ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்ணாடி செய்யும் மாயம்
 aeroboy2000

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
 aeroboy2000

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 aeroboy2000

பாக்.கில் பயங்கரம்: மதஅவமதிப்பில் ஈடுபட்ட பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற மாணவன்
 aeroboy2000

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 சிவனாசான்

'சிஎம்' எழுத்துடன் முதல்வர் காருக்கு புதிய பதிவு எண்
 சிவனாசான்

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 சிவனாசான்

பெருமாள் - கவிதை
 ayyasamy ram

உலகின் முதல் புதுமை மின் நிலையம்
 சிவனாசான்

மெட்டு - கவிதை
 ayyasamy ram

பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்டை அறிமுகம் செய்தது அமேசான் நிறுவனம்!
 சிவனாசான்

பழந்தின்னி வௌவால்களை தெய்வமாக வழிப்படும் கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: உலகப் பொருளாதார மன்றம்
 பழ.முத்துராமலிங்கம்

நரகாசுரவதம்
 VEERAKUMARMALAR

அமைதி ஏன்? முன்னாள் சிஏஜி வினோத் ராய் மழுப்பல்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 VEERAKUMARMALAR

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடரும்: அரசு
 பழ.முத்துராமலிங்கம்

தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

மயிலம் முருகன் கோவிலில் ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம்
 ayyasamy ram

வளர்ந்து வரும் நாடுகள் பட்டியல்: 62-ஆம் இடம் பெற்று சீனா, பாகிஸ்தானை விட பின் தங்கியது இந்தியா
 ayyasamy ram

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 SK

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 krishnaamma

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
 krishnaamma

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 SK

இந்திய அரசியல் போராட்டம் எளிதில் புரிந்து கொள்ள shortcut today (23-01-2018)
 thiru907

55000 பதிவுகளை கடந்த கிருஷ்ணா அம்மாவை வாழ்தலாம் வாங்க
 SK

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 SK

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 T.N.Balasubramanian

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 SK

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 M.Jagadeesan

தேர்வு நெருங்கி விட்டது எனவே முழு தேர்வு தயாராகுங்கள்.தமிழ் 100+ கணிதம் 25 + GK 75 என்பது மாதிரி உள்ள தேர்வுகளை செய்து பாருங்கள்
 thiru907

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 SK

ஆயக்குடி TNPSC CENTRE (21-01-2018) வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள்
 thiru907

அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடல்
 ayyasamy ram

பிரபல பாடகர், நடிகர் சிலோன் மனோகர் மறைவு
 ayyasamy ram

இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கேமெராவும் நானும்...!

View previous topic View next topic Go down

கேமெராவும் நானும்...!

Post by ANTHAPPAARVAI on Wed Jul 06, 2011 7:16 pm

சினிமா!
உயர்ந்த பாராட்டுக்களையும், அதே நேரத்தில் தவறான விமர்சனங்களையும் சம விகிதத்தில் பெற்று உயர்ந்து கொண்டிருக்கும் ஒரே மீடியா சினிமா மட்டுமே.
"குப்பையில் கிடந்தாலும் குண்டுமணியின் நிறம் போகுமா?" என்ற பழமொழியைப் போல, யார் என்ன பேசித்திரிந்தாலும் சினிமாவின் மதிப்பு ஒருபோதும் தாழ்ந்து விடப் போவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனாலும் இன்று தரமான சினிமாக்கள் வெளிவரவில்லை என்பதும் வேதனையான உண்மைதான்.

பொதுவாக, தவறு செய்யும் ஒரு மனிதனை நாம் திருத்த வேண்டும் என்று முடிவெடுத்தால், அவனுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுத்தர வேண்டும். மேலும், அவனது சின்னச் சின்ன நல்ல செயல்களையும் நாம் பாராட்ட வேண்டும். அப்போதுதான் அவன் முழுமையாக திருந்துவதற்கு அது வாய்ப்பாக அமையும். ஆனால், இன்று தரமான சினிமா வேண்டும் என்று எதிர் பார்ப்பவர்கள்(?) அனைவரும், சினிமாவைப் பற்றி கேவலமாகவே பேசித்திரிகிறார்கள். ஒரு நல்ல தரமான சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று அவர்களால் சொல்லத் தெரியவில்லை. "இந்த இந்தக் காட்சிகளுடன், இப்படிப்பட்ட கதை அமைப்புடன், இந்த நடிகரை வைத்து எடுத்தால் ஒரு தரமான சினிமா வெளிவரும்.." என்று யாராவது ஒருவர் சொல்லியிருப்பாரேயானால் அவருக்கு நான் தலை வணங்குகிறேன்!

இல்லை, "எனக்கு தவறுகள் மட்டும் தான் தெரியும், நான் தவறுகளை மட்டும் தான் கற்றிருக்கிறேன், அதனால் நான் தவறாகத்தான் விமர்சனம் எழுதுவேன்.." என்று யாரேனும் சொல்வாறேயானால், அவரது அறியாமையை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன். ஒருவனது எழுத்துக்களைப் பார்த்தால் அவனது குணாதிசயத்தை அறிய முடியும் என்று சொல்கிறது மனோதத்துவம்!

எனக்கு சினிமாவைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தது... ஆனால் யாரிடம் கற்றுக் கொள்வது? சினிமாவைப் பற்றி தெரிந்தவர்கள் யார் இருக்கிறார்கள்? சினிமா என்பது எதற்காக உருவாக்கப் பட்டது? தரமான சினிமா எது? என்ற பல கேள்விகளோடு நான் சென்ற போது, யாருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. இது தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை, ஆனால் "சினிமா என்பது யாருக்கானது?" என்பது கூட பலருக்குத் தேரியவில்லை!

இன்னொரு வேடிக்கையான செய்தி என்ன என்றால்? சினிமாவை எப்படிப் பார்க்க வேண்டும் என்று கூட பலருக்குத் தெரியவில்லை!

எனவே நான் நேரடியாக சினிமாவிடமே எனது சந்தேகங்களைக் கேட்கலாம் என்று முடிவெடுத்தேன்... முதலில் என்னிடம் சிக்கியது ஒரு கேமரா!

இதில் பல வேடிக்கையான செய்திகள் காத்திருக்கிறது! நகைச்சுவைக்காகவும், சிந்திப்பதற்காகவும்...

ஸ்டார்ட் கேமெரா.....!

தொடரும்...
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: கேமெராவும் நானும்...!

Post by மகா பிரபு on Wed Jul 06, 2011 7:30 pm

தொடருங்கள் நண்பா.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: கேமெராவும் நானும்...!

Post by dsudhanandan on Wed Jul 06, 2011 7:32 pm

ஸ்டார்ட் கேமெரா.....! ஆக்ஷன்.......!!!
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: கேமெராவும் நானும்...!

Post by ANTHAPPAARVAI on Wed Jan 04, 2012 4:41 pm

சினிமாவைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக, பல இடங்களில் அலைந்து விட்டு கடைசியாக AVM ஸ்டூடியோவிற்குள் நுழைந்தேன்... அங்கே ஒரு படப்பிடிப்புக் குழு பரபரப்புடன் காணப்பட்டது!

"யாருப்பா அது? இப்படி வாங்க.. அது ஃபீல்டு!" என்று படப்பிடிப்பு தளத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார் உதவி இயக்குனர் ஒருவர், நான் அப்படியே ஒதுங்கி கேமெராவிற்குப் பக்கத்தில் நின்று கொண்டேன்.

புதுமுக நாயகனுக்கும், நாயகிக்கும் காட்சியைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார்... இயக்குனர்.

"அதாவது, நீங்க ரெண்டு பெரும் ரொம்ப நாளா மனசுக்குள்ளேயே ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிரீங்க.... ஒரு நாள் அதை சொல்லிக்கும் போது, ரெண்டு பேருக்குமே ஒரு இனம் புரியாத ஃபீலிங் வருது... அந்த நேரத்துல ரெண்டு பெரும் தங்களை மறந்து உதட்டோட உதடு வச்சி கிஸ் பண்ணிக்கறீங்க... இது தான் சீன்!"

நாயகன்: "சூப்பர் சீன் சார்!"

இயக்குனர்: "நீ ஏன் சொல்ல மாட்டே?..." என்று கிண்டலடித்து விட்டு, கதாநாயகியைப் பார்த்துக் கேட்டார்...

இயக்குனர்: "ஏம்மா, உனக்கு சீன் OK வாம்மா?"

நாயகி: "OK தான் சார் !"

இயக்குனர்: "ஆமா... சூட் பண்ணுற வரைக்கும் OK சொல்லுங்க. சூட் பண்ணி முடிச்சவுடனே அந்த சீன் வேண்டாம், இந்த சீன் வேண்டாம்னு ஃபோன் பண்ணி டார்ச்சர் பண்ணுங்க..."

நாயகி: "என்ன சொல்லுரீங்க சார்?"

இயக்குனர்: "ஒன்னும் இல்லம்மா, ரெடியா?"

நாயகி: "நான் ரெடி தான் சார் !"

இப்போது ஒளிப்பதிவாளரைப் பார்த்து பேசினார் இயக்குனர்...

இயக்குனர்: "சார், இந்தப் பொண்ணுக்கு 'ஃபோகஸ்' பண்ணிகொங்க... இந்தப் பொண்ணு அங்க இருந்து மெதுவா இந்தப் பையன் கிட்ட வருவாள். அப்படியே அந்தப் பொண்ணை ஃபாலோ பண்ணிட்டு வந்து ரெண்டு பேருக்கும் 2 ஷாட் கவர் பண்ணுங்க. சம்திங் ரெண்டு பெரும் ஏதோ பேசிக்கறாங்க... கொஞ்ச நேரத்துல நான் உங்களுக்கு Hint கொடுக்குறேன்... அப்ப நீங்க ஸூம் போயிட்டு ரெண்டு பேரோட முகத்துக்கும் Close வச்சிடுங்க. நீங்க க்ளோஸ் டைட் போனவுடனே ரெண்டு பெரும் கிஸ் பண்ணிக்குவாங்க. அதோட கட் பண்ணிக்கலாம். OK வா?"

ஒளிப்பதிவாளர்: "சார், சீன் ரொம்ப நல்லா இருக்கு, ஆனா, இதை ஒரே ஷாட்-ல எடுத்தா அவ்வளவு ஃபீலிங் இருக்காது. இதையே "கட் ஷாட்"-ல எடுத்தோம்னா நீங்க எதிர் பார்க்குற ஃபீலிங் கிடைக்கும்! என்ன சொல்லுரீங்க?"

இயக்குனர்: "நீங்க கட் பண்ணி எடுப்பீங்களோ, கெட்டுக் குட்டிச்சுவராப் போவீங்களோ எனக்குத் தெரியாது. இது தான் சீன்! எனக்கு இது தான் வேணும்! நீங்க எப்படி வேணாலும் எடுத்துக் கோங்க... ஆனா, ஃபீலிங் மாறக் கூடாது!"

ஒளிப்பதிவாளர்: "அதெல்லாம் மாறாது சார்!" என்று இயக்குனரிடம் கூறி விட்டு, நாயகன், நாயகியை அழைகிறார்...
"சார்!, மேடம்! ரெண்டு பேரும் இப்படி வாங்க. ம்ம்... நீங்க நடந்து வறது... பேசிக்கறது எல்லாம் நான் அப்பறமா எடுத்துக்கறேன் . இப்போ கிஸ் பண்ணிக்கற சாட் மட்டும் முடிச்சுடலாம். OK வா?"

இருவரும் உற்சாகமானார்கள். எனக்கும் கொஞ்சம் எதிர் பார்ப்பு இருந்தது...

ஒளிப்பதிவாளர் இருவருக்கும் காட்சியை விளக்குகிறார்...

பின்பு இயக்குனரிடம்..

ஒளிப்பதிவாளர்: "சார்.. இப்போ ரெண்டு பேருக்கும் க்ளோஸ் வச்சிகறேன்... முதல்ல கிஸ் பண்ணிக்கற ஷாட் மட்டும் முடிச்சிடலாம்... நீங்க ஷாட் என்னன்னு பிரிச்சி குடுத்துட்டீங்கன்னா... Start பண்ணிடலாம் சார்!"

இயக்குனர்: "அதெல்லாம் ஷாட் பிரிக்க வேண்டாம். அப்படியே போயிடலாம்... உங்களை மாதரி கேமெராமேன் கிடைச்சா நான் ஆயிரம் "ஹிட்" கொடுப்பேன்யா... என்னமா ஐடியா கொடுக்குறீங்க... வெரி குட்! ஸ்டார் கேமெரா!! "

ஒளிப்பதிவாளர்: "அதெல்லாம் ஒன்னும் இல்லை சார்... எல்லா டைரக்டரும் உங்களை மாதரி ப்ரீயா இருந்தாங்கன்னா. எல்லா கேமரா மேனுமே நல்ல ஐடியா கொடுப்பாங்க சார்! ஆனா, ஸ்பாட்ல மத்தவங்க ஐடியா சொன்னா, டைரக்டரோட இமேஜ் போயிடும்னு சொல்லி, யாருமே அனுமதிக்கறது இல்லை. அதனால தப்பா இருந்தாலும் யாரும் எதுவும் சொல்லுறதில்லை... இப்ப கூட நான் கொஞ்சம் தயங்கித்தான் உங்ககிட்ட இதை சொன்னேன்."

இயக்குனர்: "அதெல்லாம் என்கிட்ட நீங்க எதற்கும் தயங்க வேண்டாம். என்ன தோணினாலும் தாராளமா சொல்லுங்க. எனக்கு மக்கள் ரசிக்கணும்! அவ்வளவுதான்!! படம் பார்க்கும் போது, எந்த சீனை யார் சொல்லியிருப்பாங்கன்னு யாரும் யோசிக்க மாட்டாங்க. நல்லா இருந்தா கை தட்டி ரசிப்பாங்க. எனக்கு அதுதான் வேணும்."

ஒளிப்பதிவாளர்: "ரொம்ப நன்றி சார், ஷாட் போகலாமா?"

இயக்குனர்: "ம்‌ம்... இது முத்தம் கொடுக்குற சீனாச்சே... அதனால.... இப்ப ஷாட் போக வேண்டாம்...."

ஒளிப்பதிவாளர்: "அப்படின்னா இப்ப என்ன பண்ணுறது சார்?.."

இயக்குனர்: "வேறென்ன... "தொடரும்" தான்!

தொடரும்...
==================================================================

குறிப்பு: இந்தப் பதிவை நான் தொடங்கியதையே மறந்து விட்டேன். நியாபகப் படுத்திய ஈகரை வாசகரான நண்பனுக்கு நன்றிகள்!!

மேலும் இதில் பல காரசாரமான கருத்துக்களை கூறி பலரது எதிர்ப்புகளை சம்பாதிப்பதற்குள் நான் கொஞ்சம் சிரித்துக் கொள்கிறேன். அதோடு உங்களையும் சிரிக்க வைக்க முயற்சிக்கிறேன். சிரிக்க மட்டும் தான் செய்யனும். ஆனால் கேலியெல்லாம் பணக் கூடாது!

சிரிப்பதற்கு முன்பு, தண்ணீர் குடத்தின் பயன்பாடுகள் என்ன? அல்லது அந்தக் குடத்தை வைத்து நீங்கள் என்ன எல்லாம் செய்வீர்கள் என்று கொஞ்சம் யோசித்து வையுங்கள்! விருப்பம் இருந்தால் அதை இங்கே தெரியப்படுத்தலாம்.

மேலும் இதற்கு முன் பின்னூட்டம் கொடுத்த சுதானந்தன் மற்றும் மகா பிரபு இருவருக்கும் நன்றிகள்!


அடுத்தப் பதிவு முத்தக் காட்சி!!
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: கேமெராவும் நானும்...!

Post by மகா பிரபு on Wed Jan 04, 2012 5:53 pm

@ANTHAPPAARVAI wrote:
மேலும் இதற்கு முன் பின்னூட்டம் கொடுத்த சுதானந்தன் மற்றும் மகா பிரபு இருவருக்கும் நன்றிகள்!

அடுத்தப் பதிவு முத்தக் காட்சி!!
நன்றி அன்பு மலர்

காட்சி தொடரட்டும்
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: கேமெராவும் நானும்...!

Post by ANTHAPPAARVAI on Wed Jan 04, 2012 9:12 pm

@மகா பிரபு wrote: நன்றி அன்பு மலர்
காட்சி தொடரட்டும்

நன்றி நண்பா! நன்றி
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: கேமெராவும் நானும்...!

Post by Pranav Jain on Sat Sep 30, 2017 2:35 pm

உரையாடல் பகுதி-2

ஒளிப்பதிவாளர்: "சார்! பிரேக் முடிஞ்சி ரொம்ப நேரம் ஆகிடுச்சு. ஷாட் போலாமா?"

இயக்குனர்: "OK! போலாம். தம்பி அசிஸ்டன்ட்... ஹீரோ, ஹீரோயினை வரச்சொல்லுங்க..."

சிறிது நேரத்தில் மீண்டும் பரபரப்பானது அந்தப் படப்பிடிப்புத்தளம்.

புதுமுக நாயகியிடம் ஒரு உதவி இயக்குனர் எதையோ ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார். இயக்குனரின் குரல் கேட்டதும் இருவரும் சுதாரித்து விலகினார்கள்!

அதைப் பார்த்ததும் படப்பிடிப்பைப் பார்க்க வந்த சிலரிடையே ஒருவித சலசலப்பு ஏற்பட்டது.

மக்கள்: "இத பாருடா நம்ம அசிஸ்டன்ட... 'ஈரோயினுக்கு எல்ல்ல்..லாத்தையும்' சொல்லிக் குடுத்துட்டு வராரு!"

*** பலபேர் கூடி இருக்குற இடத்துல ஒரு பையனும், பொண்ணும் தனியா பேசிக்கிட்டிருந்தா பாக்குறவங்க சலசலக்கத்தானே செய்வாங்க!? அதுவும் வெள்...ளையா! கியூ...ட்டா! இருக்குற ஒரு பொண்ணுகூட வேற யாராவது நெருக்கமா பேசிக்கிட்டிருந்தா நமக்கு வேர்க்கத்தானே செய்யும்! ***

சிறிது நேரத்தில் ஹீரோ, ஹீரோயின் இருவரும் கேமேராவிற்கு முன் வந்தனர். இருவருக்கும் காட்சியை விளக்கிவிட்டு வந்தமர்ந்தார் இயக்குனர். நேரில் ஒரு முத்தக் காட்சியை பார்க்கப் போகின்றோம் என்றதும், அங்கிருந்த எல்லோருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு தோன்றியது!

இயக்குனர்: "கேமெராமேன் சார், ரெடியா?"

ஒளிப்பதிவாளர்: "ஒரு நிமிஷம் சார்! போகஸ் பண்ணிக்கறேன்." என்று சொல்லிவிட்டு, நாயகன், நாயகிக்கு போகஸ் பார்த்து பிரேம் வைக்கத் தொடங்கினார்... அப்போது எனக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. பக்கத்தில் இருந்த ஒரு வாட்டர் கேனில் இருந்த தண்ணீரை எடுக்கப் போனபோது...

"யாருப்பா அது? அங்க என்ன பன்னுறீங்க? அது ஃபீல்டு!" என்று குரல் கொடுத்தார் ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர்.

நான்: "இல்ல சார், தாகமா இருந்தது அதான் தண்ணி குடுடிக்கலாம்னு...."

அசிஸ்டன்ட்: "இந்தத் தண்ணியை எல்லாம் குடிக்கக் கூடாது. வெளியில போயி குடிச்சுட்டு வாங்க. முதல்ல இங்கருந்து நகருங்க டைரக்டர் பாத்தாருன்னா எங்களைத்தான் திட்டுவாரு. இது ஃபீல்டு சார்!"

நான்: "Sorry சார்!" என்று சொல்லிவிட்டு மீண்டும் கேமேராவிற்குப் பக்கத்திலேயே வந்து நின்றேன்.

ஒளிப்பதிவாளர்: "ஏன் சார்...? இப்படி வந்து நின்னா.. நான் கேமேராவை திருப்பும்போது இடிக்காதா? கொஞ்சம் அப்படி தள்ளி நில்லுங்க சார். இது ஃபீல்டு! தம்பி அசிஸ்டன்ட்! ஃபீல்டு கிளியர் பண்ணுங்கப்பா..."

நான்: (மைன்ட் வாய்ஸ்) "என்னடா இது? எங்க நின்னாலும் ஃபீல்டு.. ஃபீல்டு-ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஒ! இவங்க இப்படி சொல்லுறதால தான் எல்லாரும் இதை சினி ஃபீல்டுன்னு சொல்றாங்களோ?!" என்று நான் நினைத்துக் கொண்டிருந்த போது, அந்த உதவி இயக்குனர் என்னிடம் வந்தார்.

அசிஸ்டன்ட்: "என்ன சார் தண்ணி குடிக்கனும்னு சொன்னீங்க போகலையா?"

நான்: "தாகமாதான் இருக்கு... அதைவிட இந்த சூட்டிங்கை பாக்கனும்ங்கற தாகம்தான் நிறையா இருக்கு. அதுவும் முத்தம் குடுக்குற சீன் எல்லாம் எடுக்குறீங்களே... நான் தண்ணி குடிச்சிட்டு வரதுக்குள்ள நீங்க முத்தம் குடுத்து முடிச்சீட்டிங்கன்னா?"

அசிஸ்டன்ட்: "அதெல்லாம் இங்க யாரும் முத்தம் கொடுக்க மாட்டாங்க... நீங்க போயி தண்ணி குடிச்சுட்டு வாங்க"

நான்: "இ..ல்..ல பரவாயில்ல சார்! அப்பறமா குடிச்சிக்கறேன்" என்று நான் வழிந்தேன்...

அசிஸ்டன்ட்: "உங்களைப் பார்த்தால் பாவமா இருக்கு... ஆமா, இப்பதான் முதல் தடவையா சூட்டிங் பாக்குறீங்களா?"

நான்: "ஆமா சார்! இப்பதான் பாக்குறேன். ஆனா, நான் இன்டர்நெட்ல நிறைய விமர்சனம்... கிசுகிசு... எல்லாம் எழுதி இருக்கேன். அப்பறம்... நான் கூட அசிஸ்டன்ட் டைரக்டரா ஆகனுன்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் ! ஏதாவது வாய்ப்பு இருந்தா..."

அசிஸ்டன்ட்: "ஓ! நீங்க இணையதள விமர்சகரா? அய்யய்யோ இது தெரியாம நான் உங்களுக்கு தண்ணி இல்லைன்னு சொல்லிட்டேனே... மன்னிச்சிடுங்க சார்"

நான்: "பரவாயில்லை இருக்கட்டும் சார்!"

அசிஸ்டன்ட்: "அப்பறம்...? நாம ஒன்னுக்குள்ள ஒண்ணா ஆகிட்டோம். அதனால, "தண்ணீர் கூட கொடுக்காத உதவி இயக்குனர்" அப்படின்னு இணையத்துல எதையாவது எழுதித் தொலைச்சிடாதீங்க. உங்களுக்கு தண்ணிதானே வேணும்... அதோ பாருங்க... அந்த டோர் பக்கத்துல ஒரு கேன்ல தண்ணி இருக்கு பாத்தீங்களா? அங்க போயி குடிச்சிட்டு வாங்க.."

நான்: "இல்ல வேண்டாம். நான் அப்பறமா குடிச்சுக்கறேன். அதுக்குள்ளே முத்தம் கொடுக்குற சீன் முடிச்சிட்டாங்கனா?"

அசிஸ்டன்ட்: "அதெல்லாம் இப்ப முடிக்க மாட்டாங்க சார்! நம்ம கேமெராமேன் இருக்காரே... அவரு ஒரு பீலிங் பேர்வழி! அவரு ஃபீல் பண்ணி... ஃபீல் பண்ணி ஷாட் வைக்கிறதுக்குள்ள ஹீரோ ஹீரோயினுக்கு வயசாகி கிழவன் கிழவியாகிடுவாங்க... நீங்க முதல்ல போயி தண்ணி குடிச்சிட்டு வாங்க."

நான்: "அப்படியா சொல்றீங்க?"

அசிஸ்டன்ட்: "அட ஆமா சார்! அங்க பாருங்க... நம்ம டைரக்டர் ஒரே ஷாட்ல எடுக்க சொன்னதை செய்யாம, ஃபீல் பண்ணுறேன்னு சொல்லிட்டு எல்லாரையும் என்ன பாடுபடுத்துறாருனு பாருங்க...!"

ஒளிப்பதிவாளர்: "ஏம்பா அசிஸ்டன்ட் (இவர் கேமெரா அசிஸ்டன்ட்) அந்தப் பொண்ணு முகத்துக்கு கொஞ்சம் லைட்ட வாங்கிக் கொடு!... தெர்மாக்கோல் ஃபிரேம்ல வருது பாரு...! கொஞ்சம் பேக்ல போ!... ஹீரோ ஹீரோயின் ரெண்டு பெரும் ஃபிரேம்குள்ள வாங்க... கொஞ்சம் ரைட்..! கொஞ்சம் லெப்ட்..! லெப்ட்-னா உங்களோட லெப்ட் இல்லை... கேமெராவுக்கு லெப்ட் வாங்க!... ஏம்மா நீங்க ஒரு ஸ்டெப் முன்னாடி வாங்க... ரொம்ப முன்னாடி போயிட்டீங்களே... ஒரு ஸ்டெப் பேக் வாங்க...! ஏம்பா அசிஸ்டன்ட்!(இது உதவி இயக்குனர்) அந்த பொண்ணு நிக்கிற எடத்துல ஒரு சின்ன கல்லைப் போட்டு மார்க் பண்ணுங்கப்பா..! எப்பப் பாத்தாலும் சூட்டிங் பாக்குற மாதரியே நிக்க வேண்டியது!..."

இவர் இன்னைக்கு முடிக்க மாட்டார்! உதவி இயக்குனர் சொன்னது சரியாகத்தான் இருந்தது. என்பதை உறுதி செய்து கொண்டு, நான் தண்ணீர் கேன் இருக்கும் இடம் நோக்கி நடக்க போகும்போது... அந்த அசிஸ்டண்டை கொஞ்சம் கலாய்க்க வேண்டும் போல இருந்தது...

நான்: "சார்! நான் போயி தண்ணி குடிச்சிட்டு வரேன்."

அசிஸ்டன்ட்: "போயிட்டு வாங்க சார். நான் அதைத்தானே சொன்னேன்."

நான்: "ஆமா, அந்த தண்ணீர் கேன் இருக்குற இடம் ஃபீல்டா?"

அசிஸ்டன்ட்: "என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, "போங்க சார்! போயி... தண்ணி குடிச்சுட்டு வாங்க!"

நல்ல திறமையான அசிஸ்டன்ட்! நான் அவரை கலாய்க்கிறேன் என்பதை உடனே புரிந்து கொண்டார்! சினிஃபீல்டுல இந்தமாதறி ஆளுங்க இருக்குறது ரொம்ப குறைவுதானப்பா!!

தண்ணீர் குடிக்க செல்லும்போது என் மனது எதையோ அசைபோடத் துவங்கியது...

மைன்ட் வாய்ஸ்:
*** சினிமாவில் ஒரு ஷாட் எடுக்கறதுக்குள்ள இவ்வளவு பிரச்சினை இருக்கா? போகஸ்சு... பிரேமு... லெப்டு... ரைட்டு... லைட்டிங்கு... தெர்மாக்கோலு... லுக்கு கொடுக்கணும்... மார்க்கு பண்ணனும்... காச்டியூமு... கண்டினியூட்டி... அய்யய்...யய்..யய்யோ! இதுக்கே கண்ணைக் கட்டுதே...! இது தெரியாம இவ்வளவு நாளும் நாம சினிமாவைப் பத்தி விமர்சனம் எழுதிக்கிட்டு இருந்திருக்கோம்... இந்த லட்சணத்துல அது சரியில்லை, இது சரியில்லைன்னு மைனஸ் பாயிண்டெல்லாம் வேற எழுதிணோமே...!

ஒன்னாருபாய் வெப்சைட்ட வச்சிக்கிட்டு எவ்வளவு ஆட்டம்டா போட்டுருக்கோம்! நல்ல வேலை... இன்னைக்கு சூட்டிங் பார்த்து இதை தெரிஞ்சிகிட்டோம்! இனிமே விமர்சனம் எழுதுனா, படம் பார்த்தோமா... நமக்கு புடிச்சிருக்கா? இல்லையா? அப்படின்னு மட்டும்தான் எழுதணும். அதை விட்டுட்டு அங்க நொட்டை... இது சொத்தை... டைரக்டர் இதைக் கவனிச்சிருக்கலாம்... அதை சரி பண்ணிருக்கலாம்... அப்படி இப்படின்னு எதையுமே எழுதுறதுக்கு நமக்கு அருகதையே இல்லை! நாம இணையத்துல எழுதும்போது, எழுத்துப்பிழையா தப்பா எழுதிட்டோம்னா ஒரு சின்ன எடிட் கொடுத்து அதை சரி பண்ணிடலாம். ஆனா, அதைக் கூட ரொம்பப் பேரு பண்ணுறதில்லை. எல்லாம் காப்பி பேஸ்ட் தான்!. ஆனா, சினிமாவுல தப்பா ஒரு சீன் எடுத்துட்டா, அதை சரி பண்ண பல லட்சங்கள் வரை செலவாகும் போல இருக்கே!!

நம்மால அடுத்த மாதம் நெட் ரீ-சார்ஜ் பண்ண முடியுமா முடியாதான்னே தெரியல... வெப் சைட்டோட பாண்ட்வித் முடிஞ்சி போச்சின்னா அதை சரி பண்ணுறதுக்கு மாதக்கணக்கில் ஆகுது! இந்த லட்சணத்துல மத்தவங்களை குறை சொல்லிக்கிட்டு இருந்திருக்கோமே... அப்படி குறை சொல்லி இது வரைக்கும் என்னத்தைக் கிழிச்சிட்டோம்? அடடா... எவ்வளவு பெரிய தப்பை இவ்வளவு நாளும் சரின்னு நினைச்சிகிட்டே செஞ்சிருக்கோமே! இதுக்கெல்லாம் நம்மோட அறியாமை தான் காரணம். So, நமக்கு மத்தவங்களைக் குறை சொல்லுறதுக்கு கொஞ்சம் கூட அருகதையே இல்லை!" ***

என்றெல்லாம் நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பில் ஒரு சலசலப்பு!

குரல்: "ஏம்பா அந்தப் பொண்ணு இப்படி ஓடுது?"

நான் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். கதாநாயகி தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்! என்னடா இது? ஸ்வீட்டான கதாநாயகி ஏன் இப்படி ஸ்பீடா ஒடுகிறார் ...? ஒருவேளை நம்ம ஆளுங்க யாராவது நாயகிட்ட சில்மிஷம் பண்ணிட்டாங்களா? என்று குழம்பி நானும் ஸ்பாட்டுக்கு விரைந்து சென்றேன் தண்ணீர் குடிக்காமலே...

ஒருவழியாக உதவி இயக்குனர்கள் சென்று நாயகியை ஸ்பாட்டுக்கு அழைத்து வந்தார்கள். நாயகியும் மூச்சிரைக்க வந்து சேர்ந்தார்...

இயக்குனர்: "ஏம்மா இப்படி ஓடினே..?" என்று கேட்டார்.

நாயகி: "இல்ல சார், ஸ்பாட்ல கேமெராமேன் சொல்லுறதை கேட்டு கரைக்டா ஃபாலோ பண்ணனும்னு நம்ம அசிஸ்டன்ட் டைரக்டர்தான் சொன்னாரு... அதான் ஓடினேன்!

இயக்குனர்: "சரி, கேமெராமேன் எப்ப உன்னை ஓடச்சொன்னாரு?"

நாயகி: "நீங்க ஸ்டார்ட் கேமெரா-ன்னு சொன்னதும், அவரு ரன்னிங்-னு சொன்னாரே சார்!?!?!"

இதைக் கேட்டதும் இயக்குனரின் முகம் வடிவேலுவின் ரியாக்ஷனைப் போல மாறியது...

இயக்குனர்: "இதைத்தான் அசிஸ்டன்ட்டும், நீயும் அங்க ரகசியமா பேசிக்கிட்டு இருந்தீங்களா?"

நாயகி: "ஆமா சார்!"

இயக்குனர்: "நீங்க பேசிக்கிட்டு இருந்ததைப் பார்த்ததும்... கூடிய சீக்கிரம் ரெண்டு பேரும் சேர்ந்து எங்காவது ஓடிடுவீங்கன்னு எதிர்பார்த்தேன். பரவாயில்ல... நீ இங்கேயே ஓடிட்டே! அதுவும் தனியாத்தான் ஓடிருக்கே...! ஆனா, ஒவ்வொரு தடவையும் நீ இப்படி ஓடிக்கிட்டிருந்தேன்னா, பிலிம் வேஸ்டாகி நான் தெருவுக்கு ஓடிடுவேன்! ஏம்மா... கேமெராமேன் ரன்னிங்-னு சொன்னது கேமேராக்குள்ள உள்ள பிலிம் ஓட ஆரம்பிச்சுடுச்சின்னு எனக்கு சொன்னாரும்மா... உன்னை ஓடச்சொல்லல!"

நாயகி: "ஓ! அப்படியா? Sorry சார்!"

இயக்குனர்: "என்னத்த Sorry! சின்னபுள்ளத் தனமால்ல இருக்கு? உங்களையெல்லாம் வச்சி நான் எப்படித்தான் படத்தை முடிக்கப் போறேனோ போங்க! இது என்னோட சொந்தப் படம்'மா! கொஞ்சம் புரிஞ்சி நடந்துக்கோங்க.. நான் மறுபடியும் படம் எடுத்தாதான் நீங்கள்லாம் மறுபடியும் நடிக்க முடியும்! ஏன்னா? உங்களோட சைடு அவ்வளவு வீக்கு! சரி சரி வாங்க... இனிமே ரன்னிங் சொன்னா ஓடப்படாது சரியா?"

நாயகி: "சரி சார்!"

இயக்குனர்: "ரெடி... ரெடி... டைம் ஆகிடுச்சி! சீக்கிரம் இந்த சீனை முடிக்கணும். சினிமா தெரியாதா பசங்களை எல்லாம் கொண்டுவந்து விட்டு நம்ம உயிரை வாங்குறாங்க. ஏம்பா அசிஸ்டன்ட், அந்த ஏஜெண்டை போன் போட்டு வரச்சொல்லு!... என்ன கேமெராமேன் சார் ரெடியா?"

ஒளிப்பதிவாளர்: "ரெடி சார்!"

இயக்குனர்: "ஏம்மா ரெடியாம்மா? இந்தத் தடவை "ரன்னிங்" சொன்னா ஓட மாட்டியே....?" என்று நாயகியை கிண்டல் செய்தார் இயக்குனர்.

நாயகி: "போங்க சார்... என்னை ஓட்டாதீங்க!"

இயக்குனர்: "எங்க... நீதான் ஓட்டுறதுக்கு முன்னாடியே ஓட ஆரம்பிச்சுடுறியே?" என்று இயக்குனர் நாயகியை சீண்டினார்...

நாயகி: "ம்...! ம்ம்...! ம்ம்ம்...! (சின்னக் குழந்தை போல கை, கால்களை உதறி சிணுங்கலுடன் ஜோதிகாவைப் போல வெட்கப்பட்டார்)

இயக்குனர்: "இப்படியெல்லாம் ரசிக்கிற மாதரி அளும்பு பன்னாதேம்மா... அப்பறம், நம்ம இணையதள நண்பர்கள் எல்லாம் "இயக்குனரின் சீண்டலும், இளம் நாயகியின் சிணுங்கலும்" அப்படின்னு எழுதி, பக்கத்துல ஒரு கேள்விக் குறியும் போட்டுடுவாங்க! ஏன் இப்படியெல்லாம் எழுதுறீங்கன்னு கேட்டா, சுவாரஸ்யமாம்? கட்டுரையை படிக்க வைப்பதற்காக அப்படி தலைப்பு வைக்கிறார்களாம்! ஆனா, நாம ஏதாவது சுவாரஸ்யமா சீன் பண்ணிட்டோம்ன மட்டும் "சினிமா இளைஞர்களை திசை திருப்புகிறது!" அப்படின்னு எழுத ஆரம்பிச்சுடுவாங்க. ஒருவேளை இளைஞர்கள் எல்லாம் இணையதளத்தை படிக்கிறதில்லையோ, என்னவோ...? எப்பதான் இவங்கல்லாம் திருந்தப் போறாங்களோ...?"

அவர் இப்படி பேசியது தேவையில்லாத பேச்சு என்று எனக்கு தோன்றியது. எனவே உதவி இயக்குனரிடம் கூறினேன்.

நான்: "உங்க டைரக்டர் ஏன் இப்ப சூட்டிங் பண்ணாம விமர்சனம் பண்ணிக்கிட்டு இருக்காரு?... ஒருவேளை நான் வந்திருக்கேன்னு உங்க டைரக்டர்கிட்ட சொல்லிட்டியா? அதான் மறைமுகமா இப்படி தாக்குராரோ? இருந்தாலும் தலைப்பெல்லாம் நல்லாத்தான் எடுத்துக் கொடுக்குறாரு! "இயக்குனரின் சீண்டலும், இளம் நாயகியின் சிணுங்கலும்?" நாளைக்கே ஒரு கட்டுரை எழுதிடுறேன்! என்னோட தலைப்புகளை வச்சுத்தான் ஒட்டுமொத்த மீடியாவும் கட்டுரை, செய்திகளை எழுதிக்கிட்டு இருக்குது."

அசிஸ்டன்ட்: "அட நீங்க வேற, சூட்டிங் ஸ்டார்ட் பண்ணியாச்சு சத்தம் போடாம இருங்க!"

நான்: "ஓ! அப்படியா..."

இயக்குனர்: "சைலன்ஸ்! ரெண்டு பேருக்கும் என்ன சீன்'னு நியாபகம் இருக்கா?"

நாயகன் & நாயகி: "இருக்கு சார்!"

இயக்குனர்: "எதுக்கும் ஒரு தரம் மானிட்டர் பார்த்துடலாமா? ஆமா! அதுதான் கரெக்ட். ஒரு மானிட்டர்!"

மக்கள் 1: "விஸ்கியா? பிராந்தியா சார்?"

மக்கள் 2: "குவாட்டரா? புல்லா சார்?"

மக்கள் 3: "மானிட்டர் வேண்டாம் சார். நெப்போலியன்தான் கம்பீரமா இருக்கும். மச்சீ ஒரு குவாட்டர் சொல்லேன்..."

இயக்குனர்: "இந்த மாதரி கமென்ட் அடிக்கிற ஆளுங்களை எல்லாம் காம்பவுண்டுக்கு வெளியில தூக்கிப் போடுங்க... போகலைன்னா இருக்குற செட் புராப்பர்ட்டியை எல்லாம் எடுத்து அவங்க வாயிலேயே போடுங்க... ஏன் அடிச்சீங்கன்னு கேட்டா இதுதான் "டைரக்டர் ஸ்பெஷல்"னு சொல்லுங்க!! யாரை கலாய்க்கிறீங்க? ஸ்கிரிப்ட் எழுதி கலாய்க்கிற எங்களையே கலாய்க்கப் பாக்குறீங்களா? பிச்சுபுடுவேன் பிச்சு!"

"தம்பி ஹீரோ! இந்தத் தடவை நீ எதுவும் சொதப்பிட மாட்டியே? " என்றார் இயக்குனர்!

ஹீரோ: "இல்ல சார். எனக்கு ஸ்கூல் டிராமால நடிச்ச அனுபவம் இருக்கு."

இயக்குனர்: "ம்ம்! நீயாவது கொஞ்சம் விவரமா இரு. அந்தப் பொண்ணு ரன்னிங் சொன்னதும் ஓடின மாதரி, ஆக்ஷன் சொன்னதும் "ஏண்டி ஓடுனேன்னு" நீ அந்த பொண்ணை இழுத்து போட்டு அடிச்சிடாதே! ஆக்ஷன்னா சண்டை போடுறதில்ல. நடிக்கனும்னு அர்த்தம்! உங்களுக்கு சினிமா கத்துக் குடுக்குரதுக்குள்ள என்னோட ஆயுசே முடிஞ்சுடும் போல இருக்கு!"

மக்கள் 4: "ஏன் சார் இப்படி புலம்புறீங்க? ஒரு பெரிய ஹீரோவை வச்சி படத்தை எடுக்க வேண்டியது தானே...?"

இயக்குனர்: "எடுக்கலாம்... ஆனா, பணம் என்ன உங்க அப்பனா அனுப்புறாரு? மூடிகிட்டு சூட்டிங் பாக்கணும்..."

லைட்ஸ் ஆன்!

ஸ்டார்ட் கேமெரா!

ரன்னிங்!

ஷாட் ஒன்! டேக் ஒன்!

ஆ..க்..ஷன்!

*** நாயகன், நாயகி இருவரும் மெதுவாக அருகில் நெருங்கினர். நாயகன் தனது கரங்களை எடுத்து நாயகியின் இரு கன்னங்களையும் அனைத்தான்... நாயகி தனது கண்களை மெதுவாக மூடி அரைக் கண்களில் நாயகனைப் பார்க்கிறாள்... தனது உதடுகளை எச்சில் படுத்தி பற்களால் ஓரத்தில் கடித்து மீண்டும் விடுவித்தாள்... நாயகனுக்கு உற்சாகம் பிறக்க தனது உதட்டை நாயகியின் உதட்டுக்கு அருகில் ஆசையுடன் கொண்டு சென்றான்... ***

கட் இட்!

ஷாட் OK! கேமெரா சேஞ்ச்!

நாயகன்: "என்னாச்சு சார்? ஏன் கட் சொல்லிட்டீங்க? நான் இன்னும் முத்தமே கொடுக்கலையே அதுக்குள்ளே OK சொல்லிட்டீங்க?"

இயக்குனர்: "ஆமா, நீ முத்தம் குடுத்து குடும்பம் நடத்துவே, அதை நாங்க உக்காந்து பாத்துகிட்டு இருக்கனுமா? கேள்வி கேக்காம மேக்கப் டச் பண்ணிக்கோ! அதுக்குள்ளே உனக்கு எப்படி வேர்த்து போயிருக்கு பாரு?"

நாயகி: "மானிட்டர்'னு தானே டைரக்டர் சொன்னாரு? இப்ப ஷாட் OK ன்னு சொல்றாரு?"

அசிஸ்டன்ட்: "ஆமா மேடம்! மானிட்டர்னு சொன்னா தான் நீங்க நால்லா நடிப்பீங்கன்னு எங்க டைரக்டருக்குத் தெரியும். அதான் அப்படி சொன்னாரு. இல்லன்னா இந்நேரம் எத்தனை தடவை கட்டிபுடிச்சி கசங்கியிருப்பீங்க..."

நாயகி: "சீன் அவ்வளவுதானா?"

அசிஸ்டன்ட்: "இல்ல மேடம்! கேமெரா ஆங்கிள் சேஞ்ச் பண்ணுறாங்க. அடுத்தது தான் கிஸ் பண்ணுற சீன்! அது உங்க ரெண்டு பேருக்கும் க்ளோஸ் ஷாட்!"

நாயகி: "ஓ! அப்படியா? சரி நான் ஒரு ஜூஸ் சாப்டுட்டு வந்திடவா?"

அசிஸ்டன்ட்: "OK மேடம்!"

சிறிது நேரத்தில் அடுத்த கட்டம் தயாரானது...

இயக்குனர்: "ஹீரோவை வரச்சொல்லுங்க!" என்று குரல் கொடுத்தார். ஹீரோவும் ஆர்வத்துடன் வந்து நின்றார்."

இயக்குனர்: "தம்பி, இப்போ.. அந்தப் பொண்ணு உங்க எதிர்ல இருக்கா. நீங்க உங்க முகத்தை கிட்ட கொண்டுவந்து கிஸ் பண்ணுற மாதரி எக்ஸ்பிரசன் கொடுக்கணும் OK வா?"

நாயகன்: "OK சார்! அந்தப்பொண்ணு வரலையா?"

இயக்குனர்: "அது வரும்... முதல்ல நீங்க மட்டும் நடிங்க."

நாயகன்: "நான் மட்டும்.... எப்படி சார்?"

இயக்குனர்: "என்னடா இது...! அசிஸ்டன்ட் யாராவது வந்து இவருக்கு லுக்கு(Look) குடுங்கப்பா!"

அப்போது ஒரு உதவி இயக்குனர் வந்து, ஹீரோவின் முகத்துக்கு நேராக தனது கையை உயர்த்திக் காட்டிக் கொண்டு நின்றார்.

இயக்குனர்: "இதோ பார்! இது தான் அந்தப் பொண்ணு. இந்தக் கையைப் பார்த்து கிஸ் பண்ணுற மாதரி பீல் பண்ணு போதும்!"

நாயகன்: "கையை பாத்து எப்படி சார் பீல் பண்ணுறது? அந்த பொண்ணு வராதா?"

இயக்குனர்: "சும்...மா பொண்ணு பொண்ணுன்னு அலைஞ்சா கொன்னேபுடுவேன்! சினிமான்னா அப்படிதான்! இல்லாததை இருக்குற மாதரி காட்டுறது தான் நடிப்பு! நாங்க எடுக்குற படத்துல முத்தம்'னா இப்படித்தான் இருக்கும். நீ இந்தக் கையைப் பாத்து பீல் பண்ணு. நாங்க எடிட்டிங்'ல சரி பண்ணிக்கறோம்...

நாயகன்: "முத்தம் குடுக்குற சீன்'னு சொன்னதும், நான் என்னென்னமோ நினைச்சிருந்தேன் சார்! இப்படி கையை பார்த்து பீல் பண்ண சொல்லுறீங்களே... ஆனா, கமல் சார் மட்டும் உதட்டோட உதடு வச்சி லைவா கிஸ் அடிக்கிறாரே சார்?"

இயக்குனர்: "நீயும் கமல் சாரும் ஒண்ணா? இத பார்! ரொம்பப் பேசினா ஹீரோவை மாத்திடுவேன். மரியாதையா என்ன சொல்லுரோமோ அதை மட்டும் செய்!" என்று கோபமாக பேசினார் இயக்குனர்."

ஒளிப்பதிவாளர்: "தம்பி... இப்ப உங்களுக்கு டைட் குளோஸ் ஷாட் வச்சிருக்கேன். அதாவது அந்தப் பொண்ணும் நீங்களும் அருகருகே இருந்தா எப்படி இருக்குமோ அந்த மாதரி இந்தக் கேமேரா உங்களுக்கு ஸூம் வந்திருக்கு! நீங்க கொஞ்சம் நகர்ந்தாலும் பிரேம்'ல இருந்து காணாமப் போயிடுவீங்க. அதனால அசையா...ம.. டைரக்டர் சொல்ல சொல்ல உங்க முகத்துல ரியாக்ஷன் மட்டும் காட்டுங்க. சரியா?"

நாயகன்: "சரி சார்!" -என்று தலை ஆட்டினார்.

ஒளிப்பதிவாளர்: "தலை ஆட்டாதீங்க! இப்பதானே சொன்னேன் அசையக் கூடாதுன்னு! பிரேம்'ல வாங்க... கொஞ்சம் லெப்ட் வாங்க... கொஞ்சமா... கொஞ்சமா... அதாவது DEAD SLOW வா மூவ் பண்ணனும்... ஆம்!.. ஓகே... ரொம்ப அன்னாந்து பார்த்த மாதரி இருக்கே.... சின் டவுன்! சின் டவுன்!..."

என்று சொன்னதும் நாயகனை பிரேமில் காணவில்லை... ஒளிப்பதிவாளர் கேமேராவை விட்டு வெளியில் பார்க்கும் போது நாயகன் கீழே உட்கார்ந்திருந்தார்!

ஒளிப்பதிவாளர்: "என்ன சார் உட்கார்ந்திட்டீங்க? கால் வலிக்குதா?

நாயகன்: "இல்லை சார்! நீங்க தானே உட்கார சொன்னீங்க?

ஒளிப்பதிவாளர்: "நான் எப்போ உங்களை உட்கார சொன்னேன்?

நாயகன்: "இப்போ தானே நீங்க 'சிட் டவுன்', 'சிட் டவுன்'னு சொன்னீங்க!"

ஒளிப்பதிவாளர்: "அது 'சிட் டவுன்' இல்லப்பா... சின் டவுன்! அதாவது "CHIN DOWN"! CHIN'னா என்ன? நம்மோட தாவாய் இல்லையா? அதைத்தான் சொன்னேன். CHIN DOWN அப்படின்னா லேசா கீழே முகத்தை மட்டும் சாய்க்க சொன்னேன்"

இயக்குனர்: ஆமாய்யா... அவனுக்கு ஒன்னாங்கிலாஸ் பாடம் நடத்து! ஐ...யோ...! ஐ...யோ...! ஐ...யோ.... ஏன்யா இப்படி உயிரை வாங்குறீங்க? 'சின் டவுன்' க்கும் 'சிட் டவுன்' க்கும் வித்தியாசம் தெரியாத ஒரு ஹீரோவை வச்சிக்கிட்டு நான் எப்படித்தான் இந்தப் படத்தை மார்கெட் பண்ணப் போறேனோ தெரியலையே..."

ஒளிப்பதிவாளர்: "சார், டென்சன் ஆகாதீங்க!"

இயக்குனர்: "டென்சன் ஆகாம என்னய்யா பண்ண சொல்றே? அந்தப் பொண்ணு என்னடான்னா ரன்னிங் சொன்னதும் ஓடிப்போயிடுறா? இவன் என்னடான்னா 'சின் டவுன்' சொன்னா 'சிட் டவுன்'னு நினைச்சி உக்காந்துக்கறான்... இவங்க ஓடிப் புடிச்சி விளையாடுரதுக்குத்தான் நான் படம் எடுக்குறேனா? இது பத்தாதுன்னு சூட்டிங் பாக்குறவங்க எல்லா குவாட்டர் கொண்டு வா! ஆப் கொண்டு வான்னு என்னை கிண்டல் பண்ணுறாங்க... இதை நினைச்சா டென்ஷன் வராம, பென்ஷனா வரும்?"

ஒளிப்பதிவாளர்: "இருக்கட்டும் சார்! சீன் நல்லா இருக்கு.. அதுக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குவோமே! இந்த சீன் ரொம்ப பேசப்படும் சார்!"

இயக்குனர்: "யோவ்! எல்லாத்துக்கும் நீதான் காரணம்! எனக்கு நீ டைரக்ஷன் கத்துத்தரியா? எது நல்ல சீன்... எது கெட்ட சீனுன்னு எனக்குத் தெரியாதா? ரெண்டு பேரும் 'புது பசங்க' அப்படின்னுதானே நான் ஒரே ஷாட்ல சீனை முடிக்க சொன்னேன்! என்னமோ பீல் பண்ணுறேன்னு சொல்லிட்டு ஏன்யா இப்படியெல்லாம் என்னை காமெடி பண்ண வைக்கிறீங்க? ஐடியா குடுங்க வேண்டாம்னு சொல்லல... ஆனா உருப்படியா குடுங்க. நீங்க சீன் எடுத்து பழகுறதுக்கு நான்தான் கிடைச்சேனா? என் படத்துல முத்தம் கொடுக்குற சீனே வேண்டாம்... வேற சீன் எடுக்கலாம்! என்னைக் கொஞ்சம் யோசிக்க விடுங்க... பிரேக்!" என்று இயக்குனர் கடுப்பில் அமர்ந்திருக்க...

சிறிது நேரத்தில் கதாநாயகி இயக்குனரிடம் வந்தார்...

நாயகி: சார், வேற சீன் எடுக்கப்போறதா சொன்னாங்களே.. என்ன சீன் சார் எடுக்கப் போறோம்?

இயக்குனர்: என்னை கொஞ்சம் யோசிக்க விடும்மா...

நாயகி: இல்ல சார்... எடுக்கப்போற சீனுல நான் இருக்கேனா இல்லையானு சொல்லிடீங்கன்னா... நான் கெளம்பிடுவேன்....

இயக்குனர்: "நீதானே ஹீரோயின்? நீ இல்லாம நான் எப்படி படம் எடுக்குறது? இப்ப நான் டென்சன்ல இருக்கேன். முதல்ல இங்க இருந்து போயிடு!"

நாயகி: "சரி சார்.. என்ன காஸ்டியூம்'னு சொல்லிட்டீங்கன்னா நான் ரெடியாகிடுவேன்..."

".............."

"சாரியா...?"

".............."

"ஜீன்ஸ், டி-சர்ட்டா?"

".............."

"சுடிதாரா?..."

".............."

"என்ன காஸ்டியூம்'னு சொல்லுங்க சார்?" என்று நாயகி தொன தொணக்க.. கடுப்பாகிப் போன டைரக்டர் இப்படி சொல்லுறாரு...

இயக்குனர்: "நீ காஸ்டியூமே போட வேண்டாம்... எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்...! பேக் அப்!"

நான்: "ஏம்பா அசிஸ்டன்டு... உங்க டைரக்டரு இப்ப என்னப்பா சொல்லுறாரு?... முத்தம் குடுக்குற சீன்'னு சொன்னதும் அன்னம் தண்ணி கூட குடிக்காம காத்திருந்தேன்.... ஏமாத்திட்டீங்க! அடுத்து காஸ்டியூம் இல்லாத சூட்டிங்கா?

நல்லா காட்டுரீங்கய்யா சீனு!

குரல்: நீ எந்த மாதரி சீனை எதிர் பார்த்தாய் தம்பி?

நான்: "யாரது?.."

குரல்: "நான்தானப்பா... கேமெரா பேசுகிறேன்!"

நான்: "என்னது கேமெரா பேசுதா?"

தொடரும்...

எழுத்ததிகாரனுக்காக
-அந்தப்பார்வை
on 2nd September 2012, 3:22 am
avatar
Pranav Jain
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 127
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: கேமெராவும் நானும்...!

Post by Pranav Jain on Sat Sep 30, 2017 5:34 pm

நான்: "யாரது?.."

குரல்: "நான்தானப்பா... கேமெரா பேசுகிறேன்!"

நான்: "என்னது கேமெரா பேசுதா?"

கேமெரா: ஏன் இப்படி வாயைப் பிளக்கிறாய்?

நான்: கேமெரா எப்படி பேசும்? இதெல்லாம் ஓவரா தெரியலையா? யாருப்பா அது என்னை மறைஞ்சிருந்து கலாய்க்கிறது?

கேமெரா: கடவுளிடம் பேசுகிறேன் என்று என்று நம்ப வைத்து கலாட்டா செய்தவன்தானே நீ?... இருக்கா? இல்லையா? என்றே தெரியாத கடவுளே பேசும்போது உனது கண்ணெதிரில் இருக்கும் கேமெரா நான் பேசக்கூடாதா?

நான்: (Mind Voice) மனுஷங்களைத்தவிர மத்த எல்லாமே என்கிட்டே பேச ஆசைப்படுதே... ஒருவேளை நிஜமாவே நான் கடவுளா இருப்பேனோ?...

கேமெரா: சூட்டிங் ஸ்பாட் ல நின்னு டப்பிங் பேசாம... முதல்ல என்கிட்டே பேசு! நிஜமாவே நான்தான் பேசுகிறேன்....

நான்: உங்ககிட்ட பேசினா நான் என்ன பெரிசா கத்துக்க முடியும்? எனக்கு சினிமாவை கத்துக்கணும்...

கேமெரா: உனக்கு நான் சினிமா கற்றுத்தருகிறேன்.. OK வா?...

நான்: சினிமாவைப்பற்றி உங்களுக்கு அப்படி என்ன பெரிசா தெரியும்?

கேமெரா: இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரியாத பல விஷயங்கள் எனக்குத் தெரியும். நான் இல்லாமல் ஒரு பிரேம்கூட திரைக்கு வர முடியாது. இதை விட பெரிதாக என்ன தகுதி வேண்டும் சினிமாவைக் கற்றுக்கொடுப்பதற்கு?

நான்: சரி, இதோ படம் எடுத்துக் கொண்டிருக்கும் உங்கள் இயக்குனரின் முதல் திரைப்படத்தைப் பற்றி தகவல் சொல்லுங்கள் நான் பத்திரிகையில் விமர்சனம் எழுதுகிறேன்.

கேமெரா: தேவை இல்லை!! எங்கள் இயக்குனரிடம் எண்ணிலடங்காத இணையதளங்கள் இருக்கிறது. நாங்களே விமர்சனம் எழுதிக்கொள்கிறோம்.

நான்: என்னது.... நீங்களே எழுதிக்கறீங்களா? ஹலோ, உங்களைப்பற்றி நீங்களே எழுதிக்கொள்ளக் கூடாது. நாங்கள்தான் எழுத வேண்டும். அப்போதுதான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

கேமெரா: சரி அப்படின்னா நீங்களே எழுதுங்க...

நான்: அதுக்குத்தான் கேக்குறேன்.... உங்க டைரக்ட்டர்கிட்ட சொல்லி திரைப்படத்தைப் பற்றி தகவலை சொல்ல சொல்லுங்கள். அல்லது எனக்கு ஒரு பிரிவியூ போட்டுக் காட்டச் சொல்லுங்கள்.

கேமெரா: நீங்க எழுதுனாத்தான் மக்கள் ஏத்துப்பாங்கன்னா..... நீங்களே எழுத வேண்டியதுதானே?

நான்: அட என்ன நீங்க? உங்க படத்தைப் பத்தி நீங்க சொன்னாத்தானே நாங்க எழுத முடியும்...

கேமெரா: ஏம்பா, எங்க திரைப்படத்தைப் பற்றி நாங்க உன்கிட்ட சொல்லி, நீ அதை பத்திரிக்கைக்காரங்ககிட்ட சொல்லி, அவங்க பத்திரிக்கையில எழுதி அதுக்கு அப்புறமா அதை மக்கள் படிக்கிறதுக்கு பதிலா... நாங்களே நேரடியா சொன்னா மக்கள் ஏத்துக்க மாட்டாங்களா?

நான்: உங்களுக்கு சினிமா தெரியலைன்னு நினைக்கிறேன். அதான் இப்படி பேசுறீங்க...

கேமெரா: யாருக்கு.....? எனக்கா....? எனக்கு சினிமா தெரியாதா? இத பார்... நீ கண்ண மூடி கண்ண தொறக்குற அந்த சின்ன கேப்ல 24 லேருந்து 60 பிரேம் வரைக்கும் நான் பார்த்து படம் புடிச்சு வச்சுடுவேன். யாருகிட்ட வந்து சினிமா தெரியலைன்னு சொல்லிகிட்டு இருக்கே...

நான்: அட அதுக்கு சொல்லலைங்க.... விமர்சனம் எல்லாம் நீங்களே எழுதினா நல்லாவா இருக்கும்?

கேமெரா: ஏன் நல்லா இருக்காது? நல்லவன் எப்படி பேசுவான், கெட்டவன் எப்படி பேசுவான் அப்படின்னு ரெண்டரை மணி நேர சினிமாவுக்கு கதை எழுதத்தெரிஞ்ச எங்களுக்கு ஒன்னரை பக்கத்துல விமர்சனம் எழுதத் தெரியாதா?

நான்: அட என்னங்க உங்க டைரக்டரோட ஒரே ரோதனையா போச்சு! புதுசு புதுசா எதையாவது ஆரம்பிச்சு விட்டு அடுத்தவங்க பொழப்பை கெடுக்குறதே வேலையா வச்சுகிட்டு இருக்காரு... நீங்களே வீட்டுக்கு வீடு டைரக்டா படத்தை ரிலீஸ் பண்ணுவீங்க, இப்ப நீங்களே விமர்சனமும் எழுதிக்குவீங்க... அப்புறம் எங்களை மாதரி ஆளுங்க எல்லாம் எப்படித்தான் பொழைக்குறது?

கேமெரா: ம்ம்... வீட்டுக்கு வீடு போய் உக்காந்து விமர்சனம் பண்ணுங்க.... யாரு வேண்டாம்னு சொன்னது?

நான்: இதெல்லாம் ரொம்ப ஓவர்!

கேமெரா: இது என்ன பெரிய ஓவர்... அடுத்த கட்டமா எங்க டைரக்டர் என்ன பண்ணப் போறாரு தெரியுமா?

நான்: என்ன பண்ணப் போறாரு?

கேமெரா: படத்தை எடுத்து அப்புறம் DVD போட்டு வீட்டுக்கு வீடு டைரக்ட்டா ரிலீஸ் பன்னுரதுக்குப் பதிலா, ஆர்ட்டிஸ்ட்டை எல்லாம் அழைச்சுக்கிட்டுப்போயி வீட்டுக்கு வீடு நேரடியா நடிக்க வச்சு காட்டப் போறாரு...

நான்: அடப்பாவிங்களா.... ஏதோ கொஞ்சம் திறமை இருக்கு, புத்திசாலித்தனமா சிந்திக்கிறீங்க, சினிமாவுல புதுசா எதையோ செய்யப் போறீங்கன்னு தமிழ் நாடே உங்கள் டைரக்டரை எதிர்பாத்துகிட்டு இருக்கு.... ஆனா, நீங்க என்னடான்னா சினிமாவ பழையபடி தெருக்கூத்துல கொண்டுபோய் விட்டுடுவீங்க போலருக்கே...

கேமெரா: புதுசு புதுசா செய்யிரதுன்னா பின்ன எப்பூடீ?...

நான்: உங்களையெல்லாம் மதிச்சு பேச வந்தேன் பாருங்க... என்னை சொல்லணும்!

கேமெரா: ஏன் இப்படி அழுத்துக் கொள்ளுகிறாய்?

நான்: பின்னே என்னங்க?... ஆர்ட்டிஸ்ட்டை எல்லாம் வீட்டுக்கு வீடு அழைச்சுக்கிட்டு போனா நல்லாவா இருக்கும்?

கேமெரா: சரி, சரி... கோபம் கொள்ளாதே... ஆர்ட்டிஸ்ட்டை எல்லாம் வீட்டுக்கு வீடு அழைச்சுக்கிட்டு போகாம. ஒரே வீட்டுக்குள்ள எல்லா ஆர்டிஸ்ட்டையும் உக்கார வச்சு, ரசிகர்களை வந்து பாக்க சொல்லலாமா?

நான்: அட...! இது புதுசா இருக்கே!


கேமெரா: பழசை எல்லாம் புதுப்பிச்சாதானே தமிழுக்கு சிறப்பு கிடைக்கும். சிலப்பதிகாரத்துல சொல்லியிருக்கு, சீவக சிந்தாமணியில சொல்லியிருக்கு அப்படின்னு திரும்ப திரும்ப பழசையே பேசிகிட்டு இருந்தா தமிழ் எப்படி வளரும்?

நான்: அப்படின்னா உங்க டைரக்ட்டர் புதுசா என்னவோ செய்யப்போறாரா?

கேமெரா: அவரு பேசுறது, எழுதுறது, செய்யிறது எல்லாமே பழசுதாம்பா... ஆனா மத்தவங்களுக்குப் புரியாத மாதரி தனது சொந்த புத்தியால புதுசு புதுசா ட்ரை பண்ணுறாரு.... அதனாலதான் எல்லாரும் அவரை பாலோ பண்ணுறாங்க!

நான்: அப்படின்னா எதையோ ரீ-மிக்ஸ் பண்ணுறாருன்னு சொல்லுங்க.

கேமெரா: ரீ-மிக்ஸ் தான்! ஆனா இந்தியாவையே புரட்டிப்போடுற அளவுக்கு அது ரொம்ப ஜீனியஸ்!

நான்: சினிமாக் கதையில எப்படிங்க இந்தியாவை புரட்டிப்போட முடியும்?

கேமெரா: முடியும்!

நான்: அதான் எப்படி முடியும்?

கேமெரா: Nothing is Impossible!

தொடரும்...

எழுத்ததிகாரன் க்காக
- அந்தப்பார்வை.
on 15th September 2012, 11:30 am
avatar
Pranav Jain
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 127
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: கேமெராவும் நானும்...!

Post by Dr.S.Soundarapandian on Sat Sep 30, 2017 9:11 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4408
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: கேமெராவும் நானும்...!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum