ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யாரு இவரு கண்டுபுடிங்க
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 SK

ஆயுளைத் தீர்மானிக்கும் மெட்டபாலிசம்
 SK

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 ayyasamy ram

ஆதார் காட்டுங்க....!!
 SK

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 SK

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கணவனை சந்தேகப்படலாமா?

View previous topic View next topic Go down

கணவனை சந்தேகப்படலாமா?

Post by சிவா on Thu May 26, 2011 10:51 am

"ஏன் இவ்ளோ லேட்? எங்கே போயிட்டு வர்றீங்க...'' - புது மனைவி அனிதாவின் அதிகாரமான குரல் அசோக்கை முதன் முறையாக அதிரச் செய்தது.

"வரும் வழியில் பெட்ரோல் இல்லாமல் டூவீலர் நின்றுவிட்டது. அதான் லேட்டாகி விட்டது''.

"இந்த உப்பு சப்பு இல்லாத காரணம் எல்லாம் வேண்டாம். உண்மையில் எங்கே போயிட்டு வர்றீங்க''.

"ஏன் அனிதா இப்படியெல்லாம் கேட்குற? உன் கிட்ட நான் ஏன் பொய் சொல்லணும்?''

"அதைத்தான் நானும் உங்க கிட்ட கேக்குறேன்?''

"நம்பு அனிதா. உன் மேல சத்தியமா ஆபீசில் இருந்து நேரா வீட்டுக்குத்தான் வர்றேன்...''

அசோக் எவ்வளவோ சொல்லியும் அனிதா அவனை புரிந்து கொண்டபாடில்லை. அவன் கூறியதையும் நம்பவில்லை.

ஏன் அவர்களுக்குள் ஆரம்பத்திலேயே இந்த முட்டல், மோதல்?

அசோக்கிற்கும், அனிதாவிற்கும் 3 மாதத்திற்கு முன்புதான் திருமணம் ஆனது. சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்கள். அசோக்கிற்கு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை. அனிதா பட்டதாரி பெண். வேலைக்கு செல்வது பற்றி இன்னும் அவள் முடிவெடுக்கவில்லை.

தன் மீதான சந்தேகம் அனிதாவிற்கு வலுத்ததால் அவளை பெண் சைக்காலஜிஸ்ட் ஒருவரிடம் அழைத்துச் செல்ல முடிவெடுத்தான் அசோக். இதை அப்படியே அவளிடம் சொன்னால், அவளது சந்தேகம் இன்னமும் அதிகமாகும் என்று எண்ணியவன், நேராக தான் மட்டும் அந்த பெண் சைக்காலஜிஸ்ட் வீட்டிற்குச் சென்றான்.

தனது நிலைமையை முழுமையாக கூறியவன், ஒரு உறவினர் என்கிற பார்வையில் தனது மனைவிக்கு அறிவுரைகள் கூறுமாறு கேட்டுக்கொண்டான். அதற்கு பெண் சைக்காலஜிஸ்ட்டும் ஒத்துக்கொண்டார்.

அனிதாவிடம், விருந்தினர் ஒருவர் தங்களை விருந்துக்கு அழைத்திருப்பதாக பொய் சொல்லி, அவளை சைக்காலஜிஸ்ட் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அந்த சைக்காலஜிஸ்ட்டும் உறவினர் போலவே அனிதாவிடம் பேசினார். அவர் சில கேள்விகளைக் கேட்டபோது, அனிதா தனது மனதிற்குள் பூட்டி வைத்திருந்த பல விஷயங்களை கொட்டத் தொடங்கினாள்.

எந்தவொரு ஆணுக்கும் அழகான மனைவி இருந்தாலும், அடுத்த பெண் மீதான மோகப் பார்வை மட்டும் குறையாது என்று சக தோழியர் கூறியதை அப்படியே மனதில் ஆழமாக பதிந்து வைத்திருந்தாள் அனிதா. நாம் எவ்வளவுதான் தைரியமாக - அதிகாரமாக பேசினாலும், கடைசியில் கணவனிடம் பணிந்து தான் போக வேண்டும் என்றும் கூறி, அறிவுரை என்கிற பெயரில் அவளை மனக்குழப்பத்திற்கு ஆளாக்கி உள்ளனர், அந்த தோழியர்.திருமணமாகி தனிக்குடித்தனம் வந்த நிலையில் பக்கத்து வீட்டுப் பெண்கள் அனிதாவிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர்.

`காலம் கெட்டுக் கிடக்குதும்மா. உன் புருஷனை நீதான் பாத்துக்கணும். புருஷன் தொடர்ந்து வீட்டுக்கு தாமதமா வந்தா, வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் பிடித்துவிட்டார் என்று அர்த்தம். இந்த விஷயத்தில் நீ ஏமாந்து விடாதே' என்று அவர்கள் கூறியது அனிதாவை மேலும் குழப்பமாக்கி விட்டது.

இதை உறுதி செய்வது போல், புது மனைவி மீதான ஆசை, மோகத்தால் தினமும் அலுவலகம் முடிந்ததும் வேகமாக வந்த அசோக், அதன் பிறகு மனைவி சலித்துப் போனதாலோ என்னவோ தாமதமாக வரத் தொடங்கினான். இதுவே அனிதாவின் சந்தேகத்தை பூதாகரமாக கிளப்பி விட்டு விட்டது.

ஒரு உறவினராக சைக்காலஜிஸ்ட் தந்த பல்வேறு அறிவுரைகளுக்குப் பிறகு அசோக்கை முழுமையாக புரிந்து கொண்டாள் அனிதா. இந்த விஷயத்தில் அசோக்கிற்கும் மனைவியிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சில உண்மைகள் சொல்லப்பட்டன. அதன்பிறகே அவர்களது வாழ்க்கையில் வசந்தம் மலர்ந்தது.

ராமையாவும் மனைவியின் சந்தேகப் பிடியில் சிக்கி மீண்டவர் தான். தான் தவறே செய்யாத நிலையில், தன் மீது சந்தேகப்படும் மனைவியை மேலும் உசுப்பேற்ற வேண்டும் என்பதற்காக காலையில் 8 மணிக்கு வேலைக்கு சென்றவர் இரவு 10 மணிக்குத்தான் வீடு திரும்பினார். மனைவி என்னதான் சந்தேகத்தோடு கத்தினாலும், அதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு வந்தார்.

ஒருநாள் இரவு 10 மணிக்கு மேலாக வீடு திரும்பிய ராமையாவுக்கு அன்போடு உணவை பரிமாறிய அவரது மனைவி, "ஆமாங்க... உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா? நம்ம தெருவுல பேய் நடமாடுதாம். நேற்று கூட ஒருவரை பேய் பிடித்துவிட்டதாம்'' என்று சும்மா ஒரு பொய்யை கொளுத்திப் போட்டாள்.

`பேயா... உன்னையே நான் சமாளிக்கும்போது, எந்த பேயும் என்னை ஒன்றும் செய்து விடாது' என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டவர், "அப்படியா?'' என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டதோடு அமைதியாகிவிட்டார்.

மறுநாள் வழக்கம்போல் இரவு 10 மணிக்குப் பிறகு வீட்டுக்கு வந்தார் ராமையா. அன்று வழக்கத்திற்கு மாறாக வீட்டின் முன்புறம் இருந்த பெரிய கேட்டை பெரிய பூட்டு போட்டு பூட்டிவிட்டார் அவரது மனைவி. எவ்வளவோ கத்திப் பார்த்தும் அவரது மனைவி வெளியே வரவேயில்லை. செல்போனை தொடர்பு கொண்டும் பயனில்லை.

நேரம் வேகமாக நகர்ந்தது. நேரம் என்னாச்சு என்று கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது அது சரியாக நள்ளிரவு 12 மணியை தொட்டுக் கொண்டிருந்தது. அந்தநேரத்தில் சில தெருநாய்கள் வேகமாக குரைக்க, முந்தைய நாள் மனைவி சொன்ன பேய் ஞாபகம் வந்தது.

பேய் இல்லை என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்ட ராமையா, திடீரென்று நள்ளிரவு 12 மணிக்கு ஆள் நடமாட்டமே இல்லாத நடுத்தெருவில் நின்றதால் சற்று நடுங்கித்தான் போனார். நீண்ட நேரம் நின்றதால் கால் வலிக்க... அருகில் இருந்த மின் கம்பத்தின் அடியில் அமர்ந்தார். ஒரு நிமிடம் தான் ஓடியிருக்கும். வழக்கமாக பகலில் `கட்' ஆகும் மின்சாரம் அப்போது திடீரென்று `கட்' ஆனது.

பயத்தில் வேகமாக எழுந்த ராமையாவின் சட்டையை யாரோ பிடித்து இழுப்பது போல் இருந்தது. பேய்தான் இழுக்கிறது என்று நினைத்து, அலறியபடியே தனது வீட்டு கேட்டின் முன்பு போய் விழுந்தார். அவரது கை, கால்கள் வேகமாக நடுங்க ஆரம்பித்தன.

தலை நிமிர்ந்து, வீட்டின் கேட்டைப் பார்த்தார். அது லேசாக ஆட ஆரம்பித்து, பின் பலமாக நடுங்கியது. உண்மையிலேயே பேய் வந்துவிட்டது என்ற அதிர்ச்சியில் மயக்கமாகிப் போனார் ராமையா.

மறுநாள் காலையில் வெகுநேரத்திற்குப் பிறகே கண் விழித்தார். வீட்டுக்குள் அவர் படுத்திருக்க, அருகில் அவரது மனைவியும், மகளும் சோகத்தோடு நின்று கொண்டிருந்தனர்.

ராமையா கண் விழித்ததைப் பார்த்த அவரது மனைவி, "நேற்று இரவு மின் கம்பத்தில் என்ன செய்தீர்கள்? உங்கள் சட்டையின் பாதிப் பகுதி அதில் இருந்த கம்பியில் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. நீங்களோ கேட் வாசலில் மயங்கி கிடக்கிறீர்கள். பேய் வந்ததாக நான் சும்மாதான் சொன்னேன். ஆனால், நீங்களோ பேய் அறைந்தது போல் கிடந்தீர்களே...'' என்று சொன்னபோதுதான், `அப்போ என்னை இருந்தது பேய் இல்லையா?' என்று தன்னைத்தானே நொந்து கொண்டார் ராமையா. நடந்த சம்பவத்திற்குப் பிறகு இரவு 7 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வர ஆரம்பித்துவிட்டார் அவர்.

கணவன் மீது சந்தேகம் வந்தால், இந்த பேய் பிரச்சினை மட்டுமல்ல, பல பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி வரும். தம்பதியர் இருவருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டு விடும். தற்கொலை முடிவு கூட எடுக்க நேரலாம்.

அலுவலகத்திலும், அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியிலும் எவ்வளவோ நெருக்கடிகளை ஒரு ஆண் சந்திக்க நேரலாம். வெளியில் தான் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளையும் ஒரு ஆண் வீட்டில் கொட்டினால், அங்கே நிம்மதி போய் விடும்.

மொத்தத்தில் மனைவி தன்னிடம் அன்பு மழை பொழிந்தால் எந்த கணவனும் தொடர்ந்து தாமதமாக வீட்டிற்கு வர மாட்டான். நல்ல கணவனாகத்தான் இருப்பான். இதில் விதிவிலக்காக இருப்பவர்களும் உண்டு. மனைவி உயிருக்கு உயிராகவே வைத்திருந்தாலும் இப்படிப்பட்டவர்கள் இரவில் கொஞ்சமாச்சும் ஊர் சுற்றிவிட்டுத்தான் வீட்டுக்குள் காலெடுத்து வைப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களை என்ன செய்யலாம்? இதுபற்றி முடிவெடுக்க வேண்டியவர்கள், அவர்களது மனைவிமார்களே!

தினதந்தி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கணவனை சந்தேகப்படலாமா?

Post by தாமு on Thu May 26, 2011 11:27 am

///மொத்தத்தில் மனைவி தன்னிடம் அன்பு மழை பொழிந்தால் எந்த கணவனும் தொடர்ந்து தாமதமாக வீட்டிற்கு வர மாட்டான். நல்ல கணவனாகத்தான் இருப்பான்/////


சூப்பருங்க நன்றி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum