ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில
 Meeran

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ரயில் நிலையங்களில் எல்.இ.டி., விளக்குகள்:தெற்கு ரயில்வே
 ayyasamy ram

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 ayyasamy ram

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 ayyasamy ram

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 ayyasamy ram

முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
 ayyasamy ram

திருச்சி: போக்குவரத்து அதிகாரி வீட்டில் 223 சவரன் நகை பறிமுதல்
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மகனை இயக்கும் மாணவன்

View previous topic View next topic Go down

மகனை இயக்கும் மாணவன்

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 30, 2011 8:40 pm

மகனை இயக்கும் மாணவன்!

விருது விழா சுவாரஸ்யம்

கடந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இனிதே நடந்து முடிந்தது விஜய் டி.வி-யின் விருது வழங்கும் விழா. அதன் சுவாரஸ்யத் துளிகள் இங்கே...

விழாவின் முதல் நிகழ்ச்சியாக 'தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய தருணம்’ என்று தேசிய விருது பெற்ற 14 கலைஞர்களையும் மேடைஏற்றியது அழகு!

''நம் வேர்களை நோக்கிப் பயணப்பட்டு படங்கள் பண்ணினால், எல்லாப் படங்களும் தவறு செய்யாத தரமான படங்களாக அமையும்'' என்ற வெற்றிமாறன் கருத்துக்கு அமோக அப்ளாஸ்!சிறந்த ஸ்டன்ட் மாஸ்டருக்கான விருதை 'நான் மகான் அல்ல’ படத்தின் அனல் அரசுவுக்கு வழங்கிய தனுஷிடம், ''தேசிய விருது தகவல் கேட்டு எப்படி ஃபீல் பண்ணீங்க?'' என்றார் கோபிநாத். ' 'இவன் எல்லாம் எந்த தைரியத்துல நடிக்க வந்துட்டான்?’னு என் காதுபடவே சிலர் பேசி இருக்காங்க. நம்மளை எல்லாம் நடிகனா ஏத்துக்கிட்டதே பெரிய விஷயங்க. தமிழ்நாட்டு மக்களோட தாராள மனசைத்தான் பாராட்டணும்!'' என்று கலகலக்கவைத்தார்.

'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ - வைரமுத்து, 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ - நா.முத்துக்குமார், 'மன்னிப்பாயா’ - தாமரை, 'மைனா மைனா நெஞ்சுக்குள்ளே’ - யுகபாரதி, 'இதுவரை இல்லாத உணர்விது...’ - கங்கை அமரன் எனச் சிறந்த பாடலாசிரியருக்கான விருதுக்குத்தான் ஏகப்பட்ட போட்டி. அந்த விருதை அறிவிக்க வந்த பார்த்திபன், 'இது வாசிக்கப்படும் பெயரே அல்ல. உலகத் தமிழர்களால் நேசிக்கப்படும் பெயர். இவர் தன்னைப் பற்றி எழுத மாட்டாரா என காதல் ஒத்தக் காலில் நிற்கிறது’ என்று சஸ்பென்ஸ் வைக்க, 'வைரமுத்து... வைரமுத்து’ என்று அதிர்ந்தது ஆடிட்டோரியம். புன்சிரிப்போடு விருதைப் பெற்றுக்கொண்டார் கவிஞர்.''தோழர்களே... கேட்பதற்கு, பாடுவதற்கு என்று இருந்த பாடல், இன்று ஆடுவதற்கு என்றாகிவிட்டது. இயக்குநர்களுக்கு ஒரு வேண்டு கோள். ஒரு படத்தில் ஓரிரு பாடல்களையாவது, இசை, மொழியைச் சிதைக்காதவையாகப் பார்த்துக்கொள்ளுங்கள்'' - இது வைரமுத்துவின் ஏற்புரை வேண்டுகோள்.

'மன்னிப்பாயா’ பாடலுக்காகச் சிறந்த பெண் பாடகி விருது பெற வந்த ஸ்ரேயா கோஷலை அறிமுகப்படுத்திய தொகுப்பாளர் சிவகார்த்திகேயன், ''இளம் வயதிலேயே நாலு முறை தேசிய விருது பெற்றவர். தன்யவாத் ஜி (வணக்கம்)'' என்றார். உடனே கோபிநாத், ''டேய்... தனியா வா!ன்னு சொல்ற மாதிரி இருக்கு'' என்றதும் அதிர்ந்து சிரித்தார்கள் இருவரும்.

'ஜில்லா விட்டு...’ பாடலுக்காகச் சிறந்த நடன இயக்குநர் விருது பெற்றார் டான்ஸ் மாஸ்டர் தினேஷ். '' 'டான்ஸ் ஆட டான்ஸ் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. லுங்கி கட்டியிருந்தால் போதும்!’ என மெய்ப்பித்த தினேஷ் மாஸ்டருக்கு நன்றி'' என்று ஈசன் டான்ஸை நினைவுபடுத்திக் கலகலக்கவைத்தார் சிவகார்த்திகேயன்.

''திருக்குறளில் அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் என முப்பால் தெரியும். ஆனால், இப்போது வந்து ஆடப்போவது அமலா பால்'' என்ற சிவகார்த்திகேயன் கமென்ட்டைத் தொடர்ந்து, ''ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி போட்டு...'' எனத் தொடங்கி மிக்சர் மசாலாவுக்கு செம குத்தாட்டம் போட்டுச் சென்றார் அமலா பால்.

'சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டர்’ விருது பெற வந்த தம்பி ராமையா, ''வெற்றியின் பார்வை என் மீது திரும்பாதா என ஏங்கிக் கிடந்த எனக்கு 40 வயதுக்கு மேல் ஒளி வெள்ளம் கிடைச்சிருக்கு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, பெரியம்மா, சித்தப்பா...'' எனக் கடகடவென 40, 50 உறவு முறைகளைச் சொல்லிவிட்டு, ''எல்லோரையும் லவ் பண்ணுங்க பாஸ்... லைஃப் நல்லா இருக்கும்'' என்று சரவெடி கொளுத்தினார். ''ஓ... சப்போர்ட்டிங் ஆக்டரும் பஞ்ச் டயலாக் பேசலாமோ?'' என்ற கோபிநாத்தின் கமென்ட்டுக்கு செம ரெஸ்பான்ஸ்.'கான்ட்ரிபியூஷன் டு தமிழ் சினிமா’ விருது வழங்கப்பட்டதும் ரொம்பவே சுவாரஸ்யம். சுந்தரம் மாஸ்டர் பற்றிய திரையிடப்பட்ட வீடியோ காட்சியில் கே.பி., கமல், அமலா எனப் பலரும் பேசினார்கள். விருதைப் பெற வந்த சுந்தரம் மாஸ்டர், ''எனக்குப் பேசத் தெரியாது. ஆடத்தான் தெரியும். ஆனால், இங்கு நான் பேசியே ஆகணும். கே.பி. சார் மீது எனக்கு வருத்தம் உண்டு. நானும் அவரும் 'நீர்க் குமிழி’ மூலம்தான் அறிமுகமானோம். இது அவர் தந்த வாய்ப்பு. எல்லா மேடைகளிலும் ரஜினி, கமல் என ஸ்டார்களைப் பற்றி மட்டுமே பேசுகிறாரே தவிர, என்னைப்பற்றிப் பேசியதே இல்லை'' என வருந்திப்பேச... ''என் கண்ணுக்கு எதிரே உள்ளவங்களைப் பற்றி பேசியிருப்பேன். கடவுளைப்பற்றி யாராவது தினமும் பேசுவாங்களாய்யா? நீயும் எனக்கு அப்படித் தான். ஹாட்ஸ் ஆஃப் யூயா'' என்று கே.பி. சொன்னதும்தான் சமாதானம் ஆனார்.

சிறந்த பொழுதுபோக்குப் பட இயக்குநர் விருதை ஷங்கருக்குக் கொடுத்த எஸ்.ஏ.சி., ''என் மாணவன், இப்போது என் மகனை இயக்குகிறார் என்பது பெருமை'' என்று பூரித்தார்!

சிறந்த வில்லன் விருதை ரஜினிக்காக தனுஷ் பெற்றுக்கொண்டார். அவர் போனில் சொன்ன வாழ்த்துச் செய்தியை மைக்கில் படித்தார். ''எனக்கு ராமனைவிட ராவணனைத்தான் பிடிக்கும். அர்ச்சுனனைவிட துரியோதனனைப் பிடிக்கும். ஹீரோவைவிட வில்லனை பிடிக்கும். அந்த வகையில், இந்த விருதும் எனக்குப் பிடிக்கும். என்னை வாழவைக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி. நான் இன்று உயிர் பிழைத்து இருப்பது உங்களின் பிரார்த்தனைகளால் மட்டுமே!'' என்று ரஜினியின் வாழ்த்தை தனுஷ் படித்து முடித்ததும்... அரங்கில் நெகிழ்ச்சி கலந்த நிசப்தம்!

avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: மகனை இயக்கும் மாணவன்

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Jun 30, 2011 8:48 pm

பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா...நன்றி
இந்த நிகழ்ச்சியை விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பி விட்டார்களா இல்லை என்றால் எப்பொழுது ஒளிபரப்புகிறார்கள் என சொல்லுங்கள் நண்பர்களே...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3952
மதிப்பீடுகள் : 866

View user profile

Back to top Go down

Re: மகனை இயக்கும் மாணவன்

Post by றினா on Thu Jun 30, 2011 8:55 pm

''நம் வேர்களை நோக்கிப் பயணப்பட்டு படங்கள் பண்ணினால், எல்லாப் படங்களும் தவறு செய்யாத தரமான படங்களாக அமையும்''

பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா..
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: மகனை இயக்கும் மாணவன்

Post by positivekarthick on Thu Jun 30, 2011 9:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: மகனை இயக்கும் மாணவன்

Post by மஞ்சுபாஷிணி on Fri Jul 01, 2011 1:36 am

@ரா.ரமேஷ்குமார் wrote:பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா...நன்றி
இந்த நிகழ்ச்சியை விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பி விட்டார்களா இல்லை என்றால் எப்பொழுது ஒளிபரப்புகிறார்கள் என சொல்லுங்கள் நண்பர்களே...

ரமேசு எங்கூட்ல சன், ஜெயா, விஜய் எந்த டிவியும் வர்றதில்லப்பா.... ஜீ அஃப்லம் ஃபாக்ஸ் மூவிஸ் இன்ஃபினிட்டி டிவி இதெல்லாம் தாம்பா அழுகை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: மகனை இயக்கும் மாணவன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum