புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலவசத்தின் விளைவுகள்!  Poll_c10இலவசத்தின் விளைவுகள்!  Poll_m10இலவசத்தின் விளைவுகள்!  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இலவசத்தின் விளைவுகள்!  Poll_c10இலவசத்தின் விளைவுகள்!  Poll_m10இலவசத்தின் விளைவுகள்!  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இலவசத்தின் விளைவுகள்!  Poll_c10இலவசத்தின் விளைவுகள்!  Poll_m10இலவசத்தின் விளைவுகள்!  Poll_c10 
11 Posts - 4%
prajai
இலவசத்தின் விளைவுகள்!  Poll_c10இலவசத்தின் விளைவுகள்!  Poll_m10இலவசத்தின் விளைவுகள்!  Poll_c10 
9 Posts - 4%
Jenila
இலவசத்தின் விளைவுகள்!  Poll_c10இலவசத்தின் விளைவுகள்!  Poll_m10இலவசத்தின் விளைவுகள்!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
இலவசத்தின் விளைவுகள்!  Poll_c10இலவசத்தின் விளைவுகள்!  Poll_m10இலவசத்தின் விளைவுகள்!  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இலவசத்தின் விளைவுகள்!  Poll_c10இலவசத்தின் விளைவுகள்!  Poll_m10இலவசத்தின் விளைவுகள்!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
இலவசத்தின் விளைவுகள்!  Poll_c10இலவசத்தின் விளைவுகள்!  Poll_m10இலவசத்தின் விளைவுகள்!  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இலவசத்தின் விளைவுகள்!  Poll_c10இலவசத்தின் விளைவுகள்!  Poll_m10இலவசத்தின் விளைவுகள்!  Poll_c10 
2 Posts - 1%
jairam
இலவசத்தின் விளைவுகள்!  Poll_c10இலவசத்தின் விளைவுகள்!  Poll_m10இலவசத்தின் விளைவுகள்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசத்தின் விளைவுகள்!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 28, 2011 3:01 pm

சட்டமன்றத்தேர்தலில் ஜெ அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளான கிரைண்டர், மிக்சி, மின்விசிறி மற்றும் மடிக்கணினி (Laptop) போன்றவற்றை மக்களுக்குக் கொடுக்க தமிழக அரசு டெண்டர் விட்டு வருகிறது. தேர்தலில் அனைவருக்கும் கொடுக்கப்படும் என்று இருந்ததில் தற்போது சில கட்டுப்பாடுகள் விதித்து கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

2006 தேர்தலில் கலைஞர் தொலைக்காட்சி கொடுத்த போது ஜெ எதுவும் இதைப்போல அறிவிக்கவில்லை. பின்னர் கலைஞர் அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது நமக்கு அனைவருக்கும் தெரிந்தது. இதில் இலவசத் தொலைக்காட்சி கலைஞருக்கு பெரும் அளவில் வரவேற்ப்பை பெற்று ஓட்டுக்களை அள்ளித்தந்தது இருப்பினும் பெருவாரியான தொகுதிகளை பெற முடியவில்லை அதனால் ஜெ கடந்த ஐந்து வருடமும் கலைஞர் அரசை மைனாரிட்டி திமுக அரசு என்றே கூறி வந்தார். இந்தத்தேர்தலில் கலைஞர் கிரைண்டர் இலவசம் என்று அறிவித்தவுடன் கடந்த முறை போல எதுவும் கூறாமல் இருந்தால் இந்த முறையும் தோல்வி அடைய வாய்ப்பு இருக்கிறது என்று கருதி வரைமுறையே இல்லாத அளவு இலவசங்களை அள்ளிக்கொடுத்தார் வாக்குறுதிகளாக.

Read: தமிழ்நாட்டைப் பிடித்து உலுக்கும் “இலவசம்”

ஜெ இலவச வாக்குறுதிகளை தவறு என்று என்னால் கூற முடியவில்லை காரணம் எந்த ஒரு கட்சிக்கும் இருக்கும் இயல்பான பயம் தான். நாம் கூறாவிட்டால் ஓட்டு வராமல் போய் விடுமோ ஆட்சியைப் பிடிக்க முடியாதோ! என்ற காரணம் தான். கடந்த முறை செய்த தவறை இந்த முறை செய்யக்கூடாது என்று இலவசங்களைக் ஜெ கூறினார் ஆனால் இவர் செய்த தவறு அளவு கடந்த இலவசங்களை அறிவித்தது. இவை 70% மின்சாரத் தேவையை சார்ந்தே இருக்கின்றன. ஏற்க்கனவே தமிழகம் மின்சாரத்தேவைகளால் திணறி வருகிறது இந்நிலையில் அறிவிக்கப்பட்ட இலவசப் பொருட்கள் பயன்பாட்டிற்கு வரும் போது மின்சாரத்தின் தேவை பன்மடங்காக அதிகரிக்கும்.

மக்கள் வழக்கமாக பொருட்களை வாங்கினால் மின்சாரத்தேவையும் சீராக அதிகரிக்கும் தற்போது செப்டம்பர் மாதம் திடீரென்று லட்சக்கணக்கான மின்சாரப் பொருட்கள் அதிகரிக்கும் போது அரசாங்கம் முன்னேற்ப்பாடாக அதற்குத் தகுந்த வசதிகளை செய்து இருந்தால் மட்டுமே இதை சமாளிக்க முடியும். ஏற்கனவே உள்ள மின்சாரப்பிரச்சனையே இன்னும் தீர்க்கப்படவில்லை அப்படி இருக்கையில் புதிய தேவைக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அரசுக்கு இருக்கும் ஒரே நல்ல விஷயம் அந்த சமயத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து இருக்கும் மழை அதிகம் பெய்து கொண்டு இருக்கும் இதனால் மின் தேவை குறைந்து நீர் மின் உற்பத்தி அதிகமாக வாய்ப்புண்டு. எனக்குத் தெரிந்து இது மட்டுமே அரசுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

தற்போது கிரைண்டர் மிக்சி இலவசங்களால் இதை தயாரிப்பவர்களின் வசூல் பெருமளவு பாதிக்கப்படலாம் ஏற்கனவே இலவசமாக கிரைண்டர் மிக்சி வரும் என்று பலரும் தங்கள் திட்டத்தை ஒத்திப்போட்டு இருக்கிறார்கள் இதனால் எங்கள் விற்பனை பெருமளவு பாதித்துள்ளது என்று கோவை வியாபாரிகள் கூறியுள்ளனர். இங்கு தான் அதிகளவில் கிரைண்டர் உற்பத்தி ஆகிறது. இந்த இலவசங்கள் கியாரண்டி இரண்டு வருடம் என்று வைத்துக்கொண்டால் இரண்டு வருடத்திற்கு விற்பனையில் இவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதன் பிறகு புது மாடல் புதிய வசதி என்று கொண்டு வந்து விற்பனையை இவர்கள் மறுபடியும் உயர்த்த வேண்டும்.

மேற்கூறியவை இலவசங்களால் உள்ள பிரச்சனைகள். தீமைகள் என்று இருந்தாலே நன்மைகளும் நிச்சயம் இருக்கும் இருக்க வேண்டும். எனவே இதில் உள்ள நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.

என்ன தான் இலவசங்களுக்கு எதிர்ப்பு இருந்தாலும் அதே அளவில் ஆதரவும் இருக்கிறது. இன்னும் சில மக்களுக்கு கிரைண்டர் மிக்சி என்பது எட்டாக்கனவாகவே இருக்கிறது. இவை அவர்களைப் போன்றவர்களுக்கு சந்தோசமளிக்கும் செய்தி. நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு வேண்டும் என்றால் இவை ஒரு பொருட்டாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் இவர்களுக்கு இது பெரிய விஷயம் தான். இதில் என்ன காமெடி என்றால் இதைப்போல இலவசத்தை எதிர்ப்பவர்களும் இதை வாங்க வரிசையில் நிற்பது தான் ஆசை யாரை விட்டது.

மடிக்கணினி

தற்போதைய கணினி உலகத்தில் மடிக்கணினி அல்லது கணிப்பொறி அவசியத்தேவை ஆகி விட்டது. முன்பு ஆடம்பரப் பொருளாக இருந்த கணினி தற்போது அத்யாவசியத் தேவைகளுள் ஒன்றாகி விட்டது. தற்போது கணினி அதிகரிப்பால் கணினி சார்ந்த தொழில்கள் அதிகம் வளம் பெற வாய்ப்புண்டு. இதற்கு மூன்று வருட கியாரண்டி இருப்பதால் ஹார்ட்வேர் சம்பந்தமாக பெரிய அளவில் வருமானம் இருக்காது ஆனால் அவை தொடர்பான USB ஸ்டிக் மற்றும் சில மென்பொருட்கள் போன்றவைகளின் விற்பனை அதிகரிக்கலாம். இணையம் தொடர்பான நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் அதாவது ஏர்டெல், BSNL, ரிலையன்ஸ் போன்ற இணைய வசதி தரும் நிறுவனங்களுக்கு அதிகளவில் வருமானம் பெருகும்.

முதல்கட்டமாக 9 லட்சம் மடிக்கணினிகள் கொடுக்கப்படுகின்றன இதில் ஒரு லட்சம் பேர் புதிய இணைப்பு பெற்றாலே அவர்களுக்கு எதிர்பாராத வரவு தான் காரணம் இந்த எதிர்பாராத வளர்ச்சி அவர்களுடைய திட்டமிடுதலில் (தேர்தல் வாக்குறுதிகளுக்கு முன்பு) இருந்து இருக்காது. ஒவ்வொரு நிறுவனமும் இந்தக்கால அளவில் இவ்வளவு இலக்கை அடைய தீர்மானித்து இருப்பார்கள் அவர்களுக்கு இவை நடுவே வந்த இன்ப அதிர்ச்சி.

கணினி என்றாலே தொடர்ந்து உடன் வருவது ஆபாசம். ஆபாசத்தளங்கள் அல்லது படங்களை கடந்து வராத ஒரு வீட்டுக் கணினியைக் காண்பது அரிது. அதே மாணவர்கள் என்னும் போது அதன் அளவு இன்னும் அதிகமாக இருக்கும். எனவே ஆபாசப் படங்கள் புழக்காட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். படிப்பிற்காக நல்ல விசயங்களுக்காக எந்த அளவிற்கு கணினிகள் மனிதனுக்கு பயன்படுகிறது அதே அளவிற்கு இதைப்போன்ற விசயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இவையும் ஒரு காரணமே தவிர இவையே காரணம் அல்ல. மொத்தமக்களில் பெரும்பாலனவர்கள் ஆபாசப்படங்கள் மற்றும் தளங்களை கடந்து வராமல் இருக்கவே முடியாது. அது எதிர்பாராமலும் இருக்கலாம் விருப்பப்பட்டும் இருக்கலாம்.

இது தவறு என்று என்னால் கூறமுடியவில்லை இந்தக்காலக்கட்டங்களில் இவற்றை ஒதுக்கி வருவது என்பது நடைமுறையில் சிரமமான ஒன்று தான் என்று தோன்றுகிறது காரணம் நாம் விரும்பவில்லை என்றாலும் அதற்க்கான வாய்ப்புகள் அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது.

Read: செக்ஸ் ஒரு விரிவான பார்வை!

பொங்கல் முதல் ஆடு மாடு கொடுக்கப்போவதாக செய்திகளில் கூறப்பட்டுள்ளது. இதை எப்படி செயல்படுத்தப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று என்னால் ஒரு முடிவிற்கு (அனுபவம் இல்லாததால்) வர முடியவில்லை. இது பற்றி விரிவாக தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம் குறிப்பாக கிராமத்தில் உள்ளவர்கள். கிரைண்டர் மிக்சி மடிக்கணினி போன்றவை தரத்தில் எந்தப் பெரிய வித்யாசமும் இருக்கப்போவதில்லை காரணம் அனைத்தும் ஒரே மாதிரி தயாரிக்கப்படும் இயந்திரங்கள் ஆனால் ஆடு மாடு நிலை வேறு. ஒரு சில நல்ல உடல்த் தகுதியுடன் இருக்கும் சில வயதானதாக இருக்கலாம். எனவே இதை எப்படி மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை!

இலவசங்கள் இப்போதே இந்த அளவிற்கு உள்ளது என்றால் இனி அடுத்த தேர்தலில் இலவச அறிவிப்புகள் எந்த அளவிற்கு இருக்கும் என்று நினைத்தாலே பீதியாக இருக்கிறது. அடுத்த தேர்தலில் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், குளிர்சாதனப்பெட்டி என்று நீளுமோ! தமிழகம் நிலையை நினைத்தால் கொஞ்சம் கலவரமாகத்தான் இருக்கிறது. திமுக அரசு செய்த இலவச விரையப் பணத்தையும் ஜெ செய்யும் மற்றும் செய்யப்போகும் இலவச விரைய வரிப்பணத்தையும் கொண்டு எத்தனை சிறப்பான அடிப்படை திட்டங்களை செயல்படுத்தி இருக்கலாம் என்று வரும் ஏக்கத்தை தவிர்க்க முடியவில்லை. இலவசங்களுக்கு தடை வரும்வரை இதற்கு ஒரு விடிவு காலமில்லை.

மக்களின் பிரச்சனை அடிப்படைப் தேவைகளான தரமான சாலைகள், தடையற்ற மின்சாரம், சுத்தமான குடிநீர், சிரமமற்ற போக்குவரத்து, தரமான பொருட்களைக் கொண்ட ரேஷன் கடைகள் இவைகள் தான். இவைகள் கடைசி வரை தமிழக மக்களின் கனவாகவே போய் விடும் போல உள்ளது. இலவசம் என்கிற புலிவாலை அரசியல் கட்சிகள் பிடித்து விட்டதால் இதில் இருந்து மீண்டு வரவேண்டும் என்றால் அதற்க்கு நீதிமன்றத் தடை மட்டுமே ஒரே தீர்வு.

கொசுறு 1

கடந்த ஜூன் 25 பாப் கிங் மைக்கேல் ஜாக்சன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள். உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் பல சிறப்பு நிகழ்ச்சிகளின் மூலம் அவர் நினைவு கூர்ந்தார்கள். அவர் மறைந்தாலும் அவர் புகழ் தினமும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இன்றும் அவரது உடைகள் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுகின்றன, பாடல் DVD கள் விற்பனை குறையவில்லை, facebook ல் அவரது பக்கத்திற்கு ரசிகர்கள் தினமும் கூடிக்கொண்டே செல்கிறார்கள். இதைப்போல பல விசயங்களைக் கூற முடியும். இன்றும் பல நடனக்கலைஞர்களின் மனதில் நடனம் பற்றி ஆசையை தூண்டிக் கொண்டு இருப்பது இவரது ஆட்டமே என்றால் மிகையில்லை.

இவருடைய பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். இவரது பாடல்களை இன்று கேட்டாலும் உடல் சிலிர்த்து விடுகிறது. இவரைப்பற்றி இந்த சிறு பகுதியில் விவரிக்க முடியாது விரிவாக பின்னொரு நாளில் எழுதுகிறேன். இவரது நினைவு நாளை முன்னிட்டு உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் சிறு நடன நிகழ்ச்சியை [2009] ஏற்பாடு செய்து இருந்தார்கள். இதற்காக 30 நிமிடம் மட்டுமே ஒத்திகை பார்த்தார்கள் என்பதே இதில் விசேஷம். சில நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போது இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி பரவசம். ஒரு சனி இரவு (போக்குவரத்து குறைந்த பிறகு) சென்னை ஸ்பென்சர் சிக்னலில் இதைப்போல ஆடினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன்! கற்பனையே அசத்தலாக இருக்கிறது இந்தக்காணொளியைக் காணுங்கள் இதன் துவக்க இசையில் உங்கள் உடல் சிலிர்த்தால் நீங்கள் நிச்சயம் மைக்கேல் ரசிகர் தான்


கொசுறு 2

ஊரில் இருந்து வரும் என்னுடைய மனைவியையும் மகனையும் அழைத்து வர விமான நிலையம் சென்று இருந்தேன். கண்ணாடிக்கு அந்தப்பக்கம் வந்து கொண்டு இருந்தவன் என்னைப் பார்த்தவுடன் அப்பா அப்பா! என்று ஓடி வந்து குறுக்கே கண்ணாடி இருந்ததால் திகைத்து எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் அங்கும் இங்கும் வழியைத் தேடி ஓடியதைக் கண்ட போது இதைப்போல ஒரு ஆனந்தம் கோடி கொடுத்தாலும் கிடைக்காது என்று தோன்றியது. வீட்டிற்கு வரும் வழியில் அப்பா! கோபில (எங்க ஊர்) ஆடு, மாடு, கோழி எல்லாம் பார்த்தேனே! அப்புறம் தாத்தா கூட பைக் ல போனேன் என்று அவனுடைய உலகத்தின் மிக முக்கிய விசயங்களை விவரித்துக்கொண்டு வந்தான். குழந்தைகளின் கள்ளமற்ற அன்பிற்கு ஈடு இணை எதுவும் கிடையாது என்பது இதைப்போல தருணங்களில் தான் உணர முடிகிறது.

அதே விமானத்தில் ஒரு புது மணத் தம்பதியர் வந்து இருந்தார்கள். புதுப்பெண்ணுக்கே உரிய பளபளப்பு, நகை, பட்டுப்புடவை சரசரக்க தனது கணவருடன் வந்து இருந்தார் கணவர் இங்கே வேலை செய்பவராக இருக்க வேண்டும். அவர்களை அந்தப்பெண்ணின் கணவரின் நண்பர்கள் வரவேற்று அழைத்துச்சென்றனர் அப்போது அவர்களிடம் பேசி பழக்கம் இல்லாததாலும் என்ன பேசுவது என்று தெரியாததாலும் கூச்சத்திலும் கணவரின் கையை இறுகக்கட்டிக்கொண்டு நடந்து வந்தது பார்க்க அழகாக இருந்தது. நிச்சயம் சிங்கப்பூர் புதியது என்று அந்தப்பெண்ணின் நடவடிக்கையிலேயே தெரிந்தது விமானப்பயணமே புதியதாகத்தான் இருந்து இருக்க வேண்டும். இருவர் இல்லற வாழ்க்கையும் இனிதே அமைய நினைத்துக்கொண்டேன்.

கொசுறு 3

பெட்ரோல் டீசல் விலையை கண்டபடி மத்திய அரசு உயர்த்திக்கொண்டு இருக்கிறது. மக்களும் வேறு வழியில்லாமல் மற்ற செலவுகளில் கட்டுப்பாடு விதித்து இதைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் திணறிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் இந்த டீசல் விலை உயர்வு! இனி காய்கறி விலை முதற்கொண்டு அனைத்தின் விலையும் உயரும். தமிழகத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பேருந்துக்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை (மறைமுக உயர்வு தவிர்த்து) இதனால் ஏற்கனவே தனியார் பேருந்து உரிமையாளர்கள் புலம்பிக்கொண்டு இருந்தனர் இனி இந்த டீசல் விலை உயர்வை எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. சில மாதங்களில் பேருந்துக் கட்டண உயர்வை எதிர்பார்க்கிறேன்.

மத்திய அரசு வெட்டிச்செலவுகளைக் குறைத்து தனியாருக்குச் சாதமாக செயல்படாமல் மக்கள் அரசாக இருந்தாலே மக்களின் பெரும் சுமை குறையும். ஒன்றுக்கும் உதவாத இந்த உதவாக்கரை மத்திய அரசால் மக்களுக்கு சிரமத்திற்கு மேல் சிரமமாக இருக்கிறது. இது குறித்து தினமணி எழுதி இருக்கும் தலையங்கம் – மத்திய அரசின் மோசடி!

கொசுறு 4

facebook க்கு ரசிகர்கள் அதிகரித்து வருவதால் அதில் ஸ்பாம் விடும் கேடிகளும் அதிகம் ஆகிக்கொண்டே வருகின்றனர். தற்போது ஹாட்டாக இருக்கும் ஸ்பாம் இது தான். நீங்கள் “99% of people can’t watch this video more than 25 seconds!!!” “I dare you to watch more than 25 seconds from this video!” சுட்டியை (Link) க்ளிக் செய்தால் உங்கள் வயதை உறுதிப்படுத்துவதாகக் கூறி விட்டு அரை நிர்வாணப்படத்தை உங்கள் facebook Wall பகுதியில் இணைத்து விடும். இது குறித்து முன்பே என்னுடைய தள facebook fan page ல் குறிப்பிட்டு இருக்கிறேன்.

கிரி Blog




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 28, 2011 3:40 pm

இலவசத்தின் விளைவுகள்!  677196 இலவசத்தின் விளைவுகள்!  677196 இது கட்டுரையாளருக்கு

இலவசத்தின் விளைவுகள்!  502589 இலவசத்தின் விளைவுகள்!  502589 இலவசத்தின் விளைவுகள்!  56667 இது கட்டுரையில் உள்ள விடையங்களுக்கு


ராம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக