ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஸ்ரீ அருணகிநாதாரின் கந்தர் அநுபூதி

View previous topic View next topic Go down

ஸ்ரீ அருணகிநாதாரின் கந்தர் அநுபூதி

Post by சிவா on Mon Jun 27, 2011 7:07 am
காப்பு
நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்(து) உருகத்
தஞ்சத்(து) அருள் சண் முகனுக்(கு) இயல்சேர்
செஞ்சொல் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம். ---

நூல்
ஆடும் பா, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய் !
தேடுங் கயமா முகனைச் செருவில்
சாடுந் தனி யானை சகோதரனே. 1

உல்லாச, நிராகுல, யோக விதச்,
சல்லாப, விநோதனும் நீ அலையோ?
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா ! சுரபூ பதியே ! 2

வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே ! 3

வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்(டு) அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்(டு) எழு சூர் உரமும், கியும்,
தொளைபட்(டு) உருவத் தொடு வேலவனே ! 4

மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந்து மொழிந்திலனே !
அகமாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே ! 5

திணியான மனோ சிலைமீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
பணியா? என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே ! 6

கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே. 7

அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா !
குமரன் கிராச குமா மகன்
சமரம் பொரு தானவ நாசகனே ! 8

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, ஊசல்படும் பாசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்(து) எறியும்
நிட்டூர நிராகுல, நிர்ப்பயனே ! 9

கார் மா மிசை காலன் வால், கலபத்
தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
தார் மார்ப ! வலா தலா எனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே ! 10

கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப் பொருள் பேசியவா !
நாகாசல வேலவ ! நாலுகவித்
த்யாகா ! சுரலோக சிகாமணியே ! 11

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
சும்மா இரு, சொல் அற என்றலுமே,
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. 12

முருகன், தனிவேல் முனி, நம் குரு என்று
அருள்கொண்டு அறியார் அறியும் தரமோ !
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது
அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே. 13

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்(று)
உய்வாய், மனனே ! ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே. 14

முருகன், குமரன், குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து, உணர்(வு) என்(று)
அருள்வாய்?
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ ! எண் குண பஞ்சரனே ! 15

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு,
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா ! முதுசூர் படவேல் எறியும்
சூரா, சுரலோக துரந்தரனே ! 16

யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூமேல் மயல்போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமே னடவீர், நடவீர் இனியே. 17

உதியா, மாயா, உணரா, மறவா,
விதிமால் அறியா, விமலன் புதல்வா,
அதிகா, அநகா, அபயா ! அமரா
பதி காவல ! சூர பயங் கரனே ! 18

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா !
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே !
மிடி என்று ஒரு பாவி வெளிப் படினே. 19

அதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உதா உபதேசம் உணர்த்தியவா !
விதாரண ! விக்ரம வேள் ! இமையோர்
புதாரக ! நாக புரந்தரனே ! 20

கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா முருகா ! மயில் வாகனனே !
விரதா ! சுர சூர விபாடணனே ! 21

காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா !
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே ! 22

அடியைக் குறியாது அறியா மையினான்
முடியக் கெடவோ? முறையோ? முறையோ?
வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
கோடியைப் புணரும் குண பூதரனே ! 23

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ !
சூர் வேரொடு குன்று தொளைத்த, நெடும்
போர் வேல ! புரந்தர பூபதியே ! 24

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ ! அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய் ! மயில் ஏறிய சேவகனே ! 25

ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே !
வேதாகம ஞான விநோத ! மன
அதீதா ! சுரலோக சிகாமணியே ! 26

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே ! விதியின் பயன் இங்கு இதுவோ?
பொன்னே ! மணியே ! பொருளே ! அருளே !
மன்னே ! மயில் ஏறிய வானவனே ! 27

ஆனா அமுதே ! அயில் வேல் அரசே !
ஞானாகரனே நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது, தற்பரமே. 28

இல்லே எனும் மாயையில் இட்டனை நீ,
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே,
மல்லேபு பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே ! 29

செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித் ததுதான்,
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவற்கு இசைவிப் பதுவே? 30

பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே !
தாழ்வானவை செய்தன தாம் உளவோ
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே ! 31

கலையே பதறிக், கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் விடவோ?
கொலையே பு வேடர் குலப் பிடிதோய்
மலையே ! மலைகூறிடு வாகையனே. 32

சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்?
மந்தாகினி தந்த வரோதயனே !
கந்தா ! முருகா ! கருணாகரனே ! 33

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல ! சண்முகனே !
கங்கா நதிபால ! க்ருபாகரனே ! 34

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண, மலர்க் கழல் என்று அருள்வாய்?
மதிவாள் நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா ! சுர பூபதியே ! 35

நாதா ! குமரா ! நம ! என்று அரனார்
ஓதாய் என ஓதியது, எப்பொருள் தான்?
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா ! குறமின் பத சேகரனே ! 36

கிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
பாவாரம் எனும் பதம் மேவலையே
புவாய் மனனே ! பொறையாம் அறிவால்
அவாய் அடியோடும் அகந்தையையே. 37

ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்
தீது ஆளியை, ஆண்டது செப்புமதோ !
கூதாள கிராத குலிக்கு இறைவா !
வேதாள கணம் புகழ் வேலவனே ! 38

மாஏழ் சனனம் கெட, மாயைவிடா,
மூஏடணை என்று முடிந்திடுமோ !
கோவே ! குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவசங்கர தேசிகனே ! 39

வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்,
மனையோடு தியங்கி மயங்கிடவோ?
சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்
தினையோடு, இதணோடு திந்தவனே ! 40

சாகாது எனையே சரணங் களிலே
கா கா, நமனார் கலகம் செயும் நாள்
வாகா ! முருகா ! மயில் வாகனனே !
யோகா ! சிவஞான உபதேசிகனே ! 41

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே. 42

தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்,
பேசா அநுபூதி பிறந்ததுவே. 43

சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லுமதோ?
வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்
காடும், புனமும் கமழும் கழலே. 44

கரவாகிய கல்வி உளார் கடை சென்று
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ?
குரவா ! குமரா ! குலிசாயுத ! குஞ்
சரவா ! சிவயோக தயாபரனே? 45

எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ,
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்,
கந்தா ! கதிர் வேலவனே ! உமையாள்
மைந்தா ! குமரா ! மறை நாயகனே ! 46

ஆறு ஆறையும் நீத்து, அதன் மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ?
சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே ! 47

அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்
பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?
செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே ! 48

தன்னந் தனி நின்றது, தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே ! 49

மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக்
கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்?
நதி புத்திர ! ஞான சுகாதிப ! அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே ! 50

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே ! 51

ஸ்ரீ அருணகிநாதாரின் கந்தர் அநுபூதி முற்றிற்று

http://www.bakthi.org
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஸ்ரீ அருணகிநாதாரின் கந்தர் அநுபூதி

Post by தாமு on Mon Jun 27, 2011 8:37 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum