ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

வெங்காயமும் பெருங்காயமும்

View previous topic View next topic Go down

வெங்காயமும் பெருங்காயமும்

Post by சிவா on Thu Sep 17, 2009 12:23 am

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல், தேடேன் பெருங்காயம்!
ஏரகத்துச் செட்டியாரே!


இது சித்தர்களின் பரிபாஷையில் எழுதப்பட்டதொரு பாடல். புலவர்களில் சிலர், மறைமுகச்சித்தர்களாக விளங்கினார்கள்.

சித்தர்கள், ரிஷிகளில் பல மாதிரியான மனப்பான்மை,குறிக்கோள்கள்,நடைமுறை,சித்தாந்தம் முதலியவற்றைக ்கொண்டவர்களாக விளங்கினர்.
சிற்சில அடிப்படைகளில் அவர்களை வகைப்படுத்திப் பிரித்து விடமுடியும்.

சிலர், உடலைப்பக்குவப்படுத்தி மூப்பு, நரை, நோய், நொடி,இல்லாமல் நீண்டகாலம் இருக்கப் பார்ப்பார்கள். சிலரோ இறக்காமலேயே இருந்து விடவேண்டும் என்று எண்ணுவர்.

பலவகையான உணவுக்கட்டுப்பாடுகள், ஹடயோக, ராஜயோகப் பயிற்சிகள், சமாதிநிலைகள், மருந்துகள் முதலியவற்றின் உதவியால் அவ்வாறு உடலைப் பக்குவப் படுத்துவார்கள். இதனைக்"காய சித்தி" அல்லது "காயகல்பம்" என்று கூறுவார்கள்.

காயம்" என்பது உடல்.

இறவாமையை நாடும் சிலர், அவ்வாறு நீண்ட காலம் இருந்தபின்னர், ஏதோ காரணம் பற்றி அவர்களுடைய உடலை மேலும் யன்படுத்த முடியாமற் போனால், அந்த உடலைபோட்டு விட்டு, வேறொரு உடலுக்குள் பிரவேசித்துவிடுவார்கள். அவ்வுடலிலேயே வாழ்வார்கள். இந்த முறையை "பரகாயப்பிரவேசம்" அல்லது "கூடு விட்டுக் கூடு பாய்தல்" என்று கூறுவார்கள்.

காயகல்பத்தில் பயன்படுத்தும் மருந்துகள் பல இருக்கின்றன.அவற்றில், வீரம், பூரம்,
அயம் எனபவை சில.

அயம் என்றால் இரும்பு.
இரும்பை நெருப்பில் வேக வைத்து, "அய காந்த செந்தூரம்" போன்ற செந்தூரங்களைச் செய்து உட்கொள்வார்கள்
வேக வைத்த இரும்பு = வெந்த அயம் = செந்தூரம்
வேறு வகையான சித்தர்கள், ரிஷிகள் இருக்கிறார்கள்.
அவர்கள் வந்த வேலையை மட்டுமே பார்ப்பார்கள்.
அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமையைச்செய்துவிட்டு, அவர்களுடைய கர்மவினைகளைக் கழித்துவிட்டு வந்த வழியே போகவேண்டிய இடத்திற்குப் போய் விடுவார்கள்.
பட்டினத்தார், ரமணர்,பரமஹம்ஸர் போன்றோர் இவ்வகைச்சித்தர்கள் உடலைப் பாரமாக நினைப்பார்கள்.கடைசியில் நான்கு பேர் தூக்கவேண்டிய பாரத்தை ஒருவனாகத் தூக்க வேண்டியிருக்கிறதே என்று துக்கிப்பார்கள்.

அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவர் பாடியதாக அமைந்ததே இந்தப் பாடல்.

வெங்காயம் = வெறுமையான, கூடான உடல்
சுக்கு = உலர்ந்த இஞ்சி; சரக்குகளிலேயே மிக நீண்ட நாட்களுக்குக்
கெடாமல் இருக்கக் கூடியது சுக்குதான்.
எகிப்திய பிரமிடுகளில் ஐயாயிரம் ஆண்டு வயதான சுக்கு கிடைத்திருக்கிறது. சித்தர் பரிபாஷையில் சுக்கை "சுப்பிரமணி" என்றுதான் அழைப்போம்.
வெங்காயம் சுக்காவது = வெறும் உடம்பு காயகல்பமாகி விடுவது
வெந்தயத்தால் ஆவது = அதன் பின்னர் வெந்த அயம் போன்ற Tonic மருந்துகளும் தேவையில்லை.

ஆனாலும், இவ்வாறு காயகல்பமாகிவிட்ட இந்த சா£ரத்தில் நீண்ட நாள் உயிர் வாழ்வதால்தான் என்ன பயன்?
இது ஒரு வீண் பாரம்தானே?

ஆகவே,

இங்கு ஆர் சுமந்திருப்பார் இச்சரக்கை - இந்த உடலை?

ஏரகம் என்பது சுவாமிமலை.
குருவாய் இருந்து உபதேசம் புரிந்த இடமல்லவா அது.

முருகனை "செட்டி" என்று குறிப்பிடும் வழக்கு ஒன்று இருக்கிறது.

தேவாரத்தில், சுந்தரமூர்த்தி நாயனார்,
"செட்டியப்பன்" என்று சிவனைக் குறிப்பிடுகிறார்.
செட்டியாகிய முருகனின் அப்பன் சிவன்.

அருணகிரிநாதர் பல இடங்களில் செட்டி என்று முருகனைக் கூறுவார்.

செட்டியென்று மனமேவி இன்பரச
சத்தியின் செயனினாளை அன்புறாகத்
தெட்டிவந்து புலியூரின் மன்றுள் வண் பெருமாளே!


-சேவல் விருத்தம்


புத்திப்ரியத்தன் - வெகு
வித்தை குணக்கடலன் - புகழ்
செட்டி சுப்பிரமணியன்


- திருப்புகழ்


இனமெனத் தொண்டரோடும்
இணக்கிடும் செட்டி காக்க


- ஷண்முகக் கவசம்
பாம்பன் சுவாமிகள்

சீரகம் = சீர் அகம் = மோட்சத்தைக் குறிப்பது
பெருங்காயம் என்பது பல பிறவிகளில் ஏற்படும் பல வகையான உடல்களைக் குறிக்கும்.

முருகன் மோட்சத்தைக் கொடுத்துவிட்டால் பிறவி எடுக்க வேண்டியிராதல்லவா?

டாக்டர் எஸ்.ஜெயபாரதி



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790522 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: வெங்காயமும் பெருங்காயமும்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Dec 03, 2011 10:54 pm

மிக அருமையான விளக்கம்...நன்றி...சிவா அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2939
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 899

http://sundararajthayalan.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum