ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

ஸ்ரீதேவி மறக்க முடியாத பாடலும் காட்சியும்
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

தமிழ் புக்
 Meeran

வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF
 Meeran

விவாக ரத்து ! (கிரேக்கப் பாடல்)
 krishnanramadurai

ஏர்செல் நிறுவனம் திவால்
 krishnanramadurai

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 Dr.S.Soundarapandian

இளமையான குடும்பம்..!
 Dr.S.Soundarapandian

செய்க அன்பினை
 மூர்த்தி

திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த உழைப்பு
 மூர்த்தி

ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
heezulia
 
மூர்த்தி
 

Admins Online

புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Jul 03, 2011 6:07 pm

First topic message reminder :

Nalla Tamil Arivom - purananuru

தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.

தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.

பாடல் 1: அதனினும் உயர்ந்தது
பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பட்டோன் : வல் வில் ஓரி
திணை : பாடாண் துறை : பரிசில்

ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று,
அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமையத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி ; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ! நின்னே


பொருளுரை:

பிச்சை எடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட
இழிவான செயல் பிச்சை இடாமல் இருப்பது
ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட
கொடுப்பதை வேண்டாம் என்று மறுத்தல் உயர்வானது
நுரை பொங்கும் கடல் நீர் மிகப் பெரியதாக இருந்தாலும்
தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால்
பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று நீர் அருந்தி
சேறு நிறைந்த சிறு குளம் ஆனாலும், மனிதர்கள்
தாகத்திற்கு அந்த குளத்து நீரையே அருந்துவர்.
அது போல் மிகப் பெரியவர் பலர் இருந்தாலும்
அவர்கள் கடல் நீரை போன்றவர்கள், எங்களின் துயர் துடைக்க மாட்டார்கள்,
நீ வறுமை அடைந்து வசதி குறைந்து இருந்தாலும்
பலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும் வானத்து மேகம் போல்
அள்ளி அள்ளி எங்களுக்கு வழங்குவாய்,
ஆனால் இன்று நீ வழங்காது இருப்பது எங்கள் குறையே,
நாங்கள் புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள் சரியில்லை,
எங்களின் நேரம் சரியில்லை.
கேட்டவர்க்கு கொடுக்கும் வள்ளல் ஓரியே, நீ நீடோடி வாழ்க


Last edited by சதாசிவம் on Sun May 27, 2012 7:52 am; edited 3 times in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down


Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Fri Aug 05, 2011 5:51 pm

பதவியின் பெருமை

பதவி வந்தால் அனைவரும் ஒரே மாதிரி கையாளுவதில்லை. ஒரு சிலரிடம் சின்ன வேலை கொடுத்தாலும் அதை முடிக்க வெகு சிரமப்படுவர். வேறு சிலரோ பெரிய வேலையையும் மிகச் சுலபமாக கையாளுகின்றனர். நாட்டை ஆளும் பிரதம மந்திரிக்கும் சாதாரண குடிமகனுக்கும் இருப்பது 24 மணி நேரம் தான். ஒருவர் நேரம் இல்லை என்கிறார். மற்றொருவர் சர்வசாதரானமாக அனைத்து வேலைகளையும் சுலபமாக செய்கிறார். இந்த பாடல் கூறுவதை கேளுங்கள்.

பாடல் 10 : அரச பாரம் (புறம் : 75)
பாடியவர்: சோழன் நலங்கிள்ளி
பாடப்பட்டோர் : யாருமில்லை , பொதுவாக பாடியது
திணை : பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு என
குடிவரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே !
மண்டு அமர்ப் பறிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெருகுவன் ஆயின், தாழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல, நன்றும்
நொய்தால் அம்ம தானே மையற்று,
விசும்பு உற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுக்கெழு திருவே"

பொருள் விளக்கம்

பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க, அதற்கு அடுத்து உள்ள இளையோர் பதவி ஏற்க, பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை. அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்தப் பதவிக்கே ஒரு மரியாதை வருகிறது.

ஆண்மை இல்லாத சிறியோன் கைகளில் கிடைத்தால் மக்களின் வரிப்பணத்தை உண்டு வாழும் வாழ்வாகவே அது முடியும். வீரமும் ஆண்மை அற்றவரிடம் அது போயிச் சேர்ந்தால், அது அவர்களுக்கு சுமையாகி விடும்.

போரில் எதிரிகளை தைரியமாக சந்திக்கும் ஆண்மைத் திறன் பெற்றவரிடம் அது போய்ச் சேரும் போது அது பொலிவு பெறுகிறது. முரசு கொண்டு நல்லாச்சி செய்யும் பெருநில மன்னருக்கு அது மிகவும் எளிதானது, குளத்தில் நீர் வற்ற காய்ந்து போன தாமரைக் கிழங்கு, மழை நீர் பெருகி குளத்தை நிறைக்கும் போது தக்கையாக மிதக்கும், அது போல் தக்கையாக அதை கையாளுவர்.

சரி பதவி வந்தால் மட்டும் போதுமா, நம்மை சுற்றி இருப்பவர்கள் நன்றாக இருந்தால் தான் நமக்கு கவலை இல்லாமல் இருக்கும், கவலை இல்லையென்றால் முடி கொட்டாது, முடி நரைக்காது. இப்படி பல ஆண்டுகள் நரைக்காமல் இருந்தவரிடம் அதன் ரகசியத்தை கேட்டால் என்ன சொல்வார்?, அடுத்த பாடலில் காண்போம்.

வளரும்...............
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சரவணன்1 on Thu Aug 11, 2011 9:29 pm

[You must be registered and logged in to see this link.] wrote:

ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று,
அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;


எனது நினைவை விட்டு நீங்காத வரிகள். பாட பகுதியில் மனபாட பகுதி என்று ஒன்று உண்டு. இந்த பாடல் நாங்கள் படிக்கும் பொழுது அவ்வகையில் சேர்க்கப்பட்டு இருந்தது. மறுபடியும் படிக்க வாய்ப்பு குடுத்த சதாசிவம் மற்றும் ஈகரைக்கு எனது நன்றிகள் உரித்தாகுக!
avatar
சரவணன்1
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சரவணன்1 on Fri Aug 12, 2011 11:23 am

[You must be registered and logged in to see this link.] wrote:

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமீன்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்
நல்லாற்றுப் படு உம் நெறியுமார் அதுவேஇத தான், சின்ன வயசுல - எங்கம்மா, அவங்க நடைமுறை வழக்குல - " உபகாரம் செய்ய முடியாயல நாளும் உபத்திரவம் செய்யகூடாது" நு சொல்லுவாங்க! ஒரு நல்ல பாடலை மறுபடியும் படிக்க வாய்ப்பு அளித்த சதாசிவத்துக்கும் ஈகரைக்கும் எனது நன்றிகள்!
avatar
சரவணன்1
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Fri Aug 12, 2011 3:27 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமீன்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்
நல்லாற்றுப் படு உம் நெறியுமார் அதுவேஇத தான், சின்ன வயசுல - எங்கம்மா, அவங்க நடைமுறை வழக்குல - " உபகாரம் செய்ய முடியாயல நாளும் உபத்திரவம் செய்யகூடாது" நு சொல்லுவாங்க! ஒரு நல்ல பாடலை மறுபடியும் படிக்க வாய்ப்பு அளித்த சதாசிவத்துக்கும் ஈகரைக்கும் எனது நன்றிகள்!

நன்றி நன்றி தோழரே

பல நல்ல விஷயங்களை நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கிறோம், ஆனால் விவரம் தெரியாத வயதில். வெறும் மதிப்பெண் நோக்கி தான் நாம் படிக்கும் படிப்பு இருக்கிறது. பல நல்ல விஷயங்கள் நம் முன்னோர் கூறி இருந்தாலும், அது நமக்கு சரியாக சேரவில்லை. இப்படி படித்த சிறந்த பாடல்களையும், பாடப் புத்தகங்களையும் தாண்டி தமிழில் உள்ள மிகச் சிறந்த பாடல்களையும் வெளிக் கொணருவது தான் இந்த தொடரின் நோக்கம்.

கருத்திட்டமைக்கு நன்றி
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Aug 13, 2011 11:04 am

கவலையில்லா வாழ்க்கை

இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில் கவலை இல்லாத மனிதன் இல்லை என்றே சொல்லலாம். ஆசை அதிகம் ஆகும் போது கவலை அதிகம் ஆகுகிறது என்பது வாழ்வியல் உண்மை. இப்படி வாழும் நிலையில் கவலை நம்மால் மட்டுமே வந்து விடுவதில்லை. நம்மை சுற்றிவுள்ளவர்கள் தான் நம்முடைய சுக துக்கங்களை வளர்க்கவும் குறைக்கவும் செய்கின்றனர். கவலை தான் உடல் கோளாறு அனைத்திற்கும் காரணம். இப்படி கவலை இல்லாமல், வாழ்ந்து, வயது ஆகியும் தலைமுடி நரைக்காமல் ஒருவர் இருந்தார், அவரிடம் இப்படி நரைக்காமல் இருந்ததற்கு காரணம் என்ன என்று ஒருவர் கேட்டார், அவர் கூறும் பதில் தான் இந்த பாடல். இன்று நமக்கு என் சீக்கிரம் நரைகிறது என்று இந்த பாடல் மூலம் அறியலாம்.

பாடல் 11
: நரையில ஆகுதல் (புறம் : 191)
பாடியவர்: பிசிராந்தையார்
பாடப்பட்டோர் : யாருமில்லை , பொதுவாக பாடியது
திணை : பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி

யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் ? என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியோடு, மக்களும் நிரம்பினார் ;
யான் கண்டனையர் என் இளையோரும் , வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே"


பொருள் விளக்கம்
பல ஆண்டுகள் வாழ்ந்தும் நரை இல்லாமல் வாழ்வது எங்ஙனம் என்று நீங்கள் கேட்கிறீர்கள், அது என்ன என்று கூறுகிறேன் கேளுங்கள்.

மாண்பான குணம் கொண்ட என் மனைவி, என் மக்களும் கல்வி கற்று அறிவு நிரம்பியவர்கள், என்னிடம் பணி செய்யும் வேலைக்காரர்களும் என் குறிப்பு அறிந்து நான் சொல்லும் முன் வேலை செய்பவர்கள், இந்த நாட்டு அரசனும் கொடுமைகள் செய்யாமல் மக்களுக்கு நன்மைகள் செய்யும் மன்னன், கவலை நீங்க வாழ வைக்கிறான். அதற்கு மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது, நல்லது எது கெட்டது எது என்று அனுபவத்தில் வாழ்ந்து உணர்ந்த (கல்வியால் மட்டும் உணரவில்லை என்பது இங்கு மறை பொருளாக கூறப்படுகிறது) சான்றோர் பலர் உள்ளனர், அவர்கள் மக்கள் தவறு செய்யும் போது அவர்களுக்கு நல்லது எது என்று எடுத்து உரைத்து தவறு மிகா வண்ணம் இந்த நாட்டை காக்கின்றனர். இப்படி நான் கவலைப் பட எந்த காரணமும் இல்லாதது தான் என் இளமைக்கு காரணம்.

சரி இளமையாக வாழ கவலை இல்லாமல் இருப்பது ஒன்று மட்டும் தான் வழியா, ஏதாவது தின்றால் நாம் இளமையாக இருக்க முடியுமா? இப்படி இளமையாக வாழ பழம் ஒன்று கிடைத்தால் நாம் என்ன செய்வோம், அதியமான் என்ன செய்தான் அடுத்த பாடலில் காண்போம்.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Aug 22, 2011 6:15 pm

அதிசய நெல்லிக்கனி

தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்பவர்கள் இந்த உலகில் அருகி வருகின்றனர். இப்படி இருக்கும் ஒரு சிலருக்காகத் தான் மழை பெய்கிறது. முன்பு நீண்ட நாள் தன் அரண்மனையில் தங்கச் செய்து ஔவைக்கு பரிசு ஒன்றும் கொடுக்காமல் காலம் தாழ்த்தினான். எங்கே பரிசு கிடைத்தால் உடனே தன் அரண்மனையை விட்டு சென்று விடுவாள் என்று நினைத்து, பரிசு தராமல் காலம் தாழ்த்தி அவளுடைய தமிழின் சுவையை ரசித்திருந்தான். அப்படி அரண்மனையில் தங்கும் போது அதியமான் வேட்டையாடச் சென்ற மலையில் ஒரு அபூர்வ நெல்லிக்கனி அவனுக்கு கிடைத்தது. அதை தான் உண்டால் இந்த நாடு மட்டும் தான் பலன் பெரும், ஆனால் தமிழுக்கு தொன்று ஆற்றும் ஔவை உண்டால் நன்றாக இருக்கும், அவளால் தமிழும், தமிழால் உலகமும் உய்வு பெரும் என்று எண்ணி இளமையும், நீண்ட ஆயுளையும் தரும் அதிசய நெல்லிக்கனியின் அருமையை கூறி கொடுத்தால் ஔவை உண்ணமாட்டாள் என்று அறிந்து இது ஒரு
சாதாரண கனி என்று கூறி அதை தின்னக் கொடுக்கிறான் அதியமான்.

பாடல் 12 : எமக்கு ஈந்தனையோ! (புறம் : 91)
பாடியவர்: ஔவையார் அதியமான்
பாடப்பட்டோர் : அதியமான்
திணை : தும்பை துறை: வாழ்த்தியல்

வலம்படு வாய் வாள் ஏந்தி, ஒன்னார்
களம் படக் கடந்த கழல் தொடித் தடக்கை,
ஆர் கலி நறவின், அதியர் கோமான்
போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி !
பால் புரை பிறை நூதற் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மண்ணுக - பெரும நீயே ! தொல் நிலைப்
பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீம் கனி குறியாது,
ஆதல் நின் அகத்து அடக்கிச்
சாதல் நீங்க, எமக்கு ஈ
ந்தனையே !

பொருள் விளக்கம்

பகைவரின் பல களங்களை தைரியமாக எதிர்த்து வெற்றி பெற்ற அதியர் கூட்டத் தலைவன் அதியமானே, பால் போல் வெள்ளை நிற பிறையை அணிந்துள்ளவன், விஷம் உண்டு தேவர்களைக் காத்த நீல நிறக் கழுத்தை உடைய சிவபெருமான் போல் நீண்ட ஆயுளுடன் நீ வாழ்வாய். உயரமான மலையின் பிளவுக்கு இடையில் வளர்ந்த சிறிய இலைகளை உடைய அறிய நெல்லிக்கனியை, எனக்கு அதன் பெருமையை சொல்லாமல் தந்தாயே, உன்னை நான் எப்படி புகழ்வேன், இது மதிக்கத்த செயல் ஆகும்.

இப்படி கூறிய பிறகு, அதியமான் ஔவையே, இது உன் தமிழுக்கு செய்யும் மரியாதை என்று கூறினார், ஔவையோ கர்வம் கொள்ளாமல் ஒரு பாடல் பாடினார் ......அந்த பாடலை அடுத்து பார்ப்போம் .........


புறம் வளரும் ..........
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Sep 03, 2011 1:23 pm

ஔவையின் பெருந்தன்மை

சிறு விஷயம் செய்தாலே நாம் பெருமைப்படுகிறோம். ஆனால் பல பாடல்களைத் தந்த ஔவையோ தன் பாடலை குழந்தையின் சொல்லொடு ஒப்பிடுகிறார்.

தமிழுக்கு தொண்டு செய்யும் ஔவையின் சிறப்பை உணர்ந்த அதியமான் கிடைப்பதற்கு அறிய நெல்லிக்கனியை ஔவைக்கு பரிசாக அளித்தான். ஆனால் ஔவை இதற்கு கர்வம் கொள்ளாமல் ஒருவருக்கு தான் குழந்தை கூறும் மழலைச் சொல் புரியாவிட்டாலும் அது கேட்பதற்கு சுவையாக இருப்பது போல், அதியமானே உனக்கு என் மேல் உள்ள அன்பின் காரணமாக நான் பாடும் சாதாரண பாடல் கூட மிக இனிமையாக இருப்பது போல் தோன்றுகிறது என்று தன்னடக்கத்தோடு கூறுகிறார், அந்த பாடல்

பாடல் 13 : யாழொடும் கொள்ளா! (புறம் : 92)
பாடியவர்: ஔவையார் அதியமான்
பாடப்பட்டோர் : அதியமான்
திணை : ..... துறை: இயன்மொழி.

யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள் அறிவாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள் வந்தனவால், புதல்வர்தம் மழலை;
என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
கடி மதில் அரண் பல கடந்த
நெடுமான் அஞ்சி! நீ அருளல்மாறே.


பொருள் விளக்கம்:
மழலைச் சொல், யாழ் போல் இனிமையாக இருப்பதாக கொள்ள முடியாது, பொருள் இருக்காது, காலத்தோடும் பொருந்தி வாராது, ஆனாலும் தந்தைக்கு தன் குழந்தை கூறும் மழலைச் சொல் இனிமையாக இருப்பதாக தோன்றும். அது போல் பல அரண்மனை கோட்டைச் சுவர்களை கடந்த, பல போரில் வென்ற அதியமானே உனக்கு என் மீது உள்ள அன்பின் காரணமாக மழலை மொழி போல் நான் கூறும் சாதாரண சொல்லும் இனிமையாக இருக்கிறது. இதில் என் பெருமை ஏதும் இல்லை.

மழலைச் சொல் இவ்வளவு இன்பம் என்றால், மழலைச் செல்வம் எவ்வளவு இன்பம்? அதை இப்பற்றி கூறும் புறப்பாடலை அடுத்துக் காண்போம்

புறம் வளரும் .......avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by பிஜிராமன் on Sat Sep 03, 2011 3:01 pm

அதனால் தான் அவ்வை காலத்தில் அழியாமல் நிற்கிறார்.... [You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றி ஐயா..அவ்வை புகழ் அறிய செய்தமைக்கு.....


Last edited by பிஜிராமன் on Sat Sep 03, 2011 5:59 pm; edited 1 time in total
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by Guest on Sat Sep 03, 2011 4:51 pm

நல்ல முயற்சி ,பதிவு நன்றிகள் ... சூப்பருங்க

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by கேசவன் on Sat Sep 03, 2011 5:02 pm

ஈகரையில் உருப்படியான பதிவுகளில் இதுவும் ஒன்று
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by kitcha on Sat Sep 03, 2011 5:12 pm

நல்ல பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Sep 07, 2011 10:44 pm

மிகவும் நன்று. நன்றி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Sep 12, 2011 2:03 pm

மழலைச் செல்வம்

நாம் வாழும் வாழ்க்கையில் பல மகிழ்ச்சிகள் உண்டு. இல்வாழ்க்கையில் உள்ளவருக்கு விருந்தோம்பல், நீத்தார் கடன், பெரியோரை பேணுதல், அறம் வளர்தல் என்ற பல கடமைகள் உள்ளது. என்ன தான் நமக்கு அனைத்து செல்வம் இருந்தாலும், மக்கள் செல்வம் தரும் மகிழ்ச்சி வேறு எந்த செல்வத்தினாலும் வருவதில்லை. குழந்தைகள் செய்யும் குறும்பு, விளையாட்டு, மழலைச் சொல் நமக்கு தரும் இன்பத்தைப் போல் வேறு எதுவும் தருவதில்லை. இப்படிப் பட்ட மழலைச் செல்வத்தின் பெருமையை கூறும் அழகான சங்கப் பாடல் இது.

பாடல் 14 : மக்களை இல்லோர் (புறம் : 188)
(மக்கள் பேற்றின் சிறப்பை கூறும் பாடல்)
பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி
பாடப்பட்டோர் : யாரும் இல்லை (பொதுவாக பாடியது)
திணை : பொதுவியல் துறை: பொருண் மொழிக் காஞ்சி

படைப்புப்பலபடைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ்செல்வ ராயினு மிடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகைநீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடையடிசின் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறையில்லைத் தாம்வாழு நாளே.


பொருள் விளக்கம்
உலகத்தில் இது வரை படைக்கப்பெற்ற செல்வம் அனைத்தையும் உடையவர், பலருடன் உண்டு வாழும் மிகப் பெரிய செல்வம் உடையவர் என்ற பெருமை உடையவர் ஆயினும், அவருக்கு மக்கள் செல்வமே சிறந்த செல்வம் ஆகும். குறு குறு என்று நடந்து, சிறிய கைகளை நீட்டி, தொட்டு, தழுவி, வாயால் துழாவி, நெய்யிட்ட சோற்றை உண்டு, சிதறி, ஓடி ,ஆடி, சிரித்து நம்மை மகிழ்ச் செய்யும் மழலைச் செல்வத்தை உடையவருக்கு தான் வாழும் நாளில் பயம் இல்லை. மக்கள் செல்வமே சிறந்த செல்வம் ஆகும்.

"பெருமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற " - திருக்குறள் 61

விளக்கம் :எனக்கு தெரிந்த வரை அறிவார்ந்த பிள்ளைகளைப் பெறுவதை விட சிறந்த செல்வம் ஏதும் இல்லை.


புறம் வளரும் .......
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Sep 19, 2011 3:26 pm

தமிழக குழந்தையின் வீரம்

அகமும் புறமும் தமிழின் இரு கண்கள், இவற்றின் வெளிப்பாடு தான் காதலும், வீரமும். வீரத்தை பறை சாற்றும் புறப்பாடல்கள் நிறைந்தது புறநானூறு. வளரும் குழந்தையும் விளையாட போர்க்களம் செல்கிறது என்று இந்த புறப் பாடல் கூறுகிறது.

பாடல் 15 : கல்லளை போல் வயிறு (புறம் : 86)
(தமிழக குழந்தையின் வீரத்தின் சிறப்பை கூறும் பாடல்)
பாடியவர்: காவற் பெண்டு
பாடப்பட்டோர் : யாரும் இல்லை (பொதுவாக பாடியது)
திணை : வாகை துறை: ஏறான் முல்லை

சிற்றில் நல் தூண் பற்றி, 'நின் மகன்
யாண்டு உளனோ?' என வினவுதி; என் மகன்
யாண்டு உளன்ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!


பொருள் விளக்கம்

உங்கள் வீட்டில் உள்ள சிறிய கல் துணைப் பற்றி அங்கும் இங்கும் விளையாடும் உன் மகன் எங்கே? என்று கேட்கிறாயோ ! புலி வாழும் கல்லால் ஆன குகைப்போல் அந்த வீர மகனைப் பெற்ற வயிறு இதோ இங்கே இருக்கிறது, அவனை காண வேண்டுமா ? போர்க்களத்தில் காணலாம்.

புறம் வளரும் ..........

.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by kitcha on Mon Sep 19, 2011 3:30 pm

எத்தனையோ பதிவுகள் இருந்தாலும் அத்தனை பதிவுகளை விட சிறந்த பதிவு இது,உங்களுக்கும் எனது வாழ்த்துகள்.[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Sep 19, 2011 4:43 pm

[You must be registered and logged in to see this link.] wrote:எத்தனையோ பதிவுகள் இருந்தாலும் அத்தனை பதிவுகளை விட சிறந்த பதிவு இது,உங்களுக்கும் எனது வாழ்த்துகள்.[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

நன்றி தோழரே, நன்றி அன்பு மலர்
ஈகரையில் பதியும் அனைத்து பதிவுகளும் சிறந்தவை தான்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Oct 01, 2011 11:03 am

ஆற்றாமையும் போற்றாமையும் (எண் பேர் அச்சம்)

மழலைச்செல்வம் மகிழ்வானது, மனிதப்பிறவியும் இனிதானது, இப்படி அரிதாக கிடைக்கும் மனிதப்பிறவியில் குறை இல்லாமல் பிறப்பது அரிது. அப்படி குறை இல்லாமல் பிறந்த பிறப்பின் பயன் என்ன என்று இந்த புறப்பாடல் கூறுகிறது.

பாடல் 15: ஆற்றாமையும் பொற்றாமையும்
பாடியவர் : உறையூர் முது கண்ண சாத்தனார்
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி
திணை : பொதுவியல் துறை : முதுமொழிக்காஞ்சி


சிறப்பு இல் சிதடும், உறுப்பு இல் பிண்டமும்,
கூனும், குறளும், ஊமும், செவிடும்,
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல்' என,
முன்னும், அறிந்தோர் கூறினர்; இன்னும்,
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது
வட்ட வரிய செம் பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
கானத்தோர், நின் தெவ்வர்; நீயே,
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து, அகத்தோர்
புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரைப்
பூம் போது சிதைய வீழ்ந்தென, கூத்தர்
ஆடு களம் கடுக்கும் அக நாட்டையே;
அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும், பெரும! நின் செல்வம்;பொருள் விளக்கம்:


மனிதப்பிறவி அரிதானது, அதிலும் குருடு, தசைப்பிண்டம், கூன், குள்ளம், ஊமை, செவிடு, விலங்கு வடிவம், மன வளர்ச்சி இல்லாமல் பிறப்பது ஆகிய எட்டு குறைகள் இல்லாமல் பிறப்பது அரிதானது. இப்படி கூறும் பேதமை நீங்கி பிறக்கும் பிறப்பு தான் உயர் பிறப்பு ஆகும், மற்ற பிறப்புக்கு ஊதியம் இல்லை. இப்படி பிறந்தாலும், அறிவுள்ளவனாக வளர்வது சிறந்தது என்று பல விஷயங்களை முழுவதும் அறிந்த சான்றோர் உரைத்தனர்.

இப்படி உள்ள மனிதப்பிறவியின் சிறப்பாக நான் கூறுவது, உன் பகை நாட்டினர் சேவல் கூவி எழுப்பும் வளம் இல்லாத திணை நிலத்தை உடையவர்கள். வீட்டு வேலிக்கு வெளியே நின்று ஒருவர் கேட்டால், கை எட்டும் தூரத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில், கரும்பை பிய்த்து கொடுக்கும் வளம் மிக்க வயல்களும், கரும்பை புடுங்குவதால் சிதைவு தாமரை நிறைந்த தடாகமும் உடையது உன் நாடு , இது கூத்தர் ஆடும் ஆட்டத்தில் உள்ள செந்நிறம் போல் இருக்கிறது. நல்ல வளமை மிக்க மக்களும் உன் நாட்டில் நிறைந்துள்ளனர்.

அறம் செய்து மேன்மை அடைய உன் நாட்டில் வளம் இருக்கிறது, உன்னிடம் நல்ல குணம் இருக்கிறது, ஆதலால் உன் செல்வத்தைக் கொண்டு அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பேறுகளை படைத்துக்கொள். இவற்றை அடைய முடியாவிட்டால் நீ பெற்ற செல்வம் வீணாகிவிடும்...இதை நீ ஆற்றாவிட்டால் அது உன்னை போற்றாமை ஆகிவிடும்.

புறம் தொடரும் ......

avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Oct 16, 2011 8:02 am

குழந்தைகளின் வியப்பான குணம்

ஒவ்வொருவரும் அவர்கள் குழந்தை செய்யும் குறும்புகளை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்வர். குழந்தைகள் வளரும் போது அவர்களின் குறும்புகள் தானாகவே குறைந்து விடும். இப்படி குறும்பு செய்து அடம் பிடிக்கும் குழந்தையை கட்டுப்படுத்த தாய் பல் வேறு உபாயங்களை செய்கிறாள். கோகுல கண்ணனின் குறும்பை அடக்க அவனை உரலில் கட்டி வைத்த கதை அனைவருக்கும் தெரியும். இப்படி குறும்பை அடக்க நாம் சிறு பயம் காட்டினாலும் குழந்தை நம் சொல்லுக்கு கட்டுப்படுகிறது,, ஆனால் இப்படி நமக்கு கட்டுப்பட்ட, சிறு விஷயதிற்கும் பயம் கொண்ட குழந்தை வளர்ந்தவுடன் நம்மை பயம் கொள்ளச் செய்கிறது. இப்படி ஆச்சரியமான மாற்றம் குழந்தைகளிடம் (மனிதர்களிடம்) ஏற்படுகிறது. இப்படி தன் குழந்தையின் மாற்றத்தைக் கண்ட, தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒரு தாய் பாடும் அழகான பாடல் இது.

பாடல் 16: உரவோர் மகனே (புறம் : 310)
பாடியவர்: பொன்முடியார்
பாடப்பட்டோர் : யாரும் இல்லை (பொதுவாக பாடியது)
திணை: தும்பை துறை : நூழிலாட்டு

பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியடு,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே,
உன்னிலன் என்னும், புண்ஒன்று அம்பு_
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே
.

பொருள் விளக்கம்:

என் மகன் சிறுவன், அவன் குடிக்க கிண்ணத்தில் பால் ஊற்றி கொடுப்பேன், அவனோ அதை குடிக்காமல் குறும்பு செய்வான், அவன் பால் குடிக்க அவனை பயமுறுத்த ஒரு சிறு குச்சியை எடுத்து அவனை அடிப்பது போல் மிரட்டுவேன், அப்படி ஒரு சிறு குச்சிக்கு பயந்து பால் குடிப்பான் . ஆனால் அந்த சிறுவன் இன்று போற்களம் செல்கிறான், பெரிய புகைப் போல் கரிய யானையை எதிர்த்து வேலை எறிந்து அதை விழ்த்தினான். தன் மார்பில் பட்ட அம்பு கூட அவனுக்கு தெரியவில்லை, தோளில் சாய்ந்து விழுப்புண் பட்டு கிடக்கிறான்.

என்ன ஆச்சரியம்!!!!!!!!, சிறிய குச்சிக்கு பயந்த என் மகனா இவன் ? நினைத்து பார்த்தால் வியப்பாக இருக்கிறது , பெருமையாக இருக்கிறது. மறக்குடியில் பிறந்த மகன், அவன் செயல் வியப்புக்குரியது.


புறம் வளரும் ......

avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by Aathira on Sun Oct 16, 2011 8:46 am

நம் பண்டைத்தமிழிரின் குருதியில் ஊறிய வீரத்தைக் கண்டு வியக்கும் நற்றாயின் குரலை அப்படியே உங்கள் எழுத்தில் கேட்டேன். இனிமையான எழுத்துப் பதிவு.

இந்த திரி ஈகரையில் சிறப்பான திருமுடியில் அமைந்த ஒப்பில்லா வைரக்கல். தொடங்கியமைக்கும் வெற்றிகரமாகத் தொடர்வதற்கும் வாழ்த்துகள் சதா ஐயா. அருமையிருக்கு


[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by Aathira on Sun Oct 16, 2011 9:02 am

இப்போது எல்லா பாடல்களையும் படித்தேன். புறநானுற்றுக் கடலில் சதாசிவம் ஐயா மூழ்கி எடுத்துப் பதிந்த முத்துப்பதிவுகள் அததனையும். எம் தமிழரின் வாழ்விய்ல் பெருமைகளை ஈகரை உறவுகளுக்கு அறிமுகப்படுத்தும் அழகிய பதிவுக்கு மிக்க நன்றி ஐயா. நன்றி அன்பு மலர்
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Oct 17, 2011 4:06 pm

[You must be registered and logged in to see this link.] wrote:இப்போது எல்லா பாடல்களையும் படித்தேன். புறநானுற்றுக் கடலில் சதாசிவம் ஐயா மூழ்கி எடுத்துப் பதிந்த முத்துப்பதிவுகள் அததனையும். எம் தமிழரின் வாழ்விய்ல் பெருமைகளை ஈகரை உறவுகளுக்கு அறிமுகப்படுத்தும் அழகிய பதிவுக்கு மிக்க நன்றி ஐயா. நன்றி அன்பு மலர்

புறநானூறும், குறுந்தொகையும் ஒவ்வொரு தமிழனும், குறிப்பாக கவிதை எழுதுபவர்கள் படித்து அறிய வேண்டும் என்பது என் அவா.

உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.......

நன்றி அன்பு மலர்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by rameshnaga on Mon Oct 17, 2011 9:19 pm

pagirvukku nanri sadhaasivam saar.
avatar
rameshnaga
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3311
மதிப்பீடுகள் : 527

View user profile http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Oct 29, 2011 12:57 pm

[You must be registered and logged in to see this link.] wrote:pagirvukku nanri sadhaasivam saar.

நன்றி
நன்றி
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Oct 29, 2011 2:03 pm

தமிழனின் வீரமும் மானமும்

"மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்" என்று நாம் படித்ததுண்டு, தமிழர்களிடம் பணம், பொருள், பதவியை விட மானம் பெரிதான விஷயமாக கருதப்படுகிறது, தவறு செய்து விட்டு அடுத்தவர் முன் நாணி நிற்கும் சூழல் நேரா வண்ணம், நம்முடைய குணங்கள் இருக்க வேண்டும் என்று வள்ளுவம் உரைக்கிறது. எதிரியிடம் உயிர்ப்பிச்சை கேட்காமல் வீரத்தோடு சண்டையிட்டு வீரமரணம் அடையும் போக்கு தமிழக வீரனிடம் இருந்தது. புறமுதுகு காட்டி மரணம் அடைவது இழுக்காக கருதப்பட்டது.

சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கண்ணோடு போர் புரிந்து குடவாயில் கேட்டை சிறையில் சிறைப்பட்டு இருக்கும் நிலையில் தண்ணீர் தா என்று இரந்து கேட்டுப் பெறாமல் தவிக்கும் நிலையில் எழுந்த பாடல் இது, பகைவனிடம் போரிடும் வீரமும், தன்னிலை இழக்காத தன்மானமும் நிறைந்தது தமிழனின் வாழ்க்கை என்று இந்த பாடல் மூலம் அறியலாம். குழந்தை இறந்து பிறந்தாலும், வெறும் சதைப்பிண்டம் பிறந்தாலும் அதன் உடலில் வாளால் கீறி வீர மரணம் அடைந்ததாக கருதி புதைக்கும் பழக்கம் இருந்ததையும் இந்த பாடல் மூலம் அறிய முடிகிறது.

பாடல் 17: குழவி இறப்பினும் (புறம் 74)
பாடியவர் : சேரமான் கணைக்கால் இரும்பொறை
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.


குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்;
தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணிய,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ, இவ் உலகத்தானே?


பொருள் விளக்கம்:

குழந்தை இறந்து பிறந்தாலும், வெறும் சதைப்பிண்டம் பிறப்பினும், வயது முதிர்ந்து நோயால் இறந்தாலும் அப்படியே புதைத்தால் வீரம் இல்லை, ஆண்மைக்கு அழகில்லை என்று கருதி அந்த இறந்த உடலை வாளால் கீறி புதைப்பது மறவர் குல வழக்கம். பசி தனிய நாயின் கீழ் நடத்தும் கேளிர் அல்லாத இந்த பகைவரிடம் தண்ணீர் தா என்று கேட்டுப் பெரும் இழிவு நிலை நேர்ந்தது. இது சரியில்லை. இந்த இழிவு நிலை உள்ளவரை உலகம் ஏற்காது.


புறம் தொடரும் .....


avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Nov 12, 2011 2:17 pm

தமிழனின் வீரம்

குழந்தை இறந்து பிறந்தாலும் வாளால் கீறி புதைக்கும் வீரம் விளைந்த பூமி இந்த தமிழ் பூமி. பகைவரை கண்டு அஞ்சாத, புறமுதுகு காட்டாத வீரம் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு உண்டு. அப்படி உள்ள ஒரு தமிழக வீரனின் வீரத்தை புலப்படுத்தும் பாடல் இது.

பாடல் 18 : பெயர் புற நகுமே (புறம் பாடல் எண் : 284)
பாடியவர் : ஓரம் போகியார்
திணை : தும்பை துறை : பண்பாட்டு

'வருகதில் வல்லே; வருகதில் வல்' என,
வேந்து விடு விழுத் தூது ஆங்கு ஆங்கு இசைப்ப,
நூலரி மாலை சூடி, காலின்,
தமியன் வந்த மூதிலாளன்
அருஞ் சமம் தாங்கி, முன் நின்று எறிந்த
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறையாகத்
திரிந்த வாய் வாள் திருத்தா,
தனக்கு இரிந்தானைப் பெயர் புறம் நகுமே.


பொருள் விளக்கம்

திறமையான வல்லமை பொருந்தியவனே வீரனே வருக வருக என்று தூதுவர்கள் உன்னை போருக்கு அழைப்பார்கள். நூலால் கட்டிய மாலையை கழுத்தில் சூடி, காலால் நடந்து போருக்கு செல்கிறான் வீரம் விளைந்த மூத்த குடியில் பிறந்த வீரன்.

தன்னை எதிர்க்க வரும் யானையை வேல் கொண்டு தாக்கி வீழ்த்துகிறான். யானையை வீழ்த்தியதால் வேல் வளைந்து விட்டது. வளைந்த வேலை யானையின் உடம்பில் வைத்து நிமிர்த்துகிறான். மறுபடி வேலைக் கையில் ஏந்தி தாங்க தோற்றவன் நோக்கிப் பாய அவன் புறமுதுகு இட்டு ஓடுகிறான். அஞ்சி ஓடும் அவனைப் பார்த்து நகைக்கும் இவனின் வீரம் பாராட்டுக்குரியது.

தமிழக ஆணின் வீரம் இப்படி என்றால், பெண்கள் எப்படி இருப்பார்கள், அடுத்த பாடலில் தமீழக பெண்ணின் வீரத்தைக் இதைக் காண்போம்.

புறம் வளரும்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum