ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நீ…நீயாக இரு….!
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
 ayyasamy ram

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
 ayyasamy ram

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 vashnithejas

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
 MANOJMAHE

இது வாட்ஸ் அப் கலக்கல்
 ayyasamy ram

கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
 ayyasamy ram

மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 ayyasamy ram

மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
 ayyasamy ram

2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
 ayyasamy ram

மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
 ayyasamy ram

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
 ayyasamy ram

ஆங்கில நாவல்கள் தமிழில்
 Saravana2945

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
 T.N.Balasubramanian

என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
 ayyasamy ram

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
 ayyasamy ram

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?
 Pranav Jain

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Pranav Jain

Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
 Pranav Jain

பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
 ayyasamy ram

சஸ்பென்ஷன்’ பாலம்
 ayyasamy ram

புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
 ayyasamy ram

முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
 ayyasamy ram

பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
 ayyasamy ram

ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
 ayyasamy ram

மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
 sinjanthu

இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்
 sinjanthu

(REQ) சிவகாமி பர்வம் பாகுபலி பாகம் 1
 sinjanthu

மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
 ayyasamy ram

அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
 M.Jagadeesan

உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
 ayyasamy ram

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 T.N.Balasubramanian

சண்முகத்தின் சயாம் மரண ரயில் என்ற நாவல் தேவை
 pon.sakthivel

அறிமுகம்
 T.N.Balasubramanian

முத்துலட்சுமி ராகவன்- " அம்மம்மா கேளடி தோழி" 1 முதல் 5 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 மகேந்திரன்

என். சீதாலக்ஷ்மி யின் " மலரும் இதழே" தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

என் . சீதாலக்ஷ்மி-யின் " அன்பில்லார் எல்லாம் " தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
 M.Jagadeesan

ஜாக்கியின் காதல் பரிசு..!
 vashnithejas

பூவே இளைய பூவே
 ayyasamy ram

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
 anikuttan

iசென்னையில் மழை -விளையாட்டில் வெற்றி மழை.-கிரிக்கெட் /பேட்மிண்டன்
 ayyasamy ram

நீ நடக்குமிடமெல்லாம் அழகு ! (ஸ்வீடன் மொழிப்பாடல்)
 sinjanthu

தொடத் தொடத் தொல்காப்பியம்(459)
 Dr.S.Soundarapandian

வீழ்வதற்கல்ல! - கவிதை
 Dr.S.Soundarapandian

தலைவருக்கு எது அலர்ஜி?
 Dr.S.Soundarapandian

முரண்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
 Dr.S.Soundarapandian

அழகுத் தேவதை ! (இத்தாலிய நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சோழன் Vs பாண்டியன்

View previous topic View next topic Go down

சோழன் Vs பாண்டியன்

Post by சிவா on Tue Sep 15, 2009 2:12 am

ஒட்டக்கூத்தர் குலோத்துங்க சோழ மன்னனின் குருவாகவும் அவைக்களப் புலவராகவும் இருந்தவர். அவர் வாழ்ந்த காலத்திலேயே புகழேந்திப் புலவர், கம்பர், ஒளவையார், திருவள்ளுவர் முதலானோர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்குள் அடிக்கடி நிகழ்ந்த சந்திப்புக்களும் கவிதைப் போட்டிகளும் மிகவும் ஸ்வாரஸ்யமானவை.

ஒட்டக்கூத்தர் ஒரு நாள் தன் சீடனான குலோத்துங்க சோழ மன்னனுக்குப் பெண் கேட்டுப் பாண்டிய நாட்டுக்குச் சென்றார். அப்போது பாண்டிய மன்னன் அவரை நோக்கி, "எங்கள் பாண்டிய நாட்டுடன் சம்பந்தம் செய்து கொள்வதற்க்கு உங்கள் சோழ நாட்டுக்கு என்ன தகுதி இருக்கிறது?" என்று வினவ, ஒட்டக்கூத்தர் பின்வரும் பாடலைக் கூறினார்.

ஆருக்கு வேம்பு நிகராகுமோ அம்மானே?
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே?
வீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானே?
வெற்றிப் புலிக் கொடிக்கு மீனமோ அம்மானே?
ஊருக்குறந்தை நிகர் கொற்கையோ அம்மானே?
ஒக்குமோ சோணாட்டைப் பாண்டி நாடம்மானே?


இப்பாடலின் பொருள்:

சோழ மன்னர் அணியும் ஆல மலர் மாலைக்குப் பாண்டிய மன்னர் அணியும் வேப்ப மலர் மாலை ஈடாகுமோ? சோழர்களின் குலச் சின்னமான சூரியனுக்குப் பாண்டியர்களின் குலச் சின்னமான சந்திரன் ஈடாகுமோ? வீரர்களுக்குள் சிறந்த வீரன் புலிக்கொடி தரித்த சோழனேயல்லாது மீன் கொடி தரித்த பாண்டியன் ஆவானோ? வெற்றியின் சின்னமான புலிக் கொடிக்கு மீன் கொடி நிகராகுமோ? ஊர்களில் சிறந்த சோழர்களின் உறந்தை நகருக்குப் பாண்டியர்களின் கொற்கை நகர் ஈடாகுமோ? சோழ நாட்டுக்குப் பாண்டிய நாடு ஈடாகுமோ?.

இதனக் கேட்ட பாண்டிய மன்னனனின் அவைக்களப் புலவரான புகழேந்திப் புலவர் இதனை மறுக்கும் வகையில் பின்வரும் பாடலைக் கூறினார்.

ஒரு முனிவன் நேரியிலோ உறைதெளித்த தம்மானே?
ஒப்பறிய திருவிளையாட் டுறந்தையிலோ அம்மானே?
திரு நெடுமாலவதாரஞ் சிறுபுலியோ அம்மானே?
சிவன் முடியிலேறுவதுஞ் செங்கதிரோ அம்மானே?
கரையெதிரல் காவிரியோ வையையோ அம்மானே?
கடிப்பகைக்குத் தாதகியங்கண்ணியோ அம்மானே?
பரவை பரந்ததுஞ் சோழன் பதந் தனையோ அம்மானே?
பாண்டியனார் பராகிரமம் பகர்வறிதே அம்மானே?


இப்பாடலின் பொருளாவது:

அகத்திய முனிவன் தமிழைப் படைத்தது சோழ நாட்டின் நேரி மலையிலா? அல்லவே. பாண்டிய நாட்டின் பொதிகை மலையிலல்லவா படைத்தான்? சிவபெருமானுடைய திருவிளையாடல்கள் நிகழ்ந்தது சோழ நாட்டின் உறந்தை நகரிலா? அல்லவே. பாண்டிய நாட்டின் மதுரை நகரிலல்லவா நிகழ்ந்தது! திருமால் பாண்டியர்களின் சின்னமான மீனாகத்தான் அவதரித்தாரே தவிர சோழர்களின் சின்னமான புலியாகவா அவதரித்தார்? புலவர்களின் படைப்புக்களைத் தாங்கிய சங்கப் பலகை நீரோட்டத்தை எதிர்த்து வந்து அவற்றை அங்கீகரித்தது பாண்டிய நாட்டின் வைகை ஆற்றிலேதானே நிகழ்ந்தது? சோழ நாட்டின் காவிரி ஆற்றிலா நிகழ்ந்தது? பேய் பிசாசுகளை விரட்டப் பயன்படுவது வேப்பிலை தானே? ஆலிலை அல்லவே. கடல் ஒரு முறை பாண்டியரைப் பணிந்தது. அது சோழரைப் பணிந்ததா? பாண்டியர்களின் வீரம் சொல்வதற்கு அரிது.

இதனைக் கேட்ட ஒட்டக் கூத்தருக்கு பதில் சொல்லத் திணறிவிட்டார். எப்படியோ, இவர்களின் சச்சரவில் நமக்கு நல்ல தமிழ்ப் பாடல்கள் கிடைத்தனவே!

- ஏ.கே.ராஜகோபாலன்


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சோழன் Vs பாண்டியன்

Post by வித்யாசாகர் on Tue Sep 15, 2009 2:41 am

ஆமாம் சகோதரரே, எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி..
avatar
வித்யாசாகர்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1819
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

Re: சோழன் Vs பாண்டியன்

Post by nandhtiha on Tue Sep 15, 2009 6:34 am

மதிப்புக்குரிய சிவா அவர்களே

வாரம் ஒரு முறையாவது இம்மாதிரியான பாடல்களைப் பதிப்பித்து வாருங்கள். மறந்து போனவைகள நினைவுக்கு வருகின்றன. பலவற்றைப் புதிதாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. தாங்கள் வெளியிட்ட இலக்கண்ச் சுருக்கம் என்னிடம் படிக்கும் குழந்தைகளுக்கு கற்பிக்க எளிதாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி.
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: சோழன் Vs பாண்டியன்

Post by Raja2009 on Sat Sep 19, 2009 4:21 pm

மிக அருமையான தகவல். நன்றி. குருக்ஷேத்திர போரில் சோழர்களும் பாண்டியர்களும் எதிரெதிராக பாண்டவ, கெளரவர்கள் அணிகளில் பங்கு பெற்றதாகவும், உதியஞ்சோற்று பெருஞ்சேரலாதன் என்னும் சேர அரசன், இரு படைகளுக்கும் பொதுவாக இருந்து உணவளித்ததாகவும் என்னுடைய ஆசிரியர் கூறியிருக்கிறார். அந்த பாட்டு என்னிடம் இல்லை. தங்களிடம் உள்ளதா? இருந்தால் தயவு செய்து பதியுங்கள்.

ராஜா

Raja2009
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 43
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum