ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

என்னைப் பற்றி...
 SK

சில்லுகள்...
 Panavai Bala

அறிமுகம்-சத்யா
 sathya.t

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ராஜா

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 SK

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அழகு முழுமை ( படித்ததில் பிடித்தது - தாமு )

View previous topic View next topic Go down

அழகு முழுமை ( படித்ததில் பிடித்தது - தாமு )

Post by தாமு on Thu Jul 21, 2011 4:24 pm

ஆதி சங்கரர் வைராகியத்தை பற்றியும் சன்யாசத்தை பற்றியும் பேசி இருக்கிறார். ஆனால் இவைகளை பற்றி மற்றும் பேசினால் அதை கேட்பவர் சோகத்தை ரசிக்கவும் ஊக்கவிக்க்வும் ஆரமித்துவிடுவார்கள் என்று எதிர்நோக்கினார். மக்கள் ஆசாகை ரசிக்க நிறுத்த கூடாது என்பதற்காக அழகை பற்றி 100 பாடல்கள் பாடினார்.அழகிற்கு மூன்று நிலைகள் உள்ளன. சுட்டிக்காட்டுதல், வெளிப்படுத்துதல், அம்பலமாக்குதல்/தெரிவித்தல். ஆன்மிகம் சுட்டிக் காட்டுகிறது. கலை வெளிப்படுத்துகிறது. விஞானம் அம்பலமாக்குகிறது.தெய்வீகமே அழகு, அழகே தெய்வீகம். தேவா என்றால் விளையாட விரும்புபவர், ஒளி மயமானவர், கம்பீரம் மிக்கவர், விளையாடுபவர். அரக்கர்கள் சண்டையிடுவர் , மக்கள் அமைதியாக வாழ்வார்கள். கடவுள் விளையாடுவார். அழகில்லாமல் விளையாட்டுத்தனம் இருக்க முடியாது . இரண்டும் சேர்ந்தே இருக்கும். அழகின் அதே சக்தியான உற்சாகம் விளையட்டுத்தனத்தை ஏற்படுத்துகிறது. அழகு வெட்கத்தோடு இணைந்தது வெட்கம் அழகை அதிகப்படுத்துகிறது. உதாரணமாக, ஒரு சிறிய குழந்தை சில சமயங்களில் வெட்கப்படும். ஒவ்வொருவரும் பார்த்து குழந்தையை புகழும்போழுது தன் முகத்தை மறைத்துக் கொள்ளும். அதேபோல் அவமானம் என்பது அழகற்றது. நாணம் உன்னை மென்மைப்படுத்துகிறது. அவமானம் அல்லது அழகற்றது உன்னை கடினப்படுத்துகிறது. ஒருவன் அவமானமாக உணரும்பொழுது, அவன் உள்ளுக்குள் கடினமாகி வன்முறையாளனாக மாறுகிறான்.இறைவனின் வழி, ஞானிகளின் வழி மறைமுகமாக இருக்கும். சமஸ்க்ருதத்தில் இப்படி சொல்வதுண்டு." பரோக்ஷ ப்ரியா ஹி வை தேவஹா" இதன் அர்த்தம் " இறைவன் மறைமுகமான முறைகளை விரும்புவார்". கவிதை மறைமுகமானது. அது மிகைபடச்சொல்லும். இதயம் எப்பொழுதும் மிகைபடச் சொல்லும். அப்பொழுது, மனம் உண்மையை முன் வைக்கும். உண்மை அறிவு சார்ந்தது. இதயத்திலிருந்து வரும்பொழுது, அந்த உண்மையானது அலங்கரிக்கப்பட்டு, இருமடங்கு அழகாகிறது.


Last edited by தாமு on Thu Jul 21, 2011 4:26 pm; edited 1 time in total
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: அழகு முழுமை ( படித்ததில் பிடித்தது - தாமு )

Post by தாமு on Thu Jul 21, 2011 4:24 pm

விழிப்புணர்வு இல்லாதபோது நேராக கூறுதல் தேவைப்படுகிறது. விழிப்புணர்வோடு இருப்பவருக்கு குறிப்பாக உணர்த்துதலும், மறைமுகமாக கூறுதலும் மேலும் அழகு சேர்க்கிறது. அதனால் ஒன்று நல்லது, ஒன்று கெட்டது என்று அர்த்தம் கிடையாது. எல்லாவற்றிர்க்கும் இடம், நேரம் உண்டு. முழு வெளிப்பாடு இதயத்தின் மொழி அல்ல. முழு வெளிப்பாடு தூண்டிவிடும். மறைந்திருக்கும் அழகு அழைக்கும். அதனால்தான் இயற்கையானது முழு படைப்பையும் இரவில் தன்னுள்ளே மறைத்து, மறுநாள் காலையில் வெளிப்படுத்துகிறது.அன்பை வெளிப்படுத்த முயற்சி செய்யாதபோது அது தன உச்சத்தில் இருக்கிறது. அதற்காக வெளிப்படுத்தக் கூடாது என்பதல்ல-- சில சமயங்களில் வெளிப்படுத்தலாம். இல்லாவிடில் நீ வெடித்து விடுவாய். முழுமையாக வெளிப்படுத்தாதபோது, அதில் அழகு இருக்கிறது. அந்த ரகசியத்தில், திரையிடப்பட்ட அன்பை வெளிப்படுத்துவதில் ஞானம் இருக்கிறது. வெளிப்பாடு இருக்கிறது. மகிழ்ச்சி இருக்கிறது. அழகு இருக்கிறது. அது தெய்வீக குணம். அறிவிற்கு தனி இடம் உண்டு. கவிதைக்கு தனி இடம் உண்டு. இரண்டும் வாழ்க்கையை முழுமையாக்குகிறது. அதுவே அழகு.மனிதர்களை அவர்கள் செயல்களுக்கு அப்பாற்பட்டவர்களாகப் பார். ஒருவன் வெளிப்படுத்துவதை மட்டும் வைத்து சொல்லமுடியாது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெளிப்படுத்தப்படாத அன்பு நிறைய உள்ளது. இந்த உண்மையை அறிந்து, விரிவடையும்போது, உன் இதயமும் விரிவடைகிறது. இந்த ஞானத்தினால் நீ மற்றவர்கள் சொல்வதைப் பற்றியோ, செய்வதைப் பற்றியோ, ஒருபோதும் சிந்திக்க மாட்டாய். மற்றவர்கள் சொல்வது மிகச் சிறியதாகும். மற்றவர் செய்வது ஒரு பொட்டலத்தில் கட்டிய ரிப்பன் மாதிரிதான். உனக்கு ரிப்பன் பிடிக்காவிட்டால், எடுத்துவிட்டு, உள்ளே பார். ஒவ்வொருவரும் கட்டப்பட்ட ஒரு பரிசுப் பொருள்தான். மேலுரையைத் தாண்டிப் பார். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் விலை மதிக்க முடியாத ஒரு பரிசு உண்டு. சில பார்சல்களில் வெடி இருக்கும். சிலவற்றில் இனிப்பு இருக்கும். எந்த பெட்டியும் காலியாக இருக்காது. இறைவனின் இதயத்தில் எல்லோருக்கும் ஓர் இடம் உண்டு. ஏசு இதைத்தான் சொல்கிறார் "என் தந்தையின் வீட்டில் நிறைய அறைகள் உள்ளன".
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: அழகு முழுமை ( படித்ததில் பிடித்தது - தாமு )

Post by தாமு on Thu Jul 21, 2011 4:24 pm

அதனால் நிறைய மனிதர்கள் இருப்பதற்காக கவலைப்படாதே. இறைவனிடம் எப்படி நெருங்க முடியும் என்று கேட்காதே. நீ எப்படி அங்கு சொந்தமாவாய் என்று கவலைப்படாதே. நிறைய அறைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் சொந்தமான தனிப்பட்ட அறை உண்டு. இயேசு உறுதியாக கூறுகிறார். "நிறைய அறைகள் இல்லாவிடில் உனக்காக அறையை ஏற்படுத்தி,வந்து, அழைத்துச் செல்வேன்". மனம் நுண்மத்தை பாராட்டாது. அது உறுதியான பொருளைப் பார்த்து, உறுதியாக கூறும் பழக்கம் உள்ளது. மனதுக்கு உறுதிமொழிகள் தேவை. நீ ஒருவரை விரும்பும்பொழுது, அவனிடமோ அல்லது அவளிடமோ உறுதிமொழியை விரும்புகிறாய். நீ சத்தியமாக கூருகிறாயா? நீ என்னை உண்மையாக விரும்புகிறாயா? உறுதியாகச் சொல் என்று கேட்கிறாய்.அழகின் இரண்டாவது அம்சம் நன்றியுடன் இருப்பது. நீ பற்றாக்குறை இருப்பதாக நினைக்காதபோது,நன்றியுடையவனாக உணர்கிறாய். ஏதோ பற்றாக்குறை இருப்பதாக நீ நினைக்கும்பொழுது, நன்றியுடன் இருக்கமுடியாது. இரண்டும் சேர்ந்து இருக்கமுடியாது. இரண்டையும் வெவ்வேறு சமயங்களில்தான் அனுபவிக்கமுடியும். பற்றாக்குறையை உணரும்பொழுது முணுமுணுக்கத் தொடங்குகிறாய். உன்னிடமுள்ள ஞானத்தின் மூலம் நன்றியுடையவனாக ஆகிறாய். நீ நன்றியுடையவனாக இருக்கும்பொழுது, இயற்கையாகவே அதிகம் பெறுகிறாய். இது இயற்கையின் நியதி. இயேசு சொல்கிறார்: " இருப்பதாக நினைப்பவருக்கு மேலும் கொடுக்கப்படும். இல்லை என்போருக்கு இருக்கும் சிறிதளவு கூட, அவர்களிடமிருந்து எடுக்கப்படும்".
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: அழகு முழுமை ( படித்ததில் பிடித்தது - தாமு )

Post by தாமு on Thu Jul 21, 2011 4:25 pm

நீ யாரிடம் அன்பு செலுத்த விரும்புகிறாயோ, முதலில், அவர்கள் உன்னை அதிகம் நேசிக்கிறார்கள் என்று அறிந்துகொள். மற்றவரின் அன்பை சந்தேகிக்கும்பொழுது அவன் அல்லது அவளிடமிருந்து நீ அந்த அன்பைப் பெருகிறாயோ இல்லையோ, உன் சந்தேகம் வளரும். நீ மற்றவரின் அருகாமையை விரும்பும்பொழுது, முதலில், அவர்கள் உன் அருகாமையில் இருப்பதாக உணர்ந்துகொள். நீ மற்றவரிடம் உன்னை நம்புகிறார்களா என்று கேட்டால் நீ அவர்களின் நம்பிக்கையை முதலிலேயே சந்தேகப்படுகிறாய். நீ சந்தேகப்பட்டுக்கொண்டே இருக்கிறாய். அதற்கு எல்லை இல்லை. உன் அன்பையோ, நம்பிக்கையையோ, நர்குனத்தையோ மற்றவருக்கு நிரூபித்துக் காட்ட எல்லை இல்லை. அதனால்தான் யாரிடம் இல்லையோ,சிறிது இருந்தாலும், அந்த சிறிதளவும் எடுக்கப்பட்டுவிடும். யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு மேலும் மேலும் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதுதான் இயற்கையின் நியதி.இல்லை என்பது உன்னுள் இர்ருக்கும் மனோநிலையே. நீ அந்த திசையில்தான் சென்று கொண்டிருக்கிறாய். உன்னுள் இருப்பதுதான் வளரும். விதை முன்பே அங்கு இருக்கிறது. நீ விதைத்த விதை வளருகிறது. அது ஏராளமாக ஆகி விடுகிறது. விதைக்கே பற்றாக்குறை இருந்தால் வேறு எப்படி வளரும்? உன் கண்களை திறந்து, உனக்கு என்ன கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பார். உனக்கு கொடுக்கப்பட்டிருப்பதை உணரும்பொழுது, நீ நன்றியுடையவனாகிறாய். அந்த நன்றியுணர்வில் வாழ்க்கை வளர்கிறது.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: அழகு முழுமை ( படித்ததில் பிடித்தது - தாமு )

Post by தாமு on Thu Jul 21, 2011 4:25 pm

கம்யூனிசம் ஏன் தோல்வியடைந்தது? யாரிடம் இல்லையோ அவர்களுக்கு கொடுப்பது நல்ல கொள்கை. எல்லோருக்கும் கிடைத்துவிடுவதால், மக்கள் பொருளாதாரத்திலும், விழிப்புணர்விலும் குறைந்துகொண்டே வருகிறார்கள். அறிவு, ஞானம், இல்லாமல் முன்னேற்றமடைய முடியாது.இந்த ஆற்றல், இந்த சக்தி, இந்த அழகு, இந்த செல்வம் கொடுக்கப்பட்டது. இது முழு படைப்பிலும் ஊடுருவிச் செல்கிறது. அது இல்லாமல் ஒரு சிறிய புல் கூட அசைய முடியாது. தேவர்களும், தேவதைகளும் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், அசைய முடியாது. உணர்வும், உயிரும் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. உயிரில்லாமல் அழகு இல்லை. உடல் அழகாக இருப்பது உயிர் இருப்பதால்தான். முழு படைபிறக்கும், மரங்கள்,பறவைகள், மிருகங்கள், கற்கள், நதிகள் எல்லாவற்றிர்க்கும் உயிருண்டு. உயிரென்பது வெறும் உயிரியல் சம்பந்தப்பட்ட உயிரல்ல. உயிரென்பது வெகு தூரத்துக்கு அப்பால் ஊடுருவிச் செல்லும் உணர்வையும் உள்ளிட்டது.படைப்பில், படைப்பின் இயக்கத்தில், படைப்பின் அழிவில், ஒவ்வொன்றிலும் அழகு உள்ளது. எல்லா நேரங்களிலும் இதை இயற்கையில் காணலாம். வசந்த காலத்துக்கு அதன் அழகு உண்டு. கடுங்கோடையில் எல்லாமே பசுமையாக இருக்கும். இல்லை உதிர் காலத்தில் எல்லாமே உதிர்ந்து கண்கொள்ளா காட்சியாக இருக்கும். நயாகரா அருவி மிக அழகானது. இந்த பழமையான அருவியை காப்பதற்கு, ஒவ்வொரு வருடமும் ஒரு நிலையான முறை தேவைப்படுகிறது. மேகங்கள் சூழ்ந்து, கிரேட் லேக்சில் மழையாக விழுந்து ஓட வேண்டும். அப்போதுதுதான் நயாகரா அருவி எப்போதும் இருக்கமுடியும். இல்லாவிடில், தண்ணீர் மட்டும் ஒருமுறை கீழே விழுந்ததும், வேறு நீர் ஓட்டம் இருக்காது. மழை இல்லாவிட்டால் எல்லா அழகும் போய்விடும்.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: அழகு முழுமை ( படித்ததில் பிடித்தது - தாமு )

Post by தாமு on Thu Jul 21, 2011 4:25 pm

பல நூறு வருடங்களாக படைப்பின் அழகில் அதை காலம் காலமாக காப்பதற்கு ஒரு அடிப்படை கோட்பாடு உள்ளது. ஒரு மரக்கட்டையிலும் கூட அதன் கடந்த கால, நிகழ்கால அழகு அதன் ஜீன்ஸிலும் , அதன் மிகச் சிறிய துகளிலும் படித்து வைக்கப்பட்டுள்ளது. மாற்றத்திலும் அழகு உண்டு. கோபத்திலும் அழகு உண்டு. மிகத் துயரத்தில் இருக்கும் ஒருவரைப் பார். சினிமாப் பட விழாவிலும் கோபம், வெறுப்பு முதலிய தீவிரமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களுக்கே சிறந்த விருது கிடைக்கிறது. வெளிப்படுத்தப்படும் உணர்ச்சிக்கே பாராட்டு கிடைக்கிறது. பற்களைக் கடித்துக்கொண்டு, முஷ்டியைப் பிடித்துக்கொண்டு, கண்கள் சிவக்க, தொண்டை நரம்புகள் வெளிவர கூச்சலிடும் ஒருவரை கற்பனை செய்து பார். அவரை பார்ப்பதே வேடிக்கையாக இருக்கும். அவர்களில்லாமல் உலகம் முழுதுமே மந்தமாக இருக்கும். ஏர்ஹோஸ்டஸ் போல் எல்லா நேரமும் எல்லோரும் சிரித்துக்கொண்டே நடப்பதை கற்பனை செய்து பார். அது வேடிக்கை இல்லை. குழந்தைகள் அழும்போதும் அதுவேதான். அவர்கள் அழும் பொழுது ஒரு அழகு இருக்கிறது. அவர்கள் சிரித்தாலும், புன்னகை செய்தாலும் அதில் அழகு இருக்கிறது. அவர்கள் கோபப்பட்டாலும் அழகு இருக்கிறது. அழகு என்பது எல்லாவற்றிலும் உண்டு. நீ செய்யவேண்டியதெல்லாம் உன் கண்களைத் திறந்து அதனுள் இருக்கும் உண்மையைப் பார்பதுதான்.


http://srisriravishankar.org/ta/teachings/beauty-full
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: அழகு முழுமை ( படித்ததில் பிடித்தது - தாமு )

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum