ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Jul 03, 2011 6:07 pm

First topic message reminder :

Nalla Tamil Arivom - purananuru

தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.

தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.

பாடல் 1: அதனினும் உயர்ந்தது
பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பட்டோன் : வல் வில் ஓரி
திணை : பாடாண் துறை : பரிசில்

ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று,
அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமையத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி ; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ! நின்னே


பொருளுரை:

பிச்சை எடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட
இழிவான செயல் பிச்சை இடாமல் இருப்பது
ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட
கொடுப்பதை வேண்டாம் என்று மறுத்தல் உயர்வானது
நுரை பொங்கும் கடல் நீர் மிகப் பெரியதாக இருந்தாலும்
தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால்
பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று நீர் அருந்தி
சேறு நிறைந்த சிறு குளம் ஆனாலும், மனிதர்கள்
தாகத்திற்கு அந்த குளத்து நீரையே அருந்துவர்.
அது போல் மிகப் பெரியவர் பலர் இருந்தாலும்
அவர்கள் கடல் நீரை போன்றவர்கள், எங்களின் துயர் துடைக்க மாட்டார்கள்,
நீ வறுமை அடைந்து வசதி குறைந்து இருந்தாலும்
பலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும் வானத்து மேகம் போல்
அள்ளி அள்ளி எங்களுக்கு வழங்குவாய்,
ஆனால் இன்று நீ வழங்காது இருப்பது எங்கள் குறையே,
நாங்கள் புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள் சரியில்லை,
எங்களின் நேரம் சரியில்லை.
கேட்டவர்க்கு கொடுக்கும் வள்ளல் ஓரியே, நீ நீடோடி வாழ்க


Last edited by சதாசிவம் on Sun May 27, 2012 7:52 am; edited 3 times in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down


Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Mar 26, 2012 3:58 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நல்ல தமிழ் அறிவோம் - இலக்கியம் அறிதல் மிகப் பெரிய மானுட செயலாக இப்போது இருக்கிறது. தங்களின் தமிழ்ப் பணி மாந்தர்தம் தமிழறிவு தாகப் பிணிக்கு மருந்தாக அமைந்துள்ளது.

இயல்பாய் கவிதைகள் நவீனம், புதுக்கவிதை மற்றும் ஹைக்கூ என எழுதும் எனக்கு இந்த இலக்கியங்களைப் புரட்டும் போது வாழ்நாள் இன்னும் நீடித்திருக்க வேண்டும் என இறைவனை இறைஞ்சுகிறேன். அத்துணை இலக்கியங்களையும் இந்த வாழ்வு முடிவத்ர்க்குள் படித்தாகவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

மிக்க நன்றி ஐயா,
தமிழில் அற்புதமான நூல்கள் பல உள்ளன, இன்றைய தலைமுறைக்கு இவற்றை எடுத்துச் சொல்வது நம் கடமை. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை, கல்வி கரையில, கற்பவர் நாள் சில, மெல்ல நினைக்கின் பிணி பல என்ற நாலடியார் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Mar 26, 2012 4:00 pm

[You must be registered and logged in to see this link.] wrote:சூடாத முல்லையைப் பாடி ஒல்லையின் போர்க்கு முற்றுப் புள்ளி வைக்க எண்ணிய போர்நிறுத்தப் பாடல் அருமை. இதே போல ஒளைவையார் தூது சென்ற பாடல் இரண்டு உள்ளன புறநானூற்றில். பொதுவாக காதலும் வீரமும் மட்டுமே சங்க காலம். அதில் புலவர்கள் மன்னனின் வீரத்தைப் பாடிப் பாடி உசுப்பேற்றி விடுவார்கள் எனறு பரவலாக நிலவி வரும் கருத்துக்குப் புரனானது இப்பாடல்கள்.

அழகிய தேவையான பதிவுக்கு நன்றி சதாசிவம். நன்றி

நன்றி ஆதிரா,
அகமும் புறமும் தமிழின் இரு கண்கள், இந்த கண்ணில் கனிந்த கவிதைகளை மேலும் கற்போம்.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Mar 26, 2012 4:01 pm

[You must be registered and logged in to see this link.] wrote:உண்மையாகவே அருமையான பதிவு. மகிழ்ச்சி

நன்றி
நன்றி
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Mar 31, 2012 6:19 pm

வளவன் ஏறா வான ஊர்தி

போரில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடுவது மட்டும் ஒரு மன்னனின் வாழ்க்கை இல்லை. அதைத் தாண்டி அறம், வேள்வி, மக்கள் நலப்பணி என்று பல கடமைகள் உள்ளது. இப்படி உள்ள கடமைகள் செய்து புகழ் பட வாழ்ந்தவர்களே சிறந்த மன்னன், பலர் பிறக்கிறார்கள் பலர் இறக்கிறார்கள், ஆனால் புகழ் பட வாழ்ந்தவர் ஒரு சிலரே, அவருக்கு தான் சொர்க்கம் புக வானத்தில் இருந்து வான ஊர்தி வரும் என்று இந்தப் புறப் பாடல் புகல்கிறது.

பாடல் 26: புலவர் பாடும் புகழ் (பாடல் 27)
பாடியவர் : உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி
திணை:
பொதுவியல் துறை : முதுமொழிக் காஞ்சி

சேற்றுவளர் தாமரை பயந்த வொண்கேழ்
நூற்றித ழலரி னிரைகண் டன்ன
வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை யெண்ணுங் காலை
உரையும் பாட்டு முடையோர் சிலரே
மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவ னேவா வான வூர்தி
எய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக்
கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி
தேய்த லுண்மையும் பெருக லுண்மையும்
மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும்
அறியா தோரையு மறியக் காட்டித்
திங்கட் புத்தே டிரிதரு முலகத்து
வல்லா ராயினும் வல்லுந ராயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை யாகுமதி யருளிலர்
கொடாமை வல்ல ராகுக


பொருள் விளக்கம்

சேற்றில் பிறந்த நூறு இதழ் கொண்ட தாமரையை ஒத்து இருக்கும் நூற்றுக்கணக்கான மன்னர்களில் பெரியவர், சிறியவர், வேண்டியவர், வேண்டாதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று வேற்றுமைப் பார்க்காமல் பசுவுக்கும் நீதியளித்த மனுநீதி சோழன் போல் அனைவரையும் ஒரே பார்வையில் பார்க்கும் சிறந்த சோழ குடியில் பிறந்தவன் நீ. அப்படிச் சிறந்த சோழ குடியில் பிறந்து அரச வாகை சூடியவர்களை நினைக்கையில் புகழும், புலவர்களால் பாடல் பெற்றவர்கள் ஒரு சிலரே, தாமரையின் இலை போல் எதற்கும் பயன் படாமல் வீணாகக் சென்றவர் பலர்.

அறம், ஈகை, வேள்வி செய்து மக்களால் போற்றப்பட்டு புலவர்களால் பா மாலை சூடிய புகழ் உடைய மன்னர்கள் செய்வினை முடிந்து இறக்கும் தருவாயில் அவர்களை சொர்கத்துக்கு வானத்தில் இருந்து வரும் வளவன் இல்லா (ஓட்டுனர் இல்லா) வான ஊர்தி வந்து அழைத்து செல்லும் என்று அறிவுடைய பெரியவர்கள் கூறக் கேட்டுள்ளேன் . மக்களுக்கு தந்தை போல் இருக்கும் என் தந்தையே, சேட்சென்னி நலங்கிள்ளி. வளம் பெற்றவன் குறைந்து போதலும், குறைவாக இருப்பவன் வளம் பெறுதலும், பிறந்தவன் இறப்பதும், இறந்து போன உயிர் மீண்டும் பிறந்து வருதலும் உண்மை. இதை கல்வி கற்றும் உணராதவரையும் உணரச் செய்து, நிலவை தலையில் ஏந்தி இருப்பவன் காக்கும் இந்த உலகத்தில் வசதி படைத்தவர் ஆயினும், வசதி குறைந்தவர் ஆயினும் உன்னை நம்பி முகம் வாடி வந்தவருக்கு அருளும் வள்ளல் நீ. இதற்கு மாறாக உன் குணத்துக்கு மாறுபட்டு உனக்கு எதிரினறாய் இரப்பவருக்கு கொடுக்காமல், ஈத்துவக்கும் இன்பத்தை உணராது இருப்பவர் கொடாமல் இருக்கும் கெட்டவர்களில் வல்லவர் ஆகுக. நீ கொடுத்து உதவும் நல்லவர்களில் வல்லவன் ஆவாய்.

பாடலில் சிறப்பு

வான ஊர்தி கண்டு பிடிக்கா காலத்துக்கு முன் காலத்திலே தமிழன் வளவன் ஏறாத வான ஊர்தியைப் பற்றி பாடி இருக்கிறான். தமிழனின் அறிவு, அளவு கடந்த கற்பனை இதில் விளங்குகிறது. ஒரு சில நூற்றாண்டுக்கு முன்னர் ஆகாய விமானம் கண்டு பிடிப்பதற்கு முன்னர் அதை கற்பனையில் வரைந்த ஐரோப்பிய ஓவியரை வியந்து பார்க்கும் நம் தமிழக இளசுகள் பல நூற்றாண்டுக்கு முன்னர் பைலட் இல்லாது தானாக இயங்கும் விமானத்தை பாடிய தமிழரின் கற்பனையை, அறிவியல் அறிவை வியந்து பார்க்க வேண்டும். புகழ் பெற்ற குடியில் பிறந்தாலும் மக்களுக்கு நன்மை செய்து வாழ்பவனே சிறந்த மன்னன், அவனுக்கே சொர்க்கத்தின் வாசல் திறந்து இருக்கும் என்றும் இந்தப் பாடல் கூறுகிறது.

புறம் வளரும்


Last edited by சதாசிவம் on Sun Apr 01, 2012 10:51 am; edited 1 time in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by அதி on Sat Mar 31, 2012 8:57 pm

கடைசி பாடலுக்கான விளக்கம் மிக அருமை அருமையிருக்கு
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Apr 01, 2012 10:52 am

[You must be registered and logged in to see this link.] wrote:கடைசி பாடலுக்கான விளக்கம் மிக அருமை அருமையிருக்கு

நன்றி அதி....படித்து பாராட்டிய உங்கள் மதிக்கு நன்றி
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Apr 07, 2012 11:43 am

ஈடு செய்யா முடியா இழப்பு

வாழ்க்கையில் ஒவ்வொரு தருணமும் வித்தியாசமானது. ஒரு நேரம் மகிழ்ச்சி, ஒரு நேரம் துக்கம் என்று மாறி மாறி வருகிறது. நண்பர்களுடன் ஊர் சுற்றல், உறவுகளுடன் உரையாடல், உடன் வேலை பார்பபவருடன் அரட்டை என்று மகிழ்ச்சியின் ஒரு புறம் இருந்தாலும், நெருங்கியவரின் துன்பம், மருத்துவச் செய்தி நம்மை வலிக்கச் செய்கிறது. இயல்பில் இருந்து மாறச் செய்கிறது. இப்படி துன்பம் விளைவிக்கும் விஷயங்களில் உறவுகளின் மரணம் கொடுமையானது. மரணம் நிதர்சனம், தவிர்க்க முடியாது என்று தெரிந்து இருந்தாலும், நம் உறவுகளின் மரணத்தை நம்மால் ஏற்க முடியவில்லை.

இப்படி நெருக்கமாகப் பழகிய ஒருவரை இழந்து வருந்திப் பாடிய புறப் பாடல் இது.

கோப்பொருஞ்சோழனும் , பொத்தியாரும் சிறந்த நண்பர்கள். பிசிராந்தையாரும் சோழனுக்குச் சிறந்த நண்பர் ஆவார். இவர்கள் இருவரும் சந்தித்ததில்லை. சந்திக்காமலே நெருக்கமான நட்பு உடையவர்கள். ஆனால் பொத்தியாரும் சோழனும் நெருங்கிப் பழகியவர்கள். இவர்கள் இருவரையும் இணைத்து தான் பேச்சு வழங்கப்பட்டது. சோழன் வடக்கிருந்து உயிர் துறக்கும் வேலை வந்தது. காவிரி ஆறில் நடுவில் இருக்கும் ஒரு மண்மேட்டில் வடக்கிருக்கிறான். பொத்தியாரும் அவருடன் வடக்கிருந்து உயிர் துறக்க வருகிறார். ஆனால் பொத்தியார் மனைவி கருவுற்றிருப்பதால் குழந்தை பிறக்கும் வரை நீ வடக்கிருக்க முடியாது என்று கூறி பொத்தியாரை சோழன் விளக்கி விடுகிறார். தன் ஊரான உறையூருக்குச் சென்று திரும்பி சோழன் இல்லாத மூதூரின் நிலையைப் பார்த்து பொத்தியார் வருந்தி அழுதுப் பாடியப் பாடல் இது. ஒவ்வொரு மரணத்திலும் நினைவுக்கு வரும் பாடல் இது.

பாடல் 27: பெருஞ்சோறு பயந்த யானை (புறம் 220)
பாடியவர் : பொத்தியார்
பாடப்பட்டோன் : கோப்பொருஞ் சோழன்
திணை : பொதுவியல் துறை : கையறு நிலை

பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
பெருங்களி றிழந்த பைதற் பாகன்
அதுசேர்ந் தல்கிய வழுங்க லாலை
வெளில்பா ழாகக் கண்டுகலுழ்ந் தாங்குக்
கலங்கினே னல்லனோ யானே பொலந்தார்த்
தேர்வண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே.


பொருள் விளக்கம்

பொன்னால் ஆன மாலையை உடைய வன்மையான தேர் உடைய கிள்ளியே, நீ இல்லாமல் இருக்கும் புகழுடைய மூதூர் மன்றம் காணும் போது......நன்கு உணவு உண்டு, பல ஆண்டு காலம் உடன் வாழ்ந்த அழகான மிகப் பெரிய யானையை இழந்து துன்பப்படும் பாகன், அது தினமும் இருந்து விளையாடிய, உண்டு ,உறங்கிய இடத்தைப் பார்த்து, அது கட்டப்பட்டு கிடந்த கம்பம் ஒருவரும் இல்லாமல் வெற்றாக இருக்கும் நிலையைப் பார்த்து வருந்துவது போல் உன்னுடன் உயிர் இழக்கும் பாக்கியம் கிடைக்காமல் என்னை வருந்தச் செய்து விட்டாய். ஆடலும் பாடலும் கேளிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்த மூதூர் மன்றத்தின் அழகை யான் எங்குக் காண்பேன் !!!! உன் இழப்பை எது ஈடு செய்ய இயலும்.

பாடலின் சிறப்பு

பண்டைய நாட்களில் தமிழ் போர்ப் படையில் யானைகள் முக்கியப் பங்கு வகித்தது. ஏன் உலகிலேயே யானையை வைத்து போரிட்ட பெருமை இந்தியர்களுக்கு மட்டும் தான் உண்டு. உலகை வென்ற மாவீரன் அலக்சாந்தரும் இந்திய மன்னன் போரசின் யானைப் படையை கண்டு நடுங்கினான் என்றால் இதன் பலத்தை சொல்லி மிகையாகாது. இப்படி இருக்கும் யானைக்கு தீனிப் போட தனியாக பெரிய வயல் வெளிகள் வகுத்து அதில் இருந்து வரும் உணவுகளை யானைக் வழங்குவது மரபு , இவ்வயல்களுக்கு யானை மானியம் என்று பெயர். யானையை அடைத்து வைக்க பெரிய இடம் தேவைப்படுகிறது. இப்படி நாள்தோறும் உணவு எடுத்து, யானைக்கு வழங்கிய பாகன் அந்த யானையை இழந்து இருக்கும் நிலை தான் உறவுகளை இழந்து இருப்பவன் நிலை. யானை ஆளுமை செய்த இடத்தை நிரப்ப முடியாது. மிகப்பெரிய உருவம் இருக்கும் போது, யானை கொட்டகை முழுவதும் நிறைந்து இருக்கும். அது இல்லாமல் இருக்கும் போது தான், அந்த இடம் எவ்வளவு பெரிய வெற்றிடம் என்று கண்களுக்கு காட்சி அளிக்கும். நண்பனின் இழப்பு இப்படித் தான். இருக்கும் வரை பெரிதாகத் தெரிவதில்லை, இழந்த போது அதை நிரப்ப ஒன்றாலும் இயல முடிவதில்லை.

புறம் வளரும்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Apr 21, 2012 8:54 pm

ஒழிக கூற்றம்

நமக்கு வேண்டப்பட்டவர்கள் இறக்கும் போது நமக்கு துன்பமும், இவருக்கு இந்த நிலை வந்துவிட்டதே என்று ஆற்றாமையும், தெய்வத்தின் மேல் கோபமும் வருகிறது. இப்படி ஒரு நிலையில் எழுந்த பாடல் இது. தன் முன் இறந்த சோழனின் நடுகல்லைப் பார்த்து பொத்தியார் வருந்திப் பாடிய பாடல் இது. நல்லவரைத் தான் மரணம் சீக்கிரம் அழைத்து விடுகிறது, நல்லவர் என்றும் பாராமல் சோழனை அழைத்துக் கொண்ட எம தர்மனை நாம் எல்லாரும் ஒன்று கூடி சபிப்போம், அவன் இது போல் ஒரு தவறை செய்யக் கூடாது என்று பாடும் புலவர்களை அழைக்கும் பாணியில் பாடப்பட்ட பாடல் இது.

பாடல் 28 : வைகம் வாரீர் (எண் : 221)
பாடியவர் : பொத்தியார்
பாடப்பட்டோன் : கோப்பொருஞ் சோழன்
திணை: பொதுவியல் துறை : கையறுநிலை

பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே
ஆடுநர்க் கீத்த பேரன் பினனே
அறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே
திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே
மகளிர் சாயன் மைந்தர்க்கு மைந்து
துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கில்
அனைய னென்னா தத்தக் கோனை
நினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று
பைத லொக்கற் றழீஇ யதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை யுலக மரந்தை தூங்கக்
கெடுவி னல்லிசை சூடி
நடுக லாயினன் புரவல னெனவே


பொருள் விளக்கம்

பாடும் புலவர்களுக்கு மனமுவந்து அள்ளிக்கொடுக்கும் வள்ளல் என்ற புகழை உடையவனை, ஆடும் களைஞர்களுக்கு மகிழ்ந்து கொடுக்கும் அன்பு நிறைந்தவனை, அறம் நிறைந்தவர்கள் புகழும் சிறப்புடன் செங்கோல் ஆட்சி செய்யும் மன்னன் என்று பேர் எடுத்தவனை, சான்றோர் பலருக்கு நண்பனாக இருந்தவனை, பெண்களிடத்தில் மென்மையாக நடந்து கொண்டவனை, எதிரிகளிடம் கடுமையாக நடந்து கொண்டவனை, குற்றம் இல்லாத வேள்வி செய்யும் அந்தணர்களுக்கு புகலிடமாக இருந்தவனை இன்று மரணம் தழுவிக் கொண்டது. இத்தகைய சிறப்புடன் வாழ்ந்த நல்லவன் என்றும் பாராமல் தர்ம தேவன் அழைத்துச் சென்றான். சொன்ன சொல் பலிக்கும் பொய்யா மொழி உடைய புலவர்களே, வாருங்கள் அந்த கொடிய தர்ம தேவனை வையலாம், கெடுக அவன் ஆயுள். நீண்டு அகண்டு இருக்கும் இந்த உலகம், துன்பமில்லா புகழ் மாலை சூடி இன்று நடு கல் ஆனான் என் அருமை நண்பன் கோப்பெருஞ் சோழன்.


புறம் வளரும்


Last edited by சதாசிவம் on Sun Apr 22, 2012 2:21 pm; edited 1 time in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Sat Apr 21, 2012 9:50 pm

பாண்டிய மன்னன் மரணம் தழுவிய நிலை அவனது ஆராயாமல் எடுத்த முடிவின் விளைவு. நல்லரசன் நலம் தப்பிய செய்தி மனிதவள மேம்பாட்டுக்கு இங்கு ஊறு விளைவிக்கவில்லை. என்னிலையிலும் தன்னிலை மாறா மன்னனின் நிலைப்பாடு மனிதநேயத்தை வளர்க்கும் என சிலம்பின் வழி அறிகிறோம். தங்களின் இலக்கிய பணி எமக்கு நல்லதொரு சிந்தனையை தருகிறது. நன்றி சதாசிவம் அவர்களே.
avatar
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3794
மதிப்பீடுகள் : 578

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Apr 22, 2012 2:25 pm

[You must be registered and logged in to see this link.] wrote:பாண்டிய மன்னன் மரணம் தழுவிய நிலை அவனது ஆராயாமல் எடுத்த முடிவின் விளைவு. நல்லரசன் நலம் தப்பிய செய்தி மனிதவள மேம்பாட்டுக்கு இங்கு ஊறு விளைவிக்கவில்லை. என்னிலையிலும் தன்னிலை மாறா மன்னனின் நிலைப்பாடு மனிதநேயத்தை வளர்க்கும் என சிலம்பின் வழி அறிகிறோம். தங்களின் இலக்கிய பணி எமக்கு நல்லதொரு சிந்தனையை தருகிறது. நன்றி சதாசிவம் அவர்களே.தமிழ்த் தாயின் பாதங்களை அலங்கரிப்பது சிலம்பு, ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும், ஆதலால் எப்போதும் நன்மை செய்ய வேண்டும் என்று உலகுக்கு உணர்த்தும் அற்புத நூல் சிலம்பு.

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா, :நல்வரவு:
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Apr 29, 2012 6:22 pm

ஆற்றுமணலும் வாழ்நாளும்

தமிழன் அனைத்து தரப்பிலும் மென்மையானவனாகவும், மேன்மையானவனாகவும் நடந்து கொண்டு இருந்தான். போர் செய்யும் முன் யார் யாரை தும்பம் செய்யக்கூடாது, எவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கொள்கை வகுத்திருந்தான். சூறையாடல், பெண்களை கவர்திழுத்தல், அனைவரையும் கொல்லுதல் போன்ற இழிச் செயல்களை செய்யவில்லை. பல்லோர் வாழ பல யாகங்கள் செய்து , தெய்வ விழாக்கள் எடுத்து அனைவரும் இன்புற வாழ்வு நடத்தினான். இப்படி ஒரு சிறப்பை கூறும் அழகான புறப்பாடல் இது. இப்பாடலில் பாடப்பட்ட பாண்டிய மன்னன் பல யாகங்கள் செய்து பல் யாகக் குடுமி என்று பெயர் பெற்றவன்.

பாடல் 29: ஆற்றுமணலும் வாழ்நாளும்
பாடியவர் : நெட்டிமையார்
பாடப்பட்டோன் : பாண்டியன் பல் யாகச்சாலை முதுக்குடுமிப் பெருவழுதி
திணை : பாடாண் துறை : இயன்மொழி

ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவி னெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே
.

பொருள் விளக்கம்

பசுக்களும், பேசு போன்று மென்மையான அந்தணர்களும், பெண்களும், பிணியால் அவதிப் படுவோரும், இறந்து தென்திசையில் இருக்கும் தர்ம லோகத்தில் வாழும் தங்கள் மூத்தோராயாகிய பித்ருகளுக்கு திதி செய்ய ஆண் பிள்ளை பெறாதவரும் உங்களுடைய பாதுகாப்பான இடத்தில் செல்லுங்கள், எங்களின் அம்பு புறப்படத் தயாராக உள்ளது என்று அறநெறியை மறவாது மறத்தைக் கடைபிடிக்கும் மன்னனின் கொல் யானையின் மீதிருக்கும் நெடிய கொடி வானத்தை நிழலால் மறைக்கும். இப்படி சிறப்புள்ள எங்களின் தலைவனே நீ வாழ்க. எங்களுடைய தலைவனாகிய நீ , சிவந்த நீர் போல் தள தளக்கும் பசும் பொன்னை வறியவருக்கு கொடுத்தாய், மூன்று நீர் சேரும் கடல் தெய்வத்துக்கு மக்கள் வாழ விழா எடுத்த உயர்ந்தவன் நீ. நல்ல ஆற்று நீரின் மணலின் எண்ணிக்கையை விட பலகாலம் நீ வாழ வேண்டும், பல்லாண்டு வாழ்க.

தொடரும்.

avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by பத்மநாபன் on Sun Apr 29, 2012 8:06 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
தமிழன் அனைத்து தரப்பிலும் மென்மையானவனாகவும், மேன்மையானவனாகவும் நடந்து கொண்டு இருந்தான்.

நல்ல பதிவு
avatar
பத்மநாபன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 115
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Tue May 01, 2012 5:47 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
தமிழன் அனைத்து தரப்பிலும் மென்மையானவனாகவும், மேன்மையானவனாகவும் நடந்து கொண்டு இருந்தான்.

நல்ல பதிவு

நன்றி பத்மநாபன்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by ஆரூரன் on Mon May 07, 2012 2:32 pm

நல்லதொரு விளக்கம் புற நானுறுக்கு ...
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Feb 23, 2013 4:18 pm

மாவாராதே மாவாராதே

போர் பெருமை வாய்ந்தது, எனினும் துன்பம் நிறைந்தது. போருக்குச் செல்லும் வீரர்கள் அனைவரும் வீடு திரும்புவதில்லை. ஒரு சிலர் போரில் வீர மரணம் அடைந்து விடுகின்றனர். இப்படிச் சென்ற கணவன் வீடு திரும்பாததால் மனைவி புலம்பும் புலம்பலைப் பார்த்த புலவர் பாடிய பாடல் இது. இவர் பெயர் வெளியனார். இன்றைய மைசூர் சங்க காலத்தில் எருமையூர் என்று அழைக்கப்பட்டது. இப்பாடலைப் பாடிய புலவர் இந்த ஊரைச் சார்ந்தவர், ஆதலால் எருமை வெளியனார் என்று அழைக்கப்படுகிறார். குதிரை மீது செல்லும் போர்வீரனின் வீரத்தைப் பற்றியோ, அவனது குதிரைப் பற்றியோ பாடுவது குதிரைமறம் என்று அழைக்கப்படுகிறது. போருக்குச் செல்லும் போது தும்பை பூவைச் சூடிச் செல்வதால் இது தும்பைத்திணை ஆனது.

நம் தமிழ் பெண்கள் பலர் இன்றைக்கும் கணவன் பெயரை நேரடியாகப் பெயர் சொல்லி அழைக்காமல், தங்களின் பிள்ளையின் பெயரைச் சொல்லி அவர்களுடைய அப்பா என்றே விளிக்கின்றனர். இம்மரபு இப்பாடலிலும் வெளிப்பட்டுள்ளது. அழகிய காட்சியை நம் கண்முன் நிறுத்தும் சிறப்பானப் பாடலிது.

பாடல் 31: கூடல் பெரு மரம்
பாடியவர் : எருமை வெளியானார்
பாடப்பட்டோன் : பொதுவாகப் பாடியது
திணை : தும்பை துறை : குதிரை மறம்

மாவா ராதே மாவா ராதே
எல்லார் மாவும் வந்தன வெம்மிற்
புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
செல்வ னூரு மாவா ராதே
இருபேர் யாற்ற வொரு பெருங் கூடல்
விலங்கிடு பெருமரம் போல
உலந்தன்று கொல்லவன் மலைந்த மாவே.


பொருள் விளக்கம்

குதிரை வரவில்லையே, குதிரை வரவில்லையே. போருக்குச் சென்ற அனைத்து வீரர்களின் குதிரையும் வந்துவிட்டதே, என்னுடைய இல்லத்தில் இருக்கும் சிறிய குடுமியை உடைய புதல்வனைத் தந்த செல்வன் (கணவன்) ஏறிச் சென்ற குதிரை மட்டும் இன்னும் வரவில்லையே. இரண்டு பெரிய ஆறு இணையும் கூடல் இடத்தில் விலங்குகளை கட்ட இருக்கும் மரம் ஆற்று வெள்ளத்தில் அடித்து சென்றது போல், அவனது குதிரை சாய்ந்து விட்டதா .

புறம் வளரும்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by chinnavan on Sat Feb 23, 2013 4:45 pm

அருமையான விளக்கம் , தொடருங்கள்
avatar
chinnavan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1809
மதிப்பீடுகள் : 290

View user profile

Back to top Go down

புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by Dr.S.Soundarapandian on Sat Feb 23, 2013 5:06 pm

சதாசிவம் அவர்களுக்கு நன்றி பல ! ஒரு காலத்தில் “சங்க நூற்கள் ,சமண நூற்கள் ! அவற்றை நாம் படிக்கக் கூடாது!” என்று சில சைவ மடங்கள் ஓலைச் சுவடிகளை மறைத்தனர் ! இன்று அந் நிலையெல்லாம் மாறிச் சங்க நூற்கள் மக்களிடம் வருகின்றன! தங்களுக்கு வாழ்த்துகள் !

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4442
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Feb 25, 2013 3:52 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அருமையான விளக்கம் , தொடருங்கள்

தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி நன்றி நன்றி
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Feb 25, 2013 3:56 pm

[You must be registered and logged in to see this link.] wrote:சதாசிவம் அவர்களுக்கு நன்றி பல ! ஒரு காலத்தில் “சங்க நூற்கள் ,சமண நூற்கள் ! அவற்றை நாம் படிக்கக் கூடாது!” என்று சில சைவ மடங்கள் ஓலைச் சுவடிகளை மறைத்தனர் ! இன்று அந் நிலையெல்லாம் மாறிச் சங்க நூற்கள் மக்களிடம் வருகின்றன! தங்களுக்கு வாழ்த்துகள் !

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

நன்றி அய்யா, தாங்கள் கூறுவது உண்மை. மத பேதங்களில் பல அரிய நூல்கள் அழிக்கப்பட்டது. ஆயினும் தமிழ் காலத்தை வென்று, தமிழுக்கு அனைத்தும் ஒன்று தான் என்பதை உணர்த்தி நிற்கிறது.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum