ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு 5 5 7

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Wed Aug 03, 2011 4:09 pm

First topic message reminder :

காதல் சுரங்கம் குறுந்தொகை

காதல் உங்களை கடக்கவில்லை என்றாலும், காதலை நீங்கள் கடக்கவில்லை என்றாலும் வாழ்ந்ததுக்கான அர்த்தம் குறைவு. காதல் என்ற சொல் காதுக்கு இனிமையானது, பலரின் வாழ்க்கையில் கசப்பானது. காதல் என்ற சொல்லின் இருந்து தான் கவிதை, காவியம், கருணை, கல்யாணம், கலவி, காமம், கவலை, கண்ணீர், கைகலப்பு, கல்லறை என்ற சொல்லுக்கு வழி செல்கிறது. காதல் உச்சரிக்க, உணர சுகமானது, ஆனால் பலருக்கு வாழ கடினமானது. பட்டாம்பூச்சிகள் பறக்க, தேனீக்கள் ரீங்காரம் பாட, மலரினும் மென்மையாக தொடங்கி, பல சந்தோசத் தருணங்களை அள்ளித் தருவது.

காதல் இல்லை என்றால் இன்றைய சினிமாவில் டூயட் பாடல்களோ, சோகப் பாடல்களோ இடம் பெறாது. சிறகுகள் இல்லாமல் நம்மை பறக்கச் செய்வது, காயமோ, வெட்டோ இல்லாமல் வலிக்கச் செய்வது.

குறுந்தொகையின் சிறப்பு:

தமிழில் காதல் பற்றி கூறும் நூல்கள் ஏராளம். பதினெண் மேல் கணக்கு நூல்களுள் அகப் பாடல்களே அதிகம் இடம் பெற்றுள்ளன. அப்படி உள்ள பாடல்களில் காதலின் பல்வேறு கூறுகளை பற்றி கூறும் சிறப்பான தொகுப்பு (தொகை) நூல் குறுந்தொகை ஆகும். குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களை கொண்டு இருப்பதால் குறுந்தொகை என்று அழைக்கப் படுகிறது. கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சுமார் இருநூறு புலவர்களால் பாடப் பெற்ற நானூறு பாடல்கள் கொண்ட தொகுப்பு நூலாகும்.

காதலிப்பவர்கள், காதலிக்க நினைப்பவர்கள், காதலில் துன்பப்பட்டவர்கள், காதல் கவிதை எழுதுவோர் என்று அனைவருக்கும் இதில் பாடல்கள் உள்ளது.

புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்குக்காக பாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கும், இதை கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை, வல் வில் ஓரியை, பாரியை அடையாளம் காண முடிகிறது. ஆனால் தொல்காப்பியம் கூறும் இலக்கண மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு குறுந்தொகை பாடல்களில் இல்லை. (இது இவர்களின் அந்தரங்க விஷயம் என்ற காரணத்தால், பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ் மரபில் இருந்தது). தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் எழுதப்பட்டது.

தமிழின் சிறப்பு

மற்ற மொழிகளில் இல்லாத ஒரு பெரும் சிறப்பு தமிழில் காணப்படும் திணை இலக்கணமும், அதற்குரிய பாடல் அமைப்பும் தான், பொதுவாக எல்லா மொழிகளும் கூறும் காலம் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று கூறுகள் தான். இடம், காலம், நேரம் பொறுத்து மாறுவது மனித மனதின் குணமாகும். நன்றாக குளிர் உள்ள இடத்தில், பனிக்காலத்தில் இருக்கும் காதல் நெருக்கம், வறண்ட நிலத்தில், வேனிர் காலத்தில் இருப்பதில்லை. இப்படி உள்ள இடம், சூழ்நிலை, காலம், நேரம் ஆகியவைகளை பிரித்து ஐந்திணை இலக்கணமாக கூறுவது தமிழில் உள்ள தனிப் பெரும் சிறப்பாகும். மேலும் மறை பொருள் அல்லது இறைச்சி என்று கூறப்படும் உள்ளார்ந்த அர்த்தமும், ஆழ்ந்த கருத்துகளும் அகப்பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.

குறுந்தொகையை ரசிப்பதற்கு முன்னர் இந்த ஐந்திணை என்றால் என்ன, அவற்றின் உட்கூறுகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

வளரும்.........

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

[You must be registered and logged in to see this image.]


Last edited by சதாசிவம் on Sat Aug 27, 2011 11:39 am; edited 3 times in total

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down


Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Jan 29, 2012 12:40 pm

இளமாறன் wrote:
அவ்வப்போது மின்னும் விண்மீன்கள் போல் சந்தனமும் ஜவ்வாதும் சேர்த்து பூசிய அழகான மலை நாட்டைச் சேர்ந்த என் தலைவனின் அகலமான சந்தன மார்பை நினைத்தால் என் நோய் அதிகரிக்கிறது, அவன் மார்பை அணைத்தால் இது குறையும். இது எப்படி தோழி ? இது எந்த வகை நோய் ?


அழகான விளக்கம் அன்பு மலர் அன்பு மலர்


நன்றி இளமாறன் :நல்வரவு:

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Jan 29, 2012 12:46 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
மிக்க நன்றி! உங்களின் பதிவுகளுக்கு.
குறுந்தொகை போன்ற நல்ல காதல் இலக்கியம் வேறு ஒன்றும் இல்லை. இது வெறும் வார்த்தைகள் அல்ல. காதல் தெறிப்புகள். குறுந்தொகை போன்று போதை தரும் ஒன்று இல்லை தான். மனதை காதலால் நிரப்பி கிறங்க செய்யும் விந்தை.


மிக்க நன்றி கணேஷ்.
நன்றி நன்றி

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

ஒவ்வொரு பதிவு செய்யும் போதும் எந்த பாடலை போடுவது என்று குழம்பும் அளவுக்கு ஒவ்வொரு பாடலும் தித்திக்கும் தேன். அன்று முதல் இன்று வரை காதலும் ஒரே சாயலோடு இருப்பது இன்னொரு மகிழ்ச்சி. மனிதனின் அக உணர்வுகளை அழகாக படம் பிடித்து காட்டுவதில் தமிழ் இலக்கியங்கள் சிறந்தவை. அதில் மகுடமாக இருப்பது இந்த குறுந்தொகை பாடல்கள்.


சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by வாத்தியார் on Sun Jan 29, 2012 1:30 pm

புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்குக்காக பாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கும், இதை கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை, வல் வில் ஓரியை, பாரியை அடையாளம் காண முடிகிறது. ஆனால் தொல்காப்பியம் கூறும் இலக்கண மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு குறுந்தொகை பாடல்களில் இல்லை. (இது இவர்களின் அந்தரங்க விஷயம் என்ற காரணத்தால், பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ் மரபில் இருந்தது). தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் எழுதப்பட்டது.


என்னை மிகவும் கவர்ந்த வரிகளாக இதை இங்கு குறிப்பிடுகிறேன். தமிழர்கள் மிகுந்த மரியாதை, தெய்வபயம், நாகரீகத்தோடு வாழ்ந்தார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

அருமையான உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்.. அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Jan 29, 2012 5:40 pm

அசுரன் wrote:
புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்குக்காக பாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கும், இதை கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை, வல் வில் ஓரியை, பாரியை அடையாளம் காண முடிகிறது. ஆனால் தொல்காப்பியம் கூறும் இலக்கண மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு குறுந்தொகை பாடல்களில் இல்லை. (இது இவர்களின் அந்தரங்க விஷயம் என்ற காரணத்தால், பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ் மரபில் இருந்தது). தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் எழுதப்பட்டது.


என்னை மிகவும் கவர்ந்த வரிகளாக இதை இங்கு குறிப்பிடுகிறேன். தமிழர்கள் மிகுந்த மரியாதை, தெய்வபயம், நாகரீகத்தோடு வாழ்ந்தார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

அருமையான உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்.. அன்பு மலர்


நன்றி அசுரன்.
நன்றி
தமிழன் காதல், வீரம், நட்பு ஆகிய அனைத்திலும் சிறந்த நாகரீகத்தில் வாழ்ந்தான். இப்படிப் பட்ட பாடல்களைப் படிக்கும் போது நம் சமுதாயம் எவ்வளவு உயர்வான நிலையில் இருந்தது என்று அடுத்த தலைமுறைக்கு தெரியும். இதை எடுத்து செல்வது நம் கடமை.

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Feb 04, 2012 9:14 am

காதலியின் அணைப்பு

காதல் செய்யும் காலத்தில் வெகு இயல்பாக நடைபெறும் உரசல், நெருக்கும், அணைப்பு சுகமானது. பைக்கில்லில் பயணம் செய்யும் போது, விலகி அமர்ந்தாலும் நெருகி வர வைப்பது சாலையின் மேடு பள்ளங்கள் மட்டுமல்ல காதல் மனதில் எழும் ஆசையின் மேடு பள்ளங்களும் தான் காரணம். தொடுவது போல் தொட்டு, படுவது போல் பட்டு, பட்டும் படாதது போல் இருப்பதில் காதலிக்கும் பெண்கள் வல்லவர்கள். பெண்கள் தழுவதில் அவசரம் உடையவர்கள், வெகு நேரம் அணைப்பில் இல்லாமல் பெண்மையின் நாணத்தால் (ஞானத்தால்) உடனடியாக விலகி விடும் குணம் உடையவர்கள் என்பதையும் இந்த பாடல் உணர்த்துகிறது. இப்படி ஒரு நெருக்கத்தை அனுபவித்த தலைவன் தவிக்கும் தவிப்பு இந்தப் பாடல்.

திணை : குறிஞ்சி
பாடல் : 17 -தலைக் குழவி ( பாடல் எண் : 132)
பாடியவர் : சிறைக்குடி ஆந்தையார்
கூற்று ; தவிக்கும் தலைவனின் பாடல்

கவவுக் கடுங்குரையள்; காமர் வனப்பினள்;
குவவு மென் முலையள்; கொடிக் கூந்தலளே-
யாங்கு மறந்து அமைகோ, யானே?- ஞாங்கர்க்
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி
தாய் காண் விருப்பின் அன்ன,
சாஅய் நோக்கினள்-மாஅயோளே


பொருள் விளக்கம்

தழுவதில் அவசரமும், மீண்டும் பார்த்து பார்த்து ரசிக்கும் அழகையையும், குவிந்த மென்மையான மார்பகங்கள், மலர்க் கொடி போன்ற வாசனை மிகுந்த கூந்தல் உடையவளை எப்படி மறப்பேன் ? மேச்சல் நிலத்தில் மேயச் சென்ற பசுவை எதிர் நோக்கி காத்து இருக்கும் தலைக் கன்று போல் என்னை விரும்பி பார்த்து (காத்து ) இருக்கிறாள். எப்படி மறப்பேன் அவளை.........

தொடரும்.......

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Feb 04, 2012 2:58 pm

மிகவும் அருமையாக உள்ளது உங்கள் விளக்கம் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2939
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 899

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Feb 04, 2012 6:25 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமையாக உள்ளது உங்கள் விளக்கம் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக்க நன்றி ஐயா
நன்றி அன்பு மலர்

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by கபாலி on Sun Feb 05, 2012 9:34 am

அழகான குறுந்தொகைப்பாடல்.. எளிமையான விளக்கம். நன்றி சதாசிவம்.

கபாலி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Feb 05, 2012 8:50 pm

கபாலி wrote:அழகான குறுந்தொகைப்பாடல்.. எளிமையான விளக்கம். நன்றி சதாசிவம்.


நன்றி கபாலி
:நல்வரவு:

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Feb 13, 2012 7:22 pm

காதலன் அணைப்பு

காதல் காலத்தில் நடக்கும் உரசல், தோள் சாய்தல், நெருக்கமாக அமருதல், ஒன்றாக உண்ணுதல் என்று நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் சுகம் தான். ஆள் வாரா இடங்களில் உணவுவிடுதி நடுத்துபவர்களும், மதிய நேர திரையரங்குகளும் இப்படி ஒரு கூட்டத்தை நம்பி தான் வாழ்க்கை நடத்துகின்றனர். காதல் நெருக்கத்தில் பெண்களுக்கு பயம் இருந்தாலும், அதை தாண்டி வரும் அளவுக்கு சுகமும் அதில் இருக்கிறது. அவர் பார்த்து விடுவார், இவர் பார்த்து விடுவார் என்று எண்ணீருந்தாலும், காதலனைப் பார்ப்பதை யாரும் தடுக்க முடியாது. காதல் சுகம் அவ்வளவு இனிமையானது. தன்னை சுற்றி உலகம் இயங்கவேண்டும் என்று நினைப்பதும், தன்னை விரும்பும் ஒருவரின் அருகாமையும் பெண்களுக்கு இயல்பானது. பெண்களுக்கு காதல் இருக்கும், ஆசை சுரக்கும், நாணம் தடுக்கும், யாராவது பார்த்து விடுவார்களோ என்று பயம் இருக்கும். ஆனால் இப்படி பயந்தால் வேலைக்கு ஆகுமா ? கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று கூறும் பழமொழிப் போல் காதலனைப் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும். பார்த்தால் பழி வருமோ என்று அஞ்சவும் செய்யும் பெண்ணின் மனம். இப்படி ஒரு நிலையில் இருக்கும் தலைவி, தன் காதலன் அருகாமையை நினைத்துக் கூறும் அழகான பாடல்.

திணை : குறிஞ்சி
பாடல் 18 : யானை ஒடித்த கிளை (பாடல் 112)
பாடியவர் : ஆலந்தூர் கிழார்

கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்
எள் அற விடினே உள்ளது நாணே
பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படா அ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின், தோழி ! அவர் உண்ட என் நலனே


பொருள் விளக்கம்

அடுத்தவர் பேசும் வதந்திக்கு அஞ்சினால் காதல் குறைந்துவிடும். இப்படி பேசும் வதந்திப் பேச்சுக்கு அஞ்சாவிட்டால் வெட்கம் மட்டுமே மிஞ்சும். திண்பதற்கு ஆசைப்பட்டு உயரமான கிளையை யானைப் பிடித்து இழுத்து உண்ணும். இப்படி இழுக்கும் போது அந்த கிளை மரத்தில் இருந்து முறிந்து அப்படியே தொங்கிக்கொண்டு இருக்கும். யானை வேண்டியதை தின்று விட்டு சென்றுவிடும். யானை சுவைத்த கிளை யானையுடன் செல்லமுடியாமல், மீண்டும் மரத்திலும் ஒட்ட முடியாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும். அவர் உடன் இருந்து கழிந்த இனிய காலங்களை அனுபவித்த என் நிலைமையும் இப்படி தான் தோழி.

தொடரும்



Last edited by சதாசிவம் on Mon Feb 13, 2012 10:48 pm; edited 1 time in total

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by கபாலி on Mon Feb 13, 2012 8:12 pm

மிக அருமையான பாடலும் அதற்கான உரையும். மிக்க நன்றி சதாசிவம் அவர்களே.

கபாலி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Tue Feb 14, 2012 7:01 pm

கபாலி wrote:மிக அருமையான பாடலும் அதற்கான உரையும். மிக்க நன்றி சதாசிவம் அவர்களே.


நன்றி கபாலி
:நல்வரவு:

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Mar 24, 2012 2:30 pm

எதற்கு இந்த சேவல்

கணவன் மனைவி அன்பு மிக நெருக்கமானது, காதல் கணவன் அருகில் இருக்கும் போது பெண்களுக்கு உலகத்தில் எது நடந்தாலும் அதை பற்றிய கவலை இல்லை. அவனுடன் நீண்ட நாட்கள் கழித்தாலும், அவை ஒரு சில நிமிடங்கள் போல் கழிந்து விடுகிறது. நமக்கு விருப்பமான நிகழ்வில் மூழ்கி இருக்கும் போது காலம் செல்வது தெரிவதில்லை. இப்படி தலைவனுடன் இன்பமாக கழித்து இரவு வெகு சீக்கிரம் முடிந்து விட்டது, பொழுது புலர்ந்து விட்டது, சேவல் கூவி விட்டது.

இப்படி கூவி எழுப்பிய சேவலைப் பார்த்து, ஏ சேவலே நீ எதற்கு கூவி பொழுதை விடியச் செய்கிறாய், என் தலைவனுடன் கழித்த இரவின் சுகம் இன்னும் கலையவில்லை, என் தலைவனுடன் கழிக்கும் இரவின் தூக்கத்தை கொடுக்காதே. நீ நாசமாக போவாய், எலியை தேடும் பூனைக்கு இரையாகப் போவாய் என்று தலைவி கொடுக்கும் சாபம் தான் இந்த பாடல்.

பாடல் 19 : தூக்கம் கொடுத்த சேவல் (பாடல் 107)
திணை : மருதம்
பாடியவர் : மதுரைக் கண்ணனார்
கூற்று : தூக்கத்தை கெடுத்த சேவலைப் பார்த்து தலைவி பாடும் பாடல்.

குவி இணர்த் தோன்றி ஒன் பூ அன்ன
தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல்
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகிக்
கடு நவைப் படி இயரோ, நீயே நெடு நீர்
யானார் ஊரனோடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே


பொருள் விளக்கம்

அழகாக குவிந்த இதழ்களை உடைய செம்மை நிறம் கொண்டு செங்காந்தள் பூ போல் வளைந்த சிவந்த நிறம் கொண்ட கொண்டையை சேவலே, அடர்ந்த் இருள் கொண்ட நடு இரவில் தான் குட்டிகளுக்கு இரை சேர்க்க வீட்டில் வசிக்கும் எலியைப் பிடிக்க காத்திருக்கும் பூனைக்கு இரையாகப் போய்விடு, அழகான நீர் வலம் மிக்க தலைவனுடன் இனிது கழிக்கும் தூக்கத்தை கலைத்து விட்டாய்.

இப்படி இனிதாக கழித்த இரவு கலைந்த தலைவி இப்படி கூறுகிறாள் என்றால், இது போன்ற ஒரு இன்பம் அனுபவித்த தலைவன் அந்த இனிதான இரவைப் பற்றி என்ன கூறி இருப்பான். அடுத்த பாடலில் காண்போம்.

காதல் வளரும்.........

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Apr 02, 2012 5:51 pm

ஒரு நாள் வாழ்ந்தால் போதும்

காதல் ஆணை கட்டி வைக்கும் ஆழமான பந்தம், வெட்டியாய் சுற்றுபவனையும் பொறுப்புள்ளவன் ஆக்கவும், பொறுப்புடன் இருப்பவனை வெட்டியாய் சுற்றச் செய்யும் ஆற்றல் காதலுக்கு உண்டு. மிகப் பெரிய யானை சிறு கயிறில் கட்டுண்டு கிடப்பது போல் காதல் வலையில் கட்டுப்பட்டு கிடப்பது ஒரு சுகம். இப்படி சுகிக்கும் தலைவனை என்ன தான் தோழர்கள் அறிவுறுத்தினாலும் காதில் விழுவதில்லை. இப்படி காதல் தேனில் மூழ்கி இருக்கும் தலைவன் தனக்கு அறிவுறுத்தும் தோழனைப் பார்த்து தலைவியின் அழகை வர்ணிக்கும் காட்சி தான் இந்த அழகிய பாடல்.

திணை : குறிஞ்சி
பாடல் : ஒரே ஒரு நாள் (பாடல் என் 280)
பாடியவர் : நக்கீரர்
கூற்று : தோழனுக்கு தலைவன் கூறும் பதில்

கேளிர் வாழியோ கேளிர் நாளுமென்
நெஞ்சுபிணிக் கொண்ட வஞ்சி லோதிப்
பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம்
ஒருநாள் புணரப் புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே.


பொருள் விளக்கம்

நண்பா வாழ்க நீ, இதைக் கேள் நாள் முழுதும் என் நெஞ்சைக் கட்டிப் போட்ட அழகிய கூந்தல், பெரிய மேன்னையான் தோள் உடைய என் தலைவியின் லேசான உடலை ஒரு நாள் முழுவதும் தழுவினால் போதும் அதன் பின் எனக்கு அரை நாள் வாழ்க்கையும் வேண்டாம். அவளைத் தழுவிய இன்பம் போதும், அதற்கு பிறகு வாழ்க்கை எதற்கு ?

இன்றைய சினிமாப் பாடல்களில் மூலம் இது போன்ற காதல் கவிதைகள் கொஞ்சும் நம் பழந்தமிழ் இலக்கியங்கள் தான்...

காதல் வளரும்


Last edited by சதாசிவம் on Mon Apr 16, 2012 6:14 pm; edited 1 time in total

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by sinthiyarasu on Mon Apr 02, 2012 7:22 pm

அருமை அருமை. தமிழின் அழகோ அழகு தான்.....................

sinthiyarasu
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 541
வசிப்பிடம்: கொழும்பு, சிறிலங்கா.
சேர்ந்தது: 27/02/2012
மதிப்பீடு: 70

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum