ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Wed 3 Aug 2011 - 17:39

காதல் சுரங்கம் குறுந்தொகை

காதல் உங்களை கடக்கவில்லை என்றாலும், காதலை நீங்கள் கடக்கவில்லை என்றாலும் வாழ்ந்ததுக்கான அர்த்தம் குறைவு. காதல் என்ற சொல் காதுக்கு இனிமையானது, பலரின் வாழ்க்கையில் கசப்பானது. காதல் என்ற சொல்லின் இருந்து தான் கவிதை, காவியம், கருணை, கல்யாணம், கலவி, காமம், கவலை, கண்ணீர், கைகலப்பு, கல்லறை என்ற சொல்லுக்கு வழி செல்கிறது. காதல் உச்சரிக்க, உணர சுகமானது, ஆனால் பலருக்கு வாழ கடினமானது. பட்டாம்பூச்சிகள் பறக்க, தேனீக்கள் ரீங்காரம் பாட, மலரினும் மென்மையாக தொடங்கி, பல சந்தோசத் தருணங்களை அள்ளித் தருவது.

காதல் இல்லை என்றால் இன்றைய சினிமாவில் டூயட் பாடல்களோ, சோகப் பாடல்களோ இடம் பெறாது. சிறகுகள் இல்லாமல் நம்மை பறக்கச் செய்வது, காயமோ, வெட்டோ இல்லாமல் வலிக்கச் செய்வது.

குறுந்தொகையின் சிறப்பு:

தமிழில் காதல் பற்றி கூறும் நூல்கள் ஏராளம். பதினெண் மேல் கணக்கு நூல்களுள் அகப் பாடல்களே அதிகம் இடம் பெற்றுள்ளன. அப்படி உள்ள பாடல்களில் காதலின் பல்வேறு கூறுகளை பற்றி கூறும் சிறப்பான தொகுப்பு (தொகை) நூல் குறுந்தொகை ஆகும். குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களை கொண்டு இருப்பதால் குறுந்தொகை என்று அழைக்கப் படுகிறது. கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சுமார் இருநூறு புலவர்களால் பாடப் பெற்ற நானூறு பாடல்கள் கொண்ட தொகுப்பு நூலாகும்.

காதலிப்பவர்கள், காதலிக்க நினைப்பவர்கள், காதலில் துன்பப்பட்டவர்கள், காதல் கவிதை எழுதுவோர் என்று அனைவருக்கும் இதில் பாடல்கள் உள்ளது.

புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்குக்காக பாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கும், இதை கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை, வல் வில் ஓரியை, பாரியை அடையாளம் காண முடிகிறது. ஆனால் தொல்காப்பியம் கூறும் இலக்கண மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு குறுந்தொகை பாடல்களில் இல்லை. (இது இவர்களின் அந்தரங்க விஷயம் என்ற காரணத்தால், பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ் மரபில் இருந்தது). தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் எழுதப்பட்டது.

தமிழின் சிறப்பு

மற்ற மொழிகளில் இல்லாத ஒரு பெரும் சிறப்பு தமிழில் காணப்படும் திணை இலக்கணமும், அதற்குரிய பாடல் அமைப்பும் தான், பொதுவாக எல்லா மொழிகளும் கூறும் காலம் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று கூறுகள் தான். இடம், காலம், நேரம் பொறுத்து மாறுவது மனித மனதின் குணமாகும். நன்றாக குளிர் உள்ள இடத்தில், பனிக்காலத்தில் இருக்கும் காதல் நெருக்கம், வறண்ட நிலத்தில், வேனிர் காலத்தில் இருப்பதில்லை. இப்படி உள்ள இடம், சூழ்நிலை, காலம், நேரம் ஆகியவைகளை பிரித்து ஐந்திணை இலக்கணமாக கூறுவது தமிழில் உள்ள தனிப் பெரும் சிறப்பாகும். மேலும் மறை பொருள் அல்லது இறைச்சி என்று கூறப்படும் உள்ளார்ந்த அர்த்தமும், ஆழ்ந்த கருத்துகளும் அகப்பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.

குறுந்தொகையை ரசிப்பதற்கு முன்னர் இந்த ஐந்திணை என்றால் என்ன, அவற்றின் உட்கூறுகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

வளரும்.........

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]


Last edited by சதாசிவம் on Sat 27 Aug 2011 - 13:09; edited 3 times in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by பூஜிதா on Wed 3 Aug 2011 - 17:42

சூப்பருங்க
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by மகா பிரபு on Wed 3 Aug 2011 - 17:48

சூப்பருங்க தொடருங்கள் சதா அண்ணா.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by அருண்வினோ on Wed 3 Aug 2011 - 18:48

அருமை...
avatar
அருண்வினோ
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 119
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Wed 3 Aug 2011 - 21:21

ஐந்திணை இலக்கணம்:

தொல்காப்பியத்தில் கைக்கிளை என்னும் நிறைவேறாக் (ஒருதலை காதல்) காதல் முதலாக பெருந்திணை என்னும் பொருந்தாத காதல் வரை காதல் உணர்வுகள் 7 வகையாக பிரிக்கப் பட்டுள்ளது. இவற்றில் குறிஞ்சி முதல் பாலை வரை கூறும் ஐந்திணை உணர்வுகள் தான் அகப் பாடல்களில் பெரும்பாலும் காணப்படுகின்றது. ஒரு சில அசைவ காதல் பாடல்களும் அகப் பாடல்களில் இலைமறைகாயாய் அமைந்துள்ளது.

இன்றைய சினிமா காதல் பாடல்கள் பெரும்பாலும் மானே, தேனே, கண்ணே, மணியே, உன்னுயிர் என்னுயிர் என்று ஒரே விஷயத்தை வெவ்வேறு வார்த்தைகளில் அமைக்கப் படுகிறது. ஆனால் குறுந்தொகை பாடல் ஒவ்வொன்றும் முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தை போல் புத்தம் புதிதானது. இப்படி கூறும் பாடல்கள் இலக்கண மரபுகள் மாறாமல் அமைந்து இருப்பது மிக ஆச்சரியமான விஷயம் ஆகும்.

ஐந்திணை பற்றி சற்று விரிவாக காண்போம்.

பாத்திரங்களின் பெயர்கள்

1. தலைவன் : பாடலின் கதாநாயகன்
2. தலைவி : பாடலின் கதாநாயகி
3. பாங்கன் : தலைவனின் தோழன்
4. தோழி : தலைவியின் தோழி
5. செவிலி : தலைவியை வளர்த்தவள்
6. பரத்தையர் : பொது மகளிர்

பெரும் பொழுது
ஒரு ஆண்டின் உள்ள மாதங்களின் கூறுபாடுகள்

1. கார்காலம் : ஆவணி, புரட்டாசி
2. கூதிர் : ஐப்பசி, கார்த்திகை
3. முன்பனி : மார்கழி , தை
4. பின்பனி : மாசி , பங்குனி
5. இளவேனில் : சித்திரை , வைகாசி
6. முதுவேனில் : ஆனி, ஆடி

சிறு பொழுது
ஒரு நாளில் உள்ள உட் கூறுகள்

1. மாலை - 6 மணி முதல் இரவு 10 மணி வரை
2. யாமம் - 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை
3. வைகறை - நள்ளிரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
4. காலை - 6 மணி முதல் பகல் 10 மணி வரை
5. நண்பகல் - 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
6. எற்பாடு - பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை

"புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங்காலை தினைக்குரிய பொருளே" - தொல்காப்பியம்

1. குறிஞ்சித்திணை
நிலம் : மலையும் மலையைச் சார்ந்த இடமும்
சிறுபொழுது : யாமம்
பெரும் பொழுது : கூதிர் , முன் பனி
உரிப்பொருள் : தலைவனும் தலைவியும் கூடி, புணர்ந்து மகிழ்ந்து இருப்பது

2. முல்லைத் திணை
நிலம் : காடும் காட்டைச் சார்ந்த இடமும்
சிறுபொழுது : மாலை
பெரும் பொழுது : கார் காலம்
உரிப்பொருள் : தலைவனும் தலைவியும் ஒருவருக்காக ஒருவர் காத்திருத்தல்

3. மருதத் திணை
நிலம்
: வயலும் வயலைச் சார்ந்த இடமும்
சிறுபொழுது
: வைக்கறை
பெரும் பொழுது : வருடம் முழுவதும்
உரிப்பொருள் : தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் ஊடல் (சண்டை) இடுதல்

4. நெய்தல் திணை
நிலம்
: கடலும் கடலைச் சார்ந்த இடமும்
சிறுபொழுது
: எற்பாடு
பெரும் பொழுது : வருடம் முழுவதும்
உரிப்பொருள் : தலைவனும் தலைவியும் ஒருவருக்காக ஒருவர் பதற்றம், கவலை கொள்ளுதல்

5. பாலைத் திணை
நிலம்
: வெப்பம் மிகுந்த, நான்கு நிலமும் திரிந்த இடம்
சிறுபொழுது
: நண்பகல்
பெரும் பொழுது : வேனில், பின்பனி
உரிப்பொருள் : தலைவனும் தலைவியும் பிரிந்து அதனால் வருந்துதல்

திருவிளையாடல் திரைப்படத்தில் வந்து புகழ் பெற்ற ஒரு குறுந்தொகைப் பாடலை முதலில் காண்போம்.

வளரும் ..............


Last edited by சதாசிவம் on Sun 7 Aug 2011 - 12:26; edited 1 time in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by bala23 on Thu 4 Aug 2011 - 11:28

சூப்பருங்க
நல்ல தொடர்..
தொடருங்கள்!
தொடர்கிறோம்....
avatar
bala23
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 196
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Fri 5 Aug 2011 - 12:55

காதலின் குணம்

காதல் வந்தவுடன் ஆண்கள் பேசும் வார்த்தைகளுக்கு அளவே கிடையாது. பெண்களுக்கு இதில் பெரும்பாலும் பொய் என்று தெரிந்திருந்தாலும் அவர்களும் அதை ரசிக்கத்தான் செய்கின்றனர்.

"மெய்தொட்டு பயிரல் பொய் பாராட்டல்" - தொல்காப்பியம் - களவியல்

பெண்களை பாராட்டும் அனைத்து கவிகளும் இந்த நிலையில் ஏற்பட்டவை தான். அப்படி காதல் ததும்பும் நிலையில் எழுதிய பாட்டு இது. மிகப் பிரபலமான பாடல் இது.

திணை - குறிஞ்சி
பாடல் 1 - தலைவியை நோக்கி தலைவன் பாடியது
பாடியவர் - இறையனார்

"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழி யீய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே"


பொருள் விளக்கம்:
மலையில் உள்ள பூக்களில் தேனை அருந்தும் உயர்ந்த ஜாதி வண்டே, நீ பொய் கூறாமல் கண்ட உண்மையை சொல்லு. நீ இது வரை கண்ட மலர்களில், மயில் போல் மென்மையான் தேகத்தை உடைய
என் தலைவியின் கூந்தலின் மணத்தை விட மணம் கமழும் பூவும் உண்டோ?

கருந்து: தலைவியின் கூந்தல் மலர்களின் மணத்தை விட நறுமணமாக இருப்பதாக தலைவன் கூறுகிறான்.

திணை விளக்கம் : மலையில் உள்ள வண்டு, மென்மையான் தேகத்தை உணரும் தலைவன், கூந்தலின் மணத்தை நுகரும் தலைவன், (நெருக்கத்தை நீங்கள் ஊகித்து கொள்ளவும்) ஆகியவை தலைவன் தலைவியின் மகிழ்ச்சியை குறிப்பதால் குறுஞ்சி திணை ஆனது.

சரி, காதல் என்றால் என்ன அடுத்த பாடலில் காண்போம்.


Last edited by சதாசிவம் on Sat 12 Nov 2011 - 15:49; edited 3 times in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by ரேவதி on Fri 5 Aug 2011 - 12:59

தமிழ் வாழ்க......
நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் பாட புத்தகம் என் கையில் உள்ளது போன்ற உணர்வு
இப்போ என் தமிழ் மிஸ் திருமதி. சரஸ்வதி அவர்கள் நினைவுகள் வருகிறது
நன்றி ஸார்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by kitcha on Fri 5 Aug 2011 - 13:05

எனக்கும் என் தமிழ் ஆசிரியர் திரு.மாணிக்கம் அவர்களின் நினைவு வந்து விட்டது.
தமிழ் மொழியின் மேல், பாடல்கள் மீது மிகுந்த பற்று உள்ளவர்.தன் குழந்தைகளுக்கும் தமிழ் புலவர்களின் பெயரையே வைத்துள்ளார்.
எனக்கும் மொழியின் மேல் பற்று வர அவரும் ஒரு முதன்மைக் காரணம். மகிழ்ச்சி
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by அருண்வினோ on Fri 5 Aug 2011 - 13:29

...சொல்ல சொல்ல..
...கேட்க கேட்க...
...இனிக்கும் மொழி..
....நம் தமிழ்...
...நன்றி நண்பரே....
avatar
அருண்வினோ
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 119
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Fri 5 Aug 2011 - 16:26

நன்றி தோழர்களே,
நன்றி

உண்மையில் தமிழ் ஒரு அற்புதமான மொழி, எத்தனை எத்தனை நூல்கள், எத்தனை விஷயங்கள், பேசி முடிக்க நம் ஆயுள் போதாது. இன்றைக்கு எழுதப்படும் அத்தனை காதல் கவிதைகள் குறுந்தொகை, அக நானூறு, நற்றிணை நானூறு போன்ற தமிழ் பாடல்களின் சாயல் தான்.

குறுகிய வரிகள் கொண்டதால் குறுந்தொகை படிக்க, ரசிக்க இனிமையானது.

தொடர்ந்து குறுந்தொகை & புறநானூறு நூல்களில் உள்ள தமிழின் இனிமையை பருகுவோம்.avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun 7 Aug 2011 - 11:55

காதல் என்றால் என்ன

காதலில் வீழ்வதற்கு முன் நமக்கு ஒரு சிறு தயக்கம் இருக்கும், பல நேரங்களில் அது நம்மை அறியாமலேயே நடக்கிறது. இப்படி காதல் வரும் போது வேண்டாம் என்று அறிவு சொன்னாலும் மனது கேட்காது. சர்க்கரை வியாதிக்காரன் சர்க்கரையை விட்டாலும் இனிப்பை விடாமல் தவிக்கும் தவிப்பை போன்றது. காதல் வரும் போது அதை ஆதரிப்பவர்கள் நம் நண்பர்கள் அது போல் காதல் வேண்டாம் , அது ஆபத்து என்று எச்சரிப்பவர்களும் நம் நண்பர்கள் தான். இப்படி காதலில் விழப் போகும் தலைவனிடம் அவனது தோழன் கூறும் அறிவுரையாக எழுந்த பாடல் இது. காதல் எத்தன்மையானது, என்ன என்று இப்படால் அழகாக கூறுகிறது.

திணை -குறிஞ்சி
பாடல் 2 - தலைவனை நோக்கி பாங்கன் பாடியது
பாடியவர் - மிளைப்பெறுங் கந்தனார்

காமம் காமம் என்பே ; காமம்
அணங்கும் பிணியும் அன்றே ; நினைப்பின்
முதைச் சுவற் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோளோயே !


பொருள் விளக்கம்:

காதல் காதல் என்றால் என்ன? -காதல்
நம்மை தொல்லை செய்யும் பேயா ?
நம்மை துன்புறுத்தும் நோயா?
பற்களை இழந்த வயது முதிர்ந்த பசு
தன்னால் உண்ண முடியாவிட்டாலும்,
பசும் புற்களை தன் நாவால் நக்கி சுவைக்க முயலுவது போல்
அது தீராத விருந்து,..................
நம்மால் அடைய முடிந்தாலும், அது தீராத விருந்து ,...............
பெரும் தோள்களை உடையவனே , ஆதலால் காதலில் வீழாதே

சரி, காதலில் வீழ்வது நம் கைகளிலா இருக்கிறது? இதற்கு தலைவன் கூறும் பதில் என்ன ?
அடுத்த பாடலில் காண்போம்

வளரும் ..............


Last edited by சதாசிவம் on Sat 12 Nov 2011 - 15:50; edited 1 time in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Wed 10 Aug 2011 - 18:13

காதல் என்றால் என்ன

வாழ்க்கையில் நாம் பல்வேறு மனிதர்களை சந்திக்கிறோம்,பல்வேறு
சூழ்நிலையை கடக்கிறோம். இப்படி கடந்து வரும் போது நம் நினைவில் நிற்பவர்கள் ஒரு
சிலரே. தினமும் நாம் கடந்து செல்லும் பாதையில் பார்க்கும் அனைத்தும் நம் மனதை கவருவதில்லை.
ஒவ்வொருவரையும் ஒரு விஷயம் கவர்கிறது.ஏன்,இங்கு பதியும் ஒரு சில விஷயங்கள் நம்மை கவர்கிறது, ஒரு
சில பெயர்கள் நம்மை கவர்கிறது. அவர்கள் எழுதும் எழுத்துக்கள் நன்றாக இருப்பதாக
தோன்றுகிறது ஏன் இப்படி தோன்றுகிறது
,முன் பின் பார்க்காத நபர்களிடமும் ஒரு இணக்கம் ஏற்படுகிறது.காதலும் இது போல் தான். ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்கள் வாழ்க்கையில் பல நபர்களை
சந்திக்கிறார்கள். ஒரு சிலருடன் தான் இணக்கம் ஏற்படுகிறது. ஒருவரை தான்
(ஒரு
சிலரை தான்) காதலிக்க தோன்றுகிறது. இது ஏன்
?, விடை
தெரியாத கேள்வி இது
, பல அழகான வாலிபர்களை கடந்த பெண், ஒரு
சராசரி ஆணிடம் காதல் கொள்கிறாள்
, கட்டழகு வாலிபர் ஒரு சாதாரண
பெண்ணிடம் காதலில் வீழ்கிறான்.ஒருவரை ஒருவர் கவர்வதில் உருவம் முக்கிய பங்கு வகித்தாலும்,காதலில் பல நேரம் நாம் காரணம் இல்லாமல் வீழ்கிறோம், வீழ்ந்தபின்னர் தான்,இவை இவை காரணங்கள் என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்கிறோம்.இரவு வந்ததும் இலைகளில் மெல்ல படரும் பனித்துளி போல் அது சத்தம்இல்லாமல் நமக்குள் நுழைகிறது. அறிவியல் இதற்கு ஆயிரம் காரணம் சொல்கிறது. நம்ம ஊரு இலக்கியங்கள்
நல் ஊழ் காரணம் என்று கூறுகிறது. இது ஏன் எப்படி நிகழ்கிறது என்று நமக்கு தெரியாது
, ஆனாலும்
நாம் காதலில் விழுகிறோம்.


இதை தான் இந்த தலைவனும் கூறுகிறான்.

திணை -குறிஞ்சி
பாடல் 3- பாங்கனை நோக்கி தலைவன் பாடியது(பாடல் : 136)
பாடியவர் - மிளைப்பெருங்கந்தனார்

காமம் காமம் என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிச்
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து அது காணுநர்ப் பெறினே


பொருள் விளக்கம்

காதல் காதல் என்றால் என்ன ?
காதல் பேயுமில்லை, நோயுமில்லை
அது குறைவதில்லை, தனிவதில்லை
பசும் தழையை தின்ற யானைக்கு தானாக மதம் ஏற்படுவதை போல்
பார்ப்பவரைப் பார்த்தால் அது தானாக வரும்.


காதல் இன்னவரிடம் வருவது தான் நமக்கு தெரியாது, ஆனால் ஒருவர் காதலில் வீழ்தார், அல்லது விழப் போகிறார் என்பதை எவ்வாறு அறிவது? தொல்காப்பியம் கூறும் சில அறிகுறிகள் என்ன என்பதை அடுத்து பார்போம்.

Last edited by சதாசிவம் on Sat 12 Nov 2011 - 15:52; edited 1 time in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by பிஜிராமன் on Sun 14 Aug 2011 - 10:12

தமிழ் மொழி - நீ
எட்டி நீன்று பார்த்திட
தப்பிப்பாய் - நெருங்கிட்டால்
வெறி கொண்டு கற்றிடுவாய்
இம்மொழிதனையே

ஐயா, நான் சரியான நேரத்தில் தான் இந்த பதிவை பார்த்திருக்கிறேன்ன்....காரணம் நான் நேற்று தான் குறுந்தொகை பாடல்களை படிக்க ஆரம்பித்தேன்........அதன் விளக்கம் அதிலே தர படவில்லை.......அது நம் தளத்தில் உங்கள் மூலம் கிடைக்க பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது........
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by Aathira on Sun 14 Aug 2011 - 11:54

எண்ண எண்ண இனிக்கும் இனிய குறுந்தொகையை ருசுக்க ருசிக்கத் தரும் இன்சுவைப் பதிவு இது. என் எண்ணம் தங்கள் வழியாக நிறைவேறுகின்றது என்பதை நினைக்கும் போது நன்றியுடன் கலந்த விழித்துளி கண்ணின் விழித்திரையில் இருந்து கணினி திரையில் சொட்டித் தெறிக்கின்றது..... மிக்க நன்றி.. சதாசிவம் அவர்களே...தொடர்ந்து படிக்க ஆவலாக....


[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by ராஜா on Sun 14 Aug 2011 - 13:34

நல்ல முயற்சி தொடருங்கள் சதாசிவம் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.] உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை [You must be registered and logged in to see this link.] படிக்கவும்.
[You must be registered and logged in to see this image.] ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத்[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப்[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] என்னைத் தொடர்பு கொள்ள[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon 15 Aug 2011 - 11:19

நன்றி தோழர்களே,

உங்கள் ஊக்கத்திர்க்கு நன்றி
நன்றி
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Fri 19 Aug 2011 - 18:26

காதலின் அறிகுறிகள்
காதல் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் "யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே" என்ற பழமொழி போல் காதல் வருவதற்கு முன் சில அறிகுறிகள் தோன்றும். இதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய தொல்காப்பியம் நமக்கு எடுத்து கூறுகிறது. தொல்காப்பியம் ஆண் பெண் இணைவை கற்பு நெறி, களவு நெறி என்று இருவகைப்படுத்துகிறது. கற்பு என்பது பெரியவர்கள் சம்மதத்துடன் நடை பெறுவது. களவு (ஒருவர் உள்ளத்தை மற்றொருவர் களவாடுவதால் களவு என்று கூறப்படுகிறது) என்பது தலைவனும் தலைவியும் தன்னுள் தானாக இணைவது. இப்படி இணையும் போது ஏற்படும் உணர்வுகளை தொல்காப்பியம் ஐந்திணை இலக்கணமாக கூறுகிறது. இப்படி காதல் வசப்படும் போது ஏற்படும் உணர்வை இந்த பாடல் வரிகள் அழகாக எடுத்துக் கூறுகிறது. இன்றைக்கும் பொருந்தும் பாடல் இது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே தமிழர் அறிவில் சிறந்தவர்கள் என்று இந்த பாடல் மூலம் அறியலாம்.

பாடல் : தொல்காப்பியம் -களவியல்
பெண்ணுக்கு (ஆண்களுக்கும்)
வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல், நாணு வரை இறத்தல்
நோக்குவதெல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இச்
சிறப்புடை மரபிணை களவு என மொழிப


பொருள் விளக்கம்

ஒரு ஆடவனை (பெண்ணை ) பார்க்க பார்க்க விருப்பம் எழுதல்
பேசலாமா, வேண்டாமா என்று ஒருதலையாக மனதுக்குள் யோசித்தல்
என்னடா, எப்படி ஆரம்பிக்குறது என்று யோசித்து வருந்தி மெலிதல்,
தன் மனதுக்குள் இது சரியா வரும் என்று நமக்கு நாமே ஊக்கம் செய்தல், சொல்லும் வரை இறப்பது போல் துன்பம் அடைதல், பார்க்கும் இடம் எல்லாம் அவன் (அவள்) பெயர், உருவம் தெரிதல், வழக்கமாக செய்யும் வேலையை மறத்தல் (அவன் நினைவாக இருத்தல்), எதிலும் கவனம் இல்லாமல் ஒரு மயக்கத்தில் இருத்தல், இப்படி இருப்பதற்கு செத்து போயிடலாமோ என்று யோசித்தல்.......இப்படி எல்லாம் இருப்பது ஒருவர் காதலில் வீழ்ந்து விட்டார் என்பதற்கு உள்ள அறிகுறிகள்.

ஆண்களுக்கு (பெண்களுக்கும்)

முன்னிலை ஆக்கல் சொல்வழிப்படுத்தல்
நல் நயம் உரைத்தல் நகை நனி உறா அ
அந்நிலை அறிதல் மெலிவு விளக்குறுத்தல்
தன் நிலை உரைத்தல் தெளிவு அகப்படுத்தல் என்று
இன்னவை நிகழும் என்மனார் புலவர்
.........
மெய்தொட்டுப் பயிரல் பொய் பாராட்டல்
இடம் பெற்றுத் தழா அல் இடையூறு கிளத்தல்
நீடு நினைந்து இரங்கல் கூடுதல் உறுதல் ......

பொருள் விளக்கம்


பெண் (ஆண்) முன்னால் வலிய சென்று அவள் (அவன்) கவனத்தை ஈர்த்தல்
பேசி பேசியே தன் வசப்படுத்த முயற்சி செய்தல்
நல்லபடியாக (நைசாக ) பேசுதல், சிரிக்கும் படி வேடிக்கை செய்தல்
அவர்களின் மனநிலையை அறிந்து சந்தர்ப்பம் பார்த்து மெல்ல எடுத்து தன்னை பற்றி எடுத்து உரைத்தல், தெளிவு ஏறுபடுத்துதல் (கேட்பதற்கு முன்னரே தான் யார், எதிர்கால திட்டம் என்ன, நல்லவன் வல்லவன் என்று கூறுதல்)......
பேசும் போது தொட்டு பேச முயற்சி செய்தல் (ரியாக்சன் எப்படி என்று தெரிந்து கொள்ள), நீ தேவதை, ராஜா குமரி என்று பொய்யாகப் பாராட்டுதல், இடம் கிடைத்தால் தழுவுதல், பிரச்சனையை போக்குதல், அவளை நினைத்து ஏங்குதல் , கூடுதல் , ஊடல் கொள்ளுதல்..........

இப்படி எல்லாம் காதல் வரும் போதும், வந்த பின்னும் நிகழும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

காதலில் ஆணோ பெண்ணோ சொல்வதற்கு முன்னரே இருவருக்கும் ஒத்த மன உணர்வு வந்து விடுகிறது, இப்படி வந்த பிறகு தான் நாம் தைரியத்தை வரவழைத்து காதலை சொல்கிறோம். ஆணோ பெண்ணோ இப்படி சிக்னல் வராமல் பெரும்பாலும் யாரும்
காதலை வெளிப்படுத்துவதில்லை.

WHEN I SAW YOU I FELL IN LOVE
AND YOU SMILED BECAUSE YOU KNEW - William Shakespeare

காதலுக்கு முதல் தூது கண்கள் தான், குறுந்தொகை என்ன கூறுகிறது அடுத்த பாடலில் காண்போம்.


Last edited by சதாசிவம் on Sun 21 Aug 2011 - 20:13; edited 2 times in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

காதலியின் கண்கள்

Post by சதாசிவம் on Sat 20 Aug 2011 - 14:03

காதலியின் கண்கள்

காதலில் கண்கள் செய்யும் மாயம் ஆயிரம், சின்ன குறும் பார்வை ஆயிரம் வார்த்தைகளை விழுங்கி விடுகிறது, கோபம், சிருங்காரம் (காதல்/காமம் ), நகை (சிரிப்பு), ஆச்சரியம், பயம், அருவெறுப்பு, வீரம், கருணை, சாந்தம் என்ற நவரசங்களை மட்டும் அல்லாமல் வெட்கம், துக்கம், தவிப்பு என்று துணை ரசங்களையும் கண்கள் வெளிப்படுத்துகின்றது. மருளும் விழிக்கு மான்விழி என்றும், இமைத்து மலரும் விழிக்கு மலர் விழி என்றும், அங்கும் இங்கும் மீன் போல் தாவும் விழிக்கு கயல் விழி என்றும், இதயத்தை துளைக்கும் விழிக்கு வேல் விழி என்றும், குளிர்ந்த விழிகளை பனிவிழி என்றும், அங்கயற்கண்ணி, தாமரைக்கண்ணி என்றும், கண்களால் அருளும் விழிக்கு மீனாட்சி என்றும், அகலமான விழிகளை உடையவளை விசாலாட்சி என்றும், காதல் கொள்ளும் விழிகளை உடையவளை காமாட்சி என்றும், (மனிதர்களின் ஆசையை தன் கண்களால் நிறைவேற்றும் அருளும் பார்வை உடைய தெய்வத்தை காமாட்சி என்றும் ஆன்மீகம் பொருள் சொல்கிறது.) என்று கண்களைக் கொண்டு பல பெயர்களை அழைக்கிறோம், காதலியின் கண்ணை பார்த்து எழுதாத கவிஞனே இல்லை என்று கூறலாம்.

இப்படி ஒரு காந்தக் கண்கள் பற்றி தலைவன் கூறும் அழகான குறுந்தொகை பாடல் இது ...........

திணை : குறிஞ்சி
பாடல் 4 : பூ ஒத்து அலமரும்
பாடல் எழுதியவர் : மள்ளனார்
காதலியின் கண்களைப் பற்றி தலைவன் பாடுவது

"பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே
தே மொழித் திரண்ட மென்
தோள் மா மலைப் தோள்
பரீ இ வித்திய ஏனல்
குரீ இ ஒப்புவாள் பெரு மழைக் கண்ணே"


பொருள் விளக்கம்

பூ போல் சுழன்று, அம்பைப் போல் எல்லாரும் அறிய என்னை
துன்புறுத்துகின்றது அவள் விழிகள்,
தேன் போல் தித்திக்கும் குரல், திரண்ட தோள்கள் கொண்டு
பருந்திக் காட்டில் குருவி விரட்டும்
என் தலைவியின் குளிர்ந்த கண்கள்.

கம்ப ராமாயணத்தில் மிதிலைக் காட்சியில் அரண்மனை மாடத்தில் நின்று இருந்த சீதையின் கண்களைப் பார்த்து கம்பனும் இப்படித்தான் கூறுகிறான்........

"கொல்லும் வேலும் கூற்றமும்
என்னும் இவை எல்லாம்
வெல்லும் வெல்லும் எண்ண
மதர்க்கும் விழி கொண்டாள்
சொல்லும் தன்மைத்து அன்று அது
குன்றும் சுவரும் திண்
கல்லும் புல்லும் கண்டு உருகப்
பெண் கனி நின்றாள்"


பொருள் விளக்கம்
மனிதர்களை கொல்லக்கூடிய கூரான வேலும், உயிர்களை எடுக்கும் எமதர்மன் என்று கூறக்கூடிய உலகில் உள்ள கொடிய விஷயங்களை அனைத்தும் தோற்றுப் போகும் என்று கூறும் வகையில் அனைவரையும் கவரும் விழிகள் கொண்டாள் இவள், அப்படி இப்படி என்று வார்த்தைகளால் வர்ணனை செய்ய முடியாத அழகு விழிகள் இவை, பெரிய குன்றும் , கோட்டை சுவரும், உறுதியான கல்லும், பட்டுப் போன புல்லும் இவள் பார்வையில் உருகும் படி, பெண் கனியான சீதை நின்றாள்.

திருவள்ளுவர் கண் விதுப்பழிதல் (அதிகாரம் 117) என்று பத்து திருக்குறளை
கண்களுக்காக மட்டுமே செலவு செய்திருக்கிறார் என்றால் கண்களின் அருமையை
உணருங்கள்.

இப்படி கண்கள் பற்றி எழுந்த பாடல்கள் ஆயிரம்.........

ஆண்களைப் காப்பாற்ற வேண்டுமானால் பெண்களின் கண்களுக்கு மட்டும் திரை இடுங்கள். அது ஒன்று தான் அனைத்து அட்டகாசத்தையும் செய்கிறது.............அவர்களின் கடைக்கண் பார்வை ஒன்று போதும் ...


"கண்ணில் கடைக்கண் பார்வை கன்னியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமாரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்"
- பாரதிதாசன்

ஒரு பெண் கடைக்கண் பார்வை கட்டிவிட்டால் இளைஞர்களுக்கு மண்ணில் இருக்கும் பெரிய மலையும் ஒரு சிறிய கடுகு போல் இருக்கும்.

பெண்கள் கண்ணசைப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நம் பெரியவர்கள் கூறுவதும், பொம்பளை சிரிச்சாப் போச்சு புகையிலை விரிஞ்சாச் போச்சு என்று கூறுவதும் இதனால் தான்.


இப்படி ஒருவர் கண்கள் ஒருவரைப் பார்க்கும் பொழுது எண்ண நிகழும், கம்பன் என்ன சொல்கிறார் என்று அடுத்த பாடலில் காண்போம்

காதல் வளரும்......

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]


Last edited by சதாசிவம் on Sat 12 Nov 2011 - 22:00; edited 8 times in total (Reason for editing : ஸ்பெல் செக்)
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Wed 31 Aug 2011 - 15:49

காதலர் பார்வை

காதல் வரும் போது, ஒருவரின் பார்வை ஒருவரை ஈர்க்கிறது, ஆணின் பார்வையை வைத்து அவன் மனதில் என்ன இருக்கும் என்று ஊகிக்கும் ஆற்றல் பெண்களுக்கு உண்டு, ஒரு ஆண் காதல் நோக்குடன் , வளைய வருவதும், அசட்டு சிரிப்பும் பெண்களால் சுலபமாக இனம் கண்டு கொள்ள முடிகிறது. விளையாட்டுத்தனமாக காதல் செய்யும் ஒருவன் எதையும் யோசிக்காமல் பெண்களிடம் பேச முடிகிறது, ஆனால் உண்மையில் காதல் செய்யும் ஆண்கள், பெண்களிடம் காதலை வெளிப்படுத்த மிகவும் கஷ்டப்படுகின்றனர், எங்கே தன்னை தவறாக எண்ணி விடுவாளோ என்று எண்ணி காதலை வெளிப்படுத்த சமயம் பார்த்து, சமயம் பார்த்து பல தடவை தோல்வி அடைகின்றனர். இப்படி காதல் நோக்குடன் இருக்கும் ஆடவனுக்கு பெண்கள் சொல்லும் சம்மதம் கண்கள் மூலம் தான், பிறகு ஒரு சிறு சிரிப்பு. இது போதும், ஆண்கள் அடையும் சந்தோசத்திற்கு அளவே இல்லை. காதலில் இந்த தருணம் தான் ஆயிரம் மகிழ்ச்சியை அளிக்ககூடியது.

" கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய், இழுத்தாய்
போதாதென்று ஒரு சின்ன சிரிப்பில், கள்ளச் சிரிப்பில் .............."

இப்படி காதல் வந்து ஒருவர் கண்ணை ஒருவர் பார்க்கும் காட்சி தான் இந்த கம்ப ராமாயணப் பாடலில் வெளிப்படுகிறது. பாற்கடலில் பள்ளி கொண்டு உள்ள நாராயணனும், மலர் மேல் இருக்கும் மகா லஷ்மியும் பிரிந்து மீண்டும் சந்திப்பதால் அவர்களுக்கு வார்த்தை அவசியம் இல்லை என்று கம்பர் கூறுகிறார் . முதல் பார்வையில் காதல் அனைவருக்கும் சாத்தியம் இல்லை, ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு, பூர்வ ஜன்ம தொடர்ப்பு காதலர்க்கு முதல் சந்திப்பில் ஏற்படுகிறது.

இது என்ன ? முன் வினை தொடர்ப்பு என்று கம்ப ராமாயணம் பாடலும் இதை கூறுகிறது.

காதலர் பார்வையும், காதலியின் பார்வையின் சிறப்பை கூறும் பாடல்களை காண்போம்.

இராமபிரானும் சீதாதேவியும் ஒருவரையொருவர் கண்டுகொள்ளல்

598. எண் அரும் நலத்தினாள்
இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை
கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது
உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்!

அவளும் நோக்கினாள்.

பொருள் விளக்கம்


வார்த்தையில் சொல்லமுடியாத நலன்களை உடையவள், நல்ல இணையவள், கண்களால் கண்ணை கவ்வி, ஒரு கண் மற்றொரு கண்ணை உண்ண, வைத்த கண் மாறாமல், இருவரின் உணர்வும் ஒன்றிட இராமனும், சீதையும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

மருங்கு இலா நங்கையும்,
வசை இல் ஐயனும்,
ஒருங்கிய இரண்டு உடற்கு
உயிர் ஒன்று ஆயினார்,
கருங் கடல் பள்ளியில்
கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால்,
பேசல் வேண்டுமோ.

பொருள் விளக்கம்

குறை இல்லாத திருமகளும், குற்றம் இல்லாத நாராயணனும் உயிர் ஒன்று, உடல் இரண்டாக ஆகினர், பாற்கடலில் பிரிந்து, பிறகு நீண்ட நாள் கழித்து மீண்டும் சந்தித்ததால் பேச இயலுமோ?

திணை -குறிஞ்சி
பாடல் 5 - தலைவியைத் தோழி வாயிலாகப் பெற நினைந்து அத் தோழியிடம் பணிவுடைய சொற்களைக் கூறி நின்ற தலைவன் தலைவிக்கும் தனக்கும் முன்னுள்ள பழக்கத்தைக் குறிப்பாக அறிவித்தது.)
(பாடல் : 286)
பாடியவர் - எயிற்றியினார்

"உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற்
றமிழ்த மூறுமஞ் செவ்வாய்க் கமழகில்
ஆர நாறு மறல்போற் கூந்தற்
பேரமர் மழைக்கட் கொடிச்சி
மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே".


பொருள் விளக்கம்

முல்லைப் பூப்போல் வரிசையாக இருக்கும் வெண்மை பற்கள், அமிழ்தம் ஊரும் செவ்வாய், அகில், சந்தனம் மனம் கமழும் கரிய மணல் போல் உள்ள கரிய கூந்தல், உயர்ந்த மலையில் உள்ள பனிபோல் உள்ள குளிர்ச்சியை உடைய கண்களால் அவள் பார்த்த பார்வையும், அவள் செய்த கள்ளச் சிரிப்பையும் எப்படி மறக்க முடியும்? அதை எண்ணி நான் மகிழ்வேன்....

காதல் வந்து விட்டது, காதலி பார்வையில் சிக்னல் கொடுத்துவிட்டால், அடுத்து என்ன, அனைத்து மகிழ்ச்சி தான், காதலில் மகிழ்வதற்க்கு முன் நம் காதல் உண்மையா என்று எவ்வாறு அறிவது? அடுத்த வரும் குறுந்தொகைப் பாடலில் காண்போம்.

காதல் வளரும் ..............Last edited by சதாசிவம் on Sat 12 Nov 2011 - 15:56; edited 1 time in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by பிஜிராமன் on Wed 31 Aug 2011 - 21:22

மிக்க நன்றி ஐயா [You must be registered and logged in to see this image.] ........பின் வரும் மூன்று சொற்களுக்கு அற்தம் கூறுங்கள் ஏ ஒத்து.............பரீ இ.........குரீ இ.................
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Thu 1 Sep 2011 - 18:08

[You must be registered and logged in to see this link.] wrote:மிக்க நன்றி ஐயா [You must be registered and logged in to see this image.] ........பின் வரும் மூன்று சொற்களுக்கு அற்தம் கூறுங்கள் ஏ ஒத்து.............பரீ இ.........குரீ இ.................


ஏ ஒத்து ------ கொடிய வேலைகளை செய்யும் வேலை (கூரான வேல்) ஒத்து தலைவியின் கண்கள் இருந்ததாக தலைவன் கூறுகிறான். 'வேவொத்து" என்பது தான் சரியான சொல். வேல் ஒத்து என்று பதம் பிரிக்க வேண்டும், இணைய தளத்தில் இருந்த பாடலைப் அப்படியே பதிந்ததால் இந்த குழப்பம், மன்னிக்கவும்

பரி இ ------"பருத்தி வயலில் இடையே வளர்ந்த" என்பது பொருள் (இடையே திணை பயிர் இருப்பதாக, அதை உண்ண வரும் குருவியை விரட்டும், என் தலைவியின் கண்கள் குளிர்ச்சியானது என்பது போல் பொருள் கொள்ள வேண்டும்)

குரி இ -----குருவி என்பது பொருள்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by பிஜிராமன் on Thu 1 Sep 2011 - 19:51

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:மிக்க நன்றி ஐயா [You must be registered and logged in to see this image.] ........பின் வரும் மூன்று சொற்களுக்கு அற்தம் கூறுங்கள் ஏ ஒத்து.............பரீ இ.........குரீ இ.................


ஏ ஒத்து ------ கொடிய வேலைகளை செய்யும் வேலை (கூரான வேல்) ஒத்து தலைவியின் கண்கள் இருந்ததாக தலைவன் கூறுகிறான். 'வேவொத்து" என்பது தான் சரியான சொல். வேல் ஒத்து என்று பதம் பிரிக்க வேண்டும், இணைய தளத்தில் இருந்த பாடலைப் அப்படியே பதிந்ததால் இந்த குழப்பம், மன்னிக்கவும்

பரி இ ------"பருத்தி வயலில் இடையே வளர்ந்த" என்பது பொருள் (இடையே திணை பயிர் இருப்பதாக, அதை உண்ண வரும் குருவியை விரட்டும், என் தலைவியின் கண்கள் குளிர்ச்சியானது என்பது போல் பொருள் கொள்ள வேண்டும்)

குரி இ -----குருவி என்பது பொருள்


மிக்க நன்றி ஐயா...... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon 12 Sep 2011 - 17:52

உண்மை காதல்

காதல் ஏற்படும் போதும் ஆண்கள் படும் அவஸ்தை அளவிலாதது, காதலியின் இரக்கத்தை பெறுவதற்காக செய்யும் வேலைகள் அதிகம். தலைவிக்கு தன் மேல் இரக்கம் ஏற்படுவதற்காக தலைவியின் தோழியைச் சந்தித்து அவளிடம் தன் நிலைமையை எடுத்து கூறும் பாடல் இது, உண்மை காதல் எது என்று இந்த பாடல் இலைமறைக்காயாக எடுத்து கூறுகிறது.

திணை -குறிஞ்சி
பாடல் 6 - தோழியை நோக்கி தலைவன், தலைவி குறித்து பாடியது(பாடல் : 32)
பாடியவர் - அள்ளூர் நன்முல்லையார்

காலையும், பகலும், கையறு மாலையும்,
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப்
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்:
மா என மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே;
வாழ்தலும் பழியே-பிரிவு தலைவரினே.


பொருள் விளக்கம்:

காலைப் பொழுதும், பகல் வேலையும், காதலர் வருந்தும் கையறு மாலையும், உலகம் உறங்கும் நடுநிசியும், உலகம் விழிக்கும் விடியற் காலைப் பொழுதுகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் நமக்கு தெரிந்தால் அந்த காதல் பொய்யானது. காதலை வெளிப்படுத்த நான் மடல் ஏறினால் தலைவிக்கு அவமானம் ஏற்படும், வெளிப்படுத்தாமல் இருந்தால் எனக்கு துன்பம் ஏற்படும். நான் தலைவியைப் பிரிந்திருக்க ஆற்றேன். நீ என் குறையை மறுத்தாயாயின் மடலேறித் தலைவியைப் பெறலாகும். ஆயினும் அது தலைவிக்குப் பழி தருவதாதலின் அது செய்யத் துணிந்தேனல்லன்; அது செய்யாது உயிர் வைத்துக் கொண்டு வாழ்தலும் எனக்கு அரிது; ஆதலின் உயிர் நீத்தலே நன்று’ என்று தலைவன் தோழிக்கு இரக்கம் உண்டாகும்படி கூறினான்.

காதல் வந்தால் தலைவி படும் அவஸ்தை என்ன?, அடுத்த பாடலில் காண்போம்.

காதல் வளரும் .........Last edited by சதாசிவம் on Sat 12 Nov 2011 - 15:57; edited 2 times in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat 24 Sep 2011 - 14:33

காதலியின் நிலை

காதல் வந்த போது, ஆண்களால் காதலை வெளிப்படுத்த முடிகிறது. ஆனால் பெண்களுக்கு காதலை சுலபமாக வெளிப்படுத்த முடியவில்லை, எங்கே தன்னை தவறாக எண்ணி விடுவானோ என்றும் , அவனாக வந்து சொல்லட்டும் என்றும் காத்திருக்கிறார்கள், இப்படி காத்திருக்கும் காலத்தில் அவன் நினைவுகள் தான் முழுக்க இருக்கும், அவனை சுற்றி வளைய வருவார்கள், பட்டும் படாதும், சம்பந்தம் இல்லாமலும் பேசுவார்கள், பெண்கள் செய்யும் இந்த குழப்பத்தை, சைகைகள் பெரும்பாலான ஆண்களுக்கு புரிவதில்லை, எத்தனை புத்திசாலியான ஆண்களும் பெண்களிடம் வாங்கும் பட்டம் முட்டாள், மர மண்டை என்பதுதான்.....

இப்படி தவிக்கும் காதலி கூறும் பாடல் இது,

திணை -குறிஞ்சி
பாடல் 7- தலைவி தலைவன் குறித்து பாடியது (பாடல் : 74)
பாடியவர் - பெயர் தெரியவில்லை, ஆதலால் பாட்டில் உள்ள வரிகளை வைத்து அவருக்கு வைத்த பெயர் "விட்டகுதிரையார்"

விட்ட குதிரை விசைப்பின் அன்ன
விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன்
யாம் தற் படர்ந்தமை அறியான் தானும்
வேனில் ஆனேறு போலச்
சாயினன் என்ப நம் மாண் நலம் நயத்தே ....


பொருள் விளக்கம் :

அவிழ்த்து விட்ட குதிரை பாய்வதைப் போல வானத்தை நோக்கி
மூங்கில்கள் பாயும் மலை நாடன் என் தலைவன் ....
வெயிலில் நிற்கும் காளையைப் போல், எந்த உணர்வு இல்லாமல் நான் அவனை நினைத்து வருந்துவதை அறியாமல், அவனும் என்னை நினைத்து வருந்துகிறான்........

பாடலின் சிறப்பு :

காதலை சொல்ல முடியா பெண்ணின் நிலையும், காதலிக்கும் ஆண் தன்னை நினைக்கிறான், தன்னை எண்ணி வருந்துகிறான் ஆனால் வலிய வந்து காதலை சொல்லவில்லையே என்று வருத்தப்படும் காதலியின் தவிப்பை உணர்த்தும் அழகாக பாடல் இது . "வெயிலில் நிற்கும் எருமையை போல்" என்ற நாம் இன்று கையாளும் சொல்லைப் போல் வெயிலில் நிற்கும் காளை உதாரணமாக கூறப்படுகிறது, காளை வெயிலில் நிற்கும், வருத்தப்படும், ஆனால் அதில் இருந்து விலகாது..மரம் மாதிரி ..இப்படித் தான் ஆண்களின் நிலை ..............

இப்படி காதலை கழுத்துவரை வைத்துக் கொண்டு வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பெண்ணின் நிலையை கூறும் "நற்றிணை" பாடல் இது

நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்,
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;
யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி-
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப்
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்
என்ன மகன்கொல்-தோழி!-தன்வயின்
ஆர்வம் உடையர் ஆகி,
மார்பு அணங்குறுநரை அறியாதோனே


பொருள் விளக்கம்:

காதல் நோய் வந்து நம்மை தாக்கும் போது, அதை வெளியில் சொல்லுவது ஆண்களுக்கு சாத்தியம் , ஆனால் நானோ என் பெண்மையின் நாணத்தால் காதலை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறேன், கடலில் இருந்து எடுக்கப்பட்ட பசும்பொன், கைத்திறமை உள்ள பொற்கொல்லனால் சுத்தம் செய்யும் வரை மின்னாது, அது போல் மின்னாமல், அழுக்கு படிந்த வெண்மை நிறம் கொண்ட பூக்களை உடைய புன்னை மரங்கள் நிறைந்த நாட்டைச் சேர்ந்த என் தலைவன்,

அவன் மார்பை அணைக்க துடிக்கும், அவனோடு சேரக் காத்திருக்கும் என்னை அறியவில்லை தோழி ,,,,இதை என்னவென்று கூறுவது !!!!!!!!!!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]பாடலின் சிறப்பு :

பெண்மையின் தளுக்கான குணம் இந்த பாடலில் அழகாக வெளிப்படுகிறது, உலகையே ஆண்டாலும் பெண்ணின் மென்மையான பெண்மை பெண்மை தான் .....சுத்தம் செய்யாமல் கிடப்பது முத்தின் வேலை இல்லை, கொல்லனால் சுத்தம் செய்து அது உரிய காலத்தில் தங்கத்துடன் இணைந்து ஆபரணமாக மாறும் போது தான், அந்த முத்து அழகு பெறுகிறது ....அது போல் காதலில் தவிக்கும் பெண், அந்த ஆணுடன் சேர்வது தான் அழகு .....உன் மார்பில் சாயத்துடிக்கும் என் தவிப்பை உணர்ந்து சீக்கிரம் வா தவிக்க விடாதே ...என்பது போல் காதலியின் தவிப்பை அழகாக உணர்த்தும் பாடல் இது ....

உண்மையை கூறவேண்டுமானால், பெண்கள் காமத்தை விட காதலைத் தான் அதிகம் விரும்புகிறார்கள் ....ஆஸ்தி , நகை, பொருள் என்ற விஷயங்களை விட .......அன்பான பார்வை, அரவணைக்கும் தோள்கள், ஆசையாக சாய்ந்து கொள்ள மார்பு, பெண்மையின் மென்மையை உணரும் ஆண்மையும், உண்மையும் தான் ....இது போதும் .........ஆண்களின் கைகளிலும், மார்பிலும் குழந்தையாக உலவுவார்கள் ..........

இப்படி தவிப்பது பெண்கள் மட்டுமா? ஆண்களும் தான் ..ஆணின் தவிப்பை உணர்த்தும் குறுந்தொகைப் பாடலை அடுத்துக் காண்போம் ....

காதல் வளரும் .........


Last edited by சதாசிவம் on Sat 12 Nov 2011 - 15:58; edited 1 time in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum