ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 ayyasamy ram

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 ayyasamy ram

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 ayyasamy ram

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 பழ.முத்துராமலிங்கம்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

கேரளா சாகித்ய அகாடமி
 ayyasamy ram

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தெய்வத்திருமகள் திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

தெய்வத்திருமகள் திரை விமர்சனம்

Post by தாமு on Tue Jul 19, 2011 5:57 am

பெயர் சர்ச்சைகளில் சிக்கி வெளிவந்தாலும் படத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் அழகாக படமாக்கப்பட்டு இருக்கிறது. முன்பு தெய்வமகன் என்று வைத்தார்கள் அதற்கு எதிர்ப்பாக பின் தெய்வத்திருமகன் என்று மாற்ற அதற்கும் எதிர்ப்பு கிளம்ப பின் விக்ரமின் தெய்வத்திருமகன் என்று மாற்றி பின் அதுவும் வேண்டாம் என்று தெய்வத்திருமகள் என்று இறுதி செய்யப்பட்டது. நல்ல வேளை இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அதிமுக காரங்க வந்து எதுவும் சொல்லி விடுவார்களோ என்று பயந்தேன்

கதையை ஒருவரியில் கூறுவதென்றால் மனவளர்ச்சிக் குறைந்த ஒருவருக்கும் அவருடைய மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டமே தெய்வத்திருமகள் ஆகும்.

விக்ரம் இதில் கிருஷ்ணா என்கிற கதாப்பாத்திரத்தில் மனவளர்ச்சி குறைந்தவராக நடித்து இருக்கிறார். மனவளர்ச்சி குறைந்தவராக நடிக்கிறேன் பேர்வழி என்று உண்மையாகவே மனவளர்ச்சி குறைந்தவர்களை விட அதிகமாக நடித்து நம்மை டரியல் ஆகும் நடிகர்களைப் போல இல்லாமல் இயல்பாக செய்து இருக்கிறார். விக்ரம் நடித்த சிறந்த படங்கள் என்றால் எனக்கு இன்றும் பிடித்தது சேது, காசி போன்ற படங்களாகும் அதில் தெய்வத்திருமகள் தற்போது இணைந்தது விட்டது. விக்ரமின் மனைவி குழந்தை பிறந்தவுடன் இறந்து விடுகிறார் அதன் பிறகு குழந்தையை வளர்க்கும் பொறுப்பு விக்ரமுக்கு வருகிறது. இதன் பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை.

விக்ரமிற்கு வயதானது நன்கு தெரிகிறது எனவே இனிமேலும் படம் நடிக்க அதிக காலம் எடுக்காமல் இளமை இருக்கும் போதே அதற்குண்டான படங்களில் நடிக்க முயற்சிப்பது அவருக்கு நல்லது பின்னர் ஆசைப்பட்டாலும் சில கதாப்பாத்திரங்களில் நடிக்க முடியாமல் போகலாம்.

விக்ரம் நடிப்பிற்கு சற்றும் குறையாமல் அழகான நடிப்பை வெளிப்படுத்தி நடித்து இருப்பது சாரா என்ற சிறுமி இவர் விக்ரமின் மகளாக நிலா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். பார்க்க ப்ரிட்ஜில் வைத்து எடுத்த ரோஜாப்பூ மாதிரி இருக்கிறார் அவ்வளவு அழகு. பொதுவாக சில குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறிய பேச்சுக்களை பேசி அல்லது இயக்குனரால் நடிக்கவைக்கப்பட்டு நம்முடைய பொறுமையை சோதிப்பார்கள் இதில் தனது கதாப்பாத்திரத்திற்கு ஏற்றபடி அளவாக நடித்துள்ளார். குழந்தைகள் எல்லாம் எப்படித்தான் இவ்வளவு அருமையாக நடிக்கிறார்களோ! ஆச்சர்யமாக இருக்கிறது.

அனுஷ்கா இதில் வக்கீலாக வருகிறார். அனுஷ்கா விற்கு மனநிறைவான கதாப்பாத்திரமாக இது இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன். நரம்பு புடைக்க எல்லாம் பேசாமல் இயல்பாகவே வாதங்களை வைக்கிறார். இவரது எதிர் வக்கீலாக நாசர். நாசர் ஏற்க்கனவே ப்ரியங்கா போன்ற படங்களில் வக்கீலாக நடித்து விட்ட படியால் புதிதாக கூற ஒன்றுமில்லை. அனுஷ்கா விக்ரம் சார்பாக ஆஜராகி இருப்பார் அதில் அவர் ஜெயிக்க செய்யும் பின்பற்றும் யோசனைகள் லாஜிக் மீறலாக இருந்தாலும் காமெடியாக இருந்ததால் பெரிய விசயமாக தோன்றவில்லை. என்ன தான் இயல்பாக எடுத்தாலும் விக்ரம் கட்டிப்பிடித்த பிறகு அனுஷ்காவிற்கு ஒரு பாட்டு வைத்துட்டாங்க நல்ல வேளை அதில் அனுஷ்கா மட்டுமே. விக்ரமுடன் ஸ்விஸ் சென்று ஒரு டூயட் போடாமல் விட்டார்களே!

சந்தானம் படத்தை போர் அடிக்காமல் கொண்டு செல்ல பெரிதும் உதவி இருக்கிறார். விக்ரம் ஒருவரிடம் சென்று நிலா நிலா என்று திரும்பக்கூற யோவ்! என்னையா சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ற என்றதும்… சந்தானம்! இரண்டு வாட்டி சொன்னதுக்கு இப்படி டென்ஷன் ஆகுறியே..நான் இரண்டாயிரம் வாட்டி கேட்டுட்டேன் என்று கலகலப்பூட்டுகிறார் இது என்றில்லை பல இடங்களில் படத்தின் இறுக்கத்தை குறைக்க பெரிதும் உதவியிருக்கிறார். இதில் நாசர் ஜூனியர் ஆக வருபவர் செய்யும் நடவடிக்கைகளும் ரசிக்கும்படி இருந்தன. இதோடு MS பாஸ்கர், பாண்டி என்று நகைச்சுவைக்கு பலர் இருக்கின்றனர்.

அமலா பால் இருக்கிறார். படத்தில் அவருக்கு முக்கியமான கதாப்பாத்திரம் இல்லை என்றாலும் கொடுக்கப்பட்ட அளவு சிறப்பாக உள்ளது அதை இவரும் சிறப்பாக செய்து இருக்கிறார். குறை ஒன்றும் கூற முடியவில்லை.

குட்டி லாஜிக் மீறல்கள் இருந்தது அது எப்படி? இது ஏன்? இவை போன்ற கேள்விகள் அதே போல சின்னத்தம்பி படத்தில் பிரபு க்கு வந்தே அதே சந்தேகம் விக்ரமுக்கும் வந்தது இதை எல்லாம் தவிர்த்து பார்த்தால் அருமையான படம் தமிழுக்கு.

பாடல்கள் சில ஓகே அனைத்தும் அருமை என்று கூறமுடியவில்லை. ஆனால் பின்னணி இசை அட்டகாசமாக இருந்தது. இசை GV பிரகாஷ். இதோடு கண்டிப்பாக குறிப்பிடவேண்டிய இன்னொரு விஷயம் கேமரா. அசத்தல் போங்க. சும்மா புதுக் கண்ணாடி கணக்கா பளிச்சுன்னு இருக்கு. வண்ணமயமாகவும் இருக்கு. ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா க்கு என்னுடைய பாராட்டுகள்.

முதலில் இந்தப்படம் பற்றி படித்தவுடனே படம் ரொம்ப சீரியஸ் ஆக இருக்கும் என்று நினைத்தேன் இதைப் படித்துகொண்டு இருக்கும் நீங்கள் கூட நினைத்து இருக்கலாம் உண்மையில் படம் அப்படி இல்லை நன்கு கலகலப்பாகவே இருந்தது. எனவே இதைப்போல நினைப்பில் இருந்தால் தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள். இயக்குனர் விஜய் க்கு என் மனமார்ந்த பாராட்டுகள். நல்லப் படங்களை தரும் இயக்குனர்கள் வரிசையில் இன்னொருவர் இணைந்து இருப்பது சந்தோசமாக உள்ளது. இதைப்போல படங்களை அலுப்பு தட்டாமல் கொண்டு செல்லவே மிகப்பெரிய திறமை வேண்டும். “ஐ யாம் சாம்” என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது.. உண்மையா!

Directed by A. L. Vijay
Produced by M. Chinthamani,Ronnie Screwvala
Written by A. L. Vijay
Starring Vikram, Baby Sara, Anushka Shetty,Amala Paul,Nassar,Santhanam
Music by G. V. Prakash Kumar
Cinematography Nirav Shah
Editing by Anthony
Studio Sree Rajakaliamman Medias
Distributed by UTV Motion Pictures
Release date(s) 15 July 2011

கிரி பிளாக்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum