ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

In need of Antivirus Software
 rtr_18

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 SK

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

என்னைப் பற்றி...பாலமுருகன்
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்

View previous topic View next topic Go down

தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்

Post by தாமு on Tue Jul 05, 2011 9:23 am

தமிழ்ச் சினிமாவின் தற்போதைய மந்த நிலைமைக்கு இது போன்ற திரைப்படங்கள் மிகவும் அவசியம். காவியம் என்றோ, சாதனை படம் என்றோ நிச்சயமாக இல்லை. ஆனால் ஒரு முறை பார்க்கலாம். அதுவும் குடும்பத்துடன் பார்க்கலாம்.. யாரிடமும் துணை இயக்குநராகப் பணியாற்றாத ஒருவர் இயக்கியிருக்கும் முதல் திரைப்படம்.

பூ படத்தின் பாடல்களுக்காகப் பேசப்பட்டவர் அதன் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். அதன் பின்னர் களவாணி, விருந்தாளி, நெல்லு ஆகிய படங்களுக்கும் இசையமைத்துவிட்டார். இவரே தயாரித்து, இயக்கியுள்ள படம்தான் இது..!

வழக்கமான காதல் கதைதான்..! அழுக்கு லுங்கி, முகம் முழுக்க தாடி, 5 நிமிடங்களுக்கொரு முறை டாஸ்மாக்கில் உருண்டு புரளும் சகோதரர்கள் பந்தல் பிரதர்ஸ்.. அண்ணன், தம்பிகள்.. ஊரில் காது குத்து, சடங்கு, கல்யாணம், கருமாதி என்று எல்லாவற்றுக்கும் பந்தல் போடுவதில் ஸ்பெஷலிஸ்ட் என்று அவர்களை அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். இதில் தம்பிதான் ஹீரோ. அண்ணன் சப்போர்ட்டிங்கு..!

கை சுத்தமான நாச்சியப்ப செட்டியார் சப்-ரிஜிஸ்தரராக பணியாற்றி வருகிறார். அவரது மகள்தான் ஹீரோயின். தனது அண்ணனின் கல்யாணத்திற்காக, நாச்சியப்ப செட்டியாரின் மருமகன் நான் என்று அவரது அலுவலகத்திற்குப் போன ஹீரோ உளறிவிட.. இதில்தான் கதை ஆரம்பம்..!

“அதெப்படி நீயி அப்படி சொல்லப் போச்சு..” என்று தனது ஸ்கூட்டியில் விரட்டிப் பிடித்து ஹீரோவை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார் ஹீரோயின். பதிலுக்கு ஹீரோவின் பதிலால் ஆள் அவுட்டாகி, வழக்கமான சினிமா பார்முலா படி லவ்வோ லவ்வு..!

விஷயம் நாச்சியப்ப செட்டியாருக்கு பாஸாகி, மகளுக்கு காவல் போடுகிறார். வழக்கம்போல பொண்ணு தப்பித்து டேக்கா கொடுக்க.. அமெரி்க்க மாப்பிள்ளையை பொண்ணு பார்க்க அழைத்து வருகிறார் செட்டியார். அன்றைய தினம் ஹீரோயினின் அண்ணிக்கும் வளைகாப்பு என்பதால் பந்தல் பிரதர்ஸ்தான் அந்த வீட்டில் பந்தல் போட வந்திருக்கிறார்கள்.

ஹீரோவும், ஹீரோயினும் நிகழ்ச்சியின் இடைவேளையில் தங்களுக்குள் இடைவெளியில்லாமல் லவ்விக் கொண்டிருக்க.. இதை வீட்டில் இருக்கும் சின்ன வாண்டு ஒண்ணு, கனகச்சிதமாக செல்பேசியில் படம் பிடித்துக் காட்டிவிட.. விஷயம் வந்த மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரிந்து வீடு அலங்கோலமாகிறது..!

பாதுகாப்புக்காக சம்பந்தி ஊருக்கு அனுப்பப்பட்ட ஹீரோயினை விரட்டிப் பிடித்து “நாளைக்கே கல்யாணம்.. இதே கோவிலுக்கு காலைல வந்திரு..” என்று சொன்ன ஹீரோவால் மறுநாள் சரியான நேரத்துக்கு அங்கே போக முடியவில்லை.. ஹீரோயின் என்ன செய்தாள்..? என்னதான் செஞ்சாங்க..? கல்யாணம் ஆச்சா? இல்லையா..? இதையெல்லாம் தெரிஞ்சுக்கணும்னா கொஞ்சம் காசு செலவழிக்கத்தான் வேணும்..! தியேட்டர்ல போய் பாருங்க..!

வழக்கமான காதல் கதைதான் என்றாலும் தற்போதைய திரைப்படங்களின் போக்கில் தீவிர நம்பிக்கை வைத்து கேரக்டர்களை செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.

நாச்சியப்ப செட்டியாரின் குடும்பத்து உறவுகள் அனைவருமே நிஜமான செட்டி முகங்களாக பார்த்து நடிக்க வைத்திருப்பதற்கு முதல் பாராட்டு..! அதிலும் நாச்சியப்ப செட்டியாரின் பண்பட்ட நடிப்பை மறக்க முடியவில்லை. இத்தனைக்கும் அவர் மிக இளம் வயதானவர். பிரியூவில் பார்த்தேன். டிரம்ஸ் வாசிக்க வாய்ப்பு கேட்டு வந்தவரை அப்படியே பிடித்து நடிக்க வைத்துவிட்டாராம் குமரன்.

அவசரத்தில் கட்டிங்கை அடித்துவிட்டு முதல் முறையாக போதையில் புலம்புவது.. நிலத்தை முறைகேடாக பதிவு செய்யச் சொல்லிப் பணத்துடன் வரும் நபரிடம் முறைத்து பேசுவது.. தலையைக் குனிந்தபடியே தனது மகளால் ஏற்பட்ட அவமானத்தை ஏற்றுக் கொள்வது.. மகளுக்காக ஹீரோ அம்மாவின் காலில் விழுவது என்று இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்திலுமே ஸ்கோர் செய்திருக்கிறார்..!

ஹீரோவாக ஆதீத். ஹீரோயினாக ரேஷ்மி மேனன்.. இனிது, இனிதுவில் ஏற்கெனவே நடித்திருந்தாலும் இதுதான் முதல் படம் போல் நடித்துள்ளார்கள். ஹீரோயினின் குழந்தை முகத்தில் கொஞ்சம் அடிக்ட்டாகி இரண்டு நாட்களாக கூகிள் பஸ், பேஸ்புக், டிவிட்டரில் அந்தக் குழந்தையைப் பற்றிப் பிரச்சாரம் செய்ததை கொஞ்சம் அடக்கத்துடன் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்..!

இந்தக் குழந்தை நினைச்சால் ஒரு ரவுண்டு வரலாம். நல்ல கைட்னஸ்.. சிறந்த இயக்குநர்கள் கிடைக்க வேண்டும். பெஸ்ட் ஆஃப் லக் சைல்ட்.. ஹீரோவை விரட்டிப் பிடித்துக் கேள்வி கேட்பதில் மிகப் பெரிய லாஜிக் ஓட்டைதான் என்றாலும், இப்படியும் பொண்ணு ஊருக்கு ஒண்ணு இருக்குமே என்பதால் ஏற்றுக் கொள்ளலாம்.. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் திறமையில் இன்னமும் பிரெஷ்ஷாக ஜொலித்தார் ரேஷ்மி..!

ஹீரோ ஆதித் தேநீர் விடுதியில் அடிக்கும் லூட்டியும், அங்கேயிருந்து சைட் அடிக்கும் காட்சிகளும் பலே பலே.. அந்த டீக்கடைக்காரனையும் சந்தடிச்சாக்கில் பாராட்டிக் கொள்வோம். இது போலவே நாச்சியப்பனிடம் பியூன் வேலை பார்க்கும் ஒருவரும் கலகலப்பாக்கிவிட்டார்..

நாச்சியப்பன் கதவைச் சாத்திக் கொண்டவுடன் ஏற்படும் பதட்டத்தை அவர் அடிக்கின்ற சரக்கைப பார்த்து. “போச்சு.. போச்சு. சாயந்தரம் கட்டிங்குக்காக வைச்சிருந்தேன். அதையும் அடிச்சிட்டீங்களே..” என்று புலம்புவதில் மது பிடிக்காத எனக்கே காட்சி மட்டும் பிடித்திருந்தது.

புதுமுக இயக்குநராக மட்டுமில்லாமல் நேர்த்தியாக திரைக்கதையும் எழுதியிருக்கிறார் குமரன்.. ஹீரோவின் அம்மா செத்ததுபோல் இருக்கும் காட்சியில் நிஜமோ என்று நினைக்க வைத்து, மகனது கல்யாணத்துக்காக செய்திருக்கும் செட்டப் என்று சொல்லும்போது செம கலகலப்பு..!

நாச்சியப்பரின் வீட்டு வாசலில் இரவோடு இரவாக தோரணம் கட்டுவது.. டாஸ்மாக் கடையில் விஸிட்டிங் கார்டை கொடுத்து கேன்வாஸ் செய்வது.. ஹீரோயின் ஹீரோவின் வீட்டுக்குள்ளேயே வந்து மீனை லவட்டிக் கொண்டு செல்வது.. ஹீரோ அண்ணனின் செல்போனை வைத்துக் கொண்டு ஒருவன் சின்னமனூர், தேவாரத்தில் இருந்தெல்லாம் போன் செய்வது.. என்றெல்லாம் இடையிடையே காட்சிகளுக்கிடையிலேயே நகைச்சுவையை வைத்து தனி ஆவர்த்தனம் இல்லாமலேயே கதையை நகர்த்தியிருக்கிறார்..!

இசையும் அவரேதான்.. பாடல்களைவிடவும், டைட்டில் காட்சிகளின்போது இசைக்கும் பின்னணி இசைதான் எனக்குப் பிடித்திருந்தது. சொந்தப் படம் என்பதால் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்போல் தெரிகிறது..!

ரவுடி போன்றவனை காதலிக்கும் அழகு தேவதைகள் கதைதான் தற்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட்.. இதுவும் அதில் ஒரு வகைதான். ஆனால் காட்சியமைப்புகளில் மட்டும் வித்தியாசத்தைக் கொட்டி தன்னால் முடிந்த அளவுக்கு சுவாரசியத்தைக் காட்டியிருக்கிறார்..!

நாச்சியப்ப செட்டியாரின் வேலை சப்-ரிஜிஸ்தரர் என்றவுடனேயே என்னை மாதிரி சினிமா மூளை உள்ளவர்கள் இடைவேளைக்குள்ளாகவே கிளைமாக்ஸ் எப்படியிருக்கும் என்பதை கண்டறிந்துவிட்டோம்..! மற்றவர்களுக்கு ஊகிப்பது கடினம்தான் என்றாலும், கிளைமாக்ஸ் சுவாரஸ்யமாகத்தான் உள்ளது..!காதல் கதைதான் என்றாலும் ஒரு அடிதடி இல்லை.. வெட்டுக் குத்து இல்லை.. ரத்தம் சிந்தவில்லை. அரிவாள் இல்லை என்பதெல்லாம் இந்தப் படத்தை ரசித்து பார்த்ததற்கு இன்னுமொரு காரணம்..!

இந்த மாத கோட்டாவில் ஒரு படம்தான் என்றால், இந்தப் படத்திற்கு நிச்சயம் குடும்பத்துடன் செல்லலாம்..!

சென்று வருக..!
உண்மைத்தமிழன்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்

Post by ரபீக் on Tue Jul 05, 2011 10:22 am

கங்கை அமரனுக்கு பிறகு இயக்குநரகா மாறிய இசை அமைப்பாளருக்கு வாழ்த்துக்கள் !!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum