ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

புதிய சமயங்கள்
 SK

ஒரு சந்தேகம்??
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வானம் படம் எப்பூடி ?

View previous topic View next topic Go down

வானம் படம் எப்பூடி ?

Post by Guest on Sun May 01, 2011 2:34 pm

வானம் படம் எப்பூடி ?


சில திரைப்படங்கள் வேறு மொழியிலிருந்து ரீமேக் செய்யும் போது, அதற்கு
விமர்சனம் செய்ய சோம்பேறித்தனமாய் இருக்கும் ஆனால் கிரிஷின் வானத்துக்கு
அப்படி சோம்பல் பட முடியவில்லை. தெலுங்கு வர்ஷனான வேதம் விமர்சனம் படிக்க இங்கே க்ளிக்கவும்.
நண்பர் விசா தெலுங்கு பட விமர்சனத்தில் விசனப்பட்டிருந்தார். இம்மாதிரி
கதைகள் எல்லாம் தயாரிப்பாளர் மகன்கள் மட்டுமே நடிக்கிறார்கள். பெரிய
நடிகர்கள் எல்லாம் ஏழைகளுக்கு தையல் மெஷின் கொடுப்பதுதான் முக்கிய
நடிப்பாய் நடித்துக் கொண்டிருக்கிறர்கள் என்று ஆதங்கப்பட்டதை நிவர்த்தி
செய்திருக்கிறார்கள்.

கேபிள் டிவியில் வேலை செய்யும் ராஜா, பெரும் பணக்காரியான ப்ரியாவை
காதலிக்க, அவர்களுடய காதலை சொல்ல, நியூ இயர் பார்ட்டிக்கு ஸ்பெஷல் பாஸ்
வாங்க நாற்பதாயிரம் தேவைப் படுகிறது. என்னவெல்லாமோ முயற்சி செய்து பார்த்து
தோல்வியடைந்திருக்கும் நேரத்தில் ஒரு திருட்டை செய்கிறான். அது அவன்
வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. க்ளைமாக்ஸ் ஆஸ்பிட்டலில்.

ராக்
ஸ்டார் ஆவதுதான் தன் வாழ்வின் லட்சியமாய் கொண்டு அதற்கான வெறியோடு அலைபவன்
பரத். முதல் முறையாக சென்னையில் ஒரு லைவ் ஷோவில் பங்கேற்க வாய்ப்பு வந்து
பெங்களூரில் ப்ளைட்டை மிஸ் செய்து ரோடு வழியாய் சென்னை வரும் போது
சந்திக்கும் ப்ரச்சனைகள். அந்த ப்ரச்சனைகளின் க்ளைமாக்ஸான ஆஸ்பிட்டல்.
வேறு ஒரு ஊரில் ராணியம்மா என்கிற ஒரு ப்ராத்தல் ஓனரிடமிருந்து தப்பித்து,
சென்னையில் தனியாய் தொழில் செய்ய முனைந்து அங்கிருந்து தப்பி வரும் சரோஜா.
தப்பி வந்த இடத்தில் அவளுக்கும் அவளின் திருநங்கை தோழியும் சந்திக்கும்
ப்ரச்சனைகளும் அதன் க்ளைமாக்ஸ் ஆஸ்பிட்டல்.

கந்து
வட்டிக்கு பணம் வாங்கியதால் தன் பேரனை அடகாக வைத்து கொண்டதற்காக தன்
மருமகளின் கிட்னியை விற்று கடனை அடைப்பதற்காக சென்னை வரும் மாமனாரும் ,
மருமகளும். அவர்களின் க்ளைமேக்ஸ் ஆஸ்பிட்டல்.
கோயம்புத்தூரில் நடந்த பிள்ளையார் சதுர்த்தி விழாவில் சாதாரண ப்ரச்சனை மத
ப்ரச்சனையாக மாறி, தன் மனைவியின் கர்ப்பம் கலைந்து நொந்து போயிருக்கும்
பிரகாஷ்ராஜும், சோனியா அகர்வாலும், அன்று காணாமல் போன தன் தம்பியை தேடி
சென்னைக்கு வருகிறார்கள். வந்த இடத்தில் மீண்டும் முஸ்லிம் தீவிரவாதி என்று
சந்தேக வளைக்குள் மாட்டிக் கொண்டு, தீவிரவாதியாய் முத்திரைக் குத்தப்பட்டு
தப்பியோட நினைக்கும் போது காலில் சுடப்படுகிறார். க்ளைமாக்ஸ் ஆஸ்பிட்டல்.

எல்லார் கதைகளும் க்ளைமாக்ஸில் ஹாஸ்பிட்டலில் வந்து நிற்க, ஆஸ்பிட்டலை
தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து எல்லோரையும் கொல்ல
நினைக்கிறார்கள். க்ளைமாக்ஸ் வெள்ளித்திரையில் நிச்சயம் பாருங்கள்.
சிம்பு, சந்தானம் காம்பினேஷன் வழக்கம் போல
ஆரம்பம் முதல் களை கட்டிவிடுகிறது. அதுவும் போலீஸ் ஸ்டேஷனில் அவர்
அடிக்கும் ரகளை. பல டயலாக்குகள் மைண்ட் வாய்ஸிலேயோ, அல்லது
முணுமுணுப்பகத்தான் இருக்கிறது. ஆனால் தியேட்டர் அல்லோல கல்லோல படுகிறது.
“டேய் உன் பைக்கை கொடுறா..” “அதெல்லாம் தரமுடியாது. பைக்கை நான் என்
பொண்டாட்டிப் போல பாத்துக்கறேன்” என்றதும் “ அப்பன்னா ஏண்டா தினம் காலையில
நடு ரோடுல வச்சி கழுவுற”. சிம்பு தெலுங்கில் அல்லு அரவிந்தைவிட கொஞ்சம்
ஹீரோத்தனம் செய்யத்தான் செய்தாலும், இரண்டாவது பாதியில் ஸ்கோர்
செய்துவிடுகிறார். அதே போல சரண்யாவும் அந்த வயதான மாமனாரும், பணம்
தொலைந்துவிட்டு பதறும் பதற்றம் இருக்கிறது அடடா.. உருக்குகிறது.
அனுஷ்காவின் முதல் அறிமுகப்பாடல் தெலுங்கு டப்பிங்காக இருப்பது ஏனோ
உறுத்துகிறது. தெலுங்கு பட காட்சிகளையே உபயோகித்திருப்பது நேட்டிவிட்டியை
கெடுக்கிறது. ப்ரகாஷ்ராஜின் நடிப்பு மற்ற நடிகர்களைப் பார்க்கும் போது
கொஞ்சம் ஓவர் ஆக்டிங்காக படுவதை தவிர்க்க முடியவில்லை. பாடகனாக வரும்
பரத், வேகா ஜோடி தங்கள் பாத்திரம் உணர்ந்து செய்திருக்கிறார்கள். படத்தில்
வரும் ஒவ்வொரு சின்னக் கேரக்டரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்
படுத்தியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு நச். முக்கியமாய் ஆரம்ப சேங்க் காட்சியில்
எடிட்டிங்கும் ஒளிப்பதிவும் போட்டிப் போடுகின்றன. எவண்டீ உன்னை பெத்தான்.
பாடல் எதிர்பார்த்த அளவுக்கு படமாக்கப் படவில்லை என்றுதான் சொல்ல
வேண்டும். யுவனின் இசையில் எவண்டீ பாடலும், இன்னொரு பாடலும், ஒரு
குத்துப் பாட்டும் அதிர வைக்கிறது. பின்னணியிசை ஓகே.

எழுதி இயக்கியவர் கிரிஷ். இவரின் முதல் படமான கம்யத்தை ரிலீஸ் நாளன்று
விஜயவாடாவில் பார்த்தேன். படத்தின் முதல் காட்சியிலிருந்து மிரண்டு போய்
உட்கார்ந்திருந்தேன். அவ்வளவு ஸ்டைலான மேக்கிங், கதை சொல்லல். தெலுங்கு பட
உலகமே அப்படத்தின் வெற்றியை திரும்பிப்பார்த்து, நந்தி அவார்ட் எல்லாம்
கொடுத்து கெளரவித்தது. இந்த படத்தை முதலில் தெலுங்கில் பார்த்ததும் அவர்
மீது இருந்த மரியாதை இன்னும் ரெண்டு மடங்கு ஏறிப் போனது. அவ்வளவு தெளிவான
கதை சொல்லலும், இயக்கமும். தமிழில் அவரே இயக்குகிறார் என்றதும்
ச்ந்தோஷப்பட்டேன். ஒரிஜினல் கதையிலிருந்து சிற்சில மாறுதல்களைத் தவிர மற்ற
எல்லாவற்றையும் அதே அளவில் ஒரிஜினலின் தரம் குறையாமல் தந்திருக்கிறார்.
அனுஷ்காவின் எபிசோடுக்கு ஒரு அழகிய மென் சோகத்தோடு ஆரம்பிக்கும் காட்சிகளை
நறுக்கியது ஏனோ?. அதே போல் க்ளைமாக்ஸில் பரத்தின் முடிவு அக்கேரக்டரின்
பங்களிப்பை குறைப்பது போலத்தான் தோன்றியது.வசனங்கள் தெலுங்கை விட கொஞ்சம்
காரம் குறைவே. எனினும் தமிழில் ஒரு சிறந்த படத்தை கொடுத்ததற்காக கிரிஷ்சை
பாராட்டியே தீர வேண்டும். .
வானம்- நிச்சயம் பார்க்க வேண்டியப் படம்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: வானம் படம் எப்பூடி ?

Post by அருண் on Sun May 01, 2011 3:00 pm

விமர்சனம் பார்த்தா நல்லா இருக்கும் போல பார்த்துடுவோம்!!
நன்றி மதன்..
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: வானம் படம் எப்பூடி ?

Post by Guest on Sun May 01, 2011 5:51 pm

படம் நல்லா இருக்கு அருண் ... 2 தடவை பார்க்கலாம்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: வானம் படம் எப்பூடி ?

Post by தாமு on Mon May 02, 2011 6:15 am

வானம் - என்ன வாழ்க்கைடா இது?


வானம், சிம்பு படத்தில் இருக்க வேண்டிய அத்தனை அம்சங்களும் இருக்கும் படம், ஆனால் நிச்சயமாய் வழக்கமான சிம்பு படம் இல்லை. இந்த படம் எந்த அளவிற்கு வணிக ரீதியாக அல்லது விருது ரீதியாக வெற்றி பெறும் என்று சொல்லும் அளவுக்கு நிதர்சனமானவன் நானில்லை. ஆனால் நான் பார்த்த திரைப்படங்களில் என் மனதை பாதித்த மிகச் சிலத் திரைப்படங்களுள் இதுவும் ஒன்றாகி விட்டது.

ஐங்கோணம்

பணத்திடம் இருந்து படிப்பை மீட்க வேண்டிய குடும்பம், இசைக் கலைஞனாக மாற விரும்பும் இளைஞன், தனியே தொழில் செய்ய நினைக்கும் விலை மாது, சூழ்நிலைகள் செய்யும் சூழ்ச்சியால் தீவிரவாதியாக பார்க்கப்படும் குடும்பஸ்தன், பணக்காரியை மணந்து பணக்காரனாக துடிக்கும் குப்பத்து பையன் என ஐந்து திரைப்படங்களில் வர வேண்டிய கருவை சேர்த்து ஒரே திரைப்படத்தில் அதுவும் தொய்வு ஏதும் இன்றி சொல்லி முடித்திருக்கிறார் கிரிஷ்.

"என்ன வாழ்க்கைடா இது"

இந்த இக்கட்டான சமூக சீர்திருத்த கதையைக் கூட கொஞ்சமும் போர் அடிக்காமல் அங்கங்கே நகைச்சுவையை தூவி நகர்த்தி செல்ல சந்தானம் நன்றாகவே பயன் பட்டிருக்கிறார். கேபிள் ராஜாவாக வரும் சிம்பு நிஜமாகவே இப்போது லிட்டில்-ல் இருந்து யெங் ஆகி விட்டார், நடிப்பில். ஆனாலும் தனது துடுக்குத்தனமான பேச்சுகளை விட்ட மாதிரி தெரியவில்லை.

"கஷ்டப்பட்டு மேல வந்தாலும் தொரத்துரானுன்களே, என்ன வாழ்க்கைடா இது"

என்று தொடங்கும் சிம்பு நிறைய இடங்களில் ( ஒரு பத்து முறைக்கு மேலாவது இருக்கும்)

"என்ன வாழ்க்கைடா இது"

என்று சொல்லும் போது வரும் ஒட்டு மொத்த எரிச்சலையும் இறுதி காட்சியில் உயிர் பிரியும் போது அதே வரிகளை சொல்லி நினைவை விட்டு அகலாமல் செய்து விடுகிறார். பொதுவாகவே படம் முழுவதும் நிறைய இடங்களில் சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லும் படி அமைந்த வசனங்கள் படத்திற்கு பெரிய பிளஸ்.

சடுகுடு சந்தானம் :

முதல் பாதியில் மட்டுமே அதிகம் வரும் சந்தானம் தன் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

*கேபிள் ஓனரிடம், "உனக்கு வலிக்குதுன்னா, எனக்கு மட்டும் என்ன எண்ணெய் தேச்சி குளிக்குதா" என்பதிலும்,

*வண்டி கேட்கும் இடத்தில்,
"வண்டி என் ஒய்ப் மாதிரி யாருக்கும் கொடுக்கமாட்டேன்" என்பவரிடம்,
"அப்பறம் ஏன்டா வாசல்லே வெச்சி வாஷ் பண்ற வெந்து போன வாயா"

*"என்னது டூ வீலருக்கு டிரைவரா அதுக்கு நான் தும்பை பூவுல தூக்கு மாட்டிக்குவன்" என்று சிம்புவிடம் நச்சரிக்கும் இடத்தில்,

*"ஒருத்தங்கிட்ட நாற்பதாயிரம் கேட்டா தானே கிடைக்காது, நாப்பது பேரு கிட்ட ஆயிரம் ஆயிரமா கேப்போம்" எனும் போது,
"அதுக்கு நாற்பதாயிரம் பேரு கிட்ட ஒரு ஒரு ரூபாயா கேக்கலாமே" என்று நக்கல் அடிப்பதிலும்,

*போலீஸ் ஸ்டேசனில் ராதாரவியிடம், "இன்னா சார் ஓட்டல் சப்ளையர் மாதிரி இட்லி மட்டும் தானே இல்லை சட்னி சாம்பார் வடைகறி ன்னு கேட்னு போய்னே இருக்கீங்க" என்று அவரை கலாய்ப்பதிலும் சந்தானம் ட்ரேட்மார்க் தெரிகிறது.
ஆனாலும் பிரளயம் என்ற வார்த்தை வரவில்லை எனுமிடத்தில் சறுக்கி விடுகிறார்.
இன்னும் நிறைய இருக்கிறது படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பாத்திர படைப்புகள் :

பணத்திடம் படிப்பு :

சரண்யாவும், வயதான மாமியாரும் அந்த கதாபாத்திரங்களின் கணத்தில் சரியாக பொருந்தி இருக்கின்றனர். அதிலும் அந்த வயதானவர் ஏழைகளின் நிலையை கண் முன்னே நிறுத்துகிறார். நன்றாக படிக்கும் தன் மகனுக்காக கிட்னியை விற்க துணிகிறாள் தாய், ஆனால் அந்த சிறுவனின் அறிமுகத்தில் கொஞ்சமாவது நல்ல கணக்கை காட்டி இருக்கலாம். (10*100=1000) எனும் சாதாரண கணக்கு கதையோடு ஒட்டவே இல்லை.
ஆனாலும் கடைசியில் ஐம்பதாயிரத்திற்கு முப்பது மாதத்திற்கு இரண்டு ரூபாய் வீதம் மொத்த வட்டி முப்பது ஆயிரம் என்று கணக்கு போடுவதில் அது காணமல் போகிறது.

இசைக் கலைஞன் :

ராக் இசையில் சாதிக்க நினைக்கும் பரத், தன் அம்மாவின் ராணுவ சேவை வேண்டுதலுக்கு,
"The country got a hero when he is gone, but I lost my dad" என்று சொல்வது நச். விமானத்தை தவற விட்டுக் காரில் போகும் பரத் அண்ட் கோ முதலில் ஒரு சிங்கை காப்பாற்றாமல் போவதும் பின்னர் சிங் இவர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றியதும் உதவி மனப்பான்மையை புரிந்து கொள்வதும் என வழக்கமான காட்சிகள் இல்லாமல் இருந்திருக்கலாம், என்றாலும் அவையும் ரசிக்கும் படியே இருந்தன.

விலை மாது :

வேசியாக வரும் அனுஷ்கா வேறொருத்தி பிடியில் இருந்து தப்பி சென்னையில் தனியே தொழில் புரிய ஆசைப்படுவது, போலீஸ் அவளை தன் இழுப்புக்கு பயன்படுத்துவது என பாலியல் தொழிலாளிகளின் மறுபுறம் அப்பட்டம்.
காவல் நிலையத்தில், "நாங்க துணிய அவுத்துட்டு விக்கிறோம், நீங்க துணிய போட்டுக்கிட்டு விக்கிறீங்க" என்று போலீசாரை சாதரணமாக தாக்குகிறார் அனுஷ்கா.

நான் தீவிரவாதி அல்ல:

கோயம்பத்தூரில் எதேச்சையாக ஏற்பட்ட பிழையால் தீவிரவாதி போலவே பார்க்கப்படும் பிரகாஷ்ராஜ் படம் நெடுகிலும் ஒரு வித அனுதாபத்தை முஸ்லிம் நண்பர்கள் மீது வர வைக்கிறார். எல்லா முஸ்லிம்களும் கெட்டவர்களும் இல்லை, எல்லா இந்துக்களும் நல்லவர்களும் இல்லை எனும் நிதர்சனத்தை நிலை நாட்ட பல காட்சிகளை நாடி இருக்கிறார் இயக்குனர்.

கேபிள் ராஜா..!

கேபிள் ராஜாவாக வரும் சிம்பு , ஜாலியாக இருக்கும் பேர்வழி, படத்தில் நிறைய விசயங்களில் ஸ்கோர் செய்கிறார். சந்தானத்துடன் சேர்ந்து காமெடி பண்ணுவதிலும் சரி, ஏழைகளிடம் பணம் பறிக்கும் போது விடும் கணநேரம் வரு கண்ணீர், பணத்தை கொள்ளை அடித்தும் திருப்பி கொடுக்க விரையும் அந்த தாளாமை காட்சி என்று பல இடங்களில் அவரிடத்தில் நிறையவே முதிர்ச்சி. முதலில் காதலியிடம் உண்மையை சொல்ல முடியாமல் தவிப்பது பின்பு உணர்ச்சி வேகத்தில் சாதாரணமாக உண்மைகளை கொட்டுவது என்று கலக்கி இருக்கிறார்.

உலகத்தில் ரெண்டே சாதி தான் ஒண்ணு ஏழை, இன்னொன்னு பணக்காரன் எனும் தத்துவம் காலங்கள் தாண்டியும் மாறாமல் இருக்கிறது. அடுத்த தலைமுறை படங்களிலாவது அது இல்லாமல் இருக்க வேண்டும்.
ஆனால் இவ்வளவு பேர் இருந்தும் ஒரு கதாபாத்திரத்தை பார்த்த உடன் மிகுந்த கோபம் வருமேயானால் அது நிச்சயம் அந்த இடைத்தரகராகத் தான் இருப்பார். பாதி தொகையை முதலிலேயே ஆட்டையை போடுவதும் இல்லாமல் மீதியிலும் கொஞ்சம் பிடித்தம் செய்யும் போது மொத்த பேரின் கரிச்சலை கொட்டி கொள்கிறார்.

ஏதோ ஒன்றிரண்டு முஸ்லிம்களின் தவறுக்கு மொத்த பேரையும் குற்றவளிய்யை பார்க்கும் போலீஸ், சில அயோக்கியர்களுக்காக பலரை காவு வாங்கும் தீவிரவாதிகள் என எதிர் திசையில் ஓடும குதிரைகளில் சவாரி செய்திருக்கிறார் பட இயக்குனர்,கிரிஷ். இறுதிக் காட்சியில் எல்லை மீரும் தீவிரவாதம் என்ன ஆகிறது என்பதை காட்ட வேண்டிய சூழலில் எல்லா படங்களைப் போலவும் நீண்ட துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டார் அவர். எது எப்படி ஆயினும் நிச்சயமாய் பார்க்க வேண்டிய திரைப்படம்.

அட யுவன் பற்றி சொல்ல மறந்து விட்டேனே, மற்ற சிம்பு-யுவன் வெற்றி கூட்டணி போல் பாடல்கள் இதில் இல்லை. இருந்த ஒரு பாடலும் (எவண்டி உன்ன..) படமாக்கல் சரியில்லை.
இருந்தாலும் மோசமான ரகம் எல்லாம் கிடையாது, கேட்கலாம்.

tamiltel
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வானம்

Post by ரேவதி on Sat May 07, 2011 9:45 am
தெலுங்கில் வெளியான வேதம் படத்தை பார்த்துவிட்டு சில இரவுகளை தூக்கமின்றி
கழித்திருக்கிறேன். அற்புதமான திரைப்படம் அது. உங்களுக்குள் பலவித ரசாயன
மாற்றங்களை உண்டுபண்ணிவிடக்கூடிய அருமையான திரைக்கதை!
சிரிப்பு,துக்கம்,கோபம்,ஆர்வம் என படம் முழுக்க வெவ்வேறு உணர்வுகளை
நம்மையும் அறியாமல் ஏற்படுத்தும்.

வெவ்வேறு தளங்களில் இயங்கும் ஐந்து கதைகள். ஒரு குறிப்பிட்ட
சம்பவம்(கிளைமாக்ஸில்) ஐந்துகதைகளுக்குமான முடிவாக இருக்கும். இதைப்போல
அந்தக்காலத்திலேயே முருகன் அருள்,பெருமாள் மகிமை,தேவியின் திருவிளையாடல்
மாதிரியான படங்கள் வெளியாகியிருக்கின்றன.

ஷகிலா நடித்த பெரும்பாலான பிட்டுப்படங்களும் இப்படித்தான். உதாரணத்திற்கு
நவகன்னிகள் என்னும் படத்தில் ஒன்பது இளம் கன்னிகளின் தனித்தனிக்கதைகள்
இறுதியில் ஷகிலாவின் திருவிளையாடலோடு முடிவதாக அமைக்கப்பட்டிருக்கும்.

ஆன்மிகமல்லாத பிட்டுகள் இல்லாத இதுமாதிரி படங்களில் இதுவே நான் பார்க்கும்
முதல் படம். மலையாளத்தில் வெளியான கேரள கஃபே திரைப்படமும் கிட்டத்தட்ட இதே
போல்தான் என்றாலும் அந்த படத்தில் எல்லா கதைகளும் தனித்து இயங்கும். வேதம்
படத்தில் ஐந்து கதைகளும் தனித்தனியாக இயங்கினாலும் இறுதியில் ஆறுகள்
அடையும் கடல் போல கிளைமாக்ஸ். இந்தப் படத்தின் ஒவ்வொரு கதையும் தனித்தனியாக
பிரித்தோமானால் அற்புதமான சிறுகதைகள். உயிரை உலுக்கும் சக்திமிக்க
வசனங்கள் என பட்டையை கிளப்பும்.

ஒரு படத்தில் ஆயிரம் பேரை அடிக்கிற ஹீரோ அடுத்தபடத்தில் அதைவிட அதிகமாக
பத்தாயிரம் பேரையாவது அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் மசாலா மணம்
மாறாத தெலுகு திரைப்பட உலகிலிருந்து இப்படியொரு அற்புதமான படமா என
பிரமித்து போனதுண்டு! நடிக்கவே தெரியாத மஞ்சு மனோஜ், பரபர அல்லு அர்ஜூன் என
இருவர் கூட்டணியில் இத்திரைப்படம் தெலுங்கில் சக்கைபோடு போட்டது.

இவ்வளவு நல்ல படம் தமிழில் வெளியாகிறது என்பதை தெரிந்து கொண்ட போது மிகவும்
மகிழ்ந்தேன். தமிழில் சிம்பு நடிக்கப்போகிறார் என்பதை அறிந்ததுமே அந்த
மகிழ்ச்சி புஸ்ஸாகி புஸ்வானமாகியது. எப்பேர்ப்பட்ட நல்ல படத்தினையும் தன்
அபார திறமையால் மொக்கையாக்குகிற திறமை சிம்புவிற்கு மட்டுமே வாய்த்துள்ளது.
அதிலும் இப்படத்தில் அவர் சிம்பு கிடையாது.. யங் சூப்பர் ஸ்டார் எஸ்டிஆர்.
டைட்டிலிலேயே அலப்பறை பண்ணுகிறவர் படத்திலும் பண்ணாமாலா இருக்கப்போகிறார்!

வானம் படம் முழுக்க சிம்புவின் அட்டகாசம்தான். முகம் மட்டும் அளவுக்கதிகமாக
உப்பலாகி.. உதடுகள் வீங்கி பார்க்கவே பரிதாபமாக இருக்கிறார்.
முகத்திலிருந்த மென்மையான குழந்தைத்தனம் சுத்தமாக மிஸ்ஸிங். அதுவுமில்லாமல்
, தன் இயல்பிலேயே துடிப்பான துருதுரு இளைஞரான அல்லு அர்ஜூனுக்கு (தெலுங்கு
பதிப்பில் நாயகன்) கட்டைக்குரல் , அல்ட்ரா மாடர்ன் பாடி லாங்குவேஜ் சிம்பு
நிச்சயம் மாற்று கிடையாது. அதிலும் சிம்பு அழும் காட்சிகளில் குழந்தைகள்
கூட சிரிக்கத்தொடங்கிவிடுகின்றன. அழும்போது பயபுள்ள அப்படியே அவிங்கப்பா
சாடை!

படம் முழுக்க சில பாடல்களை பாடுகிறார். ஓடுகிறார். ஏனோதானோவென
நடித்திருக்கிறார்! விண்ணைத்தாண்டிவருவாயாவே பரவாவல்ல பாஸ்! (சென்னை
முழுக்க சிம்பு தனக்குத்தானே எஸ்டிஆர் யங் சூப்பர் ஸ்டார் என போஸ்டர்
அடித்து அலும்பு வேறு செய்திருக்கிறார்! அவருக்கு போட்டியாக பரத்தும் தன்
சொந்தகாசில் போஸ்டர் அடித்திருப்பது வரலாற்றில் ஆவணப்படுத்தபடவேண்டிய
செய்தி)

அனுஷ்கா ஒருவாரம்தான் கால்ஷீட் கொடுத்திருப்பார் போல! தெலுங்குபடத்தின்
காட்சிகளையே டப் செய்து உபயோகித்துள்ளனர். கொஞ்சமும் தமிழுக்கு
ஒட்டவேயில்லை. தமிழுக்கேற்றபடி கொஞ்சம் மாற்றியிருக்கலாம். அதிலும் அந்த
விபச்சார விடுதி பாடலுக்கான பாடல்வரிகள் சகிக்கவில்லை ரகம்.

சின்னதளபதி என்று தன்னை அடைமொழியிட்டு அழைத்துக்கொள்ளுகிற பரத் முக்கிய
வேடத்தில் நடித்திருக்கிறார். பாவம் அவர் கேரக்டரை வேண்டுமென்றே
திட்டமிட்டு டம்மி பண்ணிருக்கிறார்கள். அவரும் அதற்கேற்ப முகத்தில் எந்த
உணர்ச்சியும் இல்லாமல் ஜடம் போல நடித்திருப்பது பெருமைக்கு பெருமை
சேர்க்கிறது. இவர்கள் மூவரும் படம் முழுக்க
நம்மை பாடாய் படுத்த படத்தில் பிரகாஷ் ராஜும் சரண்யாவும் ஆறுதல் அளிக்கின்றனர்.

இசை யுவன்ஷங்கர் ராஜாவாம்.. எவன்டி உன்னை பெத்தான் மற்றும் ஒப்பனிங் பாடல்
(என்ன எழவு பாடறாய்ங்கன்னே புரியல்ல) இரண்டுமே இரைச்சல். காது வலி. அந்த
பாடல்களை காட்சிப்படுத்திய விதம் கண்வலி. படத்தில் டைட்டில் போடும் போது
ஒரு பாடல் ஒலிக்கிறது. டைட்டில் முடிந்த மறுவிநாடி இன்னொரு பாடல்
தொடங்குகிறது. தமிழ்சினிமாவின் கடைக்கோடி தொழிலாளிகூட இப்படி ஒரு தவறை
செய்யமாட்டான்! சிம்புவின் யோசனையாக இருக்கலாம்!

இப்படம் பேசுகிற அரசியலை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும். அதிலும்
இஸ்லாமியர்களை இவ்வளவு இணக்கமாகம் மனிதநேயத்துடனும் அண்மைக்கால தமிழ்சினிமா
காட்டியதில்லை. அதற்காக இயக்குனருக்கு பாராட்டு. தீவிரவாதிகள்
என்கிறவர்கள் கைகளில் துப்பாக்கி ஏந்திய படி சுற்றிக்கொண்டிருப்பதில்லை,
அது நமக்குள்ளே இருப்பது.. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது.
அரசாக இருந்தாலும் அப்பாவி மக்களின் மீது ஆதிக்கம் செலுத்தினால் அதுவும்
தீவிரவாத அரசுதான் என்று ஆணித்தரமாக ஒரு செய்தியை சொல்லுகிறது இப்படம்.

இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, அரவாணிகள், கொத்தடிமைகள்,விபச்சாரிகள்,சேரி
பையன்கள் என இப்படத்தின் இயக்குனர் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு கதாபாத்திரமுமே
மிக முக்கியமானவை. சில வசனங்கள் மிக மிக வலிமையானவை. விளிம்பு நிலை
மக்களின் பிரச்சனைகளை நேரடியாக பேசக்கூடியவை.

அவ்வளவு அருமையான கவித்துவமான வேதம் ஏன் வானமாக மாறியபோது பிடிக்காமல்
போனது என்பதை யோசிக்கிறேன். சிம்புவின் ஹீரோயிசம், தப்புந்தவறுமான நடிகர்
தேர்வு! கொஞ்சமும் எடுபடாத இசை. ஒற்றை ஹீரோவுக்காக திரைக்கதையில் செய்த
மாற்றங்கள். இதற்கெல்லாம் மேல் தெலுங்கில் படமெடுத்த இயக்குனருக்கு தமிழ்
தெரியாதென நினைக்கிறேன்! மற்றபடி வானம் பார்த்து கடுப்பாவதை விட வேதம்
பார்த்து சிலிர்க்கலாம்.

----- அதிஷா
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

வானம் திரைப்படத்தை தடை செய்ய தமுமுக கோரிக்கை மனு!

Post by kitcha on Sat May 07, 2011 2:49 pm

திருநெல்வேலி: நடிகர் சிம்பு நடித்த வானம் திரைப்படத்தை தடை செய்ய நெல்லை போலீஸ் கமிஷனரிடம் தமுமுக கோரிக்கை மனு அளித்தனர்.

தமுமுக மாவட்ட நிர்வாகிகள் கையெழுத்திட்டு நெல்லை கமிஷனர் வரதராஜீடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது

நடிகர் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள வானம் திரைப்படத்தில் மன்சூர்கான் என்ற பெயரில் நடிக்கும் நடிகர் தீவிரவாதியாகவும், திருக்குர்ஆன் படிப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என உணர்த்தும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காட்சி முஸ்லிம் மதத்தினர் அனைவரும் தீவிரவாதி என்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது மனவேதனையை அளிக்கிறது.

அது போல் நசீர் என்ற நடிகர் அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார். தீவிரவாத செயல்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த வார்த்தை திரைப்படத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், நசீர் என்ற நடிகரை தேடி சென்று சிலரிடம் கேட்கும் காட்சியில், நசீர் திருவல்லிக்கேணி மசூதியில் போய் தேடும்படி கூறுகின்றனர். இந்த காட்சி தீவிரவாதிகளுக்கு மசூதியில் அடைக்கலம் கொடுப்பது போல் காட்டப்பட்டுள்ளது. இது போனற காட்சிகள் பள்ளிவாசல்களை இழிவுபடுத்து போன்றதாகும்.

மேலும் கதாநாயகன் சிம்பு படத்தின் இறுதி காட்சியில் தீவிரவாதிகளாக தோன்றும் நபர்களிடம் மனிதர்களை பாருங்கள், கடவுளை பார்க்காதீர்கள் என கூறுகிறார். இந்த காட்சி அல்லாஹ்வை விட மனிதன் உயர்ந்தவன் என காட்டப்பட்டுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகத்தில் எங்களது இயக்கத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக வானம் திரைப்படம் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குநர், நடிகர்கள் உட்கருத்துடன் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர்.

எனவே முஸ்லிம்களின் மத உணர்வுகளையும், நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தும் வானம் திரைப்படத்தை தொடர்ந்து திரையிடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அன்த மனுவில் கூறியுள்ளனர்.

தட்ஸ்தமிழ்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: வானம் படம் எப்பூடி ?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum