ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திட்டி வாசல்
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழ் சினிமா ரிப்போர்ட்-ஜூலை 2011

View previous topic View next topic Go down

தமிழ் சினிமா ரிப்போர்ட்-ஜூலை 2011

Post by மணிகண்டபூபதி on Wed Aug 10, 2011 12:00 pm

ஜூன் மாதத்தின் மந்த நிலை இந்த மாதமும் தொடருமோ என்று ஒரு எண்ணம் எனக்குள் ஓடிக் கொண்டுதானிருந்தது. இந்த மாதம் அரும்பு மீசை குறும்பு பார்வை, இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனின் தேநீர் விடுதி, வேங்கை, விக்ரமின் தெய்வதிருமகள், ராகவேந்திரா லாரன்ஸின் காஞ்சனா, களஞ்சியத்தின் கருங்காலி, கெளதமின் உதவியாளர், பெண் இயக்குனர் அஞ்சனா இயக்கிய வெப்பம். ஆகியவை குறிப்பிடத்தக்க படங்களாய் வெளியாகின.

அரும்பு மீசை குறும்புப் பார்வை படத்தை பற்றி விமர்சகர்களிடையே நல்ல கருத்து இருந்தாலும் வசூல் ரீதியாய் எதுவும் பெரிதாய் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான மோகன்பாலுவின் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தால் அவருக்கு இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.

தேநீர் விடுதி. இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கிய படம். காமெடி என்று நினைத்து செய்த பல விஷயம் வேலைக்கு உதவாமல் போய் விட்டதால் படு மொக்கையாய் அமைந்தது.

வேங்கை சன் டிவி வாங்கி பின்பு மீண்டும் அதன் தயாரிப்பாளர்களிடமே கொடுத்த படம். திரும்பி கொடுத்தற்கான காரணம் வேறாக இருந்தாலும் மகக்ளுக்கு பத்து நிமிஷத்திற்கு சூப்பர் ஹிட் பட விளம்பரம் இல்லாமல் இருந்ததிற்காக நன்றி சொல்வார்கள். வழக்கமான ஹரி படமாய் இல்லாமல் அரைத்த மாவை ரொம்பவே அரைத்துவிட்டதால் மாவு விற்கவில்லை. அருவாள் சைஸிலிருந்து கொண்டு அருவாளை தூக்கி வரும் தனுஷை பார்க்கும் போது பரிதாபமாகவே இருந்தது பலருக்கும். ஹரி காம்பினேஷனில் ஒரு படம் பண்ண மாட்டோமா? என்று சிங்கத்தின் வெற்றிக்கு பிறகு எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் யோசனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

தெய்வதிருமகள். யுடிவி, விக்ரம், விஜய், அனுஷ்கா என்று பெரிய கேங்குகளின் படமாய் வெளிவந்தது யுடிவியின் தொடர் மார்கெட்டிங்கும், படத்தின் ஓப்பனிங்கிற்கு வரிசை கட்ட, படம் வெகு ஜன ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் வாய்மொழி பப்ளிசிட்டியும் ஏற, விக்ரமுக்கு ஒரு ஹிட் படத்தை அளித்துள்ளது. ஐயாம் சாம் படத்தின் காப்பி, பாடல்களின் காப்பி என்று இணையதளங்களில் மட்டும் எல்லோரும் புலம்பிக் கொண்டிருக்க, படம் பார்க்கும் மக்கள் காப்பியாக இருந்தாலும் சூடாக, சுவையாக இருக்கிறதா? என்பதை மட்டுமே பார்த்ததால் ஓடுகிறது. முக்கியமாய் பாராட்டபட வேண்டியது யுடிவியின் தொடர் மார்கெட்டிங்.. வாழ்த்துகள் தனஞ்செயன் சார்.

காஞ்சனா – முனி-2 வெளியாவதற்கு முன்னமே லாரன்ஸுக்கு லாபத்தை கொடுத்த படம். தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளுக்கும் சேர்த்து தனித்தனியே விலை பேசி விற்றுவிட, தமிழில் வெளிவருவதற்கு ஒரு வாரம் முன்னமே தெலுங்கில் வெளியாகி சக்கை போடு போட ஆரம்பித்துவிட, தமிழில் ராம. நாராயணன் வாங்கி எல்லா ஏரியாக்களும் விற்று விட்டார். NSC ஏரியாவில் மட்டும் இதுவரை 3 சி பண்ணியிருக்கிறது என்று சொல்கிறார்கள். அந்த ஏரியாவில் 5 சியும் மொத்தத்தில் 30 சி வரை வசூல் செய்யும் என்று கணிக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் பேய் படங்களில் காமெடி எடுபடாது என்று எல்லோரும் நினைத்திருக்க, கோவை சரளாவும், தேவதர்ஷினியும் அடித்த லூட்டியும், சரத்தின் காமியோவும், பெண்களை தியேட்டருக்கு வரவழைத்துவிட்டது. அருந்ததியின் கலக்‌ஷனை தாண்டிவிட்டது என்கிறார்கள். இன்னொரு முக்கிய காரணம் படத்திற்கான விளம்பரம். ஒரு மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ் சினிமாவுக்கு இம்மாதிரியான ஆக்ஸிஜன்கள் தேவைதான்.


கருங்காலி. மு.களஞ்சியம் நடித்து இயக்கியிருக்கும் படம். ரொம்ப நாள் தயாரிப்பில் இருந்த படம். அஞ்சலிதான் ட்ராயிங் அட்டென்ஷன். அடல்டரியை பற்றிய கதை. சரியாக எடுத்தாளாமல் பிட்டுபட ரேஞ்சுக்கு போய்விட்டது. என்ன தான் சாரு நிவேதிதா, கமலா செல்வராஜ் எல்லோரையும் வைத்து எல்லோரும் பார்கக் வேண்டிய படமென்று விளம்பரப்படுத்தினாலும், வசூல் ஒண்ணும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை என்கிறார்கள்.

வெப்பம் பெண் இயக்குனர் அஞ்சனா எழுதி இயக்கிய படம். கெளதம் வாசுதேவ் மேனனின் தயாரிப்பு. இதுவும் லேட் ரிலீஸ் தான். வழக்கமாய் பெண் இயக்குனர்கள் தொட தயங்கும் ப்ளாட். ஜோஸ்வா ஸ்ரீதரின் அருமையான பாடல்கள் இருந்தும் சரியாக திரைக்கதையில் கவனம் செலுத்தாமையால் தோல்வியை தழுவியது என்றே சொல்ல வேண்டும்.

இது தவிர வாரத்திற்கு மூன்றிலிருந்து நான்கு தமிழ் திரைப்படங்களும், ஆங்கில, தெலுங்கு மலையாள, ஆங்கில, தமிங்கில படங்களும் வரத்தான் செய்கிறது. இப்படி சரமாரியாய் படங்கள் வெளிவருவது தமிழ் சினிமாவிற்கு உகந்தது அல்ல. சில சின்ன படங்கள் நன்றாக இருப்பதாய் வெளியே தெரிவதற்குள் தியேட்டர்களிலிருந்து வசூல் இல்லாத காரணத்தால் தூக்கப்பட்டுவிட, சாட்டிலைட் டிவிக்களுக்காக காத்திருக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் ரசிகர்கள். இது பற்றிய பார்வை வேறொரு கட்டுரையில் பார்ப்போம்.
ஜூலை மாத சூப்பர் ஹிட் : காஞ்சனா – முனி –2
ஜூலை மாத ஹிட் : தெய்வதிருமகள்

நன்றி - சங்கர் நாராயண்
avatar
மணிகண்டபூபதி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 181
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா ரிப்போர்ட்-ஜூலை 2011

Post by balakarthik on Wed Aug 10, 2011 12:03 pm

சாரு கூறியதார்க்காகவே நான் கருங்காலியை போஸ்டரில் கூட பார்ப்பதில்லை மணி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழ் சினிமா ரிப்போர்ட்-ஜூலை 2011

Post by SK on Wed Aug 10, 2011 12:08 pm

சூப்பருங்க சூப்பருங்க
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5835
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா ரிப்போர்ட்-ஜூலை 2011

Post by rajamohammed on Wed Aug 10, 2011 12:14 pm

அருமையிருக்கு
avatar
rajamohammed
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 28
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா ரிப்போர்ட்-ஜூலை 2011

Post by பிளேடு பக்கிரி on Wed Aug 10, 2011 12:14 pm

காஞ்சனா...தெய்வதிருமகள் படங்கள் அருமை ... நன்றி நண்பாavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா ரிப்போர்ட்-ஜூலை 2011

Post by மணிகண்டபூபதி on Wed Aug 10, 2011 1:14 pm

@balakarthik wrote:சாரு கூறியதார்க்காகவே நான் கருங்காலியை போஸ்டரில் கூட பார்ப்பதில்லை மணி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

போஸ்டர் போட்டு ஏமாதுராங்க பாலா... படத்த நேத்து தான் பாத்தேன் செம மொக்கை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
மணிகண்டபூபதி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 181
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா ரிப்போர்ட்-ஜூலை 2011

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum