ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 ayyasamy ram

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 ayyasamy ram

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 ayyasamy ram

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 பழ.முத்துராமலிங்கம்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

கேரளா சாகித்ய அகாடமி
 ayyasamy ram

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

36 தேசிய விருதுகளில் 14ஐ தமிழ்ப்படங்கள் தட்டிச்சென்றன ?

View previous topic View next topic Go down

36 தேசிய விருதுகளில் 14ஐ தமிழ்ப்படங்கள் தட்டிச்சென்றன ?

Post by தாமு on Fri May 20, 2011 12:31 pm

சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன், ஆடுகளம் படங்கள் 8 தேசிய விருதுகளை குவித்தன.
மொத்தம் அறிவிக்கப்பட்ட 36 விருதுகளில் 14ஐ தமிழ்ப்படங்கள் தட்டிச்சென்றன. சிறந்த நடிகர் விருதை தனுஷ், இயக்குனர், திரைக்கதைக்கான விருதை வெற்றிமாறன், எந்திரன் படத்துக்கான தயாரிப்பு வடிவமைப்புக்காக சாபுசிரில் பெற்றுள்ளனர்.
58&வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, ‘எந்திரன்’ படத்துக்கு 2 விருதுகளும் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ‘ஆடுகளம்’ படத்துக்கு 6 விருதுகளும் கிடைத்தன. சிறந்த நடிகர் விருதை மலையாள நடிகர் சலீம் குமாருடன் (ஆதாமின்டே மகன் அபு) இணைந்து தனுஷும், சிறந்த இயக்கம், திரைக்கதைக்கான விருதை வெற்றிமாறனும் பெற்றுள்ளனர்.

சன் பிக்சர்ஸின் முதல் தயாரிப்பான ‘எந்திரன்‘ உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்திய சினிமாவில் இதுவரை யாரும் தயாரிக்காத அளவுக்கு சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்திருந்தனர். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தப் படம், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

மெகா ஹிட்டான இந்தப் படத்துக்கு, ஸ்பெஷல் எபெக்ட்ஸ், தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. அவ்விருதுகளை முறையே ஸ்ரீனிவாஸ் மோகன், சாபு சிரில் பெறுகின்றனர். சன் பிக்சர்ஸ் வெளியிட்ட, ‘ஆடுகளம்’ படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடனம், சிறந்த எடிட்டிங் உட்பட 6 விருதுகள் கிடைத்தன.

ஆடுகளம் படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்த கவிஞர் ஜெயபாலன், ஜூரி விருதை பெற்றார். தமிழில் சிறந்த படமாக, ‘தென்மேற்கு பருவக்காற்று’ தேர்வு பெற்றுள்ளது. தேசிய விருதுகளில் கணிசமான விருதுகளை தமிழ்ப்படங்கள் பெற்றது மட்டுமின்றி, மலையாள படத்துக்கு 4 விருதுகள் கிடைத்துள்ளன. இதன் மூலம், தென் இந்திய படங்கள் தான் இந்த முறை அதிகமான விருதுகளை தட்டிச்சென்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


விருது பெற்றவர்கள் விவரம்

சிறந்த படம் : ஆதாமின்டே மகன் அபு (மலையாளம்)
சிறந்த நடிகர் : தனுஷ் (ஆடுகளம்), சலீம் குமார் (ஆதாமின்டே மகன் அபு)
சிறந்த இயக்குனர் : வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த திரைக்கதை : வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த நடன அமைப்பு : தினேஷ் (ஒத்த சொல்லால... ஆடுகளம்).
சிறந்த எடிட்டிங் : கிஷோர் (ஆடுகளம்)
சிவராம் காரந்த் விருது : ஆடுகளம்
சிறந்த பொழுதுபோக்கு படம் : தபங் (இந்தி)
சமூக பிரச்னை பற்றிய படம் : சாம்பியன்ஸ்(மராட்டி).
ஒளிப்பதிவு : மது அம்பாட் (ஆதாமின்டே மகன் அபு).
சிறந்த நடிகை : சரண்யா பொன்வண்ணன் (தென்மேற்கு பருவக்காற்று), மித்தாலி (பபு பஞ்ச் பாச்சா, மராட்டி).
சிறந்த குணசித்திர நடிகர் : தம்பி ராமய்யா (மைனா).
சிறந்த பாடலாசிரியர் : வைரமுத்து (கள்ளிக்காட்டில் பொறந்த தாயே, தென்மேற்கு பருவக்காற்று).
துணை நடிகை : சுகுமாரி (நம்ம கிராமம்).
தயாரிப்பு வடிவமைப்பு : சாபுசிரில் (எந்திரன்)
ஸ்பெஷல் எபெக்ட்ஸ் : ஸ்ரீனிவாஸ் மோகன் (எந்திரன்).
சிறந்த குழந்தைகள் படம் : ஹெச்சேகாலு (கன்னடம்).
இசைஅமைப்பாளர் : விஷால் பரத்வாஜ் (இஷ்க்யா), ஐசக் தாமஸ் (ஆதாமின்டே மகன் அபு).
ஜூரி விருது : வ.ஐ.ச. ஜெயபாலன் (ஆடுகளம்).

ரஜினிக்கு அர்ப்பணிக்கிறேன்: தனுஷ்

தேசிய விருது பெற்றது குறித்து நடிகர் தனுஷ் பெருமிதத்துடன் கூறியதாவது: "ஆடுகளம்" படத்தை, தேசிய விருதுக்கு அனுப்பியிருக்கிறார்கள் என்று தெரிந்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்போது, விருது கிடைத்தது அறிந்து எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை. எனக்கு விருது கொடுத்திருப்பதற்கு தேசிய விருது ஜூரிகளுக்கு நன்றி. ஏனென்றால் வட இந்தியாவில் தனுஷ் என்பவனை யாருக்குமே தெரியாது. அதற்கு பிறகு அம்மா, அப்பாவுக்கு நன்றி சொல்லிக்கிறேன். எனக்கு சேர்கிற எல்லாத்துக்கும் அவங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.

எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த அண்ணன் செல்வராகவனுக்கும் இந்த விருதில் பங்கு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் படம் பார்த்த முதல் நாளில் இருந்தே விருது கிடைக்கும் என்று சொல்லி வந்த என் மனைவி ஐஸ்வர்யாவுக்கும் நன்றி. இந்த விருதை ரஜினி சாருக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்.

கலாநிதி மாறனுக்கு விவேக் பாராட்டு

நடிகர் விவேக் கூறியதாவது: சன் பிக்சர்ஸின் ‘எந்திரன்‘, ‘ஆடுகளம்‘ படங்களுக்கு இத்தனை விருதுகள் கிடைத்திருப்பது பெருமையான விஷயம். ‘ஆடுகளம்‘ 6 விருது பெற்றிருப்பது பெருமையான விஷயம். இதில் நடித்த தனுஷ், அப்படியே மதுரை இளைஞனாக மாறியிருந்தார். மதுரை மண்ணின் வாழ்க்கையை எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் வெற்றிமாறன் இயக்கினார். அதற்கான பரிசுதான் இந்த தேசிய விருது.

ஆடுகளம் ஆர்ட் பிலிம் போல தோன்றும் கமர்ஷியல் படம். இந்த கதையை படமாக்குவது பெரிய ரிஸ்க். நிறைய துணிச்சல் வேண்டும். ஆடுகளம் அப்படி என்றால் ‘எந்திரன்’ அப்படியே தலைகீழ். அந்த பிரமாண்டம் இந்தியாவே இதுவரை பார்க்காதது. இத்தனை கோடிகளை கொட்டி படமெடுக்க மகா துணிச்சல் வேண்டும்.

இப்படி முற்றிலும் வெவ்வேறான கதைக்களத்தை சேர்ந்த இரண்டு படங்களையும் கொடுத்து தமிழுக்கு 8 தேசிய விருதுகள் கிடைக்க காரணமான கலாநிதி மாறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எந்திரனுக்காக ரொம்பவும் உழைத்த ரஜினிக்கும் ஒரு விருது கொடுத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

என் அம்மா கனவு நனவாகி இருக்கிறது

வெற்றிமாறன் கூறியது: இந்த விருதை எதிர்பார்க்கவில்லை. என் அம்மா மேகலா எப்போதும் நான் டெல்லியில் விருது வாங்க வேண்டும் என்று சொல்பவர். அவர் கனவு நனவாகியிருக்கிறது. இந்தப் படத்தன் ஷூட்டிங் முழுக்க மதுரையில் நடந்தது. என் மனைவிக்கு குழந்தை பிறந்தபோது கூட சென்று பார்க்க முடியவில்லை. அந்த வேதனைகளை தாங்கிக்கொண்ட என் மனைவிக்கு நன்றி. அதே போல, இந்தப் படத்துக்கு என் மீது நம்பிக்கை வைத்து, முழு ஒத்துழைப்பு கொடுத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

ஒளியேற்றியது மைனா

தம்பி ராமய்யா கூறியது: ‘சினிமாவில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்த எனக்கு ‘மைனா‘ ஒளியேற்றி வைத்தது. இயக்குனர் பிரபு சாலமனுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். மேலும் நன்றாக நடிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை இந்த விருது தந்திருக்கிறது. வயது முதிர்ந்த எனது தாய்க்கும், ஒரு வெற்றி பெற மாட்டாரா என ஏங்கிய என் மனைவிக்கும் இந்த விருது மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அவர்கள் சந்தோஷம்தான் எனது சந்தோஷமும்’

எதிர்பாராத விருது இது

சரண்யா கூறுகிறார்: ‘தென்மேற்கு பருவக்காற்று‘ படத்தை பார்த்துவிட்டு எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று முதலில் சொன்னது மீடியாதான். அவர்களுக்கு வாழ்த்துக்கள். இது எதிர்பார்க்காத விருது. என்னை நம்பி இப்படியொரு கேரக்டரை கொடுத்த இயக்குனர் சீனு ராமசாமிக்கு நன்றி.

மக்களின் வாழ்க்கையை அப்படியே எடுத்ததற்கு கிடைத்த வெற்றி

இயக்குனர் சீனு ராமசாமி கூறியது: ‘தென்மேற்கு பருவக்காற்று‘ ஒரு நிலத்தின் கதை. சரியான நில பின்னணியோடு அந்த மக்களின் வாழ்க்கையை எந்தவித சமரசமும் இல்லாமல் நேர்மையாக பதிவு செய்ததற்காக கிடைத்த பரிசாக இதை கருதுகிறேன். என்னை சிறு இயக்குனர் என்று நினைக்காமல் தாய் கேரக்டரை உள்வாங்கி நடித்த சரண்யா, படத்தை முதலில் பார்த்து கண்ணீர்விட்டு பாடல் எழுதிய வைரமுத்து, துணிச்சலோடு தயாரித்த சிபு ஜசக் ஆகியோர்தான் இந்த விருதுக்கு காரணம்.

6&வது முறையாக விருது பெறும் வைரமுத்து

தேசிய விருதை 6&முறையாக, கவிஞர் வைரமுத்து வாங்குகிறார். முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களுக்காக தேசிய விருது பெற்றிருந்தார். அவர் கூறியது: பொதுவாக நான் பாட்டு எழுதிய பிறகுதான் படம் எடுப்பார்கள். ஆனால், ‘தென்மேற்கு பருவக்காற்று‘ படத்தில் தற்போது தேசிய விருது கிடைத்திருக்கும் ‘கள்ளிக்காட்டில் பொறந்த தாயே‘ பாடல் படம் எடுத்த பிறகு எழுதிய பாடல்.

இதுவரை நடுத்தர மற்றும் மேட்டுக்குடி தாய்களை பற்றிய பாடல்களே திரைப்படத்தில் வந்திருக்கிறது. முதன் முறையாக உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த, புழுதி மண்ணை சேர்ந்த ஒரு தாயின் பாடலாக இது எழுதப்பட்டது. தான் படிக்காமல் உழைத்து தன் பிள்ளைகளை படிக்க வைத்த, படிக்க வைத்துக் கொண்டிருக்கிற தாய்மார்களுக்கு இந்த விருதை சமர்ப்பணம் செய்கிறேன்.ஞானமுது
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: 36 தேசிய விருதுகளில் 14ஐ தமிழ்ப்படங்கள் தட்டிச்சென்றன ?

Post by சிவா on Fri May 20, 2011 1:14 pm

தென்னிந்தியப் படங்கள் அதிகம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum