ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 ayyasamy ram

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 ayyasamy ram

திரைப் பிரபலங்கள்
 heezulia

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 மூர்த்தி

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 மூர்த்தி

தெரிஞ்சதும் தெரியாததும்
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 krishnanramadurai

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 ayyasamy ram

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 ayyasamy ram

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 ayyasamy ram

நாச்சியார் விமர்சனம்
 ayyasamy ram

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 ayyasamy ram

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 T.N.Balasubramanian

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 T.N.Balasubramanian

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 SK

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

சனீஸ்வரா காப்பாத்து!
 Dr.S.Soundarapandian

கூகிளில் இரண்டு புதிய மாற்றம்.
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(464)
 Dr.S.Soundarapandian

ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்
 மூர்த்தி

பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
 SK

நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
 gayathri gopal

ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
 SK

திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது: இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவால் 5 ஆயிரம் பேர் பாதிப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கால் பெரு விரல் ரேகை ஜோதிடம்

View previous topic View next topic Go down

கால் பெரு விரல் ரேகை ஜோதிடம்

Post by சிவா on Sat Jun 11, 2011 11:20 am

கால் பெரு விரல் ரேகை ஜோதிடம் ஓர் அறிமுகம்மனிதன் தோன்றிய காலம் முதல் நாகரீகமில்லாதபோது அவர்கள் ஓரிடத்தில் வாழ்ந்ததில்லை. உணவு கிடைக்கும் இடம் தேடி கூட்டம் கூட்டமாக அலைந்த காலம்.அதன் பின் ஓரிடத்தில் கூடி அதையே இருப்பிடமாக வைத்து தனித்தனியே காடுகளுக்குள் உணவு தேடிச்செல்லும் காலம். அப்படி செல்லும் பொழுது செல்லும் வழிகளில் சில அடையாளங்களில் காலடி (கால்தடம்) முக்கிய பங்கு வகித்தது. அதே போல் காடுகளில் கொடூர மிருகங்களின் கால் பாதங்களின் அடையாளங்களைக் கண்டு அவ்வழிகளில் செல்லாமல் தன்னைப் பாதுகாத்துக்கொண்டு உயிர் வாழ்ந்தான்.

மேற்கண்ட சம்பவங்கள் என் மனதின் அடித்தளத்தில் ஆழமாய் பதிந்தபின் மனிதன் உயிரோடு பாதுகாப்பாக வாழ்வதற்கு, மனிதர்கள் நடமாடும் இடங்கள், மிருகங்கள் நடமாடும் இடங்கள் என பிரித்தறிந்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டு பாதுகாப்பாக வாழ்ந்ததையும் மற்றும் கை ரேகையினை வைத்து ஒருவருடைய கடந்தகால, நிகழ்கால, எதிர்கால வாழ்க்கையினை நாம் கணக்கிடுகின்றோம். குழந்தை எட்டி நடைபோட்டு தன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்குகிறது. அது முதல் அக்குழந்தை வளர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் கால் பாதத்தினைப் பயன்படுத்தி அவன் போகும் பாதை நல்வழி, தீயவழி, முன்னேற்றம், பின்னடைவு அனைத்தையும் வாழ்க்கையில் சந்திக்கின்றான். கைகளில் இருப்பதைப் போன்று, கால் பாதங்களிலும் ரேகைகள் உள்ளன. இவற்றை ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால் என்ன? என்ற எண்ணம் என் மனதில் ஏற்பட்ட உந்துதல் முதல் காரணம்.

ஓரடியில் உலகையே பெருமாள் அளந்ததாக ஐதீகம். மகாபாரதப் போரில் கர்ணன் கடைசியாக விட்ட நாகாஸ்திரத்திற்க்கு யாருமே தப்ப முடியாது என்ற நிலையில் தேரோட்டியாக இருந்த கண்ணன் தனது கால் பெருவிரலால் தேரை அழுத்தி அர்ச்சுணனைக் காப்பாற்றி, அதனால் மகாபாரதயுத்த களத்தின் முடிவே மாற்றி அமைந்ததாக மகாபாரதம் சொல்கிறது. கண்ணபிரானின் கட்டைவிரல்தான் மகாபாரதயுத்தத்தில் அர்ச்சுணனைக் காப்பாற்றி பாண்டவர்களின் வெற்றிக்கு அடிகோளியது என்பது எனது மனக்கண்ணின் முன் நிழலாடி இவ்வாராய்ச்சிக்கு என்னை இட்டுச் சென்றது.

பல்வேறு மனிதர்களின் பாதங்களில் முக்கிய பங்கு வகிக்கிற கால் பெருவிரல் அச்சு ரேகைகளை எடுத்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, அந்த ரேகை எவ்வாறு அமைந்துள்ளது. அந்த ரேகையை உடையவர் வாழ்க்கை முன்பு எப்படி இருந்தது. தற்போது எப்படி உள்ளது என்பதைக் கண்டறிந்து அதன் மூலம் ஏற்பட்டதே இந்த கால் பெருவிரல் கை ஜோதிடம்.

கால் பெருவிரல் ரேகையில் அமைந்துள்ள பல கோடுகள் மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றவை என்பது கண்கூடான உண்மை. கால் பெருவிரல் ரேகையை எடுத்து ஒவ்வொரு கோடுகளின் கணக்கீட்டினை கணித்து அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தையும், எதிர்காலத்தன்மையும் கூறக்கேட்டு அவர்கள் அடைந்த முன்னேற்றங்களை நேரில் வந்து சொல்லிச் செல்வதோடு மட்டுமில்லாமல் அதை பிறருக்கும் கூறுவதால் அன்றாடம் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர் என்பதே இதற்கு சாட்சி.

பிறந்த குழந்தைகளின் கால் பெருவிரல் ரேகையை எடுத்து கணித்து அதற்கு ஏற்றார்போல் பெயர் சூட்டினால் அவர்கள் எதிர்காலம் சிறப்படையும், புகழையும் பெறுவர் என்பது நிச்சயம்.

கால் பெருவிரல் ரேகையைக் கொண்டு யார், யார் எந்தெந்த தெய்வங்களை பிரியமாக வழிபடுவர் என்பதையும், அதனால் பலன் உண்டா? - இல்லையா? என்பதையும் கணிக்க முடியும். இக்கணிப்பில் யார், யார் எந்தெந்த தெய்வங்களை வழிபட்டால் மிகப்பெரிய நற்பலன்களை அடைய முடியும் என்பதையும் கூறமுடியும். இதனால் வாழ்க்கையில்,வியாபாரத்தில் செய்யும் தொழிலில் தோல்வி கண்டவர்களுக்கும், திருமணம் தடைபட்டவர்களுக்கும், குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கும் இன்னும் பல்வேறு பிரச்சனையில் உழன்று கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல தீர்வுகாண வழி கிடைக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கால் பெரு விரல் ரேகை ஜோதிடம்

Post by சிவா on Sat Jun 11, 2011 11:22 am

எடுத்த அனைத்து காரியங்களிலும் உறுதியாக வெற்றி கிடைக்கும்.எத்துனை குழப்பங்கள் இருந்தாலும் அவையனைத்தும் தீர்ந்து நிம்மதி ஏற்படும். அனைவரின் வாழ்க்கையிலும் ஒளிவிளக்கு சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.

எனது பல்லாண்டுகால ஆராய்ச்சிகளின் வெற்றிகளை என்னை வழி நடத்திச் செல்லும் ஸ்ரீ பைரவர் பாதங்களுக்குச் சமர்பிக்கின்றேன்.

ஓம் ஸ்ரீ பைரவர் போற்றி, போற்றி!!!

கால் பெருவிரல் ரேகை ஜோதிடம்:

மனிதர்கள் ஒவ்வொருவரும் அன்றாடம் நிமிடத்திற்கு நிமிடம் நினைப்பது, அவரும், அவர் சார்ந்தக் குடும்பமும் எவ்விதக் குறைபாடுகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.தாங்கள் ஆண்டுக்கு ஆண்டு வாழ்க்கையில் வளம் பல பெற்று உயர்வான நிலையை அடைய வேண்டும் என்பதே. அதற்கு அடுத்தபடியாகத்தான் தனது சுற்றம் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பது. அவ்வாறான மனிதனின் வாழ்க்கை உயர்வுக்கு ஒவ்வொருவரும் ஏதாவது துறையைத் தேர்ந்தெடுத்து தன் உழைப்பைக் கொடுத்து வியர்வையைக் சிந்தி பாடுபட்டு எவ்விதப் பலனும் இல்லாமல் ஓய்ந்து போன நிலைகள் மனித வாழ்வில் ஏராளம். காரணம், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உடலமைப்பு, உடலுழைப்பு, சிந்திக்கும் திறன் அதற்க்கேற்றார் போல் செயல்படும் திறன் இவைகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவர் எவரும் வாழ்க்கையில் முன்னேறியதாக வரலாறு இல்லை.

மேற்கண்டவைகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து செயல்பாட்டிற்கு வருவதற்கு ஆண்டவனின் அருட்பார்வை கட்டாயம் நமக்குக் கிடைத்தாக வேண்டும். அது கிடைக்காத வரை நம்மால் எதையும் செய்யமுடியாது. காரணம், நாம் அறிவுபூர்வமாகச் சிந்தித்து பெரிய அளவிலான, மக்கள் பயன் பெறுகின்ற திட்டங்கள் தீட்டி அதைச் செயல்படுத்த வேண்டுமானால் "மூலதனம்" எப்படி முக்கியமானதோ, அதைப்போன்று தெய்வ கடாட்சம் மிக மிக முக்கியமானது.

அவ்வாறான ஆண்டவனின் அருட்பார்வை கிடைத்து விட்டால் வாழ்க்கை உயர்வடையும்.அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கும். நாம் அனைவருமே தொழில் தொடங்கும் முன் பூஜை செய்து ஆரம்பிக்கின்றோம். பூஜை செய்து கடவுளை வழிபட்டு தொழில் தொடங்கியோரில் ஒருசிலர் மட்டும் மேன்மை அடைவதும், ஒருசிலர் நஷ்டத்தை அடைந்து, பிறகு அவர்கள் செய்த தொழிலையே விட்டுவிடுவதற்குக் காரணங்கள் என்ன? அதே போல் புதிதாய் வீடு கட்டி தகுந்த முறையில் கிரஹப்பிரவேசம் செய்து குடிபுகுந்த பின் அவ்வீட்டில் வறுமை, நோய், விபத்துக்கள், குழந்தைபாக்கியமில்லாதது மற்றும் கணவன், மனைவி கருத்து ஒற்றுமை இல்லாமல் விவாகரத்துப் பெறுவது அல்லது கட்டிய வீட்டையே விற்கின்ற நிலை போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கான காரணங்கள் என்ன? இவற்றுக்கு நாம் விடை காண வேண்டாமா?

இந்து மதத்தவர்கள் அம்மததிலுள்ள அனைத்து கடவுள்களைக் கும்பிட்டாலும், ஒவ்வொருவரும் தங்களுக்குள் பிடித்தமான ஒரு தெய்வத்தை மட்டும் மிகவும் பிரியமாக பெயர், இராசி, நட்சத்திரங்களின் பேரில் அடிக்கடி அர்ச்சனை செய்து அதன்பின் அனைத்து நற்பலன்களும் இனிக் கிடைத்துவிடும், கஷ்டங்கள் தீர்ந்து விடும் என்று எண்ணி நம்பிக்கையுடன் செல்வார்கள். இவ்வாறு செய்வதால் பலன் ஏதும் கிடைக்காது. அவ்வாறு செய்யாமல் தங்கள் உடல் அம்சம் சார்ந்த, தங்களுக்கு ஏற்ற, தங்களுக்கு அருளையும் பொன் பொருளையும் அள்ளித்தருகின்ற கடவுளைக் தெரிந்து கொண்டு, அதனை எந்த நேரத்தில், என்னென்ன பூஜைப்பொருட்களை வைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்ற விபரங்களையும் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு மனிதனின் விதி,அவன் உடல் சார்ந்த தெய்வம், எந்தத் தொழிலை அவர் செய்தால் மேன்மையடையலாம், அதன் மூலம் அவருடைய வாழ்க்கை முன்னேற்றம் பற்றிய பலன்கள் அனைத்தும் அவருடைய கால் பெருவிரல் ரேகையில் மட்டுமே உள்ளது. இது பல்வேறு மனிதனின் கால் பெருவிரல் ரேகைகளைப் பதிவு செய்து ஆராய்ச்சியில் கண்டறிந்த உண்மை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கால் பெரு விரல் ரேகை ஜோதிடம்

Post by சிவா on Sat Jun 11, 2011 11:22 am

கால் பெருவிரல் ரேகைகளில் வில்வக்கோடுகள், வாகைக்கோடுகள், நாகக்கோடுகள், சங்குக்கோடுகள், சுரியக்கொடுகள், வருணக்கோடுகள், சக்கரக்கோடுகள், கத்தரிக்கோடுகள், கூர்மக்கோடுகள், அந்திமக்கோடுகள், சந்திரக்கோடுகள், குழிமுகம், கருடமுகம், கோமுகம் என இன்னும் பல்வேறு கோடுகள் பல்வேறு மனிதர்களின் கால் பெருவிரல் ரேகைகளில் மாறி, மாறி அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகள் கூட ஒரே மனிதரின் கால் பெருவிரல் ரேகையில் அமைந்திருக்கும் வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையை உன்னத நிலைக்கு கொண்டு செல்லும்.

உதாரணமாக ஒருவருடைய கால் பெருவிரல் ரேகையில் வருணக் கோடுகள் அமைந்திருக்குமானால் அவர் அதிகமாக யாருடனும் தொடர்பு கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார். சதா காலமும் தன் குடும்பம் பற்றியே சிந்திப்பவர். அந்தக் கோடுகளுடன் சுரியக்கோடுகளும் அவருக்கு அமைந்து இருந்தால் அவர் எப்போதும் பணத்தில் புரளும் நிலை நாளடைவில் உருவாகும். இதுவும் ஆராய்ச்சியின் மூலம் கண்ட உண்மை. வாகைக்கோடுகள் அமையப்பெற்றவர், எல்லோருக்கும் வளைந்து கொடுப்பவர், மரியாதை மிக்கவர். ஒரு குறிக்கோளை மனதில் இரகசியமாக வைத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறத்துடிப்பவர். அவர் எடுக்கும் முயற்சிகளில் சிறு மாற்றம் செய்தால் வளமான வாழ்க்கையைப் பெறுவது நிச்சயம். அவர் செய்ய வேண்டிய மாற்றம் அவருடைய கால் பெருவிரல் ரேகைகளின் மூலம் கண்டறிய முடியும்.

கால் பெருவிரல் ரேகையில் குழிமுகம் இருந்தால் அவருடைய வாழ்க்கை சரிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும். அவரது கால் பெருவிரல் ரேகையின் மூலம் அவர் எந்தத் தெய்வத்தினை எந்தெந்தப் பூஜைப்பொருட்கள் மற்றும் மலர்கள் வைத்து வழிபட வேண்டும் என்பதைக் கண்டறிந்து அதன்படி அவருக்கு உரிய நேரத்தில் பக்தி சிரத்தையுடன் மூன்று பௌர்ணமி நாட்களில் கும்பிட்டு வந்தால் அவருடைய வாழ்க்கை ஒளிமமாகும்.

கலை உலகம் என்கின்ற நடன, நாட்டியம், சங்கீதம், சினிமா சார்ந்த துறைகளில் உள்ளோர்களுக்கு பெண்களாக இருந்தால், கால் பெருவிரல் ரேகை கலச முகம் பெற்று வில்வக்கோடுகள் அல்லது சுரியக்கோடுகள் பெற்றிருந்தால் புகழுச்சிக்குச் செல்வர். ஆண்களாக இருந்தால், கால் பெருவிரல் ரேகை கோமுகம் பெற்று சந்திரக்கோடுகள்அமைந்திருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் செல்வச்செழிப்புடன் பெரும் புகழ் பெறுவர்.

ஒருவரின் கால் பெருவிரல் ரேகையில் சந்திரக்கோடுகள் இருந்தால், அவர் நல்ல அறிவாளியாக இருப்பார். அந்தக் கோடுகளுடன் சக்கரக்கோடுகள் இருந்தால் அவர்கள் செல்வச்செழிப்புடன் வாழ்வர்.

கால் பெருவிரலில் உள்ள ஒரு சில கோடுகளும், ஒரு சில முகங்களும் ஒரு சிலருடைய நட்சத்திரங்களுக்கும், இராசிகளுக்கும், நன்மையையும், தீமைகளையும் கொடுக்ககூடியது.

உதாரணமாக எடுத்துக் கொண்டால் " பரணி " நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள் என ஆருடம் சொல்வார்கள். நாட்டில் " பரணி " நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல லட்சம் பேர் இருந்தும் " தரணி " ஆள முடியவில்லை, அதற்கான காரணம் என்ன? அவர்களுடைய கால் பெருவிரல் ரேகையில் கஜமுகமும், வாகைக் கோடுகளும்,அமையாமல் இருப்பது தான் முதற்காரணம்.

ஆக " பரணி " " மகம் " நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய கால் பெருவிரல் ரேகை அமைப்பில் " கஜமுகமும் " "வாகைக்கோடுகளும்" அமைந்திருந்தால் ஒரு நாட்டையே (தரணியை) ஆளும் தகுதி அவர்களுக்குத் தானாகவே வந்து சேரும்.

அந்திமக் கோடுகள் அமையப் பெற்றவர்கள் எப்போதும், அவர்கள் செய்யும் தொழில்கள், எதிரிகள் தொடுக்கும் வழக்கு, சொத்து, பணம் அல்லது பெண் சார்ந்த ஏதாவது வில்லங்க விவகாரங்களில் கோர்ட் வாசலிலேயே அடிக்கடி நிற்க வேண்டியிருக்கும்.

http://www.bairavafoundation.org/astrology.php
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கால் பெரு விரல் ரேகை ஜோதிடம்

Post by பாலாஜி on Sat Jun 11, 2011 12:46 pm

படம் வரைந்து பாகம்கள் குறிக்க முடியுமா , அப்பதானே ரேகைளை தெளிவாக புரிந்துகொள்ளமுடியும்....http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கால் பெரு விரல் ரேகை ஜோதிடம்

Post by krishnaamma on Sat Jun 11, 2011 1:21 pm

ஆச்சரியமான தகவல்கள் சிவா ! புன்னகை இது பற்றி மேலும் எழுதுங்கள் , ஏதாவது புத்தகம் வந்துள்ளதா இதை ப்பற்றி ? சொல்ல முடியுமா ? அறிய தகவல்கள் தந்த சிவாக்கு நன்றி புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கால் பெரு விரல் ரேகை ஜோதிடம்

Post by மஞ்சுபாஷிணி on Sat Jun 11, 2011 3:56 pm

ஆச்சர்ய தகவல்கள் சிவா... இதை விரிவாக தர முடியுமா படங்களுடன்?

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கால் பெரு விரல் ரேகை ஜோதிடம்

Post by உதயசுதா on Sat Jun 11, 2011 5:08 pm

அது சரி.ஜாதக ஜோசியம், கை ரேகை ஜோசியம்,இப்ப கால் ரேகை ஜோசியமா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கால் பெரு விரல் ரேகை ஜோதிடம்

Post by முரளிராஜா on Sat Jun 11, 2011 7:15 pm

ஆச்சரியமான தகவல்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கால் பெரு விரல் ரேகை ஜோதிடம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum