ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நீ…நீயாக இரு….!
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
 ayyasamy ram

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
 ayyasamy ram

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 vashnithejas

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
 MANOJMAHE

இது வாட்ஸ் அப் கலக்கல்
 ayyasamy ram

கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
 ayyasamy ram

மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 ayyasamy ram

மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
 ayyasamy ram

2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
 ayyasamy ram

மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
 ayyasamy ram

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
 ayyasamy ram

ஆங்கில நாவல்கள் தமிழில்
 Saravana2945

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
 T.N.Balasubramanian

என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
 ayyasamy ram

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
 ayyasamy ram

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?
 Pranav Jain

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Pranav Jain

Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
 Pranav Jain

பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
 ayyasamy ram

சஸ்பென்ஷன்’ பாலம்
 ayyasamy ram

புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
 ayyasamy ram

முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
 ayyasamy ram

பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
 ayyasamy ram

ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
 ayyasamy ram

மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
 sinjanthu

இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்
 sinjanthu

(REQ) சிவகாமி பர்வம் பாகுபலி பாகம் 1
 sinjanthu

மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
 ayyasamy ram

அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
 M.Jagadeesan

உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
 ayyasamy ram

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 T.N.Balasubramanian

சண்முகத்தின் சயாம் மரண ரயில் என்ற நாவல் தேவை
 pon.sakthivel

அறிமுகம்
 T.N.Balasubramanian

முத்துலட்சுமி ராகவன்- " அம்மம்மா கேளடி தோழி" 1 முதல் 5 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 மகேந்திரன்

என். சீதாலக்ஷ்மி யின் " மலரும் இதழே" தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

என் . சீதாலக்ஷ்மி-யின் " அன்பில்லார் எல்லாம் " தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
 M.Jagadeesan

ஜாக்கியின் காதல் பரிசு..!
 vashnithejas

பூவே இளைய பூவே
 ayyasamy ram

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
 anikuttan

iசென்னையில் மழை -விளையாட்டில் வெற்றி மழை.-கிரிக்கெட் /பேட்மிண்டன்
 ayyasamy ram

நீ நடக்குமிடமெல்லாம் அழகு ! (ஸ்வீடன் மொழிப்பாடல்)
 sinjanthu

தொடத் தொடத் தொல்காப்பியம்(459)
 Dr.S.Soundarapandian

வீழ்வதற்கல்ல! - கவிதை
 Dr.S.Soundarapandian

தலைவருக்கு எது அலர்ஜி?
 Dr.S.Soundarapandian

முரண்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
 Dr.S.Soundarapandian

அழகுத் தேவதை ! (இத்தாலிய நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நுனிப்புல் தின்போமா ?

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

நுனிப்புல் தின்போமா ?

Post by ayyamperumal on Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.


Last edited by T.N.Balasubramanian on Sat May 20, 2017 6:36 pm; edited 2 times in total (Reason for editing : spelling corretion)
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2793
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down


Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Mon Jul 20, 2015 9:06 pm

T.N.Balasubramanian wrote:ayyasami ram நன்றி நன்றி

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
-
[You must be registered and logged in to see this image.]
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30900
மதிப்பீடுகள் : 9490

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Fri Jul 24, 2015 12:10 pm

அய்யாசாமி ராம் அவர்களுக்கு நன்றி !

பாலகாண்டத்தில் நாட்டுப் படலத்தில் ,  நாட்டு வளத்தைப் பாடவந்த கம்பன் , பலவாறு வர்ணனை செய்கின்றான் .அதில் இதுவும் ஒன்று .


கோதைகள் சொரிவன குளிர் இள நறவம்
பாதைகள் சொரிவன பரு மணி கனகம்
ஊதைகள் சொரிவன உறை உறும் அமுதம்
காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள்
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4741
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Sun Jul 26, 2015 7:37 pm

அடுத்த நுனிப்புல் மேய்வோமா ?

இடம்சுட்டிப் பொருள் விளக்குக ;
=========================

ஒன்றிய களிப்பினாலே உன்மத்தர் போலமிக்கார் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4741
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by சங்கர்.ப on Sun Jul 26, 2015 7:48 pm

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே.
avatar
சங்கர்.ப
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 60
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by சங்கர்.ப on Sun Jul 26, 2015 8:02 pm

M.Jagadeesan wrote:அடுத்த நுனிப்புல் மேய்வோமா ?

இடம்சுட்டிப் பொருள் விளக்குக ;
=========================


திருத்தொண்டர் புராணத்தில் கண்ணப்பநாயனர் புராணம்

ஒன்றிய களிப்பினாலே உன்மத்தர் போலமிக்கார் .
[You must be registered and logged in to see this link.]

பொருந்திய முன்னிருந்த சோகமும் கவலையும் நீங்க இப்போது
வந்து சேர்ந்த. களிப்பினாலே மிகுதியான சந்தோஷம் அடைதல்.
avatar
சங்கர்.ப
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 60
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Sun Jul 26, 2015 8:31 pm

நன்றி சங்கர் அவர்களே !

முழுக் கவிதையையும் பார்ப்போமா ?

நின்ற செங்குருதி கண்டார் நிலத்தின் நின்றேப் பாய்ந்தார்
குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி
நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற
ஒன்றிய களிப்பினாலே உன் மத்தர் போல மிக்கார்

இறைவன் கண்ணிலே குருதி வடியக் கண்ட கண்ணப்பர் , தன் ஒரு கண்ணைப் பெயர்த்தெடுத்து இறைவன் கண்ணிலே அப்பினார் . அப்போது குருதி வடிவது நின்றது . அந்த மகிழ்ச்சியிலே அவருக்கு ஏற்பட்ட உணர்வைத்தான் இக்கவிதை மூலமாக சேக்கிழார் வெளிப்படுத்துகிறார் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4741
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Fri Jul 31, 2015 8:33 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !

இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
----------------------------------------

மாணிக்குறளனே தாலேலோ ! வையமளந்தானே தாலேலோ !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4741
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Fri Jul 31, 2015 3:53 pm

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்!

பாடல் 1
மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி*
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்*
பேணி யுனக்கு பிரமன் விடுதந்தான்*
மாணிக் குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ
.
--

விண்ணிருந்து மண்ணில் உதித்த உனக்கு இங்கே
சிறந்த தொட்டில் கிடைக்குமோ என்று அஞ்சி படைப்புத்
தொழிலன் பிரமன் உன் மீது கொண்ட பேரன்பினால்
மாணிக்கங்களும் நடுவே வயிரமும் பதித்த பொன்னிற்
சிறந்த ஆணிப் பொன்னாலான எழில்மிகு தொட்டிலை
உனக்குப் பொருந்தக் கூடியது தானா என அளந்து அனுப்பி
இருக்கிறான்.
-
சிறுவனாய் வந்து வையம் அளந்த பெருமாளே
கண்ணுறங்கு என தாலாட்டுப் பாடுகிறார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30900
மதிப்பீடுகள் : 9490

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Fri Jul 31, 2015 3:57 pm

÷தாலாட்டு - "இலக்கியத்தின் தாய் ஊற்று' என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.

குழந்தைப் பருவத்தையும், மொழி அறிவின் இளமைப் பொலிவையும், இலக்கியச் சிறப்பின் தாய்மைக் கனிவையும் தாலாட்டுப் பாடல்களில் காணமுடிகிறது.

இந்தக் கண்ணோட்டத்துடன் தாலாட்டு உள்ளிட்ட நாட்டுப்புறப் பாடல்களைக் கற்றறிந்த சான்றோர் உற்று நோக்கின், இன்றைய இலக்கியங்கள் பலவற்றுக்கும் வேர், மூலம், ஊற்று, அடிப்படை தாலாட்டுதான் என்பதைப் புரிந்து கொள்வர்.

÷எழுதா இலக்கியமாக உலாவந்த தாலாட்டுப் பாடல்களை முதன் முதல் இலக்கியத்தில் பதிவு செய்தவர்கள் பன்னிரு ஆழ்வார்களே ஆவர்! கண்ணனைக் குழந்தையாகப் பாவித்து, தங்களைத் தாய் நிலையில் வைத்து அவர்கள் பாடிய பாசுரங்கள் தாலாட்டு இலக்கியங்களாயின.

தாலாட்டு இலக்கியம் அரங்கேறிய காலம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு.
பெரியாழ்வார்தான் முதன்முதலில் தாலாட்டுப் பாடியவர்.


எடுத்துக்காட்டுக்கு அவரது பாசுரம் ஒன்று:

""மாணிக்கம்கட்டி வயிரம் இடைக்கட்டி

ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறு தொட்டில்

பேணிஉனக்குப் பிரமன் விடுதந்தான்

மாணிக்குறளனே, தாலேலோ

வையமளந்தானே தாலேலோ''


(நா.தி.பி.: 1-ஆம் பத்து; 3-ஆம் திருமொழி-தாலப்பருவம்)
-
புலவர் அ.சா.குருசாமி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30900
மதிப்பீடுகள் : 9490

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Fri Jul 31, 2015 4:18 pm

மிக்க நன்றி ! சரியான விடை தந்த அய்யாசாமிராம் அவர்களுக்கு .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4741
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by T.N.Balasubramanian on Fri Jul 31, 2015 5:42 pm

ayyasami ram நன்றி நன்றி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20482
மதிப்பீடுகள் : 7842

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Fri Jul 31, 2015 9:42 pm

இனி அடுத்த நுனிப்புல் மேய்வோமா !

இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
---------------------------------------

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4741
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by shobana sahas on Fri Jul 31, 2015 9:47 pm

ayyasamy ram wrote:பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்!

பாடல் 1
மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி*
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்*
பேணி யுனக்கு பிரமன் விடுதந்தான்*
மாணிக் குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ
.
--

விண்ணிருந்து மண்ணில் உதித்த உனக்கு இங்கே
சிறந்த தொட்டில் கிடைக்குமோ என்று அஞ்சி படைப்புத்
தொழிலன் பிரமன் உன் மீது கொண்ட பேரன்பினால்
மாணிக்கங்களும் நடுவே வயிரமும் பதித்த பொன்னிற்
சிறந்த ஆணிப் பொன்னாலான எழில்மிகு தொட்டிலை
உனக்குப் பொருந்தக் கூடியது தானா என அளந்து அனுப்பி
இருக்கிறான்.
-
சிறுவனாய் வந்து வையம் அளந்த பெருமாளே
கண்ணுறங்கு என தாலாட்டுப் பாடுகிறார்.
-
[You must be registered and logged in to see this link.]

அய்யா அருமையாக விளக்கிஉள்ளீர்கள் .. நன்றி அய்யா .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 874

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Mon Aug 03, 2015 9:50 am


இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
===============================

தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே’’
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4741
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by krishnaamma on Mon Aug 03, 2015 11:28 am

ayyasamy ram wrote:அயோத்தியின் அழகைச் சொல்லிக்கொண்டு வரும்
கம்பன், அவ்வூரில் என்னவெல்லாம் பொழிகிறது
என்று ஒரு பாடலில் பட்டியல் போடுவான்,
அதன் முத்தாய்ப்பு வரி,
’காதைகள் சொரிவன, செவிநுகர் கனிகள்’.


அதாவது, அயோத்தியில் நாள்முழுக்கச் சொல்லப்படும்
கதைகளிலெல்லாம், கனி போன்ற சுவையுள்ள
விஷயங்கள் பொழியுமாம், அவற்றை மக்களின் செவிகள்
ஆசையுடன் நுகர்ந்துகொள்ளுமாம்.

பொதுவாக ‘சுவை’ப்பது நாக்கின் வேலை,
ஆனால் கம்பன் ‘காதுகளும் இனிய விஷயங்களைச்
சுவைக்கும்’ என்கிறான்,


இந்த வரியை அடிப்படையாக வைத்துதான் பாரதியார்
‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன் வந்து
பாயுது காதினிலே’ என்று பாடியதாகச் சொல்வார்கள்.

பாரதிக்கு முன்பும் பின்பும், ‘செவிநுகர் கனிகள்’ என்ற
பயன்பாடு மிகவும் பிரபலம்.

பேராசிரியர் இஸ்மாயில் அவர்கள் எழுதிய ஒரு நூலுக்கே
அந்தப் பெயரைச் சூட்டியிருக்கிறார்.


தற்போது, ’செவிநுகர் கம்பன்’ என்ற பெயரில் என்.சொக்கன்
அவர்களின் ஆடியோ சிடி ஒன்று வெளிவந்துள்ளது.
-
[You must be registered and logged in to see this image.]
----------------------------------------------
நன்றி--இணையம்

அருமை ராம் அண்ணா புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by krishnaamma on Mon Aug 03, 2015 11:29 am

ayyasamy ram wrote:பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்!

பாடல் 1
மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி*
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்*
பேணி யுனக்கு பிரமன் விடுதந்தான்*
மாணிக் குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ
.
--

விண்ணிருந்து மண்ணில் உதித்த உனக்கு இங்கே
சிறந்த தொட்டில் கிடைக்குமோ என்று அஞ்சி படைப்புத்
தொழிலன் பிரமன் உன் மீது கொண்ட பேரன்பினால்
மாணிக்கங்களும் நடுவே வயிரமும் பதித்த பொன்னிற்
சிறந்த ஆணிப் பொன்னாலான எழில்மிகு தொட்டிலை
உனக்குப் பொருந்தக் கூடியது தானா என அளந்து அனுப்பி
இருக்கிறான்.
-
சிறுவனாய் வந்து வையம் அளந்த பெருமாளே
கண்ணுறங்கு என தாலாட்டுப் பாடுகிறார்.
-

அருமையான விளக்கம் புன்னகை................ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Mon Aug 03, 2015 8:12 pm

M.Jagadeesan wrote:
இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
===============================

தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே’’
[You must be registered and logged in to see this link.]
-
இந்த உலகம் ஏன் வாழ்கின்றது என புறநானூற்றுப்
புலவர்களுள் ஒருவரான கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
சிந்தித்தான்.

-
இந்திரர்க்குரிய அமிர்தம் கிடைத்தாற் கூடத் தாம் தனித்து
உண்ணாது பிறருடன் பகிர்ந்து உண்ணும் தன்மை
கொண்டவர்களாலும் பிறர் அஞ்சுகின்ற காரியங்களைக்
கண்டு தாமும் அஞ்சிச் சோம்பி இருக்காதவர்களாலும்
பிறர் வாழ ஒரு காரியத்தைச் செய்வதனால் புகழ்
கிடைக்குமெனின் அதற்காக உயிரை விடக் கூடியவர்களாலும்
என்னதான் கோடி கோடியாக இலஞ்சம் கொடுத்தாலும் பழி
வரக் கூடிய காரியமெனின் அதனைத் தவிர்ப்பவர்களாலும் –
தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்கின்ற பெருந்
தகைகளாலும்தான் இந்த உலகம் வாழ்கின்றது. என்றான்
இளம்பெரு வழுதி
-
“உண்டால் அம்ம இவ்வுலகம்….. எனத் தொடங்கும்
புறநானூற்றுப் பாடலில் இக்கருத்தைப் பதிவு செய்தான்”

-
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே
-


பிறர்க்கென முயலுநர் உண்மையானே

என்பது அவனது பாடலின் உச்சம் தொட்ட இடம்.
-
எங்கள் மண்ணில் இடம் பெற்ற இத்துணை கயமைத்
தனங்களுக்குப் பிறகும் இத்துணை அழிவுகளுக்குப் பிறகும்
இந்த மண் வாழ்கின்றது என்றால் மேற் சொன்ன பாடலின்
கருத்தைத்தான் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது..!!
-
------------------------------------------------------
-
உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே! முனிவிலர்

துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்

அன்ன மாட்சி அனைய ராகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறக்கென முயலுநர் உண்மையானே!

(புறநானூறு-182)
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30900
மதிப்பீடுகள் : 9490

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by T.N.Balasubramanian on Mon Aug 03, 2015 8:57 pm

அருமை அய்யாக்களே ,
உங்கள் ஜோடி ---கேள்வி /பதில்
ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது .
தொடருங்கள் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20482
மதிப்பீடுகள் : 7842

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Mon Aug 03, 2015 9:11 pm

சரியாக இடம்சுட்டிப் பொருள் விளக்கம் தந்த ஐயாசாமிராம் அவர்களுக்கு நன்றி . ஊக்கம் மிக்கப் பின்னூட்டங்களால் , இத்திரியைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்கின்ற கிருஷ்ணம்மா, இரமணியன் போன்ற அன்பர்களுக்கும் நன்றி .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4741
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Mon Aug 03, 2015 9:13 pm

இனி அடுத்த நுனிப்புல் மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
---------------------------------------


கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
.


avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4741
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by T.N.Balasubramanian on Mon Aug 03, 2015 9:49 pm

M.Jagadeesan wrote:சரியாக இடம்சுட்டிப் பொருள் விளக்கம் தந்த ஐயாசாமிராம் அவர்களுக்கு நன்றி . ஊக்கம் மிக்கப் பின்னூட்டங்களால் , இத்திரியைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்கின்ற கிருஷ்ணம்மா, இரமணியன் போன்ற அன்பர்களுக்கும் நன்றி .
[You must be registered and logged in to see this link.]

சிந்தையை கிளரும் பதிவுகள் ,
உக்கமிகு பின்னூட்டங்களை
பெறுவது விந்தை இல்லையே !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20482
மதிப்பீடுகள் : 7842

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Thu Aug 06, 2015 1:18 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !
இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
----------------------------------------------------

வெவ்வாய் ஓரி முழவாக விளிந்தார் ஈமம் விளக்காக

ஒவ்வாச் சுடுகாட்டு உயர்அரங்கின் நிழல்போல் நுடங்கிப் பேயாட

எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட

இவ்வா றாகிப் பிறப்பதோ இதுவோ மன்னர்க்கு இயல்வேந்தே
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4741
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by krishnaamma on Fri Aug 07, 2015 1:54 am

M.Jagadeesan wrote:சரியாக இடம்சுட்டிப் பொருள் விளக்கம் தந்த ஐயாசாமிராம் அவர்களுக்கு நன்றி . ஊக்கம் மிக்கப் பின்னூட்டங்களால் , இத்திரியைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்கின்ற கிருஷ்ணம்மா, இரமணியன் போன்ற அன்பர்களுக்கும் நன்றி .
[You must be registered and logged in to see this link.]

உங்கள் கேள்விகளாலும்,   ராம் அண்ணாவின் விளக்கத்தலும் நான்  நிறைய படித்து தெரிந்து கொள்ள முடிகிறதே  ஜகதீசன் ஐயாபுன்னகை.......நான் தான் அதற்கு வாய்ப்பளிக்கும் உங்களுக்கு நன்றி சொல்லணும் புன்னகை ............நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Fri Aug 07, 2015 3:43 am

சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்க தேவர்.
-
சீவக சிந்தாமணியின் கதையில், வரும் பாடல் இதுவாகும்
ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன்.   இவன்,  மனைவி விசையை
மீது அளவு கடந்த காதல் கொண்டு,    அரசாட்சியைக் கட்டியங்காரன்
என்ற அமைச்சனிடம் ஒப்படைத்துவிட்டு, அந்தப்புரத்திலேயே காலம்
கழித்தான்.  
-
கட்டியங்காரன் சூழ்ச்சி செய்து,  அரசனைப் போரிட்டுக் கொன்றுவிட
முயலும் பொழுது, கருவுற்றிருந்த தன் மனைவி விசையையை ஒரு
மயில் பொறியில் ஏற்றி அனுப்பிவிட்டான்; பின்னர்ப் போரில் மடிந்தான்.
-
விசையை இடுகாட்டில் சீவகனைப் பெற்றெடுத்தாள்.
-
அரண்மனையில், மன்னன் மகனாக, பெரிய ஆடம்பரமான
விழாக்களுக்கும்,   பாராட்டுகளுக்கும் உரியவனாகப் பிறந்திருக்க
வேண்டிய அரசகுமாரன்,  இவ்வாறு இங்கு (சுடுகாட்டில்),  யாரும்
துணையில்லாமல் திக்கற்றவனாய்ப் பிறக்க நேர்ந்ததே என்று
நினைத்துப் புலம்புகிறாள் விசையை. இதனை,
-
வெவ்வாய் ஓரி முழவாக
விளிந்தார் ஈமம் விளக்காக
ஒவ்வாச் சுடுகாட்டு உயர்அரங்கின்
நிழல்போல் நுடங்கிப் பேயாட
எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக்
கூகை குழறிப் பாராட்ட
இவ்வா றாகிப் பிறப்பதோ
இதுவோ மன்னர்க்கு இயல்வேந்தே.  
       (நாமகள் இலம்பகம், 309)
-
என்று துன்பத்தின் எல்லையில் நின்று தாய் புலம்புவதாகத்
திருத்தக்க தேவர் குறிப்பிடுகின்றார்.

-
பாடலின் பொருள்:

-
நரியின் குரல் முழவு என்னும் வாத்தியமாக ஒலிக்கிறது.  
செத்தவர்களின் பிணங்களைச் சுடும் ஈமத்தீயே மங்கல
விளக்காக ஒளி விடுகிறது.  
சுடுகாடாகிய கலையரங்கில்,  நிழல் போல் பேய்கள்
கூத்தாடுகின்றன.  
ஆந்தைகள் திசைகள் எங்கும் கத்துகின்றன.   அக்குரல்
பலரும்,  பல இடங்களிலிருந்து பாடிப் பாராட்டுதல் போல
உள்ளது. இந்நிலைக்கு ஆளாகிப் பிறக்க நேர்ந்ததே, அரசே
இதுவோ, அரசருக்குரிய இயல்பு? என்று புலம்புவதை மிகவும்
துன்பச் சுவையுடன் பாடலாக அமைந்துள்ளார் ஆசிரியர்.
-
----------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30900
மதிப்பீடுகள் : 9490

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by shobana sahas on Fri Aug 07, 2015 3:47 am

உங்கள் விளக்கம் அருமை ஐ. ராம் அய்யா . மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 874

View user profile

Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum