ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 ayyasamy ram

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 பழ.முத்துராமலிங்கம்

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 ayyasamy ram

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 ayyasamy ram

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 ayyasamy ram

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 ayyasamy ram

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 anikuttan

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 anikuttan

2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 ayyasamy ram

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 ayyasamy ram

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 ayyasamy ram

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ayyasamy ram

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 ayyasamy ram

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 ayyasamy ram

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 ayyasamy ram

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 T.N.Balasubramanian

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 krishnaamma

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 krishnaamma

குருப் 2 தேர்வுக்கு IMPACT IAS ACADAMY 2018(general english & general Tamil)
 thiru907

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 ayyasamy ram

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 ayyasamy ram

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 ayyasamy ram

மதித்திடுவோம் மாதர் தம்மை
 SK

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - அடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா? மோடி மீது சந்திரபாபு புகார்
 M.Jagadeesan

ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை!
 T.N.Balasubramanian

மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ., வுக்கு எதிராக 19ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
 M.Jagadeesan

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது.
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
 SK

காலம் உருக்குலைத்தாலும் எங்கள் காதல் மாறாது என்கிறதா இந்த மனித எலும்புக் கூடுகள்?
 SK

படமெடுத்த பாம்பை ஆத்திரத்தில் கடித்துத் துப்பிய விவசாயி!
 பழ.முத்துராமலிங்கம்

விமானத்தில் இருந்து மழையாக பொழிந்த தங்கம் - வைர குவியல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான முறையில் சிக்ஸர்... இது நியூசிலாந்தில் நடந்துள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

Video: ரசிகர்களை அதிர வைக்கும் Afridi-யின் Catch!
 SK

வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
 SK

வட தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
 SK

விஜய்யும் ரஜினியும் படைத்த சாதனைகள்; வேறெவரும் இடம்பெறவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் முதன்முறையாக தமிழ்
 பழ.முத்துராமலிங்கம்

தினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அதிமுக தரப்பு மனு
 SK

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்
 ரா.ரமேஷ்குமார்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
 ரா.ரமேஷ்குமார்

அரிசியில இருக்கற கல்லை நல்லா பொறுக்கினா என்ன?
 krishnaamma

ஒரு பக்கக் கதை - தலைவர்
 krishnaamma

நான் மலரோடு தனியாக...
 krishnaamma

தாத்தா கதாபாத்திரத்தில் பேரன்
 krishnaamma

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு
 SK

அமெரிக்காவில் நடைமேடை பாலம் இடிந்து விபத்து: பலர் சிக்கியுள்ளதாக தகவல்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!

View previous topic View next topic Go down

ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!

Post by கண்ணன்3536 on Thu May 19, 2011 11:11 amViruvirupu, Wednesday 18 May 2011, 15:12 GMT


புதுடில்லி, இந்தியா: “வெண்ணை திரண்டுவரும்போது தாழி உடைந்தது” என்று இந்தியாவில்தான் சொல்லுவார்கள். இப்போது தாழியை உடைத்திருக்கிறது இந்திய அரசு!

“இந்தியாவினால் தேடப்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்று இந்தியா நீண்டகாலமாகவே கூறிவருகிறது (அது உண்மைதான்). ஆனால், இந்தியாவின் இந்த நேரடிக் குற்றச்சாட்டுக்கு வேறெந்த நாடும் ‘ஆமாம்’ போட்டதில்லை.

காரணம், குற்றச்சாட்டு நேரடியாக மற்றொரு நாட்டின்மீது இருப்பதால், அதை ஒப்புக் கொள்வது நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்தும். ராஜதந்திர உறவுகள் அறுந்தும் போகலாம்.

இப்படி நீண்ட காலமாக இந்தக் குற்றச்சாட்டில் ‘தனித் தவில்’ அடித்துக்கொண்டிருந்த இந்தியாவுக்கு, சமீபத்தில் வெள்ளிதிசை அடித்தது. குட்டி நாடுகள்கூட ஒப்புக்கொள்ள முன்வந்திராத இந்தியாவின் குற்றச்சாட்டை, உலக வல்லரசான அமெரிக்கா, தானாகவே முன்வந்து ஒப்புக்கொண்டது!

அமெரிக்கா ஒப்புக்கொண்டதன் காரணம், இந்தியா மீதான அக்கறை அல்ல. அவர்களுக்கும் பாகிஸ்தானிய உளவுத்துறைக்கும் சமீபத்தில் ஏற்பட்ட உரசல் காரணமாகத்தான் ஒப்புக்கொண்டது.

பின்லேடனை பாகிஸ்தானுக்குள் வைத்துக் கொன்றபோது, பாகிஸ்தானிய உளவுத்துறையை சி.ஐ.ஏ. இருளில் வைத்திருந்ததுதான் உரசலுக்குக் காரணம்.

அதையடுத்து, “இந்தியாவில் வெடிகுண்டுத் தாக்குதலைத் திட்டமிட்ட ஆட்கள் பாகிஸ்தானுக்குள் பத்திரமாக வசிப்பது எங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறை சகல வசதிகளையும் செய்து கொடுத்திருப்பதும் எங்களுக்குத் தெரியும்” என்று ‘பாகிஸ்தானிய ரகசியத்தை’ போட்டுடைத்தது அமெரிக்கா.

அமெரிக்காவின் நோக்கம், பாகிஸ்தானிய உளவுத்துறையை சங்கடத்தில் மாட்டிவிடுவது மாத்திரமே!

ஆனால் அமெரிக்காவின் இந்த அதிரடி, இந்தியாவுக்கு அருமையான பாதை ஒன்றைத் திறந்துவிட்டது. தங்களது பழைய குற்றச்சாட்டை, அமெரிக்காவின் கூற்றை வைத்தே நிரூபித்துவிடக்கூடிய அருமையான பாதை!

இந்தப் பாதையைச் சரியாகப் பின்பற்றினால், தனது பக்கத்து வீட்டு எதிரியை, ராஜதந்திர ரீதியில் சுலபமாக மடக்கி விடலாம் என்பது இந்தியாவுக்குத் தெரியும். உடனே அதற்கான வேலைகளில் சுறுசுறுப்பாக இயங்கியது.

தம்மால் தேடப்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பது பற்றித் தம்மிடமுள்ள தகவல்களில், வெளியிடக்கூடியவற்றை இப்போது வெளிநாடுகளுக்குக் காட்டத் தொடங்கியிருக்கிறது. இவை வெறும் குற்றச்சாட்டுகள் மாத்திரமல்ல… எம்மிடம் ஆதாரங்களும் இருக்கின்றன என்று காட்டும் முயற்சி அது.

உண்மையில் இந்தியாவின் இந்த முயற்சி, பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன்பிருந்தே நடைபெற்று வருகின்றது.

ஏற்கனவே இந்த விஷயத்தில் இந்திய உட்துறை சுறுசுறுப்புடன் இயங்கி, தீவிரவாதிகள் பற்றிய விபரங்களைத் தொகுத்திருந்தது.தொகுக்கப்பட்ட விபரங்களை வைத்து, தம்மால் தேடப்படும் தீவிரவாதிகளின் பெயர்களடங்கிய ஒரு பட்டியலையும் தயாரித்திருந்தது.

ஆனால், அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச அளவில் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் இந்தியாவின் குற்றச்சாட்டை வேறெந்த நாடும் ஒப்புக் கொண்டிருக்கவில்லை.

இப்போது திடீரென லாட்டரி அடித்தாற்போல அமெரிக்கா ஒப்புக் கொண்டவுடன், இந்தப் பட்டியலுக்கு கியாதி ஏற்பட்டது. பட்டியல் இந்திய வெளிவிவகார அமைச்சிடம் கொடுக்கப்பட்டது.

இந்திய வெளிவிவகார அமைச்சு, உட்துறையால் வழங்கப்பட்ட பட்டியலை வைத்து வெளிநாட்டு அரசுகளிடையே பாகிஸ்தானுக்கு எதிரான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியது.

“இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதாக அமெரிக்காவே சொல்லிவிட்டது. இதோ பட்டிலைப் பாருங்கள். இந்த ஆதாரங்களைப் பாருங்கள்” என்று தமது கையிலிருந்த பட்டியலுடன் வெளிநாடுகளை அணுகியது வெளிவிவகார அமைச்சு. இந்த அணுகுமுறைக்கு குறுகிய காலத்தில் நல்ல பலனும் கிடைக்கத் தொடங்கியிருந்தது.

சுருக்கமாகச் சொன்னால், தாழியில் வெண்ணை அட்டகாசமாகத் திரளத் தொடங்கியது.

இந்த இடத்தில்தான் வருகிறது ஆன்டி கிளைமாக்ஸ்!

இந்திய உட்துறை தயாரித்திருந்த பட்டியல் இருக்கிறதல்லவா? அதில் 50 நபர்களின் பெயர்கள் உள்ளன. உட்துறை அமைச்சின் குறிப்பின்படி இந்த 50 பேரும் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள். இவர்கள் அனைவரும் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இவர்கள் அனைவருக்கும் பாகிஸ்தான் தஞ்சம் கொடுத்திருக்கிறது.

50 பேரடங்கிய பட்டியலில், 41-வது பெயராக வஸூல் கான் என்ற பெயர் உள்ளது.

இந்தியாவின் துரதிஷ்டம், இந்தப் பட்டியல் பகிரங்கப்படுத்தப்பட்டது. பட்டியலைப் பார்த்துத் திகைத்துப் போனார் ஒருவர். அவர்வேறு யாருமல்ல, சாட்சாத் வஸூல் கான்தான்!

திகைப்புக்குக் காரணம் என்ன?

பாகிஸ்தானிய உளவுத்துறையின் அரவணைப்பில், கராச்சியில் வசிப்பதாக இந்திய உட்துறை அமைச்சு குறிப்பிடும் இந்த வஸூல் கான் வசிப்பது, இந்தியாவுக்குள்தான்!

அதுவும் தலைமறைவு வாழ்க்கையல்ல! இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், தாணே என்ற இடத்தில் தொழில் செய்து வாழ்ந்து வருகிறார்.

தீவிரவாதி என்ற சந்தேகத்தில் இவர் ஒருமுறை கைது செய்யப்பட்டது உண்மை. கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட இவர், இரு மாதங்கள் மட்டுமே சிறையில் இருந்த நிலையில், கடந்த ஜூலையில் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின் தாணேயில் தானும் தன் பாடுமாக வாழ்ந்து வருகிறார்.

இந்த விஷயத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்தவே, பாரதீய ஜனதா உட்பட எதிர்க்கட்சிகள் பல கெட்டியாகப் பிடித்துக் கொண்டன. சங்கடத்தில் மாட்டிக்கொண்டது இந்திய உட்துறை அமைச்சு.

மறுக்கவோ, மழுப்பவோ முடியாத அளவில் விஷயம் பகிரங்கமாகிவிட்டது.

இப்போது இந்திய உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இது தமது அமைச்சின் தவறுதான் என்பதைப் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதையடுத்து, பாகிஸ்தானிடம் தஞ்சமடைந்திருப்பதாகக் கூறப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து வஸூல் கான் இன்று நீக்கப்பட்டார்.

உட்துறை அமைச்சின் பிரச்சினை அத்துடன் முடிந்துவிட்டது. ஆனால், சுறுசுறுப்பாகச் செயற்பட்டு, வெளிநாட்டு அரசுகளிடம் இதே பட்டியலைக் கொடுத்து கான்வஸ் செய்துகொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சுக்குத்தான், இப்போது தாழி உடைந்து விட்டது.

தாம் ஏற்கனவே பட்டியலைக் கொடுத்துவிட்ட அரசுகளிடம் மீண்டும் போய் நிற்கிறது வெளிவிவகார அமைச்சு. “ஐயா… நாங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள 41வது பெயரை அடித்து விடுங்கள். பிளீஸ்”

இந்தியாவுக்கு, பாகிஸ்தான் மீதான தனது குற்றச்சாட்டுக்கு, அமெரிக்காவின் புண்ணியத்தில் ஒரு பாதை திறந்தது. ஆனால், இந்தச் சம்பவத்தின் பின், இந்திய அரசு காட்டும் ஆதாரங்களில் எந்தளவு நம்பகத்தன்மை இருக்கிறதோ என்று வெளிநாடுகள் சந்தேகம் கொள்ளப் போகின்றன!

பேசாமல் வஸூல் கானை பாக் பண்ணி, பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்கலாமே!
நன்றி விறுவிறுப்பு.com
avatar
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 752
மதிப்பீடுகள் : 86

View user profile http://liberationtamils.blogspot.com

Back to top Go down

Re: ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!

Post by SK on Thu May 19, 2011 11:28 am

காங்கிரஸ் கட்சியின் நிர்வாக சீர்கேடு இதில் இருந்து தெளிவாக புரிகிறது
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4905
மதிப்பீடுகள் : 814

View user profile

Back to top Go down

Re: ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!

Post by உதயசுதா on Thu May 19, 2011 11:50 am

இவனுங்க எதைதான் ஒழுங்கா செய்து இருக்கானுங்க.இவனுங்க வேலைய ஒழுங்கா இவனுங்க செய்து இருந்தா நம்ம நாடு இந்நேரம் ஒரு நல்ல நிலைக்கு வந்து இருக்கும்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!

Post by மஞ்சுபாஷிணி on Thu May 19, 2011 12:56 pm

அட ராமா...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!

Post by அசுரன் on Thu May 19, 2011 1:03 pm

வெண்ணைகள் எல்லாம் அரசான்டால் இப்படித்தான் தாழி உடைந்துபோகும் புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!

Post by பிரசன்னா on Thu May 19, 2011 3:49 pm

இந்த அரசின் போக்கு எவ்வாறு உள்ளது என்று பாருங்கள்.

காங்கிரஸ் - சோனியாவின் தலைமையில் இந்தியாவின் வளங்களை கொள்ளை அடிபதோடு மட்டுமில்லாமல், இந்தியாவின் பெயரை முழுமையை நாசம் செய்கிறது.

பொதுஜனம் நாம் என்ன செய்ய முடியும் என்று!!!

தமிழ்நாட்டில் நாம் தி.மு.க விற்கு விடை குடூத்ததூ போல் காங்கிரஸ் விரைவில் வெளியேற்ற படவேண்டும்.

ஆனால் எப்படி நடக்கும் தி.மு.க குள்ள நரி கூட்டம் இருக்கும் வரை!!!
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum