ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 Dr.S.Soundarapandian

புகைப்படம் - கவிதை
 Dr.S.Soundarapandian

நீ என்ன தேவதை – கவிதை
 Dr.S.Soundarapandian

ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

நதிக்கரை - கவிதை
 T.N.Balasubramanian

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கவிதை
 ayyasamy ram

அறிமுகம் சந்திரசேகரன்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
 ayyasamy ram

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Wed Aug 03, 2011 4:09 pm

First topic message reminder :

காதல் சுரங்கம் குறுந்தொகை

காதல் உங்களை கடக்கவில்லை என்றாலும், காதலை நீங்கள் கடக்கவில்லை என்றாலும் வாழ்ந்ததுக்கான அர்த்தம் குறைவு. காதல் என்ற சொல் காதுக்கு இனிமையானது, பலரின் வாழ்க்கையில் கசப்பானது. காதல் என்ற சொல்லின் இருந்து தான் கவிதை, காவியம், கருணை, கல்யாணம், கலவி, காமம், கவலை, கண்ணீர், கைகலப்பு, கல்லறை என்ற சொல்லுக்கு வழி செல்கிறது. காதல் உச்சரிக்க, உணர சுகமானது, ஆனால் பலருக்கு வாழ கடினமானது. பட்டாம்பூச்சிகள் பறக்க, தேனீக்கள் ரீங்காரம் பாட, மலரினும் மென்மையாக தொடங்கி, பல சந்தோசத் தருணங்களை அள்ளித் தருவது.

காதல் இல்லை என்றால் இன்றைய சினிமாவில் டூயட் பாடல்களோ, சோகப் பாடல்களோ இடம் பெறாது. சிறகுகள் இல்லாமல் நம்மை பறக்கச் செய்வது, காயமோ, வெட்டோ இல்லாமல் வலிக்கச் செய்வது.

குறுந்தொகையின் சிறப்பு:

தமிழில் காதல் பற்றி கூறும் நூல்கள் ஏராளம். பதினெண் மேல் கணக்கு நூல்களுள் அகப் பாடல்களே அதிகம் இடம் பெற்றுள்ளன. அப்படி உள்ள பாடல்களில் காதலின் பல்வேறு கூறுகளை பற்றி கூறும் சிறப்பான தொகுப்பு (தொகை) நூல் குறுந்தொகை ஆகும். குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களை கொண்டு இருப்பதால் குறுந்தொகை என்று அழைக்கப் படுகிறது. கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சுமார் இருநூறு புலவர்களால் பாடப் பெற்ற நானூறு பாடல்கள் கொண்ட தொகுப்பு நூலாகும்.

காதலிப்பவர்கள், காதலிக்க நினைப்பவர்கள், காதலில் துன்பப்பட்டவர்கள், காதல் கவிதை எழுதுவோர் என்று அனைவருக்கும் இதில் பாடல்கள் உள்ளது.

புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்குக்காக பாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கும், இதை கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை, வல் வில் ஓரியை, பாரியை அடையாளம் காண முடிகிறது. ஆனால் தொல்காப்பியம் கூறும் இலக்கண மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு குறுந்தொகை பாடல்களில் இல்லை. (இது இவர்களின் அந்தரங்க விஷயம் என்ற காரணத்தால், பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ் மரபில் இருந்தது). தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் எழுதப்பட்டது.

தமிழின் சிறப்பு

மற்ற மொழிகளில் இல்லாத ஒரு பெரும் சிறப்பு தமிழில் காணப்படும் திணை இலக்கணமும், அதற்குரிய பாடல் அமைப்பும் தான், பொதுவாக எல்லா மொழிகளும் கூறும் காலம் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று கூறுகள் தான். இடம், காலம், நேரம் பொறுத்து மாறுவது மனித மனதின் குணமாகும். நன்றாக குளிர் உள்ள இடத்தில், பனிக்காலத்தில் இருக்கும் காதல் நெருக்கம், வறண்ட நிலத்தில், வேனிர் காலத்தில் இருப்பதில்லை. இப்படி உள்ள இடம், சூழ்நிலை, காலம், நேரம் ஆகியவைகளை பிரித்து ஐந்திணை இலக்கணமாக கூறுவது தமிழில் உள்ள தனிப் பெரும் சிறப்பாகும். மேலும் மறை பொருள் அல்லது இறைச்சி என்று கூறப்படும் உள்ளார்ந்த அர்த்தமும், ஆழ்ந்த கருத்துகளும் அகப்பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.

குறுந்தொகையை ரசிப்பதற்கு முன்னர் இந்த ஐந்திணை என்றால் என்ன, அவற்றின் உட்கூறுகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

வளரும்.........

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]


Last edited by சதாசிவம் on Sat Aug 27, 2011 11:39 am; edited 3 times in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down


Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Fri Sep 30, 2011 4:10 pm

தலைவனின் தவிப்பு

காதல் தொடரும் போது, ஆணும் பெண்ணும் படும் மகிழ்ச்சியும், துக்கமும் அளவிலாதது. காதலில் முதல் நிலையில் ஆண் பெண்ணை நோக்கி செல்கிறான், காதலில் கடை நிலையில், பெண் ஆணை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார். காதலில் முதல் நிலையில் ஆண் பெண் சந்திப்பு, அவர்களிடையே நிகழும் பேச்சு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது, அதுவும் யாருக்கு தெரியாமல் சந்திக்கும் சந்திப்பும், பேசும் பேச்சும் சுவை மிகுந்தது. இப்படி சந்திக்கும் வேளையில், பெண்கள் தீடீரென சந்திப்பின் கால இடைவெளியை நீட்டுவதும், தவிர்ப்பதும் காதலில் இயல்பு, கொஞ்சம் காலம் தவிக்க விட்டாத் தான் தன் அருமை தெரியும் என்ற காரணத்திலோ, வீட்டுக்கு தெரிந்து விடும் என்ற காரணத்திலோ இது நிகழ்கிறது. இப்படி ஒரு சூழலில் தலைவியின் சந்திப்பை மறுக்கும் தோழியால் அவதிக்குள்ளான ஒரு தலைவன் புலம்பும் புலம்பல் இது..இன்றைய ஆண்கள் தலையனையையும், பெண்கள் கரடி பொம்மையையும் கட்டிக்கொண்டு தூங்குவது இது போல் உள்ள தவிப்பினால் தானோ?

திணை : குறிஞ்சி
பாடியவர் : ஔவையார்
பாடல் 8: மகவுடை மந்தி, தலைவியை சந்திக்க முடியாமல் இருக்கும் துன்பத்தில் தலைவன் பாடும் பாடல்

நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்
பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளந் தாங்கா வெள்ள நீந்தி
அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே


பொருள் விளக்கம் :

சுடப்படாத பச்சை களிமண்ணால் செய்யப்பட்ட மண் பானை, நீர் பிடிக்க மழையில் வைத்தால், அந்த பானை நீரை உள்ளே வைத்துக் கொள்ள முடியாது, மொத்தமாக நீரை சிந்தவும் முடியாது, நீரின் ஈரம் தாங்க முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக நீரை சிந்தும், அது போல் நல்ல உரைகளை விட்டு, தலைவியை காண முடியாது என்று மனதுக்கு துன்பம் தரும் உரைகளை கேட்டு வருத்தப்படும் என் நெஞ்சே, காதலியை வேண்டாம் என்று தூக்கி போட முடியவில்லை, காதலியை நெருங்கவும் முடியவில்லை. அவளுடைய பிரிவு மனதுக்கு வருத்தத்தை தருகிறது. மரத்துக்கு மரம் தாவும் பொழுது தாயின் மார்பை கெட்டியாக கட்டிக் கொள்ளும் குரங்குக் குட்டியைப் போல், என் குறையை கேட்டு, என்னை தேற்றி, என்னை மார்போடு கெட்டியாக/நெருக்கமாக அணைத்துக் கொள்ள எப்போது என் தலைவி வருவாள் என்று அவளுக்குகாக வருத்தப்படும் நெஞ்சே உன் போராட்டம் மிக பெரியது , பெருமை உடையது.காதல் வளரும்


Last edited by சதாசிவம் on Sat Nov 12, 2011 2:31 pm; edited 2 times in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Oct 15, 2011 8:57 am

காதலியின் தன்மை

உண்மையாக காதலிக்கும் போது ஆண்களுக்கு தன் காதலி தேவதைப் போல் தான் காட்சி அளிக்கிறாள். அவளின் ஒவ்வொரு அசைவும் ஓராயிரம் கவிதைகளை சொல்கிறது, அவளின் நெருக்கம் சுகமாக இருக்கிறது, சிறிய பிரிவும் பெரிதாக வலிக்கிறது. கோபமும் சின்ன ஊடலும் கூட சுவையாகத் தான் இருக்கிறது. காதலில் விழும் போது ஒருவனின் இதயம் வேலை செய்யத் தொடங்குகிறது, ஆனால் அவன் மூளை வேலை செய்வதை நிறுத்திவிடுகிறது, இதனால் தான் உலகில் உள்ளோர் காதல் பித்து பிடித்தவன் என்று கூறுகின்றனர். இப்படி காதலியின் நெருக்கத்தை உணர்ந்து காதல் பித்தேறிய தலைவன் கூறும் அழகான பாடல் இது.

திணை : குறிஞ்சி
பாடியவர் : ஓரம் போகியார் (பாடல் : 70)
பாடல் 9: தலைவியை சந்தித்த தலைவன் அவளைப் பற்றி பாடும் பாடல்

ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதற் குறுமகள்
நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே;
இனையள் என்று அவட் புனை அளவு அறியேன்;
சில மெல்லியவே கிளவி;
அனை மெல்லியல் யான் முயங்குங்காலே
.

பொருள் விளக்கம்

அழகாக ஒடுங்கிய அடர்த்தியான கூந்தலை உடையவள், பிறை போல் வளைந்த வாசனை நெற்றியை உடைய சின்னப் பெண், சுவையான குளிர்ந்த நீரைப் போன்றவள் என் தலைவி , அவளைப் பிரிந்தால் வருத்தம் தருகிறாள், அவள் இப்படி பட்டவள் தான் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை , அவளைப் பற்றி சொல்ல வார்தையில்லை. கொஞ்சம் தான் பேசுகிறாள், ஆனால் திரும்ப திரும்ப அவள் பேச்சை கேட்க வேண்டும் என்று தோணுகிறது, அணைக்கும் போது மென்மையான இலவம் பஞ்சால் செய்யப்பட்ட தலையணை போல் மென்மையாக இருக்கிறாள்.

பாடலின் சிறப்பு

ஒரு ஆடவனுக்கு உள்ள ஐம்புலன்களும் பெண்ணால் சுகப்படுகிறது என்று இந்த பாடல் அழகாகக் கூறுகிறது. தலைவியின் கூந்தலை காண்பது கண்ணுக்கு விருந்தாகவும், அவளின் வாசனை நெற்றியை உச்சி நுகர்தல் மூக்கிற்கு இன்பமாகவும், சுவையான குளிர்ந்த நீர் போல் இருக்கும் அதரம் சுவைக்க இன்பமாகவும், அவளின் சுவையான பேச்சு காதுக்கு இன்பமாகவும், அவளின் மென்மையான உடலை கட்டித் தழுவுவது உடலுக்கு (மெய்யுக்கு) இன்பமாகவும் இருப்பதாக இந்த பாடல் கூறுகிறது, அவளின் நெருக்கம் இன்பத்தையும் பிரிவு துன்பத்தையும் தருகிறது.

வள்ளுவனும் இதைத் தான் கூறுகிறான் ..

"கண்டு கேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள" - 1101

இவளைக் கண்டு கண்கள் இன்புறுகிறது, இவளின் பேச்சை கேட்டு காதுகள் இன்புறுகிறது, இவளின் இதழை உண்டு நாக்கு இன்புறுகிறது, இவளின் வாசனை நுகர்ந்து மூக்கு இன்புறுகிறது, இவளின் அணைப்பி‌ல் என் உயிர் (மெய்) இன்புறுகிறது, என் ஐந்து புலன்களும் இன்பமும் இவளிடம் உள்ளது.

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள் -1104


இந்த உலகில் உள்ள அதிசயமான நெருப்பு என் தலைவி, பொதுவாக நெருப்பின் அருகில் சென்றால் சுடும், அதிலிருந்து தூரமாக விலகினால் குளிரும். ஆனால் இவள் அருகில் சென்றால் குளிர்கிறது, இவளை விட்டு துரமாகச் சென்றால் சுடுகிறது. இப்படி பட்ட வித்தியாசமான காதல் நெருப்பை எங்கு பெற்றாள் இவள் ?

காதல் வளரும் .....


Last edited by சதாசிவம் on Sat Nov 12, 2011 2:32 pm; edited 2 times in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Oct 15, 2011 9:03 am

அருமையான தொடர்...இன்னும் விரிவாகப் படிக்கவேண்டும். இப்போதைக்கு நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5297
மதிப்பீடுகள் : 1837

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Oct 15, 2011 3:58 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:அருமையான தொடர்...இன்னும் விரிவாகப் படிக்கவேண்டும். இப்போதைக்கு நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஐயா, தமிழறிந்த உங்களின் பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது..
நன்றி
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Oct 23, 2011 12:08 pm

காதலர் சந்திப்பு

காதல் அரும்பியவுடன் ஒருவரை ஒருவர் சந்தித்து தனிமையில் இனிமை காண்பது காதலின் சுகமான தருணம். இப்படி காதலியை சந்திக்க வேண்டும் என்றால், தோழியோ, தோழனோ உதவி செய்ய வேண்டும். ஆண்களுக்கு காதல் கைகூடும் வரை தோழர்கள் தேவைப்படுகிறார்கள், காதலி சரி என்று சொன்ன பிறகு தோழர்கள் அவர்களுக்கு அவசியம் இல்லை. ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை, காதலின் ஒவ்வொரு கட்டத்தையும் தன் தோழிகளுடன் பகிர்ந்து கொள்கிறார்கள், தன் காதலர் எப்படி எல்லாம் தன்னை காதலிக்கிறார் என்று பெருமை அடித்து கொள்ளவும், அவன் நல்லவனா, கெட்டவனா என்று தன் அனுபவத்தில் நடக்கும் விஷயங்களைக் கூறி தோழியின் சொந்த அனுபவத்தில் நடந்த காதல் கதைகளை வைத்து எடை போடுகின்றனர்.

காதலியை சந்திக்க விரும்பும் காதலனுக்கு காதலி எங்கு வருவாள், அந்த இடம் எப்படிப்பட்டது என்று அழகாக உரைக்கும் தோழியின் கூற்றில் அமைந்த பாடல் இது.

திணை : மருதம்
பாடல் 10: பெரும் பேதையே (எண் :113)
பாடியவர் : மாதீர்தனார்

ஊர்க்கும் அணித்தே, பொய்கை; பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே, சிறு கான்யாறே:
இரை தேர் வெண் குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றால், பொழிலே; யாம் எம்
கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்;
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே.


பொருள் விளக்கம்:

ஊருக்கு அருகே அழகான பொய்கை இருக்கிறது, அதன் அருகே சிறிய காட்டாறு ஓடுகிறது, இறை தேடும் வெண் கொக்கைத் தவிர அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். நாங்கள் கூந்தல் நன்கு வளர உதவும் ஒருவகை களி மண் சேர்க்க (எடுக்க) அங்கு வருவோம். உன் காதலியும் அங்கு வருவாள். வந்தால் அவளை சந்திக்கலாம்.

பாடலின் சிறப்பு:

தலைவனுக்கு உதவும் தலைவி, காட்டாறில் கிடைக்கும் ஒரு வகை களிமண் எடுத்து கூந்தலுக்கு பூசும் பழக்கம் இருப்பதை இந்த பாடல் கூறுகிறது. இன்று நாம் முல்தான் மட்டி என்று பூசுவதும் ஒருவகை களிமண் தான் . இதன் மூலம் பெண்கள் தங்களின் அழகைப் பராமரிப்பதில் வெகு கவனம் செலுத்துவது இன்றல்ல, சங்க காலம் முதல் வழக்கத்தில் உள்ளது என்பதை இந்த பாடல் எடுத்துக் கூறுகிறது.


காதல் வளரும்....

Last edited by சதாசிவம் on Sat Nov 12, 2011 2:33 pm; edited 3 times in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by பிஜிராமன் on Sun Oct 23, 2011 12:20 pm

ஐயா.........கடைசியாக பதிந்த பாடலைப் படித்தேன்......அருமையான விளக்கம்..........முல்தான் மாட்டி என்பது எனக்கு புதுமையான சொல், இதை அழகு நிலையங்களில் உபயோகிக்கின்றனரா?

நான், மூன்றாம் பாலுக்கு கவிதை எழுதும் பொழுது, உங்களின் இந்தப் பதிவுகள் கை கொடுக்கும் என்பதில் எனக்கு எந்த விட ஐயமும் இல்லை,

மிக்க நன்றிகள் ஐயா...... :நல்வரவு: மகிழ்ச்சி நன்றி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Oct 24, 2011 4:27 pm

பிஜிராமன் wrote:ஐயா.........கடைசியாக பதிந்த பாடலைப் படித்தேன்......அருமையான விளக்கம்..........முல்தான் மாட்டி என்பது எனக்கு புதுமையான சொல், இதை அழகு நிலையங்களில் உபயோகிக்கின்றனரா?

நான், மூன்றாம் பாலுக்கு கவிதை எழுதும் பொழுது, உங்களின் இந்தப் பதிவுகள் கை கொடுக்கும் என்பதில் எனக்கு எந்த விட ஐயமும் இல்லை,

மிக்க நன்றிகள் ஐயா...... :நல்வரவு: மகிழ்ச்சி நன்றி

நன்றி ராமன்,,,,,, நன்றி அன்பு மலர்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by kitcha on Mon Oct 24, 2011 4:36 pm

சம்பந்தமே இல்லதே கேள்வி கேட்கிறேன் என்று நினைக்க வேண்டாம் தமிழில் தொல்காப்பியம் மிகச் சிறந்த ஒன்றாக கருதப் படுவது ஏன்.கொஞ்சம் விளக்கம் சொல்ல முடியுமா திரு.சதாசிவம் அவர்களே
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Oct 24, 2011 5:01 pm

நன்றி கிச்சா

தொல் என்றால் பன்மையான (பழமையான) என்று பொருள். தமிழ் இலக்கண நூல்களில் பழமையான நூலாக இது கருதப்படுகிறது. மேலும் சமஸ்கிரத இலக்கண முன்னுலான பாணினி எழுதிய நூலுக்கும் முன் எழுதப்பட்டது. இலக்கண மரபுகள் கூட அழகிய இலக்கிய வடிவம் அமைத்திருப்பது, இதன் சிறப்பு. தமிழ் அறிந்த ஒருவன் படித்தால் கூட இதில் உள்ள பல மரபுகள் சுலபமாகப் புரியம் வண்ணம் அமைந்துள்ளது. எளிதில் புரிவது, அனைவரையும் சுலபமாக சென்று அடையும்..தமிழின் சிறப்பை இதில் நன்கு அறியலாம், நூறு வருடம் முன்பு ஆங்கிலத்தில் புலி குட்டியை இப்படி கூப்பிட வேண்டும், மாட்டுக் குட்டியை கூப்பிட வேண்டும் என்று வகுத்திருப்பது போல், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் ஒவ்வொரு மிருகத்தின் குட்டியை எப்படி கூப்பிட வேண்டும் என்று இலக்கணம் வகுத்திருக்கிறான் என்ற உண்மை இதை படிக்கும் போது நாம் அறியலாம். அது மட்டுமல்லாமல் தாவரம், மரம் பற்றிய கூற்றுகள் கூட இதில் உண்டு.

மேலும் விவரங்களுக்கு,

[You must be registered and logged in to see this link.]
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by kitcha on Mon Oct 24, 2011 5:27 pm

சதாசிவம் wrote:நன்றி கிச்சா

தொல் என்றால் பன்மையான (பழமையான) என்று பொருள். தமிழ் இலக்கண நூல்களில் பழமையான நூலாக இது கருதப்படுகிறது. மேலும் சமஸ்கிரத இலக்கண முன்னுலான பாணினி எழுதிய நூலுக்கும் முன் எழுதப்பட்டது. இலக்கண மரபுகள் கூட அழகிய இலக்கிய வடிவம் அமைத்திருப்பது, இதன் சிறப்பு. தமிழ் அறிந்த ஒருவன் படித்தால் கூட இதில் உள்ள பல மரபுகள் சுலபமாகப் புரியம் வண்ணம் அமைந்துள்ளது. எளிதில் புரிவது, அனைவரையும் சுலபமாக சென்று அடையும்..தமிழின் சிறப்பை இதில் நன்கு அறியலாம், நூறு வருடம் முன்பு ஆங்கிலத்தில் புலி குட்டியை இப்படி கூப்பிட வேண்டும், மாட்டுக் குட்டியை கூப்பிட வேண்டும் என்று வகுத்திருப்பது போல், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் ஒவ்வொரு மிருகத்தின் குட்டியை எப்படி கூப்பிட வேண்டும் என்று இலக்கணம் வகுத்திருக்கிறான் என்ற உண்மை இதை படிக்கும் போது நாம் அறியலாம். அது மட்டுமல்லாமல் தாவரம், மரம் பற்றிய கூற்றுகள் கூட இதில் உண்டு.

மேலும் விவரங்களுக்கு,

[You must be registered and logged in to see this link.]

மிக்க நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by பிஜிராமன் on Mon Oct 24, 2011 6:07 pm

தொல்காப்பியதிற்கு சிறந்த விளக்கம் ஐயா.....மிக்க நன்றிகள்........
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Oct 29, 2011 3:34 pm

காதலின் இணக்கம்

[You must be registered and logged in to see this image.]

காதலன் காதலி சந்திப்பு மிகவும் ரம்மியமானது, சிருங்காரச் சுவை உடையது. காதலிக்கும் போது காதலன் காதலி சந்திப்பு பல மணி நேரம் நிகழ்ந்தாலும் ஒரு சில வினாடிகளில் கழிந்தது போல் ஒரு மாயத்தோற்றத்தை நமக்கு கொடுக்கிறது. பேசப் பேச இனிக்கிறது, சீ, ரொம்ப மோசம், அப்புறம், அப்புறம் என்று ஒன்றும் இல்லை என்றாலும் நான்கு மணி நேரம் ஆனாலும் சுவையாக பேச முடிகிறது. இப்படி ஆள் இல்லாத இடத்தில் தலைவனை காண வந்த தலைவியின் தோழி, தலைவனுக்கு கூறும் பாடல், காலையில் ஆரம்பித்த உங்கள் சந்திப்பு மாலை வரை தொடர்கிறது, நேரம் ஆகிவிட்டது, பொழுது சாய்ந்து விட்டது, நீங்கள் பேசியது போதும் பிறகு பேசலாம், நாங்கள் செல்ல வேண்டும் என்று கூறும் அழகான பாடல். இன்று கூட காதலிக்கும் தோழியரைப் பார்த்து அவர்களின் தோழிகள் கேட்கும் கேள்வி அப்படி என்னத்த தான் பேசுவீங்களோ, எப்பவும் போனும் கையும்மா இருக்கிற, இது சரியில்லை. அது போல் இருக்கும் ஒரு பாவனையில் எழுந்த பாடல்.

பாடல் 11:நாரை மிதிக்கும் என் மகள்
திணை : நெய்தல் (தோழியின் கூற்று)
பாடியது : பொன்னாகனார்

நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி,
நின்குறி வந்தனென், இயல் தேர்க் கொண்க!-
செல்கம்; செல வியங்கொண்மோ-அல்கலும்,
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும், என் மகள் நுதலே


பொருள் விளக்கம்:

கடற்கரையில் நெய்தல் மலர் கிடத்தி என் பொம்மையை வைத்து விட்டு உன்னை சந்திக்க வந்திருந்தாள் என் தலைவி, அழகிய தேரை உடைய தலைவனே, என் மகள் போல் நான் பாவிக்கும் பொம்மையின் நெற்றியை ஆரால் மீனை நன்கு உண்டு வயிறு பெருத்த நாரை மிதித்து விடும், பொழுது சாய்ந்து இருட்டி விட்டது, நான் புறப்படுகிறேன் அவளை என்னுடன் அனுப்பிவிடு.

பாடலில் சிறப்பு:

பொம்மையை தன் மகள் என்று கூறுவது, பெண்கள் பாவை பொம்மையை தங்கள் குழந்தையாக வைத்து விளையாடும் பழக்கம் இருப்பதையும், தலைவியை பொம்மையாக கருதுவதையும் இந்த பாடல் அழகாகக் கூறுகிறது. உவமை நயம் உள்ள வரிகள். பொம்மையை அழிக்கும் நாரை போல், பொழுது சாய்ந்ததால் தலைவியின் பெண்மையை தலைவன் அழிக்கும் முன்னர் அவளை திரும்ப அழைக்கும் தோழியின் பயத்தை வெளிப்படுத்தும் பாடல்.

காதல் வந்தால் எவ்வளவு கஷ்டம், பார்க்காமல் இருந்தாலும் கஷ்டம், பார்த்து கொஞ்சம் நேரம் பேசினாலும் கஷ்டம்.

காதல் வளரும் .........


Last edited by சதாசிவம் on Sat Nov 12, 2011 2:34 pm; edited 1 time in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Nov 12, 2011 1:06 pm

காதலின் தவிப்பு

காதல் வந்தால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எத்தனை முறைப் பார்த்தாலும் எவ்வளவுத் தான் பேசினாலும் காதலிக்கும் காலங்கள் சலிப்பதில்லை. இன்றைய காலகட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஹவர் (hour) கணக்குல பேசினாலும் அவருடைய கணக்குல பேசுவதால் சலிப்பதில்லையோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இன்று உள்ள நவீன காலச் சூழ்நிலையில் கூட ஒருவரை ஒருவர் பார்ப்பது அவ்வளவு சுலபமல்ல, தோழியரிடம் பொய் சொல்லி, பெற்றவரிடம் பொய் சொல்லி, யாரும் தன்னை அடையாளம் கண்டு விடக்கூடாது என்று தலையில் முக்காடு இட்டு காதலருடன் நெருக்கமாக பைக்கில் செல்வது எவ்வளவு சுகமானது. அப்பப்பா எத்தனை பெயரை சமாளிக்க வேண்டி உள்ளது.

இந்த காலத்திலே இப்படி உள்ளது என்றால், அந்த காலத்தில் எவ்வளவு கட்டுப்பாடு இருந்திருக்கும் என்று நீங்கள் ஊகிக்கவும். எந்த காலமாய் இருந்தால் என்ன ? எத்தனை பேர் தடுத்தால் என்ன? காதலர் காண்பதை யார் தடுக்க முடியும் ? காதல் சுவை எல்லாத் தடைகளையும் தாண்டும் சக்தியை தருகிறது.

இப்படி தனக்கு தடையாக இருக்கும் பெற்றவரை எண்ணி புலம்பி, தன்னை காணவரும் காதலனை காண தவிக்கும் தலைவியின் சூழலை அழகாகச் சித்தரிக்கும் பாடல் இது.

திணை - குறிஞ்சி
பாடல் 11- என்ன செய்வேன்? (பாடல் எண் : 244)
காணவரும் தலைவனை காண துடித்து தலைவி தவிக்கும் பாடல் இது.
பாடியவர் - கண்ணனார்

பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்
துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவ முயறல்
கேளே மல்லேங் கேட்டனம் பெரும
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட் டாங்கியாம்
உயங்குதொறு முயங்கு மறனில் யாயே.


பொருள் விளக்கம்


எல்லோரும் தூங்கும் நள்ளிரவில், யாருக்கும் பயப்படாத முரட்டு யானையைப் போல வந்திருக்கிறாய். நீ கதவை தட்டுவது என் காதில் வீழாமல் இல்லை. கேட்டேன் தலைவா. தலை கொண்டை கலைய , தோகை சரிய வேடன் வலையில் அகப்பட்டுள்ள மயில் போல மாட்டிக் கொண்டிருக்கிறேன். என் தாய் என்னை கட்டிக்கொண்டு படுத்து இருப்பதால் என்னால் எழுந்து வர முடியவில்லை. பொறுமையாய் இரு. அவளை ஏமாற்றி விட்டு வருகிறேன்.

பாடலின் சிறப்பு:

தலைவனை முரட்டு யானையாக உருவகப்படுத்துதல், அதாவது சாதாரண யானை, யானைப்பாகனின் அங்குசத்திருக்கு கட்டுப்படும் பயப்படும் . ஆனால் காதல் என்னும் மதம் ஏறியதால் தலைவன் முரட்டு யானைப் போல் எதற்கும் பயப்படாமல் நள்ளிரவில் வந்துள்ளான். மயிலின் அழகு அதன் தோகையும், அழகான கொண்டையும் தான், மயில் வேடனின் வலையில் அகப்படும் போது அதன் கொண்டையும், தோகையும் சிலிர்த்து மகிழ்ச்சியுடன் ஆட முடியாது. அது போல் பெற்றோரின் பாச வலையில் அகப்பட்டுள்ள பெண்கள் தங்களின் தலைவனுடன் கூடி சிலிர்க்கும் மகிழ்ச்சியை அடையமுடியாமல் தவிக்கும் தவிப்பை உணர்த்தும் அழகான பாடல் இது. ஆயிரம் கலாச்சாரம் மாறினாலும், ஐ‌டி துறை வந்தாலும் காதல் காதல் தான், அது தீரா விருந்து.

காதல் வந்தால் தூக்கம் போகும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் தவிப்பு என்ன ? அடுத்த பாடலில் பார்ப்போம்.

காதல் வளரும்.....

avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Thu Dec 15, 2011 8:23 pm

தூக்கம் இழந்த காதலி

தூக்கம் நன்றாக இல்லையென்றால் நம் உடம்புக்கு துக்கம் வந்து விடுகிறது. அதேபோல் மனதுக்கு துக்கம் இருக்கும் போது தூக்கம் வர மறுக்கிறது. காதலின் இனிய தருணங்கள் கழிந்த பின் அடுத்த என்ன செய்யலாம் என்ற ஆலோசனை காதலனுக்கு முன், காதலிக்கு வந்து விடுகிறது. கல்யாணம் செய்து கொள்ளவும் துணிவு வரவில்லை, காதலை விடவும் துணிவு வரவில்லை. உலகளில் உள்ள ஆச்சரியங்களில் வியக்கத்தது காதல் தான். காதலிக்கும் போது விரும்பி, உருகி, நம்மை உருக்கி காதலிக்கும் தலைவிக்கு ஊரார் அறிந்தவுடன் தயக்கம் வருகிறது. காதலிக்கும் போது உள்ள துணிவு, கல்யாணத்திற்கு வருவதில்லை. அப்போது தான் வாழ்க்கையின் அனைத்து கெடுதல்களும் அவள் கண் முன்ன வருகிறது. பெண் என்னதான் பேசினாலும், யாரோ ஒருவரை சார்ந்து தான் வாழ வேண்டி உள்ளது. ஒரு கிளையில் இருந்து மறு கிளைக்கும் தாவும் போது, தாவும் கிளை பலம் உள்ளதா என்று ஊகிக்கும் மந்தியின் நிலை தான் பெண்ணின் மனம். முதலில் பெற்றோர், கல்யாணம் ஆனா பிறகு கணவன், பிள்ளைகள் வளர்ந்து விட்டால் பிள்ளைகள் என்று யாராவது ஒருவரின் தோள்கள் தேவைப்படுகிறது. இப்படி காதலின் அடுத்த நிலைக்கு போக நினைக்கும் தலைவியின் நிலையைத் தான் இந்த பாடல் கூறுகிறது.

அந்த காலத்தில் வீட்டில் கொல்லை புறத்தில் மாட்டுத் தொழுவம் இருக்கும். இப்படி இருக்கும் தொழுவத்தில் மாடுகள் கொசு, ஈயின் தொல்லையில் உடலை ஆட்டிக் கொண்டும், சிலிர்த்துக் கொண்டும் தூங்கும். இது இரவு முழுவதும் தொடரும். இப்படி ஆட்டும் போது கழுத்தில் கட்டப்பட்டு இருக்கும் மணி தொடர்ந்து ஒளித்து கொண்டு இருக்கும். கவலை இல்லாமல் இருக்கும் ஒருவர் சுலபமாக தூங்க முடியும். பக்கத்தில் பட்டாசு வெடித்தாலும் அவர்கள் தூக்கம் கலையாது. ஆனால் மனதில் கவலையும், யோசனையும் உள்ளவர்கள் தூங்கினாலும் லேசான சத்தம் கேட்டாலும், தூக்கம் கலைந்து விடும். காதல் சோகத்தில் உள்ளவர்களை கேட்கவே வேண்டாம். அவர்களுக்கு தூக்கமே வருவதில்லை. இப்படி தூக்கம் இல்லாமல் இருக்கும் போது நம்மை சுற்றி இருக்கும் சத்தங்கள் நன்கு கேட்கிறது. இரவில் சத்தம் இடும் வாகனங்கள், கூர்க்கா கொடுக்கும் விசில் சத்தம், விடியற்காலையில் கேட்கும் கோவில் மணியோசை, மசூதியில் வரும் பாங்கு சத்தம் என்று பலதும்.

இந்த பாடலும் இப்படி தூங்காமல் தவிக்கும் தலைவிக்கு இரவில் தன் தலையை ஆட்டும் மாடுகளின் கழுத்துகளில் கட்டப்படும் மணியோசை தான் கேட்கிறது.

திணை : குறிஞ்சி
பாடல் 12: சேயரி மழைக்கன் (பாடல் 86)
தலைவனை நினைத்து தூக்கம் இல்லாமல் புலம்பும் தலைவியின் பாடல்.
பாடியவர் : வெண் கொற்றன்

சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி,
பிறரும் கேட்குநர் உளர்கொல்?-உறை சிறந்து,
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து,
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே.


பொருள் விளக்கம்

மேகங்களில் இருந்து உடைந்து வழிந்து துளித் துளியாக விழும் மழைத் துளி போல் கண்ணீருடன் நான் புலம்புவதை கேட்க ஆள் இருக்கிறார்களா? மழைத்துரலில் வாடைக்காற்று வீசும் பனிக்காலத்தில் ஈயின் தொந்தரவு தாங்காமல் தலையை ஆட்டும் எருது தலை அசைக்க சப்தம் கேட்கும் மணியோசையை நள்ளிரவில் தூங்காமல் கேட்டு நான் புலம்பும் புலம்பலை கேட்க ஆள் இல்லையா?

ஊரு சனம் தூங்கிடுச்சி,
ஊத காத்து அடிச்சிடுச்சி
பாவி மனம் தூங்கலையே,
அதுவும் ஏனோ தெரியலையே


என்று பாடும் சினிமா பாட்டு இந்த குறுந்தொகைப் பாடலின் சாயல் தான்.

காதல் தொல்லையில் தூக்கம் மட்டுமா போகிறது, எவரைப் பார்த்தாலும் கோவம் வருகிறது, ஓ என்று கத்தலாமா என்று தோணும். இப்படி துடிக்கும் ஒரு பாடலை அடுத்து காண்போம்.

காதல் வளரும் .......
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Dec 26, 2011 11:20 am

காதலன் பிரிவு

காதல் செய்யும் போது காதலர் பிரிவு மிகவும் வருத்தம் தரக்கூடியது. காதலி காதலனைக் காண நினைக்கும் போது அவனை காண சூழ்நிலை சரியில்லாத நிலையில் அவளுடைய வருத்தம் மேலும் ஓங்குகிறது. காதலிக்கும் போது மட்டுமல்ல கணவன் காதலனாக இருக்கும் போதும் இந்த நிலை தான். பெரும்பாலான பெண்களுக்கு காதலித்தவன் கணவனாக அமைவதில்லை. கணவனாக அமைந்த ஆண் மகனோ தன்னை காதலிப்பதில்லை. இவர்கள் கடமைக்காகத் தான் வாழ்கின்றனர். இப்படி வாழும் வாழ்க்கையில் கணவனின் அல்லது மனைவியின் பிரிவோ நெருக்கமோ பெரும் துக்கத்தையோ மகிழ்ச்சியையோ தருவதில்லை. பக்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மாதிரி தான் இருக்கும். இன்னும் சிலருக்கு எப்படா ஆளு ஊருக்கு கிளம்புவான் என்றும், அப்பாடி ஒரு வழியா இவ கிட்ட இருந்து ஒரு சின்ன விடுதலை என்று சந்தோஷம் கொள்ளும் ஆண் மகன்களும் உண்டு. இப்படி கடமைக்காக வாழாமல் காதலுடன் வாழும் மனைவி, பொருள் தேடி அந்நிய தேசம் சென்ற தன் தலைவனின் பிரிவால் பாடும் பாடல் இது. மனைவியை உள்ளூரில் விட்டு விட்டு வெளிநாட்டில் பணம் சம்பாதிக்க செல்லும் கணவன் கவனிக்க வேண்டிய பாடல் இது.

திணை : பாலை
பாடல் 13 : முட்டுவேன் கொல் (பாடல் எண்: 28)
பாடியவர் : ஔவையார்
கூற்று : தலைவனின் பிரிவால் வாடும் தலைவி பாடிய பாடல்

முட்டு வேன் கொ றாக்கு வேன் கொல்
ஓரேன் யானு மோர் பெற்றி மேலிட்டு
ஆ, அ ஒல்லெனக் கூவு வேன் கொல்
அலமர லசைவளி யலைப்ப என்
உயவு நோ யறியாது துஞ்சு மூர்க்கே.


பொருள் விளக்கம்

முட்டிக்கொள்வேனா ! என்னை நானே தாக்கிக் கொள்வேனா !!
ஆ ஊ என்று அலறவா ? மெல்லிய காற்று அசைக்கும் என் காதல் (காம) நோயை அறியாது, என் உணர்வுகளை புரியாது அமைதியாக தூங்கும் இந்த ஊரைப் பார்த்து.

பாடலின் சிறப்பு

கணவனைப்/ காதலனைப் பிரிந்த பெண் படும் பாட்டை இந்த பாடல் அழகாகக் கூறுகிறது. வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன், கை நிறைய பணம், வசதி, நகை என்று ஊரார் பொறாமை படும் பெண்களின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஆழமான பாடல் இது. மாமியார், நாத்தனார், உடன் வேலைப் பார்ப்பவர்கள், அண்டை அசலார் எல்லாம், அவளுக்கென்ன அவள் கணவன் வெளிநாட்டில் லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறான். கொடுத்து வைத்தவள் என்று ஊரார் நினைக்க, அவள் தூங்காமல் கழித்த இரவுகளை யாருக்குத் தெரியும். அந்த வேதனையை உணர்த்தும் பாடல் தான் இது. என்ன தான் தேவைக்கேற்ற வீடு, பணம், வசதி, வாய்ப்பு என்று அனைத்தும் இருந்தாலும் ஆசை அருவியாகப் பொங்கும் போதும், ஆதரவு தேடும் போதும், மனமும் உடலும் அசதியாக இருக்கும் போதும், அடிவயிறு வலிக்கும் போதும், தோள் சாய நினைக்கும் போதும் அரவனைக்கும் அன்பான கணவன் அருகில் இல்லையே என்று புலம்பும் பெண்ணின் வருத்தம் தான் இந்த பாடல்.

காதலன் அருகில் இல்லை என்றால் காதலியின் நிலை என்ன ஆகும். அதை அழகான உவமையுடன் விளக்கும் அழகிய பாடலை அடுத்துக் காண்போம்.காதல் வளரும்.....


avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Jan 14, 2012 7:53 pm

அணிலாடும் முற்றம்

காதலர் / கணவன் அருகில் இருக்கும் போது காதலிக்கு / மனைவிக்கு வேறு உலகம் தேவையில்லை. "ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி" என்று கூறும் பழமொழியும் இதன் வழி வந்ததுதான். அப்படி என்ன ஒரு சந்தோஷம் அவர்களுக்கு, ஆணுக்கு அன்றிலிருந்து இன்று வரை வீட்டுக்கு வெளியே ஆயிரம் பணியும், பொழுதுபோக்கும் இருந்தது. ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை, வேலை சென்றாலும் பெண்களை அன்புடன் கவனிக்கும் கணவன், காதலிக்காக காத்திருக்கும் காதலன் என்று இவர்களின் இணைப்பு, அருகாமை பெண்களுக்கு இனம் புரியாத சந்தோஷத்தை தருகிறது. வெளிநாடு வேலை செய்யும் கணவன் எப்போது வீடு திரும்புவான் என்று காத்திருக்கும் மனைவியும் இந்த நிலை தான். இப்படி பொருள் தேடி பிரிந்த தலைவன் இல்லாத நான் யாரும் இல்லாத வீட்டின் நிலை போல் உள்ளது என்பதை கூறும் அழகான குறுந்தொகைப் பாடல் இது.

திணை : பாலை
பாடல் 14: அணிலாடும் முற்றம் (பாடல் 41)
பாடியர் : பெயர் தெரியவில்லை, அவருக்கு வைத்த பெயர் அணிலாடு முன்றிலார்
கூற்று : தலைவனைப் பிரிந்த தலைவி பாடும் பாடல்

காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றிற்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பெண் தோழி அவர் அகன்ற ஞான்றே


பொருள் விளக்கம்

காதலன் அருகில் இருக்கும் போது, ஊர் முழுதும் மனிதர்கள் நிறைந்து எங்கும் மகிழ்ந்து கொண்டாடும் திருவிழா கூட்டம் நடுவில் இருப்பது போல் நான் மகிழ்ந்து இருந்தேன். அவர் இல்லாத இந்த தருணத்தில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் அணில் வந்து ஆடும் நடு முற்றம் போல் கேட்பாரற்று பொலிவிழந்து கிடக்கிறேன் தோழி.

பாடலின் சிறப்பு

குறுந்தொகைப் பாடலின் சிறப்பு அதில் வரும் உவமை நயம் தான். மிகப்பெரிய சோகத்தை அழகான உதாரணத்தில் ஒரு சில வரிகளில் வடிப்பது குறுந்தொகையின் சிறப்பு. அப்படி ஒரு உதாரணம் தான் அணில் ஆடும் முற்றம். காதல் செய்யும் தருணத்தில் கல்லூரியிலோ, அலுவலகத்திலோ நம் துணை அருகில் இருக்கும் போது வேறு யார் இருந்தாலும் ஏன் இறந்தாலும் நம்மை அது சலனம் செய்வதில்லை. காதலனோ காதலியோ இல்லையென்றால் ஏதோ பாலைவனத்தில் நடுவில் உள்ளது போல் இருக்கும். அவர்களை எப்போது காண்போம் என்று மனம் துடிக்கும். அணில் மிகவும் பயந்த சுபாவம் உள்ள விலங்கு, ஒரு சிறு சலனம் கேட்டாலும் ஓடி விடும், அது தைரியமாக வந்து விளையாடும் முற்றம் என்றால் வீட்டில் ஒருவரும் இல்லை என்ற மறை பொருள் இதில் ஒளிந்துள்ளது. அது போல் தலைவன் இருக்கும் போது ஊரே உடன் அருகில் இருப்பது போல் உணர்வதும், அவன் அருகில் இல்லாத போது வீட்டில் அம்மா, அப்பா, அண்ணா, அக்கா என்று யார் இருந்தாலும் ஒருவரும் இல்லாத வீடு போல் என் நிலை உள்ளது என்று புலம்பும் தலைவியின் சோகத்தை அழகாகக் கூறும் பாடல் இது.

தொடரும்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Jan 23, 2012 11:43 am

காதலித்த நாட்கள்

காதலிக்கும் நாட்கள் எத்தனை சுகமானது, நெருக்கத்திலும் சுகம், நெருடி ஊடல் கொண்டு கோபிப்பதும் சுகம். கோபித்து ஊடல் தணிந்து கூடுவதும் சுகம். இப்படி காதலிக்கும் காலங்கள் அத்தனையும் சுகமானது. ஆனால் காதலிக்கும் காலங்கள் வெகு விரைவாக சென்று விடுகிறது. காதலித்து கொண்டே இருக்கலாம் என்று நினைக்கும் போதே காதலிக்கும் காலங்கள் கழிந்து விடுகிறது. இப்படி விரைவாக கழிந்த காலங்களை எண்ணி வருந்தும் தலைவியின் கூற்றின் அமைந்த பாடல் இது.

திணை : குறிஞ்சி
பாடல் 15: மீனெறி தூண்டில் (பாடல் எண் : 54)
கூற்று : தலைவனுடன் கழித்த நாள்கள் குறித்த தலைவியின் கூற்று
பாடியவர் : பெயர் தெரியவில்லை, பாடலின் வரிகளை வைத்து அவருக்கு வைத்த பெயர் மீனெறி தூண்டிலார்

யானே ஈண்டையேனே என் நலனே
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனோடு ஆண்டு ஒழிந்தன்றே


பொருள் விளக்கம்

நானோ இங்கு இருக்கிறேன், என் நிலைமை கவண் கள் வீசுபவர் ஒலி கேட்டு பயந்து நடங்கிய காட்டு யானை சாப்பிட நினைத்து வளைத்த மூங்கில் தழைகளை கைவிட்டது போல் உள்ளது. மீனகப்பட்ட தூண்டிலை தூண்டில் எரிந்தவன் விரைவாக எடுத்து விடுவது போல் அவனுடன் சந்தோஷமாக பழகி இருந்த நாள்கள் கழிந்தன.

பாடலின் சிறப்பு

பெண்ணின் மென்மையான குணமும், அவளின் நிலையும் இந்த பாடல் எடுத்துக் கூறுகிறது. யானை மூங்கில் தழைகளைத் தின்ன அதை தும்பிக்கையால் வளைத்து ஒடித்து தின்னும். யாரோ வருவது கேட்டவுடன் ஒடித்த கிளையை அப்படியே விட்டுச் சென்று விடும். மரத்தில் இருந்து ஒடிக்கப்பட்ட கிளை மீண்டும் மரத்தில் ஒட்டாது, ஒரு சில நாட்களில் அந்த கிளை காய்ந்து சருகாய் மாறும். அது போல் தான் இந்த தலைவியின் நிலைமையும் தலைவனாலும் அனுபவிக்கப்பட வில்லை. மீண்டும் குடும்பத்தில் ஒட்ட மனமுமில்லை. குடும்பதிலிருந்து விலகவும் தைரியமில்லை. பாதி மரத்தில் ஒடிந்து தொங்கும் கிளை போல் இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் அந்தரத்தில் உசாலாடுகிறது தலைவியின் மனம். தலைவனுடன் கழித்த நாட்கள் வெகு விரைவாக கழிந்து விட்டதே, அவன் மீண்டும் எப்போது வருவான் என்று ஏக்கப்படும் கவலை இந்தப் பாடலில் வெளிப்படுகிறது.

காதல் வளரும்.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Jan 28, 2012 6:18 pm

காதலன் அணைப்பு

காதலிக்கும் போது கரைகடப்பதும் ஒரு சுகம், ஆயிரம் ஒழுக்கம் பேசினாலும் ஆண் பெண் ஈர்ப்பை கடந்தவர் வெகுக் குறைவு. இப்படி ஒரு ஈர்ப்பில் காதலனும், காதலியும் தழுவிக் கொள்கின்றனர். காதலில் அன்பு, ஆர்வம் அரவணைப்பு, ஆதங்கம், ஆசை, அருள், அமைதி இப்படி கட்டி அணைக்கும் போது வெளிப்படுகிறது. ஆண் காமத்தை நோக்கி நகர்ந்தாலும், காதலை நோக்கி நகரும் தன்மை பெண்களுக்கு இயற்கையிலே உண்டு. இவர்களின் எதிர்ப்பார்பு உண்மையான காதலும், தங்களை கைக்குள் அடக்கும் ஆண்மையும், ஆசையுடன் அரவனைக்கும் அரவணைப்பும் தான். இப்படி அணைத்த காதலனின் அழகான மார்பை நினைத்து வருந்தும் தலைவியின் கூற்றில் அமைந்த பாடல் இது.

திணை : குறிஞ்சி
பாடியவர் : மாடலூர் கிழார்.
பாடல் : என்ன இந்த நோய்
கூற்று : இரவை உணர்த்திய தோழிக்கு தலைவியின் பதில்

சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்கு மலைநாடன் சாந்து புலர் அகலம்
உள்ளின், உள் நோய் மல்கும்;
புல்லின், மாய்வது எவன்கொல்?-அன்னா
ய்

பொருள் விளக்கம்

பரண் மேல் குறவன் கொளுத்திய கொள்ளி விண்மீன்களைப் போல் மினுமினுக்கும். இப்படி அவ்வப்போது மின்னும் விண்மீன்கள் போல் சந்தனமும் ஜவ்வாதும் சேர்த்து பூசிய அழகான மலை நாட்டைச் சேர்ந்த என் தலைவனின் அகலமான சந்தன மார்பை நினைத்தால் என் நோய் அதிகரிக்கிறது, அவன் மார்பை அணைத்தால் இது குறையும். இது எப்படி தோழி ? இது எந்த வகை நோய் ?

பாடலின் சிறப்பு

வசதி குறைந்த குறவன் வீட்டில் ஒளியேற்ற தீப்பந்தம் பயன்படுத்தப்பட்டது என்பதை இந்த பாடல் எடுத்துக் கூறுகிறது. இப்படி எரியும் பந்தத்தில் இருந்து புறப்படும் சிறு தீப்பொறிகள் சற்று தூரம் பறந்து மறைந்து விடும். இதை வானில் மின்னும் விண்மீன்களோடு ஒப்புமை செய்தது சிறப்பாகும். இப்படி மின்னும் தீப்பொறிக்கு ஆயுள் குறைவு. இது போல் மினுமினுக்கும் தலைவனின் மார்பை அணைத்த சுகமும் குறைந்த ஆயுளை உடையது. சுகமாக இருந்தது, ஆனால் விரைவில் முடிந்தது. அதனை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது, அவனை அணைத்தால் வருத்தம் போகிறது. இது என்ன நோய் தோழி என்று தோழியிடம் புலம்பும் புலம்பல். வயிறு நிறைந்து உண்ட பின்பும் இலையில் பரிமாறும் பாயாசம் இன்னொரு கரண்டி கிடைத்தால் சுகமாக இருக்கும் என்று நமக்கு தோணும் நினைப்பை போல்.
இரவை உணர்த்திய தோழிக்கு இரவில் வரும் விண்மீன்களை உவமையாகச் சொன்னது இந்த பாடலில் உள்ள சிறப்பு,

காதல் வளரும்.

avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by இளமாறன் on Sat Jan 28, 2012 7:57 pm

அவ்வப்போது மின்னும் விண்மீன்கள் போல் சந்தனமும் ஜவ்வாதும் சேர்த்து பூசிய அழகான மலை நாட்டைச் சேர்ந்த என் தலைவனின் அகலமான சந்தன மார்பை நினைத்தால் என் நோய் அதிகரிக்கிறது, அவன் மார்பை அணைத்தால் இது குறையும். இது எப்படி தோழி ? இது எந்த வகை நோய் ?

அழகான விளக்கம் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1553

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by செல்ல கணேஷ் on Sun Jan 29, 2012 10:45 am

தோழமைக்கு,
மிக்க நன்றி! உங்களின் பதிவுகளுக்கு.
குறுந்தொகை போன்ற நல்ல காதல் இலக்கியம் வேறு ஒன்றும் இல்லை. இது வெறும் வார்த்தைகள் அல்ல. காதல் தெறிப்புகள். குறுந்தொகை போன்று போதை தரும் ஒன்று இல்லை தான். மனதை காதலால் நிரப்பி கிறங்க செய்யும் விந்தை.
avatar
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 310
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Jan 29, 2012 12:40 pm

இளமாறன் wrote:
அவ்வப்போது மின்னும் விண்மீன்கள் போல் சந்தனமும் ஜவ்வாதும் சேர்த்து பூசிய அழகான மலை நாட்டைச் சேர்ந்த என் தலைவனின் அகலமான சந்தன மார்பை நினைத்தால் என் நோய் அதிகரிக்கிறது, அவன் மார்பை அணைத்தால் இது குறையும். இது எப்படி தோழி ? இது எந்த வகை நோய் ?

அழகான விளக்கம் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி இளமாறன் :நல்வரவு:
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Jan 29, 2012 12:46 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
மிக்க நன்றி! உங்களின் பதிவுகளுக்கு.
குறுந்தொகை போன்ற நல்ல காதல் இலக்கியம் வேறு ஒன்றும் இல்லை. இது வெறும் வார்த்தைகள் அல்ல. காதல் தெறிப்புகள். குறுந்தொகை போன்று போதை தரும் ஒன்று இல்லை தான். மனதை காதலால் நிரப்பி கிறங்க செய்யும் விந்தை.

மிக்க நன்றி கணேஷ்.
நன்றி நன்றி

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

ஒவ்வொரு பதிவு செய்யும் போதும் எந்த பாடலை போடுவது என்று குழம்பும் அளவுக்கு ஒவ்வொரு பாடலும் தித்திக்கும் தேன். அன்று முதல் இன்று வரை காதலும் ஒரே சாயலோடு இருப்பது இன்னொரு மகிழ்ச்சி. மனிதனின் அக உணர்வுகளை அழகாக படம் பிடித்து காட்டுவதில் தமிழ் இலக்கியங்கள் சிறந்தவை. அதில் மகுடமாக இருப்பது இந்த குறுந்தொகை பாடல்கள்.

avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by அசுரன் on Sun Jan 29, 2012 1:30 pm

புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்குக்காக பாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கும், இதை கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை, வல் வில் ஓரியை, பாரியை அடையாளம் காண முடிகிறது. ஆனால் தொல்காப்பியம் கூறும் இலக்கண மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு குறுந்தொகை பாடல்களில் இல்லை. (இது இவர்களின் அந்தரங்க விஷயம் என்ற காரணத்தால், பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ் மரபில் இருந்தது). தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் எழுதப்பட்டது.

என்னை மிகவும் கவர்ந்த வரிகளாக இதை இங்கு குறிப்பிடுகிறேன். தமிழர்கள் மிகுந்த மரியாதை, தெய்வபயம், நாகரீகத்தோடு வாழ்ந்தார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

அருமையான உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்.. அன்பு மலர்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11641
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Jan 29, 2012 5:40 pm

அசுரன் wrote:
புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்குக்காக பாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கும், இதை கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை, வல் வில் ஓரியை, பாரியை அடையாளம் காண முடிகிறது. ஆனால் தொல்காப்பியம் கூறும் இலக்கண மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு குறுந்தொகை பாடல்களில் இல்லை. (இது இவர்களின் அந்தரங்க விஷயம் என்ற காரணத்தால், பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ் மரபில் இருந்தது). தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் எழுதப்பட்டது.

என்னை மிகவும் கவர்ந்த வரிகளாக இதை இங்கு குறிப்பிடுகிறேன். தமிழர்கள் மிகுந்த மரியாதை, தெய்வபயம், நாகரீகத்தோடு வாழ்ந்தார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

அருமையான உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்.. அன்பு மலர்

நன்றி அசுரன்.
நன்றி
தமிழன் காதல், வீரம், நட்பு ஆகிய அனைத்திலும் சிறந்த நாகரீகத்தில் வாழ்ந்தான். இப்படிப் பட்ட பாடல்களைப் படிக்கும் போது நம் சமுதாயம் எவ்வளவு உயர்வான நிலையில் இருந்தது என்று அடுத்த தலைமுறைக்கு தெரியும். இதை எடுத்து செல்வது நம் கடமை.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Feb 04, 2012 9:14 am

காதலியின் அணைப்பு

காதல் செய்யும் காலத்தில் வெகு இயல்பாக நடைபெறும் உரசல், நெருக்கும், அணைப்பு சுகமானது. பைக்கில்லில் பயணம் செய்யும் போது, விலகி அமர்ந்தாலும் நெருகி வர வைப்பது சாலையின் மேடு பள்ளங்கள் மட்டுமல்ல காதல் மனதில் எழும் ஆசையின் மேடு பள்ளங்களும் தான் காரணம். தொடுவது போல் தொட்டு, படுவது போல் பட்டு, பட்டும் படாதது போல் இருப்பதில் காதலிக்கும் பெண்கள் வல்லவர்கள். பெண்கள் தழுவதில் அவசரம் உடையவர்கள், வெகு நேரம் அணைப்பில் இல்லாமல் பெண்மையின் நாணத்தால் (ஞானத்தால்) உடனடியாக விலகி விடும் குணம் உடையவர்கள் என்பதையும் இந்த பாடல் உணர்த்துகிறது. இப்படி ஒரு நெருக்கத்தை அனுபவித்த தலைவன் தவிக்கும் தவிப்பு இந்தப் பாடல்.

திணை : குறிஞ்சி
பாடல் : 17 -தலைக் குழவி ( பாடல் எண் : 132)
பாடியவர் : சிறைக்குடி ஆந்தையார்
கூற்று ; தவிக்கும் தலைவனின் பாடல்

கவவுக் கடுங்குரையள்; காமர் வனப்பினள்;
குவவு மென் முலையள்; கொடிக் கூந்தலளே-
யாங்கு மறந்து அமைகோ, யானே?- ஞாங்கர்க்
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி
தாய் காண் விருப்பின் அன்ன,
சாஅய் நோக்கினள்-மாஅயோளே


பொருள் விளக்கம்

தழுவதில் அவசரமும், மீண்டும் பார்த்து பார்த்து ரசிக்கும் அழகையையும், குவிந்த மென்மையான மார்பகங்கள், மலர்க் கொடி போன்ற வாசனை மிகுந்த கூந்தல் உடையவளை எப்படி மறப்பேன் ? மேச்சல் நிலத்தில் மேயச் சென்ற பசுவை எதிர் நோக்கி காத்து இருக்கும் தலைக் கன்று போல் என்னை விரும்பி பார்த்து (காத்து ) இருக்கிறாள். எப்படி மறப்பேன் அவளை.........

தொடரும்.......
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum