ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 SK

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 T.N.Balasubramanian

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
 ஜாஹீதாபானு

விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 Dr.S.Soundarapandian

கமல்ஹாசனின் கவிதைகள்
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
 ayyasamy ram

உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 2
 thiru907

கீ பட இசைவெளியீட்டு விழா: பிரபல நடிகரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி!
 பழ.முத்துராமலிங்கம்

ஜுனியர் விகடன் 24.01.18
 Meeran

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 பழ.முத்துராமலிங்கம்

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 sugumaran

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
 ayyasamy ram

நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள்?
 பழ.முத்துராமலிங்கம்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 பழ.முத்துராமலிங்கம்

காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
 thiru907

TNPSC GENERAL KNOWLEDGE MATERIALS
 ayyasamy ram

படங்கள் பதிவேற்றம் --தடங்கல்கள்
 ayyasamy ram

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 பழ.முத்துராமலிங்கம்

இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வியக்க வைக்கும் தொழில்நுட்பம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 heezulia

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Page 16 of 18 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18  Next

View previous topic View next topic Go down

சிறந்த நடிகர் விக்ரம்! - அனுஷ்கா

Post by கார்த்திநடராஜன் on Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.


விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT


Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:26 am; edited 1 time in total
avatar
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 303
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down


Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Wed May 11, 2011 6:32 pm

குத்தாட்டம் போட தீபிகாவா, கத்ரீனாவா? குழப்பத்தில் ஆமிர் கான்


மும்பை: இம்ரான் கானை வைத்து தான் எடுக்கும் டெல்லி பெல்லி படத்தில் குத்துப்பாட்டுக்கு தீபிகாவை எடுக்கலாமா அல்லது கத்ரீனாவை கேட்கலாமா என்று ஆமிர் கான் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டில் தற்போது குத்துப் பாட்டு இல்லாமல் படங்கள் வருவதில்லை. முன்பெல்லாம் குத்துப் பாட்டுக்கு ஆட தனியாக கவர்ச்சி நடிகைகள் இருந்தனர். தற்போது கதாநாயகிகளே நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு குத்தாட்டம் போடுகின்றனர். அதனால் கவர்ச்சி நடிகைகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது.

தீஸ் மார் கான் படத்தில் கத்ரீனாவும், தம் மாரோ தம்மில் படுகவர்ச்சியாக தீபிகாவும் ஆடியுள்ளனர். இந்நிலையில் குத்துப்பாட்டின் முக்கியத்துவத்தை அறிந்த ஆமிர் தான் தயாரிக்கும் டெல்லி பெல்லி படத்தில் ஒரு குத்துப்பாடல் வைக்கவுள்ளார். இதில் ஆட தீபிகா, கத்ரீனா கைப் மற்றும் மல்லிகா ஷெராவத் பெயர்கள் அடிபடுகிறது.

எங்கு பார்த்தாலும் ரன்பிர் கபூரின் முன்னாள் காதலிகளான தீபிகாவுக்கும், கத்ரீனாவுக்கும் தான் போட்டியாக இருக்கிறது. பார்க்கலாம் ஆமிர் யாரைத் தான் தேர்வு செய்கிறார் என்று.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Wed May 11, 2011 6:33 pm

எஸ்வி சேகர் மகன் திருமண நிச்சயதார்த்தம்... ஜி கே வாசன் வாழ்த்து!!


முன்னாள் எம்எல்ஏவும் நடிகருமான எஸ்வி சேகர் மகன் அஸ்வின் சேகர் - ஸ்ருதி திருமண நிச்சயதார்த்தம் ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடந்தது.

மணமகள் ஸ்ருதி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த வெங்கட்ராமனின் மகள்.

சென்னை ஜிஆர்டி நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த நிச்சயதார்த்ததுக்கு மத்திய அமைச்சர் ஜிகே வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன், ஜெகத்ரட்சகன், சோ, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு, சுந்தர் சி உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்துக் கூறினர். இருப்பினும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வரவில்லை. மயிலாப்பூர் தொகுதியில் சீட் தருவதாக கூறி எஸ்.வி.சேகரை கடும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியவர் தங்கபாலு என்பது நினைவிருக்கலாம்.

வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி சென்னையில் மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.

அஸ்வின் சேகர் வேகம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்போது நினைவில் நின்றவள் உள்பட 2 படங்களில் நடித்து வருகிறார்.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Wed May 11, 2011 6:34 pm

நடிகர் அருண் விஜய்க்கு ஆண் குழந்தை

சென்னை: பிரபல நடிகர் அருண் விஜய் - ஆர்த்தி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

அருண் விஜய் - ஆர்த்தி தம்பதிக்கு ஏற்கனவே 2 வயதில் பூர்வா என்ற மகள் இருக்கிறாள். இரண்டாவது முறையாக கருவுற்ற ஆர்த்திக்கு நேற்று பிற்பகல் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.

'தடையற தாக்க' என்ற படத்தில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய்க்கு குழந்தை பிறந்த தகவல் தெரிவிக்கப்பட்டதும், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு விரைந்து வந்தார். மனைவியையும், குழந்தையையும் பார்த்து மகிழ்ந்த அவர், மருத்துவமனை ஊழியர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழந்தார்.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by கலைவேந்தன் on Wed May 11, 2011 9:25 pm

இன்றைய சினிமாச்செய்திகளுக்கு நன்றி கார்த்தி..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Thu May 12, 2011 9:16 am

ஆழியாறு அணையை மாசுபடுத்தும் பிரபுதேவா குழு: பொதுமக்கள் அதிருப்தி


ஆனைமலை: ஆழியாறு அணையில் பிரபுதேவா படக்குழுவினர் ரசாயனத்தைக் கலந்து நீரை மாசுப்படுத்தவதாக அதிகாரிகளும், பொது மக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

பிரபுதேவா இயக்கும் படம்

விஷால், சமீரா ரெட்டி நடிக்கும் படத்தினை பிரபுதேவா இயக்கி வருகிறார். ஆனைமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் படபிடிப்பு நடக்கிறது. இப்படத்தின் பாடல் காட்சி, ஆழியாறு அணை ஜீரோ பாயிண்ட்டில் நேற்று நடந்தது. இதற்காக அணைக்குள் செட் போட்டுள்ளனர்.

கொட்டப்பட்ட ரசாயனம்

முதலில் அணை நீரில் ரசாயனம் ஊற்றப்பட்டு தண்ணீர் பச்சை நிறமாக மாற்றப்பட்டது. பிறகு அந்த நீரில் ஆடு, மாடு, மீன், கொக்கு உருவங்கள் வரையப்பட்ட அட்டைகள் நடப்பட்டன. அணைக்குள் சவுக்கு கட்டைகளை நட்டு, மணல் மூட்டைகள் போடப்பட்டு மேடாக்கப்பட்டு அதன்பின்னரே படப்பிடிப்பு துவங்கியது.

பயணிகளுக்கு அனுமதி இல்லை

அணையின் மேல் பகுதியில் 20-க்கும் அதிகமான வாகனங்களை வரிசையாக நிறுத்தி, சுற்றுலாப் பயணிகள் யாரையும் அணையைப் பார்க்க அனுமதிக்காததால் அவர்கள் எரிச்சல் அடைந்தனர். ரசாயனத்தை அணைக்குள் கொட்டி தண்ணீரின் நிறத்தை மாற்றுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், தண்ணீரை குடிநீராகப் பயன்படுத்துவோரும், வன விலங்குகளும் பாதிக்கும் அபாயமும் உள்ளது.

அனுமதியை மீறும் படக்குழுவினர்கள்

'அணைக்கும், அணையில் உள்ள நீருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் படமெடுக்க வேண்டும்' என்ற நிபந்தனைகளுக்குப் பிறகே அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் அனுமதி கிடைத்ததும் படக்குழுவினர் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுவிடுகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பிற்கென சென்னை தலைமையிடத்தில் அனுமதி பெற்றுள்ளனர். இரண்டு நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது.

படக்குழுவினர் சென்னையில் அனுமதி பெற்று வந்துவிடுவதால், இங்குள்ள அதிகாரிகளால் எந்த கட்டுப்பாடும் விதிக்க முடிவதில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Thu May 12, 2011 9:17 am

'ரமலத்துக்கு துரோகம் செய்த நயன்தாரா சீதையா?'-இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு


பிரபுதேவா மனைவி ரமலத்தை பிரியக் காரணமாக இருந்த நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பதா, என இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தெலுங்கில் தயாராகும் 'ராம ராஜ்ஜியம்' படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். ராமாயண கதையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. இதில் நயன்தாரா சீதை வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது.

இதில் ராமர் வேடத்தில் பாலகிருஷ்ணாவும், வால்மீகி முனிவர் வேடத்தில் அக்கினேனி நாகேஸ்வரராகவும், லட்சுமணன் வேடத்தில் ஸ்ரீகாந்தும் நடிக்கின்றனர்.

புராண கதை என்பதால் இப்படத்தில் நயன்தாரா நடிக்க பிரபுதேவா சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாரா சீதையாக நடிக்க இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

தெலுங்கில் தயாராகும் ராம ராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பது இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. பிரபுதேவா திருமணமானவர். மனைவி ரம்லத் மற்றும் குழந்தைகளுடன் வசிப்பவர். அவர் வாழ்க்கையில் புகுந்து ரம்லத்துக்கு துரோகம் செய்தவர் நயன்தாரா.

எனவே சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு தகுதி இல்லை. அவரை படத்தில் இருந்து நீக்கவேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் ராம ராஜ்ஜியம் படத்தை திரையிடவிடாமல் தடுப்போம். ஆந்திர மக்களும் இதை புறக்கணிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டு உள்ளார்.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Thu May 12, 2011 9:17 am

செல்வராகவன் - ஆண்ட்ரியா லடாய்... தனுஷுடன் நடிக்க மறுப்பு!

தனுஷ் நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தில் நடிக்க மறுத்து வெளியேறினார் நடிகை ஆண்ட்ரியா. இயக்குநர் செல்வராகவன் எவ்வளவோ கேட்டும் மறுத்துவிட்டார் ஆண்ட்ரியா. எனவே ரிச்சா கங்கா பாத்யாய் நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார் செல்வராகவன்.

செல்வராகவனுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ரகசிய காதல் என்றும், அதனால்தான் சோனியா அகர்வால் செல்வராகவனை விவாகரத்து செய்யும் அளவுக்குப் போனார் என்றும் முன்பு பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஆனால் இதை செல்வராகவன் மறுத்தார். ஆண்ட்ரியா அமைதி காத்தார்.

இந்த நிலையில் செல்வராகவனுக்கும் கீதாஞ்சலி என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது.

இந்த நிலையில் செல்வராகவன் இயக்க தனுஷ் நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் ஆண்ட்ரியா.

ஆனால் படப்பிடிப்பின் ஒரு பகுதி முடிந்து, அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கிய நிலையில், இப்போது நடிக்க மறுத்து வெளியேறியுள்ளார். படத்தை முடித்து கொடுக்குமாறு செல்வராகவன் திரும்ப திரும்ப வேண்டியும் அவர் வரவில்லை.

இதையடுத்து ஆண்ட்ரியாவுக்கு பதில் ரிச்சா கங்கா பாத்யாய் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ஆண்ட்ரியா நடித்த காட்சிகள் வெட்டி எறியப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. இந்த ரிச்சாதான் ஒஸ்தி படத்தில் சிம்பு ஜோடியாக நடிப்பவர்.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Fri May 13, 2011 10:38 am

அழகர்சாமியின் குதிரை - திரை விமர்சனம்

பாஸ்கர் சக்தி எழுதிய நாவலைத் தழுவி, சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ‘அழகர்சாமியின் குதிரை’. இசைஞானி இளையராஜாவின் இசை ஆதிக்கம் படத்தின் ஆரம்பித்திலிருந்தே துவங்கி விடுகிறது.

தேனி அருகிலுள்ள மல்லயபுரம் கிராமத்தில் உள்ள அழகர்சாமி கோவிலில் ஆண்டுக்கொரு முறை திருவிழா நடக்கும். அந்த திருவிழாவின் போது அழகர்சாமி, அவருடைய மரக்குதிரையில் ஏறி ஊர்முழுக்க பவனி வருவார். அப்படி வந்தால்தான் ஊருக்குள் மழை பொழியும் என்பது அக்கிராம மக்களின் நம்பிக்கை.

மூன்று வருடத்திற்குப் பிறகு, அக்கோவிலில் திருவிழா நடக்க இருக்கும் சமயத்தில் அழகர்சாமியின் மரக்குதிரை, திடீரென்று காணாமல் போய்விடுகிறது. இதனால் திருவிழா தடைபட, கலக்கமடையும் கிராம மக்கள் அந்த மரக்குதிரையை தேடிச் சலித்து விட்டு, கடைசியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கின்றனர்.

அதனைக் கண்டுபிடிக்க ஒரு போலிஸ்காரரே அக்கிராமத்திற்கே வருகிறார். அவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மலையாள மந்திரவாதி ஒருவர் குருட்டாம் போக்கில் ‘அக்குதிரை காட்டில் இருக்கிறது’ என்று சொல்ல, குதிரையைத் தேடி காட்டுக்குள் செல்கின்றனர்.

அதே சமயத்தில், மல்லயபுரத்திற்கு அருகே உள்ள அகமலை கிராமத்தில் குதிரையை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார் அழகர்சாமியாக வரும் அப்புக் குட்டி. அவரது குதிரை காட்டிற்குள் மேய்ந்து கொண்டிருக்க, அங்கு வரும் ஊர் மக்கள் அப்புக்குட்டியின் குதிரையை, மரக்குதிரைதான் கடவுள் அருளால் நிஜக்குதிரையாகியிருக்கிறது என நினைத்து, அக்குதிரையை அழைத்துச் சென்று விடுகின்றனர். திருவிழாவும் ஆரம்பித்து விடுகிறது.

தன் குதிரையைக் காணமல் தவிக்கும் அப்புக் குட்டி, எல்லா இடத்திலும் தேடிப் பார்த்து விட்டு கடைசியில் மல்லயபுரம் கோவிலில் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அவரது குதிரையை கூட்டிச் செல்ல முயல்கையில் ஊர் மக்கள் அவரை அடித்து அனுப்புகின்றனர். அவர் தன் குதிரையை மீட்டுத் தருமாறு காவல் துறையில் புகார் தருகிறார்.

இதனால் காவல் துறையினரின் தேடுதல் வேட்டை தீவிரமாகிறது. அழகர் சாமியின் மரக்குதிரை கிடைத்ததா? அப்புக்குட்டியின் குதிரை மீட்கப்பட்டதா? ஊர் திருவிழா நடந்ததா? என்பதை மிகவும் சுவாரசியமாகக் காட்டி, கடைசியில் எதிர்பாராத திருப்பத்துடன் சுபம் போடுகிறார்கள்.

குதிரைக்காரராக வரும் அழகர்சாமி பாத்திரத்தில் அப்புக் குட்டி. அந்த பாத்திரத்திற்கு மிகச் சரியான தேர்வு. தன் குதிரை மீது பாசம் வைத்திருப்பதாகட்டும், ஊர்மக்களின் முன்பு தன் குதிரையை மீட்க போராடுவதாகட்டும் மனிதர் வெள்ளந்தியாய் நடித்திருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக சரண்யா மோகன். இவரும் தன் பாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார். கிராமத்துப் பெண் எப்படியிருப்பார், திருமணத்தை எதிர் நோக்கியிருக்கும் பெண் எப்படியிருப்பார் என உணர்ந்து நடித்திருக்கிறார்.

ஊர் தர்மகர்த்தாவின் மகனாக வரும் கேரக்டர் மனதில் நிற்கும் கேரக்டர். கிராமத்து மக்களின் மூட நம்பிக்கைகளை சாடும் ஒற்றை மனிதாராக வருகிறார். ‘சாமி இருக்குதுன்னா எப்படிடா மூணு வருஷம் திருவிழா நடக்காம போச்சு, எப்படிடா குதிரை காணாம போச்சு’ என நெத்தியடியாய் கேட்கிறார்.

மலையாள மந்திரவாதியாக வரும் ‘மேனஜர்’ கிருஷ்ணமூர்த்தியும், குதிரையை கண்டுபிடிக்க வரும் போலீஸ்காரராக சூரியும் நடித்திருப்பது மட்டுமின்றி, படத்தின் காமெடி பகுதியை கவனித்துக் கொள்கின்றனர்.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மிக நேர்த்தி. கிராமத்தின் சூழல், திருவிழாக் கோலம், ஊர் பெரிசுகளின் அடாவடிகள் என அனைத்தையும் நம் கண் முன்னே நிறுத்துகிறார்.

இளையராஜாவின் இசை இப்படத்திற்கு பெரிய பலம். பின்னணி இசையில் தன் இசை ராஜாங்கத்தை நடத்தியிருக்கிறார். ‘பூவைக் கேளு... காத்தைக் கேளு... என்னைப் பத்தி சொல்லும்...’ காதில் ரீங்காரமிடும் பாடலாகும்.

இப்படத்தின் கதாநாயகனே இப்படத்தின் திரைக்கதைதான். எதார்த்தமான கதையை, திரைவடிவமாக்கியிருப்பதற்கு சுசீந்திரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு கிராமத்தில் உள்ள நடைமுறைகள், அவர்களூடே அவர்களையே அறியாமல் பொதிந்து கிடக்கும் மூடபழக்கங்கள் என அனைத்தையும் நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்.

“அந்த குதிரையை மை போட்டு நான் கண்டு பிடிக்கிறேன்” என்று மந்திரவாதி கிருஷ்ணமூர்த்தி சொல்ல, ஒரு சிறுவன் “உன்னிடமிருந்து ஒரு மண்டை ஓட்டை எடுத்திருக்கேன். அதையே உன்னால கண்டுபிடிக்க முடியல.. நீ மரக்குதிரையை கண்டுபிடிப்பியா..?’’ என்று கிண்டல் செய்கிறான்.

இது அறியாமை மற்றும் மூட நம்பிக்கைளில் அடைந்து கிடக்கும் மக்களுக்கு சொல்வது போல், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நகைச்சுவையில் ஊசி ஏற்றிச் சொல்லியிருக்கிறார் சுசீந்திரன்.

அப்புக்குட்டிக்கு ஏற்ற ஜோடியாக சரண்யா மோகன் இல்லை. அவருக்கு பதில் ஏதேனும் ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்தியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

நடிகைகளின் சதையை நம்பாமல், கதையை நம்பி படம் எடுத்த்தற்கும், பிரபல கதாநாயகர்களுக்காக படத்தை எடுக்காமல் கதையை கதாநாயகனாக்கியதற்க்காகவும் இயக்குனர் சுசீந்திரனுக்கு பலமான கைத்தட்டல் கொடுக்கலாம்.

எதார்த்தமான கிராமத்து வாழ்க்கையை, திருவிழா கோலத்தில் காண ஏற்ற படம் இந்த ‘அழகர்சாமியின் குதிரை’.
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Fri May 13, 2011 10:39 am

எதார்த்தங்களோடு அழகர்சாமியின் குதிரை!

"வெண்ணிலா கபடிகுழு", "நான் மகான் அல்ல" போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் அடுத்து இயக்கி வெளிவந்திருக்கும் படம் தான் "அழகர்சாமியின் குதிரை". காணாமல் போகும் குதிரையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், 2005ம் ஆண்டில் பாஸ்கர் சக்தி ஒரு வார இதழில் எழுதிய கதையே இப்போது படமாக வந்துள்ளது. எம்.ஜி.ஆர்., நடித்த மலைக்கள்ளன் படத்திற்கு பிறகு, மல்லையாபுரம் சென்ட்ரல் ஸ்டேஷன் போன்ற இடங்களில் சூட்டிங் நடத்தியிருக்கின்றனர்.

படம் ரொம்பவே எளிமையாக எதார்த்தமாக வரவேண்டும் என்பதற்காக ரூ.1லட்சத்திற்கு மேல் புதிய உடைகளை அந்த கிராமத்து மக்களுக்கு வாங்கி கொடுத்து, அவர்கள் பயன்படுத்திய பழைய உடைகளை வாங்கி படப்பிடிப்புக்கு பயன்படுத்தியுள்ளனர். படம் முழுக்க பசுமை போர்த்திய காட்சிகளை இதயத்தை இதமாக்கியிருந்தாலும், இசைக்சேர்ப்புக்கு ஹங்கேரியில் இருந்து 5பேரை வரவழைத்து பின்னணி இசையை பின்னி எடுத்தி விட்டாராம் இசைஞானி இளையராஜா.
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Fri May 13, 2011 10:39 am

பாட்டு எழுதித் தள்ளும் சிம்பு.!

சிம்பு தான் இயக்கி நடிக்கும் படங்களில் எப்போதும் ஒரு பாடலையாவது எழுதி விடுவார். ஏற்கனவே "லூஸுப் பெண்ணே" , "எவன்டி உன்ன பெத்தான்" போன்ற பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

சிம்பு நடித்து வெளிவந்துள்ள 'வானம்' படத்திற்காக எழுதிய "எவன்டி உன்ன பெத்தான்" பாடல் இப்போது இந்தியிலும் ஆல்பமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த பாடல்களைப் போலவே தான் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் 'போடா போடி' படத்திற்காக ஒரு பாடலை எழுதியுள்ளார்.

நான் கரக்ட் ஆனவன், ரொம்ப நல்லவன்
CONFUSION இல்லாதவன் மன்மதன் வல்லவன்
பதினெட்டு வயசு வரைக்கும் நல்லா படிச்சு படிப்ப லவ் பண்ணிட்டேன்
21 வயசு வரைக்கும் வேலைக்கு போய் வேலையே லவ் பண்ணிட்டேன்
இப்போ ஒரு பொண்ணா லவ் பண்லான்னும் தோணுதுங்க மனசு ஏங்குதுங்க ஏங்குதுங்க
இவ்வளவு நாள் ஜாலியா இருந்துடேன்னா ஒரு பொண்ணாலா காலி ஆய்டேன்னா
ஒரு பொண்ணாலா காலி ஆய்டேன்னா அய்யோ
So CONFUSIONங்க தலை எல்லாம் சுத்துதுங்க சுத்துதுங்க
அட்வைஸ் சொல்லுங்க கொஞ்சம் அட்வைஸ் சொல்லுங்க
So லவ் பண்ணாலாமா வேண்டாமா சொல்லுங்க
லவ் பண்ணாலாமா வேண்டாமா
லவ் பண்ணலாமா வேண்டாமா லவ் வேண்டாமா பண்ணலாமா லவ்

என்று போகிறது அந்த பாடல்.

அதைப் போலவே தான் இயக்கி நடிப்பதாக இருக்கும் 'வாலிபன்' படத்திற்காகவும் ஒரு பாடலை எழுதியுள்ளார். அப்பாடல்

நான் உன்ன லவ் பண்றேன் நீ என்னை லவ் பண்றீயா
அப்படின்னு நான் உன்னை கேட்க மாட்டேன்

ஏன்னா நீயும் லவ் பண்ணலேனு சொன்னா நான் தாங்க மாட்டேன்
ஏன்னா நீயும் லவ் பண்ணலேனு சொன்னா நான் தாங்க மாட்டேன்

நீ என்னை கட்டிப்பியா ஏன் பிள்ளையா பெத்துப்பியா
அப்படின்னு நான் உன்னை கேட்க மாட்டேன்

ஏன்னா நீயும் பெத்துக்க மாட்டேன்னு சொன்னா நான் தாங்க மாட்டேன்
ஏன்னா நீயும் பெத்துக்க மாட்டேன்னு சொன்னா நான் தாங்க மாட்டேன்

என்று போகிறது அந்த பாடல். தான் எழுதி பாடும் பாடல்கள் யாவும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறுவது போலவே இந்த பாடலும் மிகுந்த வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையுடம் இருக்கிறாராம் சிம்பு.
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Fri May 13, 2011 10:41 am

அமீரின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "கண்ணபிரான்"


"ராம்", "மெளம் ***பேசியதே", "பருத்திவீரன்" போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய டைரக்டர் அமீர், தற்போது "ஜெயம்" ரவியை வைத்து "ஆதி பகவான்" என்ற படத்தை இயக்கி வருகிறார். "எங்கேயும் காதல்" படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் இந்தபடத்தில் மிகவும் வித்யாசமான கேரக்டரில் நடித்து வருகிறாராம். இந்தபடத்தை முடித்த பின்னர் அமீர், அடுத்து "கண்ணபிரான்" என்ற படத்தை இயக்க இருக்கிறர். இப்படத்தின் நாயகனாக நமது இளைய தளபதி விஜய் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Fri May 13, 2011 10:42 am

'முழுகாமல்' இருக்கிறார் ஷில்பா ஷெட்டி!

நடிகை ஷில்பா ஷெட்டி கர்ப்பமாக இருக்கிறாராம். இதனால் அவரும், கணவர் ராஜ் குந்த்ராவும் படு சந்தோஷமாகியுள்ளனர்.

நடிகையாக ஷில்பாவின் கிராக்கி மங்கிப் போய் வெகு காலமாகி விட்டது. இப்போது அவர் தனது காதல் கணவருடன் லண்டனில் குடித்தனம் செய்து வருகிறார். கூடவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் புதிய சந்தோஷமாக கர்ப்பமாகியிருக்கிறார் ஷில்பா. 2 ஆண்டுகளுக்கு முன்புதான் இவர்களுக்குத் திருமணமானது. தற்போது இவர்களின் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு குட்டிப் பாப்பா வரவுள்ளது.

ஷில்பாவுக்கு இது முதல் குழந்தையாகும். அதேசமயம், ராஜ் குந்த்ராவுக்கு இது 2வது குழந்தையாகும். ராஜ் குந்த்ராவின் முதல் மனைவி கவிதா. இவர்களுக்கு டலீனா என்ற பெண் குழந்தை உள்ளது. இக்குழந்தைக்கு இப்போது 6 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே குழந்தைச் செல்வம் குறித்து ஷில்பா அளித்திருந்த ஒரு பேட்டியில், எனக்குக் குழந்தைகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். குழந்தைப் பேறுக்காக காத்திருக்கிறேன். குறைந்தது 2 குழந்தைகளாவது பெற்றுக் கொள்வேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் முதல் முறையாக தாயாகியிருக்கிறார் ஷில்பா.

ஷில்பாவுக்கும், ராஜ் குந்த்ராவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்திற்காக தனது மனைவி கவிதாவை உதறித் தள்ளினார் குந்த்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Fri May 13, 2011 10:43 am

காமசூத்ரா விளம்பர நடிகைக்கு திருமணம்!

காமசூத்ரா விளம்பரத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சுவேதா மேனன் தனது காதலனை திருமணம் செய்யவிருக்கிறார். மலையாளத்தில் அனஸ்வரம் என்ற படத்தில் மம்முட்டி ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சுவேதா மேனன். தமிழில் விரைவில் வெளியாகவிருக்கும் தாரம் படத்தில் நடித்திருக்கிறார். இதுதவிர இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கும் சுவேதா மேனனனுக்கு சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வளாஞ்சேரி ஆகும். மும்***பையில் பிறந்து வளர்ந்த சுவேதா மேனன், அங்குள்ள ஒரு வார இதழில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஸ்ரீவத்சன் மேனனை காதலித்து வந்தார். இவர்களுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து சுவேதா மேனன்- ஸ்ரீவத்சவ் மேனன் திருமணம் வருகிற 18ம்தேதி நடைபெற உள்ளது.

நடிகை சுவேதா மேனன் 1994ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் ஆகியோர் கலந்து கொண்ட இந்திய அழகி போட்டியில் 3வது இடம் பிடித்தவர்தான் இந்த சுவேதா சென் என்பது கூடுதல் தகவல்.
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Fri May 13, 2011 10:44 am

ஹன்சிகாவை மிரட்டும் ஆந்திர புயல் ரிச்சா!

தமன்னா புகழ் பாடிய தமிழ்சினிமா, சிலபல காரணங்களால் டாப்ஸியை புகழோ புகழென்று புகழ்ந்தது. அதன் பிறகு அவரையும் கைகழுவிவிட்டு ஹன்சிகா பக்கம் திரும்பியது பார்வை. இப்போது ஹன்சிகாவை மிரட்ட ஆந்திராவில் இருந்து களமிறங்கியிருக்கிறது ஒரு புயல். அவர் பெயர் ரிச்சா. ஆந்திராவில் இருந்து. முதலில் அம்மணியின் அழகை நம்பி அழைத்தவர் செல்வராகவன்தான். தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் இரண்டாம் உலகம் படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆன்ட்ரியா அதிரடியாக நீக்கப்பட்டு அங்கே அமர்த்தப்பட்டார் ரிச்சா.

செல்வராகவனைத் தொடர்ந்து சிம்புவும் தனது அடுத்த படமான ஒஸ்தியில் அம்மணியை புக் பண்ணி விட்டாராம். ஹன்சிகா வந்த புதிதில் இருந்த எழுச்சி இப்போது இந்த ரிச்சாவுக்கும் இருக்கிறது என்கிறது கோடம்பாக்கம்! நிலைமையை உணர்ந்த ரிச்சா, சென்னையில் ஒரு மேனேஜரை நியமித்து கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார்.

ஹன்சிகா மோகம் சரிந்ததற்கு காரணம், அவர் நடித்த மாப்பிள்ளை, எங்கேயும் காதல் என இரண்டு படங்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தை அளித்ததால்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?
நன்றி TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Fri May 13, 2011 10:58 am

பிரேசில் திரைப்படவிழாவில் பாண்டியராஜன

சிறந்த நடிகரும், இயக்குநருமான பாண்டியராஜன் முதன்முறையாக "ஹெல்ப்" என்ற ஆங்கில குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற மே 20ம் தேதி பிரேசிலில் நடக்கும் ஆர்ட்டெக்கோ பிலிம் விழாவில் பங்கேற்க இருக்கிறது.

இதுகுறித்து பாண்டியராஜன் கூறியதாவது, என்னுடைய ஹெல்ப் படம் பிரேசில் விழாவில் பங்கேற்க இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஹெல்ப் படம் 11நிமிடம் ஓடக்கூடியது. பொதுவாக பாண்டியராஜன் என்றால் ***காமெடி பண்ணுபவன் என்று எல்லோரும் எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். குறும்படம் இயக்குவது இதுமுதல் முறையல்ல. ஏற்கனவே தமிழில் மூன்று குறும்படங்கள் இயக்கியுள்ளேன். முதன்முதலில் நான் இயக்கிய தமிழ் குறும்படமான மகன் படம், குழந்தை தொழிலாளர்கள் பற்றிய படம். இப்படம் ஐதராபாத்தில் நடந்த சர்***வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் பங்கேற்றது. மேலும் இந்தபடம் 35 மொழிகளில் டப் செய்யப்பட்டது. அதன்பின்னர் இரு துளிகள் என்ற குறும்படத்தை இயக்கினேன். இப்படம் போலியா தடுப்பு பற்றிய விழிப்புணர்வு படம், அதற்கடுத்து உடலுறுப்பு தானம் செய்வதன் முக்கியத்துவம் பற்றிய குறும்படத்தை இயக்கினேன். இந்த இரண்டு படங்களும் லக்னோவில் நடந்த பிலிம் திருவிழாவில் திரையிடப்பட்டது. மேலும் இப்போது இரண்டு குறும்படம்ங்கள் இயக்குவது தொடர்பான வேலையில் இறங்கியுள்ளேன். தொடர்ந்து இதுபோன்ற விழிப்புணர்வு குறும் படங்களை இயக்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Fri May 13, 2011 10:58 am

ஹீரோ ரேஸில் ஜீவா முன்னணி!

இது ******ஜீவா வருடம். சிங்கம் புலி, கோ என அடுத்தடுத்த ஹிட்கள். இதுமட்டுமின்றி ஜீவா நடித்து வரும், ரௌத்திரம், வந்தான் வென்றான், நண்பன் என வரப் போகிற படங்களும் எதிர்பார்ப்புக்கு***ரியவை. ஜீவாவின் மார்க்கெட் 'கோ' படத்தின் மூலம் பட்டையை கிளிப்பியுள்ளது. மேலும் 'கோ' படம் வசூலிலும் பட்டையை கிளிப்பியுள்ளது. இதனையடுத்து கோலிவுட் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் ஜீவா கால்ஷீட் வாங்குவதற்குக்காக ஜீவா வீட்டிற்கு படை எடுத்து வருகின்றனர். கோலிவுட் ஹீரோ ரேஸில் ஜீவா படு வேகமாக சென்று கொண்டிருக்கிறார்.
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Fri May 13, 2011 10:59 am

வேலாயுதம் கூத்து! விஜய்-விஜய் நெருக்கம்!

"வேலாயுதம்", விஜய் - "ஜெயம்" ராஜா, ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூட்டணி இணைந்திருக்கும் இத்திரைப்படம் ஏற்கனவே பல்வேறு பஞ்சாயத்துகளில் சிக்கித்தவித்து வரும் வேளையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியால் புதிதாக ஒரு பஞ்சாயத்து கிளம்பி இருக்கிறது!

அதாகப்பட்டது இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நாயகர் விஜய்யின், சென்னை - சாலிகிராமம் இல்லத்தில் ரெக்கார்டிங் தியேட்டர் வைத்தும் கொள்ளும் அளவு விஜய்க்கு நெருக்கம் என்பதால் "வேலாயுதம்" படத்திற்காக தான் போடும் டியூன்களை எல்லாம் நேரடியாக விஜய்யிடம் காட்டியே ஓ.கே., வாங்கி வருகிறாராம். இதனால் கடுப்பில் இருக்கிறாராம் இயக்குநர் "ஜெயம்" ராஜா! நெசம்தானா...?!
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Fri May 13, 2011 10:59 am

சித்தார்த்-ஸ்ருதி "'லிவிங் இன்"'?

பத்திரிகைகளில் இப்போதைய ஹாட் டாபிக், கமல் மகள் ஸ்ருதியும் நடிகர் சித்தார்த்துபம் லிவிங்-இன் ஸ்டைலில் திருமணம் ஆகாமலேயே ஒன்றாக வசிக்கிறார்கள் என்பதுதான்.

கமல் மகள் ஸ்ருதியும் சித்தார்த்தும் அனக்னக ஓ தீருடு என்ற தெலுங்குப் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போதிலிருந்தே இருவருக்கும் காதல் என்று செய்திகள் வெளியாகின. சித்தார்த் ஏற்கெனவே மனைவியை விவாகரத்து செய்தவர் என்பதால் இந்த செய்திக்கு கூடுதல் கவன ஈர்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில், மும்பை ஆங்கிலப் பத்திரிகை நேற்று பரபரப்பாக ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் ஸ்ருதியும் சித்தார்த்தும் ஒரே வீட்டில் திருமணமாகாமல் கணவன் மனைவியாய் வசிப்பதாகவும், இது கமல்ஹாசனுக்குத் தெரியும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஸ்ருதியிடம் கேட்டபோது, "எனது தனிப்பட்ட விஷயங்களை மீடியாவில் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை. அது மீடியாவுக்கு தேவையில்லாததும் கூட", என்றார்.
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Fri May 13, 2011 11:00 am

கமலின் விஸ்வரூபம் ஜூனில் துவக்கம்!

விசா பிரச்ச***னையால் தள்ளிப்போன கமலின் விஸ்வரூபம் படம் ஜூனில் துவங்கப்பட இருக்கிறது. டைரக்டர் செல்வராகவன் இரண்டாம் உலகம் படத்தை தொடர்ந்து அடுத்து கமலை வைத்து விஸ்வரூபம் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பாலிவுட்டின் இளம் நடிகை சோனாக்ஷி சின்கா நடிக்கிறார். கடந்த மாதமே இப்படம் துவங்கப்பட இருந்தது. இப்படம் வெளிநாட்டில் சூட்டிங் செய்யப்பட இருந்ததால் விசாவுக்கு அப்ளே செய்து இருந்தனர். ஆனால் விசா உடனடியாக கிடைக்காததால் இப்படம் தள்ளிபோனது. இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் சூட்டிங் ஜூனில் துவங்கப்பட இருப்பதாகவும், படத்திற்கான லோகேசன் கனடாவில் படமாக்க இருப்பதாகவும், விரைவில் விஸ்வரூபம் டீம் கனடா புறப்பட்டு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Fri May 13, 2011 11:02 am

ஃபைட் மாஸ்டருக்கு பதிலடி தந்த அரவாணி!


அரவாணிகள் சம்பந்தப்பட்ட கதையை உள்ளடக்கிய "நர்த்தகி" படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. "அறிந்து அறியாமலும்", "பட்டியல்" போன்ற படங்களை தயாரித்த "புன்னகைப் பூ" கீதா தயாரிப்பில் விஜய பத்மா எனும் பெண் இயக்குநர் இயக்கியுள்ள இப்படத்தின் புரமோஷனுக்காக ஏ.வி.ஏம்., ஏ.சி தளத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு பேஷன் ஷோ நடைபெற்றது.

முழுக்க, முழுக்க அரவாணிகளே பங்கேற்று பளிச்சிட்ட இந்தபோஷன் ஷோவில் பேசிய, மேற்படி படத்தின் சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம், நான் யோகா, தியானம் போன்றவற்றின் மூலம் ஆண் குழந்தை பெறுவது எப்படி என்பதையும், பெண் குழந்தை பெற்றுக் கொள்வது எப்படி என்பதையும் சில நாட்கள் வகுப்புகள் நடத்தி பல புதுமண ஜோடிகளுக்கு சொல்லி தர உத்தேசித்துள்ளேன். அப்படிப்பட்ட வகுப்புகள் நடைபெறும்***போது அரவாணி குழந்தைகள் பிறக்காமல் தடுப்பது எப்படி என்பதையும் கட்டாயம் சொல்லித்தருவேன். ஏன்? என்றால் இப்படத்தின் படப்பிடிப்பில் அவர்கள் படும் வேதனைகளை கஷ்டங்களை, நஷ்டங்களை நேரடியாக கண்டு உணர்ந்தவன் என்பதால் இந்த முடிவில் உள்ளேன் என்று கண் கலங்கினார்.

அவரைத்தொடர்ந்து பேச வந்த அரவாணி ***சகோதரி ஒருவர், எங்களுக்கு இப்பிறப்பில் எந்த கஷ்டமும் இல்லை, அரவாணியாக பிறந்தாலும் அவ்வாறு மாறியதாலும் எந்த வருத்தமுமில்லை. ஆனால் எங்களை பார்த்து ஆண், பெண் இருபாலரும் கேலியும், கிண்டலும் செய்வதில்தான் வருத்தம். எனவே சண்டை பயிற்சியாளர் அரவாணி குழந்தைகளை பெற்றுக்கொள்வது எப்படி? என்றே வகுப்பெடுக்கலாம்! அந்தளவு இந்த பிறப்பால் மகிழ்ச்சியாகத்தான் உள்ளோம் நாங்கள் என்றார்.

அந்த அரவாணி ***சகோதரியின் பேச்சு நியாயம் தான் என்றாலும், அங்கு நடந்த பேஷன் ஷோவிலும், ஒன்பது அரவாணிகளை மட்டுமே மேடை***யேற்றி "கேட்வாக்" நடத்தியது உறுத்தலாக இருந்தது. "நர்த்தகி" ரிலீஸீக்கு பிறகாவது இவர்களுக்குரிய நியாயம் கிடைக்கட்டும்!!
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Fri May 13, 2011 11:02 am

செல்வராகவன் - ஆண்ட்ரியா லடாய்... தனுஷுடன் நடிக்க மறுப்பு!

தனுஷ் நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தில் நடிக்க மறுத்து வெளியேறினார் நடிகை ஆண்ட்ரியா. இயக்குநர் செல்வராகவன் எவ்வளவோ கேட்டும் மறுத்துவிட்டார் ஆண்ட்ரியா. எனவே ரிச்சா கங்கா பாத்யாய் நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார் செல்வராகவன்.

செல்வராகவனுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ரகசிய காதல் என்றும், அதனால்தான் சோனியா அகர்வால் செல்வராகவனை விவாகரத்து செய்யும் அளவுக்குப் போனார் என்றும் முன்பு பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஆனால் இதை செல்வராகவன் மறுத்தார். ஆண்ட்ரியா அமைதி காத்தார்.

இந்த நிலையில் செல்வராகவனுக்கும் கீதாஞ்சலி என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது.

இந்த நிலையில் செல்வராகவன் இயக்க தனுஷ் நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் ஆண்ட்ரியா.

ஆனால் படப்பிடிப்பின் ஒரு பகுதி முடிந்து, அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கிய நிலையில், இப்போது நடிக்க மறுத்து வெளியேறியுள்ளார். படத்தை முடித்து கொடுக்குமாறு செல்வராகவன் திரும்ப திரும்ப வேண்டியும் அவர் வரவில்லை.

இதையடுத்து ஆண்ட்ரியாவுக்கு பதில் ரிச்சா கங்கா பாத்யாய் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ஆண்ட்ரியா நடித்த காட்சிகள் வெட்டி எறியப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. இந்த ரிச்சாதான் ஒஸ்தி படத்தில் சிம்பு ஜோடியாக நடிப்பவர்.
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Fri May 13, 2011 11:03 am

அடுத்த படம் சீமானுக்குதான் விஜய்

வேலாயுதம் படத்தில் பதினைந்து வில்லன்களாம். இவர்கள் அத்தனை பேருமே Velayuthamவிஜய்யால் ஃபுட்பால் ஆட போகிற சினிமா வில்லன்கள். ஆனால் அவரது கண்ணுக்கு தெரியாத இன்னொரு வில்லனாக இருக்கிறது சூழ்நிலை. தமிழக அரசியலில் வருகிற 13 ந் தேதி என்ன முடிவு வருமோ, அதை பொருத்துதான் இருக்கிறது அவரது நிம்மதியும் வளர்ச்சியும். இந்த நேரத்தில் வேலாயுதம் படப்பிடிப்பையும் நிறுத்தி வைத்துவிட்டு அதே 13 க்காக காத்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர்.

ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு படத்தை விற்றுவிட வேண்டாம் என்ற நிபந்தனையின் பேரில்தான் இந்த படத்தில் நடிக்கவே ஒப்புக் கொண்டாராம் விஜய். ஆனால் நடக்கிற நடப்புகள் யாவும் அவரது எண்ண ஓட்டத்திற்கு எதிர் திசையிலேயே இருக்கிறதாம். ஆனால் உறுதிபடுத்தப்படாத இந்த தகவல் உண்மையாகி விடக் கூடாதே என்பதற்காக தொடர் முயற்சியில் இருக்கிறாராம் விஜய்.

இதற்கிடையில் பொன்னியின் செல்வன் நின்று போனதால், அதற்காக ஒதுக்கிய தேதிகளை சீமானுக்கு கொடுக்கவும் நினைத்திருக்கிறாராம் விஜய். தகவலறிந்த சீமான் வட்டாரம் மகிழ்சியில் திளைக்கிறது.
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Fri May 13, 2011 11:04 am

இசைஞானியின் பத்தியம்!

இனிப்பை தவிர்ப்பார்கள், சர்க்கரை வியாதிக்காரர்கள். ஆனால் கடந்த இரண்டல்ல, ஐந்தல்ல, இருபதைந்து ஆண்டுகளாக உப்பை தன் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் சாப்பிட்டு வருகிறாராம் இசைஞானி இளையராஜா. இத்தனைக்கும் இளையராஜாவுக்கு பெரிதாக எந்த வியாதியும் கிடையாது. கோபம், குரோதம், காமம், இத்யாதி, இத்யாதிகளை தவிர்ப்பதற்காகவே இப்படி பத்திய சாப்பாட்டினை பல வருடங்களாக ஃபாலோ செய்து வருகிறாராம் இளையராஜா!

இளையராஜாவின் இந்த உப்பில்லா உணவு கட்டுப்பாடு கடந்த பலவருடங்களாக அவருடன் பணிபுரியும் சக கலைஞர்களுக்கே தெரியாது என்பது தான் ஆச்சர்யத்திலும் பெரிய அதிசயம்!
tmt
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Fri May 13, 2011 11:11 am

திருட்டு விசிடியால் பாதிப்பில்லை

நல்ல வித்தியாசமான படங்களுக்கு திருட்டு விசிடியால் எந்த பாதிப்பும் இல்லை என்று டைரக்டர் கே.வி.ஆனந்த் கூறியுள்ளார். நடிகர் ஜீவா - நடிகை கார்த்திகா நடித்த கோ படம் எதிர்பார்த்தது போ***லவே வெற்றி பெற்றிருப்பதால் ஏக குஷியாக இருக்கிறார் டைரக்டர் கே.வி.ஆனந்த். படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தியேட்டர்களுக்கு திடீர் விசிட் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். நடிகர்கள் ஜீவா மற்றும் அஜ்மலுடன் டைரக்டர் ஆனந்த் உள்ளிட்ட குழுவினர் மதுரையில் ஒரு ***தியேட்டருக்கு வந்தனர். ரசிகர்கள் மத்தியில் பேசிய டைரக்டர் ***கே.வி.ஆனந்த், அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது திருட்டு விசிடி குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.வி.ஆனந்த், திருட்டு விசிடி என்பது தற்போது உலக அளவில் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. பிரமாண்டமாக, வித்தியாசமாக எடுக்கப்படும் படங்கள் இந்த சி.டி.யால் பாதிக்கப்படாது. காரணம் சில படங்கள் தியேட்டரில் இருந்து பார்த்தால்தான் ரசிக்க முடியும். அந்த அளவில் “கோ” படம் மிக பிரமாண்மாக எடுக்கப்பட்டுள்ளது. என்னுடைய படங்களுக்கு திருட்டு விசிடியால் எந்த பாதிப்பும் இல்லை. நல்ல படம் என்பதால் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டரில் வந்து பார்த்து வருகிறார்கள், என்றார்.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Fri May 13, 2011 11:11 am

பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டது ஏன்...?

பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படைப்பாக பொன்னியின் செல்வன் கதையை படமாக்க முயற்சி மேற்கொண்டிருந்தார். இதற்காக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் (ஜெயமோகனின் 7வது உலகம் தான் பாலாவின் நான் கடவுள் படம்) பொன்னியின் செல்வன் படத்திற்கு வசனம் எழுத ஒத்துக் கொண்டு, ஞாபகங்கள் கொண்ட கதையை, சில கற்பனை பாத்திரங்கள் சேர்த்து 3 மணி நேர கதையாக்கும் வகையில் வசனங்கள் எழுதி முடித்திருந்தார்.

இதன் கதை நட்சத்திரங்களாக, தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபு, நம் இளைய தளபதி விஜய், பார்த்திபன், பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா உள்ளிட்ட பிரபலங்கள் தேர்வு செய்த நிலையில், ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கும் வகையில் அத்தனை ஏற்பாடுகளும் முடக்கி விடப்பட்ட நிலையில், இசையமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் மணிக்கு, தொழில்நுட்பக் கலைஞர்களில் முக்கியமான ஒருவர் மூலம், ராணாவுக்கும், பொன்னியின் செல்வன் படத்திற்கும் தொடர்பு இருப்பதாக கேள்விபட்ட மணி, சூப்பர் நடி***கரை சந்தித்து இருக்கிறார்.(பொன்னியின் செல்வன் தமிழக அரசின் பொது உடைமை ஆக்கப்பட்ட கதை. யார் வேண்டுமானாலும் கதையை ப***யன்படுத்தலாம்)

இந்நிலையில், பொன்னியின் செல்வன் கதையில் உள்ள சில முக்கியமான திருப்பங்களும், சம்பவங்களும், ராணாவில் இடம் பெற்றிருப்பதாக தெரியவந்தது இயக்குநர் மணிக்கு. இதனால் ராணா ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மணி சார் இயக்கத்தில் படம் வெளி வர குறைந்தது 2 ஆண்டுகள் மேல் ஆகும் என்பதாலும் பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டுள்ளது. படம் கைவிடப்பட்டது குறித்து, ஆயிரமாயிரம் கற்பனைக் கதைகள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்திற்கு தேர்வு செய்த நட்சத்திரங்களை வைத்து அடுத்து படம் இயக்குவதற்காக முயற்சியில் இருக்கிறார் மணிரத்னம்.

TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 16 of 18 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum