ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 T.N.Balasubramanian

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

8. வித்தியாசமான படங்கள்
 heezulia

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹன்சிகாலயம்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

ஹன்சிகாலயம்

Post by dsudhanandan on Thu Jul 21, 2011 9:30 am

First topic message reminder :




இடம்: கோடம்பாக்கம் கோபாலகிருஷ்ண சாஸ்திரிகள் வீடு

(வாசலில் ஹன்சிகா ரசிகர்கள்)

சாஸ்திரிகள்: வாங்கோ! வாங்கோ! யாரு நீங்கெல்லாம்?

ரசிகர்: நாங்கெல்லாம் கோயமுத்தூர் தங்கத் தாரகை ஹன்சிகா ரசிகர் மன்றத்துலேருந்து வந்திருக்கோம் சாமி!

சாஸ்திரிகள்: பேஷ்! பேஷ்! உட்காருங்கோ! காப்பி சாப்பிடறேளா? என்னது? பஸ் ஸ்டாண்டுலேயே டாஸ்மாக்குலே சிரமப்பரிகாரம் பண்ணிண்டு வந்திருக்கேள் போலிருக்கே?

ரசிகர்: ஹி.. ஹி! ஆமாம் சாமி! அதாவது எங்க தலைவிக்கு ஒரு கோவில் கட்டப்போறோம். ஹன்சிகாலயம்னு பேரு! அதுக்கு நீங்க தான் கும்பாபிஷேகம் பண்ணி வைக்கணும் சாமி!

சாஸ்திரிகள்: அதுக்கென்ன, திவ்யமா, ஆனந்தமா, அமர்க்களமா, அமோகமாப் பண்ணிட்டாப் போச்சு!

ரசிகர்: அதுலே பாருங்க சாமி! திருச்சியிலே குஷ்புவுக்குக் கோவில் கட்டினாங்க! அதுக்கப்புறம் குஷ்புவுக்கு மார்க்கெட் போயிருச்சு. தேவையில்லாம இந்தியாவுலே பாஸ்கெட்பால் கோர்ட், டென்னிஸ் கோர்ட், பேட்மிண்டன் கோர்ட் தவிர இருக்கிற எல்லா கோர்ட்டும் ஏறி இறங்கினாங்க!

சாஸ்திரிகள்: ஆமாமாம்!

ரசிகர்: அப்புறம் திருநெல்வேலியிலே நமீதாவுக்குக் கோவில் கட்டினாங்க! அவங்க மார்க்கெட்டும் அவுட்டாயிருச்சு! கோவில் திருப்பணியும் பாதியிலேயே நின்னுருச்சு! மூணு வருஷமாகப்போகுது, இன்னும் கும்பாபிசேகம் கூட ஆகலை! இருந்த ஒரு உண்டியலையும் யாரோ திருடிட்டாங்களாம்.

சாஸ்திரிகள்: அவா ப்ராப்தம் அவ்வளவு தான்!

ரசிகர்: அப்புறம் தமன்னாவுக்கு தூத்துக்குடியிலே ரசிகர் மன்றம் ஆரம்பிச்சாங்க... மார்கெட் இல்ல... காதல் தோல்வி அப்படின்னு பேசிக்கிறாங்க...

சாஸ்திரிகள்: ஆமாமாம்!

ரசிகர்: எங்க ஹன்சிகாலயம் அப்படி ஆயிடக்கூடாது சாமீ! அதுனாலே எல்லாத்தையும் முறைப்படி செய்யணும். அதுனாலே தான் உங்க கிட்டே வந்திருக்கோம். தட்சணை எவ்வளவு வேண்ணாலும் தர்றோம் சாமி!

சாஸ்திரிகள்: அதுக்கென்ன? எல்லாத்தையும் சாஸ்திரோக்தமாப் பண்ணிட்டாப் போச்சு! எதுக்கும் ஹன்சிகாவோட ஜாதகம் இருந்தாக் கொடுங்கோ! இல்லேன்னா அவாளோட பொறந்த நாளாவது சொல்லுங்கோ!

ரசிகர்: 1991-ம் வருஷம் ஆகஸ்ட் மாசம் 9-ம் தேதி

சாஸ்திரிகள்: அப்படீன்னா, பூசம் நட்சதிரம், கடக ராசி! இந்த வருஷம் சக்கைப்போடு போடுவாளே!

ரசிகர்: ஆமாம் சாமி! ரிலீஸ் ஆகிற எல்லா படமும் சூப்பர் ஹிட் ஆகணும்!

சாஸ்திரிகள்: இருக்காதா பின்னே? நல்லா முயற்சித்தா கோடீஸ்வரரா ஆகலாம்னு இந்த வருஷ ராகு, கேது பெயர்ச்சி பலன் சொல்லுதே... எங்காத்துக்காரிக்கும் கடக ராசிதான்! பின்னு பின்னுன்னு பின்னறாளோன்னோ?

ரசிகர்: வரும்போதே கேட்டோம்! ’ஐயோ அம்மா’ன்னு கூவிக்கிட்டிருந்தீங்க! சரி சாமி! முதல்லே திருப்பணியை எப்படி ஆரம்பிக்கலாமுன்னு சொல்லுங்கோ!

சாஸ்திரிகள்: நான் சொல்றேனேன்னு தப்பா நினைக்காதேள்! என்னதான் கும்பாபிஷேகம் நான் பண்ணினாலும், கொஞ்சம் நம்ம தமிழ்ப்பண்பாடு கலந்து பண்ணுங்கோ! இல்லேன்னா, சுயமரியாதை பேசறவா கோவிலுக்கு வரமாட்டா!

ரசிகர்: அதுவும் சரிதான்! எங்க ஹன்சிகாலயத்துலே எந்த ஏற்றத் தாழ்வும் இருக்கக்கூடாது சாமீ! அப்படியிருந்தா தலைவியோட அருள் கிடைக்காது.

சாஸ்திரிகள்: உங்க ஹன்சிகா எங்கே பொறந்தாங்க?

ரசிகர்: ஆஸ்பத்திரியிலே....!

சாஸ்திரிகள்:
அதைக் கேட்கலேங்காணும்! எந்த ஊருலே பொறந்தான்னு கேட்கறேன்!

ரசிகர்: ஓ! அதுவா! இந்தூர், மத்தியப் பிரதேசத்திலே பொறந்தாங்கோ!

சாஸ்திரிகள்: பேஷ்! பேஷ்! அதான் மஹாகாலேஷ்வர் அருள் பரிபூரணமா இருக்கு! நீங்க என்ன பண்ணறேள், ஹன்சிகாவோட சிலைக்கு தேவையான கல்லை மத்தியப் பிரதேசத்திலேருந்து எடுத்துண்டு வாங்கோ!

ரசிகர்: மத்தியப் பிரதேசத்திலே மலையிருக்கா சாமீ?

சாஸ்திரிகள்: என்ன அப்படிக் கேட்டுட்டேள்? பிம்பெட்கா பாறை வாழிடங்கள் (Bhimbetka Rock Shelters), பாறை ஓவியங்கள் எல்லாம் இருக்கு! அங்கேருந்து கல்லைப் பேத்து எடுத்துண்டு வந்து அந்தக் கல்லிலே ஹன்சிகாவுக்கு சிலை பண்ணுங்கோ!

ரசிகர்: இதை மாதிரி யாரோ ஒரு தமிழ் மன்னர் பரங்கிமலையிலேருந்து கல்லெடுத்துட்டு வந்து மணிமேகலைக்குக் கோவில் கட்டினதா பூகோளத்துலே படிச்சிருக்கேனே?

சாஸ்திரிகள்: பகவானே! கஷ்டம்! கஷ்டம்!! அது பரங்கிமலை இல்லை, இமயமலை! மணிமேகலைக்கு இல்லை, கண்ணகிக்கு! நீர் படிச்சது பூகோளம் இல்லேங்காணும், சரித்திரம்!

ரசிகர்: ஏதோ ஒண்ணு! இப்போ அதுவா முக்கியம்? சரி சாமி! நீங்க சொல்லுறா மாதிரியே மத்தியப் பிரதேசத்திலேருந்து கல்லைப் பேத்து எடுத்து, எங்க தலை மேலேயே வச்சிக்கிட்டு அங்கிருந்து கோயமுத்தூரு வரைக்கும் பொடிநடையா வந்து சேர்ந்திடறோம்.

சாஸ்திரிகள்: அதெல்லாம் எதுக்கு? ரயில்லே வர வேண்டியது தானே?

ரசிகர்: இல்லை சாமி! டிக்கெட் கிடைக்காது! அப்புறம் எங்க தலைவி சிலைக்கு தேவைப்படும் கல்லை தலையிலே வச்சிட்டு வர்றதை பெரிய புண்ணியமா கருதறோம்!

சாஸ்திரிகள்: சும்மாச்சொல்லப்படாது! உங்க பக்திக்கு முன்னாலே ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஒண்ணுமேயில்லை போங்கோ!

ரசிகர்:
இன்னும் முழுசா நான் சொல்லவே இல்லை சாமி! எங்க ஹன்சிகா கோவிலிலே விபூதி, குங்குமம் கொடுக்க மாட்டோம். எங்க தங்கத்தாரகை படத்தைப் பார்த்தவங்க மீதியிருக்கிற பாதி டிக்கெட்டை ஒரு தனி உண்டியலிலே போடுவாங்க! நாங்க ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெரிசா யாகம் பண்ணி, அதுலே அந்த டிக்கெட்டையெல்லாம் போட்டு பொசுக்கி, அந்த சாம்பலைத் தான் திருநீறாக் கொடுக்கப்போறோம்!

சாஸ்திரிகள்: பேஷ்! பேஷ்!!

ரசிகர்: அது மட்டுமா? விசேஷ பூஜையெல்லாம் கூட முடிவு பண்ணிட்டோம். மாப்பிள்ளை பூஜை, வேலாயுதம் பூஜை, காதல் பூஜைன்னு ஒவ்வொரு நாளும் தலைவிக்கு விதவிதமா அலங்காரம் பண்ணுவோம்.

சாஸ்திரிகள்: பிரமாதம்! உற்சவம் உண்டா?

ரசிகர்:
அது இல்லாமலா? தலைவி பொறந்த நாளை ஒவ்வொரு ஆகஸ்ட் மாசம் 9-ம் தேதியும் ஹன்சிகாவோற்சவமுன்னு கொண்டாடுவோம். எல்லாருக்கும் தடலும், வரோவும் பிரசாதமாக் கொடுப்போம்.

சாஸ்திரிகள்: என்னது? தடலும், வரோவுமா?

ரசிகர்: ஆமாம் சாமீ! எங்க தலைவி சிந்தி பொண்ணு இல்லையா? அதான் பிரசாதமா தடலும், வரோவும்... சிந்தி பட்சணம் சாமி...

சாஸ்திரிகள்: விசேஷம் தான் போங்கோ! சரி, பஞ்சாங்கத்தைப் பார்த்துட்டு கும்பாபிஷேகத்துக்கு ஒரு நல்ல நாள் முடிவு பண்ணி தகவல் அனுப்பறேன். உங்க அட்ரஸ், செல்போன் நம்பரெல்லாம் கொடுத்திட்டுப்போங்கோ!

ரசிகர்: சரி சாமீ! இந்தாங்க எங்களோட தட்சணை!

சாஸ்திரிகள்: என்னது, பெரிய மூட்டையான்னா இருக்கு?

ரசிகர்: அதொண்ணுமில்லே சாமி! எங்க கிட்டே காசு இல்லை! இப்பெல்லாம் டெபிட் கார்டு ஆனதினாலே அப்பன் பாக்கெட்டிலேயும் ஒண்ணும் கிடைக்க மாட்டேங்குது... அதுனாலே எல்லாரும் அவனவன் போட்டிருக்கிற வாட்சு எல்லாத்தையும் கழட்டி மூட்டையாக் கட்டிக் கொண்டு வந்திருக்கோம். இதையெல்லாம் வித்தா நல்ல தொகை தேறும்!

சாஸ்திரிகள்: அட கஷ்டமே!

ரசிகர்: நீங்க ஃபீல் பண்ணாதீங்க சாமி! பட்டினி கிடந்து செத்தாலும் சரி, தலைவிக்கு கோவில் கட்டியே தீருவோம்.

சாஸ்திரிகள்:
பண்ணுங்கோ பண்ணுங்கோ! இந்தச் சாக்குலே நானும் மருதமலையைப் பார்த்த மாதிரி இருக்கும்.

ரசிகர்: சாமீ! அத நீங்க DVD-லே பாத்துடலாமே!

சாஸ்திரிகள்: என்னது?

ரசிகர்: அர்ஜுன், நிலா நடிச்ச படம்தானே?

சாஸ்திரிகள்: கிரஹசாரம்! நான் சொன்னது மருதமலை முருகன் கோவில்! அது கோயமுத்தூர்தானே?

ரசிகர்: ஓ! சாரி சாமி! நான் வரலாறிலே ரொம்ப வீக்!

சாஸ்திரிகள்: அது சரித்திரம் இல்லை! பூகோளம்!!

ரசிகர்: ஏதோ ஒண்ணு, அதுவா முக்கியம்? சரி சாமீ! கிளம்பறேன்! தலைக்கு மேலே வேலையிருக்கு! தலைவிக்குக் கோவில் மட்டும் கட்டி முடிச்சா கோயமுத்தூரிலிருந்து பழனிக்கு தலைகீழா நடந்து வர்றதா வேண்டிக்கிட்டிருக்கேன். வரட்டுமா?

சாஸ்திரிகள்: ஓ! பேஷா போயிட்டு வாங்கோ!

(ஹன்சிகா ரசிகர்கள் கலைகிறார்கள். சாஸ்திரியின் மனைவி கோமதி மாமி வருகிறார்)


மாமி: ஏன்னா, அவாதான் அச்சுப்பிச்சுன்னு ஏதோ உளர்றான்னா, நீங்களும் நாள் குறிச்சுக் கொடுக்கறேன்னு சொல்றேளே?

சாஸ்திரிகள்: நீ சித்த சும்மாயிரு! நான் கும்பாபிஷேகம் பண்ண மாட்டேன்னு சொன்னா அவா யாராவது அரசியல் தலைவரை வச்சுண்டு சுயமரியாதை குடமுழுக்குன்னு பண்ணுவா! நம்மளைத் திட்டுவா! அதுக்கு நாமளே பண்ணிடலாமோன்னோ? உள்ளே போயி பஞ்சாங்கத்தை எடுத்துண்டு வா!

(மாமி உள்ளே போகிறாள். மீண்டும் வாசலில் யாரோ....!)


குரல்: சாமீ!

சாஸ்திரிகள்: யாரு? உள்ளே வாங்கோ!

வந்தவர்: வணக்கம் சாமீ! என் பேர் சிவா! அகில உலக நமீதா ரசிகர் மன்றத்திலேருந்து வர்றேன்.... மலேசியாவிலே ஒரு...

சாஸ்திரிகள்: கோமூ... அந்த பஞ்சாங்கத்தை சித்த சீக்கிரமா எடுத்துண்டு வாடீ...

(குறிப்பு: ஆலயத் திருப்பணிக்கு நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றது)


Last edited by dsudhanandan on Thu Oct 27, 2011 6:32 am; edited 2 times in total
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down


Re: ஹன்சிகாலயம்

Post by muthu86 on Thu Jul 21, 2011 7:06 pm

எதுவெனாலும் வைத்துக்கொள்ளுங்கள் . நான் தான் ஹன்சிகாலயதின் அறங்காவலர் குழு தலைவர் ..வளரும் பசங்களை தட்டி கொடுத்து வளர்த்து விடுங்கப்பா
avatar
muthu86
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 672
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by சிவா on Thu Jul 21, 2011 7:11 pm

அதிபொண்ணு wrote:
@சிவா wrote:
@muthu86 wrote:அண்ணா பொய் சொல்லாதீங்க ..நான் யர்கிட்டவும் சொல்ல மாட்டேன் .
உண்மைய சொல்லுங்க

அது குஷ்பூ இல்லை, நமீதா...........!!!! ஜொள்ளு
எதுனாலும் கைக்குட்டையை பக்கத்துல வெச்சுக்கிட்டு செய்யணும் புன்னகை

ஹி ஹி ஹி ஹி....!! சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by சிவா on Thu Jul 21, 2011 7:12 pm

@muthu86 wrote:எதுவெனாலும் வைத்துக்கொள்ளுங்கள் . நான் தான் ஹன்சிகாலயதின் அறங்காவலர் குழு தலைவர் ..வளரும் பசங்களை தட்டி கொடுத்து வளர்த்து விடுங்கப்பா

சாரி பிரதர்! அதுக்கு சான்ஸே இல்லை. ஆலயத்தை சுற்றிப் பார்க்க மட்டுமே உங்களுக்கு அனுமதி! சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by muthu86 on Thu Jul 21, 2011 7:17 pm

இந்த தகவலை முன்னிட்டு ,நாளை காலை ,என் வயதை யோத்த குழ்ந்தைகளை அழைதுகொண்டு ,காலை உணவு உண்ட பிறகு மதியம் வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கபடும்..
avatar
muthu86
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 672
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by அதி on Thu Jul 21, 2011 7:24 pm

@muthu86 wrote:இந்த தகவலை முன்னிட்டு ,நாளை காலை ,என் வயதை யோத்த குழ்ந்தைகளை அழைதுகொண்டு ,காலை உணவு உண்ட பிறகு மதியம் வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கபடும்..

இப்படிப்பட்ட தியாகி உங்களுக்கு அறங்காவலர் பதவி எல்லாம் சாதாரணம்.....சிலைக்கு பக்கத்திலேயே சீட்டு போட்டு அமர்ந்து கொள்ளவும். உங்களுக்கு பின்னால் வரும் தலைமுறை "சிட்டுக்களுக்காக சீட்டு பிடித்த சின்ன தம்பி" என்ற படத்தை உங்களுக்கு வழங்கி கவுரவபடுத்துவார்கள்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by muthu86 on Thu Jul 21, 2011 7:32 pm

அதிபொண்ணு wrote:
@muthu86 wrote:இந்த தகவலை முன்னிட்டு ,நாளை காலை ,என் வயதை யோத்த குழ்ந்தைகளை அழைதுகொண்டு ,காலை உணவு உண்ட பிறகு மதியம் வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கபடும்..

இப்படிப்பட்ட தியாகி உங்களுக்கு அறங்காவலர் பதவி எல்லாம் சாதாரணம்.....சிலைக்கு பக்கத்திலேயே சீட்டு போட்டு அமர்ந்து கொள்ளவும். உங்களுக்கு பின்னால் வரும் தலைமுறை "சிட்டுக்களுக்காக சீட்டு பிடித்த சின்ன தம்பி" என்ற படத்தை உங்களுக்கு வழங்கி கவுரவபடுத்துவார்கள்

நீங்கள் சொல்லுவது சரிதான் .நான் பெரிய பெரிய பட்டங்களுக்காகவும்,பதிவிகளைஉம் விரும்பவில்லை ..ஏதோ மக்கள் ஆசை படுகிறார்கள் என்பதற்காக தான் இந்த அறங்காவலர் பதவி கு ஓ.கே .சொன்னேன்
avatar
muthu86
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 672
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by அதி on Thu Jul 21, 2011 7:35 pm

பாலுக்கு காவலாக பூனையா? மக்களே மக்கு மக்களே
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by muthu86 on Thu Jul 21, 2011 7:39 pm

இல்லங்க நான் பால் எல்லாம் குடிக்க மாட்டேன் . இது என்ன கொடுமயாக இருக்கிறது . நான் கேட்ட பதவி தராமல் ,கேக்கதாதை எல்லாம் தரேனு சொல்லுறாங்க.ஆத்தா ஹென்சிகா நீ தான் எல்லாத்தையும் சரி பண்ணனும்
avatar
muthu86
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 672
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by அதி on Thu Jul 21, 2011 7:50 pm

பார்த்து....ஆத்தா கண்ணா குத்திட போகுது
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by பாலாஜி on Thu Jul 21, 2011 7:52 pm

அதிபொண்ணு wrote:பார்த்து....ஆத்தா கண்ணா குத்திட போகுது

ஆத்தா மனச குளிர வைச்சுடலாம் .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by அதி on Thu Jul 21, 2011 8:08 pm

நீங்களுமா....ஒட்டு மொத்த பசங்களும் வில்லங்கமா தான் இருப்பாய்ங்க போல
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by சிவா on Thu Jul 21, 2011 8:10 pm

"சிட்டுக்களுக்காக சீட்டு பிடித்த சின்ன தம்பி"

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by அதி on Thu Jul 21, 2011 8:48 pm

சிவா எனக்கு ஒரு தகவல் வேண்டும்.....மதிப்பீடு என்றால் என்ன? அது யாரால் யாருக்கு தரப்படுகிறது? ஏன் தரப்படுகிறது...எதன் அடிப்படையில்?
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by பாலாஜி on Thu Jul 21, 2011 9:11 pm

அதிபொண்ணு wrote:சிவா எனக்கு ஒரு தகவல் வேண்டும்.....மதிப்பீடு என்றால் என்ன? அது யாரால் யாருக்கு தரப்படுகிறது? ஏன் தரப்படுகிறது...எதன் அடிப்படையில்?


முகப்பில் அடிக்கடி கேட்க்கபடும் கேள்விகள் பகுதில் பாருங்கள்

அல்லது இங்கு சொடுக்கவும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by அதி on Thu Jul 21, 2011 9:17 pm

நன்றிங்க..புரிந்துக்கொண்டேன்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by muthu86 on Thu Jul 21, 2011 9:55 pm

@சிவா wrote:"சிட்டுக்களுக்காக சீட்டு பிடித்த சின்ன தம்பி"

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

என்ன ஒரு வில்லத்தனம் ????????? நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா
avatar
muthu86
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 672
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by muthu86 on Thu Jul 21, 2011 9:57 pm

அதிபொண்ணு wrote:பார்த்து....ஆத்தா கண்ணா குத்திட போகுது

ஆத்தாவோட பக்தன தப்பா பேசினா கண்டிப்பா குத்தும் கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
avatar
muthu86
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 672
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by அதி on Thu Jul 21, 2011 10:00 pm

நாங்க கூலு ஊத்தி கும்பிட்டு ஆத்தா க்கு ஐஸ் வெச்சு சரி பண்ணிடுவோம்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by muthu86 on Thu Jul 21, 2011 10:13 pm

அதிபொண்ணு wrote:நாங்க கூலு ஊத்தி கும்பிட்டு ஆத்தா க்கு ஐஸ் வெச்சு சரி பண்ணிடுவோம்

சரி ,இப்போ என்ன தான் பன்னபோறீங்க ? கூழா ? இல்ல ஐஸ் கொடுக்க போறீங்களா ?எது நாலும் ஓகே.எங்க சபைக்கு நன்கொடை அனுபிருங்க .நாங்க ஆத்தாவுக்கு ,உங்க நன்கொடய பொருத்து கூழ் இல்ல ஐஸ் கொடுதிறோம்
avatar
muthu86
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 672
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by அதி on Thu Jul 21, 2011 10:17 pm

எங்க சூர்யா பேன்ஸ் கிளபுக்கே நிதி பத்தாம கஞ்சி கூட இல்லாம அல்லாடுறோம்....இதுல ஹன்சி அக்காக்கு கூழு கேக்குதா?
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by muthu86 on Thu Jul 21, 2011 10:22 pm

ஹை ,நாங்க தாங்க ஃபர்ஸ்ட் ஆரம்பிசிருக்கோம் .. நெக்ஸ்ட் தான் நீங்க
avatar
muthu86
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 672
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by அதி on Thu Jul 21, 2011 10:26 pm

யாரு ஃபர்ஸ்ட் ன்னு முக்கியம் இல்ல...எது பெஸ்டு ன்னு தான் முக்கியம் புன்னகை
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by muthu86 on Thu Jul 21, 2011 10:37 pm

தமிழ் நாட்டுல அம்மனுக்கு தாங்க கோவில் அதிகம் .....சோ நாங்க தான் ஃபர்ஸ்ட் அண்ட் பெஸ்ட்
சூப்பருங்க
avatar
muthu86
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 672
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by muthu86 on Thu Jul 21, 2011 10:38 pm

தமிழ் நாட்டுல அம்மனுக்கு தாங்க கோவில் அதிகம் .....சோ நாங்க தான் ஃபர்ஸ்ட் அண்ட் பெஸ்ட்
சூப்பருங்க
avatar
muthu86
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 672
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by நட்புடன் on Thu Jul 21, 2011 10:55 pm

@dsudhanandan wrote:
@உமா wrote:
வந்தவர்: வணக்கம் சாமீ! என் பேர் சிவா! அகில உலக நமீதா ரசிகர் மன்றத்திலேருந்து வர்றேன்.... மலேசியாவிலே ஒரு...

யாரந்த சிவா...
அநியாயம் அநியாயம்

ஈகரை நிறுவனர் அப்படீங்கராங்கோ.... சிரி

ஆனா அவரு நமீதா அலைல
அடித்துச் செல்லப் பட்டுவிட்டாரே... புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum