புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று Poll_c10உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று Poll_m10உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று Poll_c10 
20 Posts - 65%
heezulia
உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று Poll_c10உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று Poll_m10உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று Poll_c10உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று Poll_m10உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று Poll_c10 
62 Posts - 63%
heezulia
உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று Poll_c10உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று Poll_m10உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று Poll_c10உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று Poll_m10உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று Poll_c10உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று Poll_m10உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Sep 17, 2009 4:13 pm

http://www.meenagam.org/?p=10538



உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று Thileepan_smaகாலை
ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு
கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக
வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று
உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது…… முகம் வரண்டு, காய்ந்து கிடந்தது, தலை
குழம்பியிருந்தது

“பல் விளக்கி முகம் கழுவவில்லையோ?”
“இல்லை வாஞ்சியண்ணை… வேண்டாம்.”

கலைந்திருந்த தலைமயிரை நானே அவரருகில் சென்று வாரி விடுகிறேன். அவர் இன்னும் சிறுநீர் கழிக்கவில்லை. “வெளிக்குப் போகேல்லையோ?” என்று மெதுவாகக் கேட்கிறேன்.
“போகவேணும் போலதான் இருக்கு.”

“சரி கீழே இறங்கி வாருங்கோ” என்று கூறிவிட்டு, மேடையை விட்டு நானே முதலில் இறங்கி, கீழே இறங்குவதற்கு உதவி செய்ய முயன்றேன்.
“வேண்டாம் விடுங்கோ……நானே வருகின்றேன்” என்று என் கையை விலக்கிவிட்டு தானே கீழே குதிக்கின்றார்…
மனதை எவ்வளவு திடமாக வைத்திருக்கின்றார் என்று எனக்குள்ளேயே ஆச்சரியப்பட்டேன்.
மறைவிடத்துக்குச் சென்ற அவர், சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்பட்டார்.

5 நிமிடம்……

10 நிமிடம்……
15 நிமிடம்……
20 நிமிடம்……
நிமிடங்கள் ஒடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், எதுவித பயனும் ஏற்படவில்லை. அவரைப் பார்க்க எனக்கு வருத்தமாக இருந்தது. என் கண்கள் என்னையறியாமலே கலங்குகின்றன. மேடையின் வலப்புறத்தில் ஏறி அமர்ந்த திலீபன், தூரத்தில் தெரியும் வழக்கமான ஆட்களை அழைத்து உரையாடத் தொடங்கினார். “கண்டபடி பேசினால் களைப்பு வரும்… கொஞ்சம் பேச்சைக் குறையுங்கோ…” என்று
அவரைத் தடுக்க முயல்கிறேன். ஆனால், என்னால் முடியவில்லை. தனக்கே உரிய
சிரிப்பை என் வார்த்தைகளுக்குப் பதிலாக்கிவிட்டுத் தொடர்ந்து
பேசிக்கொண்டிருக்கிறார்.
கடைசியாக அவர் நீர் அருந்தி 45 மணித்தியாலங்கள் முடிந்து
விட்டன. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அவர் இப்படி தன்னைத்தானே
வருத்தப்போகிறார்?

இப்போதே சிறுநீர் கழிக்க முடியாமல் கஷ்டப்படத் தொடங்கிவிட்டார்.
இன்னும் இரண்டு நாட்கள் போனால் என்னென்ன நடக்குமோ? என்று எண்ணிய நான்,
அவரின் காதுக்குள் குசு குசுக்கிறேன்.
“என்ன பகிடியா பண்ணுறீங்க?…… ஒரு சொட்டுத் தண்ணீரும்
குடிக்கமாட்டேன் என்ற நிபந்தனையுடன்தானே இந்த உண்ணாவிரதத்தைத்
தொடங்கினனான்…… பிறகு எப்படி நான் தண்ணீர் குடிக்க வேண்டுமென்ற
கேட்டீங்க?”…

என்று ஆவசத்துடன் என்மீது பாய்கிறார்.
“இல்லை…… இப்பவே உங்களுக்குச் சலம் போறது நின்று போச்சு……
இனியும் நீங்கள் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் மேலும் மேலும் கஷ்டமாக
இருக்குமே…… அதுக்காகத்தான் கேட்டனான்……”

என்று அசடு வழியக் கூறிவிட்டு, வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.
“இனிமேல் என்னைத் தண்ணி குடிக்கச்சொல்லிக் கேட்கவேண்டாம்……
சரியோ?…… உண்ணாவிரதம் என்றால் என்ன? …… தண்ணீர், குளுக்கோஸ், இளநீர்
எல்லாமே உணவுதான்…… இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர்
வாழலாம். ஆனால், அது உண்ணாவிரதம் இல்லை. உண்ணாவிரதம் எண்டால் அதுக்கு
அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான்
எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது…… இது வெறும்
அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல…… வயிறு முட்டக் குடித்துவிட்டு
மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது.”

அவரின் பேச்சில் இருந்த உண்மைகள் எனக்கும் தெரியும். ஆனால், திலீபனின் உயிர் மிகவும் பெறுமதி மிக்கது…… அதை இப்படி வருந்த விடுவதா? என்ற ஏக்கத்தில்தான் அப்படிக் கேட்டேன். ஆனால் அவர் தன் உயர்ந்த சிந்தனையால் என் பேச்சுக்கு ஆப்பு வைத்துவிட்டார்
நேரம் செல்ல செல்ல நல்லூர் ஆலய மைதானம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
கடந்த இரு நாட்களாக ஆயிரக்கணக்காக வந்திருந்த சனக்கூட்டம், இன்று
இலட்சத்தைத் தாண்- -டியிருந்தது. யாழ்ப் பாண நகரத்தில் உள்ள
கல்லூரிகளிலிருந்து மாணவ – மாணவிகள் காலை 9 மணி முதல் வரிசைவரிசையாக,
வெள்ளைச் சீருடையில் அணிவகுத்து வந்து மைதானத்தை நிறைக்கத் தொடங்கினர்.
திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒர் அங்கத்தவர் என்ற நினைப்பு விடுபட்டு, “தமிழ் இனத்தின் பிரதிநிதி
என்ற எண்ணம்தான் அந்தச் சனக்கூட்டத்தினர் மத்தியில் நிறைந்திருந்தது.
தாய்க்குலம் – திலீபன் வாடி வதங்கியிருந்த கோலத்தைக் கண்டு கண்ணீர்
சிந்தியது. அந்தக் கண்ணீர் மழையில் இதயம் கனிந்து விட்ட வருணபகவான் கூடத்
தீடீரென்று பலமாகக் கண்ணீர் சொரியத் தொடங்கிவிட்டான்.
ஆம் !
அனலாகக் கொதித்துக்கொண்டிருந்த சூரியன், ஒரு பிள்ளையின் உடலை
வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காகத், தன்னைத் தானே கருமேகத்தின்
போர்வைக்குள் மூடிக்கொண்டான் மழைநீர் கோவில் மைதானத்தில் ஆறாக
ஒடிக்கொண்டிருந்தது. ஆனால், பொதுமக்களில் ஓருவர்கூட எழும்பால் அப்படியே
இருந்தனர். அப்பப்பா! மக்களின் உணர்வு மழைக்கு முன்னிலையில் அந்த வருணனின்
மழைநீர் வெகு சாதாரணமானது என்ற எண்ணம் நிதர்சனமாகத் தெரிந்தது.

வாடிய நிலையிலும், சோர்ந்த நிலையிலும் தன் உயிரினும் மேலான மக்கள்
மழையில் நனைவதைக் கண்ட திலீபன், அவர்களை சனைய வேண்டாம் என்று கைகளை
அசைத்துச் சைகை காட்டினார். ஆனால், அவர்களோ அசைவதாக இல்லை. “உன்னால் மட்டும் தானா தமிழினத்துக்காக மெழுகாக உருக முடியும்? …… உன் உயர்ந்த இலட்சியத்துக்கு முன் இந்த மழை வெகு சாதாரணமானது!” என்று கூறுவதுபோல், அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.
முரளியும் – நிரஞ்சனும், வேறு சிலரும் படங்குகளை விரித்துக் கட்டிக் கொண்டிருந்தனர்.
ஒலிபெருக்கியில் காசி ஆனந்தனின் கவிதையொன்று முழக்கமிட்டுக்கொண்டிருந்தது.

“திலீபன் அழைப்பது சாவையா? – இந்த
சின்ன வயதில் இது தேவையா?” ……

மூன்றாம் நாளான இன்று இராண்டாவது மேடையில் சூடான பேச்சுக்களும், கண்ணீர்க் கவிதைகளும் முழங்கிக்கொண்டிருந்தன. பேச்சாளர்களில் ஒருவரும், எமது தீவிர ஆதரவாளருமான காங்கேசன்துறை கருணானந்தசிவம் ஆசிரியர் அவர்கள் இப்படிப் பேசினார்:
“தியாகி திலீபனின் உயிர் விலைமதிப்பற்றது. அவர் தமிழீழ
விடுதலைப் புலிகளுக்கு மட்டும் உரியவர் அல்ல …… அவர் …… தமிழ் இனத்துக்கே
சொந்தமானவர்… அப்படிப்பட்ட திலீபன் அவர்கள் ஒரு சொட்டு நீராவது அருந்தி
தன் உடலைக் காப்பாற்ற வேண்டும். ஆவர் தன் பிடிவாதத்திலிருந்து இறங்கி நீர்
உணவு அருந்தி எம் கவலையைப் போக்கவேண்டும்…… இது எனது வேண்டுகோள்
மட்டுமல்ல: இங்கே வந்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் வேண்டுகோளும்
இதுதான்.”

அந்தப் பேச்சைக் கேட்ட திலீபனின் முகம் வாடியதை நான் அவதானித்தேன்…… தான் பேசப்போவதாகக் கூறினார். அவரிடம் ஒலிவாங்கியைக் கொடுத்தேன்.

“இந்த மேடையில் பேசிய ஒர் அன்பர் என்னை நீர் உணவு அருந்தும்படி கூறியது
என்னை அவமானப் படுத்துவது போல் இருக்கிறது…… நான் இந்த மேடையிலே நீராகாரம்
எதுவும் எடுக்காமல் தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன்… இறுதிவரை இந்த
இலட்சியத்தில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது
உண்மையாக இருந்தால், தயவு செய்து இனிமேல் எi;னை யாரும் நீராகாரம்
அருந்தும்படி வற்புறுத்த வேண்டாம். உங்கள் திலீபனுக்கு நிறைந்த
மனக்கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் உண்டு…… என் கோரிக்கைகளை இந்திய அரசு
நிறைவேற்றாவிட்டால் நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர, இந்த அற்ப உயிரைக்
காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்திலிருந்து ஒரு போதும் பின் வாங்க
மாட்டேன்.”
அவர் பேசி முடித்ததும், மழை ஓய்ந்துவிட்டது.
திலீபனுடன் சேர்ந்து அவன் கோரிக்கைகள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக
தினமும் நல்லூர்க் கோவில் மைதானத்தில் அடையாள உண்ணாவிரதம் இருப்போர் தொகை
அதிகாரித்துக் கொண்டே வந்தது.
பலர் தாமும் சாகும்வரை திலீபனைப்போல் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல்
உண்ணா- -விரதம் இருக்க விரும்புவதாக,எம்மிடம் வந்து கூறினர். அவர்களின்
வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாமல் திணறினோம்.
செல்வி. சிவா துரையப்பா என்ற பெண் அச்சுவேலியைச் சேர்ந்தவர்……17.09.1987 இல் திலீபனுக்கு ஆதரவாக மூன்றாவது (சிறிய) மேடை ஒன்றில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்……
அன்றிரவு திலீபன் சிறுநீர் கழிக்க முடியாமல் மிகவும் அவஸ்தைப்பட்டார்.
வைத்தியர் ஒருவரை அழைத்துவந்து அவரைப் பிரிசோதிக்க ஏற்பாடு செய்தோம்
ஆனால், திலீபன் அதை மறுத்துவிட்டார். எந்தவித பரிசோதனையும், சிகிச்சையும்
தான் இறக்கும் வரை தனக்கு அளிக்கக்கூடாதென்று உறுதியாகக் கூறிவிட்டார்.
அன்று அவர் கஷ்டப்பட்டு உறங்கும்போது நேரம் நள்ளிரவு 1.00 மணி.
அவரின் நாடித்துடிப்பு :- 11, சுவாசம் – 24.பயணம் தொடரும்……..
——-
தியாக தீபம் திலீபன் – முதலாம் நாள்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு நாட்களின் இரண்டாம் நாள்

(Visited 58 times, 34 visits today)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக