வர் கருணாநிதி இப்படத்தை செவ்வாய்க்கிழமை பார்த்தார்.

அவருடன் நிதி அமைச்சர் அன்பழகன், நடிகர் கமல்ஹாசன், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராசன் ஆகியோரும் பார்த்தனர்.

படத்தை சிறப்பாக எடுத்துள்ளதாக இயக்குநரும் தயாரிப்பாளருமான தியாகராஜனை அனைவரும் பாராட்டினர்.
நன்றி
TMT


Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:29 am; edited 1 time in total
avatar
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 303
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்

Post by கலைவேந்தன் on Thu Apr 14, 2011 7:44 pm

மிக மிக மட்டமான கதை ... அதற்கு இத்தனை கோடி செலவு செய்தது தியாக ராஜனின் முட்டாள் தனம்..

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்

Post by Aathira on Thu Apr 14, 2011 7:46 pm

படம் வெற்றி பெற வாழ்த்துக்க்ள்.
படித்தது கொஞ்சம் கொஞ்சம்தான் நினைவு இருக்கிறது. எப்படி இருந்தாலும் பார்க்க வேண்டிய படம்..வரலாறு அறிவதற்காக..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்

Post by முரளிராஜா on Thu Apr 14, 2011 8:43 pm

படம் பார்த்த பின்பே தெரியும் படத்தின்
உண்மை நிலைமை
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்

Post by கலைவேந்தன் on Fri Apr 15, 2011 1:04 am

@முரளிராஜா wrote:படம் பார்த்த பின்பே தெரியும் படத்தின்
உண்மை நிலைமை

நான் பார்த்துத் தொலைத்துவிட்டேன் முரளி..என்ன கொடுமை சார் இது ஏண்டா பார்த்தோம்னு ஆகிப்போச்சு..

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

சினிமா விமர்சனம் : பொன்னர்-சங்கர்

Post by மஞ்சுபாஷிணி on Fri Apr 15, 2011 1:50 pm

சினிமா விமர்சனம் : பொன்னர்-சங்கர்

விகடன் விமர்சனக் குழு

குருவின் சபதத்தையும் அன்னையின் சபதத்தையும் ஒருசேர நிறைவேற்றும் வாரிசுகள் இந்த... பொன்னர்-சங்கர்!

'அம்மாவுக்காகப் பழிவாங்கும் படலத்தை நிறைவேற்றும் பாச மகன்கள்’ என்ற வழக்கமான கதைக்கு வரலாற்றுப் பின்னணி சேர்த்த வகையிலும் அதில் அசத்தல் பிரமாண்டம் காண்பித்த வகையிலும் கவனம் கவர்கிறது தியாகராஜனின் இயக்கம். பீரியட் சினிமாக்களின் சலிப்படையவைக்கும் புராதன
வசனங்கள் தவிர்த்த, உறுத்தாத கருணாநிதியின் தமிழ் ஆறுதல்!

பொன்னர், சங்கர் என இரட்டைக் குதிரைச் சவாரி கிடைத்தும் ஸ்கோர் செய்ய முடியாத தடுமாற்றம் பிரஷாந்தின் நடிப்பில். அனல் கிளப்பும் போர்க் களக் காட்சிகள் தவிர, மற்ற இடங்களில் நெஞ்சு நிமிர்த்தி வலம் வருவதோடு சரி! தாமரை நாச்சியாராக குஷ்பு. 'வாழ்க்கையின் அரிச்சுவடியைப் படிக்க பள்ளிக்கூடம் தேவை இல்லை... பள்ளியறை போதும்’ என்கிற பிரகாஷ்ராஜின் முன், ஆக்ரோஷத்துடன் உறைவாளை உருவும் இடத்தில் மட்டும் முத்திரை பதிக்கிறார். 'ராக்கியண்ணன்’ ராஜ்கிரண் வழக்கம்போல ஸ்கோர் செய்திருந்தாலும், சங்கரை ஏனோ 'ஷங்கர்’ என்கிறார்!

பிரகாஷ்ராஜ், விஜயகுமார்,பொன்வண்ணன், நெப்போலியன் என்று பலரின் பெர்ஃபார்மன்ஸ் நிறைவு. ஆனால், திரைக்கதையில் அவர்களுக்கான ஸ்கோப்... ப்ச்! முத்தாயி, பவளாயியாக பூஜா சோப்ரா, திவ்யா பரமேஸ் வரன். படத்தில் கேரக்டர்போலவே அவர்கள் இடுப்பிலும் ஆடை நிற்பேனா என்கிறது!

எந்த இடத்திலும் துறுத்தாமல் உறுத்தாமல் பீரியட் ஃபிலிமுக்கான பிரமாண்ட பிரமிப்பு சேர்த்திருக்கும் முத்துராஜின் கலை இயக்கம் படத்தின் பளிச் ஹீரோ. ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு, போரின் ஆவேசத்தையும் அரண்மனையின் அழகையும் சிந்தாமல் சிதறாமல் படம் பிடித்து இருக்கிறது.

பொன்வண்ணனும் அவரது மகன் ரியாஸ் கானும் இறந்து அவர்கள் சடலங்களுக்குத் தீயும் மூட்டுகிறார்கள். ஆனால், இறுதிக் காட்சியில் கத்திக் காய பேன்டேஜுடன் பொன்வண்ணன் உயிர் பிழைத்து அமர்ந்து இருப்பது எப்படி? குஷ்புவின் காதல் திருமணத்தால் அப்பா விஜயகுமாரைவிட, அதிகம் ஆத்திரம் அடைவது அண்ணன் பொன்வண்ணன்தான். ஆனால், பிற்காலத்தில் பொன்வண்ணன், குஷ்புவின் குடும்பத்தோடு இணக்கமாக இருப்பதும் விஜயகுமார் வில்லனாக உருவெடுப்பதும் என்ன லாஜிக்? குஷ்புவின் மீது உள்ள கோபம் காரணமாக, தன் மகன் பொன்வண்ணனின் குடும்பத்தை உயிரோடு கொளுத்த விஜயகுமார் ஆணையிடுவது ஏன்? இப்படியும் இன்ன பிறவுமாக காட்சிக்குக் காட்சி தொக்கி நிற்கும் சந்தேகப் படுதாக்கள், படத்துடன் நம்மை ஒன்றவிடாமலே செய்கின்றன!

ஆனாலும், அபாரமான கிராஃபிக்ஸ் காட்சிகள், அலுப்புத் தட்டாத வசனங்கள், அசரவைக்கும் பிரமாண்டம் எனக் கொஞ்சம் ஈர்க்கவும்தான் செய்கின்றனர் பொன்னர் - சங்கர்!


நன்றி விகடன்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்

Post by கலைவேந்தன் on Fri Apr 15, 2011 3:36 pm

சுத்த வேஸ்ட் படம் ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

'பொன்'னர் சங்கர் மின்னும் ரகசியம்

Post by தாமு on Fri Apr 29, 2011 10:50 am

'பொன்னர் சங்கர்’ வரலாற்றுப் படத்தில் பெண் பாத்திரங்கள் மட்டுமல்ல... ஆண் பாத்திரங்கள் அணிந்து வரும் நகைகளும் அத்தனை அழகு, நேர்த்தியுடன் பாரம்பரியமும், கம்பீரமும் காட்டி அனைவரையும் ஈர்க்கின்றன.
பாராட்டுக்குரிய அந்த மூளைக்குச் சொந்தக்காரர்... ப்ரீத்தி! இவர்... படத்தின் இயக்குநர் தியாகராஜனின் மகள், படத்தின் ஹீரோ பிரசாந்தின் தங்கை!

ஃபிலிம் காஸ்ட்யூம் டிசைனர், ஜெம்மாலஜிஸ்ட், பிஸினஸ் உமன் என இவருக்கான அடையாளங்களின் வரிசையில்... இப்படத்தின் மூலம் இப்போது 'ஜூவல்லரி டிசைன’ரும் சேர்கிறது!
ஒரு மதிய வேளையில் சென்னையில் இருக்கும் தன் வீட்டில், ''இதுதான் என் கன்னிப் பேட்டி...'' என்று சிரித்தபடியே வந்தமர்ந்தார் ப்ரீத்தி!
''சில வருஷங்களுக்கு முன்ன தி.நகர்ல ஜுவல்லரி ஷாப்களுக் காக 'பிரசாந்த் கோல்ட் டவர்' கட்டினாங்க அப்பா. அந்த சமயத்துலதான் நகைகள்ல பயன்படுத்தற கற்களைப் பத்தி படிக்கறதுக்காக அமெரிக்காவில இருக்கற 'ஜெம்மாலஜி இன்ஸ்டிடியூட்’க்கு போனேன். கற்களோட இயல்பு, சிறப்பு என்ன, அதுல ஒரிஜினலை எப்படி கண்டுபிடிக்கறது, எப்படி பராமரிக்கறதுனு ஆழமான அறிவியல் படிப்பு அது. அப்புறம் 'ஜுவல்லரிக்கான டிசைனிங்’ கோர்ஸ் படிச்சேன்.
இப்ப 'பிரசாந்த் கோல்ட் டவர்’ல இருக்கற என் ஜெம் ஸ்டூடியோவுல குறிப்பிட்ட கஸ்டமர்களுக்கு மட்டும் கன்சல்டேஷன் பண்றேன். அந்த டவர்ல இருக்கற அஞ்சு ஃப்ளோர்ல இருக்கிற ஷாப்களுக்குமே நான்தான் மேனேஜிங் அத்தாரிட்டி'' என்பவரின் இந்தப் பின்புலம்தான் 'ஜூவல்லரி டிசைனர்’ அவதாரம் எடுக்க வைத்திருக்கிறது!
''ஏற்கெனவே அப்பாவோட 'மன்னவா’, 'ஜெய்’, 'ஷாக்’ படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனரா, போஸ்ட் புரொடக்ஷன் சைட்லனு வேலை பார்த்த அனுபவம் இருக்கு. 'பொன்னர் சங்கர்’ படத்துக்கான ஜுவல்லரி டிஸைனர் வேலையை அப்பா எங்கிட்ட அப்பா கொடுத்தப்போ சந்தோஷத்தைவிட பொறுப்புதான் அதிகமா தெரிஞ்சுது. ஏன்னா, நகை அலங்காரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கற படமாச்சே! கிட்டத்தட்ட என்னோட ரெண்டரை வருஷ உழைப்பை இதுக்குக் கொடுத்திருக்கேன்'' என்றவர், அதற்கான தன் மெனக்கெடல்களைப் பேசினார்.
''பொன்னர் - சங்கர் புத்தகத்துலயே நகைகள் பத்தின பல விவரங்கள் இருந்தாலும், அதோட நின்னுடாம பல கோயில்கள், சிற்பங்கள், நூலகங்கள், வரலாற்று அறிஞர்கள்னு அலைஞ்சு, தகவல்களைத் திரட்டினேன். பல சுவாரஸ்யமான விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.
பொதுவா... அந்தக் காலத்துல பெண்களோட நகைகள், அவங்க வாழற சமுதாயப் பிரிவை பிரதிபலிக்கற மாதிரி இருந்திருக்கு. நம்ம தென்னிந்திய நகைகள்ல மாங்கா மாலை, நாத ஜடை, வங்கி, ஒட்டியாணம், கால்ல போடுற தண்டை... இதெல்லாம்தான் முக்கிய நகைகளா இருந்திருக்கு. அதைப் பத்தி எல்லாம் முழுமையா தெரிஞ்சுக்கிட்டேன். அந்தக் காலத்துல பெண்கள் ஒட்டியாணத்தை எப்பவும் இடுப்போட ஒரு உடை மாதிரி அணிஞ்சிருந்திருக்காங்க. அவங்க போட்டுக்கிட்ட ரவிக்கை நழுவிடாம பிடிக்கத் தான் கையில வங்கி போட்டு இருந்திருக்காங்க. இப்படி அழகுக்காக மட்டுமில்லாம, அவசியத் தேவைக்காகவும் ஆபரணங்களை அணிஞ்சிருக்காங்க நம்ம பூட்டிகள்...'' என்று ரசிக்க ரசிக்கப் பேசியவர்,


''படத்தைப் பொறுத்தவரைக்கும் காட்சியோட ஒன்றிப்போற நகைகளைத்தான் டிசைன் பண்ணினேன். உதாரணமா, கதை நாயகிகளா வர்ற முத்தாயி, பவளாயிக்கு நகைகள் எப்பவும் கிராண்டா இருக்கணும். ஆனா, செல்வந்தர் வீட்டு மகளா வந்த தாமரை நாச்சியாருக்கு (குஷ்பூ), பல காட்சிகள்ல நகைகளே தேவைப்படல.
சிறப்பு என்னனா... கோரல், மூன் ஸ்டோன், ரூபி, முத்து, ஜிர்கான்னு ஒரிஜினல் ஜெம் ஸ்டோன்களைத்தான் படத்துல பயன்படுத்தினேன். ரிஸ்க்தான். இதனால டிசைனிங் மட்டுமில்லாம, அந்த நகைகளோட பாதுகாப்புக்கும் நான் பொறுப்பேற்க வேண்டியதாச்சு. இப்ப, 'ரொம்ப தீர்க்கமா இருந்துச்சு அந்த நகைகள்’னு எல்லாரும் பாராட்டறப்போ... ஏக சந்தோஷம்! குறிப்பா, 'ம்ம்ம்... படத்துல உன் வேலையை நீ சூப்பரா பண்ணியிருக்கியாம்... எல்லாரும் சொல்றாங்க... நானும்!’னு என் அப்பா சிரிச்சப்போ, அவ்ளோ பெருமையா இருந்துச்சு. இதுக்கான பரிசுதான் அப்பாவோட அடுத்த படமான 'மம்பட்டியான்’ல நான்தான் ஜுவல்லவரி டிசைனர். எல்லா உழைப்புக்கும் இந்த அங்கீகாரம்தானே முதல் முக்கிய ஊதியம்!''
- சின்ன சிரிப்பு உதிர்த்து காற்றில் பறந்த கூந்தலை கைகோதி முடித்தார் ப்ரீத்தி தியாகராஜன்!

அவள் விகடன்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பொன்னர் - சங்கருக்கும் காவலன் நிலைமைதான்..........

Post by ந.கார்த்தி on Sat Apr 30, 2011 7:40 pm

முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் பொன்னர் - சங்கர். நடிகர் பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்து, அவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள இப்படம் குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வேதனை தெரிவித்துள்ளார். அதில், தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லையென்று சினிமா வட்டாரங்களில் விமர்சிக்கிறார்கள். என்ன செய்வது? படம் எடுப்பதற்கு ஆள் இல்லாமல், ஸ்டுடியோக்களையும், திரையரங்குகளையும் மூடிவிட்டு அந்த இடங்களை திருமண மண்டபங்களாகவும், ஓட்டல்களாகவும், கிடங்குகளாகவும் மாற்றிடும் நிலைமை ஏற்பட்டது ஒரு காலம். இப்போது படங்களை வெளியிட தியேட்டர் கிடைக்கவில்லை என்று அலைகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. நான் எழுதி வெளிவந்துள்ள "பொன்னர் சங்கர் திரைப்படத்துக்கும் எங்கும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அலையாய் அலைந்துதான் தியேட்டர்களைப் பிடிக்க முடிந்தது என்று அதன் தயாரிப்பாளர்கள் கண்ணீர்விட்ட நிகழ்ச்சிகள் எனக்குத் தெரியும். கடலூரில் ஒரு தியேட்டரில் "பொன்னர் சங்கர் திரைப்படம் திரையிடப்பட்டு அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரண்டாம் நாளே அந்தத் திரைப்படத்தை கட்டாயப்படுத்தி எடுத்து விட்டார்கள், என்று கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

பொன்னர் சங்கருக்கு சில வாரங்கள் முன்பு நடிகர் விஜய் நடித்த காவலன் படம் ரீலிஸ் ஆனது. அந்த படத்தை ரீலிஸ் செய்ய தியேட்டர்கள் கிடைக்காமல் படத்தின் தயாரிப்பாளர் ரொம்பவே திணறினார். அப்படியே கிடைத்த தியேட்டர்களிலும் படம் ரீலீஸ் ஆகி ஓரிரு நாட்களில் படத்தை தூக்கச் சொல்லி சிலர் நிர்பந்தித்தார்கள். இதேநிலைதால் விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சட்டப்படி குற்றம் படத்திற்கும் ஏற்பட்டது. அப்போதெல்லாம் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டனர் என்று விஜய்யும், எஸ்.ஏ.சந்திரசேகரும் நேரடியாகவே புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தன்னுடைய கதை, வசனத்தில் உருவான பொன்னர் - சங்கருக்கும் தியேட்டர் கிடைக்காத நிலைமையும், தியேட்டரில் இருந்து கட்டாயப்படுத்தி தூக்கி விட்ட நிலையும் ஏற்பட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதை என்னவென்று சொல்வது?
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்

Post by மஞ்சுபாஷிணி on Sat Apr 30, 2011 10:27 pm

கண்டிப்பா இந்த படம் பார்க்கணும்......
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்

Post by முரளிராஜா on Sun May 01, 2011 7:59 am

நானும் ஆவலோடு உள்ளேன் இந்த படத்தை பார்க்க
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum