புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_m10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10 
37 Posts - 51%
heezulia
இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_m10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_m10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_m10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_m10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_m10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_m10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_m10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_m10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10 
17 Posts - 2%
prajai
இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_m10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_m10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10 
9 Posts - 1%
jairam
இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_m10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_m10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10 
4 Posts - 1%
Jenila
இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_m10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_m10இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா???


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 16, 2011 9:26 am

சுய இன்பத்தில் ஒருவன் ஈடுபடுவதின் மூலம் இந்திரியத்தை வெளிப்படுத்துவதினால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆதலால் இதைத் தடுக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

சுய இன்பத்தின் மூலம் வெளியாக்கப்படும் இந்திரியமும்,......

தூக்கத்தில் வெளியாகும் இந்திரியமும் சமமானதே! தூக்கத்தில் அறியாமலும், சுய இன்பத்தில் அறிந்த நிலையிலும் இந்திரியம் வெளியாகிறது. இதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை.

இது நாம் உமிழ் நீரை உமிழ்வதைப் போன்றதே உமிழ் நீர் எப்படி உடனே சுரந்து விடுகிறதோ அது போல்தான் இந்திரியம் வெளியேற்றப் பட்ட சில மணி நேரத்திலேயே சுரந்து விடும். இதனால் எந்த சிக்களும் உடலுக்கு ஏற்படாது.


சுய இன்பத்தின் மூலம் வெளியாகும் இந்திpரியமும்,தூக்கத்தில் வெளியாகும் இந்திரியமும் சமமானதுதான் அதனால் அதனை தடுக்கத் தேவையில்லை என்பது அவர்களின் வாதம்.

உண்மையில் வெளியாகும் அளவில் வேண்டுமானால் இரண்டும் சமமாக இருக்களாம். ஆனால் முறைமையில் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

தூக்கத்தில் இந்திரியம் வெளியாவது என்பது இயற்க்கை.சுய இன்பத்தின் மூலம் வெளியாவது என்பது இயற்கைக்கு மாற்றமான செயற்கை.

உடலில் ஏற்படும் எந்த மாற்றமும் இயற்கையில் ஏற்பட்டால் பிரச்சினை இல்லை. (இயற்கை அளவுக்கு அதிகமானாலும் பிரச்சினையாகும். அப்படியிருக்க செயற்கை முறையில் மாற்றம் ஏற்படுவது உடலுக்கு கேடானது என்பதில் எந்த மருத்துவருக்கும் மாற்றுக் கருத்தில்லை) மாறாக செயற்கையில் நாம் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றால் அது பிரச்சினைதான்.

உதாரணத்திற்கு ஒருவர் மெலிந்தவராக இருந்து, இயற்கையாக (அளவாகக்) கொளுத்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் செயற்கை முறைகளை பயன் படுத்தி ஒருவர் தனது பருமனை அதிகரித்துக் கொண்டால் அது உடலுக்கு ஏகப்பட்ட சிக்களை ஏற்படுத்தி விடும். அது போல்தான் தூக்கத்தில் ஒருவருக்கு இந்திரியம் வெளிப்பட்டால் அதன் மூலம் உடலுக்கு நல்லது ஏற்படும்.

சுய இன்பத்தின் மூலம் இந்திரியத்தை வெளிப்படுத்தினால் உடலுக்கு கேடுதான் விளையும். இந்தக் கருத்தில் தான் பெரும்பாலான மருத்துவர்களும், விஞ்ஞான ஆய்வாளர்களும் இருக்கின்றார்கள்.

அத்துடன் உமிழ் நீர் சுரப்பதைப் போல் இந்திரியமும் சுரந்து விடும் என்பதால் இதை ஆதரிக்க முடியாது. ஏனெனில் இந்திரியம் சுரக்கிறதா இல்லையா என்பது பிரச்சினை இல்லை. வெளியேற்றும் முறை சிறந்ததா? சிக்களானதா? என்பதுதான் பிரச்சினை.

சுய இன்பத்தின் மூலம் இந்திரியத்தை வெளியேற்றுவது உடலுக்கு கேடானது என்று உருதியான பின் இந்திரியம் மீண்டும் சுரந்தாலும்,சுரக்கா விட்டாலும் அதை சுய இன்பம் மூலம் வெளியாக்க கூடாது.


கேள்வி:
சுய இன்பத்தின் மூலம் உடலுக்கு எந்த கேடும் ஏற்படவில்லையே! பிறகு ஏன் இதைத் தடுக்க வேண்டும்?


பதில்:
சுய இன்பத்தை ஆதரிக்கக் கூடியவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களில் இதுதான் மிக முக்கியமானது.

அவர்கள் சொல்லும் இந்த பதில்தான் அதிகமான இளைஞர்களை இந்த கெட்ட நடத்தையின் பக்கம் இழுப்பதற்கு காரணமாக இருக்கிறது.

சுய இன்பத்தில் ஈடுபடுவதின் மூலம்,அதில் ஈடுபடுபவர்களின் உடலுறவு நாட்டம் படிப்படியாகவே குறைந்து விடுகிறது.ஏனெனில் சுய இன்பத்தின் மூலம் அதில் ஈடுபடக்கூடியவன் அவசரமாக இந்திரியத்தை வெளிப்படுத்தவே நினைப்பான் அப்படி அவசரமாக வெளிப்படுத்திப் பழகிவிடுபவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் போது,அவசரமாக இந்திரியம் வெளியாகிவிடுவதால்.அவர்களின் இல்லற வாழ்க்கையில் இன்பம் இல்லாமல் ஆகிவிடுவதின் மூலம் அவர்களின் மனைவியர் வேறு வழிகளை நாடி வழிகெட்டுப் போவதற்கு அவர்களே காரணமாகவும் ஆகிவிடுகின்றனர்.

தாம் விபச்சாரத்தில் ஈடுபட்டு விடுவோம் என்ற பயம் ஏற்பட்டால் சுய இன்பம் கண்டு கொள்ளலாமா? (சகோதரர் பி.ஜெ அவர்கள் இது தொடர்பாக தமது இணையத் தளத்தில் வெளியிட்ட பதிலையே இதற்கு பதிலாக வெளியிடுகின்றோம்.)

இமாம் அஹ்மத் பின் ஹம்பல், இப்னு ஹஸ்ம் போன்ற மிகச் சிறந்த அறிஞர்கள் இவ்வாறு (சுய இன்பத்தில்) ஈடுபடுவது குற்றமில்லை என்று கூறியதை அடிப்படையாக வைத்து ஹராமை ஹலாலாக்கும் கொள்கையுடைய யூசுப் அல் கர்ளாவி போன்றவர்கள் இது ஹலால் என்று பத்வா கொடுப்பதால் எவ்வித உறுத்தலும் இல்லாமல் இதைச் சில இளைஞர்கள் செய்து வருகின்றார்கள்.


இவர்கள் அனைவரும் விபச்சாரத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நிர்பந்தத்தைத் தான் காரணம் காட்டுகிறார்கள்.


ஆனால் திருக்குர்ஆனும், நபி வழியும் இவர்களின் கருத்துக்கு எதிராகவே அமைந்துள்ளன.


"(நம்பிக்கை கொண்டோர்) தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிற தமது கற்பை காத்துக் கொள்வார்கள் அவர்கள் பழிக்கப் பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் வேறு வழியை)தேடியவர்களே வரம்பு மீரியவர்கள்." (23:5,6,7)

ஆண்கள் தமது மனைவியர் மூலம் அல்லது அடிமைப் பெண்கள் மூலம் தவிர மற்ற வழிகளை விட்டும் கற்பைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றும், இவ்விரு வழிகளில் தவிர மற்ற வழிகளில் இச்சையை தீர்த்துக் கொள்வோர் பழிக்கப் பட்டவர்கள் என்றும், வரம்பு மீறியவர்கள் என்றும் இவ்வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.

இப்போது அடிமைப் பெண்கள் இல்லாததால் மனைவியர் தவிர மற்ற வழிகளில் இச்சையைத் தீர்த்துக் கொள்வது வரம்பு மீறிய குற்றம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று அஞ்சும் நிலை இப்போது ஏற்படுவது போலவே நபியவர்களின் காலத்திலும் இருந்தது.இதற்கு மாற்ற வழியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்


"உங்களில் எவர் தாம்பத்தியத்திற்கு சக்தி பெற்றிருக்கிறாறோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப் படுத்தும்.கற்பைக் காக்கும். யார் அதற்கு சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும் அது அவரது இச்சையை கட்டுப்படுத்தும்." (புகாரி : 1905)


அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்)அவர்கள் கூறியதாவது
"நானும், அல்கமா, மற்றும் அஸ்வத் ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (பின்வருமாறு) சொன்னார்கள். நாங்கள் (வசதி, வாய்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபியவர்களுடன் இருந்தோம் அப்போது நபியவர்கள் எங்களிடம்

இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் முடித்துக்கொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத)பார்வையை கட்டுப்படுத்தும். கற்பைக் காக்கும். அதற்கு சக்தி பெறாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில் நோன்பு (ஆசையை) கட்டுப் படுத்தக் கூடியதாகும். என்று சொன்னார்கள்." (புகாரி : 5066)

நபியவர்களின் ஆட்சியின் துவக்க காலத்தில் ஏற்பட்ட வறுமையைப் போல் இனி ஒரு காலத்தில் வறுமை ஏற்பட முடியாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஒரு நாளைக்கு ஒரு பேரிச்சம் பழம் கூட கிடைக்காத, ஒரு ஆடைக்கு மறு ஆடை இல்லாத அளவுக்கு அந்த வறுமை இருந்தது. பலருக்கு பள்ளிவாசலே வீடாக இருந்தது.
இந்த நிலையில் தான் திருமணம் செய்வதற்க்கான மஹர் இன்ன பிற அடிப்படைத் தேவைகளுக்குக் கூட நபித்தோழர்களிடம் ஒன்றும் இல்லாததால் திருமணம் செய்ய முடியாத நிலையில் பலர் இருந்தனர். அவ்வாறு திருமணம் செய்ய முடியாதவர்கள் தம்மைக் கட்டுப் படுத்திக் கொள்ள நோன்பு எனும் ஆயுதத்தை கையில் எடுக்குமாறு நபியவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

சுய இன்பம் செய்வதற்கு அனுமதியிருந்தால் அதைச் சொல்வதற்கு பொருத்தமான இடம் இதுதான். ஆனால் அவ்வாறு கூறாமல் நோன்பு நோற்று உணர்வுகளை கட்டுப் படுத்துமாறு நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டி விட்டனர்.

நபியவர்கள் காட்டிய இந்த வழியை விட சுய இன்பம் விபச்சாரத்தை தடுக்கக் கூடியதாக இருக்காது. உணர்வுகளைக் கட்டுப் படுத்தும் பயிற்சியில்லாமல் இப்படி நடந்து கொள்பவர்கள் வாய்ப்புக் கிடைத்தால் எளிதில் விபச்சாரத்தில் விழுவதற்குத் தான் இது வழிவகுக்கும்.

நபியவர்களின் காலத்தில் போர் செய்வதற்க்காக வெளியே செல்கின்ற நேரத்தில் மனைவியர் இல்லாததால் விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று நபித்தோழர்கள் அஞ்சினார்கள் எனவே அவர்கள் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதி கேட்ட போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி மறுத்து விட்டனர்.
இப்னு மஸூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
"நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களடன் துணைவியர் எவரும் இருக்கவில்லை. எனவே, நாங்கள் இறைத்தூதர் அவர்களே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா? என்று கேட்டோம். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள்." (புகாரி : 5071)


இப்னு அபீ ஹாஸிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர் கூறியதாவது:
"அப்துல்லாஹ் இப்னு மஸூத் ரளியல்லாஹு அன்ஹு அவாகள் நாங்கள் இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் (எங்கள் துணைவியரோ, வேறு பெண்களை மணந்துகொள்ளத் தேவையான செல்வமோ) ஏதும் இருக்கவில்லை. எனவே நாங்கள் இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், (ஆண்மை நீக்கம் செய்துகொள்ள) நாங்கள் காயடித்துக் கொள்ளலாமா? என்று கேட்டோம். அவ்வாறு செய்யவேண்டாமென நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

அதன் பின்னர் ஆடைக்கு பதிலாகப் பெண்களை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள் என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை அன்னார் எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்." (புகாரி : 5075)

"இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள தூய்மையான பொருட்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் வரம்புமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை" (5:87)

குறைந்த மஹரைக் கொடுத்தாவது திருமணம் தான் செய்ய வேண்டும் என்று நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
சுய இன்பம் என்பது விபச்சாரமாகவே நபித்தோழர்களால் கருதப்பட்டதால் தான் எந்த நபித்தோழரும் சுய இன்பம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதாக காண முடியவில்லை.

மார்க்கத்தில் இது தடை செய்யப் பட்டது என்றாலும் விபச்சாரத்தில் விழுந்து விடாமல் தற்காத்துக் கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் இவ்வாறு செய்யலாமா? என்று சிலர் வாதிடுகின்றனர்.இவ்வாறு வாதிடுவதும் தவறானதாகும்.


மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்ட வழிகள் இல்லா விட்டால் தான் நிர்ப்பந்தம் என்ற நிலை ஏற்படும்.

நபித்தோழர்களுக்காவது திருமணம் முடிக்க வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது. இன்று அத்தகைய நிலை இல்லை. மேலும் குறைந்த மஹருக்கு வாழ்க்கைப் பட பெண்கள் காத்திருக்கிறார்கள். இளைஞர்கள் தக்க வயது வந்த பின்பும் பொருந்தாத காரணங்கள் கூறி திருமணத்தை தள்ளிப் போட்டு விட்டு அதை நிர்பந்தம் என்று சொல்ல முடியாது.

மேலும் வெளிநாட்டுக்குச் சென்று பல வருடங்கள் தங்கினால் இல்லற இன்பம் கிடைக்காது என்பது சாதாரணமாக அனைவருக்கும் தெரியும்.தெரிந்து கொண்டே இந்த நிலையை நாமாக தலையில் போட்டுக் கொண்டால் அது நிர்பந்தம் ஆகாது.

ஒரு ஊரில் பன்றியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காது என்று திட்டவட்டமாகத் தெரிகிறது. கண்டிப்பாக பன்றியைத் தான் தின்னும் நிலை ஏற்படும் என்று தெரிந்தால் அந்த ஊருக்குச் சென்று பன்றியைச் சாப்பிடுவது நிர்பந்த நிலையில் சேராது.

"தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்,நிகரற்ற அன்புடையோன்." (2:173)

வலியச் செல்லாத நிலையில் இருந்தால் தான் அது நிர்பந்தம், நாமாக வலியச் சென்று அந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டால் அது நிர்பந்தம் இல்லை என்று மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் இது விபச்சாரத்தை தடுக்காது தூண்டவே செய்யும் என்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும்.

சரி குடும்ப நிலை காரணமாக வெளிநாட்டுக்கு வந்து விட்டு மனைவியின் துணையில்லாமல் இருக்கிறோம் அந்த நிலையில் இது போன்ற கெட்ட எண்ணம் தோன்றாமல் பார்த்துக் கொள்ள முடியாதா? நிச்சயம் முடியும். இந்த நிலை ஏன் ஏற்படுகிறது?

விபச்சாரத்தைத் தூண்டும் சினிமாக்கள், பாலியல் காட்சிகளின் வீடியோக்கள் மற்றும் ஆபாசக் காட்சிகளை எவ்வித உருத்தலும் இன்றி பார்ப்பது தான் இதற்கு முதல் காரணமாக உள்ளது. பொதுவாகவே இவை தவிர்கப்பட வேண்டியவை என்றாலும் மனைவியின் துணையின்றி இருக்கும் போது அதிகம் தவிர்கப் பட வேண்டியதாகும். இது போன்ற காட்சிகளைப் பார்ப்பது நம்மை தீய செயலில் தள்ளும் என்பதை உணர வேண்டும்.

மேலும் நபியவர்கள் கற்றுத் தந்த முறையில் நோன்பு நோற்று கட்டுப் படுத்திக் கொள்ளலாம். தனிமையாக இருப்பதால் இது போன்ற எண்ணம் ஏற்பட்டால் நல்ல நண்பர்களுடன் சேர்ந்து தங்குவதின் மூலம் தீய எண்ணத்தை மாற்றலாம்.

வணக்க வழிபாடுகள் மற்றும் பொதுச் சேவைகளில் ஈடுபடுவதின் மூலமும் இது போன்ற செயலை விட்டு ஒழிக்கலாம்.
இப்படி சுய இன்பம் செய்த பின் ஒரு அழகான பெண்ணுடன் தனித்திருக்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டால் அப்போது கட்டுப்பாடுடன் இருக்க சுய இன்பப் பழக்கம் உதவவே செய்யாது. நோன்பு நோற்று நல்லொழுக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டால் அது நிச்சயம் விபச்சாரத்தில் இருந்து காப்பாற்றும்.

இதையும் மீறி உடம்பில் ரொம்ப முறுக்கேறிவிட்டால் தூக்கத்தில் ஸ்கலிதம் ஆவதின் மூலமாக அதற்கு அல்லாஹ் இயற்கை வடிகாலை அமைத்துள்ளான் என்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும்.

இது போன்ற செயலில் கடந்த காலங்களில் ஈடுபட்டவர்கள் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

அன்பின் சகோதரர்களே! இளைஞர்களே! இந்த கேடு கெட்ட செயல்பாடு ஒரு குறுகிய நோக்கம் கொண்டதே! இதில் ஈடுபடுவது எதிர்காலத்தையே நாசம் செய்துவிடும் என்பதில் அனுவளவும் சந்தேகமில்லை.

ஆக நம்முடைய சிறிது நேர இன்பத்திற்க்காக எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கும் இத்தகைய காரியங்களை நாம் கண்டிப்பாக தவிர்த்துத்தான் ஆக வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்முடைய அனைத்துக் காரியங்களையும் இலேசாக்குவானாக

நன்றி:tndawa.blogspot.com



நேசமுடன் ஹாசிம்
இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 16, 2011 10:14 am

அருமையான தகவல்களை அளித்த நண்பருக்கு நன்றி !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon May 16, 2011 12:44 pm

நன்றி ஹாசிம், ஆனத்து இளைஞர்களுக்கும் தேவையான தகவல்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்முடைய அனைத்துக் காரியங்களையும் இலேசாக்குவானாக
ஆமீன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 16, 2011 12:52 pm

கருத்துள்ள பதிவு பகிந்தமைக்கு நன்றி அண்ணா!

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 16, 2011 1:53 pm

ரபீக் wrote:அருமையான தகவல்களை அளித்த நண்பருக்கு நன்றி !!

நன்றி ரபீக் நானும் இதை படித்தபோது அனைவருடனும் பகிர்ந்து கொள்ள மனம் நாடியது இறைவனுக்கே எல்லாப்புகளும் நன்றி



நேசமுடன் ஹாசிம்
இஸ்லாமிய பார்வையில் சுயஇன்பம் கூடுமா??? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 2:00 pm

கருத்துள்ள பதிவு பகிந்தமைக்கு நன்றி ஹாசிம் சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon May 16, 2011 2:53 pm

அருமையான தகவல்.......!!!!



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக