புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_m10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10 
48 Posts - 45%
heezulia
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_m10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10 
43 Posts - 41%
T.N.Balasubramanian
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_m10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_m10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_m10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10 
3 Posts - 3%
jairam
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_m10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_m10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_m10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_m10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_m10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_m10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10 
14 Posts - 4%
prajai
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_m10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_m10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10 
5 Posts - 1%
jairam
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_m10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_m10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_m10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_m10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_m10ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்?


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 15, 2011 9:25 pm

சென்னை: 3வது முறையாக முதல்வராகும் ஜெயலலிதா தலைமையில் நாளை அதிமுக அமைச்சரவை பதவியேற்கவுள்ளது.

சட்டசபைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள அதிமுக நாளை ஆட்சியமைக்கிறது. மூன்றாவது முறையாக ஜெயலலிதா முதல்வராகிறார். இதையடுத்து அதிமுகவினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். பதவியேற்பு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதையடுத்து அமைச்சர்களாக யார் யார் பதவியேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை 25 பேரைக் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் 4 பேர் வரை பெண்களாக இருக்கலாம்.

ஓ.பன்னீர் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சராக்கப்படலாம். போக்குவரத்துத் துறை செங்கோட்டையன் அல்லது நத்தம் விஸ்வநாதனுக்குக் கொடுக்கப்படலாம். அறநிலையத்துறை பொள்ளாச்சி ஜெயராமனுக்கும், மீன்வளத்துறை ஜெயக்குமாருக்கும் வழங்கப்படலாம் என்று பேசப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தூர்ப்பாண்டியன், சங்கரன்கோவில் கருப்பசாமி, மதுரை செல்லூர் ராஜூ, சென்னையில் வென்ற பா.வளர்மதி, கோகுல இந்திரா, துறைமுகத்தில் வென்ற பழ. கருப்பையா ஆகியோரும் அமைச்சராகக் கூடும்.

அதேபோல வில்லிவாக்கத்தில் அன்பழகனை வீழ்த்திய ஜேசிடி பிரபாகரன் அமைச்சராக்கப்படலாம். அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை கிடைக்கும் என்று பேசப்படுகிறது.

சபாநாயகர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அமைச்சர் பதவிக்கு அடிபடும் பழ. கருப்பையாவின் பெயர் சபாநாயகர் பதவிக்கும் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.
தட்ஸ் தமிழ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 15, 2011 10:05 pm

சென்னை: முதல்வராக ஜெயலலிதாவும், இதர 33 அமைச்சர்களும் நாளை பதவியேற்கின்றனர். ஓ.பன்னீர்செல்வம் நிதியமைச்சர் ஆகிறார். பள்ளிக் கல்வி அமைச்சராக சி.வி.சண்முகம், செய்தித் துறை அமைச்சராக செந்தமிழன் உட்பட 33 பேர், புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

தமிழக முதல்வராக அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா நாளை பதவி ஏற்கிறார். அவரது தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில், 33 பேர் பதவி ஏற்க உள்ளனர். அதன் விவரம்:
பெயர் வெற்றி பெற்ற தொகுதி துறை
1. ஜெ.ஜெயலலிதா ஸ்ரீரங்கம் பொது நிர்வாகம், உள்துறை
2. ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் நிதி மற்றும் திட்டத்துறை
3. கே.ஏ.செங்கோட்டையன் கோபி விவசாயம்
4. நத்தம் விசுவநாதன் நத்தம் மின் துறை
5. கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி உள்ளாட்சித் துறை
6. சண்முகவேலு மடத்துக்குளம் தொழில் துறை
7. ஆர்.வைத்திலிங்கம் ஒரத்தநாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
8. அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலசப்பாக்கம் உணவுத்துறை
9. சி.கருப்பசாமி சங்கரன்கோவில் கால்நடை மற்றும் பால்வளம்
10. பி.பழனியப்பன் பாப்பிரெட்டிப்பட்டி உயர்கல்வித் துறை
11. சி.வி.சண்முகம் விழுப்புரம் பள்ளி கல்வித்துறை
12. செல்லூர் கே.ராஜு மதுரை மேற்கு கூட்டுறவுத் துறை
13. கே.டி.பச்சைமால் கன்னியாகுமரி வனத்துறை
14. எடப்பாடி கே.பழனிச்சாமி எடப்பாடி நெடுஞ்சாலைத் துறை
15. எஸ்.பி.சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் இந்து சமய அறநிலையத்துறை
16. கே.வி.ராமலிங்கம் ஈரோடு மேற்கு பொதுப்பணித் துறை
17. எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் சிறப்பு திட்ட அமலாக்கம்
18. டி.கே.எம்.சின்னய்யா தாம்பரம் பிற்படுத்தப்பட்ட நலத்துறை
19. எம்.சி.சம்பத் கடலூர் ஊரக வளர்ச்சித் துறை
20. பி.தங்கமணி குமாரபாளையம் வருவாய் துறை
21. ஜி.செந்தமிழன் சைதாப்பேட்டை செய்தி மற்றும் விளம்பரத்துறை
22. எஸ்.கோகுல இந்திரா அண்ணா நகர் வணிக வரித்துறை
23. செல்வி ராமஜெயம் புவனகிரி சமூகநலத்துறை
24. பி.வி.ரமணா திருவள்ளூர் கைத்தறித்துறை
25. ஆர்.பி.உதயகுமார் சாத்தூர் தகவல் தொழில்நுட்பத் துறை
26. என்.சுப்பிரமணியன் கந்தர்வகோட்டை ஆதிதிராவிடர் நலத்துறை
27. வி.செந்தில் பாலாஜி கரூர் போக்குவரத்துத் துறை
28. என்.மரியம் பிச்சை திருச்சி மேற்கு சுற்றுச்சூழல் துறை
29. கே.ஏ.ஜெயபால் நாகப்பட்டினம் மீன்வளத்துறை
30. இ.சுப்பையா அம்பாசமுத்திரம் சட்டத்துறை
31. புத்திசந்திரன் உதகை சுற்றுலாத்துறை
32. எஸ்.டி.செல்லப்பாண்டியன் தூத்துக்குடி தொழிலாளர் துறை
33. வி.எஸ்.விஜய் வேலூர் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
34. என்.ஆர்.சிவபதி முசிறி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Scaled.php?server=706&filename=purple11
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 15, 2011 11:15 pm

புன்னகை புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon May 16, 2011 9:49 am

ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Jaya-1a-228x300

சென்னை: ஜெயலலிதா தலைமையில் அமையும் புதிய அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்கள் யார் யார் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நாளை ஜெயலலிதாவுடன் பதவி ஏற்கிறார்கள்.

புதிய அமைச்சரவையில் ஜெயலலிதா தவிர 33 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் புதுமுகங்களே என்பது குறிப்பிடதக்கது.

அவர்கள் விவரம்:

  • ஜெ. ஜெயலலிதா – முதல்வர்
  • ஓ. பன்னீர்செல்வம் – நிதி அமைச்சர்
  • கே.ஏ. செங்கோட்டையன் – விவசாயத் துறை அமைச்சர்
  • நத்தம் ஆர். விஸ்வநாதன் – மின்சாரத்துறை அமைச்சர்
  • கே.பி. முனுசாமி – உள்ளாட்சித்துறை அமைச்சர்
  • சி. சண்முகவேலு – தொழில்துறை அமைச்சர்
  • ஆர். வைத்திலிங்கம் – வீட்டுவசதித்துறை அமைச்சர்
  • அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி – உணவுத்துறை அமைச்சர்
  • சி. கருப்பசாமி – பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்
  • பி. பழனியப்பன் – உயர்கல்வித்துறை அமைச்சர்
  • சி.வி. சண்முகம் – பள்ளிகல்வித்துறை அமைச்சர்
  • செல்லூர் கே. ராஜு – கூட்டுறவுத்துறை அமைச்சர்
  • கே.டி. பச்சமால் – வனத்துறை அமைச்சர்
  • எடப்பாடி கே. பழனிசாமி – நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்
  • எஸ்.பி. சண்முகநாதன் – இந்து அறநிலையத்துறை அமைச்சர்
  • கே.வி. ராமலிங்கம் – பொதுப்பணித்துறை அமைச்சர்
  • எஸ்.பி. வேலுமணி – சிறப்புத் திட்டத்துறை அமைச்சர்
  • டி.கே.எம். சின்னையா – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
  • எம்.சி. சம்பத் – ஊரக தொழில்துறை அமைச்சர்
  • பி. தங்கமணி – வருவாய்த்துறை அமைச்சர்
  • ஜி. செந்தமிழன் – செய்தித்துறை அமைச்சர்
  • எஸ். கோகுல இந்திரா – வணிக வரித்துறை அமைச்சர்
  • செல்வி ராமஜெயம் – சமூகநலத்துறை அமைச்சர்
  • பி.வி. ராமண்ணா – கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சர்
  • ஆர்.பி. உதயகுமார் – தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
  • என். சுப்பிரமணியன் – ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
  • வி. செந்தில் பாலாஜி – போக்குவரத்துத்துறை அமைச்சர்
  • என். மரியம் பிச்சை – சுற்றுச்சூழல் அமைச்சர்
  • கே.ஏ. ஜெயபால் – மீன்வளத்துறை அமைச்சர்
  • இ. சுப்பையா – சட்டத்துறை அமைச்சர்
  • புதிசந்திரன் – சுற்றுலாத்துறை அமைச்சர்
  • எஸ்.டி. செல்லபாண்டியன் – தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
  • வி.எஸ். விஜய் – சுகாதாரத்துறை அமைச்சர்
  • என்.ஆர். சிவபதி – விளையாட்டுத்துறை அமைச்சர்


புதிய அமைச்சர்களின் படங்கள் (எதிர்வரும் நாட்களில் மிகவும் உதவக் கூடும்!)


ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Jayalalitha-12345




ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? C-karupasamy-1


ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? C-sanmugavelu-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? C.v.sanmugam-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Ka-jayapal-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Kd-pachimal-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Kirisnamoorthy-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Kp-munusamy-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Kv-ramalingam-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Mc-sampath-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? N-mariyampichai
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Natham-r-visbvanathan-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Nr-sivapathy-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? N-supramaniyan-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? O.paneerselvam-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Palaiyappan-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? P-thangamani-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Palanisamy-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Puthi-santhiran-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Pv-ramana-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Rp-udayakumar-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? R-vaithilingam-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Sd-sellapandiyan-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Sellur-raj-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Selviramajayam-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Sengothaiyan-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Senthamizhan-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? S-gogulaindira-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Sp-velumani-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Suppaiya-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Tkm-sinnaya-1
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? V-senthilkumar-1



ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Vs-vajay-1


சபாநாயகராக பழ கருப்பையா தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது



என்வழி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 16, 2011 10:10 am

சென்னை: பழைய அமைச்சர்கள் பலருக்கும் வாய்ப்பளிக்காமல் ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் முதல்வர் பதவியேற்கவுள்ள ஜெயலலிதா.

தன்னையும் சேர்த்து 34 பேரைக் கொண்ட அமைச்சரவைப் பட்டியலை நேற்று ஜெயலலிதா வெளியிட்டார்.

ஜெயலலிதா தவிர்த்து உள்ள 33 அமைச்சர்களில் 9 பேர் மட்டுமே பழைய முகங்கள் ஆகும். மற்ற 24 பேரும் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பழையவர்களை விட புதியவர்களையே அதிகம் நியமிப்பது ஜெயலலிதா ஸ்டைல். எம்.எல்.ஏக்களாக இருந்தாலும் சரி, அமைச்சர்களாக இருந்தாலும் சரி, புதியவர்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளித்து ஊக்குவிப்பார் ஜெயலலிதா.

அந்த வகையில் இந்த முறையும் அவரது அமைச்சரவை முற்றிலும் வித்தியாசமானதாக உள்ளது.

ஜெயக்குமார், வளர்மதிக்கு இடமில்லை

பழைய முகங்கள் என்று பார்த்தால் ஓ.பி.பன்னீர்செல்வம், கேஏ.செங்கோட்டையன், நத்தம் ஆர்.விஸ்வநாதன், சண்முக வேலு, ஆர்.வைத்திலிங்கம், சி.வி.சண்முகம், எஸ்.வி.சண்முகநாதன், எம்.சி.சம்பத், சி.கருப்பசாமி ஆகியோர்தான் இடம் பெற்றுள்ளனர். ஜெயலலிதாவின் ராசி எண் 9 என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயக்குமார், பா. வளர்மதி ஆகிய பழைய அமைச்சர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேபோல நயினார் நாகேந்திரன் போன்ற சீனியர்களுக்கும் இடம் தரப்படவில்லை.

24 புதுமுகங்கள்

அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பி.பழனியப்பன், செல்லூர் ராஜூ, எடப்பாடி பழனிச்சாமி, பி.தங்கமணி, கே.டி.பச்சமால், வி.செந்தில் பாலாஜி, எஸ்.வி. வேலுமணி, டி.கே.எம்.சின்னையா, இசக்கி சுப்பையா, ஜி.செந்தமிழன், கோகுலஇந்திரா, ராமஜெயம், பி.வி.ரமணா, ஆர்.வி.உதயகுமார், என்.சுப்பிரமணியன், என்.மரியம் பிச்சை, புத்தி சந்திரன், எஸ்.டி.செல்லப்பாண்டியன், டாக்டர் வி.எஸ்.விஜய், என்.ஆர். சிவபதி, ஜெயபால், கே.பி. முனுசாமி, கே.வி.ராமலிங்கம் ஆகிய புதுமுகங்கள் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.

சபாநாயகரை வீழ்த்தியவர் சட்ட அமைச்சர்

கடந்த திமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த ஆவுடையப்பனை அம்பாசமுத்திரத்தில் வீழ்த்திய இசக்கி சுப்பையாவுக்கு சட்ட அமைச்சர் பதவியைக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.

கரூரில் வென்ற செந்தில் பாலாஜிக்கு போக்குவரத்துத் துறையைக் கொடுத்துள்ளார்.

சென்னை அண்ணா நகரில் வென்ற கோகுல இந்திராவுக்கு பதவி கிடைத்துள்ளது. இவர் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லூர் ராஜு அமைச்சர்

மதுரை மேற்குத் தொகுதியைச் சேர்ந்த செல்லூர் ராஜுக்கும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. அதேபோல சேவல் சின்னத்திலிருந்து அதிமுகவில் ஜெயித்து வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இந்த முறை அமைச்சர் பதவி கொடுத்துக் கெளரவித்துள்ளார் ஜெயலலிதா.

சைதாப்பேட்டையில் வென்றவரான செந்தமிழன் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சராகியுள்ளார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு இடம்

கலசப்பாக்கத்தில் வென்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் முதல் முறையாக அமைச்சராகிறார்.

புதிய அமைச்சர்களில் பி.வி.ரமணா திருவள்ளூரில் வென்றவர்.

தாம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற சின்னையாவும் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார்.

ஞானசேகரனை வீழ்த்தியவருக்கு அமைச்சர் பதவி

வேலூர் தொகுதியில் காங்கிரஸ் ஜாம்பவான் ஞானசேகரனை வீழ்த்தி வெற்றி பெற்ற டாக்டர் வி.எஸ். விஜய்க்கும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. அவருக்கு சுகாதாரத்துறை என்ற முக்கியமான துறையைக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.

அமைச்சராகியுள்ள தங்கமணி குமாரபாளையம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றவராவார்.

ஈரோடு மேற்கு தொகுதியில் வெற்றி பெற்றவரான கே.வி.ராமலிங்கத்திற்கு பொதுப் பணித்துறை என்ற மிக முக்கியமான துறையைக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.

உதகமண்டலம் தொகுதியில் வென்றவரான புத்தி சந்திரனுக்கும் அமைச்சர் பதவி அதிர்ஷ்டம் கை கூடி வந்துள்ளது.

இன்னொரு புதுமுக அமைச்சரான எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீரங்கம் தொகுதிக்குப் பக்கத்துத் தொகுதியான திருச்சி மேற்கிலிருந்து வென்றவரான மரியம் பிச்சைகும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

கந்தர்வக்கோட்டையிலிருந்து வென்றவரான என்.சுப்பிரமணியனும் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார்.

முசிறி தொகுதியில் வென்ற என்.ஆர்.சிவபதியும் அமைச்சராகியுள்ளார்.

அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள செல்வி ராமஜெயம், புவனகிரி தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அதிமுகவின் முக்கியப் புள்ளிகளில் ஒருவர் ஆர்.பி.உதயக்குமார். சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவரான உதயக்குமார் இப்போது முதல் முறையாக அமைச்சராகியுள்ளார்.

தூத்துக்குடியில் வென்றவரான செல்லப்பாண்டியனுக்கும் அமைசச்ர் பதவி கிடைத்துள்ளது.

சங்கரன் கோவில் தொகுதியில் போட்டியிட்டு வென்றவரான கருப்பசாமியும் முதல்முறையாக அமைச்சராகியுள்ளார்.

கடைக்கோடி கன்னியாகுமரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் பச்சமால். இவரும் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார்.

பாப்பிரெட்டிப்பட்டியில் போட்டியிட்டு வென்ற பி. பழனியப்பனும் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார்.

3 பெண்கள்

ஜெயலலிதா அமைச்சரவையில் அவரையும் சேர்த்து மொத்தம் 3 பெண்களுக்கு இடம் தரப்பட்டுள்ளது.

கோகுல இந்திரா மற்றும் செல்வி ராமஜெயம் ஆகியோர் அந்த அமைச்சர்கள்.

இதுவரை இல்லாத பெரிய அமைச்சரவை

இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய அமைச்சரவையை அமைத்துள்ளார் ஜெயலலிதா. இதுவரை தமிழகத்தில் 33 அமைச்சர்கள் இடம் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon May 16, 2011 11:00 am

பழையவர்களை விட புதியவர்களையே அதிகம் நியமிப்பது ஜெயலலிதா ஸ்டைல். எம்.எல்.ஏக்களாக இருந்தாலும் சரி, அமைச்சர்களாக இருந்தாலும் சரி, புதியவர்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளித்து ஊக்குவிப்பார் ஜெயலலிதா.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 12:24 pm

கடந்த 2001-06ம் ஆண்டு வரையில் நடந்த அ.தி.மு.க., ஆட்சியில் இடம் பெற்ற அமைச்சர்கள் சிலர், தற்போதைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்; சிலர் இடம் பெறவில்லை. ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, தனபால், விஜயலட்சுமி பழனிச்சாமி, நயினார்நாகேந்திரன், சோமசுந்தரம், கு.ப.கிருஷ்ணன், அன்பழகன் போன்றவர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பெயர் - வெற்றி பெற்ற தொகுதி - துறை
1. ஜெ.ஜெயலலிதா ஸ்ரீரங்கம் பொது நிர்வாகம், உள்துறை
2. ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் நிதி மற்றும் திட்டத்துறை
3. கே.ஏ.செங்கோட்டையன் கோபி விவசாயம்
4. நத்தம் விசுவநாதன் நத்தம் மின் துறை
5. கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி உள்ளாட்சித் துறை
6. சண்முகவேலு மடத்துக்குளம் தொழில் துறை
7. ஆர்.வைத்திலிங்கம் ஒரத்தநாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
8. அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலசப்பாக்கம் உணவுத்துறை
9. சி.கருப்பசாமி சங்கரன்கோவில் கால்நடை மற்றும் பால்வளம்
10. பி.பழனியப்பன் பாப்பிரெட்டிப்பட்டி உயர்கல்வித் துறை
11. சி.வி.சண்முகம் விழுப்புரம் பள்ளி கல்வித்துறை
12. செல்லூர் கே.ராஜு மதுரை மேற்கு கூட்டுறவுத் துறை
13. கே.டி.பச்சைமால் கன்னியாகுமரி வனத்துறை
14. எடப்பாடி கே.பழனிச்சாமி எடப்பாடி நெடுஞ்சாலைத் துறை
15. எஸ்.பி.சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் இந்து சமய அறநிலையத்துறை
16. கே.வி.ராமலிங்கம் ஈரோடு மேற்கு பொதுப்பணித் துறை
17. எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் சிறப்பு திட்ட அமலாக்கம்
18. டி.கே.எம்.சின்னய்யா தாம்பரம் பிற்படுத்தப்பட்ட நலத்துறை
19. எம்.சி.சம்பத் கடலூர் ஊரக வளர்ச்சித் துறை
20. பி.தங்கமணி குமாரபாளையம் வருவாய் துறை
21. ஜி.செந்தமிழன் சைதாப்பேட்டை செய்தி மற்றும் விளம்பரத்துறை
22. எஸ்.கோகுல இந்திரா அண்ணா நகர் வணிக வரித்துறை
23. செல்வி ராமஜெயம் புவனகிரி சமூகநலத்துறை
24. பி.வி.ரமணா திருவள்ளூர் கைத்தறித்துறை
25. ஆர்.பி.உதயகுமார் சாத்தூர் தகவல் தொழில்நுட்பத் துறை
26. என்.சுப்பிரமணியன் கந்தர்வகோட்டை ஆதிதிராவிடர் நலத்துறை
27. வி.செந்தில் பாலாஜி கரூர் போக்குவரத்துத் துறை
28. என்.மரியம் பிச்சை திருச்சி மேற்கு சுற்றுச்சூழல் துறை
29. கே.ஏ.ஜெயபால் நாகப்பட்டினம் மீன்வளத்துறை
30. இ.சுப்பையா அம்பாசமுத்திரம் சட்டத்துறை
31. புத்திசந்திரன் உதகை சுற்றுலாத்துறை
32. எஸ்.டி.செல்லப்பாண்டியன் தூத்துக்குடி தொழிலாளர் துறை
33. வி.எஸ்.விஜய் வேலூர் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
34. என்.ஆர்.சிவபதி முசிறி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை



சுரன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon May 16, 2011 1:22 pm

பூஜிதா wrote:
பழையவர்களை விட புதியவர்களையே அதிகம் நியமிப்பது ஜெயலலிதா ஸ்டைல். எம்.எல்.ஏக்களாக இருந்தாலும் சரி, அமைச்சர்களாக இருந்தாலும் சரி, புதியவர்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளித்து ஊக்குவிப்பார் ஜெயலலிதா.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


புதியவர்கள் வரவு தமிழ்நாட்டிற்கு நல்லது.
பிரசன்னா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிரசன்னா

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 16, 2011 8:32 pm

சென்னை: ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் குறித்த ஒரு பார்வை...

ஓ.பன்னீர் செல்வம்

போடிநாயக்கனூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். 60 வயதாகும் பன்னீர்செல்வம், பி.ஏ. படித்தவர். பெரியகுளம் நகராட்சியின் தலைவராக இருந்துள்ளார்.

முதல் முறையாக 2001-ம் ஆண்டு பெரியகுளம் சட்டசபை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் ஜெயலலிதா மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது 6 மாத காலத்திற்கு முதல்வர் பதவியை வகித்தார் ஓ.பன்னீர் செல்வம்.

பின்னர் மீண்டும் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது பன்னீர் செல்வம் பொதுப் பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

எளிமையானவராக அறியப்படும் ஓ.பன்னீர் செல்வம் தீவிர ஜெயலலிதா விசுவாசி ஆவார். ஜெயலலிதா எள் என்றால் எண்ணெயாக நிற்கும் அளவுக்கு தீவிரமான அதிமுக விசுவாசியும் கூட.

இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப் என இரு மகன்களும், கவிதா என்ற மகளும் உள்ளனர்.

கே.ஏ.செங்கோட்டையன்

ஜெயலலிதாவின் விசுவாசிகள் படையின் தளபதி செங்கோட்டையன். திட்டமிடுதலில் சிறந்தவரான இவர்தான் ஜெயலலிதாவின் பிரசாரத் திட்டங்களை வகுத்துக் கொடுப்பவர்.

அடக்கமாக இருப்பார் அதேசமயம் எதை செய்தாலும் ஆணித்தரமாக செய்து ஜெயலலிதாவிடம் நற்பெயர் பெறுபவர். ஈரோடு மாவட்டத்திலும், கொங்கு மண்டலத்திலும் அதிமுக தொடர்ந்து பலமுடன் இருக்க செங்கோட்டையனின் தீவிரப் பணிகளும் ஒரு காரணம்.

விவசாயியானசெங்கோட்டையன் இன்றளவும் விவசாயத்தை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் தலைவர். எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வரும் செங்கோட்டையன் அமைச்சராவது இது 2வது முறையாகும்.

கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து 6வது முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழையும் செங்கோட்டையன், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக அரசின் போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், கதிர் என்ற மகனும் உள்ளனர்.

ஆர். விஸ்வநாதன்

நத்தம் விஸ்வநாதன் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து அமைச்சராக செயல்பட்டார். இந்த முறை மின்சாரத் துறை அமைச்சராகியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள உலுப்பகுடி கிராமத்தைச் சேர்ந்தவர்.

சொந்த செல்வாக்குடன் கூடிய வெகுசில அதிமுக தலைவர்களில் இவரும் ஒருவர். 62 வயதான விஸ்வநாதன் பிஎஸ்சி படித்தவர். திண்டுக்கல் மாவட்ட செயலாளராக இருக்கும் விஸ்வநாதனுக்கு அமர்நாத் என்ற மகனும், கவிதா,
ரஞ்சிதா ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

கே.பி.முனுசாமி

59 வயதான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். மிகவும் முக்கியமான உள்ளாட்சித் துறையை இவருக்குக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.

பி.ஏ., பி.எல் படித்துள்ளமுனுசாமி கவுண்டர் ஆவார். இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

சி.சண்முகவேலு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சண்முகவேலு. தொழில்துறை அமைச்சராகியுள்ளார். எம்.ஏ. படித்துள்ள இவர் கொங்கு வேளாள கவுண்டர் வகுப்பைச் சேர்ந்தவர்.

ஆர்.வைத்திலிங்கம்

ஒரத்தநாடு தொகுதியின் எம்.எல்.ஏ. வைத்திலிங்கம். வீட்டு வசதித்துறை அமைச்சராகியுள்ளார். ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர் பதவியை இவர் ஏற்பது இது 2வது முறையாகும்.

பி.ஏ. படித்துள்ள வைத்திலிங்கம் 2001ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று தொழில்துறை அமைச்சரானார். பின்னர் வனத்துறைக்கு மாற்றப்பட்டார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி

ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சராகியுள்ளார். அமைச்சராவது இது அவருக்கு முதல் முறை.

எஸ்.கருப்பசாமி

சங்கரன்கோவிலைச் சேர்ந்த கருப்பசாமி மிகவும் எளிமையானவர். கால்நடைத்துறை அமைச்சராகியுயள்ளார். கருப்பசாமி அமைச்சராவது இது 2வது முறையாகும்.

பி.பழனியப்பன்

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியிலிருந்து வென்று முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். எடுத்த எடுப்பிலேயே உயர் கல்வித்துறை என்ற உயரிய துறையைப் பெற்றுள்ளார் பழனியப்பன்.

எம்.எஸ்.சி படித்துள்ள இவர் விவசாயம் செய்து வருகிறார். மனைவி, ொரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

சி.வி. சண்முகம்

ஜெயலலிதாவின் படைத் தளபதிகளில் இவரும் ஒருவர். பாமகவையும், டாக்டர் ராமதாஸையும் மிகக் கடுமையாக எதிர்ப்பவர்களில் இவரும் ஒருவர். பாமகவின் தீவிர பாலிட்டிக்ஸை சமாளித்து விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்.

கடந்த ஆட்சியில் இவர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகியுள்ளார்.

இவரது தந்தை வேணுகோபால் வந்தவாசி தொகுதி எம்.பியாக இருந்தவர்.

செல்லூர் ராஜு

முதல் முறையாக அமைச்சராகியுள்ளார் செல்லூர் ராஜு. மதுரை திமுக ஜாம்பவான் மு.க.அழகிரியின் வீடு அடங்கியுள்ள மதுரை மேற்குத் தொகுதியில் அபார வெற்றி பெற்று அதற்குப் பரிசாக அமைச்சர் பதவியைப் பிடித்துள்ளார் ராஜு.

முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த செல்லூர் ராஜு, உள்ளூர் அதிமுகவினரின் போட்டிகளையும் சமாளித்து அதிமுகவில் முக்கிய இடத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.டி.பச்சமால்

கன்னியாகுமரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் பச்சமால். நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த பச்சமாலுக்குச் சொந்த ஊர் நாகர்கோவிலுக்கு அருகே உள்ள தம்மத்துக்கோணமாகும்.

1979ம் ஆண்டிலிருந்து அதிமுகவில் செயல்பட்டு வரும் பச்சமால், அதிமுகவில் குமரி மாவட்ட கிழக்கு செயலாளராக செயல்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகியுள்ள பழனிச்சாமி அடிப்படையில் ஒரு சிவில் என்ஜீனியர் ஆவார். பொதுப்பணித்துறையில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி பின்னர் அதை உதறி விட்டு அதிமுகவில் இணைந்தார்.

நீண்ட காலமாக அதிமுகவில் செயல்பட்டு தீவிர ஜெயலலிதா விசுவாசி ஆவார். சேவல் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு ஜெயலலிதா அணி சார்பில் எம்.எல்.ஏ. ஆனவர்களில் இவரும் ஒருவர்.

எஸ்.பி.சண்முகநாதன்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் சண்முகநாதன். தற்போது இந்து அறநிலையத்துறை அமைச்சராகியுள்ளார்.

இவர் கடந்த 2001-ம் ஆண்டும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்றவர். அப்போது கைத்தறி துறை அமைச்சராக பதவி வகித்தார்.

கே.வி.ராமலிங்கம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவரான ராமலிங்கம் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். எடுத்த எடுப்பிலேயே பொதுப்பணித்துறை அமைச்சராகியுள்ளார் ராமலிங்கம்.

மடத்துக்குளம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராமலிங்கத்திற்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

எஸ்.பி.வேலுமணி

முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு அமைச்சராகியுள்ளார் எஸ்.பி.வேலுமணி.முதல் முறையாக இவர் அமைச்சராகியுள்ளார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குள் நுழைந்துள்ள வேலுமணி, எம்.ஏ. எம்.பில் படித்தவர். குனியமுத்தூர் நகராட்சி தலைவராக இருந்தவர்.

டி.கே.எம்.சின்னையா

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குள் முதல் முறையாக நுழைகிறார் சின்னையா. 48 வயதான பி.ஏ. பட்டதாரியான இவர் தாம்பரத்திலேயே பிறந்து வளர்ந்தவர். அதிமுக நகரச் செயலாளாக இருந்து வருகிறார்.

நகராட்சி கவுன்சிலராக செயல்பட்டு வந்த சின்னையா, சட்டசபைத் தேர்தலில் நின்று போட்டியிட்டு வென்றுள்ளார். தற்போது அமைச்சர் பதவியும் இவரைத் தேடி வந்துள்ளது.

மு.சி. சம்பத்

2வது முறையாக அமைச்சராகியுள்ளார் மு.சி.சம்பத். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான சம்பத் கடலூர் தொகுதியில் சட்டசபை உறுப்பினராகியுள்ளார்.

கடந்த 2001 தேர்தலில் நெல்லிக்குப்பம் தொகுதியில் போட்டியிட்டு வென்று வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் செயல்பட்டார்.

பி.தங்கமணி

முதல் முறையாக அமைச்சராகியுள்ள தங்கமணிக்கு, வருவாய்த்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குள் நுழைந்துள்ளார்.

ஜி.செந்தமிழன்

சென்னை சைதாப்பேட்டை தொகுதியிலிருந்து 2வது முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்துள்ள செந்திழன், செய்தி, ஒளிபரப்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

வழக்கறிஞரான இவர் அதிமுகவில் மாணவர் அணியின் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது தென் சென்னை மாவட்ட செயலாளராக செயல்படும் செந்தமிழன், 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். தற்போது மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கோகுல இந்திரா

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவரான கோகுல இந்திரா, சிவகங்கையில் வக்கீலாகப் பணியாற்றியவர். அரசியலில் படிப்படியாக முன்னேறிய கோகுல இந்திரா சிறந்த பேச்சாளர். இதனால் அவரை ராஜ்யசபா எம்.பியாக்கினார் ஜெயலலிதா. 2001 முதல் 2007 வரை ராஜ்யசபா உறுப்பினராகப் பணியாற்றிய கோகுல இந்திரா, அதிமுகவில் மாநில அமைப்புச் செயலாளராகப் பணியாற்றினார். தற்போது அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏவாகி அமைச்சராகியுள்ளார்.

செல்வி ராமஜெயம்

புவனகிரி சட்டசபைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செல்வி ராமஜெயம், 2 முறை பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவியாக இருந்தவர். தற்போது சமூக நலத்துறை அமைச்சராக முதல் முறையாக அமைச்சராகியுள்ளார்.

பி.வி.ரமணா

முதல் முறையாக அமைச்சராகியுள்ள ரமணா, எம்.எல்.ஏ. பதவிக்கு வந்துள்ளதும் முதல் முறையாகும்.

கம்மவார் வகுப்பைச் சேர்ந்த இவர் பார்மஸி படித்தவர். இவருக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர்.

ஆர்.பி.உதயக்குமார்

முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த உதயக்குமார் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். வழக்கறிஞரான உதயக்குமார் மதுரை அரசு சட்டக் கல்லூரியில் அதிமுக மாணவர் அணிச் செயலாளராக செயல்பட்டவர்.

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர்.

முதல் முறையாக எம்.எல்.ஏவாகியுள்ள உதயக்குமார், சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சராகியுள்ளார்.

ந.சுப்பிரமணியன்

கந்தர்வகோட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற ந.சுப்பிரமணியன். இவர் விராலிமலை அருகே உள்ள நம்பம்பட்டியைச் சேர்ந்தவர். சாலை ஆய்வாளராக பணிபுரிந்து வந்த இவர் முதல் முறையாக எம்எல்.ஏவாகி அமைச்சர் பதவியையும் அடைந்துள்ளார்.

செந்தில் பாலாஜி

கரூர் தொகுதியிலிருந்து 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, உள்ளூர் அதிமுகவில் பல போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்து வெற்றி பெற்று தற்போது அமைச்சர் பதவி என்ற ஜெயலலிதாவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

கரூர் மாவட்ட செயலாளராக இருந்து வரும் செந்தில் பாலாஜி, பி.காம். பட்டதாரி. 2000-ம் ஆண்டில் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளராக பணியாற்றினார். படிப்படியாக உயர்ந்து தற்போது அமைச்சர் பதவியை எட்டியுள்ளார்.

மரியம்பிச்சை

கே.என். நேருவை படு தோல்வியடையச் செய்ததால் பரிசாக அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளார் மரியம் பிச்சை. திருச்சி மேற்குத் தொகுதியிலிருந்து தேர்வாகியுள்ள மரியம் பிச்சை, பி.ஏ. படித்தவர். இவர் எம்.எல்.ஏ ஆவதும் இதுவே முதல் முறையாகும்.

கே.ஏ.ஜெயபால்

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் மீன்வளத்துறை அமைச்சராகியுள்ளார். முதல் முறையாக எம்.எல்.ஏ.வாகியுள்ள ஜெயபால், அமைச்சர் பதவிக்கு வருவதும் இதுவே முதல முறையாகும். நாகை மாவட்ட அதிமுக பொருளாளர் பொறுப்பையும் தற்போது ஜெயபால் வகித்து வருகிறார்.

இசக்கி சுப்பையா

அம்பாசமுத்திரம் தொகுதியில், ஆவுடையப்பனை வீழ்த்தி ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தவரான இசக்கி சுப்பையா சட்ட அமைச்சராகியுள்ளார்.

முதல் முறையாக எம்.எல்.ஏவான இவர் பெரும் தலையை வீழ்த்தியதால் அமைச்சர் பதவியையும் பரிசாக பெற்றுள்ளார். மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பையும் வகித்து வருகிறார்.

புத்திசந்திரன்

நீலகிரி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புத்தி சந்திரன், படுகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சுற்றுலா அமைச்சராகியுள்ளார். படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் எம்.எல்.ஏ பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் உயர்வது இதுவே முதல் முறை என்பதால் படுகர் சமுதாயமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.


சி.த.செல்லப்பாண்டியன்

தூத்துக்குடி தொகுதியிலிருந்து வென்றுள்ள செல்லப்பாண்டியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகியுள்ளார். காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவரான செல்லப்பாண்டியன் அமைச்சர் பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

எம்ஏ படித்துள்ள இவருக்கு இந்திரா என்ற மனைவியும், ராஜாசிங், ஜெபசிங் ஆகிய 2 மகன்களும், எஸ்தர் தங்கமணி என்ற மகளும் உள்ளனர்.

டாக்டர் வி.எஸ்.விஜய்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான டாக்டர் வி.எஸ்.விஜய், வேலூர் அரசு
மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்தவர். இவருடைய மனைவி ஜெயந்தி. மகள் டாக்டர் அனிதா, மகன் அருண் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார்.

டாக்டர் வி.எஸ்.விஜய் அரசு டாக்டர்கள் சங்க வேலூர் மாவட்ட தலைவராகவும், மாநில செயலாளராகவும் பணியாற்றியவர். கட்சியில் மருத்துவப்பிரிவு மாவட்ட துணை செயலாளராக இருந்தவர். முதன்முறையாக வேலூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் தொகுதியிலிருந்து தொடர்ந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த ஞானசேகரனை வீழ்த்தியதால் அமைச்சர் பதவி பரிசாக கிடைத்துள்ளது.

என்.ஆர்.சிவபதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான அறிவிக்கப்பட்டுள்ள சிவபதி 1963-ல்
பிறந்தவர். தொட்டியம் அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்தவர். எம்.ஏ. பி.எல்., படித்துள்ளார்.

1991-ல் சட்டமன்ற தேர்தலில் தொட்டியம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கட்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை
செயலாளர், மாநில மாணவர் அணி செயலாளர், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர், மாவட்ட துணை செயலாளர், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர், திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளர் என கட்சி பணி ஆற்றியுள்ளார்.

முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்துள்ளார் சிவபதி.
தட்ஸ் தமிழ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்? Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக