புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
	குட்டிமணி, ஜெகனில் இருந்து ஆரம்பித்த கருணாநிதியின் துரோகம்  Poll_c10	குட்டிமணி, ஜெகனில் இருந்து ஆரம்பித்த கருணாநிதியின் துரோகம்  Poll_m10	குட்டிமணி, ஜெகனில் இருந்து ஆரம்பித்த கருணாநிதியின் துரோகம்  Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
	குட்டிமணி, ஜெகனில் இருந்து ஆரம்பித்த கருணாநிதியின் துரோகம்  Poll_c10	குட்டிமணி, ஜெகனில் இருந்து ஆரம்பித்த கருணாநிதியின் துரோகம்  Poll_m10	குட்டிமணி, ஜெகனில் இருந்து ஆரம்பித்த கருணாநிதியின் துரோகம்  Poll_c10 
1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
	குட்டிமணி, ஜெகனில் இருந்து ஆரம்பித்த கருணாநிதியின் துரோகம்  Poll_c10	குட்டிமணி, ஜெகனில் இருந்து ஆரம்பித்த கருணாநிதியின் துரோகம்  Poll_m10	குட்டிமணி, ஜெகனில் இருந்து ஆரம்பித்த கருணாநிதியின் துரோகம்  Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
	குட்டிமணி, ஜெகனில் இருந்து ஆரம்பித்த கருணாநிதியின் துரோகம்  Poll_c10	குட்டிமணி, ஜெகனில் இருந்து ஆரம்பித்த கருணாநிதியின் துரோகம்  Poll_m10	குட்டிமணி, ஜெகனில் இருந்து ஆரம்பித்த கருணாநிதியின் துரோகம்  Poll_c10 
11 Posts - 4%
prajai

10 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Baarushree
	குட்டிமணி, ஜெகனில் இருந்து ஆரம்பித்த கருணாநிதியின் துரோகம்  Poll_c10	குட்டிமணி, ஜெகனில் இருந்து ஆரம்பித்த கருணாநிதியின் துரோகம்  Poll_m10	குட்டிமணி, ஜெகனில் இருந்து ஆரம்பித்த கருணாநிதியின் துரோகம்  Poll_c10 
3 Posts - 1%
Rutu

jairam

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டிமணி, ஜெகனில் இருந்து ஆரம்பித்த கருணாநிதியின் துரோகம்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Tue Jul 05, 2011 8:39 pm

June 17, 2011, 6:25 pm[views: 5720]

தன் மீதான ஊழல் புகாரில் இருந்து தப்பிப்பதற்காகவே கருணாநிதி முதல்வராக இருந்த போது கச்சத் தீவை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்’’ என்று கச்சத் தீவு குறித்த தீர்மானத்தின் போது சட்டப்பேரவையில் விளாசித் தள்ளினார் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்.

‘கச்சத் தீவு மட்டுமல்ல, கருணாநிதியின் ஆட்சியில் அவரது தன்னலப் போக்கினால் பறிபோன தமிழர் உரிமைகள் எவ்வளவோ இருக்கின்றன’ என்கிறார், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 22 ஆண்டு கால நெருங்கிய நண்பரும், கவிஞருமான புலமைப் பித்தன்.

‘‘1974-ல் தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்குத் தூக்கிக் கொடுக்க இந்தியா முன்வந்தது. இந்தியா – பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்காவுக்கு இலங்கை ஆதரவளிக்க முன்வந்தது. அதைத் தடுத்து நிறுத்தவும், இலங்கையை தாஜா பண்ணவுமே அப்போதைய பிரதமர் இந் திரா காந்தி தமிழரின் பூமியான கச்சத்தீவை இலங்கைக்குத் தானமாகக் கொடுத்தார்.

அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதி, இந்திரா காந்தியோடு கூட்டணி வைத்திருந்தார். டெல்லி ஆதரவு கைநழுவிப் போய் விடக்கூடாது என்பதற்காகவும், பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற சுயநலத்துக்காகவும் கச்சத்தீவை தாரை வார்க்கும் இந்திராகாந்தியின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் அமைதி காத்தார்.

மீனவர்கள் ஓய்வெடுக்கும், மீன்வலை உலர்த்தும், அந்தோணியார் கோயிலுக்குப் போய் வரும் தமிழர்களுக்கான உரிமைகளையும் 1976-ல் முற்றிலும் பறித்துவிட்டது இலங்கை அரசு. அதையும் முதல்வராக இருந்த கருணாநிதி வேடிக்கை பார்த்தார்.

அதே 1974-ல் தமிழ்நாடு-கர்நாடகா இடையே 50 ஆண்டுகளுக்கு முன்பு (1924) போடப்பட்ட காவிரி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய நேரம் வந்தது. அப்போது தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றிருந்தால் அதுவரை காவிரியில் நமக்கு இருந்த அதிகபட்ச உரிமையை தக்க வைத்திருக்க முடியும். ஆனால், அந்த நேரத்தில் கர்நாடகாவில் தேர்தல் நேரம் என்பதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திரா காந்தி, காவிரி விவகாரத்தை கிடப்பில் போடும்படி கருணாநிதியிடம் கேட்டுக் கொண்டார். அதையேற்று அவரும் உச்ச நீதிமன்றத்துக்கு அந்த விவகாரத்தைக் கொண்டு செல்லவில்லை. இதனால், இன்று வரைக்கும் காவிரியில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.

அதே ஆண்டு (1974) இலங்கையில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த குட்டிமணி, ஜெகன் ஆகிய இரு போராளிகள் தமிழகத்துக்கு வந்தார்கள். அவர்களை கருணாநிதி அரசு கைது செய்தது. பிரதமர் இந்திராகாந்தியிடம் உள்ள விசுவாசத்தை நிரூபிப்பதற்காக இருவரையும் மைய அரசிடம் ஒப்படைத்து விட்டார், கருணாநிதி.

இந்திய அரசு இவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைத்து விட்டது. அதன்பின்பு வெலிக்கடை சிறையில் குட்டிமணிக்கும், ஜெகனுக்கும் நடத்தப்பட்ட மனிதப் பேரவலங்கள் என்னவென்று உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். இறுதியில் அந்த இருவரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

2006-ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். ஈழத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்குத் துணைபோன மத்திய அரசுக்கு ஆதரவாக இருந்தார். ‘போரை நிறுத்த இந்திய அரசிடம் வலியுறுத்துங்கள்’ என்று இலங்கையிலிருந்து வந்த அந்நாட்டு அரசியல் தலைவர்கள் கோரியபோது, ‘இந்தியா ஒரு பெரிய தேசம். பெரிய தலைவரை இழந்திருக்கிறது. அவரது குடும்பம் ஆட்சியிலிருக்கிறது. அவர்களின் உணர்ச்சியைத் தடுக்க முடியாது’ என்று கொஞ்சமும் மனிதாபிமானமின்றிச் சொன்னவர்தான் கருணாநிதி.

‘தமிழ் ஆண்கள் எல்லாம் கடலுக்கு. தமிழ்ப் பெண்கள் எல்லாம் சிங்கள ராணுவத்துக்கு’ என்று இந்திய அரசின் ஆதரவில் இலங்கை கூவியது. அதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த கருணாநிதி, இன்றைக்கு தம் மகள் கனிமொழி சிறைக்குப் போனதற்காக, ‘கூடா நட்பு’ என்று காங்கிரஸை விமர்சிக்கிறார். அறிஞர் அண்ணா ‘கழகமே குடும்பம்’ என்றார். கருணாநிதியோ குடும்பம்தான் கழகம் என்றாக்கினார். லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதன் பாவத்தை இன்றைக்கு கருணாநிதியும் அவரது குடும்பமும் அறுவடை செய்து கொண்டிருக்கிறது’’ என்று ஆவேசமாகப் பேசினார் புலமைப்பித்தன்.

தமிழர் நலனில் கருணாநிதி காட்டிய ‘அக்கறை’ குறித்து தமிழகத் தலைவர்கள் சிலரிடம் பேசினோம்.

‘’கடந்த 2007-ல் இலங்கையில் ஐந்து லட்சம் ஈழத்தமிழர்கள் பசியாலும் பட்டினியாலும் துடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தச் சூழ்நிலையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான உணவு, மருந்துகள் சேகரிக்கப்பட்டன. அவற்றை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப மத்திய அரசிடம் சட்டபூர்வமான அனுமதி கோரப்பட்டது. ஆனால், 7 மாதங்களாகியும் அனுமதி கிடைக்கவில்லை. ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நேரடியாகவே வலியுறுத்தினார். ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோரும் வலியுறுத்தினர். ஆனாலும், எந்தப் பயனும் இல்லை.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் இரு கப்பல்கள் மூலம் உதவிப் பொருட்களை அனுப்பிவைத் தார். எம்.ஜி.ஆரின் அத்தகைய உள்ளம் முதல்வராக இருந்த கருணாநிதிக்கு இல்லை.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் 2006 பிப்ரவரி 27-ல் தீர்ப்பு வழங்கியது. அப்போது தேர்தல் நேரம் என்பதாலும், அணையில் தண்ணீர் அந்த அளவு இல்லை என்பதாலும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வடிகால் மதகுகளை இறக்க உத்தரவிடவில்லை.

அதன்பிறகு 2006 மே மாதம் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, வடிகால் மதகுகளை இறக்கி இருக்க வேண்டும். அவர் செய்யவில்லை. விளைவு 10.11.2009 அன்று உச்ச நீதிமன்றம், இரு தரப்பும் நடப்பில் உள்ள மாமூல் நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. இதன் பொருள் வடிகால் மதகுகள் பதின்மூன்றையும் தமிழக அரசு கீழே இறக்கக்கூடாது என்பதாகும். இதனால் இன்றுவரை முல்லைப் பெரியாறு சிக்கல் தீரவில்லை.

2008-ல் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்த கருணாநிதி, ‘கர்நாடகாவில் தற்போது தேர்தல் நடக்கிறது, அது முடிந்ததும் அத்திட்டம் தொடங்கப்படும்’ என்று அறிவித்தார். ஆனால், தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்த முதல்வர் எடியூரப்பா இன்றுவரை ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.

கர்நாடகாவில் கருணாநிதியின் மகள் செல்வி தங்கியிருக்கிறார். கன்னடத்தில் கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அம்மாநிலத்தில் பலகோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் நடத்தி வருகிறது கருணாநிதியின் குடும்பம். எனவே, அம்மாநிலத்தை ஆளும் அரசைப் பகைத்துக் கொள்ள கருணாநிதி தயாராக இல்லை. சொந்த நலனுக்காக தமிழர் நலனைப் புறந்தள்ளி விட்டார் கருணாநிதி’’ என்று கொதித்தார்கள்.

நன்றி: குமுதம்.

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 05, 2011 9:47 pm

எவ்வளவு பெருமையா இருக்கு ., அய்யோ ,,,, அய்யோ
muthu86
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் muthu86

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக