புதிய பதிவுகள்
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_m10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10 
79 Posts - 44%
ayyasamy ram
காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_m10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10 
77 Posts - 43%
prajai
காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_m10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_m10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10 
6 Posts - 3%
Jenila
காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_m10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10 
2 Posts - 1%
jairam
காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_m10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_m10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_m10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_m10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10 
1 Post - 1%
M. Priya
காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_m10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_m10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10 
122 Posts - 53%
ayyasamy ram
காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_m10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_m10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10 
10 Posts - 4%
prajai
காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_m10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10 
8 Posts - 3%
Jenila
காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_m10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10 
4 Posts - 2%
Rutu
காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_m10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_m10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10 
2 Posts - 1%
jairam
காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_m10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_m10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_m10காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி இன்னும் சாகவில்லை - அண்ணா ஹசாரே


   
   

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Aug 20, 2011 5:41 pm

காந்தி இன்னும், இன்றும் நம்மோடுதான் இருக்கிறார் என்று ஊடகங்களும், சமூகத்தின் பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களும் அன்னா ஹஜாரேவைக் கொண்டாடி வருகிறார்கள். ஊழலுக்கெதிரான மக்கள் இயக்கத்தின் சார்பில், கடுமையான ஊழல் எதிர்ப்பு விதிமுறைகள் அடங்கிய லோக்பால் சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், இதற்கென விதிமுறைகளை உருவாக்கும்பொருட்டு அரசு தரப்பிலிருந்தும் பொதுமக்கள் தரப்பிலிருந்தும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கூட்டுக்குழு அமைக்கப்படவேண்டும் என்றும் அதற்கு சட்டரீதியான அந்தஸ்தை தரவேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் புதுதில்லியில் ஜந்தர் மந்தரில் சாகும்வரையிலான உண்ணாநோன்பை ஏப்ரல் 5ம் தேதி தொடங்கினார். இந்த பிரச்சினை தொடர்பாக பிரதமருடனும் அரசுடனும் முன்பே பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். பிரதமர் இவருடைய கோரிக்கைகளை ஏற்க மறுத்ததை அடுத்து உண்ணாவிரதத்தை அறிவித்தார்.

அன்னா ஹஜாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாடெங்கிலுமிருந்து மக்கள் ஆதரவு பெருமளவு திரண்டெழுந்தது. கிரண் பேடி, மேதா பட்கர், அரவிந்த் கெஜ்ரிவால், யோகா குரு சுவாமி ராம்தேவ் உள்ளிட்ட பலரின் ஆதரவும் குவிந்தது. மத்திய அமைச்சர் கபில் சிபில் பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். எந்தவிதமான சமரசத்துக்கும் ஹஜாரே ஒத்துக்கொள்ளாததை அடுத்து மத்திய அரசு பணிந்தது. 98 மணி நேரங்கள் நீடித்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. கூட்டுக்குழுவில் அரசு தரப்பிலிருந்து ஐந்து உறுப்பினர்களும் மக்கள் தரப்பிலிருந்து ஐந்து உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள் என்றும், வரும் நாடாளு மன்றக் கூட்டத் தொடரின்போதே லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என்றும் உறுதி கூறப்பட்டது.

‘மத்திய அரசு வாக்களித்தபடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும்’ என்று எச்சரித்துள்ள 71 வயது மனிதருக்கு மத்திய அரசை எப்படி இவ்வாறு பணிய வைக்க முடிந்தது? ஊழலை வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சமாக ஏற்றுக்கொண்டு விட்ட இந்திய குடிமகன்களுக்கு நடுவே அதற்கெதிராக போராட முடியும் என்ற நம்பிக்கையும், நெஞ்சுரமும் இவருக்கு எப்படி ஏற்பட்டது?

அன்னா ஹஜாரேவுக்கு இது புதிது அல்ல. அவருடைய போராட்டம் நாற்பது ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது. தனது சொந்த கிராமத்தை சீர்திருத்தி வளப்படுத்துவதில் தொடங்கிய அவருடைய சமூக, அரசியல் விழிப்புணர்வு போராட்டம் இன்றும் தேசம் தழுவிய ஒரு பெரும் போராட்டமாக வளர்ந்து நிற்கிறது.

ராலேகாவ் சித்தி …. வறட்சியிலிருந்து வளத்திற்கு

மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தின் வறண்ட நிலப்பரப்பில் ஒடுங்கிய ஒரு கிராமம் பின்கர். ஐந்து ஏக்கர் நிலத்தை சொந்தமாக வைத்திருந்தும் எதையும் விளைவிக்க முடியாத வறட்சியின் பிடியில் இருந்த எளிய விவசாயியான பாபுராவ் ஹஜாரேயின் மகன் கிசான் பாபட் பாபுராவ் ஹஜாரே. 1952ம் ஆண்டில் வறட்சியின் மோசமான காலகட்டத்தில் பின்கரிலிருந்து ராலேகாவ் சித்திக்கு குடிபெயர்ந்தார்கள். சிறு வயதில் மும்பையில் தன் அத்தையின் வீட்டில் வளர்ந்த அன்னா ஹஜாரே, ஏழாம் வகுப்பு வரையில்தான் படிக்க முடிந்தது. வறுமையின் காரணமாக கிராமத்துக்குத் திரும்ப நேர்ந்தது.

1962ல் இந்திய சீன யுத்தத்தின்போது இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து தாய்நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று இந்திய அரசு அழைப்பு விடுத்தது. இயல்பிலேயே தேசப்பற்று கொண்ட ஹஜாரே 1963ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். ஆனால் அவருடைய மனம் தொடர்ந்து மனித வாழ்வின் பொருள் குறித்த கேள்விகளால் அலைக்கழிந்தபடியே இருந்தது. ஏராளமான கேள்விகள். குழப்பங்கள். பதில் தெரியாமல் தெளிவுகள் கிடைக்காமல் மனம் வெறுத்த நிலையில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இரண்டு பக்கங்களில் தனது முடிவைக் குறித்து கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார். அப்போது அவருக்கு பணி தில்லியில். அன்று மாலை தில்லி ரயில் நிலையத்தில் குழப்பத்துடன் உலவிக் கொண்டிருந்தார். பிளாட்பாரத்தில் ஒரு புத்தகக் கடையில் இருந்த அந்த புத்தகம் அவர் கவனத்தை ஈர்த்தது. புத்தகத்தின் அட்டையில் இருந்த சுவாமி விவேகானந்தரின் உருவப்படம் அவரை வெகுவாகக் கவர அதை வாங்கினார். அன்றிரவு அந்தப் புத்தகத்தைப் படித்தபோது அவருடைய மனதிலிருந்த பெரும்பாலான கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் விடை கிடைத்தது. மனித குலத்தின் மேன்மைக்காகப் பாடுபடுவதே தனி மனித வாழ்வை அர்த்தப்படுத்தும் என்னும் விவேகானந்தரின் வாக்கு அவரது வாழ்வில் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

1965ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் யுத்தத்தின்போது அவருடைய படைப்பிரிவு கெம்கரன் எல்லைப் பகுதிக்கு அனுப்பப்பட்டது. நவம்பர் 12ம் நாள் பாகிஸ்தான் நடத்திய வான்வெளித் தாக்குதலில் படைப்பிரிவைச் சேர்ந்த பெரும்பகுதியினர் பலியாகினர். ஒரு துப்பாக்கிக் குண்டு ஹஜாரேவின் தலையை உரசிக்கொண்டு சென்றது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தார். அந்த ஒரு கணம் அவருக்குள் பல திருப்பங்களை ஏற்படுத்தியது. இவ்வாறு உயிர் பிழைத்தது சராசரி மனிதர்களைப் போல் உண்டு, உழைத்து பின் மாண்டுபோவதற்கல்ல என்னும் உறுதியை அவர் அடைந்தார். வாழ்நாள் முழுக்க மனித சமூகத்திற்காகப் பாடுபடுவது என்று சூளுரைத்தார். திருமண வாழ்வு இதற்குப் பெரும்தடையாக இருக்கும் என்பதால் வாழ்நாள் முழுக்க பிரம்மசாரியாகவே கழிப்பது என்றும் தீர்மானித்தார். ஆனால் இப்படி ஒரு முடிவை அவர் எட்டியபோது அவர் ராணுவத்தில் சேர்ந்து மூன்று ஆண்டுகள்கூட முழுமையாக முடிந்திருக்கவில்லை என்பதால் ஓய்வூதியத்துக்கு தகுதி பெற்றிருக்கவில்லை. தனது அடிப்படைத் தேவைகளுக்காக அந்தத் தொகை அவருக்குத் தேவை என்பதை உணர்ந்தார். எனவே தொடர்ந்து 12 ஆண்டுகள் ராணுவத்தில் பணி புரிந்து விட்டு விருப்ப ஓய்வு பெற்று ராலேகான்வ் சித்திக்கு திரும்பினார்.

ராணுவப் பணியில் இருக்கும்போதே அவ்வப்போது தன் கிராமத்துக்கு வந்து சில நாட்கள் தங்கியிருப்பார். அந்த அனுபவம் மிகவும் கசப்பான ஒன்று. போதிய நீர் வளம் இல்லாமல் விளைநிலங்கள் பாழ்பட்டிருந்தன. விவசாயிகள் வறுமையில் வாடினர். ஆண்டுக்கு அதிகபட்சம் 400 முதல் 500 மிமீ வரை மழை பெய்கிற வறட்சி பிரதேசத்தில் பெய்யும் மழை நீரை சேகரித்து விவசாயத்துக்கு பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் எவையும் இல்லை. 2200 ஏக்கர்கள் விளைநிலங்களில் அதிகபட்சமாக 300 ஏக்கர்கள்தான் விவசாயத்திற்காகப் பயன்பட்டது. விவசாயிகள் வேறு வழியின்றி தொலைவில் இருந்த கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் தினக்கூலிகளாகச் செல்ல நேர்ந்தது. இதற்காக பலமைல் தொலைவு நடக்க வேண்டியிருந்தது. கிராமத்தின் பெரும்பாலோருக்கு ஒருவேளை உணவு கிடைப்பதே பெரும்பாடாக இருந்தது. இதனால் ஒரு சிலர் நாட்டுச் சாராயம் காய்ச்சும் அவலத்திற்கு ஆட்பட்டனர். மெல்ல மெல்ல கிராமத்தைச் சுற்றி 40க்கும் மேற்பட்ட இடங்களில் சாராயத் தொழில் காலூன்றியது. இதனால் ராலேகான்வ் சித்தி என்றாலே சாராயம்தான் என்கிற அளவு கிராமத்திற்கு பெரும் களங்கம் ஏற்பட்டது. கிராமத்திலும் சில்லறைத் தகராறுகள், திருட்டுகள், அடிதடிகள் என்று சூழல் பெரும் சரிவில் இருந்தது. சாராய அடுப்பிற்காக கிராமத்தின் முக்கிய தெய்வமான யாதவ்பாபாவின் கோவில் மரத் தூண்களை உடைத்துத் திருடிச் செல்லுமளவு மனிதர்கள் தரம்தாழ்ந்தனர். ஏதும் செய்ய இயலாதவராய் ஹஜாரே பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானார். கிராமத்திற்குள் செல்வதையே தவிர்த்து தன் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தார். ‘பசித்திருப்பவனுக்கு போதனைகள் செய்வதில் பயனில்லை’ என்ற விவேகானந்தரின் வாக்கு அவருக்குள் பல சிந்தனைகளை ஏற்படுத்தியது.

புனேவை அடுத்த சஸ்வாட் கிராமத்தில் கிராமப் பஞ்சாயத்துடன் இணைந்து நிலத்தடி நீர் மேலாண்மைக்காக புதியதொரு திட்டத்தை செயல்படுத்தியிருந்த விலாஸ்ராவ் சாலுங்கேவை சென்று சந்தித்தார். செயல்பாடுகளைக் குறித்து விரிவாக அறிந்துகொண்டார். அப்போதைய வேளாண்துறை இயக்குநர் தீக்ஷித்தின் உதவியோடு ராலேகாவ் சித்தியிலும் அதேபோன்ற நீர் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த முனைந்தார். கிராமத்து மக்களைச் சந்தித்துப் பேசினார். ஒவ்வொரு துளி மழை நீரையும் சேமித்து அதை விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியும் என்பதை வலியுறுத்தினார். மெல்ல மெல்ல கிராமத்து விவசாயிகள் அவருடைய குரலுக்கு செவி சாய்த்தனர். இணைந்து உழைக்கத் தொடங்கினர். கடுமையான உழைப்பின் பலனாக 48 இடங்களில் தடுப் பணைகள் எழுந்தன. அணைகளுக்கு நீரைக் கொண்டு செல்ல வேண்டி அகன்ற கால்வாய்கள் வெட்டப்பட்டன. கிராமத்துத் தெருக்களிலிருந்து மழைநீரை ஒருங்கிணைக்க சிறு சிறு ஓடைகளும் ஏற்படுத்தப்பட்டன. நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்காக புல்வெளிகளை உருவாக்கினார்கள். 500 ஏக்கர்கள் அளவில் மரங்கள் நடப்பட்டு காடுகளாக வளர்த்தெடுக்கப்பட்டன. 5 பெரிய அணைக்கட்டுகள் உருவாகின. இந்த முயற்சியின் பலனாக கிராமத்தின் நிலத்தடி நீர்மட்டம் ஏற்றம் கண்டது. அடுத்ததாக கிராமத்து மண்ணின் தன்மைக்கேற்ற, அதே சமயம் குறைந்த நீரைக் கொண்டு பெருமளவு விளைச்சல் காணும் வகையிலான பயிர்ச் சாகுபடி முறையையும் நிபுணர்களை கலந்தாலோசித்து திட்டமிட்டார். இதனால் 300 ஏக்கர் மட்டுமே விளையும் நிலை மாறி 1500 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்ய முடிந்தது.

திட்டமிடுதல், கடுமையான உழைப்பு இவற்றின் பலனாக கிராமம் தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது. தொடர்ந்து பல ஆண்டுகள் பசியின் பிடியிலும் வறுமையின் பிடியிலும் சிக்கித் திணறிய கிராமத்தின் வாழ்வில் பசுமை கிளைத்தது. கிராமத்து ஆட்களுக்கு வேலை இல்லை என்ற நிலை மாறி, அருகாமை கிராமங்களிலிருந்து வேலைக்கு ஆட்களை வரவழைக்கும் நிலை வந்தது. முன்பு கிராமத்தில் உற்பத்தியான பாலின் அளவு நாளொன்றுக்கு 300 லிட்டர். ஆனால் இப்போது 4000 லிட்டர். கூட்டுறவு சங்கங்களும், தனியார் நிறுவனங்களும் பாலைக் கொள்முதல் செய்ததில் ஆண்டொன்றுக்கு ரூ. 1.5 கோடி வருமானமாக கிடைத்தது. பெருமளவு வேலை வாய்ப்பும் ஏற்பட்டது. கிராமத்தின் தனிநபர் வருமானம் ரூ.225 லிருந்து ரூ.2500 ஆக உயர்ந்தது. கிராமத்தில் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான இடைவெளிகள் குறைந்தன.

கிராம மக்களின் பங்களிப்போடு பள்ளிக்கூடம், மாணவர் விடுதி, கோயில், மருத்துவமனை ஆகியவை கட்டப்பட்டன. ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கும் முயற்சியாக ஒரே பந்தலில், ஒரே நேரத்தில் பல திருமணங்களை நடத்தப்படுகின்றன. இதனால் சாதிய சமூக ஏற்றத்தாழ்வுகளும் மட்டுப்படுகின்றன என்று நம்புகின்றனர். அதோடு, முன்பு தீவிரமான நிலையில் இருந்த தீண்டாமை பிரச்சினைகள் கூட்டு உழைப்பின் பலனாக பெருமளவு களையப்பட்டுவிட்டன.

நாட்டுச் சாராயம் இப்போது ராலேகாவ் சித்தியின் எந்தப் பகுதியிலும் கிடையாது. அதோடு கடந்த 13 ஆண்டுகளாக கிராமத்தில் உள்ள பெட்டிக்கடைகளில் சிகரெட், பீடி, புகையிலை ஆகியவை விற்கப்படுவதில்லை.

வாழவே தகுதியற்ற ஒரு கிராமத்தை அன்னா ஹஜாரே இன்று ஒரு வளமான கிராமமாக மாற்றியமைத்துள்ளார். அரசியல்வாதிகள் ஓட்டுக் கேட்க மட்டுமே எட்டிப் பார்த்திருந்த இந்த கிராமத்திற்கு இப்போது அமைச்சர்களும், வெளிநாட்டு பிரமுகர்களும் ஓடோடி வருகிறார்கள். ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்ள், விவசாய அமைப்புகள் என்று அனைவரையும் வியக்கச் செய்கிறது ராலேகாவ் சித்தி. இந்திய வரைபடத்தில் இடம்பெற்றிராத ராலேகாவ் சித்தி இன்று சர்வதேச வரைபடத்தில் ‘’மாதிரி கிராமம்” என்று பெருமையுடன் குறிக்கப்பட்டுள்ளது. நீர் மேலாண்மைப் பயிற்சி மையம் தொடங்கப்பெற்று நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீர் மேலாண்மை குறித்த பயிற்சிக்கென இந்த கிராமத்துக்கு வந்துபோகிறார்கள். இன்று இத்திட்டங்கள் மகாராஷ்டிராவின் 85க்கும் மேற்பட்ட கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 35 ஆண்டுகளாக கிராம பஞ்சாயத்து, நுகர்வோர் கூட்டுறவு சொசைட்டி, கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம், கல்வி அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் என்று ஏராளமான அமைப்புகள் வெவ்வேறு செயல் திட்டங்களோடு ஏற்படுத்தப்பட்டு செயல்படுகின்றன. இன்று வரையிலும் இந்த அமைப்புகளுக்கு என்று தனியான தேர்தல்கள் கிடையாது. இதன் செயல் உறுப்பினர்கள் கிராம மக்களால் கிராம சபை கூட்டங்களில் ஏகமனதாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கிராமத்துக்கு பொதுவான கூட்டு முடிவுகளை தீர்மானிக்கும் பலம் வாய்ந்த அமைப்பாக கிராம சபை வளர்ந்திருக்கிறது.

அன்னா ஹஜாரே என்ற தனி மனிதர் இந்த முயற்சியைத் தொடங்கியபோது அவருக்குத் துணையாக இருந்தது மனித குலத்துக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும், நம்பிக்கையும் மட்டுமே. ராலேகாவ் சித்தியின் இந்த வளர்ச்சி என்பது பொருளாதார மட்டத்திலும் தன்னிறைவு பெறுதல் என்ற கோணத்திலும் மட்டும் அணுக முடியாது. அது அந்த அடிப்படைகளையும் தாண்டியது. மனித குல மேம்பாட்டுக்கான சமூக அக்கறை சார்ந்தது. ஒரு கிராமத்தின் தன்னிறைவு என்பது தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் பெரும் பங்களிப்பைத் தருவது. கிராமங்களின் தன்னிறைவு என்பது நீர்வளங்களை கண்டறிந்து, மேம்படுத்தி அவற்றை ஆக்கப்பூர்வமாக வேளாண் பணிகளுக்கு மடைமாற்றுவதேயாகும். ‘”இந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் இருக்கிறது” என்று காந்தி குறிப்பிட்டிருப்பதன் பொருளும் இதுவாகத் தான் இருக்கவேண்டும்.

ஊழலுக்கு எதிராக

காந்திய வழியிலான அறப்போராட்டமான உண்ணா நோன்பை அன்னா ஹஜாரே முதன்முதலாக முயன்றது 1989ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி. 1986ம் ஆண்டு தொடங்கி மகாராஷ்டிராவில் விவசாயத்துக்கான மின்சாரப் பகிர்மானம் மிக மோசமானதாக இருந்தது. கிணற்றிலிருந்து நீர் இறைக்க முடியவில்லை. தாறுமாறான மின்சார ஏற்றத்தாழ்வினால் மோட்டார்கள் பழுதாயின. பயிர்கள் வீணாயின. பல்வேறு அரசு அலுவலகங்களிலும் மின்துறையிலும் தரப்பட்ட புகார்களுக்கு எந்தவிதமான பதிலுமில்லை, பலனுமில்லை. இதற்கு ஒரு தீர்வு காண எண்ணி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். தொடர்ந்து எட்டு நாட்கள் உண்ணாநோன்பு இருந்தும் அரசு தரப்பில் கண்டுகொள்ளவில்லை. உடல்நிலை மோசமாகி அகமத்நகர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அரசின் மெத்தனப் போக்கினால் ஆத்திரமடைந்தனர் கிராமத்தினர். மூன்று தாலூக்காக்களைச் சேர்ந்த கிராமத்தினர் பலரும் சாலைமறியல்களில் ஈடுபட்டனர். படுக்கையிலிருந்த நிலையிலும் அன்னா ஹஜாரே தனது ஆதரவாளர்களை கிளர்ச்சியில் ஈடுபட வேண்டாமென்றும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடாது என்றும், பொதுமக்கள் அவதிப்படக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தார். அமைதியான காந்திய வழியிலேயே போராட்டத்தைத் தொடரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும் 1500 பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகக் குறைவான அளவிலேயே போலிஸார் இருந்ததாலும், அனைவரையும் கைது செய்து அழைத்துச் செல்ல வாகன வசதிகள் போதாமையினாலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். தடியடி நடத்தப்பட்டது. கலவரம் தீவிரமடைய கூடுதல் போலிஸ் படை வர வழைக்கப்பட்டு துப்பாக்கிச் சூடும் நடந்தது. நான்கு விவசாயிகள் பரிதாபமாக பலியாயினர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதனால் மன வேதனையடைந்த அன்னா ஹஜாரே உண்ணாவிரத்திலேயே உயிர்விடுவது என்று தீர்மானித்து தன் போராட்டத்தைத் தொடர்ந்தார். ஆனால் கலவரம் மேலும் தீவிரமடையும் என்று கருதிய அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் அவரை அணுகி போராட்டத்தைக் கைவிடுமாறு வேண்டினர். இதே நிலை தொடர்ந்தால் அப்பாவி விவசாயிகள் மேலும் பலியாகக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பொன்விழாவைக் கொண்டாடும் பொருட்டு மகாராஷ்டிராவின் ஒவ்வொரு தாலூக்காவிலும் ராலேகாவ் சித்தியைப் போன்ற ஒரு சீர்மிகு கிராமத்தை உருவாக்கும் திட்டம் ஒன்றை சுதந்திரப் போராட்ட தியாகி அச்சுதராவ் பட்வர்த்தன் மாநில அரசுக்குப் பரிந்துரைத்தார். இதை ஏற்று மகாராஷ்டிரா அரசு லட்சிய கிராம திட்டம் ‘‘ஆதர்ஷ் காவ் யோஜனா”வை அறிவித்தது. இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அன்னா ஹஜாரேவிடம் தரப்பட்டது. இதற்கென அவர் மாநிலமெங்கும் பயணம் மேற் கொண்டு திட்டத்தை செயல்படுத்தவென்று 300 கிராமங்களைத் தேர்ந்தெடுத்தார். திட்டப்பணிகளை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் நாட்டின் வளர்ச்சிப் பாதையில் பெரும்தடையாக இருப்பது அரசு இயந்திரத்தில் உள்ள திட்டமிட்ட ஊழல்தான் என்பதை உணர்ந்தார். உடனடியாகவே ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று தீர்மானித்தார். மாநில அமைச்சர்கள் இருவருக்கெதிராக சாட்சிகளோடு வழக்கு தொடுத்தார். அரசு இதைக் கண்டுகொள்ளாத நிலையில் பத்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். முதலமைச்சர் தலையிட்டு அந்த இரண்டு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்தார்.

இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட அமைச்சர் ஹஜாரேவின் மீது மான நஷ்ட வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹஜாரேவை குற்றவாளி என தீர்மானித்து, ‘”இனி இது போன்ற வழக்குகளைத் தொடுக்கமாட்டேன்” என்று எழுத்துப்பூர்வமாக உத்தர வாதம் அளிக்கக் கேட்டது. அன்னா ஹஜாரே இதற்கு ஒப்புதல் தர மறுத்து, மூன்று மாத கால சிறைதண்டனையை அனுபவிக்கத் தயார் என்று அறிவித்தார். செய்தி அறிந்த பொதுமக்கள் அவரை உடனடியாக விடுதலை செய்ய கோரி, அன்னா ஹஜாரே இருந்த எர்வாடா சிறைச்சாலையை நோக்கிக் குவியத் தொடங்கினர். வேறு வழியின்றி அரசு அவரை விடுதலை செய்தது.

இதேபோல 2003 ஆகஸ்டிலும் நான்கு காங்கிரஸ் அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை அளித்த அவர், அரசின் நடவடிக்கைகளை கோரி ஆசாத் மைதானத்தில் 9 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

சில அமைச்சர்களையும், அதிகாரிகளையும் தண்டிப்பதினால் மட்டும் ஊழலை ஒழிப்பது என்பது முடியாத காரியம் என்று உணர்ந்த அவர், அரசு அமைப்பிலேயே மாறுதல்கள் வரவேண்டும் என்பதைக் குறித்தும் ஆலோசித்தார். அதிகாரப் பரவலாக்கம் இல்லாமல் அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது. அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டுமானால் அரசின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் மக்களுக்குத் தெரியவேண்டும் என்பதை உணர்ந்தார். தகவல் அறியும் உரிமையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று 1998 முதல் மாநில மத்திய அரசுகளை வலியுறுத்தத் தொடங்கினார். இதற்கென அவர் பலமுறை உண்ணாவிரதம் இருக்க நேர்ந்தது. தொடர்ந்த அவரது போராட்டங்களின் காரணமாக 2003 ஆகஸ்டில் அவரது உண்ணாவிரதப் போராட்டத்தின் 12ம் நாள் இந்திய ஜனாதிபதி தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதன் பலனாக நாடெங்கிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்தது.

ஊழலுக்கு எதிரான அன்னா ஹஜாரேவின் போராட்டத்தின் முக்கிய படிநிலைதான் சமீபத்திய அவரது உண்ணாவிரதம்.

ஊழல் செய்பவர்களை விசாரணை செய்து தண்டிக்க தன்னாட்சி பெற்ற அமைப்பு ஒன்றை உருவாக்கி அதற்கு மக்கள்நீதிபதி என்ற நிலையில் முழுமையான அதிகாரத்தை வழங்கவேண்டும் என்பதே ஹஜாரே போன்ற சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. ஒருமித்த சமூக அக்கறை கொண்ட பலராலும் ‘’ஊழலுக்கு எதிராக இந்தியா” என்ற அமைப்பு உருவானது. உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதியரசர் என்.சந்தோஷ் ஹெக்டே, உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் இந்த அமைப்பின் வழியாக இணைந்து ஒரு சட்ட முன் வரைவைப் பரிந்துரைத்தார்கள். ஆனால் மத்திய அரசோ அப்படியொரு சட்டத்தை நிறைவேற்ற ஒப்புக் கொண்டாலும் பிற நிபந்தனைகளுக்கு ஒப்புதல் தர மறுத்துவிட்டது. எனவே, அரசு முன்வைத்த சட்ட முன்வடிவு சமூக ஆர்வலர்கள் முன்வைத்த முன்வடிவுக்கு ஏறுமாறாக அமைந்தது. அடிப்படையில் சட்ட முன்வரைவை தீர்மானிக்கும் கூட்டுக் குழவில் சமூக ஆர்வலர்களுக்கு இடம் கிடையாது என்றும் மத்திய அமைச்சர் ஒருவரே அதன் தலைவராக இருப்பார் என்றும் அறிவித்தது மத்திய அரசு. மத்திய அமைச்சர் சரத் பவார் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதைக் கண்டித்தே ஹஜாரே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

மத்திய அரசு அறிவித்திருந்த சட்ட முன்வடிவின் அம்சங்கள்.

மக்கள்நீதிபதி (சட்டப்படியான விசாரணை அமைப்பின் தலைவர்) பொதுமக்களிடமிருந்து நேரடியாக புகார்களை பெற்றுக்கொள்ள முடியாது. தன்னிச்சையாக எதையும் செய்வதற்கு உரிமை கிடையாது. மக்களவைத் தலைவரால் அல்லது ராஜ்ய சபை தலைவரால் அனுப்பப்படும் புகார்களை மட்டுமே விசாரிக்கலாம்.
மக்கள்நீதிபதி என்பவர் ஒரு ஆலோசனை அமைப்பு மட்டுமே. தனது பரிந்துரைகளை ‘‘தகுதிவாய்ந்த அதிகாரி”க்கு அனுப்புவது மட்டுமே அவருடைய வேலை.
மக்கள்நீதிபதிக்கென்று எந்தவிதமாக காவல்துறை அதிகாரமும் கிடையாது. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவோ, மேல் நடவடிக்கைகளை எடுக்கவோ முடியாது.
மத்திய புலனாய்வுத் துறைக்கும் மக்கள்நீதிபதிக்கும் எந்தவிதமான தொடர்பும் இருக்காது.
ஊழலுக்கான தண்டனை குறைந்தபட்சமாக 6 மாதம், அதிகபட்சமாக 7 வருடம் மட்டுமே.

சமூக ஆர்வலர்கள் முன்வைத்த முன்வடிவத்தின் அம்சங்கள்

பொதுமக்களிடமிருந்து நேரடியாக புகார்களை பெறவும், அதற்கான நேரடி நடவடிக்கைகளை எடுக்கவும் மக்கள்நீதிபதிக்கு அதிகாரம் உண்டு.
ஆலோசனை அமைப்பு என்பதைத் தாண்டிய அதிகாரம் படைத்தவர் மக்கள்நீதிபதி. குற்றம் நிரூபிக்கப்பட்டவர் எவர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வகையிலான அதிகாரம் கொண்டவராக இருக்க வேண்டும்.
அவருக்கென்று காவல் அதிகாரம் உண்டு. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதிலிருந்து நடவடிக்கைகள் எடுப்பது வரையிலான அனைத்து அதிகாரமும் உண்டு.
மக்கள்நீதிபதியும் மத்திய புலனாய்வு அமைப்பின் ஊழல் ஒழிப்புப் பிரிவும் இணைந்த ஒரு தன்னிச்சையான அமைப்பாக இருக்க வேண்டும்.
ஊழலுக்கான குறைந்தபட்ச தண்டனை 5 ஆண்டுகளாகவும் அதிகபட்சம் ஆயுள் தண்டனையாகவும் இருக்க வேண்டும்.

உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த சரத்பவார் தன் பதவியை ராஜினாமா செய்தார். இப்போது அரசு அறிவித்திருக்கும் குழுவில் அரசு தரப்பில் ஐவரும், பொது மக்கள் தரப்பிலிருந்து ஐவரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். உடனடியாகவே இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதியும் தரப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்ஷ் வீடு கட்டும் திட்ட ஊழல், இஸ்ரோவில் ஊழல், விக்கிலீக்ஸில் அம்பலமாகும் பல்வேறு பிரச்சினைகள் என்று திணறிப் போயிருக்கும் நிலையில் மத்திய அரசு, அன்னா ஹஜாரேவின் போராட்டத்துக்கும், மக்களின் ஆதரவுக்கும் பணிந்து போயிருப்பது ஆச்சரியமானதல்ல. ஆனால், நாடெங்கிலும் உள்ள ஊழல் மலிந்த அரசியல்வாதிகளையும், அதிகார வர்க்கத்தையும் அடிபணியச் செய்திட காந்திய வழியில் போராடும் ஒரு முதியவர் மட்டும் இருந்தால் போதாது. எதைப் பற்றியும் கவலைப்படாத நம் பொதுமக்களும், முக்கியமாக இளைஞர்களும் அன்னா ஹஜாரேவின் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து தாமும் செயல்பட வேண்டும்.

தமிழினி காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  678642

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 20, 2011 5:49 pm


ஆனால், நாடெங்கிலும் உள்ள ஊழல் மலிந்த அரசியல்வாதிகளையும், அதிகார வர்க்கத்தையும் அடிபணியச் செய்திட காந்திய வழியில் போராடும் ஒரு முதியவர் மட்டும் இருந்தால் போதாது. எதைப் பற்றியும் கவலைப்படாத நம் பொதுமக்களும், முக்கியமாக இளைஞர்களும் அன்னா ஹஜாரேவின் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து தாமும் செயல்பட வேண்டும்.


அருமையான பதிவு.அன்னா ஹசாரே பற்றி நிறைய விசயங்களை அறிந்து கொண்டேன்.பகிர்ந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Image010ycm
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Aug 20, 2011 5:49 pm

பதிவிற்கு நன்றி பாலா... அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Aug 20, 2011 5:55 pm

கே. பாலா wrote:
எந்தவிதமான சமரசத்துக்கும் ஹஜாரே ஒத்துக்கொள்ளாததை அடுத்து மத்திய அரசு பணிந்அன்னா ஹஜாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாடெங்கிலுமிருந்து மக்கள் ஆதரவு பெருமளவு திரண்டெழுந்தது. கிரண் பேடி, மேதா பட்கர், அரவிந்த் கெஜ்ரிவால், யோகா குரு சுவாமி ராம்தேவ் உள்ளிட்ட பலரின் ஆதரவும் குவிந்தது. மத்திய அமைச்சர் கபில் சிபில் பல்வேதது. 98 மணி நேரங்கள் நீடித்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. கூட்டுக்குழுவில் அரசு தரப்பிலிருந்து ஐந்து உறுப்பினர்களும் மக்கள் தரப்பிலிருந்து ஐந்து உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள் என்றும், வரும் நாடாளு மன்றக் கூட்டத் தொடரின்போதே லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என்றும் உறுதி கூறப்பட்டது.
தமிழினி நன்றி

நன்றி அய்யா ! அன்னா ஹசாரே குழுவின் லோக் பால் மசோதாவிர்க்கும் ,, அரசு குழுவின் லோக் பால் மசோதாவிர்க்கும் உள்ள வேறுபாட்டினையும் பதிந்திருந்தால் இன்னும் முழுமையாய் பயனுள்ளதாய் இருந்திருக்கும் !

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 20, 2011 6:01 pm

அருமையான பதிவு பாலா.........அன்னா ஹசாரே
நல் வழியில் நாட்டை நகர்த்தி சென்று கொண்டிருக்கிறார் என்று நம்பிக்கையுடன் அவருக்கு குரல் கொடுப்போம்.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Aug 20, 2011 6:13 pm

நல்ல பயனுள்ள பதிவு ... ஒவ்வொரு இந்தியனும் திருந்தினால் தான் நாட்டை திருத்த முடியும் ஊழலையும் திருத்த முடியும் சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காந்தி இன்னும் சாகவில்லை  - அண்ணா ஹசாரே  Ila
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sat Aug 20, 2011 6:56 pm

பிஜிராமன் wrote:அருமையான பதிவு பாலா.........அன்னா ஹசாரே
நல் வழியில் நாட்டை நகர்த்தி சென்று கொண்டிருக்கிறார் என்று நம்பிக்கையுடன் அவருக்கு குரல் கொடுப்போம்.......
சூப்பருங்க
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Aug 20, 2011 7:37 pm

பிஜிராமன் wrote:அருமையான பதிவு பாலா.........அன்னா ஹசாரே
நல் வழியில் நாட்டை நகர்த்தி சென்று கொண்டிருக்கிறார் என்று நம்பிக்கையுடன் அவருக்கு குரல் கொடுப்போம்.......
நன்றி ராமன்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Aug 20, 2011 8:49 pm

இளமாறன் wrote:நல்ல பயனுள்ள பதிவு ... ஒவ்வொரு இந்தியனும் திருந்தினால் தான் நாட்டை திருத்த முடியும் ஊழலையும் திருத்த முடியும் சூப்பருங்க சூப்பருங்க
நன்றி அன்பு மலர்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Aug 21, 2011 7:29 am

அன்னா ஹசாரே அவர்களின் ஒரே நோக்கம் ஊழலில்லாத இந்தியாவை உருவாக்குவது. ஆனால் காங்கிரஸின் ஒரே நோக்கம் இவரை அந்நிய சக்திகளின் தூண்டுதலில் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்துகிறார் என்பது.

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருமே முட்டாள்களா? யார் நாட்டிற்கு நல்லது செய்கிறார்கள் என்பது கூடத் தெரியாதா? அனைத்து மக்களும் ஓரணியில் நின்று இவரது போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தால் இந்தியா நிச்சயம் மாறும்.

அரசியல்வாதிகள் அனைவருமே மக்களின் பணத்தில் வளமாக வாழ்பவர்கள்தான். அதனால்தான் மக்களை இவர் பக்கம் செல்ல விடாமல் தடுக்கிறார்கள்.

அன்னா ஹசாரே நிச்சயம் இந்தியாவின் இன்னொரு காந்திதான். அதே நேரம் அந்த காந்திக்கு ஏற்பட்ட நிலைமை இவருக்கும் போராட்டத்தை முடிக்கும் முன்னரே ஏற்பட்டுவிடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது. மக்கள் அவரது உயிருக்கும், கொள்கைக்கும் முக்கியத்துவம் அளித்து, அவருடன் இணைந்து போராட வேண்டும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக