ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காதல் - கவிதை
 ayyasamy ram

காதல் என்பது...
 ayyasamy ram

புதிரான போர் - கவிதை
 ayyasamy ram

எல்லாம் பிறர்க்காகவே!
 ayyasamy ram

பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
 ayyasamy ram

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
 ayyasamy ram

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
 ayyasamy ram

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
 ayyasamy ram

ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கவிதை
 Dr.S.Soundarapandian

நதிக்கரை - கவிதை
 Dr.S.Soundarapandian

மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பின்லாந்தில் எல்லாம் இருக்கிறது ! (பின்லாந்து நாட்டின் இசைப்பாடல்)
 Dr.S.Soundarapandian

மின் நூல்கள்
 aeroboy2000

ஆங்கில நாவல்கள் தமிழில்
 aeroboy2000

தொடத் தொடத் தொல்காப்பியம்(461)
 Dr.S.Soundarapandian

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 Dr.S.Soundarapandian

புகைப்படம் - கவிதை
 Dr.S.Soundarapandian

நீ என்ன தேவதை – கவிதை
 Dr.S.Soundarapandian

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

அறிமுகம் சந்திரசேகரன்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
 ayyasamy ram

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Page 3 of 33 Previous  1, 2, 3, 4 ... 18 ... 33  Next

View previous topic View next topic Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down


Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Aug 23, 2011 5:34 pm

பொருட்பால் - இரவச்சம் (107 ஆவது அதிகாரம்)
வன்மையின் வன்பாட்ட தில்


தாயின் மடி முட்டி - கன்று
பால் உண்டிட முயல - பாலின்றி
ரத்தம் சொட்டுவது கொடுமை

குருவி கூடொன்று கட்டி - குஞ்சுடன்
தான் குடியேறச் செல்ல - தீயிட்டு
மரத்தைப் பொசுக்குதல் கொடுமை

வறுமையைக் கைகாட்டிப் - பெருத்தோரிடம்
இரந்து அதைப் போக்கிடலாம் - என்று
எண்ணுதலை விடக் கொடுமையில்லை
ஒப்பிட மேலிருக் கொடுமைகள் சிறியனவே

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில். (1063)

avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by ayyamperumal on Tue Aug 23, 2011 5:39 pm

வறுமையைக் கைகாட்டிப் - பெருத்தோரிடம்
இரந்து அதைப் போக்கிடலாம் - என்று
எண்ணுதலை விடக் கொடுமையில்லை
ஒப்பிட மேலிருக் கொடுமைகள் சிறியனவேநெத்தியடி ராமன் ! அருமை !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2793
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Aug 23, 2011 6:16 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
வறுமையைக் கைகாட்டிப் - பெருத்தோரிடம்
இரந்து அதைப் போக்கிடலாம் - என்று
எண்ணுதலை விடக் கொடுமையில்லை
ஒப்பிட மேலிருக் கொடுமைகள் சிறியனவேநெத்தியடி ராமன் ! அருமை !


நன்றி நண்பா....... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Wed Aug 24, 2011 5:15 pm

பொருட்பால் - இரவச்சம் (107 ஆவது அதிகாரம்)
காலும் இரவொல்லாச் சால்பு

தன்னுடம்பில் ஒரு நூல் உதிருங்கால்
தன்னையே சென்று கொல்லும் - பண்பு
கொண்டது அக்கவரிமான்

பட்டினியின் கொடுஞ்சொற்கள் வசைபாடினாலும்
வயிறது வாட்டத்தை காட்டினாலும் - புற்தனை
புசிக்காத பண்பு கொண்டது அப்புலி

வாழ்கையை வழிநடத்திட - வழியே
கிட்டாத போதும் இரந்துண்டுவாழலாம்
என்று நினைக்காத பண்பிற்கு - இவ்
வுலகையே ஈடாய்கூறினாலும் ஈடாகாது

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு. (1064)
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by dsudhanandan on Wed Aug 24, 2011 6:53 pm

அருமை நண்பா.... தொடருங்கள்...
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 425

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Wed Aug 24, 2011 9:27 pm

dsudhanandan wrote:அருமை நண்பா.... தொடருங்கள்...


மிக்க நன்றி சுதன்.... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by kitcha on Wed Aug 24, 2011 11:12 pm

தன்னுடம்பில் ஒரு நூல் உதிருங்கால்
தன்னையே சென்று கொல்லும் - பண்பு
கொண்டது அக்கவரிமான்

பட்டினியின் கொடுஞ்சொற்கள் வசைபாடினாலும்
வயிறது வாட்டத்தை காட்டினாலும் - புற்தனை
புசிக்காத பண்பு கொண்டது அப்புலி

வாழ்கையை வழிநடத்திட - வழியே
கிட்டாத போதும் இரந்துண்டுவாழலாம்
என்று நினைக்காத பண்பிற்கு - இவ்
வுலகையே ஈடாய்கூறினாலும் ஈடாகாது


அருமையான கவிதை சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

கவரிமான், புலி போல்
நீங்கள் சொன்ன அந்த பண்பு பொது மனிதருக்கு இருக்கிறதோ இல்லையோ ஆனால் நம் தமிழினத்திற்கும் உண்டுavatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Thu Aug 25, 2011 8:43 pm

kitcha wrote:
தன்னுடம்பில் ஒரு நூல் உதிருங்கால்
தன்னையே சென்று கொல்லும் - பண்பு
கொண்டது அக்கவரிமான்

பட்டினியின் கொடுஞ்சொற்கள் வசைபாடினாலும்
வயிறது வாட்டத்தை காட்டினாலும் - புற்தனை
புசிக்காத பண்பு கொண்டது அப்புலி

வாழ்கையை வழிநடத்திட - வழியே
கிட்டாத போதும் இரந்துண்டுவாழலாம்
என்று நினைக்காத பண்பிற்கு - இவ்
வுலகையே ஈடாய்கூறினாலும் ஈடாகாது


அருமையான கவிதை [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

கவரிமான், புலி போல்
நீங்கள் சொன்ன அந்த பண்பு பொது மனிதருக்கு இருக்கிறதோ இல்லையோ ஆனால் நம் தமிழினத்திற்கும் உண்டு

மிக்க நன்றி நண்பா..........ஆம் நீங்கள் கூறுவது உண்மையே.......
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Thu Aug 25, 2011 8:46 pm

பொருட்பால் - இரவச்சம் (107 ஆவது அதிகாரம்)
துண்ணலின் ஊங்கினிய தில்

தேனடை தேன்பல கொண்டாலும் - மனிதம்
அத்தேனடை கொய்தாலும் - தேனீக்கள்
ஆயிரம் மலர் சென்றே தேனினை உண்டிடும்
அச்சுவையே அதனை அனுதினம் தூண்டிடும்


இரையது சிறிதாய் இருந்தாலும் - இரை
சுலபமாய் உண்டிட கிடைத்தாலும் -புலி
அதை பாய்ந்து பிடித்தே உண்டிடும் - அதன்
சுவையை மனதில் கொண்டிடும்


கூழ் தான் குடித்தாக வேண்டுமெனினும்
தன் உழைப்பால் ஈட்டியே குடித்திட்டால்
அதை விட இனிமை இங்கில்லை - அந்த
அமிர்தமும் இதற்கு முன்னில்லை

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த
துண்ணலின் ஊங்கினிய தில்.(1065)
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Fri Aug 26, 2011 5:18 pm

பொருட்பால் - இரவச்சம் (107 ஆவது அதிகாரம்)
கிரவின் இளிவந்த தில்
ரத்தமதை துச்சமாய் தந்து - நம்
கல்விக்கண் திறக்க வழிசெய்யுந்தந்தை
நம் கண்திறந்த பின்னரும் - இயலாமை
காட்டி நாவதை இரக்கும்படி சுழற்றுவதும்
இழிவே

தான் செய்யும்படி படைக்கப்பட்ட பணியை
சோம்பலும் சட்டையின்மையும் கொண்டு
பிறரிடம் இரந்து செய்திட நினைப்பதும் இழிவு

ஆவது தாகத்தில் தவித்து நின்றாலும்
அதற்கு நீர் பெற நாவை - இரக்கும்படி
அசைத்திட்டால் அந்நாவிற்கு இதைவிட
இழிவு வேறெதுவும் இராது

ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில். (1066)
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by kitcha on Fri Aug 26, 2011 5:25 pm

இழிவு பற்றிய அருமையான கவிதை வரிகள்.
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Fri Aug 26, 2011 7:04 pm

kitcha wrote:இழிவு பற்றிய அருமையான கவிதை வரிகள்.
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


மிக்க நன்றி நண்பா........... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sat Aug 27, 2011 6:00 pm

பொருட்பால் - இரவச்சம் (107 ஆவது அதிகாரம்)
கரப்பார் இரவின்மின் என்று

கையிருந்த காசை வினவினான்போக
கைத்தின்றதென்று மறையொன்று கூற
அப்பொய்கண்டு மனம் சுக்காய் தான் போகும்

துளிநீர் விழுந்ததும் சிப்பியது மூட

அடிநீர் வரை சென்று அச்சிப்பியை தேட
வெளிநீர் வந்து அச்சிப்பியை திறக்க
முத்தது இல்லாது கண்ட- கண்ணும்
மனமும் நைந்தே தான் போகும்

உள்ளங்கையில் உள்ளதை மறைப்போரிடம்

இல்லை என்று இரந்திட வேண்டாம் என்று
உள்ள இருகையையும் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்

இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்

கரப்பார் இரவின்மின் என்று. (1067)
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sun Aug 28, 2011 4:15 pm

பொருட்பால் - இரவச்சம் (107 ஆவது அதிகாரம்)
பார்த்தாக்கப் பட்டு விடும்

ஆக்கஞ்செப்புதல் நன்றளிக்கும் - ஈந்திடும்
உள்ளம் கொண்டோரிடம் உரைத்திட - அது
மாறாய் தீமையும் துன்பமும் தந்திடும் - அவ்
வீந்திடும் குணம் இல்லாதாரிடம் உரைத்திடவே

விரிசல் கொண்ட கூரை மீது குதிப்பதுவும்
ஈக்கும் குணம் அற்றவரிடம் இரப்பதுவும்
உடலிலும் மனதிலும் புண் பட்டிடுமே - ஒன்று
ஆரிடும் மற்றொன்று நமை ஆட்டிடும்


வலிமை அற்ற மரத்தோணி - உறுதிகொண்ட
பாறையில் மோதிட்டால் நொறுங்கிடும் - அத்
தோணியின் நிலை தான் இருப்பதை மறைத்து
உரைபாரிடும் சென்று இரப்பாற்கும்

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்த்தாக்கப் பட்டு விடும். (1068)
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Mon Aug 29, 2011 6:05 pm

பொருட்பால் - இரவச்சம் (107 ஆவது அதிகாரம்)
உள்ளதூஉம் இன்றிக் கெடும்

விளையாடிடுவோம் ஓடிடுவோம் வீதியிலே
உடல் களைத்திடுமே தவித்திடுமே நாவதுவும்
அண்மையுள்ள வீடு தேடி விரைந்திடுவோம்
தாகம் தணித்திடவே பருகிடவே நீரதனை - அவர்
ஜாதியென்ன கேட்டவுடன் பதரிடுமே ஒடுங்கிடுமே
மேலென்றால் தந்திடுவர் கீழென்றால் மறுத்திடுவர்
அவர் மறுத்தகணம் மனித மனம் ஒழிந்திடுமே


வீதியிலே இரந்திடுவோர் நிலை பார்த்திடவே
கலங்கிடுமே கண்ணும் உருகிடுமே நெஞ்சும்
மாறாய் மனம் ஒழிந்து தான் போகும் - பொருள்
இருந்தும் தர மனமின்றி வாழ்வாரை நினைத்திடவே

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.(1069)
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Aug 30, 2011 5:30 pm

பொருட்பால் - இரவச்சம் (107 ஆவது அதிகாரம்)
சொல்லாடப் போஒம் உயிர்

தன்வயிர் பிள்ளை தன்னிடம் இரந்தும்- தான்
தன்பிள்ளையை தாங்காது கூடையில் இட்டு
குப்பையான குழந்தையின் குமுறலை கண்டோர்
மனமே இறந்திடும் அக்காரியம் செய்த பெண்ணின்
உள்ளம் சென்று ஒளிய இடமும்தான் உண்டோ

உணவை உவகையுடன் உண்டதில்லை - அவ்
வுணவும் எளிதாய்யெங் களுக்குகிட்டிய தில்லை
இரப்பதை இழிவாய் உணர்ந்ததினால் - அவ்
விரப்பும் எங்களுக்கு கை வந்ததில்லை

இயலாமையினால் இரந்திட போயினன் - அம்
மாந்தர் இலையென்று கூறிட்ட மறைகேட்டதும்
அவன் உயிரே அங்கு போய்விடுமே - மறுத்தாரின்
உயிர் எங்கே தான் சென்று ஒளிந்து கொள்ளுமோ?

கரப்பவர்க் கியாங்கொளிகும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர். (1070)
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by dsudhanandan on Tue Aug 30, 2011 5:51 pm

அருமை ராமன்... வேலைப்பளு அதிகமிருந்ததால் இப்பொழுதுதான் சில கவிதைகளை படிக்க முடிந்தது...

தொடருங்கள் உங்கள் பணியை... அன்பு மலர்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 425

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Aug 30, 2011 8:00 pm

dsudhanandan wrote:அருமை ராமன்... வேலைப்பளு அதிகமிருந்ததால் இப்பொழுதுதான் சில கவிதைகளை படிக்க முடிந்தது...

தொடருங்கள் உங்கள் பணியை... [You must be registered and logged in to see this image.]


மிக்க நன்றி சுதன்...........உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படிங்கள் நண்பா..... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Wed Aug 31, 2011 7:33 pm

வணக்கம் நண்பர்களே வெற்றிகரமாக இரண்டு அதிகாரங்களை உங்கள் ஆதரவுடன் முடித்து விட்டேன்....இப்பொழுது மூன்றாவது அதிகாரத்தை தொடங்கவுள்ளேன்.....உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்....

பொருட்பால் -இரவு (106 ஆவது அதிகாரம்)

அவர்பழி தம்பழி அன்று


இமை மூடி தலை குனிந்து இருகரம்
கூப்பி உள்ளம் உருகி இறைமுன் இரந்து
நின்றிடுவர் இல்லோரும் உள்ளோரும் - இறையது
அவர் நம்பிக்கை அழித்தால் பழி - அவ்
விருவரைவிடுத்து இறையையே சேரும்

கேணி நீர் நிறைந்திருந்தும் பானையில்
கூழ் மிஞ்சியிருந்தும் மனம் மட்டும் குறைந்து
கேட்டோருக்கு கொடுக்க மறுத்தாரெனில் - பழி
அவரையல்லாமல் வேறாரையும் சேராது

கொடுத்திடும் தகுதிகள் கோடி பெற்றும் - ஈந்திடும்
பண்பு ஒன்று மட்டும் இல்லாது -
கேட்டோரிடம்
மறை கூரியோரையே
பழியானது அடைந்திடும்

இரக்க இரத்தக்கார்க் கானின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று. (1051)
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Thu Sep 01, 2011 7:05 pm

பொருட்பால் -இரவு (106 ஆவது அதிகாரம்)

துன்பம் உறாஅ வரின்

மண்ணிற்கு உரமாக உயிரினங்கள் பலவுண்டு

மனிதம்அவ் வாராகவேண்டாம் - மனிதத்தின்
உறுப்பிற்கு எந்நாளும் செயலுண்டு - ஒன்றாக
பயத்தினையும் சுயத்தினையும் அறுத்திட்டால்
உறுப்பளித்தலும் நன்மை பயக்குமன்றோ- அங்கு
இரத்தலும்
இன்பமாய் மாறும் அன்றோ?

இரத்தல் இன்பமா இழிவா? - இன்பமே
உள்ளார் மனமுவந்து கொடுத்திட்டால்
இழிவே உள்ளார் இலையென்று மறைகூறிட்டால்

எச்சினமும் பழிகுணமுமின்றி உள்ளார் ஈவாரெனில்
எத்துயரும் சிரத்தையுமின்றி இல்லார் பெருவாரெனின்
அப்பொருள் இரந்து பெறினும் இன்பத்தினையே கொடுக்கும்

இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின். (1052)
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Fri Sep 02, 2011 6:32 pm

பொருட்பால் -இரவு (106 ஆவது அதிகாரம்)
றிரப்புமோர் ஏஎர் உடைத்து

கடமையுணர்வு கொண்டிடுவார் காலத்தினை
கலங்காது கடந்திடுவார் ஏற்றம்பல கொண்டிடுவார்
ஏமாற்றம் தனை வென்றிடுவார் - மகிழ்வதுவும்
மகிழ்துவதும் தொழிலாக பெற்றிடுவார் ஈவார்

உள்ளம் உடையார் எல்லாம் உடையார் - அவர்
உடையதை உள்வைக்காது உவகையுடன் - அக்
கண்ணாடிபோல் உள்ளதை உள்ளதுபோல் காட்டி
வேண்டி வருவாருக்கு ஈந்திடுவர்

ஒளிப்பதை நினைக்காத உள்ளம் உடையரிடத்திலும்
எச்செயல் செய்தாலும் கடமையுணர்வுடன்செய்
வாரிடத்திலுந் தன்வறுமையினை காட்டி இரத்தலும்
இரந்தார்க்கு பெருமையினை தந்திடும்

கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோர் ஏஎர் உடைத்து. (1053)
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sat Sep 03, 2011 4:38 pm

கே. பாலா wrote:
ranhasan wrote:ராமன் எனக்காக ஒரு குறளை கவிதையாய் புனைந்து தாரும்

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்
நெஞ்சார நேசித்தேன் யான்
நீள் உலகில் அவன் அன்பை யாசித்தேன்
உணரானோ என் உள்ளத்தின் அழைப்பை
இனியேன் செய்வது நெஞ்சே நீ சொல் !
காதல் இலான் எனக் கைவிடல்
எளிதோ உனக்கு


ராமன் சரியாக இருக்குமா இது ???


ஸார் மன்னிசிருங்க ஸார்...இத்தன நாள் உங்களோட இந்த கவிதையை பாக்காம இருந்ததுக்கு மன்னிசிருங்க.......உங்கள் கவிதை மிக அருமை.....அந்த குரலுக்கு ஏற்ற கவிதை.....நான் அந்த குரலுக்கு எலுதிய கவிதையை ரன் ஹாசன் கு தனி மடல் செய்து விட்டேன்.....

மிக்க நன்றி.....மன்னித்து விடுங்கள்.....தாமதமாக பதில் கூறுவதற்கு.....
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by ரேவதி on Sat Sep 03, 2011 4:40 pm

உங்களை பார்க்கவே முடியலையே பிஜி எங்க போநீங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by kitcha on Sat Sep 03, 2011 4:45 pm

பிஜிராமன் wrote:பொருட்பால் -இரவு (106 ஆவது அதிகாரம்)
றிரப்புமோர் ஏஎர் உடைத்து

கடமையுணர்வு கொண்டிடுவார் காலத்தினை
கலங்காது கடந்திடுவார் ஏற்றம்பல கொண்டிடுவார்
ஏமாற்றம் தனை வென்றிடுவார் - மகிழ்வதுவும்
மகிழ்துவதும் தொழிலாக பெற்றிடுவார் ஈவார்

உள்ளம் உடையார் எல்லாம் உடையார் - அவர்
உடையதை உள்வைக்காது உவகையுடன் - அக்
கண்ணாடிபோல் உள்ளதை உள்ளதுபோல் காட்டி
வேண்டி வருவாருக்கு ஈந்திடுவர்

ஒளிப்பதை நினைக்காத உள்ளம் உடையரிடத்திலும்
எச்செயல் செய்தாலும் கடமையுணர்வுடன்செய்
வாரிடத்திலுந் தன்வறுமையினை காட்டி இரத்தலும்
இரந்தார்க்கு பெருமையினை தந்திடும்

கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோர் ஏஎர் உடைத்து. (1053)

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sat Sep 03, 2011 5:57 pm

ரேவதி wrote:உங்களை பார்க்கவே முடியலையே பிஜி எங்க போநீங்க


ரேவதி நா எப்பவும் இங்க தான் இருக்கேன்....கவிதை பதிவதற்கு வறுவேன் தினமும்...
எப்டி இருக்கீங்க......
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Page 3 of 33 Previous  1, 2, 3, 4 ... 18 ... 33  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum