ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:07 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு 5 5 2

புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Jul 03, 2011 6:07 pm

தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.

தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.

பாடல் 1: அதனினும் உயர்ந்தது
பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பட்டோன் : வல் வில் ஓரி
திணை : பாடாண் துறை : பரிசில்

ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று,
அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமையத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி ; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ! நின்னே


பொருளுரை:

பிச்சை எடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட
இழிவான செயல் பிச்சை இடாமல் இருப்பது
ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட
கொடுப்பதை வேண்டாம் என்று மறுத்தல் உயர்வானது
நுரை பொங்கும் கடல் நீர் மிகப் பெரியதாக இருந்தாலும்
தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால்
பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று நீர் அருந்தி
சேறு நிறைந்த சிறு குளம் ஆனாலும், மனிதர்கள்
தாகத்திற்கு அந்த குளத்து நீரையே அருந்துவர்.
அது போல் மிகப் பெரியவர் பலர் இருந்தாலும்
அவர்கள் கடல் நீரை போன்றவர்கள், எங்களின் துயர் துடைக்க மாட்டார்கள்,
நீ வறுமை அடைந்து வசதி குறைந்து இருந்தாலும்
பலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும் வானத்து மேகம் போல்
அள்ளி அள்ளி எங்களுக்கு வழங்குவாய்,
ஆனால் இன்று நீ வழங்காது இருப்பது எங்கள் குறையே,
நாங்கள் புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள் சரியில்லை,
எங்களின் நேரம் சரியில்லை.
கேட்டவர்க்கு கொடுக்கும் வள்ளல் ஓரியே, நீ நீடோடி வாழ்க


Last edited by சதாசிவம் on Mon Jul 11, 2011 6:24 pm; edited 2 times in total

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by மஞ்சுபாஷிணி on Sun Jul 03, 2011 6:45 pm

பொருள் விளக்கத்துடன் மிக அருமையான வரிகள்..

அன்பு நன்றிகள் சதாசிவம் பகிர்வுக்கு.

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by வாத்தியார் on Sun Jul 03, 2011 7:39 pm

சிறப்பான செயல் செய்த சதாசிவத்துக்கு நன்றிகள். இதுபோன்று நிறைய தமிழ் பழமையை சொல்லும் பாடல்களை விளக்கத்துடன் தாருங்கள் நண்பரே


[You must be registered and logged in to see this link.]

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by bala23 on Sun Jul 03, 2011 8:14 pm

சூப்பர் ரொம்ப நாள் இது போல பதிவு வருமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
மிக்க மகிழ்ச்சி... மேலும் தொடர வாழ்த்துக்கள்....
நன்றி

bala23
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 189
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 09/01/2011
மதிப்பீடு: 19

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Jul 04, 2011 9:52 am

ஊக்கம் அளித்த நண்பர்களுக்கு நன்றி.
புறநானூறு & குறுந்தொகையில் உள்ள சிறந்த பாடல்களை தொடராக எழுதலாம் என்று உள்ளேன். தகவல் திரட்டிய பிறகு பாடல்கள் தொடரும்.

நன்றி

[You must be registered and logged in to see this image.]

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Thu Jul 07, 2011 4:35 pm

தமிழ் இலக்கண முன்னூல் ஆன தொல்காப்பியம் நூல்கள் எழுதும் முறையை நான்கு வகையாக பிரித்து உள்ளது.
அவை

  1. தொகுத்தல் - பல் வேறு விஷயங்களை தொகுத்து ஒருவர் எழுதுதல்
  2. விரித்தல் - இது ஏற்கனவே எழுதிய புத்தகத்திற்கு விளக்க உரை எழுதுதல்
  3. தொகை - பல் வேறு கால கட்டங்களில் பல புலவர்களால் எழுதப்பட்ட பாடல்களை தொகுத்து ஒரு நூலாக வெளியிடல்.
  4. மொழி பெயர்ப்பு - இது வேறு மொழியில் உள்ள நூல்களில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து எழுதுதல்.

இப்படி மேற் சொன்ன நூல் முறையில், பதினெண் மேல் கணக்கு நூல்களுள் தொகுக்கப்பட்ட தொகை நூல்கள் எட்டு. அவை எட்டுத்தொகை நூல்கள் என்று வழங்கப்படுகிறது. இவை

" நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பற்று ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை"

எட்டுத்தொகை நூல்கள் அகம், புறம் ஆகிய இரண்டு பிரிவுகளை பற்றி மிகச்சிறப்பான பாடல்கள் கொண்ட தொகுப்பு ஆகும்.

புறநானூறு
புறம் + நானூறு = புறநானூறு. இப்பாடல்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து கி.பி 2-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த புலவர்களால் பாடப்பட்டவையாகும். இதன் மூலம் மூவேந்தர்களின் சிறப்பு, தமிழ்நாட்டின் சிறப்பு, கடை ஏழு வள்ளற்களின் சிறப்பு, வீரம் என பல தரப்பட்ட விவரங்களும், பலருடைய வரலாற்று குறிப்புகளும் அறியலாம்.

அதியமானும் , ஔவையாறும்
அதியமான், ஔவையாருக்கு சிறந்த நண்பர். ஒரு முறை ஔவையார் அதியமானிடம் பாடி பரிசில் பெற சென்றார். பரிசில் உடனே வழங்கி விட்டால் ஔவையார் சென்று விடுவார் என்ற எண்ணத்தில் பரிசில் தராமல் காலம் கடத்தினார் அதியமான், அந்த சூழலில் எழுந்த பாடல் இது. விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்பர் நம் பெரியோர், மூன்று நாட்கள் மேல் ஒரு வீட்டில் இருந்தால் முதல் நாள் உள்ள உபசரிப்பு போல் இருக்காமல் அடுத்தடுத்த நாட்களில் உபசரிப்பு குறையும். ஆனால் இந்த பாடல் கூறும் அதியமானின் சிறப்பை பாருங்கள்.

பாடல் 2: பல நாளும் தலை நாளும்
பாடியவர் : ஔவையார்
பாடப்பட்டோன் : அதியமான் நெடுமான் அஞ்சி
திணை : பாடாண் துறை : பரிசில் கடா நிலை

பாடல்: புறம் : 101

" ஒரு நாள் செல்லலம்: இருநாட் செல்லலம்
பன்னாள் பயின்று, பலரோடு செல்லினும்
தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ:
அணிபூண் அணிந்த யானை இயல் தேர்
அதியமான்; பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும், நீட்டா தாயினும், யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் தது அது: பொய்யா காதே;
அருந்தே மாந்த நெஞ்சம்!
வருந்த வேண்டா; வாழ்க அவன் தாளே! "

பொருளுரை:
ஒரு நாள் செல்லலாம், பல நாள் செல்லலாம்
ஒருவராக செல்லலாம், பலருடன் செல்லலாம்
முதல் நாள் விருந்து உபசரிக்கும் மங்கையை போல்
அழகிய நகைகள் அணிந்த யானையை உடைய
அதியமான் நம்மை உபசரிப்பான்.
பரிசு உடனடியாக கொடுத்தாலும், கொடுக்கா விட்டாலும்
பெரிய யானையின் கொம்புகளுக்கு இடையே வைத்த உணவு
அதன் வாய்க்குள் தப்பாமல் செல்வது போல்,
நம்மை வந்து சேரும், அது பொய் ஆகாது
ஆதலால், கலங்காதே மனமே, வருந்த வேண்டாம்
வாழ்க அவன் தோள்கள், வாழ்க அதியமான்.


இப்படிச் சொன்ன ஔவையார், பல நாள் ஆகியும் பரிசு கிடைக்காததால் ஒரு பாடல் பாடினார், அப்பாடலை பின்பு காண்போம்.


Last edited by சதாசிவம் on Mon Jul 11, 2011 6:25 pm; edited 2 times in total

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by dsudhanandan on Thu Jul 07, 2011 5:00 pm

பதிவுகள் அருமை... தொடருங்கள் நண்பரே... மகிழ்ச்சி

dsudhanandan
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by maniajith007 on Thu Jul 07, 2011 6:02 pm

தொடருங்கள் சதாசிவம் நானும் ஆர்வமுடன் உள்ளேன்

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Thu Jul 07, 2011 6:04 pm

மிக்க நன்றி தோழர்களே ,

[You must be registered and logged in to see this image.]

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சிவா on Fri Jul 08, 2011 1:33 am

பயனுள்ள திரியைத் துவங்கியுள்ளீர்கள் சதா! மகிழ்ச்சி! தொடருங்கள்!



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790521 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81956 | புதிய உறுப்பினர்: malinimohan

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Fri Jul 08, 2011 3:03 pm

சிவா wrote:பயனுள்ள திரியைத் துவங்கியுள்ளீர்கள் சதா! மகிழ்ச்சி! தொடருங்கள்!


சிவா அண்ணாவுக்கு மிக்க நன்றி,
நன்றி

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Jul 09, 2011 1:23 pm

நட்பின் யதார்த்தம்

நட்பு காதலை விட சிறந்தது, ரத்த பாசத்தை விட பெரியது என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனாலும் நட்பில் தன் நிலை இழப்பதை யாரும் விரும்புவதில்லை. என்ன தான் சிறந்த நட்பு என்று நாம் உணர்ந்தாலும், உரைத்தாலும் நம்மை உதாசீனப் படுத்தும், நம் உணர்வுக்கு சரியான அங்கிகாரம் கிடைக்காத நட்பை நாம் தொடருவதில்லை. இது தான் நட்பின் யதார்த்தம், ஆனாலும் இப்படி விலகி பின்பு உணர்ந்து ஒன்று சேரும் போது வரும் ஆனந்தம் அளவிலாதது.

பாடலின் பின்புலம்:

பலநாள் அதியமான் வீட்டில் இருந்த ஔவையாருக்கு அவனிடம் இருந்து பரிசு கிடைக்கவில்லை. அதியமான் வேண்டுமென்றே பரிசில் தருவதை காலம் தாழ்த்துகிறான், தன்னை உதாசீனம் செய்கிறான் என்று தவறாக உணர்ந்து அவன் அரண்மனையில் இருந்து வெளியேறும் பொழுது அரண்மனை வாயில்காப்பவனை பார்த்து எழுந்த பாடல் இது. நட்பில் விரிசல், கருத்து வேறுபாடு வந்து விலகும் பொழுது, நம்மால் நண்பர்களின் முகத்தை பார்த்து கூறி விலக முடியாது, குறிப்பாக பெண்கள் நட்பில் விலகும் போது எதையும் கூறாமலே விலகுகின்றனர். ஔவை சற்று வித்தியாசமானவள்,

இந்த பாடலில் வெளிப்படும் ஔவையின் கோவத்தை பாருங்கள். "மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்" & "கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்று இதன் பிறகு தான் கூறி இருப்பாரோ?

பாடலின் சிறப்பு

கல்வியின் சிறப்பையும், அந்த காலத்தில் தமிழ் பாடும் புலவர்கள், புரவலர்களின் தயவில் வாழ்ந்து வருந்துவதையும் இந்த பாடல் இலை மறை காயாக உணர்த்துகிறது.

பாடல் 3 : எத்திசைச் செலினும் சோறே (புறம் : 206)
பாடியவர் : ஔவையார்
பாடப்பட்டோன் : அதியமான்
திணை: பாடாண் துறை : பரிசில்

வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவி முதல் வயங்குமொழி வித்தித் தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன் அறி யலன் கோல்? என்னறி யலன் கோல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வருந்தலை உலகமும் அன்றே; அதனால்
காவினெம் கலனே; சுருக்கினென் கலப்பை;
மரங்கொல் தச்சன் மைவல் சிறா அர்
மழுவுடைக் கட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே"


பொருள் விளக்கம்

வாயில் காப்பவனே, வாயில் காப்பவனே
மன்னனின் காது குளிர பாடல் பாடி தன் உள்ளத்தில் எண்ணியதை
முடிக்கும் பொருட்டு, அவன் தரும் பரிசுக்காக மனம் வருந்தி
வரிசையில் ஏங்கி நிற்கும் நிலையை புலவர்களுக்கு தராத
அரண்மனை வாயில் காப்பவனே
அதியமான் தன்னை அறியாதவனா? அல்லது என்னை அறியாதவனா?
அறிவும் புகழும் உடையவர்கள் பிழைக்க வழியில்லாமல் இறந்தனர்
என்ற அவநிலை இந்த உலகத்திருக்கு இன்னும் வரவில்லை.
அதனால், என்னுடைய பொருட்களை எடுத்து கொண்டேன் இங்கிருந்து செல்கிறேன்,
நல்ல மர வேலை தெரிந்த தச்சன் காட்டில் எந்த திசை சென்றாலும், அங்கு கிடைக்கும் மரத்தை வைத்து தனக்கு வேண்டியதை செய்து கொள்வான். அது போல் திறமை உள்ளவன் எந்த திசை சென்றாலும் அவனுக்கு தேவையான உணவை பெற முடியும், வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளமுடியும். இங்கிருந்து செல்கிறேன், மறக்காமல் இதை உன் மன்னனிடம் கூறு.

ஒவ்வொருவரின் கடமை என்ன என்று அடுத்த பாடலில் காண்போம்.


Last edited by சதாசிவம் on Mon Jul 11, 2011 6:27 pm; edited 1 time in total

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Jul 11, 2011 6:22 pm

ஒவ்வொருவரின் கடமை

இன்றைய சூழலில் ஒரு அலுவலத்தில் நாம் சேர்ந்த உடனேயே நமக்கு பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொருவரின் தகுதி, வேலை பொறுத்து கடமைகள் மாறுபடுகின்றன. அதுபோல் பண்டைய தமிழ் முறையில் புறநானூறு ஒரு சில கடமைகளை வகுத்து இருக்கிறது. அது என்ன என்று இப்பாடல்கள் மூலம் அறியலாம்.

பாடல் 4 : காளைக்குக் கடனே (புறம் 312)
பாடியவர் : பொன்முடியார்
திணை : வாகை துறை :முதில் முல்லை
பாடப்பட்டவர் : யாருமில்லை (பொதுவாக பாடியது)

"ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே ;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே ;
வேல்வடித்துக் கொடுப்பது கொல்லற்குக் கடனே ;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக் ,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே
"

பொருள் விளக்கம்:
குழந்தையை பத்திரமாக பெற்றுத் தருவது தாயின் கடமை
பெற்ற குழந்தைக்கு தேவையான கல்வி, அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் ஆகியவை சொல்லித் தந்து நான்கு பேர் புகழும் வண்ணம் சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை,
போரில் பங்கு பெரும் வீரர்களுக்கு உறுதியான கூரான வேல், வாள் செய்து கொடுப்பது கொல்லனின் கடமை. குடிமகனுக்கு நல்ல நடத்தை நிலை பெற செய்யுதல் மன்னனின் கடமை,
கூரிய ஒளி பொருந்திய வாளை கையில் ஏந்தி யானையைக் கண்டு அஞ்சாமல், அதை போரில் வெல்வது ஆண்களின் கடமை.

மக்கள் நல்ல நடத்தையில் இருப்பது மன்னனின் கையில் இருக்கிறது, இன்று போர் நடைபெறும் நாடுகளில் முக்கிய காரணம் ஆட்சி சரியில்லை, மன்னன் சரியில்லை என்ற காரணம் தான். மன்னனின் கடமை என்ன, இந்த பாடலில் காண்போம்.

பாடல் 5 : வேந்தர்க்குக் கடனே (புறம் 186)
பாடியவர் : மோசிகீரனார்
திணை : பொதுவியல் துறை : பொருண் மொழிக் காஞ்சி
பாடப்பட்டவர் : யாருமில்லை (பொதுவாக பாடியது)
(ஆட்சியாளர்கள் மனதில் ஆழமாக பதிய வேண்டிய பாடல்)

"நெல்லும் உயிர் அன்றே ; நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்தே மலர்தலை உலகம்;
அதனால், யான் உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே"


பொருள் விளக்கம்:
ஒரு நாட்டின் வளத்திற்க்கு உண்ணும் உணவான நெல், அதை விளைவிக்கும் பூமி முக்கியம் இல்லை, நெல்லை விளைவிக்க பயன்படும் நீரும், அது வரும் ஆறும் முக்கியம் இல்லை. அந்த நாட்டின் மன்னனே முக்கியமானவன். அவனை பொறுத்தே நாட்டின் வளமை நிர்ணயம் ஆகிறது. "யதா ராஜா ததா பிரஜா". மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி". அதனால் யானே நாட்டின் உயிர் என்பதை அரச பதவியில் இருப்பவர்கள் உணர்ந்து ஒவ்வொரு காரியங்களையும் மக்கள் நலனுக்கு செய்வது மன்னனின் கடமை.

இப்படி கடமை செய்யும் ஒவ்வொருவரும் விரும்புவது என்ன?
அடுத்த பாடலில் காண்போம்

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by கலைவேந்தன் on Mon Jul 25, 2011 1:59 am

மிகச்சிறந்த பதிவு இது சதா சிவம்.. தொடருங்கள்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by தாமு on Mon Jul 25, 2011 5:27 am

திவுகள் அருமை... தொடருங்கள் நண்பா சூப்பருங்க அருமையிருக்கு

தாமு
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13861
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009
மதிப்பீடு: 381

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum