புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_m10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10 
53 Posts - 43%
heezulia
கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_m10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10 
52 Posts - 42%
T.N.Balasubramanian
கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_m10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_m10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_m10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10 
3 Posts - 2%
jairam
கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_m10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10 
2 Posts - 2%
சிவா
கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_m10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10 
1 Post - 1%
Manimegala
கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_m10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_m10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10 
182 Posts - 50%
ayyasamy ram
கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_m10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_m10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10 
15 Posts - 4%
prajai
கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_m10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_m10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10 
7 Posts - 2%
Jenila
கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_m10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10 
4 Posts - 1%
jairam
கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_m10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_m10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10 
3 Posts - 1%
Rutu
கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_m10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_m10கணவனை சந்தேகப்படலாமா?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனை சந்தேகப்படலாமா?


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 31, 2011 1:42 pm

“ஏன் இவ்ளோ லேட்? எங்கே போயிட்டு வர்றீங்க…” – புது மனைவி அனிதாவின் அதிகாரமான குரல் அசோக்கை முதன் முறையாக அதிரச் செய்தது.

“வரும் வழியில் பெட்ரோல் இல்லாமல் டூவீலர் நின்றுவிட்டது. அதான் லேட்டாகி விட்டது”.

“இந்த உப்பு சப்பு இல்லாத காரணம் எல்லாம் வேண்டாம். உண்மையில் எங்கே போயிட்டு வர்றீங்க”.

“ஏன் அனிதா இப்படியெல்லாம் கேட்குற? உன் கிட்ட நான் ஏன் பொய் சொல்லணும்?”

“அதைத்தான் நானும் உங்க கிட்ட கேக்குறேன்?”

“நம்பு அனிதா. உன் மேல சத்தியமா ஆபீசில் இருந்து நேரா வீட்டுக்குத்தான் வர்றேன்…”

அசோக் எவ்வளவோ சொல்லியும் அனிதா அவனை புரிந்து கொண்டபாடில்லை. அவன் கூறியதையும் நம்பவில்லை.

ஏன் அவர்களுக்குள் ஆரம்பத்திலேயே இந்த முட்டல், மோதல்?

அசோக்கிற்கும், அனிதாவிற்கும் 3 மாதத்திற்கு முன்புதான் திருமணம் ஆனது.
சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்கள். அசோக்கிற்கு தனியார்
நிறுவனம் ஒன்றில் வேலை. அனிதா பட்டதாரி பெண். வேலைக்கு செல்வது பற்றி
இன்னும் அவள் முடிவெடுக்கவில்லை.

தன் மீதான சந்தேகம் அனிதாவிற்கு வலுத்ததால் அவளை பெண் சைக்காலஜிஸ்ட்
ஒருவரிடம் அழைத்துச் செல்ல முடிவெடுத்தான் அசோக். இதை அப்படியே அவளிடம்
சொன்னால், அவளது சந்தேகம் இன்னமும் அதிகமாகும் என்று எண்ணியவன், நேராக தான்
மட்டும் அந்த பெண் சைக்காலஜிஸ்ட் வீட்டிற்குச் சென்றான்.

தனது நிலைமையை முழுமையாக கூறியவன், ஒரு உறவினர் என்கிற பார்வையில் தனது
மனைவிக்கு அறிவுரைகள் கூறுமாறு கேட்டுக்கொண்டான். அதற்கு பெண்
சைக்காலஜிஸ்ட்டும் ஒத்துக்கொண்டார்.

அனிதாவிடம், விருந்தினர் ஒருவர் தங்களை விருந்துக்கு அழைத்திருப்பதாக பொய்
சொல்லி, அவளை சைக்காலஜிஸ்ட் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அந்த
சைக்காலஜிஸ்ட்டும் உறவினர் போலவே அனிதாவிடம் பேசினார். அவர் சில
கேள்விகளைக் கேட்டபோது, அனிதா தனது மனதிற்குள் பூட்டி வைத்திருந்த பல
விஷயங்களை கொட்டத் தொடங்கினாள்.

எந்தவொரு ஆணுக்கும் அழகான மனைவி இருந்தாலும், அடுத்த பெண் மீதான மோகப்
பார்வை மட்டும் குறையாது என்று சக தோழியர் கூறியதை அப்படியே மனதில் ஆழமாக
பதிந்து வைத்திருந்தாள் அனிதா. நாம் எவ்வளவுதான் தைரியமாக – அதிகாரமாக
பேசினாலும், கடைசியில் கணவனிடம் பணிந்து தான் போக வேண்டும் என்றும் கூறி,
அறிவுரை என்கிற பெயரில் அவளை மனக்குழப்பத்திற்கு ஆளாக்கி உள்ளனர், அந்த
தோழியர்.திருமணமாகி தனிக்குடித்தனம் வந்த நிலையில் பக்கத்து வீட்டுப்
பெண்கள் அனிதாவிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர்.

`காலம் கெட்டுக் கிடக்குதும்மா. உன் புருஷனை நீதான் பாத்துக்கணும். புருஷன்
தொடர்ந்து வீட்டுக்கு தாமதமா வந்தா, வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம்
பிடித்துவிட்டார் என்று அர்த்தம். இந்த விஷயத்தில் நீ ஏமாந்து விடாதே’
என்று அவர்கள் கூறியது அனிதாவை மேலும் குழப்பமாக்கி விட்டது.

இதை உறுதி செய்வது போல், புது மனைவி மீதான ஆசை, மோகத்தால் தினமும் அலுவலகம்
முடிந்ததும் வேகமாக வந்த அசோக், அதன் பிறகு மனைவி சலித்துப் போனதாலோ
என்னவோ தாமதமாக வரத் தொடங்கினான். இதுவே அனிதாவின் சந்தேகத்தை பூதாகரமாக
கிளப்பி விட்டு விட்டது.

ஒரு உறவினராக சைக்காலஜிஸ்ட் தந்த பல்வேறு அறிவுரைகளுக்குப் பிறகு அசோக்கை
முழுமையாக புரிந்து கொண்டாள் அனிதா. இந்த விஷயத்தில் அசோக்கிற்கும்
மனைவியிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சில உண்மைகள்
சொல்லப்பட்டன. அதன்பிறகே அவர்களது வாழ்க்கையில் வசந்தம் மலர்ந்தது.

ராமையாவும் மனைவியின் சந்தேகப் பிடியில் சிக்கி மீண்டவர் தான். தான் தவறே
செய்யாத நிலையில், தன் மீது சந்தேகப்படும் மனைவியை மேலும் உசுப்பேற்ற
வேண்டும் என்பதற்காக காலையில் 8 மணிக்கு வேலைக்கு சென்றவர் இரவு 10
மணிக்குத்தான் வீடு திரும்பினார். மனைவி என்னதான் சந்தேகத்தோடு
கத்தினாலும், அதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு வந்தார்.

ஒருநாள் இரவு 10 மணிக்கு மேலாக வீடு திரும்பிய ராமையாவுக்கு அன்போடு உணவை
பரிமாறிய அவரது மனைவி, “ஆமாங்க… உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா? நம்ம
தெருவுல பேய் நடமாடுதாம். நேற்று கூட ஒருவரை பேய் பிடித்துவிட்டதாம்” என்று
சும்மா ஒரு பொய்யை கொளுத்திப் போட்டாள்.

`பேயா… உன்னையே நான் சமாளிக்கும்போது, எந்த பேயும் என்னை ஒன்றும் செய்து
விடாது’ என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டவர், “அப்படியா?” என்று
அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டதோடு அமைதியாகிவிட்டார்.

மறுநாள் வழக்கம்போல் இரவு 10 மணிக்குப் பிறகு வீட்டுக்கு வந்தார் ராமையா.
அன்று வழக்கத்திற்கு மாறாக வீட்டின் முன்புறம் இருந்த பெரிய கேட்டை பெரிய
பூட்டு போட்டு பூட்டிவிட்டார் அவரது மனைவி. எவ்வளவோ கத்திப் பார்த்தும்
அவரது மனைவி வெளியே வரவேயில்லை. செல்போனை தொடர்பு கொண்டும் பயனில்லை.

நேரம் வேகமாக நகர்ந்தது. நேரம் என்னாச்சு என்று கைக்கடிகாரத்தைப்
பார்த்தபோது அது சரியாக நள்ளிரவு 12 மணியை தொட்டுக் கொண்டிருந்தது.
அந்தநேரத்தில் சில தெருநாய்கள் வேகமாக குரைக்க, முந்தைய நாள் மனைவி சொன்ன
பேய் ஞாபகம் வந்தது.

பேய் இல்லை என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்ட ராமையா, திடீரென்று நள்ளிரவு
12 மணிக்கு ஆள் நடமாட்டமே இல்லாத நடுத்தெருவில் நின்றதால் சற்று
நடுங்கித்தான் போனார். நீண்ட நேரம் நின்றதால் கால் வலிக்க… அருகில் இருந்த
மின் கம்பத்தின் அடியில் அமர்ந்தார். ஒரு நிமிடம் தான் ஓடியிருக்கும்.
வழக்கமாக பகலில் `கட்’ ஆகும் மின்சாரம் அப்போது திடீரென்று `கட்’ ஆனது.

பயத்தில் வேகமாக எழுந்த ராமையாவின் சட்டையை யாரோ பிடித்து இழுப்பது போல்
இருந்தது. பேய்தான் இழுக்கிறது என்று நினைத்து, அலறியபடியே தனது வீட்டு
கேட்டின் முன்பு போய் விழுந்தார். அவரது கை, கால்கள் வேகமாக நடுங்க
ஆரம்பித்தன.

தலை நிமிர்ந்து, வீட்டின் கேட்டைப் பார்த்தார். அது லேசாக ஆட ஆரம்பித்து,
பின் பலமாக நடுங்கியது. உண்மையிலேயே பேய் வந்துவிட்டது என்ற அதிர்ச்சியில்
மயக்கமாகிப் போனார் ராமையா.

மறுநாள் காலையில் வெகுநேரத்திற்குப் பிறகே கண் விழித்தார். வீட்டுக்குள்
அவர் படுத்திருக்க, அருகில் அவரது மனைவியும், மகளும் சோகத்தோடு நின்று
கொண்டிருந்தனர்.

ராமையா கண் விழித்ததைப் பார்த்த அவரது மனைவி, “நேற்று இரவு மின் கம்பத்தில்
என்ன செய்தீர்கள்? உங்கள் சட்டையின் பாதிப் பகுதி அதில் இருந்த கம்பியில்
கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. நீங்களோ கேட் வாசலில் மயங்கி
கிடக்கிறீர்கள். பேய் வந்ததாக நான் சும்மாதான் சொன்னேன். ஆனால், நீங்களோ
பேய் அறைந்தது போல் கிடந்தீர்களே…” என்று சொன்னபோதுதான், `அப்போ என்னை
இருந்தது பேய் இல்லையா?’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டார் ராமையா. நடந்த
சம்பவத்திற்குப் பிறகு இரவு 7 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வர
ஆரம்பித்துவிட்டார் அவர்.

கணவன் மீது சந்தேகம் வந்தால், இந்த பேய் பிரச்சினை மட்டுமல்ல, பல
பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி வரும். தம்பதியர் இருவருக்கும் மன
உளைச்சல் ஏற்பட்டு விடும். தற்கொலை முடிவு கூட எடுக்க நேரலாம்.

அலுவலகத்திலும், அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியிலும் எவ்வளவோ
நெருக்கடிகளை ஒரு ஆண் சந்திக்க நேரலாம். வெளியில் தான் சந்திக்கும் எல்லாப்
பிரச்சினைகளையும் ஒரு ஆண் வீட்டில் கொட்டினால், அங்கே நிம்மதி போய்
விடும்.

மொத்தத்தில் மனைவி தன்னிடம் அன்பு மழை பொழிந்தால் எந்த கணவனும் தொடர்ந்து
தாமதமாக வீட்டிற்கு வர மாட்டான். நல்ல கணவனாகத்தான் இருப்பான். இதில்
விதிவிலக்காக இருப்பவர்களும் உண்டு. மனைவி உயிருக்கு உயிராகவே
வைத்திருந்தாலும் இப்படிப்பட்டவர்கள் இரவில் கொஞ்சமாச்சும் ஊர்
சுற்றிவிட்டுத்தான் வீட்டுக்குள் காலெடுத்து வைப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களை என்ன செய்யலாம்? இதுபற்றி முடிவெடுக்க வேண்டியவர்கள், அவர்களது மனைவிமார்களே!
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கணவனை சந்தேகப்படலாமா?  Scaled.php?server=706&filename=purple11
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 31, 2011 1:49 pm

இரண்டு கதைகளும் அருமை கார்த்திக்...
அதில் உண்மைகளும் உள்ளது...
நல்ல பதிவு....நன்றி !!!!!!
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 31, 2011 2:08 pm

ரோஜாகார்த்தி wrote:
......................................

`காலம் கெட்டுக் கிடக்குதும்மா. உன் புருஷனை நீதான் பாத்துக்கணும். புருஷன்
தொடர்ந்து வீட்டுக்கு தாமதமா வந்தா, வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம்
பிடித்துவிட்டார் என்று அர்த்தம். இந்த விஷயத்தில் நீ ஏமாந்து விடாதே’
என்று அவர்கள் கூறியது அனிதாவை மேலும் குழப்பமாக்கி விட்டது.
............................

TMT


இப்படி சொல்லிக் கொடுப்பவர்கள் தான், கணவனுக்கு சாப்பாடு போட்டுவிட்டு, குழம்பு எடுத்து வரும் நேரத்திற்குள், கோடிப்பக்கத்தில் கமுக்கமாக வேலையை முடித்து விடுவார்களாம்! பல ஆண்கள் இப்படித்தானே இவர்களிடம் வந்திருப்பார்கள்!

பல குடும்பங்கள் விவாகரத்து வரை செல்ல, இப்படிப் பட்டத்.......

Spoiler:

நல்ல கதைகள் நண்பா! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கணவனை சந்தேகப்படலாமா?  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக