ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 ayyasamy ram

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

Introduction
 chandram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

மாறுகை – கவிதை
 T.N.Balasubramanian

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 ayyasamy ram

அது ஒரு காதல் அலை…! – கவிதை
 ayyasamy ram

மீன்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

தாமதம் -- கவிதை
 Dr.S.Soundarapandian

நீ…நீயாக இரு….!
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(460)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
 ayyasamy ram

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
 ayyasamy ram

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
 MANOJMAHE

கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
 ayyasamy ram

மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
 ayyasamy ram

மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நுனிப்புல் தின்போமா ?

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

நுனிப்புல் தின்போமா ?

Post by ayyamperumal on Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.


Last edited by T.N.Balasubramanian on Sat May 20, 2017 6:36 pm; edited 2 times in total (Reason for editing : spelling corretion)
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2793
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down


Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Fri Aug 07, 2015 3:51 am

shobana sahas wrote:உங்கள் விளக்கம் அருமை ஐ. ராம் அய்யா . மகிழ்ச்சி மகிழ்ச்சி
[You must be registered and logged in to see this link.]
-
[You must be registered and logged in to see this image.]
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30933
மதிப்பீடுகள் : 9526

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Fri Aug 07, 2015 7:47 am

மிக்க நன்றி ஐயாசாமி ராம் அவர்களே !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4744
மதிப்பீடுகள் : 2315

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Fri Aug 07, 2015 8:20 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
==============================

என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை
எங்கும் நிறை பரப்ரம்மம் - அம்மா வென்றழைக்க(என்ன தவம்)
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4744
மதிப்பீடுகள் : 2315

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Fri Aug 07, 2015 1:14 pm

என்ன தவம் செய்தனை யசோதா..
--
[You must be registered and logged in to see this image.]
-
உலகத்தையே கட்டிக் காக்கும் அந்த பரம்பொருளின்
தாய்க்கு ஏதாவது கவலை இருக்குமா?
குழந்தை கீழே விழுந்தால் அடிபடுமே என்று கவலைப்படுவாரா?
மண்ணைத் தின்று விட்டால் பதைபதைத்துப் போவாரா?

ஆம். கண்டிப்பாக.

‘டெல்லிக்கே ராஜான்னாலும், தன் தாய்க்கு அவர் சேய்தானே!!!’

அவர்தான் யசோதா.

உலகத்தையே தன் வாயில் காட்டினாலும்,
ஒரே சமயத்தில் பல வீட்டிலிருந்து வெண்ணைய் தின்று, மாட்டி கொண்டுவரப்பட்டாலும்,
இன்னும் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்திக் காட்டினாலும்

ம்ஹூம். No.

அவன் என் மகன்.

இன்னும்
ச்சின்னப் பையன்தான்
அவனுக்கு ஒண்ணும்(!) தெரியாது.

என்று சொல்வாராம்.

அப்பேர்ப்பட்ட குழந்தையை வளர்க்கும், கட்டிப் போடும்,
அந்த குழந்தையோடு விளையாடும் பாக்கியம் பெற்ற
யசோதாவைத்தான் பாபநாசம் சிவன் பாடினார்..
என்ன தவம் செய்தனை யசோதா.
-
[You must be registered and logged in to see this image.]-
-
பாபநாசம் சிவன்
-
(1890 - 1973)
---
**ராகம் - காபி , தாளம் --ஆதி
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30933
மதிப்பீடுகள் : 9526

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Fri Aug 07, 2015 1:21 pm

[You must be registered and logged in to see this image.]
-
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க

(என்ன தவம்)

ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையிலேந்தி சீராட்டிப் பாலூட்டித் தாலாட்ட

(என்ன தவம்)

சரகாதியர் தவ யோகம் செய்து
வருந்தி சாதித்ததை புனித மாதே எளிதில் பெற

(என்ன தவம்)

பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள (கண்ணனை)
உரலில் கட்டி வாய்பொத்திக் கெஞ்சவைத்தாய் தாயே

(என்ன தவம்)
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30933
மதிப்பீடுகள் : 9526

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Fri Aug 07, 2015 1:22 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30933
மதிப்பீடுகள் : 9526

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Fri Aug 07, 2015 1:26 pm

மிகவும் சரியான விடை . முழுப்பாடலையும் பார்ப்போமா ?
என்ன தவம் செய்தனை!
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா

எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை

ஈரேழு புவனங்கள் படைத்தவனை
ஈரேழு புவனங்கள் படைத்தவனை

ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில்
ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட
ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில்
ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட
ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில்
ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட நீ

என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை!

பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள

உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாள் கண்ணனை
உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாள் கண்ணனை
உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாள் தாயே

என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை!

சனகாதியர் தவயோகம் செய்தே வருந்தி
சாதித்ததைப் புனிதமாக எளிதில் பெற
என்ன தவம் செய்தனை!
சனகாதியர் தவயோகம் செய்தே வருந்தி
சாதித்ததைப் புனிதமாக எளிதில் பெற

என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை!
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4744
மதிப்பீடுகள் : 2315

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by krishnaamma on Fri Aug 07, 2015 3:47 pm

வாவ் ! சூப்பர் ஜெகதீசன் ஐயா மற்றும் ராம் அண்ணா புன்னகை....மிக்க நன்றி உங்கள் பதிவுகளுக்கு ! ......

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Sat Aug 08, 2015 8:40 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
===============================
நனி பசு பொழியும் பாலும்- தென்னை
...நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும்- தமிழை
...என்னுயிர் என்பேன் கண்டீர் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4744
மதிப்பீடுகள் : 2315

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by shobana sahas on Sun Aug 09, 2015 4:31 am

அய்யா... பாரதிதாசன் அவர்களின் கவிதை என்று நினைக்கிறன் .. தவறாக இருந்தால்

avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 874

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Sun Aug 09, 2015 5:43 am

தமிழின் இனிமையை இவ்வாறு வர்ணிக்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் .

சரியான விடை தந்த ஷோபனாசஹஸ் அவர்களுக்கு நன்றி .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4744
மதிப்பீடுகள் : 2315

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by shobana sahas on Sun Aug 09, 2015 6:51 am

M.Jagadeesan wrote:தமிழின் இனிமையை இவ்வாறு வர்ணிக்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் .

சரியான விடை தந்த ஷோபனாசஹஸ் அவர்களுக்கு நன்றி .
[You must be registered and logged in to see this link.]
நன்றி அய்யா .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 874

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Sun Aug 09, 2015 7:24 am

M.Jagadeesan wrote:தமிழின் இனிமையை இவ்வாறு வர்ணிக்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் .

சரியான விடை தந்த ஷோபனாசஹஸ் அவர்களுக்கு நன்றி .
[You must be registered and logged in to see this link.]
-
தமிழ், உலகின் மூத்த மொழி மட்டுமல்ல; முதல் செம்மொழியும் ஆகும்.
அதனால்தான், பாவேந்தர் பாரதிதாசன்,

கனியிடை ஏறிய சுளையும்-

முற்றல், கழையிடை ஏறிய சாறும்;

பனிமலர் ஏறிய தேனும்,-

காய்ச்சுப், பாகிடை ஏறிய சுவையும்;

நனி பசு பொழியும் பாலும்-

தென்னை, நல்கிய குளிர் இளநீரும்;

இனியன என்பேன்; எனினும், -

தமிழை, என்னுயிர் என்பேன் கண்டீர்!” -

என்று உலகுக்குப் பிரகடனம் செய்தார்.

அண்ணல் காந்தியடிகள்; “எனது வாழ்க்கையில், ஏதாவது ஒன்றைப்
பற்றி நான் வருந்துகிறேன் என்று சொன்னால், அது உயர்ந்த
மொழியாகிய, தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு
எனக்கு வாய்க்கவில்லையே, என்பது பற்றித்தான்” என்று தமிழ்மொழியை
பெருமைப்படுத்தி கூறியுள்ளார்.
அத்தகைய இனிமையும் தனித்தன்மையும், வாய்ந்தது தமிழ்மொழி.

திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை,
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த திரு.ஜி.யு.போப் அவர்கள்,
ஒரு தமிழனாகப் பிறக்கவில்லையே என ஏங்கினார்.

அவர், தான் தமிழ் மொழியின்பால் கொண்ட பற்றின்
அடையாளமாக, தமது கல்லறையில், “ஜி.யு.போப், ஒரு தமிழ் மாணவன்”
என்று பொறிக்க வேண்டுமென விரும்பினார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30933
மதிப்பீடுகள் : 9526

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by shobana sahas on Sun Aug 09, 2015 7:38 am

Nalla vilakkam ai ram ayya. Nandri .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 874

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Sun Aug 09, 2015 7:52 am

shobana sahas wrote:Nalla vilakkam ai ram ayya. Nandri .
[You must be registered and logged in to see this link.]
-

-
[You must be registered and logged in to see this image.]
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30933
மதிப்பீடுகள் : 9526

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Sun Aug 09, 2015 3:52 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
================================

இன்னதென அறிகில்லார் தாம்செய்வ திவர்பிழையை
மன்னியும்என்று எழிற்கனிவாய் மலர்ந்தார்நம் அருள்வள்ளல் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4744
மதிப்பீடுகள் : 2315

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Sun Aug 09, 2015 4:43 pm

[You must be registered and logged in to see this image.]
-
இயேசு பெருமான் படாத துயரங்களா?
சிலுவையில் அறையப் படும் அந்தக் கொடுமையான
நிகழ்வின் போது கூட அவர்,
-
"இறைவா! தாம் செய்வது இன்னது என்று தெரியாமல் செய்யும்
இவர் பிழையை மன்னியும்! "
என்று வேண்டினார்.....
-
இந்நிகழ்வைத்தான்

இன்னதென அறிகில்லார் தாம்செய்வ திவர்பிழையை
மன்னியும்என்று எழிற்கனிவாய் மலர்ந்தார்நம் அருள்வள்ளல் .

-
என்ற பாடல் வரிகள் விளக்குகிறது....!
-
-
மனிதப் பிறவி எடுத்தவர்கள்  பண்பிற் குறையக்கூடாது
என்ற கருத்தை வலியுறுத்தும் திருக்குறளும் நினைவு
கூரத்தக்கது.
-
"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
 இகழ்வார்ப் பொறுத்தல் தலை."
-
----------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30933
மதிப்பீடுகள் : 9526

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Sun Aug 09, 2015 7:36 pm

H . G . கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் பாடிய இரட்சண்ய யாத்திரிகம் என்ற நூலில் , சிலுவையில் அறையப்படும் போது இயேசு பெருமான் பாடியதாக இப்பாடல் வருகிறது .

தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்தெந்தாய்
இன்னதென அறிகிலார் தாம்செய்வ திவர்பிழையை
மன்னியும்என்று எழிற்கனிவாய் மலர்ந்தார்நம் அருள்வள்ளல் .

அய்யாசாமி ராம் அவர்களுக்கு நன்றி .

avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4744
மதிப்பீடுகள் : 2315

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Sun Aug 09, 2015 9:15 pm

H . G . கிருஷ்ணப்பிள்ளை என்பது சரியானதா..?
-
H.A.Krishna Pillai.என்பவர் எழுதியதாக தமிழ் வெர்ச்சுவல்
யூனிவர்சிட்டி வலையில் உள்ளது.
-
இவர் சாயாபுரம் கிறிஸ்துவ காலேஜில் தமிழ் போதகராக
பணியாற்றினார். வைஷ்ணவராக இருந்த போதும்
ஏசுவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, பின்னர்
கிறித்துவராக மாறினார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30933
மதிப்பீடுகள் : 9526

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Sun Aug 09, 2015 9:38 pm

ஆமாம் ! நீங்கள் சொல்வது சரிதான் . H .A கிருஷ்ணப்பிள்ளை என்பதுதான் சரி . தவறுதலாக H .G . கிருஷ்ணப்பிள்ளை என்று பதிந்துவிட்டேன் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4744
மதிப்பீடுகள் : 2315

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Tue Aug 11, 2015 7:30 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
===============================

தேவியைப் பிரிந்த பின்னைத்
...திகைத்தனை போலும் செய்கை .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4744
மதிப்பீடுகள் : 2315

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Tue Aug 11, 2015 7:41 am


[You must be registered and logged in to see this image.]
-
கம்பன் ஒரு கவிச் சக்கரவர்த்தி.
-
பல பாடல்கள் நம் மனத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு
ஏற்பப் பொருள் படும் வகையில் இருக்கும்.
அது அவன் சொல்ல விரும்பிய கருத்தாக இல்லாமல்
இருக்கலாம்.
-
ஆனாலும் வேறு பொருள் கொள்ளவும் இடம் கொடுக்கும்!
-
வாலி வதைப் படலத்தில்,இராமன் மறைந்து நின்று வாலி மீது
அம்பெய்தி,வாலி வீழ்கிறான்.
தன் நெஞ்சில் தைத்த வாளியை எடுத்துப் பார்க்கிறான் வாலி .
-
இராமன் என்ற பெயரைப் பார்க்கிறான்.
-
இராமனை இகழ ஆரம்பிக்கிறான்.
-
அதில் ஒரு பாடல்……
-
“கோ இயல் தருமம், உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் -
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! - உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை! “

-
”ஓவியத்தில் எழுத முடியாத அழகுள்ள ராமனே!
உன் குலத்தோர் அரச தர்மம் தவறாதவர்கள். ஆனால் நீ?!
சீதையைப் பிரிந்ததனால் மனம் பேதலித்து இவ்வாறு செய்தாயோ?”
என்கிறான் வாலி.

-


Last edited by ayyasamy ram on Tue Aug 11, 2015 7:43 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30933
மதிப்பீடுகள் : 9526

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Tue Aug 11, 2015 7:42 am


இகழும்போது கூட அவன் அழகைப் புகழ்வானா என ஒரு கேள்வி!
எனில் வேறு என்ன பொருள் கொள்ளலாம்?

அக்காலத்தில் மன்னர்களின் வீரச் செயலை ஓவியமாகத் தீட்டி
வைப்பர்(புகைப்பட வசதி கிடையாது!)அவ்வாறு” இந்த
நிகழ்ச்சியை ,நீ என்னைக் கொன்ற நிகழ்ச்சியை, படமாகத்
தீட்டினால் உன்னை அதில் எழுத முடியாது;ஏனெனில் நீ
மறைந்திருந்து கொன்றாய்,
எனவே ஓவியத்தில் தெரிய மாட்டாய் “என்பதும் ஒரு பொருளாகத்
தோன்றுகிறது .
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30933
மதிப்பீடுகள் : 9526

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Tue Aug 11, 2015 8:45 am

நன்றி !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4744
மதிப்பீடுகள் : 2315

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by krishnaamma on Thu Aug 13, 2015 11:40 pm

இரண்டு விளக்கங்களுமே அருமை ராம் அண்ணா புன்னகை.........நன்றி !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum