ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 மூர்த்தி

மின்மினியின் ஆசைகள்...!
 sandhiya m

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 ayyasamy ram

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 பழ.முத்துராமலிங்கம்

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
 பழ.முத்துராமலிங்கம்

மக்கள் அச்சம்... கேரளாவில் மீன் விற்பனை சரிவோ... சரிவு!
 பழ.முத்துராமலிங்கம்

ஏமனை ரத்த சகதியாக்கும் சவுதி - தாக்குதலில் அப்பாவி மக்கள் உடல் சிதறி பலி
 பழ.முத்துராமலிங்கம்

எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
 T.N.Balasubramanian

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
 T.N.Balasubramanian

புதியவர் --சந்தியா M .
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

பால்வெளி மண்டலத்தில் புதிய கருத்துளை: 80 கோடி மடங்கு பெரிய அளவில் உள்ளதாக கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லையா? ரூ.100 இழப்பீடு; ரிசர்வ் வங்கி அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

துப்பாக்கிகளின் காலம்
 Meeran

பதினைந்தே நாள்களில் அறுவடை செய்யக்கூடிய அசோலாவை உற்பத்தி செய்வது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இந்து கலாச்சாரம்
 Meeran

ஏழாம் உலகம் ????ஜெயமோகன்
 Meeran

கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?
 பழ.முத்துராமலிங்கம்

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
 ayyasamy ram

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அறிவின் மூலம்

View previous topic View next topic Go down

அறிவின் மூலம்

Post by cortext on Mon Jun 06, 2011 8:16 pm

எந்த ஒன்றையும் வடிவமைப்பதற்கான அல்லது தீர்வு காண்பதற்கான எளிய அடிப்படை
வழிமுறை, சீரற்று-நிகழும்-எதேச்சையான-வழிமுறை (Random Process). அதாவது
எதேச்சையாக நிகழும் வடிவமைப்பு. இது குலுக்குச் சீட்டில் வெற்றி பெருவது
போன்றது. இது சில செங்கற்களை தரையில் தூக்கி எறிந்து ஒன்றன்-மேல்-ஒன்றாக
அமைந்த கோபுரத்தை உருவாக்குவது போன்றது. இவற்றை பலமுறை தொடர்ந்து திரும்ப,
திரும்ப செய்தால் ஒருமுறை அது நிகழலாம். இது பல்வேறு வடிவங்கள்
மேகக்கூட்டத்தில் உருவாகுவது போன்றது. பல்வேறு காரணிகளை...கட்டுபாடுகளை
பொருத்து, அதன் வாய்ப்பு விகிதம் (நிகழ்தகவு) மிகக் குறைவான அளவிலிருந்து
மிக அதிகமாக அளவுவரை இருக்கலாம் – அதாவது முற்றிலும் சீரற்றோ (Random)
அல்லது வெகுவாக தீர்மானிக்கக் கூடுமாறோ (Determined) இருக்கலாம்.

கார்பன்
அணுக்கள் இணைந்து வைரமாக உருவாக மிகவும் ஏற்ற தட்பவெப்பநிலை, அழுத்தம் என
பல்வேறு காரணிகள் வேண்டும். இப்படிப் பட்ட சூழ்நிலை அமைவது எவ்வளவு அரிது
என்றாலும், இந்த பரந்த அண்டவெளியில், இந்த நீண்ட அண்ட காலவெளியில், எங்கோ
எப்பொழுதுதோ இந்த சூழ்நிலை ஏற்படலாம். அப்படியே, நாம் வைரத்தை இந்த
உலகத்தில் காண்கின்றோம். அப்படியே, உலகத்தில் உள்ள அனைத்தும் உருவாகி
இருக்க வேண்டும். அப்படியே, முதல் மரபணு (DNA) மூலக்கூறும் உருவாகி இருக்க
வேண்டும் (அது இன்றுள்ள மரபணுவை விட பலமடங்கு எளிமையாக இருந்திருக்க
வேண்டும்). ஆனால், இந்த உலகத்தில் உள்ள அனைத்து வடிவமைப்புகளும்,
சாத்தியமாகக் கூடிய கணக்கற்றவைகளில் ஒரு சிறு பகுதியே!

மரபணு-மூலக்கூறின்
முக்கியத்துவம், அது உயிர்களின் வடிவமைப்பு மாதிரிகளை குறியீடுகளாக
வைத்திருப்பதில் இருக்கின்றது. அது நகல்கள் (இனப்பெருக்கம்) எடுக்கப்படும்
போது, அதன் மரபணு-குறியீடுகள் பெரும்பாலும் அடுத்த தலைமுறைக்கு சென்றாலும்,
ஒரு சில முறையற்ற, சீரற்ற பிழைகள் (மரபு-பிழைகள்) நிகழலாம். பெரும்பாலான
பிழைகள் ஏற்றவையாக இல்லாது மடிந்து போனாலும், அரிதாக ஒரு சில பிழைகள்
சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கலாம். அவை பிழைத்து அடுத்த தலைமுறைக்கு
செல்லும். இவ்வாறு பல கோடி வருடங்களாக, சுற்றுச்சூழலுக்கு தகுந்த
வடிவமைப்புகள் சிறுகச் சிறுகச் சேர்ந்து உருவானவையே பாக்டீரியா, மீன்கள்,
தாவரங்கள் முதல் மனிதன் உட்பட அனைத்து விலங்குகள் வரை. இதை பரிணாமம்
(Evolution) என்கின்றோம்.

பரிணாமத்திலும்
சீரற்று-நிகழும்-எதேச்சையான-வழிமுறையே அடிப்படையில் புதிய வடிவமைப்பு
வெளிப்படும் முறை. ஆனால் வெளிப்பட்ட, தேர்ந்த வடிவமைப்புகள் மரபணு
குறியீடுகளாக சேமித்து வைக்கப்படுகின்றன. மேலும் தேர்ந்த வடிவமைப்பு
தகவல்கள் மற்றவைகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. பகிர்தல் பொதுவாக
பாலினப் பெருக்கத்தில் ஏற்படுகின்றது. இது நல்ல மரபணுக்கள் மக்கள்தொகையில்
பரவவும், கெட்ட மரபணுக்களை களை எடுக்கவும் உதவுகின்றது. இது விலங்குகள்
போன்ற சிக்கலான மேம்பட்ட உயிரினங்கள் மற்றும் அவற்றின் மூளை போன்ற
நுட்பமிக்க உருப்புகள் பரிணாம வளர்ச்சி அடைய முக்கிய காரணமாகின்றது.

தகல்களை
சேமித்தல் மற்றும் பகிர்தல் என்பது கற்றலின் அடிப்படை பண்புகள்.
உயிர்களின் பரிணாமத்தை கூர்ந்து நோக்கினால் கற்றலின் அடிப்படை செயல்முறையை
அறிந்து கொள்ள முடியும். அதிலுள்ள முக்கிய அடிப்படை படிகள்:

 • உருவாக்குதல்:
  தான்தோன்றித்தனமான-முறையற்ற-சீரற்ற வடிவமைப்புகள் தொடர்ந்து உருவாகுதல்.
  இது இனப்பெருக்கம் மற்றும் அதன் மரபு-பிழைகளால் ஏற்படுகின்றது.
 • தேர்ந்தெடுத்தல்: சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வடிவமைப்புகள் மட்டுமே பிழைக்கின்றன. இதை இயற்கை-தேர்வு-முறை (Natural Selection Process) என்கின்றோம்.
 • சேமித்தல்: தேர்ந்தெடுத்த வடிவமைப்புகள் மரபணு-மூலக்கூறில் மரபணு குறியீடுகளாக (Genes) சேமிக்கப்படுகின்றது.
 • பகிர்தல்:
  தேர்ந்த வடிவமைப்புகளை மற்றவற்றுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. இது
  பொதுவாக பாலினப் பெருக்கத்தில் ஏற்படுகின்றது (மற்ற சில வழிகளும் உண்டு)
அடிப்படையில்
இந்த படிகளை உருவகப்படுத்தியே மூளையும் கற்று கொள்கின்றது. ஆனால்,
பரிணாமத்தை ஒப்பிடும் போது, மூளைக்கு பல மேன்பாடுகள் உண்டு. இனப்பெருக்கம்,
அதனால் ஏற்படும் மரபுபிழைகளை கொண்டு தேர்ந்த வடிவமைப்புகள் வெளிப்பட
ஆயிரமாயிர தலைமுறைகள் தேவை. அதனால் பரிணாம வளர்ச்சிக்கு நீண்ட நெடிய காலம்
தேவைப்படுகின்றது. இதை ஒப்பிடும் போது, தான்தோன்றித்தனமான-முறையற்ற-சீரற்ற
வடிவமைப்புகளை மூளை பல மடங்கு அதிவேகமாக உருவாக்க முடியும். மேலும்
மரபணு-மூலக்கூறை ஒப்பிடும் போது, மூளையின் சேமிக்கும் திறன் பலமடங்கு
அதிகமானது, நுட்பமானது.

வேதி-அயனிகளை (மின்னூட்டணுக்கள்)
செய்திகளாக/குறிப்பலைகளாக கடத்தி, நரம்பணு-வலைச்சுற்றுக்களை பொருத்து
பகுத்தாய்ந்து மூளை வேலை செய்கின்றது. பரிணாம வளர்ச்சியில் வடிவமைக்கப்பட்ட
சில நரம்பணு-வலைச்சுற்றுக்கள் பிறக்கும் போதே மரபணுக்களை கொண்டு
வடிவமைக்கப்படுகின்றது. மற்றவற்றை அனுபவத்தின்/கற்றலின் மூலம் மூளை
வடிவமைக்கின்றது. மூளை கற்கும் வழிமுறையை, குழந்தைகள் எப்படி நடக்க
கற்றுக்கொள்கின்றனர் என்பதை பார்த்து அறிந்து கொள்ள முடியும்.

 • உருவாக்குதல்:
  இது குழந்தை பல்வேறு விதமாக நடக்க முயலும் பயிற்சியால் ஏற்படுகின்றது.
  ஒவ்வொரு விதமும் வெவ்வேறு தான்தோன்றித்தனமான-முறையற்ற-சீரற்ற
  நரம்பணு-வலைச்சுற்று அமைப்புகளை குறிக்கின்றது.
 • தேர்ந்தெடுத்தல்:
  எந்த விதம், அதாவது எந்த நரம்பணு-வலைச்சுற்று அமைப்புகள் தகுந்த விளைவுகளை
  தருகின்றதோ அவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இது புலன்கள் மூலம் பெறப்படும்
  செய்திகளை (உணர்வுகள்) ஒப்பிட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றது. இங்கு
  சமன்நிலை-உணர்வான, காதினுள்ளே உள்ள திரவத்தின் நிலையை கொண்டு அறியும்
  உணர்வு முக்கியமானது; பார்வை உணர்வும் முக்கியமானது. ஆனால், புலன்
  செய்திகளையும் உணர்ந்து கொள்வதும், எந்த புலன் செய்திகள் ஒரு விசயத்திற்கு
  பொருத்தமானவை என்பதை உணர்ந்து கொள்வதும் கற்றலின் பகுதிகளே.
 • சேமித்தல்:
  தேர்ந்தெடுக்கப்பட்ட நரம்பணு-வலைச்சுற்றுகள் மூளையில் நினைவகமாக
  சேமிக்கப்பட்டு தொடர்ந்து மேலும், மேலும் சரி செய்யப்படுகின்றது மற்றும்
  விரிவு படுத்தப்படுகின்றது.
 • பகிர்தல்:
  பெற்றோர்கள்/பெரியவர்கள் குழந்தைக்கு நடக்க கற்று கொடுப்பது; உதவி
  செய்வது. குழந்தை அடுத்தவர்களை பார்த்து முயற்சிப்பது; கற்றுக் கொள்வது;
  இவ்வாறு ஏற்கனவே கற்றவை, கற்ற முறை, குழந்தையுடன் பகிர்ந்து
  கொள்ளப்படுகின்றது.
பிறக்கும் போதே குழந்தையின் மூளை தேர்ச்சி
அடையாத சில நடப்பதற்கான-நரம்பணு-வலைச்சுற்றுகளோடு இருக்கும். இதைக்
கொண்டு, குழந்தை பல்வேறு விதமாக நடக்க முயலும் போது நிகழும் சில எதேச்சையான
சமன்நிலை பெற உதவிய நரம்பணு-வலைச்சுற்று தொடர்புகள் மேலும்
வலிமைப்படுத்தப்படும்; மற்ற தொடர்புகளின் வலிமை மேலும் குறைக்கப்படும்.
இவ்வாறு நடப்பதற்கான-நரம்பணு-வலைச்சுற்றுகள் மேலும் சரிசெய்யப்பட்டு
விரிவுபடுத்தப்படும். இதை உடனடியான/நேரடியான கற்றல் (Online Learning)
எனலாம். இதைத் தவிர, குழந்தை முயன்ற ஒவ்வொரு நிலைகளையும் (கால்கள், கைகள்,
உடல் போன்றவற்றின் தசைகளை கட்டுப்படுத்தும் செய்திகள்), அதற்கான புலன்
செய்திகளையும், மூளை ஒரு தற்காலிக இடத்தில் “சோதனைச்-செய்திகளாக” சேமித்து
வைத்துக் கொள்ளலாம். உடல் ஓய்வெடுக்கும் போது, அதாவது தூங்கும் போது, இந்த
சோதனைச்-செய்திகளை கொண்டு நடப்பதற்கான-நரம்பணு-வலைச்சுற்றுகளை பல்வேறு
விதமாக பலமுறை மாற்றி அமைத்து எப்படிப்பட்ட வலைச்சுற்றுகள் தகுந்த
விளைவுகளை கொடுக்கின்றது என சோதித்துப் பார்க்கலாம். ஒவ்வொரு முறையிலும்,
படிப்படியாக நடப்பதற்கான-நரம்பணு-வலைச்சுற்றுகள் மேலும் சரிசெய்யப்பட்டு
விரிவுபடுத்தப்படும். இதை பிற்பாடு/மறைமுக கற்றல் (Offline Learning)
எனலாம். இது தூக்கத்தின்
ஒரு முக்கிய செயல்பாடாக இருக்க வேண்டும். குழந்தை நன்றாக, சகஜமாக நடக்க,
இந்த செயல்முறை ஒவ்வொரு நாளும் வருடக்கணக்கில் தொடர வேண்டும். மேலும்,
இதில் பெற்றோர்கள்/பெரியவர்கள் குழந்தைக்கு தரும் தூண்டுதல்,
உற்சாகமூட்டல், மேற்பார்வை, உதவி போன்றவை மற்றொரு முக்கிய பகுதி. இவையின்றி
குழந்தையின் வளர்ச்சி என்றென்றைக்கும் முடமாகி போகலாம்.

வடிவமைக்கப்பட்ட நரம்பணு-வலைச்சுற்றுகளை நினைவகமாக (Memory)
கருதலாம். மூளையின் நினைவகத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம்:
செயல்முறை-நினைவகம் (Procedural memory) மற்றும் அறிவிப்பு-நினைவகம்
(Declarative memory). செயல்முறை-நினைவகம் பல்வேறு செயல்முறைகளை
கட்டுப்படுத்துகின்றன. நிற்க, நடக்க, ஓட, ஆட, நீந்த, ஓட்ட, எழுத என ஒவ்வொரு
செயலுக்கும் செயல்முறை-நினைவகம் வேண்டும். நாம் ஒரு செயலை “செய்ய” கற்கும்
போது செயல்முறை-நினைவகம் உருவாக்கப்படுகின்றது. புலன் செய்திகளிலிருந்து,
நாம் ஒன்றை “அறிந்து”/”உணர்ந்து” கொள்ள கற்கும் போது அறிவிப்பு-நினைவகம்
உருவாக்கப்படுகின்றது. பார்க்க, கேட்க, சுவைக்க, நுகர என ஒவ்வொரு
உணர்வுகளுக்கும் அறிவிப்பு-நினைவகம் வேண்டும். புலன் செய்திகளில் உள்ள
பாங்கை கண்டறிய (Pattern recognition) கற்பதே அறிவிப்பு-நினைவகம்
உருவாக்கத்தின் அடிப்படை.

 • உருவாக்குதல்: பல்வேறு விதமாக பாங்கை கண்டறிய முற்படுதல்.
 • தேர்ந்தெடுத்தல்: எந்த விதம், அதாவது எந்த நரம்பணு-வலைச்சுற்று அமைப்புகள் தகுந்த விளைவுகளை தருகின்றதோ அவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
 • சேமித்தல்:
  தேர்ந்தெடுக்கப்பட்ட நரம்பணு-வலைச்சுற்றுகள் மூளையில் நினைவகமாக
  சேமிக்கப்பட்டு தொடர்ந்து மேலும், மேலும் சரி செய்யப்படுகின்றது மற்றும்
  விரிவு படுத்தப்படுகின்றது.
 • பகிர்தல்: பெற்றோர்கள்/பெரியவர்கள்/ஆசிரியர்கள் கற்று கொடுப்பது; அடுத்தவர்கள் மற்றும் புத்தங்கள் போன்றவற்றிலிருந்து கற்றுக் கொள்வது.

(ஒரு
குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மனித உருவத்தை மேல்கண்டவாறு
உடல் இல்லாமல் வரைவதை காணலாம். குழந்தைகள் முகம், கைகள், கால்கள் என
முக்கியமான பாங்குகளை முதலில் கண்டறிய கற்று கொள்ளலாம். பிறகு மெதுவாக மற்ற
பாங்குகளை மேலும் துள்ளியமாக கண்டறிய கற்று கொள்ளலாம்)

இவ்வாறு
கற்றல், படிப்படியாக உலக மாதிரியை நினைவகமாக உருவாக்குகின்றது (ஒலியை
இசைத்தட்டுகளில் சேமிப்பது போல்). இதில் உலகில் காணப்படும் அனைத்து
படிநிலைகளும், தொடர்புகளும், கூட்டுகளும், பிரிவுகளும், அவற்றிலிருந்து
பெறப்படும் பொதுவாக்கலும் (Generalization or Abstraction), அவற்றின்
காரண-விளைவுகளும் அடங்கும். இதைக் கொண்டு உலகை உணர்ந்து/அறிந்து/புரிந்து
கொள்கின்றோம். இது மேலும் திறம்பட கற்கும் செயல்முறைகளை கற்க
வழிவகுக்கின்றது. இது தெரிந்த, ஒத்த, தொடர்புடைய சிக்கல்களுக்கு வழி
காணவும், திட்டமிடவும் உதவுகின்றது.

முற்றிலும் புதிய சிக்கலுக்கான
தீர்வை மூளை எப்படி கண்டுகொள்கின்றது? மூளையில் உலக மாதிரி உள்ளது. இதைக்
கொண்டு சீரற்று-நிகழும்-எதேச்சையான-வழிமுறையை (மற்றும் பரிணாம வழிமுறையை)
மூளையால் உருவகப்படுத்த முடியும். அது பல்வேறு
தான்தோன்றித்தனமான-முறையற்ற-சீரற்ற (கிறுக்குத்தனமான!) யோசனைகளை உருவாக்கி
அவற்றை உலக மாதிரியை கொண்டு சோதனை செய்து சரிபார்க்கலாம் (இது மூளையின்
பின்னணில் தொடர்ந்து நடக்கலாம்). அதில் ஒரு யோசனை அல்லது தீர்வு எதேச்சையாக
சிக்கலை தீர்க்கும் போது, அது வெற்றியின் தருணமாக உணரப்படுகின்றது! (ஒரு
மேதையின் இரகசியம், முற்றிலும் புதிய சிக்கலை தீர்க அதிக வாய்ப்பு
கிடைக்குமாறு, எப்படி அவரது மூளை திறம்பட மேம்பட்ட உலக மாதிரியை
உருவாக்குகின்றது என்பதில் உள்ளது)

இப்படி கற்றவை மற்றவர்களுடன்
பகிர்ந்து கொள்ளப்படும் போது, அது மேலும் விரிவடைந்து வளர்ச்சியடைந்து பல
புதிய பரிமாணங்களை தொடுகின்றது. கற்றல், உணர்தல், யோசித்தல், புரிந்து
கொள்ளுதல், காரண-காரியங்களை அறிந்து கொள்ளுதல், சிக்கல்களுக்கு தீர்வு
காணுதல், திட்டமிடுதல் போன்ற மூளையின் பல திறமைகளை ஒருமித்தமாக அறிவு
அல்லது அறிவாற்றல் என்கின்றோம். இந்த அறிவை கொண்டு, கட்டுப்பாட்டுடன்
திட்டமிட்டு மனிதன் பலவற்றை வடிவமைக்கின்றான். அது அறிவுமுறை வடிவமைப்பு
(Intelligent design)!இது
நரம்பு-இயங்கியல் (Neuroscience), Cognitive science, செயற்கை அறிவு (AI)
முதலிய ஆராய்ச்சிகளிலின் அறிதல்களை கொண்டு இயற்கை-வடிவமைப்பு, பரிணாமம்,
கற்றல், அறிவு ஆகியவற்றை இணைத்த ஒரு தகவல்-கோட்பாடு (Information theory)
பார்வை.June 4, 2011

ஆறாம் அறிவு?

மற்ற
விலங்குகளுக்கும் ஐந்து புலன் உணர்வுகள் உண்டு என்றும் (அதை ஐந்து அறிவாக
கொண்டு) மனிதனுக்கு மட்டும் ஆறாவது அறிவான, பகுத்தறிவு உண்டு என்றும்
சொல்லப்படுகின்றது. இது உண்மையென்றால், ஏன் இவ்வளவு மடத்தனங்களும்,
மூடநம்பிக்கைகளும் மனிதனிடத்தில் கொட்டி கிடக்கின்றது?

மனிதனுக்கு
மட்டுமே சொந்தமான ஆறாவது அறிவு, எந்த விதத்திலும் அறிவியல் உண்மை அல்ல.
மனிதன் மற்ற விலங்குகளிலிருந்தே பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளான். அவனுக்கென
திடீரென புதிதாக அறிவெல்லாம் வளரவில்லை. ஏற்கனவே மற்ற விலங்குகளில்
உள்ளவற்றின் திறம்/தரம் சிலவற்றில் சற்றே மனிதனுக்கு அதிகரித்துள்ளது (Not
quantity; just some quality). குரங்கினங்களை, டால்ஃபீன்களை, ஏன் காக்கைகளை
கூட கூர்ந்து நோக்கினால் அது எளிதாக விளங்கும். உண்மை என்வென்றால்,
ஆராய்ச்சியாளர்கள் மற்ற விலங்குகளுக்கும் மனிதனுக்கும் உள்ள அடிப்படை
வித்தியாசம் என்னவென்று சல்லடை போட்டே தேட வேண்டி உள்ளது. ஏனெனில் அப்படி
எதுவும் பெரிதா இருக்கக் காணோம்.

மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு
முக்கியமான காரணம்: பகிர்தல். அதற்கு தேர்ந்த மொழி தேவை. மனிதன் மட்டுமே
குழந்தைகளுக்கு முனைப்போடு கற்று தருகின்றான் (Active Teaching). முறையான
கல்வி மட்டுமே மனிதனின் அறியாமையை போக்குகின்றது.

பகுத்தறிவு பற்றி: நம்பிக்கைகளின் மூலம்

உணர்வுகள் பற்றி: அர்த்தங்களை தேடி

http://icortext.blogspot.com/2011/06/blog-post.html
avatar
cortext
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: அறிவின் மூலம்

Post by முரளிராஜா on Tue Jun 07, 2011 8:14 am

பயனுள்ள கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே மகிழ்ச்சி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: அறிவின் மூலம்

Post by cortext on Wed Jun 08, 2011 2:13 am

"எத்தனை முறை விழுந்தாய் என்பது முக்கியமல்ல; விழுந்த பின் எத்தனை முறை எழுந்தாய் என்பதே முக்கியம்."
"முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்."

இது போன்ற பொது-அறிவின் நிதர்சனம், கற்கும் முறையின் அடிப்படையே அப்படி தான் என்பதில் உள்ளது.
avatar
cortext
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: அறிவின் மூலம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum