ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Page 17 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18  Next

View previous topic View next topic Go down

சிறந்த நடிகர் விக்ரம்! - அனுஷ்கா

Post by கார்த்திநடராஜன் on Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.


விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT


Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:26 am; edited 1 time in total
avatar
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 303
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down


Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Fri May 13, 2011 11:12 am

கிரிஷின் 'அனுஷ்கா பாசம்'!

'வானம்' படத்தைத் தொடர்ந்து ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிப் படம் ஒன்றை இயக்குகிறார் கிரிஷ்.

யார் இந்த கிரிஷ்... ஜகர்லமுடி சாய்பாபா. ஆந்திர மக்கள் அறிந்த தயாரிப்பாளர். இவரின் மகன்தான் ராதாகிருஷ்ணன் என்கிற கிரிஷ்.

இவரின் முதல் தெலுங்குப் படமான 'கம்யம்' (தமிழில் 'காதல்னா சும்மா இல்ல') பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்ததுடன் நில்லாமல் ஏகப்பட்ட விருதுகளையும் அள்ளி வந்தது.

அதைத்தொடர்ந்து வந்த இவரின் 'வேதம்' தெலுங்கில் சமீப நாட்களில் வந்த முதல் மல்ட்டி ஸ்டாரர் படம் என்றே சொல்லலாம். அல்லு அர்ஜுன், அனுஷ்கா நடித்து புதுமையான திரைக்கதையில் வந்த இப்படம் மக்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடித்தது. இதை 'வானம்' என்ற பெயரில் தமிழ்படுத்தியவர் சிம்பு. தமிழிலும் கிரிஷ்தான் இயக்குனர் என்பது அறிந்ததே.

தன் தோழி அனுஷ்காவை விலைமாது பெண்ணாக நடிக்க வைத்து தமிழில் அவருக்கு புது அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். 'வானம்' ரெஸ்பான்ஸை தொடர்ந்து ஒரே சமயத்தில் தமிழிலும், தெலுங்கிலும் படம் பண்ணும் பரபரப்பில் உள்ளார் கிரிஷ். கதையை கேட்காமலேயே அனுஷ்கா கால்ஷீட்டை அள்ளித்தர, இருமாநில மக்களும் அறிந்த ஹீரோவை தேடி வருகிறார்.

சூர்யா, கார்த்தி, சிம்பு ஆகிய மூவரும்தான் கிரிஷின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளவர்கள். மூவரிடமும் அனுஷ்கா மூலம் மூவ் செய்து வருகிறார். அனுஷ்காவின் அளவில்லாத பாசம் குறித்து கேட்டால், 'அது அப்படித்தாங்க' என்று நழுவுகிறார் கிரிஷ்.

ஏதோ நல்லா இருந்தா சரி!
நன்றி TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Sat May 14, 2011 8:16 pm

திமுகவின் 'கைக்கூலி' ராமநாராயணன், ரூ. 15 கோடி மோசடி செய்து விட்டார்-தயாரிப்பாளர்கள் புகார்


சென்னை: திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டு தயாரிப்பாளர் சங்கத்தை ரவுடிகள் சங்கமாக மாற்றி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்தார் ராம. நாராயணன். சங்க உறுப்பினர்களிடமிருந்து பல கோடி பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளார். ரூ. 15 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ள அவர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் தரப்படும் என தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஆட்சி மாறி விட்டது, காட்சிகளும் மாறத் தொடங்கியுள்ளன. திரையுலகிலிருந்து முதல் புயல் கிளம்பியுள்ளது. அதிமுக ஆட்சி வந்ததைத் தொடர்ந்து முதல் நபராக ராம.நாராயணன் தனது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல பெப்சி தலைவர் வி.சி.குகநாதனும் பதவியை விட்டு விலகிவிட்டார்.

திமுகவுக்கு மிகவும் நெருங்கியவர் ராம.நாராயணன். கலைஞர் டிவியில் அவரும் ஒரு முக்கியப் பொறுப்பில் இருந்து வருகிறார். தமிழ்த் திரையுலகத்தை கலைஞர் டிவி பக்கம் திருப்பி விட்டதில் இவருக்கு முக்கியப் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்ககத்தில் மூத்த உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இதில் முன்னாள் தலைவர் கேஆர்ஜி, கேயார், ராதாரவி, ஆர்.வி. உதயக்குமார், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் தயாரிப்பாளர் சங்கத்தை ரவுடிகள் சங்கமாக மாற்றி விட்டார் ராம.நாராயணன்.

கட்டப் பஞ்சாயத்தில்தான் அவர் பெரும்பாலும் ஈடுபட்டார். திமுகவின் கைக்கூலியாக மாறி சங்கத்தின் பெயரைக் கெடுத்து விட்டார்.

உறுப்பினர்களுக்கு வீட்டு வசதி செய்து தருவதாக கூறி பெருமளவில் பணத்தைப் பெற்ற அவர் அதற்கு ரசீதே தரவில்லை. ரூ. 15 கோடி அளவுக்கு அவர் ஊழல் புரிந்துள்ளார். இதுகுறித்து போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுக்கவுள்ளோம் என்றார்.

பின்னர் கே.ஆர்.ஜி கூறுகையில், ரூ. 2 லட்சம் கொடுத்து தலைவராக்கப்பட்டவர் இந்த ராம.நாராயணன். தலைவர் பதவிக்கு வந்த பின்னர் சங்கத்தை திமுகவின் கைக்கூலியாக மாற்றி விட்டார். ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் பணம் அவர் வீடு தேடிப் போக வேண்டும் என்று உத்தரவிட்டு அதை பிடிவாதமாக செயல்படுத்தி வந்தவர்.

விரைவில் சங்கத்திற்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்து நாளை மறு தினம் முடிவு செய்யவுள்ளோம் என்றார்.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Sat May 14, 2011 8:20 pm

கரிகாலன் படத்தில் ஹாலிவுட் நாயகியுடன் ஜோடி சேரும் விக்ரம்!


விக்ரம் நடிக்கும் புதிய படத்துக்கு கரிகாலன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

சில்வர்லைன் பிலிம் பேக்ட்ரி தாயாரிப்பில் எல் .ஐ கண்ணன் இயக்கும் இந்த படத்தில் பாலிவுட் நாயகி ஜரைன் நாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே இந்தியில் வீர் படத்தில் நடித்துள்ளார்.

கரிகாலன் என்கிற மன்னனின் வாழ்க்கையை புனைவுக் கதையாக பதிவு செய்யும் வரலாற்றுத் திரைப்படம் கரிகாலன்.

இந்த பிரமாண்டமான திரைப்படம் அனிமேட்ரானிக்ஸ், மினியேச்சர், கிராபிக்ஸ் என முதல் தர தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்படுகிறது. இதற்காக பலநாட்டு நவீன தொழில் நுட்ப வல்லுனர்கள் இந்தப் படத்தில் இணைகிறார்கள்.

ஜீவா நடித்து வெளியான "சிங்கம்புலி" டத்தின் தயாரிப்பாளர்கள் பார்த்தி, எஸ்எஸ் வாசன் இணைந்து தயாரிக்கும் கரிகாலனின் முதல்கட்ட படப்பிடிப்பு தலைக்கோணம் காட்டுப்பகுதியில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான ஆயத்த வேலைகளில் படக்குழு மும்முரமாக உள்ளது.

படத்தின் இயக்குநர் கண்ணனுக்கு இது முதல்படசம். குறைந்தது மூன்று படங்களாவது இயக்கியவர்களுடன்தான் பணியாற்றுவேன் என்று முன்பு கண்டிஷன் போட்டவர் விக்ரம். ஆனால் எந்திரன், ஈரம், கஜினி, அருந்ததி போன்ற படங்களில் விஷுவல் எபெக்ட்ஸ் நிபுணராகப் பணியாற்றிய கண்ணனுக்கு முதல் படத்திலேயே கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். பசுபதி சண்முகராஜன் என பெரிய நட்சத்திரப்பட்டாளமே படத்தில் உண்டு.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by சிவா on Sun May 15, 2011 7:10 am

ஏம்பா கார்த்தி, சினிமா செய்தின்னா கலர் கலரா படம் ஏதாவது பார்க்கலாம்னு வந்தா, எதையுமே காணோமே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by முரளிராஜா on Sun May 15, 2011 8:23 am

@சிவா wrote:ஏம்பா கார்த்தி, சினிமா செய்தின்னா கலர் கலரா படம் ஏதாவது பார்க்கலாம்னு வந்தா, எதையுமே காணோமே!

இந்த கலர் நல்லா இருக்கா பாஸ்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by உதயசுதா on Sun May 15, 2011 10:37 am

@சிவா wrote:ஏம்பா கார்த்தி, சினிமா செய்தின்னா கலர் கலரா படம் ஏதாவது பார்க்கலாம்னு வந்தா, எதையுமே காணோமே!
எதுக்கும் மதனிக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு நானே கலர் படம் போடுறேன் சிவா சரியா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Sun May 15, 2011 9:38 pm

சினிமா துறையில் மோசமான மனிதர்கள் – ஜெனிலியா

சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் ஜெனிலியா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார். சினிமா துறையில் மோசமான மனிதர்கள் இருப்பதாக ஜெனிலியா கூறினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

சினிமா என்பது போராட்டம் நிறைந்தது. இங்கு போராடுபவர்களால்தான் நிலைத்து நிற்க முடியும். நான் போராடுவதற்கு தயாராக என்னை மாற்றிக் கொண்டு உள்ளேன். பார்ட்டிகளுக்கு போவது பிடிக்காது. அந்த நேரத்தில் சினிமாவை பற்றித்தான் சிந்திக்கிறேன். எனக்கு சினிமா பின்புலம் இல்லை. அதனால் கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது.

சினிமா உலக வாரிசு என்றால் ஒரு முறை தோற்றாலும் தப்பித்து விடலாம். ஆனால் என்னைப் போன்றவர்கள் விழுந்தால் எழுவது கஷ்டம். சினிமாவில் எல்லா விதமான மனிதர்களும் இருக்கிறார்கள். இங்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமானவர்களின் முகத்தை பார்க்க வேண்டி வரும்.

இவ்வாறு ஜெனிலியா கூறினார்.
தமிழ் சினிமா
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Mon May 16, 2011 8:47 pm

விஜயகாந்துக்கு விஜய் நேரில் வாழ்த்து!

தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கும் விஜயகாந்துக்கு நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் நேரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று பெரும் வெற்றி பெற்றுள்ளது விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் பொறுப்பேற்கிறார்.

அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க நேரில் சந்தித்த விஜய், மலர்க்கொத்துக் கொடுத்து வாழ்த்தினார். இச் சந்திப்பின் போது, இயக்குனர்கள் அமீர், சேரன் ஆகியோரும் உடன் சென்று விஜய்காந்துக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

வந்த அனைவரையும் வரவேற்ற விஜயகாந்த், அனைவருடனும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

அதிமுக ஆதரவாளரான நடிகர் விஜயகுமாரும், விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து முழுநேர அரசியல்வாதியான பிறகு, அவரை இந்த இயக்குநர்களும் நடிகர்களும் தேடிப்பபோய் சந்திப்பது இதுவே முதல்முறை
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Mon May 16, 2011 8:50 pm

சினேகா அறிமுகப்படுத்திய ‘நிஷா’!

மலேசியாவில் புகழ்பெற்ற பிராண்டான ‘நிஷா’வின் மூலிகை அழகு சாதனப் பொருள்கள் முதல் முறையாக சென்னையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டன. புன்னகை இளவரசி நடிகை சினேகா இந்த அழகு சாதனப் பொருள்களை அறிமுகம் செய்து வைத்தார்.

மலேஷியாவின் நாஸியா நிறுவனத்தின் புகழ்பெற்ற பிராண்ட் நிஷா. மலேஷியாவில் பல ஆண்டுகளாகப் பிரபலமானதும் அதிகம் விற்பனையாவதும் நிஷாவின் அழகு சாதனப் பொருள்களே. எந்தவித ரசாயனக் கலப்புமின்றி, முழுக்க முழுக்க மூலிகைகளால் தயாரான அழகு சாதனப் பொருள்கள் இவை.

நிஷா அழகு சாதனப் பொருள்களை சென்னையில முதல்முறையாக அறிமுகப்படுத்தும் விழா மே 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை சவேரா ஓட்டலில் நடந்தது.

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் புன்னகை இளவரசி சினேகா பங்கேற்று நிஷா அழகு சாதனப் பொருள்களை அறிமுகப்படுத்தினார். முன்னாள் அமைச்சர் வேங்கடபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

விழாவில் சினேகா பேசுகையில், ‘இன்றைக்கு ஆறிலிருந்து அறுபது வரை எல்லோருமே தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்காக பலவித அழகுக் கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். என் அம்மா கூட அழகு கிரீம் விளம்பரங்களைப் பார்க்கும்போதெல்லாம், இவற்றைப் பயன்படுத்தினால் நானும் இந்த விளம்பரத்தில் வரும் பெண்களைப் போல அழகாகிவிடுவேனா என்று கேட்பார்.

டோனர், மாய்ஸரைசர், சன் பிளாக் என தனித்தனியாகத்தான் பொதுவாக வாங்க வேண்டியுள்ளது. ஆனால் நிஷா இவை அனைத்தையும் ஒரே பேக்காக தருகிறார்கள்.

நான் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிஷாவைப் பார்த்து வியந்தேன். அவர் வயது என்னவென்று நான் கேட்கவில்லை. காரணம் அப்படிக் கேட்பது நாகரீகமில்லை. ஆனால் அவரைப் பார்த்தால் ஒரு பெண்ணுக்கு அம்மா மாதிரியே தெரியவில்லை. அந்த அளவு இளமை.

இந்த அழகு சாதனப் பொருள்களை அவரது குடும்பத்தினர் அனைவருமே பயன்படுத்துவதாகக் கூறினார். முழுக்க முழுக்க மூலிகைகளால் ஆன இயற்கை அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது. அதை பல ஆண்டுகளாக மலேசியாவில் வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறது நிஷா.

நிஷா அழகு சாதனப் பொருள்களை சென்னையில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு நல்ல பொருளை அறிமுகம் செய்த திருப்தி இருக்கிறது, என்றார்.

நாஸியா நிறுவன மேலாண்மை இயக்குநர் முகமது ஜலீல் பேசுகையில், 'ஆண்களுக்கும் பெண்களுக்குமான அழகு சாதனப் பொருள் நிஷா. பேஷியல் டோனர், மாய்சரைஸர், சன் பிளாக், நைட் க்ரீம், கொலோஜன் சோப் மற்றும் ஹெர்பல் சோப் அடங்கிய ஒரு பேக்காக இதனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். பயன்பாடு முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. இந்த ஆறு அழகு சாதனப் பொருள்களும் கொண்ட ஒரு பேக்கின் அறிமுக சலுகை விலை ரூ 4100 மட்டுமே', என்றார்.

நாஸியா நிறுவனம் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலில் மலேசியாவில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது.
தஸ்ட் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Mon May 16, 2011 8:51 pm

நாகார்ஜுனுக்கு ஜோடியாகும் சினேகா!

தெலுங்கில் தயாராகும் புதிய புராணப் படம் ஒன்றில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சினேகா.

தெலுங்கிலும் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் சினேகா. இவர் நடித்த பல படங்கள் தெலுங்கில் நல்ல வெற்றி பெற்றன.

சினேகா ஏற்கனவே 'பக்த ராமதாஸ்' என்ற தெலுங்கு பக்திப் படத்தில், நாகார்ஜுனுடன் இணைந்து நடித்தார். அந்த படம் ஆந்திராவில் பெரும் வெற்றிபெற்றது.

இதைத் தொடர்ந்து சினேகா மேலும் ஒரு புராண படத்தில், நாகார்ஜுனுடன் ஜோடி சேர்ந்து நடிக்கப் போகிறார். இன்னும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்தில் சினேகா தவிர மேலும் சில நடிகைகளும் நடிக்கவிருக்கிறார்கள்.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by கலைவேந்தன் on Mon May 16, 2011 11:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Tue May 17, 2011 8:24 pm

கடும் காய்ச்சல்: மருத்துவமனையில் இலியானா அனுமதி!
நண்பன் பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக கோவாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் நடிகை இலியானா.

தமிழில் கேடி படத்தில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கில் நம்பர் ஒன் நாயகியாகத் திகழ்பவர் இலியானா.

இப்போது தமிழில் ஷங்கர் இயக்கு 3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 20 நாட்கள் அந்தமானில் நடந்தது. தொடர்ந்து நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் 10 நாட்கள் பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடந்தது. ஓய்வின்றி இந்த படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் இலியானாவுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து ஆம்ஸ்டர்டாமில் இருந்து, கோவா திரும்பிய இலியானா அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 10 நாட்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அவருக்கு பரிந்துரைத்துள்ளனர்.

இலியானா மீது தமிழ், தெலுங்கு பட உலகில் தடை விதிக்க தீவிர ஏற்பாடுகள் நடந்து வரும் சூழலில் அவர் மருத்துவமனையில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Tue May 17, 2011 8:25 pm

திரைப்படத் துறைக்கு உயிர்கொடுங்கள்! - ஜெயலலிதாவுக்கு தங்கர் பச்சான் வேண்டுகோள்இது குறித்து திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக மக்கள் ஒருமித்த தீர்ப்பின் மூலம் முதல்வருக்கு மிகப்பெரிய பொறுப்பினை அளித்துள்ளனர். மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, ஆட்சியாளர்கள் நேர்மை தவறியதற்காகவும், இனி ஆளப்போகிறவர்கள் நேர்மை தவறாமல் இருப்பதற்காகவும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் இருக்கிறது.

தங்களின் வாக்குரிமை ஒன்றின் மூலம் மட்டுமே எதிர்ப்பினையும், தேவையையும் உணர்த்துகின்ற வகையில் வாக்களித்திருக்கின்ற தமிழ் மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மட்டுமே. விளைவிக்கிற பொருளுக்கு உரிய விலையையும், நீர் ஆதாரத்தையும், இடுபொருள், பூச்சிக்கொல்லிகளையும், உரிய நேரத்தில் தந்து விவசாய தொழிலில் உள்ள பிரச்சினைகளை தீர்த்தால், கட்டுப்பாட்டையும் மீறி பல மடங்கு உயர்ந்து விட்ட உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தலாம்.

அத்துடன் பெண்களுக்கு பாதுகாவலராக இருக்கிற நமது முதல்-அமைச்சர் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தும் சாத்தியம் இல்லாமல் போனாலும், கட்டுப்பாடுகளை உடனடியாக விதித்து மதுக்கடைகள் அனைத்தையும் ஊருக்கு வெளியில் ஒதுக்குபுறமாக அமைக்க வேண்டும்.

ராஜபக்சேவுக்கு தண்டனை

ராஜபக்சேவிற்கு தண்டனை பெற்று தர தமிழக அரசு மத்திய அரசினை வற்புறுத்தும் எனச்சொல்லி நம்பிக்கையை விதைத்திருக்கிற முதல்வர் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே இதற்கான ஆணையை நிறைவேற்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

யார் வேண்டுமானாலும் திரைப்படங்கள் தயாரிக்க...

திரைப்படத் தொழில் தொடங்கிய காலந் தொட்டு திரைப்படங்களை தயாரித்து வந்த நிறுவனங்கள் கூட கடந்த ஆண்டுகளில் தயாரிப்பதை நிறுத்தி விட்டதோடு, புதியதாக படங்கள் தயாரித்தவர்களுக்கும், தயாரித்த படங்களை வெளியிட முடியாமல் கடனில் சிக்கி தவித்து மூழ்கி கொண்டிருக்கும் வேளையில் நான் சாந்திருக்கின்ற திரைப்படத்துறையை நம்பியிருக்கிற பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பிரச்சினையை முதல்வர் தீர்ந்து வைப்பார் என நம்புகிறேன்.

திறமையை மட்டுமே மூலதனமாக கொண்டிருக்கின்ற என்னைப்போன்ற கலைஞர்கள் சுதந்திரமாக செயல்படவும், யார் வேண்டுமானாலும், திரைப்படத்தை தயாரிக்கலாம், யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்கிற நிலையை உருவாக்கி தந்து மக்களுக்கான திரைப்பட கலைக்கு உயிர் கொடுக்க வேண்டும்.

தமிழக மக்களின் பேராதரவை பெற்ற முதல்வருக்கு ஒரு கலைஞன் என்ற முறையில், ஒரு வாக்காளன் என்ற முறையில் தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறி வேண்டுகோளை தமிழக மக்களின் சார்பில் வைக்கிறேன்."

-இவ்வாறு அறிக்கையில் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.
தஸ்ட்தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Wed May 18, 2011 6:13 pm

வாய்ப்பை இழந்து வருத்தப்படும் நடிகை"ஒன்பது ரூபாய் நோட்டு" திரைப்படத்தில், இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் அறிமுகமான நடிகை இன்ப நிலா, சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்தவர். கம்யூட்டரில் டிப்ளமோ பட்டம் பெற்றவர், தற்போது எம்.ஏ., ஆங்கில இலக்கியம் பயின்று வருகிறார். ஒன்பது ரூபாய் நோட்டில் இன்ப நிலாவின் நடிப்பை பார்த்து, சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. முதலில் "பேராண்மை" படத்திலும், அடுத்து "அங்காடித் தெரு"விலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், "பேராண்மை" படத்தில் கொஞ்சம் கிளாமர் காட்சி இருப்பதாலும், "பூ" படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் "அங்காடித் தெரு"வில் நடிக்க முடியாது போனாதாலும், இப்போது அதை நினைத்து நினைத்து வருத்தப்படுகிறார்.

தற்போது கலவரம், பாளையங்கோட்டை, ஈஸ்வர மூர்த்தி என்று சில படங்களில் நடித்து கொண்டிருந்தாலும், தங்கர் பச்சானின் களவாடிய பொழுதுகள் ரிலீசுக்காக காத்திருக்கிறாராம். இந்த படத்தில் இன்ப நிலாவின் கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டிப் பேசப்படுமாம்.
tmt
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Wed May 18, 2011 6:13 pm

சிம்புவை சந்திக்க மறுத்த சல்மான்!!


பிரபல இந்தி நடிகர் சல்மான்கான், தனது பிளாக்பஸ்டர் படமான தபாங்கை ரீமேக் செய்யும் சிம்புவை சந்திக்க மறுத்துவிட்டார்.

சிம்புவை வைத்து ஒஸ்தி என்ற படத்தை எடுத்து வருகிறார் தரணி. இது இந்தியில் சல்மான் கான் நடித்து அபார வெற்றி பெற்ற தபாங் படத்தின் ரீமேக் என்பதால், சல்மான் கானை நேரில் சந்தித்து சில ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளளாம் என யோசித்தார் சிம்பு.

படத்தின் துவக்க விழாவுக்கும் சல்மானை அழைத்திருந்தார் சிம்பு.

ஆனால் துவக்க விழாவுக்கும் வரவில்லை, சிம்புவை சந்திக்கவும் நேரம் தரவில்லையாம் சல்மான். எப்போதும் நான் ரொம்ப பிஸி என்று சொல்லி சிம்புவின் சந்திப்பை தவிர்த்து வருகிறாராம் சல்மான்.

சிம்புவைப் பற்றி யாரோ வேண்டுமென்றே சல்மானிடம் தவறாக சொல்லியிருக்கின்றனர். அதனால்தான் அவர் சந்திக்க மறுக்கிறார் என சிம்பு தரப்பில் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
tmt
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Wed May 18, 2011 6:21 pm

பாலிவுட்டிலும் சிறுத்தை


கோலிவுட்டிற்கும், பாலிவுட்டிற்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு. இங்குள்ள படங்கள் அங்கு ரீ-மேக் செய்யப்படுவதும், அங்குள்ள படங்கள் இங்கு ரீ-மேக் ஆவதும் தொடர்கிறது. சமீபகாலமாக இது அதிகமாகியுள்ளது. உதாரணத்திற்கு சிம்பு நடிப்பில், கவுதம்மேனன் இயக்கத்தில் வெளிவந்த "விண்ணைத்தாண்டி வருவாயா", கே.வி.ஆனந்த் இயக்கத்தில், ஜீவா நடித்த "கோ" உள்ளிட்ட படங்கள் இந்தியில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது.

அதேபோல் இந்தியில் சல்மான் கான் நடித்து வெளிவந்த "தபாங்" படம், தமிழில் ஒஸ்தி எனும் பெயரில் உருவாகி வருகிறது. இப்போது அந்த வரிசையில் கார்த்தியின் "சிறுத்தை" படம் சேர்ந்திருக்கிறது. தமிழில் சூப்பர் ஹிட்டான "சிறுத்தை" படத்தில், கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்து இருந்தார். சிவா இயக்கி இருந்தார். இப்படம் இந்தியில் ரீ-மேக் ஆக இருக்கிறது. இதில் ஹீரோவாக அக்ஷய் குமார் நடிக்க இருக்கிறார். பிரபுதேவா இயக்குகிறார், சஞ்சய் லீலா பன்சாலி இசையமைக்கிறார். ஏற்கனவே அக்ஷய் குமார், கோ படத்திலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Wed May 18, 2011 6:22 pm

டூ பீஸெல்லாம் நமக்கு ஒத்துவராது! - த்ரிஷா


நீச்சல் உடையெல்லாம் எனக்கு ஒத்துவராது என்று நடிகை த்ரிஷா கூறியிருக்கிறார். நட்சத்திர ஹோட்டலில் நிர்வாண குளியல், கிழக்கு கடற்கரை சாலையில் உற்சாக பானம் அருந்தி நடுரோட்டில் குத்தாட்டம், நள்ளிரவு பார்ட்டி என பல சர்ச்சைகளில் சிக்கியும், 9 ஆண்டுகாலமாக திரையுலகில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை த்ரிஷா. அவர் தெலுங்கு படமொன்றில் டூ பீஸ் உடையணிந்து நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், முன்பு போல் இல்லாமல், இப்போது படங்களை குறைத்துக் கொண்டேன். கமர்ஷியலாக நிறைய படங்கள் வருகின்றன. அபியும் நானும், மன்மதன் அம்பு, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் நடித்த பின் இனி அதுபோல் நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள வேடங்களில் நடிப்பது என முடிவு செய்திருக்கிறேன். கமர்ஷியலாக நடிப்பது தவறில்லை. அப்படி நடிக்க நிறைய புதுமுகங்கள் வந்துவிட்டார்கள். எனவேதான் அதுபோல் நடிக்க வந்த 2 தமிழ் படங்களைகூட வேண்டாம் என்று கூறிவிட்டேன். தெலுங்கில் பாடிகாட் படத்தில் நடிக்கிறேன். வெங்கடேஷ் ஹீரோ. இதில் நடிப்புக்கு நல்ல வாய்ப்பிருக்கிறது. இப்படத்தில் நான் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து நடிப்பதாக சிலர் வதந்தி பரப்பி இருக்கிறார்கள். அதை அறிந்து நான் ஷாக் ஆயிட்டேன். திரையுலகுக்கு வந்து 9 வருடம் ஆகிவிட்டது. இதுவரை அப்படி நடிக்கவில்லை. இனிமேலும் நீச்சல் உடை அணிந்து நடிக்க மாட்டேன். அதெல்லாம் நமக்கு ஒத்து வராது, என்று கூறியுள்ளார்.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by றினா on Wed May 18, 2011 6:30 pm

காலம் மாறிப் போச்சி
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Wed May 18, 2011 7:23 pm

ஜூனில் கமலின் 'விஸ்வரூபம்': கனடா செல்ல விசா கிடைத்தது!!


மலையாளப் படம் டிராபிக்கை ரீமேக் செய்வதில் உறுதியாக இருந்த கமல்ஹாஸன், தனது முடிவில் ஒரு சின்ன மாற்றம் செய்திருக்கிறார்.

அது ஏற்கெனவே செல்வராகவனுடன் பேசி வைத்த விஸ்வரூபம் படத்தை முதலில் முடித்துவிட்டு, டிராபிக் ரீமேக்குக்குப் போகலாம் என்பது.

காரணம், தாமதமாகிக் கொண்ட விசா நடைமுறைகள் இப்போது வெற்றிகரமாக முடிந்துவிட்டனவாம். ஆரம்பத்தில் இந்தப் படத்தை அமெரிக்காவில் எடுக்கத் திட்டமிட்டிருந்தனர் செல்வராகவனும் - கமலும்.

ஆனால் அமெரிக்க விசா கிடைத்தபாடில்லை. எனவே உடனடியாக கனடா விசாவுக்கு விண்ணப்பித்தனர். அது குறித்த நாளில் கிடைத்துவிட்டது. இதனால் குறுகிய கால தயாரிப்பாக டிராபிக் ரீமேக்கை செய்யவிருந்த கமல், அதை அப்படியே தள்ளி வைத்துவிட்டு, குழுவினருடன் கனடா பறக்கிறார்.

இதனை டிராபிக் படத்தை இயக்கவிருக்கும் ராஜேஷ் பிள்ளையும் உறுதிப் படுத்தியுள்ளார். "கமல் சார் விஸ்வரூபத்தை முடித்த கையோடு, டிராபிக் ரீமேக்குக்கு வந்துவிடுவார்", என்று அவர் கூறியுள்ளார்.

விஸ்வரூபம் படத்தில் சோனாக்ஷி சின்ஹா கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். சங்கர்-இஷான்-லாய் இசையமைக்கிறார்கள்.

படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல்வாரத்தில் துவங்குகிறது.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by கலைவேந்தன் on Thu May 19, 2011 12:48 am

அனைத்து செய்திகளையும் வாசித்தேன்... பகிர்வுக்கு நன்றி கார்த்தி..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by முரளிராஜா on Thu May 19, 2011 8:48 am

சினிமா செய்திக்கு நன்றி கார்த்தி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Wed May 25, 2011 11:00 am

அசின் அலும்பு தாங்கல!': சலித்துக்கொள்ளும் பாலிவுட்
மும்பை: பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பவில்லை என்றால் அசினுக்கு தூக்கம் வராது போலிருக்கிறது.

பாலிவுட் மீடியாக்கள் அசினை தாக்குதவது அதிகரித்து வருவதாக அசின் தரப்பு கூறுகிறது. ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் நடந்துகொள்ளும் முறை சரியில்லை. அந்த ஹீரோ கூட நடிக்க மாட்டேன், இந்த டைரக்டர் படத்தில் நடிக்க மாட்டேன் என இவர் போடும் கண்டிஷன்கள் பந்தாக்களோடு ஒப்பிடுகையில், வருகிற செய்திகள் ரொம்ப குறைவுதானாம்.

இப்போது வாரத்துக்கு ஒரு மேக்கப்மேன் என மாற்ற ஆரம்பித்துள்ளாராம். காரணம், பாலிவுட் மேக்கப்மேன்களுக்கு தன் முகவெட்டுக்கு ஏற்றமாதிரி மேக்கப் போடத் தெரியவில்லை என்கிறாராம் அசின்.

இதுவரை 4 மேக்கப்மேன்களுக்கு பேக்கப் சொல்லிவிட்டாராம். இவர் விரட்டிய மேக்கப்மேன்களில் ஒருவர் பல ஆண்டுகளாக அமிதாப் பச்சனுக்கு மேக்கப் போடுபவர் என்பதுதான் இதில் சுவாரஸ்யமான விஷயம். இந்த விவகாரத்தை பாலிவுட் மீடியாக்கள் பெரிதாக்க முயல, சட்டென்று பம்மிவிட்டாராம் அசின்.

பாலிவுட்டில் பெரிய பெரிய நடிகர், நடிகைகள் எல்லாம் சத்தம் இல்லாமல் நடித்துக் கொண்டிருக்கின்றனர். கையில் ஒன்று அல்லது 2 படத்தை வைத்துக் கொண்டு அசின் பண்ற அலும்பு தாங்க முடியலப்பா என சலித்துக் கொள்கிறார்கள் பாலிவுட்டில்.

அப்படியும் அசின் பின்னால் ஒரு கூட்டம் ஏதாவது பரபரப்பு கிடைக்குமா என சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது!
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Wed May 25, 2011 11:00 am

செல்வராகவன் அதிரடி நீக்கம்: விஸ்வரூபத்தை கமல் ஹாஸனே இயக்குகிறார்!!


கமல் - செல்வராகவன் இடையே கடுமையான கருத்துவேறுபாடு இருப்பது குறித்து ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். தன்னைப் பார்க்க வந்த செல்வராகவனை இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்து சந்திக்காமலே கமல் திருப்பி அனுப்பியதைப் பற்றியும் கூறியிருந்தோம்.

ஆனால் இதை மறுத்து வந்த தயாரிப்பாளர், கமல் - செல்வராகவன் குழு லண்டனில் படப்பிடிப்பு நடத்துவதாக நேற்று கூறியிருந்தாரம. ஆனால் இன்று அந்த செய்தி புஸ்வாணமாகிவிட்டது.

விஸ்வரூபம் படத்துக்காக கமல்-சோனாக்ஷி சின்ஹா லண்டன் போவது மட்டுமே உண்மை. ஆனால் படத்தை இயக்குபவர் செல்வராகவன் அல்ல. கமல்ஹாஸன்!!

டெலி போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கதை-திரைக்கதை-வசனம்- எழுதி இயக்குகிறார் கமல்ஹாஸன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர்.

செல்வராகவன் தூக்கப்பட்டது ஏன்?

கடந்த பல வாரங்களாகவே இந்தப் படம் தொடர்பாக கமல்-செல்வராகவன் இடையே கடும் பனிப்போர் நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

செல்வராகவன் இப்போது, அவருடைய தம்பி தனுஷ் நடிக்கும் இரண்டாம் உலகம் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை முடிப்பதற்கு இன்னும் 2 மாதங்கள் ஆகும் என்று செல்வராகவன் உறுதியாக கூறிவிட்டாராம்.

காத்திருக்க முடியாது...

அதுவரை காத்திருக்க முடியாது என கமல் கூறியதை தயாரிப்பாளரும் ஏற்றுக் கொண்டாராம். நேற்று கமல்ஹாசனும் தயாரிப்பாளரும் நேரில் சந்தித்து இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் புதிய உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.

இதன்படி இயக்குநராக இருந்த செல்வராகவன் தூக்கப்பட்டார். ஜுன் முதல் வாரத்திலிருந்து கமல்ஹாஸன் இயக்கத்தில் இந்தப் படம் ஆரம்பமாகிறது.

லண்டனில் படப்பிடிப்பு

படப்பிடிப்பு லண்டன், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. 'தசாவதாரம்' படத்தை விட, பத்து மடங்கு பிரமாண்டமான முறையில், 'விஸ்வரூபம்' உருவாகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில், ரூ.150 கோடி செலவில் இந்த படம் தயாராகிறது. 'ஹாலிவுட்'டின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், படத்தில் பணிபுரிகிறார்கள்.

சோனாக்ஷி சின்ஹா

இளமையான புதிய தோற்றத்தில் கமல்ஹாசன் இந்த படத்தில் தோன்றுவார். அவருடைய தோற்றத்தை 'ஹாலிவுட்' தொழில்நுட்ப கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர். படத்தின் உடையலங்காரத்தை நடிகை கவுதமி கவனிக்கிறார்.

கதாநாயகியாக, பிரபல இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். சங்கர் எசான் லாய் இசையமைக்கிறார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், ரெட் காமிரா மூலம் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

கமல்ஹாசனின் பிறந்தநாளான, வரும் நவம்பர் 7-ம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். ஹே ராம், விருமாண்டிக்குப் பிறகு கமல் நேரடி இயக்குநராகப் பணியாற்றும் மூன்றாவது படம் இது.
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Wed May 25, 2011 11:02 am

ஜுன் 5-ம் தேதி நடிகர் ராதாரவி மகன் திருமணம்!


சென்னை: நடிகர் சங்க பொதுச் செயலாளர், நடிகர் ராதாரவியின் மகன் ஹரி ராதா ரவிக்கு வரும் ஜூன் 5-ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது. பெங்களூரைச் சேர்ந்த திவ்யா என்ற மகாலட்சுமியை அவர் மணக்கிறார்.

மறைந்த நடிகர் எம் ஆர் ராதாவின் மகனான நடிகர் ராதா ரவிக்கு ரேகா என்ற மகளும், ஹரி ராதாரவி என்ற மகனும் இருக்கிறார்கள்.

மகள் ரேகாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. மகன் ஹரி ராதாரவி, பி.காம் பட்டதாரி. 'திருமந்திரம்' என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

ஹரி ராதாரவிக்கும் பெங்களூரைச் சேர்ந்த டி.மோகன்-சாந்தி தம்பதிகளின் மகள் திவ்யா என்ற மகாலட்சுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில், ஜுன் 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு இந்தத் திருமணம் நடக்கிறது.

முன்னதாக, ஜுன் 4-ந் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் திரையுலக, அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தத் தேர்தலில் அதிமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தவர் ராதாரவி. ஆனால் திருமணத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வருவாரா என்று தெரியவில்லை
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Thu May 26, 2011 10:40 am

கழற்றிவிடப்பட்ட இயக்குனர்


பூமி நாயகனும், காதல் கொண்ட இயக்குனரும் இணைந்து படம் எடுக்கிறார்கள் என்றபோதே எதிர்பார்த்ததுதான்… இந்த‌க் கூட்டணி கரை சேராது. அதேபோல்தான் நடந்திருக்கிறது.

காதல் கொண்டவ‌ரின் செகண்ட் வேல்ட் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்கள் நடைபெறும் என தெ‌ரிகிறது. அதுவரை காத்திருக்க முடியாது என்பதாலேயே பூமி நாயகன் அவரை கழற்றிவிட்டு படத்தின் இயக்குனர் பொறுப்பையும் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் கதை மற்றும் திரைக்கதையில் ஏற்கனவே இருவருக்கும் கருத்து வேறுபாடு அதனால்தான் இந்த‌ப் பிளவு என்கிறார்கள்.

எப்படியோ… காதல் கொண்டவர் கழற்றிவிடப்பட்டது மட்டும் உறுதியாகியிருக்கிறது.
தமிழ் சினிமா
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 17 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum